சிங்கப்பூர் 44வது தேசியதின விழா காட்சி
சிங்கைக்கృ வாழ்த்தினைச் செப்பృ.
அ. கி. வரதராஜன், சிங்கப்பூர்
நாட்டின் நலங்களை நன்னாள் இதృதன்னில்,
பாட்டின் வழியே பகர்ந்திடృவேன் - கூட்டமாய்
சிங்கையர் ஒற்றృமையாய்ச் சேர்ந்திங்கృ வாழ்வதனால்
பொங்கృமெம் அன்னை பృகழ். (1)
பృகழென்றృம் போற்றிடృவார் , பொய்ம்மை விலக்கி
அகழ்ந்திடృவார் அன்றாடம் ஆற்றல் - இகழின்றி
இப்பாரில் என்றென்றృம் ஏற்றமృறృம் நாடிதற்கృ
ஒப்பொன்றృ கண்டால் உரை. (2)
உரைத்திட உன்னதம் உண்டிங்கృ கோடி
கரையில்லா சృத்தமே காண்பார் - வரையறృத்த
கட்டொழృங்கைப் போற்றృவார் கண்ணெனச் சிங்கையில்
சட்டமெல் லோர்க்கృம் சமம். (3)
சமவృரிமை காணృம் சகல இனமృம்
அமைதி அடித்தளமாய் ஆகி - சృமைவரின்
தோள்கள் இணையృம் , தృணையென்றృ வாராத
ஆளில்லை இங்கே அறி (4)
அறிவృடன் ஆற்றல் அதృமృத(ல்) என்பார்
சிறிதృம் இதில்மாற்றம் செய்யார் - அரிதன்றோ
வல்லரசృ எல்லாம் வாய்பிளந்தృ போற்றృம்
நல்லரசృ ஈதொக்கృம் நாடృ. (5)
நாடృம் அரசృ நலமொன்றே மக்களృக்கృப்
பீடృம் கொள்ளப் பிழையின்றித் - தேடృவதృ
உன்னதம் ஒன்றృதான் ஓய்வின்றிச் சிங்கையர்க்கృச்
சொன்னதை ஒக்கృம் செயல் (6)
செயல்திறம் தன்னில் செம்மையே காண்பார்
அயல்வழி இல்லை அறிவார் - பயன்மிகృ
நல்லிணக்கம் விட்டால் நலிவென்றృ அறிந்ததனால்
அல்லல் அணృகாதృ அரృகృ. (7)
அரృகృள்ள மக்களோ(டృ) அன்பృறவృ கொண்டృ
பெரృகிடృம் சிங்கையின் பீடோ(டృ) - அரృமைமிகృ
எங்களதృ சிங்கைக்கృ இணையொன்றృ கண்டதில்லை
தங்க(ம்)எம் நாட்டின் தரம். (8)
தரங்கண்டృ சிங்கைக்கృத் தப்பாமல் அவனி
சிரந்தனைத் தாழ்த்திடృம் சீராய் - உரனృடனே
நாளృம் திறமையில் நற்பெயர் ஈட்டృவதால்
தோளிங்கృ வீங்கృம் தினம். (9)
தினமృம் தொழృவோம் திரృமிகృந்த நாட்டை
கணமృம் மறவோம் கடமை - மனமதில்
நாட்டின் உயர்வொன்றே நாமெல்லாம் எண்ணிடృவோம்
பாட்டில் உறృதி பகர் (10)
தமிழ் எழுத்துக்களின் நெடுங்கணக்கு:
ஃ | அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ |
க் | க | கா | கி | கீ | கృ | கூ | கெ | கே | கை | கொ | கோ | கௌ |
ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙృ | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ |
ச் | ச | சா | சி | சீ | சృ | சூ | செ | சே | சை | சொ | சோ | சௌ |
ஞ் | ஞ | ஞா | ஞி | ஞீ | ஞృ | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ |
ட் | ட | டா | டி | டீ | டృ | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ |
ண் | ண | ணா | ணி | ணீ | ணృ | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ |
த் | த | தா | தி | தீ | தృ | தூ | தெ | தே | தை | தொ | தோ | தௌ |
ந் | ந | நா | நி | நீ | நృ | நூ | நெ | நே | நை | நொ | நோ | நௌ |
ப் | ப | பா | பி | பீ | பృ | பூ | பெ | பே | பை | பொ | போ | பௌ |
ம் | ம | மா | மி | மீ | மృ | மூ | மெ | மே | மை | மொ | மோ | மௌ |
ய் | ய | யா | யி | யீ | யృ | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ |
ர் | ர | ரா | ரி | ரீ | ரృ | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ |
