ஆஸ்டின் நூலகமும், புறநானூற்றுத் தாயும்

This poem was penned a quarter century ago. Tamil was just entering the computers and the internet then! And, no one thought about facebook, whatsapp, memes, etc., (social media). Fleeting fireflies.

from Facebook page of Kavignar Erode Tamilanban ilakkiya vaTTam,

 
 

Austin Library and the Mother of puṟanāṉūṟu
(Erode Tamilanban [1996]; translated by Nirmal Selvamony [2022])

Even now within me
burns the Texas sun;
even now within me
remain those moments
when skyward NASA rockets roar and soar.

But still
does the library
of Austin University
turn me page after page.

When the book lover
Pollachi Ganesan
into the computer net went,
held me and brought me,
within me was caught…
what great joy!

I, the person,
sent the arrow*
and out came the mother
of puṟanāṉūṟu
asking, “Why did you call me?”
“Do you like computer life?” I queried.

For how many years have I been lying down
on Palmyra leaves!
For how many years have I been standing
with aching feet
in paper streets!

In secure computer home
safe am I.
A single tap will do;
ready am I to come out
opening the door in a jiffy
said she
on whose lips
had science sketched lines of soft smile.

For the three-line Haiku tank
in which blooms three hundred flowers
when my fingers touched it,
it took out and gave me
three hundred volumes.

Boarding this dwarf-vehicle
when will my Tamil people
go around the world?

I asked the bard of Ettaiyapuram.
“When they contemplate
the cosmic forms,”
he answered.
Briskly I got up.   

* moved the cursor; originally, the cursor was an arrow pointing upward. It is variously called “mouse arrow,” “mouse cursor,” and “mouse pointer.” For an interesting Tamil verse on the computer mouse, see Naa. Ganesan’s  Tamil poem, “காலத்திற்கேற்ற ஊர்தி” (1998):

         ஒருநாளென் பெற்றோர் உவக்க வலம்வந்து
        அருமாங் கனியும் அடைந்தேன் - முருகன்
        அணிமயில் வேண்டாம் அகிலம் தொடலக்
         கணியெலி இன்றுண்டு காண்!

நீர்/நீல- போல, தொடரு-/தொடலு- ‘to communicate'.

---------------------------------------------------------
 
ஆஸ்டின் நூலகமும் புறநானூற்றுத் தாயும் !
   - ஈரோடு தமிழன்பன்
(உன் வீட்டுக்கு நான் வந்திருந்தேன், வால்ட் விட்மன் - நூலிலிருந்து).

இன்னும் இருக்கிறது
எனக்குள் டெக்சாஸ் வெயில் !
இன்னும் இருக்கிறது
எனக்குள் நாசா ஏவுகணைகள் சீறி
விண்ணில் கிளம்பும் தருணங்கள்.

எனினும்
என்னையே பக்கம் பக்கமாய்ப்
புரட்டிக் கொண்டிருக்கிறது
ஆஸ்டின் பல்கலைக்கழக நூலகம் !

புத்தகக் காதலன்
பொள்ளாச்சி கணேசன்
கணினி வலைக்குள் போய்
என்னைப் பிடித்து வந்தபோது
எனக்குள் பிடிபட்டது
எவ்வளவு மகிழ்ச்சி !

ஆள் நான்
அம்பை அனுப்பினேன்
புறநானூற்றுத்தாய்
புறப்பட்டு வந்தாள்.

“எதற்கு என்னை அழைத்தாய்”
என்றாள் - “கணினி வாழ்வு
பிடித்திருக்கிறதா ?” - கேட்டேன்.

"எத்தனை ஆண்டுகள்
பனை ஓலைகளில் படுத்திருந்தேன் !
எத்தனை ஆண்டுகள்
கால்கள் கடுக்க நின்றிருந்தேன்
காகித வீதிகளில் !

பாதுகாப்பான கணினி வீட்டில்
பத்திரமாக இருக்கிறேன்,
தட்டினால் போதும் - சட்டென்று கதவு
திறந்து வரக் காத்திருக்கிறேன்”
என்றவள் இதழ்களில் -
விஞ்ஞானம் போட்டிருந்தது
மெல்லிய புன்னகைக்கோடு.

முன்னூறு பூமலரும்
மூன்றடிப் பொய்கை ஹைகூவுக்காக
என்விரல் பட்டதும் - எடுத்துக்
கொடுத்தது முன்னூறு நூல்களை !

இந்த வாமன வாகனமேறி
வையகத்தை எப்போது
வலம் வருவார்கள் என் தமிழ்மக்கள் ?

எட்டையபுரத்தானைக் கூப்பிட்டுக் கேட்டேன்.....
“விசுவரூபங்களைத்
தியானிக்கும்போது” என்று சொன்னான்.

