தமிழ்நாட்டு அரசுத்தளங்களில் தமிழ்நிலை

இன்று ஒரு வலைப்பூவினைப் படித்தேன்:
http://thamizharpaarvai.blogspot.com/2008/12/blog-post_04.html
அங்கே நான் எழுதிய பின்னூட்டு இதோ.

தமிழ் என்பது அதன் தொன்மையில் மட்டுமல்ல, அதன் தொடர்ச்சியில்தான் உள்ளது என்று கா. சிவத்தம்பி, நண். பெரி. சந்திரா என்றும் வலியுறுத்துவதுபோலத் தமிழை நவீன கணியுலகிற்கு அழைத்துவந்தாயிற்று. தமிழ்மணம் ( http://tamilmanam.net ) 4000 வலைப்பதிவர்களைக் கொண்டு ஏற்கெனவே இயங்குகிறது. இது 10,000 என்றும் 50,000 என்றும் பதிவர்தொகை பெருகவேணும். பெருநகர்கள், கிராமங்கள், பட்டிதொட்டிகள் எல்லா இடங்களில் இருந்தும் தமிழ்ச் சங்கங்கள் தழைக்கவேணும். தமிழில் எழுதும் பல பதிவுகள் மொக்கைச்சாமிகளின் படைப்பு என்றாலும், தமிழின் விடியல் கணியுலகில் தான். தமிழில் புது அறிவியலை நுழைக்கவும், தமிழரைச் சினிமா, சிற்றரசியல் (petty politics) வளைகளில் இருந்து கடைத்தேற்றவும் கணினிகள்தாம் துணை. மதறாஸ் மீடியா ஈழச் செய்திகளை வலையுலகம் இன்றேல் இந்தளவுக்குக் கூடத் தமிழகத்தில் அறியத்தராது.

இன்று ஒரு பதிவு பார்த்தேன்:
http://thamizharpaarvai.blogspot.com/2008/12/blog-post_04.html
கருத்தூன்றி வாசிக்கவேண்டிய சிந்தனைகளைச் சொல்லியிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் தமிழ், தமிழ் என்று அரசியல் பிழைப்பு நடத்தினாலும், ஆக்கபூர்வமான செயல்கள் செய்வதில்லை. வெறும் கட்சிக்கூட்டங்களில் 'தமிழ் வாழ்க' என்று சுலோகன்களால் மட்டுமே தமிழ் வளரப்போவதில்லை. அரசியல், சினிமா, சின்னத்திரை என்ற திரிகோணப் புள்ளிகளால் மட்டுமே தமிழ்நாட்டுத் தமிழர் வாழ்க்கையைக் கட்டிப்போடும் வகையில் வெகுசன ஊடகங்கள் கட்டமைப்புப் பணியில் தீவிரமாக இருக்கின்றன. தமிழ் உணர்வுடையோர் அரசியல் எந்திரத்தைக் கணிப்பக்கம் நகர்த்துதல் தலையாய கடமை, காலத்தின் கட்டாயம்.

வெறும் டிவி, அதில் சினிமா நடிக, நடிகையர் கிசுகிசு என்றால் மட்டும் போதாது. ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் (Panchayath Union) 10-20 கணித்திரைகள், தமிழில் வலையில் பதிவது, பதிவுகள் ஆரம்பிப்பது எப்படி என்று பயிலரங்குகள், பட்டறைகள் தொடங்கினால் பலருக்கும் தமிழில் எழுத ஊக்கம் வரும், அறியாத சொற்கள், மரபுகள், கிளைமொழியியல், வரலாறுகள், பட்டறிவினால் அன்றாட வாழ்க்கையில் தமிழர் கண்டறிந்த விஞ்ஞானம் போன்றவை பதிக்கப்படும். தமிழர் வாழ்ந்தால் நம்முயிர்த் தமிழ் கணினியில் ஏறினால் நம் தலைமுறைக்குப் பின்னரும் தமிழ்ச் சுடரொளி பட்டொளி வீசும்.