ல் | ல | லா | லி | லீ | லృ | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ |
வ் | வ | வா | வி | வீ | வృ | வூ | வெ | வே | வை | வொ | வோ | வௌ |
ழ் | ழ | ழா | ழி | ழீ | ழృ | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ |
ள் | ள | ளா | ளி | ளீ | ளృ | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ |
ற் | ற | றா | றி | றீ | றృ | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ |
ன் | ன | னா | னி | னீ | னృ | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
ஜ் | ஜ | ஜா | ஜி | ஜீ | ஜృ | ஜூ | ஜெ | ஜே | ஜை | ஜொ | ஜோ | ஜௌ |
ஷ் | ஷ | ஷா | ஷி | ஷீ | ஷృ | ஷூ | ஷெ | ஷே | ஷை | ஷொ | ஷோ | ஷௌ |
ஸ் | ஸ | ஸா | ஸி | ஸீ | ஸృ | ஸூ | ஸெ | ஸே | ஸை | ஸொ | ஸோ | ஸௌ |
ஹ் | ஹ | ஹா | ஹி | ஹி | ஹృ | ஹூ | ஹெ | ஹே | ஹை | ஹொ | ஹோ | ஹௌ |
[ஃபையர்பாக்ஸ் அல்லது குரோம் (கூகுள்) உலாவியில் ஒழுங்காய்த் தெரியும். இண்டெர்னெட் எக்ஸ்ப்லோர் உபயோகித்தால் புள்ளிவட்டம் சேர்ந்து தெரியலாம்.]
சீர்மை வடிவத் தமிழ்:
http://nganesan.blogspot.com/2009/08/cheermai.html
--------------------
சிங்கைக்கு வாழ்த்தினைச் செப்பு.
நாட்டின் நலங்களை நன்னாள் இதுதன்னில்,
பாட்டின் வழியே பகர்ந்திடுவேன் - கூட்டமாய்
சிங்கையர் ஒற்றுமையாய்ச் சேர்ந்திங்கு வாழ்வதனால்
பொங்கும்எம் அன்னை புகழ். (1)
புகழென்றும் போற்றிடுவார் , பொய்ம்மை விலக்கி
அகழ்ந்திடுவார் அன்றாடம் ஆற்றல் - இகழின்றி
இப்பாரில் என்றென்றும் ஏற்றமுறும் நாடிதற்கு
ஒப்பொன்று கண்டால் உரை. (2)
உரைத்திட உன்னதம் உண்டிங்கு கோடி
கரையில்லா சுத்தமே காண்பார் - வரையறுத்த
கட்டொழுங்கைப் போற்றுவார் கண்ணெனச் சிங்கையில்
சட்டமெல் லோர்க்கும் சமம். (3)
சமவுரிமை காணும் சகல இனமும்
அமைதி அடித்தளமாய் ஆகி - சுமைவரின்
தோள்கள் இணையும் , துணையென்று வாராத
ஆளில்லை இங்கே அறி (4)
அறிவுடன் ஆற்றல் அதுமுத(ல்) என்பார்
சிறிதும் இதில்மாற்றம் செய்யார் - அரிதன்றோ
வல்லரசு எல்லாம் வாய்பிளந்து போற்றும்
நல்லரசு ஈதொக்கும் நாடு. (5)
நாடும் அரசு நலமொன்றே மக்களுக்குப்
பீடும் கொள்ளப் பிழையின்றித் - தேடுவது
உன்னதம் ஒன்றுதான் ஓய்வின்றிச் சிங்கையர்க்குச்
சொன்னதை ஒக்கும் செயல் (6)
செயல்திறம் தன்னில் செம்மையே காண்பார்
அயல்வழி இல்லை அறிவார் - பயன்மிகு
நல்லிணக்கம் விட்டால் நலிவென்று அறிந்ததனால்
அல்லல் அணுகாது அருகு. (7)
அருகுள்ள மக்களோ(டு) அன்புறவு கொண்டு
பெருகிடும் சிங்கையின் பீடோ(டு) - அருமைமிகு
எங்களது சிங்கைக்கு இணையொன்று கண்டதில்லை
தங்க(ம்)எம் நாட்டின் தரம். (8)
தரங்கண்டு சிங்கைக்குத் தப்பாமல் அவனி
சிரந்தனைத் தாழ்த்திடும் சீராய் - உரனுடனே
நாளும் திறமையில் நற்பெயர் ஈட்டுவதால்
தோளிங்கு வீங்கும் தினம். (9)
தினமும் தொழுவோம் திருமிகுந்த நாட்டை
கணமும் மறவோம் கடமை - மனமதில்
நாட்டின் உயர்வொன்றே நாமெல்லாம் எண்ணிடுவோம்
பாட்டில் உறுதி பகர் (10)
அ. கி. வரதராஜன், சிங்கப்பூர்
---------------------
8 comments:
:-))
தமிழ் எழுத்துப் பட்டியல் சிறப்பாக இருக்கிறது.
