Iravatham Mahadevan, Early Tamil Epigraphy, Third Edition (2023), Review: Dr. R. Kalaikkovan

 ஐராவதம் மகாதேவனின் 'பழந்தமிழ்க் கல்வெட்டுகள்' நூல் - ஒரு வரலாற்றுக் கொடை

இரா.கலைக்கோவன்,  21 ஜூலை 2024, தினமணி கதிர்

தமிழ்நாட்டில் காணப்பெறும் பொதுக்காலம் ஆறாம் நூற்றாண்டு வரையிலான தமிழ் பிராமி கல்வெட்டுகளையும் வட்டெழுத்துக் கல்வெட்டுகளையும் ஆய்வுசெய்து. "பழந்தமிழ்க் கல்வெட்டுகள்' எனும் தலைப்பில் கல்வெட்டறிஞர் ஐராவதம் மகாதேவன் 2003- இல் வெளியிட்ட நூலின் மறுபதிப்பைச் சென்னையிலுள்ள செம்மொழி நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் வெளியிட்டது.

741 பக்கங்களைக் கொண்டிருக்கும் இப்புதிய வெளியீட்டில், முதற்பதிப்பில் இணைக்கப்பட்டிருந்த தொடக்கக் கால வட்டெழுத்துக் கல்வெட்டுகள் (பொ.கா. 4-6ஆம் நூற்றாண்டுகளுக்கு உரியவை) தவிர்க்கப்பட்டுள்ளன.

அதற்கு மாற்றாக முதற்பதிப்பு வெளியான 2003க்குப் பிறகு, தமிழ்நாட்டுக் குன்றுகளிலும் நடுகற்களிலும் கண்டறியப்பட்ட தமிழ் பிராமி கல்வெட்டுகளும் தமிழ்நாட்டில் கிடைத்திருக்கும் கலத்துண்டுகள், காசுகள், மோதிரங்கள், முத்திரைகள் ஆகியவற்றில் இடம் பெற்றுள்ள பிராகிருதப் பொறிப்புகளும், கலத்துண்டுகளிலுள்ள சிங்கள, பிராகிருதப் பொறிப்புகளும் இணைக்கப்பட்டுள்ளன.

ஓர் ஆய்வு நூல் எப்படி அமையவேண்டும் என்பதற்கு இந்த நூல் சிறந்த சான்றாகும். அழுத்தமான, ஆழமான செய்திகளின் தொகுப்பென்றாலும், படிக்கும் யாரையும் சேருமாறு இந்நூல் அமைய வேண்டும் என்று கருதி எழுதினாற் போன்ற மிக எளிய மொழி நடை.

ஆங்கிலம் கற்ற அனைவருக்கும் புரியுமாறு, அகராதித் தேடல் இல்லாமலேயே பக்கங்களை நகர்த்துமளவு எளிய மொழியில் தம் கருத்துக்களைப் புலப்படுத்தியிருக்கும் பாங்கு நூலாசிரியரின் தனித்தன்மையாக இந்நூலில் மிளிர்கிறது.

தொடர்ந்து படிக்கத் தூண்டும் மொழியில் ஆழ்ந்த பயிற்சியும் வெளிப்படுத்த நினைக்கும் கருத்துகள் பற்றிய தெளிவான திட்டமிடுதல்களும் இருந்தால்தான் அது கைகூடும். மகாதேவனின் சொல்வளமும் கருத்தாளுமையுமே இந்நூலைப் பரவசப் படிப்புக்குரிய நூலாக்கியுள்ளன.

மூன்று பிரிவுகளாகப் பகுக்கப்பட்டிருக்கும் இந்த நூலின் முதற்பிரிவு, தமிழ் பிராமி கல்வெட்டுகள் கண்டறியப்பட்ட வரலாற்றைக் கால ஒழுங்குடனும் சுவை குன்றாமலும் நிறை, குறைகளை மறைக்காமலும் முன்வைக்கிறது.

பொ.கா.1882- இல் தொடங்கி 2012 வரை பதிவு செய்யப்பட்டுள்ள இந்தக் கண்டுபிடிப்பு வரலாற்றின் நிகழ்வுகள், இடையே தொய்ந்து, 1961-இல் புத்தாக்கம் பெற்றமை, தமிழ் பிராமி கல்வெட்டுகள் பற்றிய தேடலையும் ஆய்வுக் கண்ணோட்டத்தையும் எப்படியெல்லாம் சீரமைத்தது என்பதை நூலாசிரியர் நன்கு புலப்படுத்தியுள்ளார்.

கண்டறியப்பட்ட கல்வெட்டுகளை அரசுக் கல்வெட்டாய்வாளர்கள் வெங்கையா, கிருஷ்ண சாஸ்திரி முதலியோர் படித்தறிந்து பதிவு செய்தபோதும், சுப்பிரமணிய ஐயர் மேற்கொண்ட ஆய்வே தமிழக பிராமி கல்வெட்டுகளில் கையாளப்பட்டுள்ள மொழி தமிழ் என்பதை முதன் முறையாகச் சான்றுகளுடன் வெளிப்படுத்தியது.

இந்த ஆய்வுக் களத்தில் 1961-இல் நுழைந்த ஐராவதம் மகாதேவன் நான்காண்டுக் களப்பணிக்குப் பிறகு, தமிழ்நாட்டின் 21 இடங்களில் அதுநாள் வரை கண்டறியப்பட்டிருந்த 74 கல்வெட்டுகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டார்.

எழுத்தமைவு, எழுத்தியல், மொழிச் சான்றுகள் அடிப்படையில் அக்கல்வெட்டுகள் மூன்று காலக்கட்டப் பொறிப்புகளாக அடையாளம் பெற்றன. அவற்றில் சில திருத்தங்களைச் சேர்த்தவர்களாக இரா. நாகசாமி, ஆர். பன்னீர்செல்வம் ஆகியோரைக் குறிப்பிடலாம்.

1960க்கும் 1990க்கும் இடைப்பட்ட முப்பதாண்டுக் காலத்தில் பல இளம் ஆய்வாளர்கள் தமிழ் பிராமி கல்வெட்டாய்வில் ஆர்வம் காட்டினர். அதன் விளைவாகப் பல புதிய கல்வெட்டுகள் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கண்டறியப்பட்டதுடன், காசுகளின் பதிவுகளும் அகழ்வாய்வுகளில் பெருமளவிற்கு வெளிப்பட்ட கலத்துண்டுகளின் கீறல்களும் கவனத்தை ஈர்த்தன.

தமிழ் பிராமி ஆய்வு இக்காலகட்டத்தில் புதிய வெளிச்சம் பெற்றதை உணர்ந்த நிலையில், 1991- இல் தொடங்கிய மகாதேவனின் இரண்டாம் பருவக் களப்பணி இத்துறை சார்ந்த பிற ஆய்வாளர்களையும் உடன் இணைத்துக் கொண்ட நிலையில், 1996-இல் முடிவுற்றது. அதைத் தொடர்ந்த ஏழாண்டு கால உழைப்பே அவருடைய " பழந்தமிழ்க் கல்வெட்டுகள்' எனும் சிறப்பான நூலாக வடிவெடுத்து.

