தமிழ்நண்பர்களுக்கு ஓர் அழைப்பு! வரும் ஞாயிறு (20-ஆம் தேதி) மதியம் ஈரோட்டுக்கு நல்வரவு!
ஈரோடு பதிவர்கள் சங்கமம், மாலை 4 மணி, டிசம்பர் 20, 2009
ஈரோடு - ஒரு பெயர்க் காரணம்: ஈரோடு, பேரோடு, சித்தோடு, வெள்ளோடு, பச்சோடு (பாப்பினி) என்று -டுகர எழுத்தில் முடியும் பல ஊர்ப் பெயர்கள் அருகருகே உள்ளதைக் கவனித்திருப்பீர்கள். அதற்கு ஒரு காரணம் உண்டு. கர்நாடகத்திலும், அண்மையில் உள்ள இப்பகுதியிலும் காபாலிக, காளாமுக சமயங்கள் ஆதிக்கம் பெற்ற காலம் இருந்தது. இதனைப் பற்றி விரிவாக அறிய வேண்டுமாயின் David N. Lorenzen, The Kapalikas and Kalamukhas: Two lost Saivite sects, (1972, Univ. of California) படிக்கலாம். ராசிபுரம் என்பதும் காபாலிகரில் ஒருவகையினரான ராசி கணத்தார் வாழ்ந்த பகுதியாகும். பழைய ஆவணங்கள் ஒன்றில் கூட ஈரோடை என்று இல்லை என்பதும் அவதானிக்கவும். ஈரோடு என்றுதான் இலக்கியங்கள், கல்வெட்டுக்கள் உள்ளன. இன்னொரு சான்று: ஈரோடு ஆலயத்தின் ஈசனாரின் திருப்பெயர்: ‘ஆர்த்ர கபாலீச்வரர்’. ஆர்த்ர கபாலம் = ஈர ஓடு.
அடியார்க்குநல்லார் சிலம்பின் உரையில் குறிப்பிடும் பஞ்சமரபு கிடைத்த ஊர் வெள்ளகோயில் அருகே உள்ள பாப்பினி/பாற்பதி. பாப்பினிக் கோவில் நடராசர் திருவடியில் கிடைத்த சுவடிகள் அவை. பச்சோடநாதர் கோவில் தான் பஞ்சமரபைக் காத்தளித்த இடம். ஈரோடு, வெள்ளோடு, சித்தோடு, பச்சோடு, பேரோடு ... இப்பெயர்களில் சைவ சமயத்தின் உட்பிரிவான காபாலிக மதம் இருக்கிறது.
---------------
2009-ன் முக்கிய வலைப்பதிவுலக நிகழ்வாக ஈரோடு பதிவர் சங்கமம் நடக்க உள்ளது. சிறப்பு விருந்தினர்களாக தமிழ் அறிஞர்கள் புலவர் செ. இராசு (அவர் கண்டறியத் தந்தவற்றுள் புள்ளி எழுத்துள்ள அறச்சலூர்க் கல்வெட்டு இந்தியாவின் முதல் இசைக்கல்வெட்டு), முனைவர் மு. இளங்கோவன், முனைவர் குணசீலன் (திருச்செங்கோடு கல்லூரி), பாலசுப்ரமணியன் (திருப்பத்தூர்), எழுத்தாளர் க. சீ. சிவகுமார், தமிழ்மணம் காசி, ... பலர் கலந்து கொள்கின்றனர். இந்த முக்கியத் தமிழ்க் கூடல் பற்றி தமிழ்மணம் முகப்புப் பக்கத்தில் அறிவிப்பு செய்யப்படுகிறது. பழமைபேசி அமெரிக்காவில் இருந்துவந்து தம் துய்ப்பறிவைப் பகிர்ந்து கொள்கிறார். ஈரோடு பத்திரிகைகளிலும் அறிவிப்பு.
இடம்
பில்டர்ஸ் அசோசியேசன் ஹால்
(லோட்டஸ் ஷாப்பிங் பின்புறம், கலெக்டர் அலுவலம் அருகில்,
பெருந்துறை ரோடு, ஈரோடு)
அரங்கம் நகரத்தின் மையத்தில் இருப்பதால், எந்த திசையில் இருந்து வந்தாலும் மிக எளிதாக அடைய முடியும்
நாள் : 20.12.2009 ஞாயிறு
நேரம் : மாலை 3.30 மணி
நிகழ்ச்சி நிரல்:
சங்கமம் துவக்கம்
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை
பதிவர்கள் - அறிமுகம்
சிறப்பு அழைப்பாளர்களின் வாழ்த்துரை
எழுதுவதில் இருக்கும் தயக்கத்தை உடைத்தல்
வலைப்பக்கத் தொழில் நுட்பம்
தேநீர் இடைவேளை
பதிர்வர்களின் முக்கிய கடமை
வாசகர்களின் எதிர்பார்ப்பு
கலந்துரையாடல்
மாலை 07.00 மணி
இரவு உணவு
அவசியமாக, நீங்களும், குடும்பத்தாரும், உறவு, நண்பர்களும் தமிழ்க் கணிமை ஆர்வலர்களைச் சந்திக்கவும், கணினி, மின்மடல் (தமிழ்), பதிவு தொடங்கல், ... குறித்த ஐயம் தெளியவும் ஈரோடு நிகழ்ச்சிக்கு வந்து பங்கேற்றுச் சிறப்பிக்க வேண்டுகிறோம்.
ஒருங்கிணைப்பாளர்கள்:
1. ஆரூரன்
2. வால்பையன்
3. ஈரோடு கதிர்
4. க.பாலாசி
5. வசந்த்குமார்
6. அகல்விளக்கு
7. கார்த்திக்
8. கோடீஸ்வரன்
9. நந்து
10. லவ்டேல் மேடி
11 தங்கமணி
12. சண்முகராஜன்
13. தாமோதர் சந்துரு
14. முருக.கவி
ஈரோடு பதிவர் சங்கமம் பற்றிய வலைமலர்கள்:
http://maaruthal.blogspot.com/2009/12/blog-post_14.html
http://pithatralgal.blogspot.com/2009/12/blog-post.html
http://kaalapayani.blogspot.com/2009/12/2009.html
http://valpaiyan.blogspot.com/2009/12/blog-post_04.html
http://arurs.blogspot.com/2009/12/blog-post_05.html
http://agalvilakku.blogspot.com/2009/12/blog-post.html
http://maniyinpakkam.blogspot.com/2009/12/blog-post_17.html
மேலும் விபரங்களுக்கு...
ஈரோடு கதிர் 98427-86026
ஆரூரன் 98947-17185
வால்பையன் 99945-00540
பாலாசி 90037- 05598
ராஜாஜெய்சிங் 95785-88925 (அகல்விளக்கு)
அனைவருக்கும் நன்றி!
நா. கணேசன்
ஈரோட்டில் தமிழர் கூடல் (டிசம்பர் 20, 2009)
Posted by நா. கணேசன் at 5 comments
யுனித்தமிழே! இனிக்கும் மின்தமிழே! வணக்கம் (அன்புடன் புகாரி, 2005!)