(1) தமிழ்நாட்டின் எல்லாப் பள்ளிகளிலும் ஒரு பாடமாகத் தமிழ் கட்டாயமாக்கப்படல் வேண்டும்.
தென்றல் இதழில் முனைவர் வா. செ. குழந்தைசாமி ஐயா அவர்களின் கருத்துக்கு என்விடை மடல் வெளியானது:
http://nganesan.blogspot.com/2008/05/english-medium-effect-on-tamil.html
தமிழில் நன்கு எழுதுவோர் தொகை கூடணும். இப்போது வலைப்பதிவுகளைப் பார்த்தால் இளைஞர் பலருக்கு ர/ற, ன்/ண் (உ-ம்: பெரும்பாண்மை என்று பலர் எழுதுகின்றனர்!!) வேறுபாடுகள், ஒற்று இலக்கணம் ஒன்றுமே தெரிவதில்லை.

(2) தொலைக்காட்சி மாத்திரமல்ல. எல்லா ஊர், நகர் அலுவலகங்கள், நூல்நிலையங்களில் கணினிகள், வேகமான வலையிணைப்பு வசதி தரப்படவேண்டும். தமிழில் எழுதப் பயிற்சிப் பட்டறைகள் நடத்த அரசு கல்லூரிகள் வார இறுதி நாள்களில் கணினி அரங்குகளைத் தரவேண்டும். தமிழ்மணத்தின் மூலம் பட்டறைகள் நடத்திய துய்ப்பறிவினால் சொல்கிறேன், கணிஞர்கள் நடத்தினால் பொதுமக்கள் நல்ல ஆதரவு தருகிறார்கள்.

(3) இந்நிலைமை மாறவேண்டும்:
http://thamizharpaarvai.blogspot.com/2008/12/blog-post_04.html

முதலில் இதற்கு வசதியாக தமிழ் தனக்காக வகுத்துக்கொண்ட தமிழ்99 விசைப்பலகை உபயோகத்தில் பெருகவேண்டும். தமிழ்99 ஒட்டிகளை விசைப்பலகைகளில் ஒட்டச் சொந்தப் பணம், நேரம் செலவு செய்து ஆர்வலர்கள் தயாரித்துள்ளார்கள். அந்த விசைப்பலகை ஒட்டிகளை யாருக்கு வேண்டுமானாலும் அமெரிக்கா, கனடா அனுப்பித்தர நான் பொறுப்பேற்றுள்ளேன். தமிழ்நாடு அரசு தமிழ்99 விசைப்பலகைகளைத் தயாரித்துப் பரவலாக்கணும். கீபோர்ட் செய்யும் நிறுவனங்களுக்கு நிதியுதவி கொடுத்து தமிழ்99 விசைப்பலகைகள் இப்போது விற்கும் விலையில் 50% அல்லது 75% தள்ளுபடி செய்து விற்றுத் தமிழ் தட்டச்சைப் பெருக்கவேண்டும். தமிழ் வளர்ச்சிக்கு காலப்போக்கில் தமிழ் டைப்ரைட்டர் முறை தீங்குதரும், அது காலாவதி ஆகி ஒழியவேண்டும். தமிழ்99 விசைப்பலகைகள் அரசு கொடுக்கும் நிதியுதவியால் பரவலாக்கப்படல் மிக அவசியமான தேவை. தமிழ்99 விஞ்ஞான அடிப்படையில் அமைந்தது. அதேபோல முக்கியத் தேவை தமிழின் உ/ஊ உயிர்மெய்களின் சீர்மை. அதனை அடுத்துப் பார்ப்போம்.