பழந்தமிழ்க் கல்வெட்டுகள் நூலின் முதற்பதிப்பிற்கும் இரண்டாம் பதிப்பிற்கும் இடையிலுள்ள முக்கியமான வேறுபாடு ஒளிப்படங்கள்தாம். செம்மொழி நிறுவனத்தார் பெரும்பொருட்செலவில் இதுநாள் வரையிலும் கண்டறியப்பட்டுள்ள அனைத்துப் பழந்தமிழ்க் கல்வெட்டுகளையும் அவற்றின் எழுத்துகளை வெண்பூச்சிட்ட நிலையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் விளம்பல் படங்களுடன் முதற்பதிப்பிலுள்ள மைப்படிப் படங்களும் கல்வெட்டுகளின் நேர்ப்பதிவுப் படங்களும் இந்நூலில் உள்ளன.

தமிழ் பிராமி கல்வெட்டுகளின் இந்த 194 பக்கத் தொகுப்பு கல்வெட்டாய்வாளர்களுக்கு மிகப்பெரிய கொடையாகும். ஒவ்வொரு கல்வெட்டும் இரண்டு பக்கங்களில், இடப்புறம் மூன்று விதமான படங்களாகவும் வலப்புறம் எழுத்துருக்களாகவும் தரப்பட்டுள்ளன.

எழுத்துருக்கள் கல்வெட்டில் உள்ளவாறே முதல் வரியாகவும் அவை சொற்களாக இணைந்து தொடராகும் அமைப்பு இரண்டாம் வரியாகவும் ஆங்கிலம், தமிழ் எனும் இருமொழிகளிலும் தரப்பட்டுள்ளன.

இவற்றை அடுத்து அக்கல்வெட்டின் பொருள் ஆங்கிலத் தொடராக அமைய, அதன்கீழ் ஒவ்வொரு கல்வெட்டும் எந்த இடத்தில் காணப்படுகிறது, அதன் காலம் என்ன, அக்கல்வெட்டின் அருஞ்சொற்களுக்கு எப்படிப் பொருள் காணலாம் எனும் குறிப்புகளுடன், பிற கல்வெட்டாய்வாளர்களின் வாசிப்புகள் தம் வாசிப்பிலிருந்து வேறுபடும் இடங்களையும் நூலாசிரியர் தந்துள்ளார்.

பிராமி கல்வெட்டுகளில் ஆய்வு மேற்கொள்ள விழையும் இளம் தலைமுறையினருக்கு இக்கல்வெட்டுகள் தொடர்பான பன்முகப் பார்வையை வழங்கும் விதமாகவே இத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இக்கல்வெட்டுகள் பற்றிய நூலாசிரியரின் விரிவான உரை விளக்கப் பகுதி படிப்பவர்களுக்குப் பல கோணங்களில் துணையாகிறது. ஒவ்வொரு கல்வெட்டாக எடுத்துக் கொண்டு அவற்றிலுள்ள அருஞ்சொற்களுக்கான பொருள், இலக்கணக் குறிப்பு, அச்சொற்கள் இலக்கியங்களிலோ, பிற கல்வெட்டுகளிலோ ஆளப்பெற்றிருப்பின் அதுகுறித்த தகவல், அச்சொற்களுக்கு இணையான பிற திராவிட மொழிச் சொற்கள் ஆகியவற்றைத் தந்திருப்பதுடன், அவை பிராகிருத மொழியிலிருந்து பெறப்பட்டிருப்பின் அம்மொழிசார் கல்வெட்டுகளில் அச்சொற்கள் வழங்கும் விதமும் காட்டியிருக்கும் பாங்கு, படிப்போருக்கு பிராமி கல்வெட்டுச் சொற்கள் பற்றிய ஆழ்ந்த புரிதலைத் தருகிறது.

சங்க இலக்கியங்களுடன் இந்தப் பழந்தமிழ்க் கல்வெட்டுகளின் செய்திகளை இணைத்துப் பார்த்து, பொதுக் காலத்திற்கு முற்பட்ட இரண்டாம் நூற்றாண்டு தொட்டு பொதுக்காலம் நான்காம் நூற்றாண்டு வரையிலான நாடு, சமயம், சமூகம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த தரவுகளை மகாதேவன் பதிவு செய்துள்ள முறை தமிழர்களின் தொன்மை வரலாற்றை நன்கு வெளிப்படுத்துகிறது.

நாடு எனும் தலைப்பின் கீழ், பழந்தமிழ்க் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ள சேர, சோழ, பாண்டிய மன்னர்களுடன் அதியமான் நெடுமானஞ்சி, பிட்டன் கொற்றன், கொற்றந்தை, கணிமான், பதுமான்கோதை முதலிய குறுநில மன்னர்களையும் இனம் கண்டிருக்கும் நூலாசிரியர், அவர்களைச் சங்கப் பாடல்களில் வெளிப்படும் அரசர்களுடனும் கலத்துண்டுகள், காசுகள் வழி அறியப்பட்டுள்ள பெயர்களுடனும் ஒப்புமை செய்து காட்டியுள்ள நேர்த்தி குறிப்பிடத்தக்கது.

கோ, இளங்கோ, அதிகன், காவிதி, மாராயன் முதலிய சொற்களின் துணையுடன் அரசு நிருவாகம் பற்றிய தரவுகளும், "தேனூர் கொண்ட', "ஆகோள்' ஆகிய பதிவுகள் வழிப் போர் பற்றிய செய்திகளும் முதலைக்குளம் கல்வெட்டிலிருந்து ஊரவை தொடர்பான பதிவுகளும் தொகுக்கப்பட்டுள்ளமையுடன் அவை சம கால, பிற்காலக் கல்வெட்டு வழக்குகளுடன் ஒப்பிடப்பட்டிருக்கும் பாங்கு பாராட்டிற்குரியது.

வேளாண்மை, வணிகம், தொழில்நுட்பம், சமூகக் கட்டமைப்புகள், தனியார், ஊர்பெயர்கள், மாவடை, மரவடை, இசை, ஆடல் உள்ளிட்ட கலைகள், எழுத்தறிவு என ஆறு நூற்றாண்டுத் தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு பரிமாணங்கள் இந்நூலில் முன்வைக்கப்பட்டுள்ளன.

தமிழரின் பரவலான எழுத்தறிவு பற்றிய மகாதேவனின் குறிப்புகளும் அதுதொடர்பான அவரது கருத்துகளும் இந்த மண்ணின் அறிவு வளம் காட்டும் கண்ணாடிகள்.