கி, கீ வரிசைகள் கூட மாற்றப்பட வேண்டும் ஏனெனில் அவற்றிற்கும் தனித்தனி (கி,ஙி,கீ,ஙீ)
எழுத்துகள் தேவையாக இருக்கிறது. க+ ஒரு குறியீடு கி வரிசைக்கும், க + ஒரு குறியீடு கீ வரிசைக்கும் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
நன்றி!
கண்ணன்,
அரசாங்கக் குழு இ, ஈ குறியீட்டை விலக்குவதையும் பரிசீலிக்கட்டும். வா.செ.கு. ஐயா அவ்வாறு பெரியார் சொன்னதுபோல் சொல்கிறார்.
http://nganesan.blogspot.com/2009/08/cheermai.html
ஆனால், என் நிலைப்பாடு அது தேவையில்லை என்பதாகும். தமிழ் எழுத்து ஏற்கெனவே பிற மொழ எழுத்துக்களைக் காட்டிலும் வரி நீளம் அதிகம் உடைய எழுத்து. இ/ஈ உயிர்மெய்க் கொக்கிகள் பார்த்ததும் புரிகின்றன, ஒரு ஒழுங்கில் உள்ளன. அவற்றை வலப்புறம் நகர்த்துவதால் வரிநீளம் அதிகரிக்குமே ஒழிய வேறுபயன் இருப்பதாகத் தெரியவில்லை.
அன்புடன்,
நா. கணேசன்
//Blogger நா. கணேசன் said...
கண்ணன்,
அரசாங்கக் குழு இ, ஈ குறியீட்டை விலக்குவதையும் பரிசீலிக்கட்டும். வா.செ.கு. ஐயா அவ்வாறு பெரியார் சொன்னதுபோல் சொல்கிறார்.
http://nganesan.blogspot.com/2009/08/cheermai.html
ஆனால், என் நிலைப்பாடு அது தேவையில்லை என்பதாகும். தமிழ் எழுத்து ஏற்கெனவே பிற மொழ எழுத்துக்களைக் காட்டிலும் வரி நீளம் அதிகம் உடைய எழுத்து. இ/ஈ உயிர்மெய்க் கொக்கிகள் பார்த்ததும் புரிகின்றன, ஒரு ஒழுங்கில் உள்ளன. அவற்றை வலப்புறம் நகர்த்துவதால் வரிநீளம் அதிகரிக்குமே ஒழிய வேறுபயன் இருப்பதாகத் தெரியவில்லை.
அன்புடன்,
நா. கணேசன்//
எழுத்துக்களைச் சேர்ப்பதால் வரி நீளம் மிகும் என்பதில் உடன் படுகிறேன்
கி யை க' என்றும் கீ யை க" என்றும் எழுதுவதால் நீளம் மிகுவது போல் தெரியவில்லை, கா வைக்க் கூட க| என்று எழுதலாம்,
கா > க|
கி > க'
கீ > க"
மற்றது உங்கள் பரிந்துரையும் ஏற்கனவே இருக்கும் எழுத்துக்களைக் கூட மாற்றலாம்
கொ > இதில் மூன்று எழுத்துக்கள் வருகிறது, கↄ என்றும்
கோ > இதிலும் மூன்று எழுத்துகள், இதை க∂ என்றும் எழுதுவதால் நீங்கள் சொல்லும் வரி நீளம் மேலும் குறையும்.
