சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழக அரசு எடுப்பதற்காக தடை நீக்கம்
http://www.paristamil.com/tamilnews/?p=26165
சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழக அரசு எடுப்பதற்கான தடையை சென்னை உயர் நீதிமன்றம் இன்று நீக்கியது.
சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரவும், அதை நிர்வகிக்க செயல் அதிகாரி நியமிக்கவும் தமிழக அரசு 1987ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து கோயிலில் உள்ள பொது தீட்சிதர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் அப்பீல் செய்யாமல் நேரடியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது தவறு என்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
இதன் பின்னர் பொது தீட்சிதர்கள் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் அப்பீல் செய்யப்பட்டது. அரசு பிறப்பித்த உத்தரவு சரியானது என்று அறநிலையத்துறை ஆணையர் தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பை எதிர்த்து 2006ஆம் ஆண்டு பொது தீட்சிதர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அரசு உத்தரவை அமல்படுத்த இடைக்கால தடை விதித்தார்.
இந்த சூழ்நிலையில், சிவனடியார் ஆறுமுகசாமி என்பவர் கோயிலின் கருவறை முன்பு தேவாரம் திருவாசகத்தை பாட முயன்றார். இதற்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அரசு ஏற்று நடத்த பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தன்னையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று ஆறுமுகசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில், இடைக்கால தடையை நீக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆர்.பானுமதி முன்னிலையில் நடந்து வந்தது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ராமசாமி, பல தீட்சிதர்கள் மீது பல கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. சோழ மன்னர்களால் கட்டப்பட்ட இந்த கோயிலை தீட்சிதர்கள் நிர்வகிக்க உரிமையில்லை. அரசுக்கு தான் உரிமை உண்டு என்று வாதாடினார்.
ஆறுமுகசாமி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.காந்தி, ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஆர்.பானுமதி தள்ளி வைத்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி பார்வதி, சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு எடுப்பதற்கான தடையை நீக்கி உத்தரவிட்டார்.
ஒரு வாரத்தில் நிர்வாக அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும் நீதிமன்ற உத்தரவு கிடைத்ததும் செயல் அதிகாரி வசம் பணிகளை ஒப்படைக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.
----------
http://news.webindia123.com/news/Articles/India/20090202/1167531.html
HC upheld TN Government order to take over temple admin
Chennai Monday, Feb 2 2009 IST
Madras High Court today upheld the order of the State Government to take over the administration of the Sri Sabanayagar temple, popularly known as Chidambaram Natarajar temple.
While dismissing a writ petition filed by Temple Podhu Deetchidhars Sangam(PDS), Ms Justice R Bhanumathi said that to streamline the mismanagement and rectify the mistakes, the Government had appointed an administrator.
The PDS challenged the order of the Government dated July 31, 1987 to appoint an Executive Officer (EO) through Hindu Religious and Charitable Endownment Board(HR&CE) for the temple u/s (45)(1) of the board.
In its counter, the Government submitted that the EO was appointed following allegation against PDS.
The petitioner contended that they are maintaining the temple for centuries and the appointment of EO amounted to intereference in the religious affairs with malafide intention and goes against Article 26 of the Constitution.
The petitioner further submitted that the temple was not a public one and they enjoyed special status as per Article 26 of the Constitution. Therefore, the order is not sustainable and they enjoyed complete autonomy in administering temple proprities, the petitioner added.
The judge said under the circumstances, the PDS can claim protection only under Artice 25 of the Constitution. But the right to manage the temple is not part of the religious practice, and as such comes under the statutory control of HR & CE. It has been consistenly held by the Supreme Court that the secular activities are subject to statutory control, judge added.
The judge further said, considering the facts, the PDS is not entitled to protection under clause (b) and(d) of Article 26 of the Constitution.
-- (UNI) -- 02MS30.xml
-----------------------------------------------------------------------------
While searching for the Chidambaram temple judgement made at The Madras High Court, I came across an article published in Ananda Vikatan last year. At that time, there were some controversies whether Tevaram can be sung at Thillai temple.