கல்வெட்டுகளில் தொனிக்கும் சமயம் பற்றிய ஆய்வில் புத்தம், ஆசீவகம், சமணம் எனும் மூன்றும் கருதப்பட்டாலும், சான்றுகளின் அடிப்படையில் இக்கல்வெட்டுகளில் ஊடாடியுள்ள சமயமாக சமணத்தையே மகாதேவன் முன்னிறுத்துகிறார்.

கணி, அமணன், உபசன், பதந்தன், அத்துவாயி ஆகிய சொற்களை துறவிகளின் பட்டப் பெயர்களாகவும் பமித்தி, கந்தி ஆகியவற்றை சமணப்பெண் துறவிகளின் பட்டங்களாகவும் கொள்ளும் நூலாசிரியர், இலக்கியச் சான்றுகளின் அடிப்படையிலும் கல்வெட்டுகள் கிடைத்திருக்கும் இடங்களின் நோக்கிலும் தம் கருத்தை உறுதிப்படுத்துகிறார்.

அவர் கூறுவது போல 87 தமிழ் பிராமி கல்வெட்டுகளில் 65, பாண்டியநாட்டில் கிடைத்திருப்பதையும் கருத வேண்டியுள்ளது. அதுபோலவே தமிழ் பிராமி கல்வெட்டுகள் கிடைக்கும் பதினொரு குன்றுகளில் பொ.கா. 8-11 -ஆம் நூற்றாண்டுகளில் மீண்டும் சமணத் துறவிகளின் குடியிருப்பு நேர்ந்ததைப் பல கல்வெட்டுகளும் சிற்பச் சான்றுகளும் உறுதிப்படுத்துகின்றன.

நூலின் பின்னிணைப்புகளாகக் கல்வெட்டுகளில் உள்ள அருஞ்சொற்களுக்கான பொருளடைவு, தனியர், ஊர்ப் பெயர்களின் அடைவு, திராவிட, இந்தோ ஆகிய மொழிகளின் வேர்ச்சொல் அடைவு ஆகியவற்றைத் தந்திருப்பதுடன், எந்த மொழிக் குடும்பம் சார்ந்தன என்றறிய முடியாத நிலையிலுள்ள பன்னிரண்டு வேர்ச் சொற்களையும் தனித்துத் தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக்கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளனவாக மகாதேவன் இனம் பிரித்துள்ள திராவிட வேர்ச்சொற்கள் 237 என்பதும் அவை 375 முறை கல்வெட்டுகளில் வழங்கப்பட்டுள்ளன என்பதும் அதேசமயம், இக்கல்வெட்டுகளில் பயின்று வந்துள்ள இந்தோ-ஆரிய மொழிகளின் வேர்ச்சொற்கள் 81 மட்டுமே என்ற உண்மையும் இக்கல்வெட்டுகளின் மொழி தமிழே என்பதை நிறுவப் போதுமான காட்டுகளாக அமையும். இந்த உண்மையை மிகநுட்பமாக இலக்கணக் கூறுகளின் மூலமும் நூலாசிரியர் ஐயத்திற்கிடமின்றி நிறுவியுள்ளமை பாராட்டுதலுக்குரியது.

கல்வெட்டுச் சொற்களை மகாதேவன் படித்திருக்கும் முறையிலும் அச்சொற்களுக்கு அவர் பொருள் கொண்டுள்ள வகையிலும் கல்வெட்டுத் தரவுகளிலிருந்து அவர் தொகுத்தளித்திருக்கும் வரலாற்றுச் செய்திகளிலும் ஆங்காங்கே கருத்து மாறுபடுபவர்கள் இருப்பினும், சார்பற்றுச் சொல்லியிருக்கும் முறை, தந்திருக்கும் சான்றுகள், விவாதித்திருக்கும் நேர்த்தி ஆகியவற்றை இத்துறைச் சார் அறிஞர்கள் அனைவரும் ஒரு முகமாகப் பாராட்டியுள்ளனர்.

இந்நூலைப் பார்க்கும் அளவிலேயே இதன் பின்னிருக்கும் உழைப்பை யாரும் உணரலாம். இதை ஒருமுறை படிப்பவர்கள் அந்த உழைப்பின் உறுதி, அதைப் பின்னிருந்து இயக்கிய மகாதேவனின் தேடல், எதையும் இயன்ற வரையில் முழுமையுறப் பதிவு செய்திடல் வேண்டும் என்ற அவருடைய அழுத்தமான குறிக்கோள், அதற்காக அவர் மேற்கொண்ட பல்துறைசார் முயற்சிகள், ஆய்வாளர்களை ஒருங்கிணைத்து நிகழ்த்திய கள ஆய்வுகள், சொல்லாடல்கள் ஆகியவற்றை உள்ளங்கைக் கனியாய் உணர முடியும்.

கல்வெட்டுகளோடு தொடர்புடைய ஒவ்வொருவரும், ஏன், வரலாற்றில் ஆர்வமுடைய யாரும் இந்த நூலை ஒரு முறையேனும் முழுமையாகப் படிக்க வேண்டும்.

அப்போதுதான் உழைப்பு, நன்றி, உண்மைத் தன்மை, எளிமை, கூட்டுறவு, ஆய்வு நேர்மை முதலிய வழக்கழிந்து வரும் பல சொற்களின் பொருள் விளங்கும். தமிழின் தொன்மையை அடர்த்தியான சான்றுகளின் பின்னணியில் உலக அரங்கில் நிலைநிறுத்தியிருக்கும் மகாதேவனின் இந்த நூல், தமிழன்னைக்கு அவர் வழங்கியிருக்கும் வரலாற்றுக் கொடை மட்டுமல்ல, அவரது வாழ்நாள் கொடையும் கூட. 

- டாக்டர் இரா. கலைக்கோவன்

THE LEGACY OF IRAVATHAM MAHADEVAN (1930- 2018)

⚜️Iravatham Mahadevan was an Indian epigraphist and civil servant, known for his successful decipherment of the Tamil-Brahmi script and expertise in Indus Valley inscriptions.

⚜️His two masterpieces, The Indus Script: Texts, Concordance and Tables (1977) and Early Tamil Epigraphy: from the Earliest Times to the Sixth Century A.D. (2003), have earned recognition as the most authoritative among sourcebooks in Indian Epigraphy.

⚜️ He wrote over 40 papers to further the Dravidian hypothesis of the Indus Script and argues for a continuity between the written records of Indus and the oral transmissions from the Rig Veda. He was instrumental in firmly establishing the view of K.V. Subrahmanya Aiyer that the writings found in the caves of Tamil Nadu in a script similar to Brahmi are a variant of Brahmi, which Mahadevan calls Tamil Brahmi, and in ascertaining that the language of the script is indeed Tamil.

⚜️Mahadevan went on to read the names and titles of several generations of Pandiya and Chera kings in Tamil Brahmi writings, all corroborated in early Tamil literature.