(4) தமிழறிஞர் பலருக்கும் மிகவும் பிடித்த பணித்திட்டம் தமிழ் எழுத்துச் சீரமைப்பு. அதை எளிதில் இன்று நடைமுறைப்படுத்தும் வழி கணினிகளால் கிடைத்திருக்கிறது. இன்று வா.செ.கு. எழுத்துரு என்றே சீர்மை font இருக்கிறது. அதை வைத்துக்கொண்டால் இ-மெயில்கள், வலைப்பக்கங்கள் எல்லாவற்றையும் உ/ஊ உயிர்மெய்களை உடைத்துப் படிக்க மிக வசதியாக இருக்கிறது. திரு. எம்ஜிஆர் தமிழுக்குச் செய்த பெருங்கொடை பழைய றா, ணா, ளை, ... என்ற 12 எழுத்துக்களைச் சீர்மையாளர் பரிந்துரையின்பேரில் அரசாணையாக்கியது. அப்பொழுதும் சிலர் பூச்சாண்டி காட்டத்தான் செய்தனர், ஆனால் எம்ஜியார் எழு்த்தால் தமிழ் எளிமையாகி வளர்ந்துதானே இருக்கிறது. அதன் தாக்கம் பல நூற்றாண்டுகள் இருக்கும். தமிழை எளியோருக்கும், குழந்தைகளுக்கும் கற்பிப்பதில், எழுதவைப்பதில் எம்ஜிஆர் எழுத்துச் சிறந்தது என்று அனைவரும் ஒப்புகின்றனர். மாற்றுக் கருத்தில்லை. அதுபோல், காலம் கனியும்போழ்து உ/ஊ உயிர்மெய்களைப் பிரித்தும் எழுதலாம் என்ற அரசாணை பெறவேண்டும். "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவில கால வகையினானே" என்று கொங்குநாட்டுத் தோன்றல் பவணந்தி முனி சூத்திரம் தந்துள்ளார். அதன்படி தமிழ் எழுத்தை எளிமைப்படுத்த உ/ஊ உயிர்மெய்களைப் பிரித்துப் படியுங்கள் (உங்கள் உலாவிக்கு எழுதுரு வேண்டுமென்றால் என்னை அணுகுக.) ஆனால், தமிழ் கற்பித்தலுக்கு எளிதாக, உ/ஊ உயிமெய்கள் உடைத்து எழுதப்படல் அவசியம். அப்பொழுதுதான் தமிழ் உயிர்மெய்கள் ஒரு பூரணமான விஞ்ஞான அடிப்படையில் அமைந்தது என்று காட்ட முடியும். உ/ஊ உயிர்மெய்களை உடைத்தெழுதக் கிரந்தக் குறியீடோ, வாசெகு பரிந்துரையோ, வேறொரு அழகான வடிவோ வரட்டும், அதை அறிஞர் குழு முடிவெடுக்கட்டும். ஆனால், மலையாளம் போலத் தமிழிலும் உ/ஊ ஏறிய உயிர்மெய்கள் உடைத்து விரும்புவோர் எழுதலாம் என்ற அரசாணையை டாக்டர் வாசெகு போன்றோர் பெற்றுத் தந்தால் அதற்காக வடிவுடைய 50 சீர்மை எழுத்துருக்களை உருவாக்கி இலவசமாகத் தமிழருக்கு வழங்க நாங்கள் தயாராய் இருக்கிறோம். இயங்கு எழுத்துருக்கள் (dynamic fonts) மூலம் சீர்மை எழுத்துருக்களால் உ/ஊ உயிர்மெய்களைத் தனியாகக் காட்டும் வசதியும் வலைத்திரட்டி தர எண்ணியுள்ளேன். கணினியில் சீர்மை எழுத்தில் வலைப்பதியலாம், படிக்கலாம், சீர்மையில் இயங்கும் திரட்டிகள் உள்ளன என்ற நிலையை பட்டி தொட்டிகளில் உருவாக்க வேண்டும். இம்முயற்சிக்கு உதவ விரும்பும் கணிப்பொறியாளர்கள் என்னைத் தொடர்புகொள்ளவும். கிவாஜ, பெரியார் என்று பல பெரியவர்கள் பரிந்துரைத்த உ/ஊ உயிர்மெய்ச் சீர்மையை நடைமுறையில் பரவலாக்க சீர்மை எழுத்துருக்களும், திரட்டிகளும் உதவும். அடுத்த தலைமுறை சீர்மை முறையில் உ/ஊ உயிர்மெய்களைப் படித்தால் தானாகப் பழகிவிடும்.