யுனித்தமிழே! இனிக்கும் மின்தமிழே! வணக்கம்
கவிஞர் புகாரி, கனடா,
தமிழ்நாடு அறக்கட்டளை - ஃபெட்னா திருவிழா, டல்லஸ், டெக்சாஸ், 2005
[இன்று எல்லாப் பத்திரிகைகளும், இணையப் பல்கலையும்
(http://tamilvu.org), வலைப்பதிவுகளும், திரட்டிகளும், மடலாடு குழுமங்களும் ஒருங்குறி ஆகிவிட்டன. 2005 தொடக்கத்தில் நிலைமை அவ்வாறில்லை. அப்பொழுது, ஜிமெயில் கூடப் புத்தம் புதிது! தமிழ்மணம் விண்மீனாகச் சுடரும் ‘அன்புடன்’ புகாரி மடற்குழுக்களை மடைமாற்றி கூகுள்குழுக்கள் ஆக்கியதில் முன்னோடி. முதல் கூகுள்குழு அன்புடன் - இன்று ஒரு லட்சம் மடல்களைத் தாண்டி நடைபோடுவது கணிமை வரலாற்றில் ஒரு மைல்கல் - நா. கணேசன்]
யுனிகோடில் தமிழ் - ஓர் அறிமுகம்
அன்றுதொட்டு இன்றுவரை மாற்றங்களையே நாம் வாழ்வாய்ப் பெற்றிருக்கிறோம். இன்று நம் முன் ஓர் இனிப்பான மாற்றம் நம்மை மாறச் சொல்லி ‘அன்புடன்’ அழைக்கிறது. எந்த மாற்றமும் செய்யாமலேயே யுனிகோடுக்கு நாம் மாறலாம். வெறுமனே மாறும் அந்த மாற்றத்தையும் செய்யாதிருப்பது எப்படி சரி? தமிழ்த்தாய் புலம்பெயர்ந்து கொண்டே இருக்கிறாள். அவள் புலம்பெயரா விட்டால், அதன் மொத்த இழுக்கும் தமிழர்களாகிய நம்மையே வந்து சேரும்.
புலம்பெயர்ந்தாள் புலம்பெயர்ந்தாள்
புலம்பெயர்ந்தாள் தமிழ்த்தாய்
இளமையோடும் புதுமையோடும்
தலைநிமிர்ந்தாள் தமிழ்த்தாய்
ஓசைகளாய் இருந்தவள்தான்
ஓலைகளில் பெயர்ந்தாள்
ஓலைகளாய்ப் பெயர்ந்ததனால்
சங்ககாலம் கொண்டாள்
ஓலைகளில் வாழ்ந்தவள்தான்
தாள்களுக்குள் பெயர்ந்தாள்
தாள்களுக்குள் பெயர்ந்ததனால்
தரணியெங்கும் நிறைந்தாள்
காகிதத்தில் கனிந்தவள்தான்
கணினிக்குள் பெயர்ந்தாள்
கணினிக்குள் பெயர்ந்ததனால்
அண்டவெளி வென்றாள்
அழிந்திடுவாள் என்றோரின்
நரம்பறுத்து நின்றாள்
இணையமென்ற மேடைதனில்
மின்நடனம் கண்டாள்
அயல்மொழியைக் கலந்தோரை
வெட்கியோட வைத்தாள்
அழகுத்தமிழ் அமுதத்தமிழ்
ஆட்சிமீண்டும் பெற்றாள்
வலைப்பதிவு (blogs), வலைத் தளங்களெல்லாம் யுனிகோடுச் சிறகுகளைத் தனிவானில் உயர்த்தி வெற்றிச் சிறகுகளுடன் பறக்கின்றன. ஏன்?
எத்தனை எத்தனை எழுத்துக் குறியீடுகள் இப்போது? அஞ்சல், திஸ்கி, டாப்பு, டாம்மு, கீப்பு, டூப்பு, சோப்பு, வழவழா, கொழகொழா. போதுமடா சாமி. ஆளாளுக்கு ஒன்றை வைத்துக் கொண்டு அடித்துக் கொள்வது மலிந்துவிட்டது. எல்லோரும் ஒன்றாய் இணைய இன்று யுனித்தமிழ்தான் ஒரே வழி. இதில் மாற்றுக் கருத்து எவருக்கும் இருக்க முடியாது. ஆனால் மாறுவதில் கால தாமதப் படுத்துவோம் என்று சிலர் கூறுவதில் எனக்கு மாற்றுக் கருத்துண்டு.
யுனித்தமிழ் நாம் கண்ட அருஞ்சாதனை - அதைக்
குழுமங்களில் செய்வோம் பெருஞ்சோதனை
மாற்றுக்கருத்துக்களை மாற்றியெடுக்கும் பணியில் நான் முனைந்து செயல்பட்டு வெற்றியும் கண்டிருக்கிறேன். எனவே மிக விரைவில் யுனித்தமிழ்க் குழுமங்கள் தீபங்கள் ஏற்றித் தீபாவளியே கொண்டாடும் என்ற நம்பிக்கை எனக்குப் பூரணமாய் உண்டு. திஸ்கிதான் நரகாசுரன் என்று சொல்லும்போது மனம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால், மேலே ஏறுவதென்பது படிகளை மிதித்துத்தான். அஞ்சல், திஸ்கி 1.6, திஸ்கி 1.7 என்பதெல்லாம் படிகள், படிகள், படிகள். யுனிகோடு என்ற நாற்காலியை எட்டி விட்டால், பிறகெல்லாம் தமிழுக்குச் செங்கோல்தான்.சிலிக்கான் பள்ளத்தாக்கும்
சிலிர்க்கும் சிகரம் தொட்டு
மொழித்தேன் கூடு கட்டி
தழைக்கும் தமிழே வாழ்க
பழித்தோன் பணிந்தே போனான்
பகைத்தோன் பதறிப் போனான்
இழித்தோன் கிழிந்தே போனான்
இறப்பிலாத் தமிழே வாழ்க
வலைக்குள் மொழிகளோ நூறு
வனப்பாய்த் தமிழினைப் பாரு
நிலைப்பதில் அதுவும் ஒன்று
நெஞ்சமும் பூக்குது கண்டு
அழைப்பும் தொடுப்போ மின்று
அன்புடன் ஒன்றுதல் நன்று
தழைப்பது தமிழ்தான் என்போம்
தரமென ஒன்றே கொள்வோம்
உலகத் தமிழ்தான் உயருது
ஒன்றே தமிழென முழங்குது
வளங்கள் கொழிக்கும் வனமாய்
வளருது இணையத் தமிழும்
கலையும் தமிழரின் பண்பும்
கடல்கள் தாண்டியே மலருது
சுழலும் கோள்களும் நின்றே
செந்தமிழ் கேட்டே ஆடுது
ஏழரைக் கோடித் தமிழரை
ஈன்றவள் எத்தனைப் பெரியவள்
நாலரை நூறு ஆண்டுகள்
நூல்களில் அச்சாய் வாழ்பவள்
தோளுரம் கொண்ட மைந்தரால்
தொல்லைகள் நீக்கப் பெற்றவள்
சாளரம் திறந்தே சிரிக்கிறாள்
சொக்கிடும் இணையச் செழுமையில்
பழமைக் கலைகளும் கொண்டவள்
புதுமைக் கணியுகம் கண்டவள்
இளமை குன்றாத் தமிழ்த்தாய்
இணையப் பெருவெளி வென்றாள்
தமிழினி மெல்லச் சாவதோ
தீப்பொறி தீர்ந்தே போவதோ
விழிகளை விரித்தே காண்பீர்
வெற்றியின் நெற்றியில் தமிழே
இனி நாம் மாறவேண்டிய மூன்று விசயங்களை ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.