⚜️He received the Padma Shri award from the Government of India in 2009 for arts. He was conferred the Tolkappiyar award for lifetime achievement in classical Tamil by the Government of India for the year 2009–2010.

Priests of the Indus Gharial God and Tiger Goddess

Priests of the Gharial god and the Tiger goddess in the “Pasupati” seal (M-304) and in its equivalent double, the Gharial seal (M-440).

It is interesting that two humans are found in the “Pasupati” seal (M-304) and its equivalent Gharial seals (M-440, M-1393).




The human near the tiger has a double-bun hairstyle and is sitting on the branch of a tree. This is the same posture we find in the Shaman on an acacia tree with an attentive tiger below, as seen in seals K-152, M-309, M-310, K-49, M-1185, H-163, H-181, M-1431, H-1973, H-1974, and C-27. So, the human near the tiger in M-440 and M-1393 is interpreted as the priest of the goddess (shown in red circle). The mythology surrounding the shaman of the goddess is explored here:
https://archive.org/details/IVCReligionByNagaGanesan2007/page/n5/mode/2up

This shaman with the double-bun hairdo was erroneously identified as a monkey in South Asian Archaeology 2001, Vol. 1: Prehistory, page 273.




There is another human standing near the bottom of the tail of the gharial crocodile in the M-440 seal, and this figure can be assumed to be the priest of the gharial god (shown in green circle).



We can apply this concept of two priests to the famous Pasupati seal (M-304) where two humans appear as stick figures. The human near the tiger in M-1393 is taken as the priest of the goddess (shown in green circle). Logically then, the other human shown at the top left corner can be assumed to be the priest of the gharial god (shown in red circle).

References:
(1) Gharial god and Tiger goddess in the Indus valley,
Some aspects of Bronze Age Indian Religion, my paper, 2007
(2) Indus Creation Mythology in the Iron Age Tamil Nadu:
(3) Tiger Symbol in the Indus Script
(4) Gharial god and Tiger goddess: Saṃyoga depicted in the seal, H-180 from Harappa

Harappan-tiger-sign-in-the-ivc-script

Tiger Symbol in the Indus Script

The famous "Paśupati" seal from Mohenjodaro has an "equivalent double" representation in the Indus-Vāṉi civilization. While the Mr̥gapati/Paśupati seal is unique and is the only one of its kind found so far, its equivalent double is represented on many seals. This suggests the identity of the yogi in the Paśupati seal as a crocodile deity and indicates that the Harappans valued the crocodile deity more highly. Since the crocodile, or Makara Viṭaṅkar, seal is found many times, often in an abraded condition, it is possible that these Makara Viṭaṅkar seals were used in some kind of pūjā ritual involving abhiṣeka with garlands, milk, curd, honey, and other offerings. Mālā in Sanskrit corresponds to Dravidian mālai ("garland"); compare malar ("flower").

Like the Paśupati seal, there is also a rare and unique seal from Mohenjodaro depicting three interlinked tigers (M-295), now in the National Museum, New Delhi. This drawing was first shown on the Internet around 2010 by the Brazilian illustrator Walter Plitt Quintin. At that time, the connection between the tiger sign in the Indus script and its interpretation as a representative of the Goddess was mentioned by me. It is a "Puli mudrā" sign, puli meaning "tiger," a meat-eating carnivore, in Dravidian. The emblematic artwork is a major feat of graphic design in early antiquity of the World.

Gharial God and Tiger Goddess in the Indus Valley: Some Aspects of Bronze Age Indian Religion, 2007.

https://archive.org/details/IVCReligionByNagaGanesan2007/page/n5/mode/2up

Image

Image

Visualization of M-295 seal by @thehistoropill

Image

The "Paśupati" seal (M-304) from Mohenjodaro, https://en.wikipedia.org/wiki/Pashupati_seal

The Mulabandhasana posture of Pasupati seal compared with several seals of the same IVC deity, and in Janapada coins (200 BCE), and later Ganapati icons.

https://x.com/sarvamedha/status/2059849939346465110

Mr̥gapati/Paśupati and his equivalent double, Makara Viṭaṅkar crocodile, representing the Pole Star (Thuban in Draconis constellation).

Indus Creation Mythology in the Iron Age Tamil Nadu:

https://cenkantal.medium.com/indus-creation-mythology-in-the-iron-age-tamil-nadu-e4834c8ecbd7

 

Gharial god and Tiger goddess: saṃyoga depicted in the seal, H-180 from Harappa

https://nganesan.blogspot.com/2022/02/samyoga-indus-makara-with-tiger-goddess.html

https://x.com/naa_ganesan/status/2053437875945951496

 

Useful bibilography:

(a) Sullivan, Herbert P. (1964). "A Re-Examination of the Religion of the Indus Civilization". History of Religions. 4 (1): 115–125.

(b) Hiltebeitel, Alf (2011). "The Indus Valley "Proto-Śiva", Reexamined through Reflections on the Goddess, the Buffalo, and the Symbolism of vāhanas". In Adluri, Vishwa; Bagchee, Joydeep (eds.). When the Goddess was a Woman: Mahabharata Ethnographies - Essays by Alf Hiltebeitel. BRILL. ISBN 978-90-04-19380-2. Original in Anthropos, 1978.

(c) Srinivasan, Doris (1975–76). "The So-Called Proto-śiva Seal from Mohenjo-Daro: An Iconological Assessment". Archives of Asian Art. 29: 47–58

(d) Srinivasan, Doris (1984). Unhinging Śiva from the Indus Civilization, The Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland, No. 1 (1984), pp. 77-89

(e) Doniger, Wendy (2011). "God's Body, or, The Lingam Made Flesh: Conflicts over the Representation of the Sexual Body of the Hindu God Shiva". Social Research. 78 (2, Part 1 (Summer 2011)): 485–508.

(f) Dhyansky, Yan Y. (1987). The Indus Valley Origin of a Yoga Practice.Artibus Asiae. Vol. 48, No. 1/2, pp. 89-108 .

(g) Parpola, Asko. https://askoparpola.academia.edu/research

Image

Image

Image

The Tiger symbol sign of the Indus script is derived from the center of the three interconnected tigers, M-295 seal.

Image

Tiger symbol sign - "Puli mudrā" - in the Indus script.

-----------------------------------

The Tiger symbol sign is derived from the center of the three interconnected tigers, M-295 seal: https://x.com/naa_ganesan/status/2065501421525516468

The basic Tiger symbol of the IVC script, and then there are diacritics (1) a flat roof (2) V-roof (3) a plant (4) vindu "drop". Thanks to https://indusscript.net

Image        Image

 

The Tiger symbol sign of the Indus script - with roof diacritic.

 

The interlinked 3-tigers seal of Mohenjodaro, M-295, is the Rosetta Stone to decipher the Tiger Symbol in the Indus script. The tiger symbol sign representing the great goddess of IVC repeats twice in the "sacrifice seal" M-1186 dedicated to the goddess in the pipal fig arch. Note the five signs (L to R): "Tiger sign (twice), Fish (with bindi/poTTu), Jar, Human (shaman)".  The goddess seal, M-1186 is the only seal having the tiger symbol twice in the "script".