Here is the views of Agnihotram Ramanuja Thathachariyar, said to be very learned in Vedas, published in Vikatan:
http://subudu.blogspot.com/2008/03/blog-post_12.html
I guess there will be appeal by Deekshitar club at the Supreme Court. It will be seen whether the Tamilnadu govt. can appoint an Executive Officer or its proposed action will be given a stay at the supreme court.
2009 seems an important year - Ceylon, Govt. changing to Valluvar day as New Year officially, and now Srimati. Justice Bhanumathi declaring Thillai temple is a Govt. property rather than a small group of Deekshitars' private holdings legally.
Regards,
N. Ganesan
நந்தன் இல்லாமல் நடராஜரா?
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20511252&format=html
தில்லை தீட்சிதர்கள் விவரணப்படம்:
http://nganesan.blogspot.com/2008/03/chidambaram-dikshitars.html
EO takes over Chidambaram temple
http://www.hindu.com/2009/02/03/stories/2009020357940100.htm
தமிழர்களுக்கு, அதுவும் முக்கியமாகச் சைவர்களுக்கு, கோவில் என்றாலே சிதம்பரம் தான். 1000 ஆண்டுகளாய் நாம் அறிந்த முறை நீதிமன்றத்தால் அரசு நிர்வாகம் ஆகிறது. மேலும், சுப்ரீம் கோர்ட்டிலும் இவ்வழக்கு கொண்டு போகப்படும்.
பலவகையில் இன்று பல சமயங்களின் கடவுள் வாழும் இடங்களுக்கு பணங் காசு, தங்கம், ... நன்கொடையாக வருகின்றன. அதிலும், வெளிநாட்டில் இருந்து கடவுள் இருப்பிடங்களுக்கு இந்தியா வரும் நிதிகள் மிகுதியும் அதிகரித்துள்ளன. அவை எல்லாவற்றையும் முறைகேடுகள் இன்றி செலவளிக்கப் படுகின்றனவா? என்று அரசின் மேற்பார்வை உருவாகுமா?
நா. கணேசன்
சிதம்பர ரகசியம் - முடிவுரை!
http://aanmiga-payanam.blogspot.com/2009/02/blog-post.html
சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசு நிர்வகிக்க அனுமதி: ஐகோர்ட்டு பரபரப்பு
தீர்ப்பு
http://www.vikatan.com/vc/2009/jan/vc0188.asp
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு: சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு ஏற்றது!
http://kosukumaran.blogspot.com/2009/02/blog-post.html
நா. கணேசன்
4 comments:
இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புக்கு நாம் நன்றி சொல்ல வேண்டியவர்கள் ம.க.இ.க மற்றும் அவர்களின் தோழமை அமைப்புகளுக்கே
இது தொடர்பான முழு விவரமும் இங்கே
http://vinavu.wordpress.com/2009/02/02/thillai1/
From Dinamani newspaper:
சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை அரசு நிர்வகிக்க அனுமதி: உயர் நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை, பிப்.2: சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை நிர்வகிக்க, செயல் அதிகாரியை
நியமித்த தமிழக அரசின் உத்தரவு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம்
திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
சிதம்பரம் நடராஜர் ஆலயத்துக்கு கடந்த 31.07.87-ம் தேதி செயல் அதிகாரியை
நியமித்து இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து பொது தீட்சிதர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்
வழக்குத் தொடரப்பட்டது.
மனுவின் விவரம்: "இந்த கோயிலை பல நூற்றாண்டுகளாக எங்கள் மூதாதையர்கள்
நிர்வகித்து வருகின்றனர். அரசு உத்தரவு மத தொடர்பான விவகாரங்களில்
தலையிடுவதாகும். இது அரசியல் சட்டத்தை மீறுவது ஆகும். எனவே, இந்த உத்தரவை
ரத்து செய்ய வேண்டும்' என்று அதில் கோரப்பட்டது.
"கோயிலை நிர்வகிக்கும் பொது தீட்சிதர்கள் பல்வேறு முறைகேடுகளில்
ஈடுபட்டதாலேயே கோயிலுக்கு செயல் அதிகாரி நியமனம் செய்யப்பட்டார்' என்று
அரசுத் தரப்பில் வாதாடப்பட்டது.