   விருட்டென்று எழுந்தேன்.  (1996).

from Facebook page of Kavignar Erode Tamilanban ilakkiya vaTTam,
நன்றி, நண்பர் பெ. சண்முகம். அமெரிக்கக் கூட்டுத் தமிழ்ச் சங்கப் பேரவை விழாவில் எல்லோரும் திருவள்ளுவர் திருநாளுக்கு இணையாக, தொல்காப்பியர் திருநாள் அறிவிக்க அரசை வேண்டுவோம்.  பெட்னா பேரவை, தமிழ்நாடு அறக்கட்டளை இரு பெரும் இயக்கங்களும் தொடர்ச்சியாக முயன்றால், மூத்த தமிழறிஞர்கள் வேண்டுகிற திருநாளில், மாதத்தில் தொல்காப்பியர் விழா ஆண்டுதோறும் அரசு எடுக்கும். அரசாணை அமெரிக்கத் தமிழர்கள் பெற்றால், கிழக்குத் திசையின் அரிஸ்டாட்டில் [1], செம்மொழி தமிழை ஆக்கிய தொல்காப்பியர் யார் என வெளிமாநிலத்தவரும், அயல்நாட்டாரும், வருந் தலைமுறைகளின் மக்களும் கொண்டாடவும்,  தேடிப் படிக்கவும் தூண்டும். நியூ யார்க்கில் அமெரிக்க விடுதலை நன்னாளில் சந்திப்போம்.  ~NG,  6/12/2022
 
[1] காப்பியர் பொருளதிகாரம் படைத்தார்; மேற்கே, அரிஸ்டாட்டில் Poetics இலக்கணம் தந்தார்.

11 comments:

Dr. S. Kanmani Ganesan, Sivakasi said...

//விசுவரூபங்களைத்
தியானிக்கும்போது” என்று சொன்னான்.//

புரிகிற மாதிரி இருக்கிறது; ஆனால் தெளிவாகத் தெரியவில்லை.
சக

ருத்ரா (இ. பரமசிவன்) said...

"விசுவரூபங்களை
விஷுவலைஸ் பண்ணும்போது"
என்று சொல்லிப்பாருங்கள்.
தியானிக்கும்போது என்பது
மூளைக்கு முப்பதாயிரம்
நாக்குகள் முளைத்து பேசினாலும்
ஒரு செவி கூட
முளைக்காமல் இருந்தால்
எப்படி இருக்கும்?
அதுவே அது!
________________________ருத்ரா

முனைவர் நா. கணேசன் said...

On Tue, Jun 14, 2022 at 10:25 AM ருத்ரா (இ.பரமசிவன்) wrote:

"விசுவரூபங்களை
விஷுவலைஸ் பண்ணும்போது"
என்று சொல்லிப்பாருங்கள்.
தியானிக்கும்போது என்பது
மூளைக்கு முப்பதாயிரம்
நாக்குகள் முளைத்து பேசினாலும்
ஒரு செவி கூட
முளைக்காமல் இருந்தால்
எப்படி இருக்கும்?
அதுவே அது!
________________________ருத்ரா


நன்றி, கவி உருத்திரனாரே.

எல்லாமே புரிந்துவிட்டால் புதுக்கவிதை (ஹைக்கூ, ஜென், ...), புது பெயிண்டிங் (பிக்காஸோ, மொனே, ...) என்று
எப்படிச் சொல்லுவது? படிமம் இல்லாவிடில் கவிதை செய்யுள் ஆகிவிடும் அன்றோ?

தமிழின் இறைச்சி, உள்ளுறை அங்கிருந்து ஆனந்தவர்த்தனர் செய்த த்வன்யாலோகம் (தமிழில் தொனிவிளக்கு என மொழிபெயர்ப்பு. பெரும்புலவர் கம்பராமன் இந்நூலை எனக்களித்தார்.) ... எல்லாம் உடனே புரியுமா?

மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா! மேரு என்ற சொல் தமிழ் (< மேல்) என உடனே எப்படித் தெரியும்?? ...

NG

chandru said...

திருக்குறளுக்கு முதன்முதலில் உரை இயற்றிய பரிமேலழகரின் உரை நூலை பரவலாக்க வேண்டும் ஐயா. சந்திரசேகர் பொள்ளாச்சி 9655291575

Anonymous said...

அருமை 👌

e-Vishali said...

அருமையான சொல்லாடல்கள்.... மிக்க மகிழ்ச்சி

Goduwin Ravi said...

Delightful and well-deserved complement!

தில்லைவேந்தன் said...

Excellent translation,capturing the crux of the original and faithfully reflecting its sentiments

- Natarajan Ramaseshan
Chromepet, Madras

சூப்பர் டிவி said...

_Super

அ.ராமசாமி said...

மொழிபெயர்ப்பில் சிறப்பாக உள்ளது

THANGAVEL.K said...

அருமையான பதிவு