தமிழ் எழுத்துக்களின் நெடுங்கணக்கு:க் கா கி கீ க‍ృ க‌ூ கெ கே கை கொ கோ கௌ
ங் ஙா ஙி ஙீ ங‍ృ ங‌ூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச் சா சி சீ ச‍ృ ச‌ூ செ சே சை சொ சோ சௌ
ஞ் ஞா ஞி ஞீ ஞ‍ృ ஞ‌ூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ ட‍ృ ட‌ூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ண‍ృ ண‌ூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த் தா தி தீ த‍ృ த‌ூ தெ தே தை தொ தோ தௌ
ந் நா நி நீ ந‍ృ ந‌ூ நெ நே நை நொ நோ நௌ
ப் பா பி பீ ப‍ృ ப‌ூ பெ பே பை பொ போ பௌ
ம் மா மி மீ ம‍ృ ம‌ூ மெ மே மை மொ மோ மௌ
ய் யா யி யீ ய‍ృ ய‌ூ யெ யே யை யொ யோ யௌ
ர் ரா ரி ரீ ர‍ృ ர‌ூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல் லா லி லீ ல‍ృ ல‌ூ லெ லே லை லொ லோ லௌ
வ் வா வி வீ வ‍ృ வ‌ூ வெ வே வை வொ வோ வௌ
ழ் ழா ழி ழீ ழ‍ృ ழ‌ூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ள‍ృ ள‌ூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ ற‍ృ ற‌ூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ ன‍ృ ன‌ூ னெ னே னை னொ னோ னௌ
ஜ் ஜா ஜி ஜீ ஜ‍ృ ஜூ ஜெ ஜே ஜை ஜொ ஜோ ஜௌ
ஷ் ஷா ஷி ஷீ ஷ‍ృ ஷூ ஷெ ஷே ஷை ஷொ ஷோ ஷௌ
ஸ் ஸா ஸி ஸீ ஸ‍ృ ஸூ ஸெ ஸே ஸை ஸொ ஸோ ஸௌ
ஹ் ஹா ஹி ஹி ஹ‍ృ ஹூ ஹெ ஹே ஹை ஹொ ஹோ ஹௌ


[ஃபையர்பாக்ஸ் அல்லது குரோம் (கூகுள்) உலாவியில் ஒழுங்காய்த் தெரியும். இண்டெர்னெட் எக்ஸ்ப்லோர் உபயோகித்தால் புள்ளிவட்டம் சேர்ந்து தெரியலாம்.]

சீர்மை வடிவத் தமிழ்:
http://nganesan.blogspot.com/2009/08/cheermai.html

கோயம்ப‍ృத்த‌ூர்: ஒர‍ృ விளக்கம்
கவிஞர் கண்ணதாசன்

கன்னியரின் இதழழகைக் கோவை யென்பார்!
கனிமழலை ம‍ృழ‍ృவடிவைக் கோவை யென்பார்!
தேன்தமிழில் திர‍ృக்கோவை ந‌ூலொன் ற‍ృண்ட‍ృ
திறமான கவிதொக‍ృத்த கோவை ய‍ృண்ட‍ృ
இந்நகரைக் “கோவை” என ஏனழைத்தார்?
எழில்கோயம் ப‍ృத்த‌ூர் என்றேன் படைத்தார்!
என்கர‍ృத்தை யான்சொல்வேன்! தமிழறிந்தோர்
இத‍ృதவறென் ற‍ృரைத்தால‍ృம் தவறே யாக!

வஞ்சியர்கள் விளையாட‍ృம் வஞ்சி நாட்டின்
மன்னர‍ృக்க‍ృ மக்களென இர‍ృவர் வந்தார்
செஞ்சரத்த‍ృ வில்லவனாய் வடபாற் சென்ற
செங்க‍ృட்ட‍ృவன் ஒர‍ృவன்! தமிழெட‍ృத்த‍ృ
அஞ்சிலம்பை யாத்தணித்த இளங்கோ அண்ணல்
அட‍ృத்தொர‍ృவன்! இவ்விர‍ృவர் க‍ృறிப்ப‍ృம் பார்த்த‍ృ
பிஞ்ச‍ృமகன் அரசாவான் என்ற‍ృரைத்தான்
பேதையொர‍ృ வேதாந்தி! அதனைக் கேட்ட‍ృ
ம‍ృன்னவனே நாடாள வேண்ட‍ృமென்ற‍ృ
ம‍ృடிமாற்றி உடைமாற்றி இளங்கோ அண்ணல்
தன்னாட்டின் எல்லையிலோர் க‍ృடிலமைத்தான்!
தனியாகச் சாத்தன‍ృடன் தங்கிவிட்டான்,
அந்நாளில் இளங்கோவன் அமைத்த ப‍ృத்த‌ூர்
அங்கோவன் ப‍ృத்த‌ூராய்ப் பேரெட‍ృத்த‍ృ
இந்நாளில் கோயம் ப‍ృத்த‌ூ ராயிற்ற‍ృ!
இயல்பான உர‍ృமாற்றம் சரிதச் சான்ற‍ృ!

