கூகுள் கம்பெனி இன்டர்னெட் வசதி, இணையம், அதன் பயன்பாடுகள் குறித்து விளக்க 'இண்டெர்நெட் பஸ்' ஒன்றைத் தமிழ்நாடு முழுக்கச் சுற்றுலா விடுகிறது. அரசாங்கம் செய்ய வேண்டிய பணி! பல இடங்களிலும் இலவச இன்டர்னெட் வசதி, வலைப்பதிவுகளைப் பதியச் சொல்லித் தந்தால் வெகுபயன் விளையும். இப்பொழுது கல்லூரிகள் விடுமுறைதானே. மாணவர்கள் அணிதிரண்டு இண்டர்நெட் கல்வியைப் பரப்பினால் தமிழின் வலைப்பதிவுகள் 100,000 ஆவது கடினமில்லை. வெகுவிரைவில் இச்சாதனை நிலையைத் தமிழ் எட்டமுடியும், தமிழர் கைகோர்த்துத் தொழிற்பட்டால் வலைப்பூக்கள் மலரும், தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் புதுக் கருத்துக்கள் வலம் வரும்.
நீங்களோ, உங்கள் நண்பர்களோ கூகுள் இணையப் பேருந்தைச் சென்று பார்த்தால் அதனைப் பற்றி விரிவாகப் பதிவெழுதுங்கள்.அதன் மூலம் அடுத்த ஊர்களுக்கு, கூகுள் இணையப் பேருந்து செல்லும்போது இன்னும் கூடுதலாக மக்கள் சென்று பார்க்க வசதியாய் இருக்கும். நிறையச் செலவு செய்து பஸ் அனுப்புகிறார்கள், நம் தமிழ்மக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
தமிழில் இணைய எழுத்துக்கள், வலைப்பதிவுகள், ... கூடக்கூட இணையத்தில் தமிழின் ஆழம் அதிகம் ஆகும். நாட்டு நடப்புகள் தமிழ் மக்களுக்குச் சாதகமாக மாறும்
மேலும் தகவல்கள் (உ-ம்: பிரேம் ராமசாமி தொலைபேசி எண்) கிடைத்தால் தருவேன்.
நன்றி!
நா. கணேசன்
http://www.google.co.in/intl/en/landing/internetbus/
The Internet Bus Project is an attempt to educate people about what the Internet is, and how it may be beneficial to their lives, by taking the Internet experience to them through a customised Internet-enabled bus, which will travel to several towns and cities across India.
Google Internet Bus schedule in Tamil Nadu:

03 Feb Chennai
05 Feb Vellore
06 Feb Krishnagiri
07 Feb Salem
11 Feb Erode
12 Feb Tiruppur
14 Feb Coimbatore
18 Feb Dindigul
19 Feb Madurai
23 Feb Tirunelveli
25 Feb Nagercoil
27 Feb Tuticorin
02 Mar Pudukkottai
03 Mar Tiruchirappalli
06 Mar Thanjavur
08 Mar Kumbakonam
10 Mar Neyveli
12 Mar Cuddalore
13 Mar Tiruvannamalai
The bloggers, googlegroupers can arrange to meet with Google bus folks by taking groups of interested folks and teach them to write blogs, ggroups, etc., Tomorrow, Google internet bus is reaching Salem.
http://www.bangaloreinc.com/2009/02/03/google-launches-internet-bus-i
“Much of Tamil content is actually created and consumed by the Tamil Diaspora; but that can be simplified and made relevant for the local population,” said Google India product manager Prem Ramaswami. The company plans to customise some of its major products in Tamil, and demonstrate the ones already available in Tamil during its tour.
“We are also looking at licensing useful information like bus routes and ticket availability; as well as including more of Tamil media content like newspapers in our archives and search,” Mr.Ram said.
http://www.internetworldstats.com/stats3.htm#asia
http://royal.pingdom.com/2008/04/04/how-we-got-from-1-to-162-million
http://tamilwikipedia.blogspot.com/2009/02/blog-post.html
உசாத்துணை:
(1) தமிழ் எழுத்து பிறந்த காலத்தில் இருந்தே மக்களிடம் பரவலாகக் கற்பிக்கப்பட்டுள்ளது.
Orality to literacy: Transition in Early Tamil Society
http://www.hinduonnet.com/fline/fl2007/stories/20030411001208100.htm
தமிழ் எழுத்தின் எளிமை அது எல்லாக் குடிகளையையும் சென்றடைய ஏதுவாக அமைந்துள்ளது. ஒரு தனிக்கூட்டம் தமிழ் எழுத்தறிவைத் தனி உடைமையாக்கவில்லை. இந்தியாவில் இருக்கும் கல்வெட்டுக்களில் 70-75 விழுக்காடு % நம் தமிழில் தானே இருக்கிறது. அண்மையில் கூட, தில்லை சபாநாயகர் கோவில் நிர்வாக மாற்றம், வள்ளுவர் புத்தாண்டு தினம் இரண்டுக்கும் 2009-ன் முக்கியக் கல்வெட்டுக்கள் அமைக்கப்படுவதாகத் தமிழன்பர்கள் அறிவித்தனர்.
தொழில் நுட்பம் வந்தபோதெல்லாம் தமிழ் அவற்றைத் தன்மயம் ஆக்கி முன்னேறியுள்ளது. அச்சு, தட்டச்சு, கணினி, இணையம், ... ஒரு இலட்சம் பேர் தமிழ்நாட்டில் இருந்து வலையாடினால் தமிழ் நவீனமடையும். அறிவியல் செய்திகள் உடனுக்குடன் தமிழில் ஏறும். சமூக வளர்ச்சி உடனே கிடைக்கும்.
(2) தமிழ்க் கணிக்கல்வி எளிமையாக:
(அ) தமிழ் ஒரு பாடமாக எல்லாப் பள்ளிகளிலும் கட்டாயம்.
(ஆ) தமிழ்99 விசைப்பலகை.
(இ) இணைய வசதி இலவசமாய் பள்ளி, நூலகம், ஊராட்சி அலுவலகங்களில் தருதல்.
(ஈ) பிணைபட்ட உ/ஊ ஏறிய உயிர்மெய் எழுத்துக்களை உடைத்தெழுதுதல்
- இதனைச் செய்யும் திரட்டிகள், அரசாணையின் அவசியம்:
http://nganesan.blogspot.com/2008/12/tamil-in-tn-govt-sites.html
1 comments:
thanks.
S. Raman
Post a Comment