அ. ஜிமெயில்
ஜிமெயில் யாருக்கு எதைத் தருகிறதோ இல்லையோ, தமிழனுக்குத் தங்கு தடையில்லாமல் யுனித்தமிழைத் தருகிறது. சரி இனி அதன் பலன்பட்டியலைப் பார்ப்போம். 1. யுனித்தமிழ் - Unicode Tamil: எந்த மாற்றமும் செய்யாமல், தரம்-encoding-ல் Unicode UTF(8)-டினை தேர்வு செய்தவுடன், மடைதிறந்த வெள்ளமாய் யுனித்தமிழினைத் தட்டச்ச முடியும். மேலும், 2. துரித அஞ்சல் தேடல் - Find any message instantly. 3. சில கிகாபைட்டுகளில் சேமிப்பு - 2+ GB storage. 4. உரையாடல்கள் - conversations. 5. மடல் வந்ததும் அறிவிப்பு - gmail Notifier. 6. வேண்டாத மடல் கழிப்பு - Spam control. 7. கோப்புகளும் வடிகட்டிகளும் - labels and Filters.
8. தமிழ்த்திரை - Tamil Interface 9. விசைப்பலகைக் குறுக்குவழிப் பொத்தான்கள் - keyboard shortcuts. 10. 'பாப்' எடுத்தல் மற்றும் திசைமாற்றல் - POP access and Forwarding.
பிறகென்ன தோழர்களே தோழியரே, இவற்றைவிட வேறு என்ன வேண்டும் ஜிமெயில் அழைப்பை ஏற்றுக்கொள்வதற்கு? அழைப்பு இல்லாமல் யாரும் ஜிமெயில் பெற்றுவிடமுடியாது என்பதால், அழைப்பு வேண்டுவோர் buhari@gmail.com அல்லது naa.ganesan@gmail.com முகவரிக்கு எழுதினால், அழைப்புக்கு உடனே ஏற்பாடு செய்வோம்.
எகலப்பை 2.0: http://anbudanbuhari.com/xunicodetamil.html
ஜிமெயில் உதவி: http://gmail.google.com/gmail/help/tour/start.html
http://gmail.google.com/gmail/help/start.html
http://gmail.google.com/support/
http://gmail.google.com
ஆ. கூகுள் குழுமம்
அட, இதற்கு ஏன் 'ஆ' என்று கொடுத்தேன். தமிழர்களையெல்லாம் அப்படி ஆச்சரியப்படுத்தும் இந்தச் சேவை. தமிழுக்காகவே கூகுள் இதனைத் தொடங்கி இருக்கிறதோ என்ற சந்தேகம் நமக்கெல்லாம் நிச்சயம் வரும். அப்படி என்ன இருக்கிறது இதில். ஏன் நாம் நம் பழைய குழும சேவையை விட்டுவிட்டு இங்கே செல்லவேண்டும்?
நமக்கு வேண்டுவது அமுதம் - அதற்கான
அட்சய பாத்திரமே கூகுள் குழுமம்.
மாலனின் திசைகள் - http://thisaigal.com/ எனது அன்புடன் புகாரி - http://anbudanbuhari.com/ மகேனின் எழில் நிலா - http://ezilnila.com/ என்று ஏராளமான வலைத்தளங்கள் தொடங்குவதெல்லாம் யுனித்தமிழில்தானே? வலைப்பூக்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். மிக எளிதாக உருவாகக்கூடிய ஈசல் அது. அந்த ஈசலின் சிறகுகள் எல்லாம் யுனித்தமிழ்தான். எகலப்பை முன்பு திஸ்கி மட்டுமே எழுதும் நிரலியாக வந்தது. அது பின் எகலப்பை 2.0 ஐ வெளியிட்டு வருடம் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் யுனித்தமிழும் திஸ்கி தமிழும் ஒரு பொத்தானைக் குத்தி தரம் மாற்றித் தட்டெழுதிச் சாதனை புரியலாம், சமாய்த்து மகிழலாம்.
யுனிகோடுக்கு எழுத்துரு-font தேவையில்லை. ஏனெனில் விண்டோசின் பெரும்பாலான எழுத்துருக்களில் தமிழும் உண்டு. இன்றைய உலகமே யுனிகோடு உலகம்தான். இனி நாளைய உலகைப்பற்றிச் சொல்லத் தேவை இல்லை. கூகுளின் முகப்பிலிருந்து அனைத்தும் தமிழிலேயே வரும். பாதிக்குமேல் இப்போதே வருகிறது.
தமிழில் தகவல் தேடும் தொழில் நுட்பம் யுனிகோடில்தான் உள்ளது. அதாவது மாங்குமாங்கென்று நாம் இணையக் குழுமங்களில் எழுதித் தள்ளுகிறோம். ஆனால் பழையமடல் எதுவும் துழாவினால் கிடைப்பதில்லை. யுனிகோடாக இருந்தால், எந்தத் தமிழ்ச் சொல்லை இட்டுத் தேடினாலும், அந்தத் தமிழ்ச்சொல் நம் குழும மடல் ஏதோ ஒன்றில் இருந்தால், நச்சென்று வந்து விழுந்துவிடும். அதாவது உலகளாவி படைப்புகளின் விசயம் பரவும். தமிழும் ஆங்கிலத்தைப்போலத் தேடியதும் தட்டுப்பட்டு விடும். இது தமிழும் தமிழ் எழுதும் எழுத்தாளர்களும் வளர மிக மிக அவசியம். உதாரணமாக, "புகாரி" என்றோ "அன்புடன் புகாரி" என்றோ "வெளிச்ச அழைப்புகள்" என்றோ யுனிகோடில் கூகுளில் தட்டி, தேடு பொத்தானைச் சொடுக்கிப் பாருங்கள், நிறைய வாசிக்கக் கிடைக்கும்.
கூகுளு கூகுளு கூகுளு - அட
குளுகுளு குளுகுளு கூகுளு
திஸ்கியும் பஸ்கிகள் எடுக்குது - மூச்சுத்
திணறியும் முனகியும் ஒடுங்குது.
இ. தமிழில் தட்டெழுத ...
http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm
http://www.higopi.com/ucedit/Tamil.html
இங்கே சென்றால் விண்டோஸ் 98 பயன்படுத்துபவர்களும் மிக எளிதாக யுனிகோடு தமிழ் தட்டச்சு செய்யலாம்.
அன்புடன் - ஒரு கூகுள் தமிழ்க்குழுமம்
இதயம் மீறும் எண்ணங்களால் நாம்
எழுந்து பறப்போமே
இதய நிழலில் இதயம் கிடத்தி
இன்னல் துறப்போமே
இந்த வாசகங்களோடு மார்ச் 2005ல் நான் தொடங்கிய யுனித்தமிழ்க் குழுமம். சுட்டியைச் சொடுக்கிப் பாருங்கள். மடல்கள் தேன் நயாகராவாய்க் கொட்டுகின்றன. ஏராளமான சோதனைகள் செய்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது உலகின் முதல் யுனித்தமிழ் குழுமமான எனது "அன்புடன்" குழுமம்.
http://groups.google.com/group/anbudan
என் 'அன்புடன்' உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது. பிரியம்போல் அங்கே உங்கள் சோதனை மடல்களை இட்டுக்கொள்ளலாம். அது உங்கள் குழுமம். அன்புடன் குழுமம்.