Interestingly, the crocodile deity seals showing the equivalent double of Pasupati on the Obverse side, has the interlinked 3-tigers like a pinwheel on the Reverse side. These Makara Viṭaṅkar seals, showing the divine couple on both sides, were used in some kind of pūjā ritual involving abhiṣeka with garlands, milk, curd, honey, and other offerings. There are many such seals found.

My note on M-1186 "Sacrifice to fig deity" seal. Also, it explains that M-312 displays the fight of the goddess with the buffalo, and it is not a Jallikattu scene as written by I. Mahadevan (The Hidu, 13-1-2008).

https://nganesan.blogspot.com/2008/01/eru-tazuval.html

கொற்றவையும், புலியும் - ஒரு 4500 ஆண்டு காலத் தொடர்பு:

http://nganesan.blogspot.com/2021/05/tiger-durga-indus-cilappatikaram.html

Paṭṭa-Mahiṣī: Proto-Koṟṟavai goddess in Indus civilization (Banawali and Mohenjadaro)

http://nganesan.blogspot.com/2021/01/banawali-mohenjadaro-proto-durga.html

Indus seal, M-312 - Proto-Koṟṟavai war with Mahiṣa

http://nganesan.blogspot.com/2021/01/m312-seal-is-not-jallikkattu.html

Kavari in Tirukkuṟaḷ and Sangam Texts: Dravidian word for Gauṛ bison and Tibetan yak 

http://nganesan.blogspot.com/2017/11/kavarimaa-tirukkural-conference-2017.html

Analogous to coins which possess an obverse (front) and a reverse (back), numerous seals have been discovered depicting the divine pair: the Gharial god on the obverse and interlinked Tigers symbolizing the goddess on the reverse. Compare the interlinked 3-Tigers with M-295, the Rosetta stone used in deciphering the goddess sign in the IVC script.

 

 

 

Two more examples of IVC amulets displaying the divine couple.

(1) Divine Couple in Ancient Indian Astronomy from Binjor to Adichanallur: Makara Viṭaṅkar & Kolli/Koṟṟavai

https://nganesan.blogspot.com/2021/02/divine-couple-binjor-amulet-to.html

In this amulet, the emblems of Gharial in the sky for the god and Blackbuck for the goddess are shown. There is a similar IVC amulet from Konar Sandal South, Iran. While the head and tail of the Gharial have broken away from the Binjor amulet, the metallic seal from Iran has the full Gharial intact.

(2) Divine Couple in Ancient Indian Astronomy from Kalibangan.

Kalibangan excacavation report, ASI documents significant findings and is a must read. On the cover of the Kalibangan report, both Vol I & II, an important correction on the drawing of the ceramic where a blackbuck is pulling a cart on which Bodhi tree leaves are arranged on a circle. 

 

In the sketch (top left corner) of the Kalibangan excavation report (ASI), a bird like an ostrich is drawn/extrapolated. It is actually the legs of a Gharial crocodile that needs to be drawn, and it is not a bird. Above the blackbuck (vaahana of Kotravai/Proto-Durga), Gharial (the Pole Star) needs to be drawn in lieu of the ostrich-like bird. Proof: (1) the full Gharial in the sky with blackbuck below shown on the seal (metal) from Konar Sandal South, Iran excavations (2) Binjor (4MSR) amulet in which the head and legs of the Gharial have been broken (3) Many IVC seals showing the Gharial in the sky.

Also, looking at similar carts/chariots from Sumeria, only two wheels per side need to be shown. In the Sumerian examples, the four-wheeled chariots were drawn by Kunga equids. Sumeria was the source of the cart/chariot design in this cart/chariot of Kalibangan and blackbucks are shown, an Indian innovation. The funerary carts/chariots found at Sinauli and Tilwara, most likely showing taurus bulls, same as used for the ubiquitous Unicorn seals devloped from "Bull of Heaven" portrayals in Sumeria. The trefoil shape on Bull of Heaven statuetets in IVC and Sumeria is a geometric abstraction of the Bael/Bilva leaves offered for Makara croc deity, the god of death. I think zebu bulls on Sinauli cart is less likely at Sinauli. Erwin Neumayer has mentioned the Daimabad chariot was designed for horses, but uses zebu bulls. Makara Viṭaṅkar of the Mature Harappan era morphs into Varuṇa in the Post-Harappan (2nd millennium BCE) period (e.g., Gudimallam lingam standing on Makara yaksha) and then to Mahadeva Śiva in the first centuries CE.

N. Ganesan

iṣṭi 'brick' in the Yajurveda

íṣṭi 'brick' in the Yajurveda

N. Ganesan
Houston, Texas

Some thoughts regarding the etymology of íṣṭi 'brick' from Dravidian texts.


David Buyaner,  
Freie Universität Berlin, Germany.     

Etymology of some Indo-Iranian cultural terms and the Indo-Iranian substratum theory. I. Indo-Iranian *Hišti- / *Hišta- ‘brick’

https://indo-iranian.org/iil/article/view/23
(PDF of this Russian paper can be downloaded.)

"This hypothesis, often called “the theory of the Indo-Iranian substratum”, was suggested by Michael Witzel in 1995 and later elaborated by him in a series of papers. While this theory has been subsequently approved by many prominent scholars, I argue that it is built on methodologically shaky foundations: Witzel postulates a non-Indo-European substratum in Indo-Iranian based on a small list of words found in both Indo-Aryan and Iranian with no reliable Indo-European etymology available. Notably, in order to substantiate this hypothesis, he and his followers had to enlist material which fails to meet the original criteria. [...] I postulate the Indo-European prototype *h2h̥1s-tó-/*h2h̥1s-ti- from *h2eh1s-  ‘to dry’, which meets both the semantic and formal criteria of etymological reliability."

"Meanwhile, it rests on methodologically shaky foundations. Thus, one of its main adherents, A. M. Lubotsky, in the programmatic article “Indo-Iranian Substratum,” asserts the following: “We are entitled to suspect that some words were borrowed [from the unknown language of the BMAC bearers — D. B.], if they belong to a specific semantic field, even in the case when they do not reveal phonological or morphological anomalies” [Lubotsky 2001: 304]. Thus, the presence of a small number of words common to both main branches of the Indo-Iranian group, but lacking a reliable Indo-European etymology, allowed M. Witzel to postulate the presence of a non-Indo-European substratum in Indo-Iranian; however, to substantiate it, he and his followers needed to enlist material that did not meet the original criteria." (D. Buyaner, AI summary)

From Witzel (1999) paper onwards, Lubotsky, and others followed with an etymological explanation of the source word for brick in the 3rd century BCE Avestan word, ištya and iṣṭi/iṣṭikā from Yajurveda (agnicayana ritual) from BMAC. All these start with the paper by H. Converse (1974) about bricks in Agnicayana ritual, and a mention about the name for the brick from Dravidian. However, the word for brick as in Sangam texts is not mentioned in any of the research work starting from H. Converse (1974) to D. Buyaner's (2026) paper.