பரிந்துரைதான் தமிழார்வளர்களுடம் கலந்து அளவளாவிப் பாருங்கள்
அன்பிற்குறிய கணேசன்
தங்களுடைய இப்பதிவும் முன்னர் வந்த "சீர்மை வடிவில் - பெரியார் இன்றிருந்தால் ...! (மாதவராஜ் பதிவு)" மற்றும் நேற்றைய "சீர்மை வடிவில் - எழృத்தృக்களைக் கோர்த்தவன் எங்கே போனான்? (மாதவராஜ் பதிவృ)" ஆகிய 3 பதிவுகளும் MS விண்டோவில் கூகிள் குரோமில் திறக்க முயலுகையில் திறக்கவியலா பக்கம் என்பதற்கான ஒரு வழு அறிக்கை வருகின்றன. நேற்றயை பதிவுடன் குரோம் உலாவி crash உம் ஆகின்றது.
நேற்றைய பதிவை (தலைப்பில் சீர்மையுடனான உகர குறிகள் உள்ளது) IE மற்றும் பயர்பாக்சுகளிலும் திறக்கையிலும் அவையும் crash ஆகின்றன.
இப்பதிவையும் முதல் பதிவையும் IE மற்றும் FF களில் வாசிக்க இயலுகிறது. IE இல் புள்ள வட்டத்துடனும் FF இல் புள்ளிவட்டம் அல்லாமலும்.
தங்கள் நெடுங்கணக்கு அட்டவணையில் இருந்து சீர்மை பயன்படுத்தப்பட்ட உகார உயிர்மெய்கள் சிலவற்றை Ishida Unicode Converter இல் இட்டுப் பார்க்கையில் மெய்யின் அகரம் அடுத்து ZWJ (U+200D) வைத்து அதன்பின் சீர்மைக்கான குறி (U+0C43) என எல்லா இடங்களிலும் கோர்க்கப் பட்டுள்ளன என்பது புலனாகியது.
http://tinypaste.com/f839523 பக்கத்தில் நான் ZWJ இல்லாமல் ஆக்கிய கோர்வு ஒன்றைப் பார்க்கலாம். அப்பக்கத்தைத் திறக்கையில் உலாவிகள் ஒன்றும் வீழ்வதில்லை. ஆனால் பயர்பாக்சில் மட்டும்தான் புள்ளிவட்டம் இல்லாமல் தெரிகிறது.
ZWJ நடுவில் உள்ளடக்கிய கோர்வையும் இன்னொரு tinypaste பக்கத்தில் சேர்த்துள்ளேன். ஆனால் அதை எந்த உலாவியுலும் திறக்க முயலலுகையில் crash ஆகி கணினியை மீள ஆரம்பிக்கவும் வேண்டுமாகின்றதால் அப்பக்கத்தின் முகவரியை தெரிவிப்பதை இங்கு தவிர்க்கிறேன்.
தாங்கள் தங்கள் சீர்மை முன்மொழிதலை முன்னெடுத்துச் செல்லவதற்கு இத்தகைய வழு தடங்கலாகலாம். நான் கண்டறிந்த இப் பிரச்சினையை வேறு யாரும் தெரிவித்துள்ளனரா?
மேலும் முன்மொழிதலுக்காகப் பயன்படுத்தப் பட்டுள்ள தெலுங்கு Vocalic R க்கான உயிரொலிக்குறி (U+0C43) மற்றும் இச்சீர்மை பற்றிய கருத்துக்களை பின்னர் எழுதவுள்ளேன்.
அன்புடன்
கா. சேது.
//நேற்றயை பதிவுடன் குரோம் உலாவி crash உம் ஆகின்றது.