தமிழினி மெல்லச் சாவதோ
தீப்பொறி தீர்ந்தே போவதோ
விழிகளை விரித்தே காண்பீர்
வெற்றியின் நெற்றியில் தமிழே
- அன்புடன் புகாரி
Posted by நா. கணேசன் at 2 comments
ஆப்பிள் ஐபோனில் தமிழ்! (செல்லினம் - முத்துவின் நன்கொடை)
தமிழன்பர்களே,
நீங்களோ, அல்லது உங்கள் குடும்பத்தினரோ, நண்பர்களோ ஆப்பிள் ஐபோன் பயனித்தால், முத்து நெடுமாறன் இலவசமாக அளிக்கும் செல்லினம் நிரல் தமிழ் படிக்க எழுத உங்களுக்கு உதவும்.
முத்துவின் மடல்:
---------- Forwarded message -----------------------------------
From: Muthu Nedumaran
Date: Thu, Dec 3, 2009
Fwd: Sellinam - now available in Apple's AppStore
Dear Friends,
Pleased to let you know that Sellinam, demonstrated at TI2009, is now available for download from Apple's World Wide App Store. From your iPhone or iPod Touch's AppStore application, search for Sellinam. There'll be just one entry. Touch it to download. It's free.
Enjoy and please help spread the word around.
anbudan,
~ MUTHU
-------------------------------------------------------------
தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல செல்லினம் - ஆப்பிள் ஐபோன் உதவும். இலவசமாக அளிக்கும் முத்தெழிலன் நெடுமாறனுக்கு - முத்துவிற்கு எம் தனிப்பட்ட நன்றியறிதல்கள்.
மேலதிக விவரங்களுக்கு,
http://us.appup.net/item/detail/337936766
http://appshopper.com/social-networking/sellinam
அன்புடன்,
நா. கணேசன்
Posted by நா. கணேசன் at 0 comments
Labels: Apple , iPhones , Muthu Nedumaran , Sellinam , Tamil , Tamil rendering
தமிழ்மணம் பாடல்கள்! - பாரதிதாசன், தஞ்சை ராமையாதாஸ், திருச்சி தியாகராசன்
தமிழ்மணம் ( http://tamilmanam.net ) தொடங்கி 5 ஆண்டுகள் நிறைவுவிழாவைச் சென்ற ஆகஸ்ட்டில் கொண்டாடியாயிற்று. தமிழ்மணம் குழுவின் உழைப்பால் பதிவுலக வாசகர்களுக்கு இலவசச் சேவை தொடர்கிறது. வழமைபோல் இவ்வாண்டும் தமிழ்மணம் விருதுகளை அளித்து சிறந்த பதிவுகளைக் கௌரவிக்கிறது. தமிழ்மணம் வலைப்பதிவு விருதுகள் - 2009. இவ்வாண்டின் மிகச்சிறந்த இடுகைகளை தெரிவு செய்யும் பதிவுத் திருவிழா:
http://blog.thamizmanam.com/archives/187
தமிழ் இலக்கியங்களில் தமிழ்மணம் என்ற சொல்லாட்சி உள்ளதா? 20-ஆம் நூற்றாண்டு அல்லது அதன் முன்னர். பாரதிதாசனின் காதல் பாட்டுகள் நூலில் கிடைத்த பாடலைத் தருகின்றேன். இணையத்திலே நேரத்தைச் செலவிடுவதால் மனையாளின் சீறாட்டு! தமிழ்மணமே கதியென்று இருப்போருக்குப் பொருத்தம்தான்! கூடவே ‘அடுத்த வீட்டுப் பெண்’ (1960) திரைப்படப் பாடலும், தண்டபாணி தேசிகரின் பிரபலமான பாடலையும் கேட்கலாம்.
தமிழ்மணம் என்ற சொல் இழைகிற பாட்டிருந்தால் தாருங்கள்! நன்றி.
நா. கணேசன்
கன்னித் தமிழ்மணம் வீசுதடி!
தஞ்சை ராமையாதாஸ்
பாடியவர்: பி. சுசீலா, அடுத்த வீட்டுப் பெண் (1960)
கன்னித் தமிழ்மணம் வீசுதடி!
காவியத் தென்றலுடன் பேசுதடி! (கன்னி)
காவிலே பூவிலே காணுமின்பம் பாராய்
வாழ்விலே கொஞ்சிடும் வண்டுகளும் ஜோராய்
வாழ்விலே கொஞ்சிடும் வண்டுகளும் ஜோராய்
அலை மோதுதே நிலை மாறுதே
ஆனந்த சோலை இதுவே! (கன்னி)
சோலைக்குயில் மாலையிலே இன்னிசையும் பாட
நீலமயில் ஆவலுடன் தோகைவிரித் தாட
புள்ளிமகள் அங்குமிங்கும் துள்ளித் துள்ளி ஓட
பொங்கும் கதிரவன் தங்கத் தகிடாய்
பூவாரம்போல் சூட!
அலை மோதுதே நிலை மாறுதே
ஆனந்தச் சோலை இதுவே! (கன்னி)
வட்டம் போடும் சிட்டுகளே! வானகத்தில் நாமே
பட்டம் போல வேகமாய்ப் பறந்து செல்லு வோமே!
இஷ்டம்போல உல்லாசமாய் ஓடியாடுவோமே!
இன்னோசைதான் நாமே இன்ப கானம் பாடுவோமே!
இன்ப கானம் பாடுவோமே
அலை மோதுதே நிலை மாறுதே
ஆனந்தச் சோலை இதுவே! (கன்னி)
|
தமிழ் வாழ்க்கை
பாரதிதாசன்
இரண்டடிதான் வாழ்க்கைத்துணை
என்றானே - என்னை
ஏறெடுத்துப் பார்க்காமலே
சென்றானே
திரண்ட பெண்ணைத் திகைக்க வைக்கும்
கூத்துண்டா - அவள்
சிலம்பொலிதான் தித்திக்கின்ற
கற்கண்டா? (இரண்டடிதான்)
மேகலையும் கையுமாக
வாழ்கின்றான் - என்
விருப்பம் சொன்னால் சீறி
என்மேல் வீழ்கின்றான்
சாகையிலும் அவள் அகமே
தாழ்கின்றான் - அவன்
தமிழ்மடந்தை புறப்பொருளே
சூழ்கின்றான் (இரண்டடிதான்)
தமிழ்மணத்தில் என்னையும்வை
என்றேனே - அவன்
தனிமனத்தில் இருநினைவா
என்றானே
தமியாளும் இந்தி அன்றோ
என்றேனே - நான்
தமிழனடி என்று சொல்லிச்
சென்றானே!
தாமரை பூத்த தடாகமடி!
கவிஞர் திருச்சி தியாகரா’சன்
பாடியவர்: எம். எம். தண்டபாணி தேசிகர்
பல்லவி
தாமரை பூத்த தடாகமடீ - செந்
தமிழ்மணத் தேன்பொங்கிப் பாயுதடீ - ஞானத் ( தாமரை)
அனுபல்லவி
பாமழை யால்வற்றாப் பொய்கையடீ - தமிழ்ப்
பைங்கிளி கள்சுற்றிப் பாடுதடீ - ஞானத் (தாமரைப்)
சரணம்
காவியச் சோலைஅதன் கரையழகே - பெருங்
கவிஞர்கள் கற்பனைக்கோர் தனிச்சுவையே
ஆவிம கிழும்தமிழ்த் தென்றலதே - இசை
அமுதினைக் கொட்டுதுபார் இதனருகே! - ஞானத் (தாமரை)
ஆதாரம்: ரா. பி. சேதுப்பிள்ளை, தமிழ்க் கவிதைக் களஞ்சியம், 1960நன்றி: சு. பசுபதி, டொராண்டோ, கனடா
எம். எம். தண்டபாணி தேசிகர் - தாமரை பூத்த தடாகமடீ!