(1)
Let us first look at Hungarian scholar, L. Forisz paper (2016).
Forisz 2016 — L. Forisz. Apāṃ Napāt, Dīrghatamas and Construction of the Brick Altar: Analysis of RV 1.143.
A. Parpola, P. Koskikallio (eds.). Vedic investigations. Papers of the 12th World Sanskrit Conference. Delhi: Motilal ­Banarsidass Publishers, 2016. Vol. 1. P. 97–126.

pg. 120 "Etymology of the Word iṣṭi-
We have reached a point where the etymological analysis of the word is necessary. I would like to emphasize that there is no known Ṛgvedic word that fits in well with our previous analysis. There exists a possibly related word in Vedic, but it occurs only in the early Yajurveda: íṣṭakā- ‘brick’. It denotes almost exclusively the sacred bricks of the agnicayana ritual. Converse (1974: 83–85) suggested two possible Tamil candidates as its etymology: cengal (cennu + kal/gal) and cuṭakal/suṭakal (cuṭa/suṭa + kal). On account of Emeneau’s critique of Converse’s proposal, Staal (1983: I, 131– 132) turned to other possibilities and offered the Avestan ištiia- and Old Persian ištiš as a starting point. Witzel (1995: 103) not only accepted this, but also enlarged the horizon significantly by arguing – on the basis of the slightly different Vedic and Iranian (Avestan and Old Persian) forms – that ‘the origin as a loan word from some unknown pre-Aryan culture should be considered’. He also made a proposal for this pre-Aryan language: that of the Bactria-Margiana Archaeological Complex (BMAC) alias the ‘Oxus culture’ of Bronze Age (ca. 2500–1500 BCE)."

pg. 121 " Now we are in a position to give a preliminary translation of verse 8:
O Agni (cf. verse 1ab), attentive with your attentive, kind and powerful guardians (i.e. the stars), preserve us; O Iṣṭi [brick altar], with your unimpaired, uninflamed, unwinking (guardians) [bricks], protect our children! (1.143.8.)

We have come to the conclusion that it cannot be excluded that before the innovation of Vedic íṣṭakā-, iṣṭikā-, an earlier form iṣṭi also found its way to the Ṛgveda, or – more precisely – to a singular hymn of a great western poet, who praised an equally singular form of fire, Apāṃ Napāt, the Child of the Waters (identified with iṣṭi) as well as a widely known one, Agni, in the same hymn. The intertwining imagery of the hymn gave Agni (and Apāṃ Napāt and iṣṭi) such a unique cosmological significance that was unparalleled in the contemporary sacerdotal poetry.

I hope that my analysis of ṚV 1.143 – along with the corroborating evidence of the Apāṃ Napāt sūkta of the Gṛtsamada clan (ṚV 2.35) – will reopen an old debate and some scholars may even reconsider the possibility of tracing the construction of a brick altar in the Ṛgveda. As for me, I am confident that I have found strong indirect evidence for the presence of brick in the Ṛgveda. Remarkably enough, it turned out that the most important obstacle that confused the evidence was the brick-altar itself. In other words, we have not seen the bricks for the altar." (L. Forisz)

Full article can be read here,
https://www.researchgate.net/publication/242265188_Apam_Napat_Dirghatamas_and_the_Construction_of_the_Brick_Altar_Analysis_of_RV_1143

D. Buyaner says about L. Forisz conclusion:
"Several years ago, the suggestion was made that the original form iṣṭi- in the meaning ‘brick’ already occurs in the Rigveda [Forisz 2016: 115–119, 123]. In view of the importance of this hypothesis for the question of the origin of Old Indic iṣṭi- and its Iranian correspondences, I shall permit myself to dwell upon it in greater detail. The author argues that the form iṣṭe (RV I.143.8) can be explained neither as the vocative singular of iṣṭí- ‘desire’ nor as a truncated variant of iṣṭébhiḥ. The author’s own proposal — to interpret iṣṭe as the vocative singular of iṣṭi- ‘brick’ (or ‘(brick) altar’ by synecdoche) — is based on the assumption that RV I.143.8 exhibits internal parallelism.

Since the term íṣṭakā- in later Old Indic texts is indeed closely connected with the altar, this hypothesis would be attractive were it not for the doubtful translations of the epithets in RV I.143.8 and for the parallel passage RV VI.8.7, in which the form iṣṭe appears in the collocation ádabdhebhir gopā́bhir.

The author concludes that in both passages iṣṭe should be understood as a vocative referring to Agni. As regards morphology, among deverbal formations in -ti there exist not only nomina actionis but also nomina agentis. Consequently, iṣṭí- in RV I.143.8 and VI.8.7 should be translated not as ‘object of desire’ but rather as a nomen agentis meaning ‘one who desires, longs for’.
Accordingly, the passages are translated approximately as follows:

RV I.143.8:
“O Agni, protect us unceasingly together with thy unceasing, gracious, benevolent protectors! With those not subject to deception, vigilant, unsleeping — protect on every side our children, O longing one!”

RV VI.8.7:
“With thy protectors not subject to deception, O longing one, protect our masters, O thou who dwellest in three places, and guard the host of our givers, O Agni Vaiśvānara, and prolong their life-span while being praised!”

Thus, L. Forisz’s bold attempt to demonstrate the existence in the Rigveda of the original form iṣṭi- ‘brick’ must unfortunately be regarded as unsuccessful. "

AI translation tool gives this from a reading of D. Buyaner's Russian paper, but L. Forisz paper saying in the Rgveda, the word iṣṭe hints at (fired) bricks may not be totally wrong. Let me explain this.

Whenever I met Emeneau (UC, Berkeley), he told me that he does not know Sangam Tamil. If Prof. MB Emeneau has studied Sangam texts, he would have told the old name for bricks, iṭṭi in Sangam Tamil to prof. F. Staal. It is not that simple to dismiss the Dravidian connection first mentioned by Converse (1974), even though her taking "ceṅkal" (red stone) is not proper, but the iṭṭi, Sangam era word for brick can be used for analysis. It is exactly like what A. Parpola theorizes the connection of the Dravidian root, vaṭa- "aerial roots of the Banyan tree at the Pole Star and vaṭakku "north" Ultimately, vaṭakku 'north' name for Direction in Dravidian comes from the Harappan concept of the Banyan tree at the Pole star and the invisible aerial roots of the Banyan (which National tree of India!) holds stars and planets in the Universe without falling (Vedic texts).