நீலமலைச் சாரலிலே நிலம் விரித்த‍ృ
நெளிந்த‍ృவர‍ృம் தென்றலினை வளையவிட்ட‍ృப்
பால்போன்ற இதயத்தைப் பிள்ளை யாக்கிப்
பண்பினைய‍ృம் அன்பினைய‍ృம் த‍ృணைவர் ஆக்கி
வாழ‍ృங்கள் எனவிட்டாள் தமிழ் ம‌ூதாட்டி!
வாழ்கின்றார் கோவையிலே நல்ல மக்கள்!
ச‌ூழ்கின்ற பண்பெல்லாம் கோவையில்தான்!
ச‍ృவையெல்லாம் பண்பெல்லாம் கோவையில்தான்!
ஏன‍ృங்க! என்னவ‍ృங்க! ஆமா ம‍ృங்க!
இர‍ృக்க‍ృங்க! சரியிங்க! பாக்க வாங்க!
மான‍ృங்க! வேண‍ృங்களா! வாங்கிக் கோங்க!
மலைப் பழம‍ృம் இர‍ృக்க‍ృங்க! எட‍ృத்த‍ృக்கோங்க!
தேன‍ృங்க! கையெட‍ృங்க! சாப்பிட‍ృங்க!
திர‍ృப்ப‌ூர‍ృ நெய்ய‍ృங்க! ச‍ృத்த ம‍ృங்க!
ஏன‍ృங்க! எழ‍ృந்தீங்க! உக்கார‍ృங்க!
ஏ, பையா! பாயசம் எட‍ృத்த‍ృப் போட‍ృ!
அப்பப்பா! கோவையிலே விர‍ృந்த‍ృ வந்தால்
ஆற‍ృநாள் பசிவேண்ட‍ృம்! வயிற‍ృம் வேண்ட‍ృம்!
தப்பப்பா! கோவைக்க‍ృ வரக்க‌ூடாத‍ృ!
சாப்பாட்டி னாலேயே சாக டிப்பார்!
ஒப்பப்பா இவர‍ృக்க‍ృ வள்ளல் ஏழ்வர்!
உயர்வப்பா இவர்நெஞ்சம் ஊற்றின் தேக்கம்!
கொட‍ృத்தவரை பாட‍ృவ தெம்க‍ృல வழக்கம்
கொடைக்கெனவே படையெட‍ృத்தோர் ப‍ృலவர் பல்லோர்
இனித்தச‍ృவைப் பழங்கொட‍ృத்த வள்ளல் பற்றி
இயன்றவரை பாடிவிட்டாள் ஔவைத்தேவி
தனித்தனியே கனிவைத்த‍ృத் தேன‍ృம் வைத்த‍ృத்
தந்தானைப் ப‍ృகழ்ந்தானே கம்பன் அன்ற‍ృம்
கொட‍ృத்தவனைப் ப‍ృகழ்வத‍ృதான் ப‍ృலவன் பாட்ட‍ృ
க‍ృறையெதற்க‍ృ? நான‍ృமதைச் செய்த‍ృ விட்டேன்.

உ/ஊ உயிர்மெய்ச் சீர்மைக்கு இன்னொரு எடுத்துக்காட்டு:

(உங்கள் உலாவியில் தெளிவாகத் தெரிய படத்தைச் சொடுக்கவும்)


இணையம் எங்கும் தமிழ்! கணினி எதிலும் தமிழ்!
இந்நிலை தோன்றிடின்
வெல்லத் தமிழ் இனி வெல்லும்!


நிறைய எழுதலாந்தான், இப்போதைக்கு இத்தோடு நிறைவு செய்கிறேன்.