சுதா ரகுநாதன் - தாமரை பூத்த தடாகமடீ!
யு. ஸ்ரீனிவாஸ், மண்டோலின் - தாமரை பூத்த தடாகமடீ!
திருவிழா ஜெயசங்கர், - நாதசுரம் - தாமரை பூத்த தடாகமடீ!
Posted by நா. கணேசன் at 5 comments
Labels: P. Suseela , Tamilmanam , தஞ்சை ராமையாதாஸ் , தண்டபாணி தேசிகர் , தமிழ்மணம் , பாரதிதாசன்
செம்மொழி தமிழ் மாநாட்டு இலச்சினையில் சிந்துக் குறியீடுகள் - World Classical Tamil Conference (CBE 2010) Logo
செம்மொழி மாநாடு இலச்சினை (கோவை, 2010) - World Classical Tamil Conference logo
உலகத்தமிழ் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 24-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை 4 நாட்கள் கோவையில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறு விறுப்பாக நடந்து வருகின்றன.
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக தனி சின்னம் (இலச்சினை) உருவாக்கப்பட்டுள்ளது. முதல்- அமைச்சர் கருணாநிதி ஆணையின் படி கோவையில் 2010, ஜூன் திங்கள் 24-ஆம் நாள் முதல் 27-ஆம் நாள் வரை நடைபெறவுள்ள உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கான இலச்சினை (லோகோ) உருவாக்கப்பட்டுள்ளது. அந்த இலச்சினையை இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்- அமைச்சர் கருணாநிதி வெளியிட்டார்.
நிதி அமைச்சர் அன்பழகன், துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பரிதி இளம்வழுதி, பேராசிரியர் வா.செ. குழந்தைசாமி, தொல்லியியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன், தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, நிதித்துறை முதன்மைச் செயலாளர் கு. ஞானதேசிகன், உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் தனி அலுவலர் க.அலாவுதீன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் ம.ராசேந்திரன், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப் பொறுப்பு அலுவலர் முனைவர் க.ராமசாமி ஆகியோர் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
தமிழ்மொழி, செம்மொழியாக அறிவிக்கப்பட்டபின் நடத்தப்பெறும் உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டிற்காக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த இலச்சினை பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ளது. இதுபற்றி தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.ராஜேந்திரன் நிருபர்களிடம் விளக்கி கூறினார். அவர் கூறியதாவது:-
கடல்கோள்களை எதிர்கொண்டும், காலவெள்ளத்தைக் கடந்தும் சீரிளமைத் திறத்தோடு தமிழ்மொழி திகழ்கிறது என்பதைக் குறிக்கும் வகையில் சுனாமி அலைகளும், அய்யன் திருவள்ளுவர் திருவடிகளில் சுருளும் அழகிய பின்னணியில் இலச்சினை உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, தத்துவ விளக்கங்களுக்கேற்ப மூன்றுவிரல் முத்திரைகளைக் கொண்டு சிலைகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் திருவள்ளுவர் சிலையோ அறம், பொருள், இன்பம் என்னும் முப்பாலைக் குறிப்பிடும் வகையில் மூன்று விரல்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவரைச் சுற்றியுள்ள மேல்வட்டத்தில் உலகத் தொன்மையான நான்கு நாகரிகங்களில் ஒன்றாகக்கருதப்படும் திராவிட நாகரிகமாகிய சிந்துவெளி நாகரிகச் சின்னங்களும் குறியீடுகளும் இடம் பெறுகின்றன. சிந்துவெளிப் பள்ளத்தாக்கில் செழித்து வளர்ந்த நகர்மய நாகரிகம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது. சிந்துநதிக்கரையில் 1500 ஏக்கர் பரப்பளவில் செழித்தோங்கி 700 ஆண்டுகள் சிறந்து விளங்கியது சிந்துவெளி நாகரிகம். அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட சிந்துவெளிச் சின்னங்களுடன் கூடிய குறியீடுகள்- எழுத்துப் பொறிப்புகள், தமிழகத்தின் கொங்கு மண்டலச் சூலூர், விழுப்புரம் அருகில் கீழவாளை, சோழமண்டலத்தில் மயிலாடுதுறை, செம்பியம் கண்டியூர் ஆகிய இடங்களிலும் கிடைத்துள்ளன.
படகும், கப்பலும் தமிழர்கள் திரைகடலோடித் திரவியம் தேடிய திறன்மிகு வரலாற்றையும், காளைச் சின்னம் தமிழர்களின் வேளாண்மைத் தொழில் சிறப்பையும் வெளிப்படுத்துகின்றன.
இலச்சினையில் ஏழு குறியீடுகள் சின்னங்கள் இடம் பெறுகின்றன. ஏழு என்பது தமிழர்களுக்குரிய கணக்கீட்டு முறையில் சிறப்பான எண்ணாகும். ஏழு நாட்கள், அகப்பொருள் திணைகள் ஏழு, புறப்பொருள் திணைகள் ஏழு. திருக்குறள் 133 அதிகாரங்கள், அறத்துப்பாலில் பாயிரவியல் தவிர 34 அதிகாரங்கள், பொருட்பாலில் 70 அதிகாரங்கள், காமத்துப்பாலில் 25 அதிகாரங்கள், இவற்றின் கூட்டுத்தொகை ஏழு என்னும் எடுத்துக்காட்டுகள் ஏழின் சிறப்பை விளக்கிச் சொல்லும். ஏழு என்பது "எழு" என்பதாகவும் "எழுபதில்" இடம் பெறும். இலக்கை எட்டுவதற்கு எழுவது எழு என்பதாகவும் அமைகிறது.
இந்த மாநாட்டின் எடுத்துரைக் குறிப்பாக பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது அமைந்துள்ளது. ஓலைச்சுவடியில் இடம் பெற்றுள்ள எடுத்துரைக் குறிப்பு, இன்றைய உலகிற்குத் தமிழ்ச் செம்மொழி வழங்கும் கொடையாகக் கருதத்தக்கது. இன்றைய உலகின் தேவை நல்லிணக்கம், சாதி, மதம் கடந்து மக்கள் மனநிறைவோடு வாழும் மனிதநேயம் செறிந்த வாழ்க்கை. இதற்குத் தேவை வேறுபாடற்ற உலகம். ஏற்றத்தாழ்வற்ற உலகம் அமைய இந்தியா உலகிற்கு அளிக்கும் கருத்துக்கொடை பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதாகும். இச்சிந்தனை 2000 ஆண்டுகளுக்கும் முன்பே தமிழ்ச் செம்மொழி தரணிக்கு வழங்கிய கொடையாகும். இவ்வாறு முனைவர் ம.ராஜேந்திரன் கூறினார்.
Logo of Classical Tamil meet unveiled
The Hindu, October 24, 2009
CHENNAI: The image of saint-poet Thiruvalluvar’s statue in Kanyakumari, lashed by waves caused by the tsunami and encircled by seven icons from the Indus Valley Civilisation, forms part of the logo of the World Classical Tamil Conference to be held in Coimbatore next June.