Take iṭu- 'to place/to put' in Dravidian, īṭ (Hindi) (=brick), and iṭṭi, iṭṭikai 'brick' in Sangam texts. Compare īṭ 'brick (hindi) with īṭu, the batch of steamed iḍlis (< iṭṭaḷi, tamil) from the plate with depressions where rice-lentil fermented dough is poured each time. So, the veb, iṭu- gives rise to iṭṭi, iiṭu for brick. So, like īṭu of iḍli pancake, īṭu/iṭṭi is what is fired in the kiln. See the Hindi riddle quoted by F. Staal, Agni book. (a) iṭṭi > iṣṭi like (b) kuṭṭa- > kuṣṭa 'leprosy', (c) viṭṭa (from verb, viṭu-) > viṣṭa "cross-beam, rafter in roof", (d) kaṭṭai 'wooden log' > kāṣṭha (e) muṭṭi > muṣṭi (knuckle joint in the leg) (f) koṭṭakai > goṣṭha ... Then, like vaṭ- denoting the aerial root of the Banyan fig tree as well as Northern direction, iṭṭi > iṣṭi/iṣṭakā came to denote both 'brick' first as well as desire as in putra kāma iṣṭi yaagam.

In CDIAL, many IA languages retain īṭ for brick coming from Dravidian iṭu- (verb).
CDIAL 1600 íṣṭakā f. 'brick' VS., iṣṭikā- f. MBh., iṣṭā- f. BHSk. [Av. ištya- n. Mayrhofer EWA i 94 and 557 with lit. — Pk. has disyllabic iṭṭā- and no aspiration like most Ind. lggs.]
Pa. iṭṭhakā- f. 'burnt brick', Pk. iṭṭagā-, iṭṭā- f.; Kho. uṣṭū 'sun-dried brick, large clod of earth' (→ Phal. iṣṭū́ m. NOPhal 27); L. iṭṭ, pl. iṭṭã f. 'brick', P. iṭṭ f., N. ĩṭ, A. iṭā, B. iṭ, ĩṭ, Or. iṭā, Bi. ī˜ṭ, ī˜ṭā, Mth. ī˜ṭā, Bhoj. ī˜ṭⁱ, H. ī˜ṭh, īṭ, ī˜ṭ, īṭā f., G. ĩṭⁱ f., M. īṭ, vīṭ f., Ko. īṭ f. — Deriv. Pk. iṭṭāla- n. 'piece of brick'; B. iṭāl, °al 'brick', M. iṭhāḷ f. 'a piece of brick heated red over which buttermilk is poured to be flavoured'. — Si. uḷu 'tile' see uṭa-.
*iṣṭakālaya-.
Addenda: íṣṭakā-: S.kcch. eṭṭ f. 'brick', Garh. ī˜ṭ; — Md. īṭ 'tile' ← Ind. (cf. H. M. īṭ).

In Dravidian. vēḷ-, > vēṇḍu-/veṭṭal "to desire & to do yagnam", veḷvi 'yajna', vēṭṭal "to do yajna', vēṭṭai 'hunting'. Interestingly, iṭṭi > iṣṭi has the same meanings in Sanskrit: "to desire/to perform Yāgam". So, L. Forisz conclusion cannot be excluded totally.

(2)
F. Staal, Agni, Vol. I, pg. 130-
"There is a very wide gap between the simple altars of the Indo-Iranians and of the Rgveda, and those described in the Yajurveda. The texts of the Yajurveda describe the altar for the Agnicayana as an enormous structure piled up from at least a thousand kiln-fired bricks. The term used to denote bricks, iṣṭakā or iṣṭikā, occurs for the first time in the Taittiriya Samhita, and is subsequently found in the other branches and texts of the Yajurveda. In these texts we also find elaborate references to the firing of the ukha pot, which itself is not mentioned in any earlier text. Taittiriya Samhita 4.1.6 provides the mantras that accompany the rites at which the pot is moulded from clay and smoked, after which a trench is dug, the pot is placed in it, covered with fire, and baked for three days."

"The Harappans used millions of kiln-fired bricks as well as countless sun-baked ones. . . .The bricks of the Harappa civilization in its mature phase were beautifully made, well fired, and standardized in size. The basic size for the bricks was 11 1/2 inches long, 5 3/4 inches wide, and two or three inches thick. There were also double bricks 11 inches square, and special bricks for well copings, drain covers, corners, etc.
[...]

The word for brick also suggests a probably non-Aryan origin. As a Sanskrit word, iṣṭakā is related to the ritual use of bricks as an oblation, an iṣṭi, and not to their general character as a building material. This suggests that bricks first came into Vedic usage through this ritual function, rather than through their usual building function. By contrast, the brick words in Dravidian-based languages such as Tamil are descriptive of the primary use for bricks for building. For instance, one Tamil word for brick is ceṅgal; cennu means straightness, and kal or gal means stone or clay. Another Tamil word for burnt (fired) brick is cuṭakal, suṭakal; again kal means clay or stone, and cuṭu, suṭu means to burn, to bake, to burn bricks. It is possible that an early form of sutakal was the foreign phonetic basis of what becomes Sanskritized into iṣṭakā: an inversion (not uncommon in the incorporation of Dravidian words into Sanskrit) of the v and the u, and the dropping of the final / to conform to Sanskrit endings, would give uṣṭaka; the use of the bricks as iṣṭi would tend to bring about the change from the initial u (not common in Sanskrit) to the more common i. Whatever the source word, it was the Sanskrit meaning of the approximate transliteration of the indigenous word that was emphasized, and this Sanskrit word, iṣṭakā, in no way reflects the building function of bricks but only their ritual use (Converse 1974, 83-85)."

"Converse’s linguistic arguments are less strong than her archaeological evidence, and require some comment. A Dravidian origin for iṣṭaka is improbable or impossible on etymological grounds (Emeneau, personal communication; Emeneau also points out that cen-kallu means “red stone”). Moreover, iṣṭaka is not merely Indian, but also Indo-Iranian. Mayrhofer’s Etymological Dictionary gives the Iranian cognate ištya with the same meaning, “brick.” This term is attested only twice (Martin Schwartz, personal communication): both occurrences are in the Videvdad (Vendidad), 8.8 and 8.10, a late Avestan text, not earlier than the third century b.c. In both contexts, bricks or the dust from bricks or stones are used to cover a corpse, not for the construction of a burial mound, but to protect the corpse temporarily, in bad weather, before it is given to the birds and other animals. In Old Persian too išti occurs and means “brick” (allegedly fire dried). It is found, for example, in an inscription by Darius from Susa (fragment 29). It refers to the bricks used for the construction of Darius’ palace. The inscription informs us that Babylonians were employed as brick makers. In modern Persian, derivatives from the same stem are also common."