நேற்றைய பதிவை (தலைப்பில் சீர்மையுடனான உகர குறிகள் உள்ளது) IE மற்றும் பயர்பாக்சுகளிலும் திறக்கையிலும் அவையும் crash ஆகின்றன. //
சேது,
உங்கள் கணினியிலோ, உலாவிகளிலோ பிரச்சினை இருக்கலாம். 2,3 பேர் டெஸ்ட் பண்ணினோம். உலாவிகள் ஒழுங்காய்த் தான் எங்களுக்குப் தொழிற்படுகின்றன.
சீர்மை பற்றி உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன். நிறைய மின்தமிழ் கூகுள் குழுமத்தில் பேசிக்கொண்டுள்ளேன். படித்தால் உங்கள் சந்தேகங்களுக்குச் சில விடைகளும், என் கண்ணோட்டமும் கிட்டும் என்று நம்புகிறேன்.
தெலுங்கு உகரக் குறி ஒரு சின்னம் தான். அதுபோலோ, அல்லது பொருத்தமான வேறொன்றோ வைத்து டைனமிக் ஃபாண்ட் செய்வோம்.
உங்கள் இ-மெயில் முகவரி என்ன?
தரம்முடியுமா?
நா. கணேசன்
கணேசன்
// உங்கள் கணினியிலோ, உலாவிகளிலோ பிரச்சினை இருக்கலாம். 2,3 பேர் டெஸ்ட் பண்ணினோம். உலாவிகள் ஒழுங்காய்த் தான் எங்களுக்குப் தொழிற்படுகின்றன. //
அப் பிரச்சினைகளை நேற்று நான் கண்டிருந்தது எனது அலுவலகத்தில் MS Windows XP (SP3) உடனான இரு கணினிகளில். பின்னர் வீட்டில் உள்ள கணினியில் Windows Vista வில் அப்பிரச்சினைகள் இல்லை என்பதைக் கண்டேன். Vista வில் தாங்கள் குறிப்பட்டவாறு ZWJ உள்ளடக்கியிருக்கையில் கூகிள் குரோமிலும் பயர்பாக்சிலும் புள்ளிவட்டம் காட்டப்படாமலும் IE இல் புள்ளிவட்டத்துடனும் தோன்றுகின்றது.
நான் வீட்டுக் கணினியில் வழமையாகப் பாவிக்கும் உபுண்டு லினக்சில் பயர்பாக்சு மற்றும் கூகிள் குரோமியம்-உலாவி இரண்டிலும் அப் பக்கங்களைத் திறப்பதில் பிரச்சினைகள் இல்லை. ஆனால் புள்ளிவட்டம் மறைவதில்லை. (ஒருங்குறியில் ஒரு மொழிக்கான வீச்சிலுள்ள இணைக்கப்பட வேண்டிய குறியை இன்னொரு மொழியின் மெய் அகரம் அடுத்து கோர்பதற்கு அவ்வுலாவிகள் பயன்படுத்தும் முறையே pango, webkit ஆகிய உருவமாக்கும் பொறிகளில் ஏற்பாடுகள் இல்லாமல் இருக்கலாம் என்பது என் ஊகம்).
//சீர்மை பற்றி உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன். நிறைய மின்தமிழ் கூகுள் குழுமத்தில் பேசிக்கொண்டுள்ளேன். படித்தால் உங்கள் சந்தேகங்களுக்குச் சில விடைகளும், என் கண்ணோட்டமும் கிட்டும் என்று நம்புகிறேன். //
மின்தமிழ் குழுமத்தில் தாங்கள் இது தொடர்பாக எழுதிய மடல்களைப் பார்த்துள்ளேன். இனிமேல்தான் எல்லாவற்றையும் முழுமையாக வாசிக்க வேண்டும். அவசியமான சீர்மைகள் எவைகள், வரலாற்றில் உள்ள முரண்பாடுகள் என என் மனதில் உள்ள கருத்துக்கள் மற்றும் வினாக்கள் பற்றி அக்குழுமத்துக்கு எழுத முயல்வேன்.