The logo emphasises the ideal of the mankind that it should always be free of narrow walls of race, creed and casteism. The message is found in a palm leaf manuscript at the bottom of the statue. This concept (“pirapokkum ella uyirkkum”) has been declared the motto of the meet.
The figures of the Indus Valley Civilisation icons, found in the logo, symbolise the Dravidian civilisation, which is regarded as one of the four ancient civilisations, according to an official release.
The number of icons stresses the importance of ‘seven’ in the lives of Tamils.
On Friday, Chief Minister M. Karunanidhi unveiled the logo at the Secretariat in the presence of Deputy Chief Minister M.K. Stalin, Information Minister Parithi Ellamvazhuthi, scholars V.C. Kulandaiswamy and Iravatham Mahadevan, Chief Secretary K.S. Sripathi, Tamil University Vice-Chancellor M. Rajendran, and Special Officer for the conference K. Allaudin.
சிந்து சமவெளி குறியீடுகளுடன் செம்மொழி மாநாட்டுச் சின்னம்*முதல்வர் கருணாநிதி வெளியிட்டார்.
தினமலர், அக். 24, 2009
சென்னை:உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கான சின்னத்தை, முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்டார். கோவையில் வரும் 2010 ஜூன் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடக்கவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கான சின்னம் (லோகோ) உருவாக்கப் பட்டுள்ளது. இதை, முதல்வர் கருணாநிதி, நிதியமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் ஸ்டாலின், செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, தமிழறிஞர்கள் வா.செ. குழந்தைசாமி, ஐராவதம் மகாதேவன் ஆகியோர் முன்னிலையில் வெளியிட்டார்.
தலைமைச் செயலர் ஸ்ரீபதி, நிதித் துறை முதன்மைச் செயலர் ஞான தேசிகன்,செம்மொழி மாநாட்டின் தனி அலுவலர் அலாவுதீன், தஞ்சை தமிழ்ப் பல்கலை துணைவேந்தர் ராஜேந்திரன், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன பொறுப்பு அலுவலர் ராமசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழ் மொழி, செம்மொழியாக அறிவிக்கப்பட்ட பின் நடத்தப்படும் மாநாட்டுக்கான இந்த சின்னம், பல்வேறு சிறப்புகளை கொண்டது. கடல்கோள்களை எதிர்கொண்டும், கால வெள்ளத்தைக் கடந்தும் இளமைத் திறத்தோடு தமிழ்மொழி திகழ்வதை குறிக்கும் வகையில் சுனாமி அலைகளும், திருவள்ளுவர் பாதங்களில் சுருளும் அழகிய பின்னணியில், இந்த சின்னம் உருவாக் கப்பட்டுள்ளது.
வழக்கமாக, தத்துவ விளக்கங்களுக்கு ஏற்ப மூன்று விரல் முத்திரைகளைக் கொண்டு சிலைகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால், திருவள்ளுவர் சிலையோ அறம், பொருள், இன்பம் எனும் முப்பாலைக் குறிக்கும் வகையில் மூன்று விரல்களுடன் அமைக்கப் பட்டுள்ளது. திருவள்ளுவரைச் சுற்றியுள்ள மேல்வட்டத்தில் உலகத் தொன்மையான நான்கு நாகரிகங்களில் ஒன்றாக கருதப்படும், திராவிட நாகரிகமாகிய சிந்துவெளி நாகரிகச் சின்னங்களும் குறியீடுகளும் இடம்பெற்றுள்ளன.
சிந்துவெளிப் பள்ளத்தாக்கில் செழித்து வளர்ந்த நகர்மய நாகரிகம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது. அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட சிந்துவெளிச் சின்னங்களுடன் கூடிய குறியீடுகள், எழுத்துப்பொறிப்புகள், தமிழகத்தின் கொங்கு மண்டலச் சூலூர், விழுப்புரம் அருகில் கீழவாளை, சோழ மண்டலத்தில் மயிலாடுதுறை, செம்பியம், கண்டியூர் ஆகிய இடங்களிலும் கிடைத்துள்ளன.
படகும், கப்பலும் தமிழர்கள் திரைகடலோடித் திரவியம் தேடிய வரலாற்றையும், காளைச் சின்னம் தமிழர்களின் வேளாண்மைத் தொழில் சிறப்பையும் வெளிப்படுத்துகின்றன. சின்னத்தில் ஏழு குறியீடுகள் இடம்பெறுகின்றன. ஏழு என்பது தமிழர்களுக்குரிய கணக்கீட்டு முறையில் சிறப்பான எண்.ஏழு நாட்கள், அகப்பொருள் திணைகள் ஏழு, புறப்பொருள் திணைகள் ஏழு, திருக்குறள் 133 அதிகாரங்கள், அறத்துப்பாலில் பாயிரவியல் தவிர 34 அதிகாரங்கள், பொருட்பாலில் 70 அதிகாரங்கள், காமத் துப்பாலில் 25 அதிகாரங்கள், இவற்றின் கூட்டுத் தொகை ஏழு என்ற எடுத்துக் காட்டுகள் ஏழின் சிறப்பை விளக்குகின்றன.
இம்மாநாட்டின் எடுத்துரைக் குறிப்பாக (மோட்டோ) "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பது அமைந் துள்ளது. ஓலைச் சுவடியில் இடம்பெற்றுள்ள இது, இன்றைய உலகுக்குத் தமிழ் செம்மொழி வழங்கும் கொடையாகக் கருதப் படுகிறது. ஏற்றத் தாழ்வற்ற உலகம் அமைய இந்தியா, உலகுக்கு அளிக்கும் கருத்துக் கொடை "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பதாகும். இச்சிந்தனை 2,000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் செம்மொழி வழங்கியது என, அரசு விளக்கமளித்துள்ளது.
Posted by நா. கணேசன் at 0 comments
Labels: Logo , WCTC , கோவை , சின்னம் , செம்மொழி மாநாடு
இளம்பூரணர் வரலாறு என்னும் போலிப் பாயிரம் (20-ஆம் நூற்றாண்டில் உருவானது!)
தொல்காப்பிய உரைகளில் மிகச் சிறந்த உரை இளம்பூரண அடிகள் இயற்றியது. தொல்காப்பியத்தின் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று அதிகாரங்களுக்கும் கிடைத்துள்ளது. தொல்காப்பியத்துக்கு எழுந்த முதல் உரை இளம்பூரணம். தமிழ்நாடு என்று முதலில் அழைத்தவர் இளம்பூரணவடிகளே: செப்பும் வினாவும் வழுவாது வருவதற்கு, ’நும் நாடு யாது என்றால், தமிழ்நாடு என்றல்’ என்பதை உதாரணங் காட்டுகின்றார் (சொல்-13). ’கொங்கத்து உழவு, வங்கத்து வணிகம்’ என்று அத்துச் சாரியைக்கு உதாரணம் கூறுகிறார். உழவு என்றால் கொங்குநாட்டிலேயும், வணிகம் என்றால் கடல்கடந்து கப்பலால் செய்வதும் ஆகும் என்பது சிறப்பல்லவா?