"The term used for “brick” could have been taken by the Indians from the Iranians, or by the Iranians from the Indians, or by both from an earlier source. It is possible to derive it from an Indo-Iranian root, but this is open to doubt. The term iṣṭi, denoting the ritual oblation of a vegetable substance and the accompanying rites (see above pages 46-48), is derived from the root yaj-, “sacrifice, perform a rite,” with past passive participle iṣṭa, “sacrificed.” Satapatha Brahmana 6.2.1.10 adopts this etymology for iṣṭaka: “Inasmuch as he saw them having sacrificed (iṣṭva) they are called bricks (iṣṭaka).”

" The term iṣṭaka survives in modern India in the meaning “(kiln-fired) brick,” and is connected with immortality in a manner curiously reminiscent of the Agnicayana. Here is a Hindi riddle: “It was born right in the water, but seeing the water it dies. Brothers, let’s go and cremate it; then it will be immortal ( 
jal hī meṁ paidā bhaī, jalāī dekh mar jāī| caliyo pañcoṁ phūk de, pher amar ho jāī|| ). The solution is: Iṭ, “brick.” Dundes and Vatulc (1974, 128-130) explain this as follows:


Brick making in India begins with taking mud out of a village pond. The mud is placed in a hollow rectangular wooden frame. After smoothing the top, the frame is removed and the brick-to-be is left to dry in the sun. Village homes are typically made of such sundried brick. Unfortunately, if rain falls on such a brick, it will dissolve. Thus, though the brick is “born in water,” it may die upon coming into contact with water again. There is, however, a way of preventing this catastrophe. By “cremating,” or baking the mud brick one renders it resistant to water and thus immortal. The suggestion that cremation ensures immortality is contrary to general eschatological theory inasmuch as everyone who dies becomes immortal. There is thus a philosophical contradiction in the second portion of the riddle statement. And even empirically there is a contradiction between an object’s being cremated and thus utterly destroyed and that object’s being made “immortal” in the sense of existing and withstanding destructive forces. "

Sangam texts mentioning iṭṭikai as bricks.

(     (1) iṭṭikai neṭum cuvar viṭṭam vīḻntu eṉa - akam 167/13

(2   (2) nāḷ pali maṟanta narai kaṇ iṭṭikai

puricai mūḻkiya pori arai ālattu - akam 287/6,7

As given earlier, CDIAL 1600  lists iiṭ 'brick' in many North Indian languages and especially in the regions which were part of the Harappan civilization. iiṭu, iṭṭi are directly derivable from Dravidian verb, iṭu- and iṭṭi > iṣṭi.

Take iṭu- 'to place/to put' in Dravidian, īṭ (Hindi) (=brick), and iṭṭi, iṭṭikai 'brick' in Sangam texts. Compare īṭ 'brick (hindi) with īṭu, the batch of steamed iḍlis (< iṭṭaḷi, tamil) from the plate with depressions where rice-lentil fermented dough is poured each time. So, the veb, iṭu- gives rise to iṭṭi, iiṭu for brick. So, like īṭu of iḍli pancake, īṭu/iṭṭi is what is fired in the kiln. See the Hindi riddle quoted by F. Staal, Agni book. (a) iṭṭi > iṣṭi like (b) kuṭṭa- > kuṣṭa 'leprosy', (c) viṭṭa (from verb, viṭu-) > viṣṭa "cross-beam, rafter in roof", (d) kaṭṭai 'wooden log' > kāṣṭha (e) muṭṭi > muṣṭi (knuckle joint in the leg) (f) koṭṭakai > goṣṭha ... Then, like vaṭ- denoting the aerial root of the Banyan fig tree as well as Northern direction, iṭṭi > iṣṭi/iṣṭakā came to denote both 'brick' first as well as desire as in putra kāma iṣṭi yaagam.

BMAC people were speaking a Non-Aryan language around 2000 BCE prior to the migration of Indo-Iranian people (A. Lubotsky). David Anthony’s map shows Indo-Iranian people moved to BMAC around 1800- 1400 BCE. During that period, Indo-Iranians came in touch with kiln-fired bricks, and the IVC word, iṭṭi gets modified and loses the charactersitic retroflex sound, as attested in Avestan (3rd century BCE).

BMAC derives its technical expertise from IVC:

F. Staal, Discovering the Vedas, Penguin.

“The BMAC or‘Bactrian-Margiana Archeological Complex’ was discovered during recent decades of archaeological excavation and research in Russia and the Central Asian Republics of the former Soviet Union. Large fortified and walled structures from kiln-fired bricks were unearthed and reconstructed (see Figure 6). The dates of the mature phase of that civilization are 2100–1900 BCE. Such dates are close to what we would expect if we were looking for influences on early Vedic. No inscriptions or texts have been found but that is not surprising: why should the BMAC people at that early period have arrived at a system of writing when the earlier Indus Civilization with its kiln-fired bricks, from which the BMAC certainly derived theirs, did not have a system of writing either?” 


“We are now in a position to explain what the map further depicts and implies. Speakers of Indo-Aryan came from the north and picked up some BMAC words. Some of these were passed from Indo- Aryan to Iranian as A. Lubotsky has shown. That explains the Iranian Wedge which forced Indo-Aryan to go in two opposite directions: west to the Near East and east to India. It explains at the same time the remarkable fact we met with before: West Asian Vedic is more closely related to Indian Vedic than to Iranian for the simple reason that they were one before Iranian came and pushed them away from each other in opposite directions: the Iranian Wedge.”

Finally, the word for brick, iTTi from IVC spreading to Persia, Iraq, Turkey and so on is comparable to

(1) the word for elephant, tusk moving to Mesopotamia from IVC.

Ansumali Mukhopadhyay, B. Ancestral Dravidian languages in Indus Civilization: ultraconserved Dravidian tooth-word reveals deep linguistic ancestry and supports genetics. Humanit Soc Sci Commun 8, 193 (2021). https://doi.org/10.1057/s41599-021-00868-w

(2) Another example is PILAU, PILOW, PILÁF, &c., s. Pers. pulāo, or pilāv, Skt. pulāka, 'a ball of boiled rice, often with meat.' Skt. pulāka < Tamil: puḻukku (meaning simmered, boiled, or parboiled food) and puḻukkal (meaning cooked rice). EWA III

https://archive.org/details/etymologisches-worterbuch-des-altindoarischen-bd-3/page/330/mode/2up

(3) Cattle statues and lama protective deities (human head and spotted cow) with trefoil design made of lapis lazuli in Mesopotamia. They seem to model the spots on the Cholistan cattle. The famous Priest-King statue and BMAC silver cups display the "tārpya" garment. Even Bodhi tree and leopard with the same trefoil design theme from IVC seems to have survived until the Sasanian period Iran.

https://commons.wikimedia.org/wiki/File:Iran_sasanide,_piatto_in_argento_niellato_con_felino_passante,_VI-VII_sec.JPG

 ~NG

Please send comments to naa.ganesan@gmail.com

Reference:  Converse, Hyla Stuntz. "The Agnicayana Rite: Indigenous Origin?" History of Religions, vol. 14, no. 2, 1974, pp. 81–95.