அன்பொடு,
நா. கணேசன்

மேலும்,
http://news.bbc.co.uk/1/hi/health/3794479.stm
http://news.bbc.co.uk/2/hi/health/3025796.stm

7 comments:

பழமைபேசி said...

அண்ணா, இதற்கு மேல் தெளிவாகவும், விபரமாகவும் எழுத முடியாது. முழுமையாக ஏற்றுக் கொள்ளக் கூடியது நீங்கள் கூறியவை. விளம்பர உலகில், ஒரு மணித்துளிகளே வருகிற காட்சிகள் வெகு பணம் செலவழித்து ஏன் பத்துத் துளிகளுக்கு ஒரு முறை காண்பிக்கிறீர்கள் என்று வினவிய போது, அவர் சொன்னார், திரும்பச் செய்கை(repetition)யினால் வெகு பலன்கள் உண்டு என்று. (உம்) அவர் மனதில், சொல்லப் பட்ட விசயம் அவர் அறியாமலே மூளையில் தங்கும். ஆகவே, இது போன்ற பதிவுகள் மீண்டும் மீண்டும் வர வேண்டுமென்பதே எம் ஆவல்.

Muhammad Ismail .H, PHD, said...

நன்றி நா. கணேசன் அய்யா,

நான் அறிந்த வரை இந்த பிரச்சினை தட்டச்சு செய்யும் முறையிலிருந்து ஆரம்பம் ஆகிவிடுகின்றது. தமிழ்99 தான் வசதியானது என்றாலும் தமிழ் தட்டச்சு பயிலகங்களில் இன்னும் பழைய 'ய ள ன க ப' தான் உள்ளது. அதற்க்கு தான் இன்னமும் தமிழக அரசினால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றது. ஒருமுறை நீங்களே மீட்டிங் செல்லும் அவசரத்தில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து இருந்தீர்கள். அவசரத்திற்கு தமிழை உபயோகப்படுத்த முடியாத நிலையில் தான் உள்ளோம். தமிழ் 99 அறிமுகம் செய்யப்பட்டு 9 வருடங்களை கடந்தும் இன்னும் அதை பரவலாக காண இயலவில்லை. எல்காட் சென்றிருந்தபொழுது அங்கும் தமிழ் 99 காண இயலவில்லை. அவர்களுக்கு பழக்கமான தட்டச்சு பலகை தான் இருந்தது. காரணம். நம்மிடையே ஒருங்கிணைப்பு கிடையாது.


இதற்கென தமிழ் தட்டச்சு இயந்திரத்திற்க்கு மாற்றாக சிறியதொரு தட்டை கணிணி போல் , விலை தட்டச்சு இயந்திரத்திற்க்கு நெருக்கமாக இருந்தால் (Rs 4000/-) மிகவும் நல்லது. இதை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். பல காரணங்களால் தடைபட்டது. தற்போது மறுபடியும் ஆரம்பித்து உள்ளோம். வெற்றி பெற வாழ்த்துங்கள்.


with care and love,

Muhammad Ismail .H, PHD,
www.gnuismail.blogspot.com

Muhammad Ismail .H, PHD, said...

வேர்டு வெரிபிகேசனை எடுத்திடவும். நன்றி.

பழமைபேசி said...

மேலதிகத் தகவலுக்கு மிக்க நன்றி!

திகழ்மிளிர் said...

தீர்வுகள் காண விழைய வேண்டும்

Anonymous said...

தமிழ் வளர்ச்சி வாழ்க!

செல்வமுரளி said...

உங்கள் கருத்துக்கள் அப்படியே ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான் அய்யா!!

எங்கள் கிராமத்து பள்ளியில் உயர் கல்வி வரை நான் படிப்பது தேர்வு பெறுவதற்கு என்றுதான் மனப்பாடம் செய்தேனே, தவிர என் வேலை/வாழ்க்கையில் ஒவ்வொரு பாடமும் உதவும் என்று அறிந்திடவில்லை.
அன்று சரியாக ஆசிரியர்கள் ஏன் படிக்க வேண்டும். இந்த பாடங்களை படித்தால் இன்னென்ன பயன்பாட்டிற்கு பயன்படும் என்று சொல்லித்தந்திருந்தால் நன்றாய் இருந்திக்கும்.

என்றும் அன்புடன்
செல்வமுரளி