அவரது எழுத்தால் அவர் சமணத் துறவி என்பர் தமிழறிஞர். ”உரையாசிரியர் துறவுபூண்ட பெரியோரென்பது அடியார்க்குநல்லார் சிலப்பதிகாரத்திலே “உரையாசிரியராகிய இளம்பூரணவடிகள்” எனக் கூறுவதாலும் “அடிகளென்றது துறத்தலான்” என அவரே அடிகள் என்ற சொற்குப் பொருள் உரைத்தமையாலும் தெளிவாகின்றது. இனி, நன்னூலியற்றிய பவணந்தி முனிவர், தம் சூத்திரங்கள் சிலவற்றை, இளம்பூரணவடிகள் உரைக்கருத்தைத் தழுவியே இயற்றிப் போந்தமையால், பவணந்தியாருக்கு முந்தியவர் உரையாசிரியர் என்று ஊகிக்க இடம் இருக்கிறது.” (அபிதான சிந்தாமணி, பக். 220).
“ஒல்காப் புலமை தொல்காப் பியத்துள்
உளங்கூர் கேள்வி இளம்பூர ணர்எனும்
ஏதமில் மாதவர் ஓதிய உரை”
என்று சமணராகிய மயிலைநாதர் போற்றுகிறார்.
pg. 29, Tamil love poetry and poetics, Takanobu Takahashi
"iLampuRaNar was probably a Jaina scholar, living in the 12th Century AD. He wrote his commentary, the oldest extant, on the whole text of Tol., and it has fortunately come down to us intact. His style is simple, clear and lucid."
K. Zvelebil, The Smile of Murugan on Tamil literature of South India, 1973, pg. 134 "ILampUraNar. The first, and probably the best commentary is that of iLampUraNar. He fully deserves the title of uraiyaaciriyar, i.e. "The Commentator". His commentary has fortunately reached us in full. He was probably a Jaina scholar, living in the 11th or 12th century.
Ilampuranar's commentary shows a great deal of common sense and critical acumen. He obviously distrusted the tales connecting the mythical Akattiyar (Agastya) and the author of Tolkappiyam."
னகர ஈற்று விளக்கம்: ஆண்களுக்கே வீடுபேற்று உரிமை!
தமிழ் எழுத்துகளுள் னகரம் இறுதி எழுத்தாகும். னகரத்தை இறுதியிலே வைத்ததற்குக் காரணம் காட்டுகிறார் இளம்பூரணர் என்ற உரையாசிரியர்.
னகரம் வீடுபேற்றிற் குரிய ஆண்பாலை உணர்த்துதற் சிறப்பான் பின் வைக்கப்பட்டது
(தொல், எழுத்து 1. இளம்பூரணர் உரை)
ஆண்பிறவி எடுத்து, துறவு பூண்டு தவத்தினைச் செய்து வினைகளை வென்றால்தான் வீடுபேறு அடைய முடியும் என்பது சமணர்தம் கோட்பாடு. அதனைக் குறிக்கவே ஆண்பால் ஈற்று எழுத்தாகிய னகர மெய்யை மொழி இறுதியில் தொல்காப்பியர் வைத்தார் என்பது இளம்பூரணர் கருத்து. இளம்பூரணரும் சமணர் என்பதால் இயல்பாக இக்கருத்தை ஏற்றுக் கொண்டு விளக்கம் தருகிறார்.
-----
” சமணமுனிவர் ஒழுக்கம்
5. அவாவறுத்தல்: அஃதாவது முற்றத் துறத்தல். ‘‘துறத்தலாவது தன்னுடைய பொருளைப் பற்றறத் துறத்தல்’’ என்றார் சமணராகிய இளம்பூரண அடிகள். இதனைப் ‘பரிக்கிரகத் தியாகம்’ என்பர்.
அவாவென்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து (குறள்: 461)
என்றபடி, அவாவினால் மேன்மேலும் வினைகள் ஏற்பட்டு, அவற்றால் பிறப்பிறப்பாகிய சம்சாரம் உண்டாகும். ஆகையால், பிறப்பறுக்கத் துணிந்த துறவி அவாவறுத்தல் வேண்டும்.” (அத். 4, மயிலை சீனி. வேங்கடசாமி, சமணமும் தமிழும்).
இதனை மாற்றச் சொர்ணம் பிள்ளை என்பவர் 20-ஆம் நூற்றாண்டில் ஒரு போலிப் பாயிரத்தை எழுதினார். இதனைப் போலிச்செய்யுள் என்று அடையாளம் கண்டு எழுதியவர்கள் மு. அருணாசலம் (திருச்சிற்றம்பலம், மயிலாடுதுறை), மு. வை. அரவிந்தன், போன்றோர் ஆவர். சொர்ணம்பிள்ளை இன்னிலை, செங்கோன் தரச்செலவு (சங்க நூலாம்!) போன்ற போலி நூல்களையும் இயற்றி ஆராய்ச்சி உலகைக் குழப்பத்தில் ஆழ்த்தினார்.
போலிப்பாயிரத்தால் தி. வை. சதாசிவ பண்டாரத்தார் ஏமாந்துவிட்டார். அவர் செந்தமிழ் இதழ் 42-ல் திருக்குறள் உரையாசிரியர் மணக்குடவர் தான் இளம்பூரண அடிகள் என்று நிறுவ முயற்சித்தார். இதனை அடியொட்டி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட முன்னுரை. இம்மாதிரி போலி நூல்கள் 20-ஆம் நூற்றாண்டில் எழக் காரணமாயிருந்த தமிழ்ச் சைவப் பின்புலத்தை பொ. வேல்சாமி (காலச்சுவடு, ஆகஸ்ட் 2006) எழுதிய கட்டுரையில் பேசுகிறார்.
தொல்காப்பியம் - இளம்பூரணம்
செல்லூர்க்கிழார் பதிப்பு, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
தொல்காப்பிய உரை எழுந்த வரலாறு
இவ்வெல்லாச் சிறப்பும் ஒருங்கே வாய்ந்த அரிய பெரிய இந்நூலுக்குப் பல நூற்றாண்டுகள்வரை உரையெழுதப் பெறவில்லை. ஆசிரியர்கள் வழிவழியாகத் தத்தம்மாணவர்கட்குத் தாம் தாமே உணர்ந்த அளவுக்கு உரையமைத்துப் பாடஞ்சொல்லி வருவாராயினர். இவ்வாறு தொன்றுதொட்ட மரபு மரபாக உரை சொல்லப் போந்தவர்கள், நாளாக நாளாகத் தற்காலம்போல், தத்தமக்குத் தோன்றியவாறே தம் கருத்துக்கேற்பத் திரித்துப் பொருள் கூறி வருவாராயினர், அதனால், நாட்டில் பல்வேறு திறப்பட்ட கருத்துடை ஆசிரியர் பல்கி, யானைகண்ட குருடர்போலத் தாம் தாம் சொல்வதே உண்மை யுரையென வீணுரை பகர்வாராயினர். இங்ஙனமே சில நூற்றாண்டுக் காலங்கள் கழிவவாயின. இக்காலத்தே, தமிழ்நாடு செய்த நல்லூழ்வகையால் இளம்பூரணவடிகள் தோன்றினார். இவர் தமிழ்மொழியை முற்றக்கற்ற முழுதுணர் பெரியராய் இலகி, தொல்காப்பிய நூற்பெருங் கடலுட் புக்குத் தம் நுண்மாண் நுழைபுல மாட்சியால் நுணுகி ஆய்ந்து தௌ்ளத் தெளிந்த பேருரை வகுப்பாராயினார், இவருரை மூன்றதிகாரங்கட்கும் முற்ற முடியவுள்ளது, இவர் முதல்முதல் இதற்கு உரையெழுதிய பெருமைச் சிறப்புக்கொண்டு இவரை இடுகுறிப்பெயராற் கூறாது, உரையாசிரியர் என்னும் சிறப்புப் பெயரால் வழங்குவாராயினர். இவர்தம் உரைச் சிறப்புக்கு இப்பெயரொன்றே சான்று நின்று பகரும்.