இந்த வழக்கில் சிவனடியார் ஆறுமுகசாமி தன்னையும் சேர்த்துக்கொள்ளக்
கோரியும், அரசு உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை
நீக்கக் கோரியும் மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி ஆர். பானுமதி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.
விசாரணைக்குப் பிறகு நீதிபதி அளித்த தீர்ப்பு:
கோயிலை நிர்வகிக்கும் உரிமை என்பது மதத்தின் ஒரு பகுதியோ, மத வழக்கமோ
அல்ல. கோயில் நிர்வாகத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசுக்கு உள்ளது.
எனவே, இந்த வழக்கில் மதம் தொடர்பான சட்டத்தின் படி பொதுதீட்சிதர்கள்
பாதுகாப்பு கோர முடியாது.
கோயில் நிர்வாகத்தில் முறைகேடுகள் நடைபெற்றால், அந்த கோயிலுக்கு செயல்
அதிகாரியை நியமிக்க இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை ஆணையருக்கு
அதிகாரம் உள்ளது. கோயிலில் வரவு செலவு கணக்கு எதையும் பொது தீட்சிதர்கள்
வைத்திருக்கவில்லை. கோயிலுக்கு வரவேண்டிய வருவாயும் வசூலிக்கப்படவில்லை.
எனவே, சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு செயல் அதிகாரியை நியமித்து
பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சரியானது. அதேபோல், சிவனடியார் ஆறுமுகசாமி
கோயிலுக்குள் தேவாரம், திருவாசகத்தை தமிழில் பாடலாம்; அதற்கு பக்தர்கள்
அனைவருக்கும் உரிமை உள்ளது.
கோயிலுக்கு உள்ள ஏராளமான சொத்துகளை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை
முறையாக நிர்வகிக்கும் என்று நீதிமன்றம் நம்புகிறது. இந்த விஷயத்தில்
கோயில் செயல் அதிகாரிக்கு பொது தீட்சிதர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க
வேண்டும். இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை ஆணையர் ஒரு வார
காலத்துக்குள் கோயில் செயல் அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று நீதிபதி
உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
நிர்வாக அதிகாரி பொறுப்பேற்பு
சென்னை நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சிதம்பரம் நடராஜர் ஆலய இந்து
அறநிலையத் துறை நிர்வாக அதிகாரியாக கிருஷ்ணகுமார் திங்கள்கிழமை இரவு
பொறுப்பேற்றார்.
அவருக்கு அறநிலையத்துறை துணை ஆணையர் ஜகந்நாதன், இணை ஆணையர் திருமகள்
ஆகியோர் பொறுப்புகளை அளித்து உத்தரவிட்டனர்.
கோட்டாட்சியர் ஜி.ராமலிங்கம், வட்டாட்சியர் கோ.தன்வந்தகிருஷ்ணன் ஆகியோர்
முன்னிலையில் கிருஷ்ணகுமார் பொறுப்பேற்றார்.
பொறுப்பேற்க சென்ற அறநிலையத்துறை அதிகாரிகள் கொடுத்த உத்தரவை
தீட்சிதர்கள் பெற மறுத்தனர். ""87-ம் ஆண்டு போட்ட உத்தரவு இது. இதற்கான
நகலை தர வேண்டும் அல்லது தற்போது உயர் நீதிமன்ற தள்ளுபடி ஆணை உத்தரவு
வேண்டும்' என தீட்சிதர்கள் தரப்பு வழக்கறிஞர் சிவக்குமார் மற்றும்
தீட்சிதர்கள் கேள்வி எழுப்பினர்.
87-ம் ஆண்டு உத்தரவுக்கான தடை தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் இந்த
உத்தரவுக்கு அதிகாரம் உண்டு என அதிகாரிகள் பதில் தெரிவித்தனர். பின்னர்
நீதிமன்ற தடை உத்தரவு தள்ளுபடி ஆணையின்றி அறநிலையத்துறை உத்தரவை பெற்று
கொள்வதாக கூறி தீட்சிதர் தரப்பு வழக்கறிஞர் சிவக்குமார், நிர்வாக அதிகாரி
நியமன உத்தரவை பெற்று கொண்டார்.
