அழிவின் விளிம்பில் தமிழினம்!
முற்றுகைக்குள் இந்தியா
முருகன்
முத்துக்குமார் நண்பர்கள் இயக்கம்
Final Book1
மதியம் வியாழன், ஏப்ரல் 09, 2009
அழிவின் விளிம்பில் தமிழினம்
Posted by
நா. கணேசன்
at
4/09/2009 01:50:00 PM
Subscribe to:
Post Comments (
Atom)
2 comments:
எல்லா மொழிகளுக்கும் மொழி பெசுபவர்களுக்கும் ஒரு ஆயுள் காலம் உள்ளது, தமிழ் இனம் விதி விலக்கல்ல , ஏன் மனித இனமே இல்லாமல் போகக்கூடிய காலம் வரலாம். எது இருக்கோ அது இல்லாமல் போகும், எது இல்லையோ அது புதிதாக வரும்!
அது ஊக்கமும் தெளிவும் இல்லாதவர்களும் தமிழ்மொழியின் தொடர்ச்சி வரலாறும் உலகத்தின் ஊக்கமுள்ள இனத்தாரின் வரலாறும் அறியாதவர்கள் பேசும் வாடிக்கையான தத்துவப் பேச்சு. தமிழ்மொழி இனத்தின்மீது பற்றும் பாசமும் இல்லாதவர் கூறும் வெறுமைக்கூற்று.
யூதர்கள் 1500 ஆண்டுகள் முன்பு தொலைத்த பழைய எபிரேயமொழியை மீட்டு இன்று அதை வழக்குமொழியாக ஆக்கும்பொழுது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து வழங்கும் மொழிக்கு என்ன வந்தது? அதுவும் திராவிட மொழிகள் இயல்பாகவே மிகவும் நிலைப்பாடும் தொடர்ச்சியும் இருக்கும் அளவுக்கு மொழியில் இயல்பு உள்ளவை (சுவெலெபில்). அதனால்தான் வடமொழி ஆங்கிலம் போன்றவற்றின் குடும்பத்திற்கு மூலமொழி 6000 ஆண்டுகளில் பலநூறு மொழிகளாகக் கிளைந்தாலும் திராவிடமொழிகளின் மூலமொழி அதே காலகட்டத்தில் 26 மொழிகளாகத்தான் கிளைந்துள்ளது.
தமிழர்களே தம்மொழியையும் இனத்தையும் தொடர அறிவும் ஊக்கமும் முயற்சியும் இல்லாதிருந்தால் ஒழிய அது நிகழாது.
"சிதைவிடத்தும் ஒல்கார் உரவோர்; புதையம்பின் பட்டுப் பாடூன்றும் களிறு" (திருக்குறள்: ஊக்கமுடைமை: 597)
"நெஞ்சு உரமுடையவர்கள் அழிவிலும் தளரார்கள்; ஏனென்றால் யானை தன் உடம்புமுழுதும் பாய்ந்துஅம்பு புதைத்தாலும் பாடுபட்டுப் போர்க்களத்தில் தன் நிலையை ஊன்றி நாட்டும்"
எனவே
"என்றுமுள தென்றமிழ் இயம்பி இசைகொண்டான்" (கம்ப இராமாயணம்) என்ற சொல்லுக்கு நாம் நடப்போம் நிகழ்த்துவ்வொம் உலகவிந்தையை.
பெரியண்ணன். சந்திரசேகரன்
அறலான்றா, அமெரிக்கா.
Post a Comment