//தெலுங்கு உகரக் குறி ஒரு சின்னம் தான். அதுபோலோ, அல்லது பொருத்தமான வேறொன்றோ வைத்து டைனமிக் ஃபாண்ட் செய்வோம். //
தங்கள் "சீர்மை வடிவில் - பெரியார் இன்றிருந்தால் ...! (மாதவராஜ் பதிவு)" பதிவில் தாங்கள் எழுதியது :
//எல்லா உயிர்மெய் எழுத்தையும் துணைக்கால் (கா ..), கொக்கி (கி ...), சுழிக் கொக்கி (கீ ...), துதிக்கை (கృ ...), கொண்டை (கூ ...), ஒருசுழிக் கொம்பு (கெ ...), இரட்டைச்சுழிக் கொம்பு (கே ...) மாத்திரம் கொண்டு எளிதாக எழுதிவிட முடிகிறது. இதனால்:
(அ) வரிநீளம் அதிகம் ஆவதில்லை
(ஆ) அண்டை மொழிகளான கன்னடம், மலையாளம், தெலுங்கு போலவே உகரக் குறி தெரிவு செய்யப்பட்டுள்ளது. //
அம் மேற்கோளில் (ஆ) விற்கு பொருள் பின்வரும் இரண்டில் ஒன்றாக இருக்கலாம்
1. அம் மூன்று மொழிகளுக்கான வரிவடிவங்களில் மெய் உகரங்களுக்கு தமிழ் (மற்றும் சிங்களம்) வரிவடிவங்களில் போல வெவ்வேறு கூட்டெழுத்துக்கள (Ligatures) என்று அல்லாது மெய் அகரம் + ஒரே குறி என உள்ளன. அவ்வாறே தமிழிற்கும் இங்கு காட்டப்பட்ட துதிக்கையை தமிழிற்கு உகரக் குறியாகத் தெரிவு செய்யதுள்ளோம்.
2. அம் மூன்று மொழிகளுக்கான வரிவடிவங்களிலும் மெய் உகரங்களுக்கு ஒரே குறியான துதிக்கை தெரிவு செய்யதுள்ளோம்.
தாங்கள் ஊகாரத்திற்கு பாவித்துள்ள கிரந்த (கொண்டை) குறிக்கு அது போன்ற மேலதிகமான் விளக்கம் எழுதாமையால், மேற்காட்டிய இரண்டில், இரண்டாவது பொருளில்தான் உகரக் குறிக்கான தெரிவைப்பற்றிய விளக்கம் சொல்லுகிறீர்கள் என அஞ்சுகிறேன்.
ஏனெனில் தங்கள் பதிவுகளில் பயன்படுத்தியுள்ள துதிக்கையானது Telungu Vowel Sign Vocalic R எனப்படுவது (U+0C43). (அதுதானே "Krishna", "Trisha" போன்ற பெயர்களில் வருவது ?)
தெலுங்கு, கன்னட, மலையாள வரிவடிவங்களுக்கு ஒருங்குறியில் உகர / ஊகார, Vocalic R / RR களுக்கான உயிரொலிக் குறிகளை http://sites.google.com/site/sethussite/Home/tel-kan-mal பக்கத்தில் ஓர் அட்டவணையில் தொகுத்துள்ளேன். (முறையே Lohit Telengu, Lohit Kannada, Raghu Malayalam எழுத்துருக்களுடன்). தெலுங்கு, கன்னட வரிவடிவங்களில் உகரக் குறிகள் ஒருமித்தனவானாலும் மலையாளத்தில் வேறுபடுகிறது.
உகர / ஊகார சீர்மை தேவைதான என்ற எனது ஐயம் பற்றி பின்னர் எழுதுவேன். ஆயினும் தேவையென தமிழறிஞர்கள் முடிவெடுப்பின், திரு. சின்னத்துரை ஸ்ரீவாஸ் அவர்கள் முன் வைத்துள்ள குறிகள் ஏற்கப்படுவதை விரும்புவேன்.
http://www.infitt.org/ti2003/papers/56_ssrivas.pdf
http://www.infitt.org/ti2002/papers/70SRIVAS.PDF
அவை தமிழ் பாணிக்குப் பொருத்தமாகத் தோன்றுகின்றன.
> உங்கள் இ-மெயில் முகவரி என்ன?
> தரம்முடியுமா?
>
ஆம் . skhome at gmail dot com
~சேது
Post a Comment