தினத்தந்தி:
செயல் அதிகாரியை நியமித்தது செல்லும்
சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசு நிர்வகிக்க அனுமதி
ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
சென்னை, பிப்.3-
சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழக அரசு நிர்வகிக்க சென்னை ஐகோர்ட்டு அனுமதி
வழங்கியது. கோவிலை நிர்வகிக்க செயல் அதிகாரியை நியமனம் செய்தது சரிதான்
என்று நீதிபதி தீர்ப்பு கூறினார்.
தீட்சிதர்கள் நிர்வாகம்
புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலை முழுக்க முழுக்க பொது தீட்சிதர்கள்
நிர்வகித்து வருகிறார்கள். இந்த கோவிலில் பல முறைகேடுகள் நடந்து வருவதால்
கோவில் நிர்வாகத்தை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும்
என்று அரசுக்கு கோரிக்கைகள் வந்தன.
இதைத்தொடர்ந்து சிதம்பரம் நடராஜர் கோவிலை நிர்வகிக்க செயல் அதிகாரியை
நியமித்து 1987-ம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை
எதிர்த்து இந்து சமய அறநிலையத்துறை கமிஷனரிடம் தீட்சிதர்கள் அப்பீல்
செய்தனர். அப்பீலை விசாரித்த கமிஷனர் அரசு பிறப்பித்த உத்தரவு
சரியானதுதான் என்று தீர்ப்பு கூறினார்.
ஐகோர்ட்டு இடைக்கால தடை
இந்த தீர்ப்பை எதிர்த்து 2006-ம் ஆண்டில் பொது தீட்சிதர்கள் சென்னை
ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து அரசு உத்தரவுக்கு ஐகோர்ட்டு
இடைக்கால தடை வழங்கியது. வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்தது.
இதற்கிடையே இந்த வழக்கில் தங்களையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று
அரசுக்கு ஆதரவாக தமிழ் வழிபாட்டு பயிற்சி மைய நிர்வாக இயக்குனர்
சத்தியவேல் முருகனும், பக்தர் யு.ஆறுமுகசாமியும் மனு தாக்கல் செய்தனர்.
சிதம்பரம் கோவில் கருவறை முன்பு தேவாரம், திருவாசகம் பாட அனுமதிக்க
வேண்டும் என்று யு.ஆறுமுகசாமி தனது மனுவில் கூறியிருந்தார்.
விவாதம்
இந்த வழக்கை நீதிபதி ஆர்.பானுமதி விசாரித்தார். தீட்சிதர்கள் சார்பில்
வாதாடுகையில், நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்த கோவிலை நாங்கள் தான்
நிர்வகித்து வருகிறோம் என்றும், இதில் அரசு குறுக்கிட முடியாது என்றும்
தெரிவிக்கப்பட்டது. இந்த கோவில் பொது சொத்து அல்ல என்றும், அரசியல்
சட்டம் 26-வது பிரிவின் கீழ் அரசு தலையிட முடியாது என்றும் தீட்சிதர்கள்
தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், எங்கள் மத நடவடிக்கையில் அரசு தலையிட முடியாது என்றும்
தீட்சிதர்கள் தரப்பில் தெரிவித்தனர்.
இதற்கு அரசு சார்பில் பதில் அளிக்கையில், `தீட்சிதர்களின் நிர்வாகத்தில்
பல ஊழல்கள் நடந்துள்ளன என்றும், எனவே இந்த கோவிலை நிர்வகிக்க அரசுக்கு
உரிமை உண்டு' என்றும் வாதாடப்பட்டது.
அரசு உத்தரவு செல்லும்
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பானுமதி, `சிதம்பரம் கோவில்
நிர்வாகத்தை நிர்வகிக்க செயல் அதிகாரியை நியமித்து தமிழக அரசு பிறப்பித்த
உத்தரவு செல்லும்' என்று நேற்று தீர்ப்பு கூறினார்.
தீர்ப்பில் அவர் மேலும் கூறியதாவது:-
எதிரானது அல்ல
பொது தீட்சிதர்கள் அரசியல் சட்டம் 25-வது பிரிவின் கீழ் மட்டுமே
பாதுகாப்பு கோர முடியும். அரசியல் சட்டம் 26-வது பிரிவின் கீழ் உரிமை கோர
முடியாது. கோவிலுக்கு வரக்கூடிய காணிக்கை, கட்டளைகள் ஆகியவைகள் மத
நடைமுறைகளாக கூற முடியாது. அரசியல் சட்டம் 26-வது பிரிவின் கீழ் பொது
தீட்சிதர்கள் சிறுபான்மையினர் என்று கூறி கோவிலை நிர்வகிக்க உரிமை கோர
முடியாது. இக்கோவிலை நிர்வகிக்க செயல் அதிகாரி நியமனம் செய்வது அரசியல்
சட்டத்திற்கு எதிரானது அல்ல. இந்து சமய அறநிலையத்துறை 45(1) பிரிவின்
கீழ் கமிஷனர் அமல்படுத்த முடியாது என்று கூற முடியாது. ஒரு கோவிலில்
முறைகேடு நடப்பதாக தெரியவந்தால் இந்த சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை
எடுக்க அரசுக்கு அதிகாரம் உண்டு.
பூஜைக்கு பரம்பரை உரிமை கோரலாம். ஆனால் மக்கள் காணிக்கை, கட்டளைகள்
இவையெல்லாம் பூஜை சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. இவற்றை நிர்வகிக்க அரசுக்கு
உரிமை உண்டு.
அவசியமாகிறது
முறைகேடுகள் நடக்கும்போது செயல் அதிகாரியை நியமிப்பது அவசியமாகிறது.
இக்கோவிலை பொறுத்தவரையில், முறைகேடு நடந்துள்ளது என்பது தெளிவாக
தெரிகிறது. இது கற்பனையானது அல்ல.
தீட்சிதர்கள் கணக்குகளை ஒழுங்காக பராமரிக்கவில்லை. கோவிலுக்கு வரவேண்டிய
வருமானத்தை வசூலிக்கவில்லை. கடவுளுக்கு செலுத்திய காணிக்கைகளுக்கு
முறையாக கணக்கு வைக்கவில்லை. அக்கோவிலில் உள்ள தங்க நகைகள் காணாமல் போய்
உள்ளன.
இந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் சரியாக பரிசீலித்த பிறகுதான் இந்து சமய
அறநிலையத்துறை கமிஷனர் திருப்தியடைந்த பிறகு நிர்வாகத்தை சீர்படுத்த
செயல் அதிகாரியை நியமித்தார்.
ஒரு கோவிலை ஒழுங்குபடுத்த, அதன் நிர்வாகத்தை சீர்படுத்த, செயல் அதிகாரியை
நியமிக்க உத்தரவிட்டது சரிதான். ஆகவே, பொது தீட்சிதர்கள் சார்பில்
தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. பக்தர்
ஆறுமுகசாமி, தேவாரம், திருவாசகம் பாட அனுமதிக்கப்படுகிறார்.
ஒரு வாரத்தில்...
இனிமேலாவது இக்கோவில் சொத்துக்கள் முறையாக நிர்வகிக்கப்படும் என்று
இக்கோர்ட்டு நம்புகிறது. பொது தீட்சிதர்கள் இந்த செயல் அதிகாரிக்கு
ஒத்துழைப்பு தர வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் இன்னும் ஒரு
வாரத்திற்குள் செயல் அதிகாரி நிர்வகிப்பதற்கு தேவையான தக்க உத்தரவுகளை
பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
http://thamizhoviya.blogspot.com/2009/02/blog-post_6426.html
கழகத்தின் சார்பில் கல்வெட்டு
இந்த வரலாற்று நிகழ்வை வருங்காலம் அறிந்துகொள்ள சிதம்பரத்தில் முதலமைச்சர் கலைஞர் அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நகரின் முக்கிய பகுதியில் ஒரு கல்வெட்டுத் திறப்பு விழாவும் விரைவில் இம்மாத இறுதிக்குள் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தி, மேலும் ஊர் மக்களாதரவு இந்த அரசுக்கு உண்டு என்று காட்டும் முயற்சிகளைக் கழகம் உருவாக்கும்.
Post a Comment