இவரின் பின்னர் வடநூற்கடலை நிலைகண்டுணர்ந்த சேனாவரையர், நுணுகி ஆழ்ந்து விரிந்த தம் மதிநுட்பங்கொண்டு சொல்லதிகாரத்துக்கு மட்டும் ஒரு நல்லுரை வரைந்தளித்தனர். பேராசிரியர் பொருளதிகாரம் மெய்ப்பாட்டியல் முதலாக மரபியல் இறுதியாக ஐந்தியல்களுக்கு மட்டுமே உரையெழுதியுள்ளனர். உற்று ஆய்ந்தால் இவர் தொல்காப்பியம் முழுதுக்கும் உரை கண்டனரெனத் தெரிகின்றது. ஆனால், முழுதும் இதுகாறும் கிட்டிற்றில்லை.
நச்சினார்க்கினியர்
எழுத்தததிகாரம் சொல்லதிகாரங்கட்கும் பொருளதிகார அகத்திணையியல் முதலாகப் பொருளியல் இறுதியாக ஐந்தியல்களுக்கு மட்டுமே உரை வகுத்துள்ளனர்.ஏனைய பகுதிகட்கு எழுதவில்லையென்றே தோன்றுகிறது; கல்லாடர் சொல்லதிகாரச் சில பகுதிகட்கு மட்டுமே உரை வரைந்துள்ளனர்.அவர் உரையில் சில பகுதிகளன்றி முழுதும் வெளிவந்திலது; தெய்வச்சிலையாருரை, சொல்லதிகாரத்துக்கு மட்டுமே இன்றுகாறும் வெளிவந்துள்ளது. எனவே, இன்ன இன்ன பகுதிகட்கு இன்னின்னார் இவ்விதுவரை உரைகண்டாரென்று அறுதி கொண்டுரைத்தற்கு அகப்புறச் சான்றுகள் ஒன்றுமில்லை.'வந்தது கொண்டு வாராதது உணர்தல்' , என்பது கொண்டு அவையிவற்றை ஆய்வாளர் முடிபு காண்பாராக.
இளம்பூரணர் உரைச்சிறப்பு
எது எவ்வகையாயினும் தொல்காப்பியம் முழுதிற்கும் முற்ற முடியக் கிடைத்திருக்கும் உரை இவ்விளம்பூரணம் ஒன்றேயாகும்.இவ்வுரை ஏனைய உரைகளினும் கருத்து விளக்கமும் தெளிவும் மிக்கது. இதன் சிறப்பை நச்சினார்க்கினியத்தையும் பேராசிரியத்தையும் ஒருங்கே ஒப்ப வைத்துக் கொண்டு பயில்வார் தெற்றென உணர்வர். இவர் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் ஒண்மையுடையார்; விரிக்க வேண்டுமிடத்து மிகைபடக் கூறாது வேண்டியாங்கு விரித்தும், சுருக்க வேண்டுமிடத்து மிகச் சுருக்காது கருத்து விளக்கம் பெறச் சுருக்கியும் கூறும் மதிநலம் மிக்குடையார். எடுத்துக்காட்டாக அகத்திணையியலில் அகம் இன்னதென்பதை விளக்கிச் சொல்லுங்கால் ,'அகப்பொருளாவது போகநுகர்ச்சியாக லான் அதனான் ஆயபயன் தானே அறிதலின், அகம் என்றார்' என்று விளக்கியும், புறம் அன்னதென்பதை விளக்கிக் கூறுங்கால், புறப்பொருளாவது மறஞ்செய்தலும் அறஞ்செய்தலும் ஆகலான் , அவற்றான் ஆய பயன் பிறர்க்குப் புலனாதலின் புறம் என்றார் . அஃதற்றாக அறம் பொருள் இன்பம் வீடு என உலகத்தோரும் சமயத்தோரும் கூறுகின்ற பொருள் யாதனுள் அடங்குமெனின், அவையும் உரிப்பொருளினுள் அடங்கும்' என்று விளக்கி விரித்துரைத்தும் தெளித்தலால் நன்கு அறியலாம். இன்னும் இவர்தம் உரை ஆங்காங்கே பருந்தும் நிழலும்போல் நூற்பாக்களின் நுணுகிய கருத்துக்களை உண்மை பிறழாது விளக்கி யாவரும் எளிதிற் கற்றுணருமாறு திறம்பட வகுத்துரைத்திருப்பதைப் பயில்வார்கள் நன்கறியலாம். இத்தகைய உரைவளமிக்க இவ் விளம்பூரணத்தின் கருத்துக்களைத் தழுவியும் வேறுபட்டும் இயைந்துள்ள நச்சினார்க்கினியருரையையும், பேராசிரியருரையையும் ஆங்காங்கே வேண்டுமிடத்து அடிக்குறிப்பாக அமைத்துக் காட்டப்பெற்றுள்ளது. அதனால் இவ்வுரை நயத்தோடு அவ்வுரையையும் ஒப்ப நோக்கி உண்மை தெளிய விரும்பும் ஆராய்ச்சியாளருக்கும் கற்றுத்துறைபோக விரும்பும் மாணவர்கட்கும் பெரும்பயனாக அமையும்.
இளம்பூரணார் வாழ்க்கை வரலாறு
இவ்வளவு அரிய கருத்து நயமிக்க பேருரை வகுத்துத் தந்த உரையாசிரியர் வாழ்க்கை வரலாறு பற்றி அறிய விரும்புவது யாவர்க்கும் இயல்பேயாகும்.ஆனால், அவர்பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளைத் தெற்றென அறிதற்குரிய அகச் சான்றுகள் இல்லை, ஆயினும் ஆங்காங்கே கண்டு கேட்ட வுரை கொண்டே அறிய வேண்டுவதாகவுளது. அவற்றுள் ஒன்றிரண்டு சான்றுக்காகக் காட்டியுரைப்பாம்.
இவர் வாழ்ந்த இடம் பாண்டி நாட்டில் கீழ்க் கடற்கரைப் பகுதியிலுள்ள செல்லூரென்றும் மறையில் வல்ல இளம்போதி என்பாரின் புதல்வரென்றும் , அந்தணர் வகுப்பினரென்றும் கூறுவர்.
இவர் வரலாற்றைக் குறித்து அண்ணாமலைப் பல்கலைக் கழகத்து ஆசிரியரான திரு. டி. வி. பண்டாரத்தாரவர்கள் செந்தமிழ்த் தொகுதி 42 ல் பகுதி 10 முதல் 12 வரையுள்ள இதழ்களில் ஒரு கட்டுரை வரைந்துள்ளனர். அதன் ஒரு பகுதி வருமாறு:
-------------------------
-------------------------
-------------------------
பாயிருங் காப்பியச் சுவைபல உணர்ந்தகம்
தோய மடுத்தோர் தொல்காப் பியனுரை
முத்திற ஒத்தினுக் கொத்தசீர்க் காண்டிகை
சொன்னிலை மேற்கொள் தொகுபொருள் துணிபுடன்
இயல்நூற் பாமுடி பிணைத்தடி காட்டித்
தலைகடை கூட்டித் தந்தனன் பண்டே
கொங்குவேள் மாக்கதை குறிப்புரை கண்டோன்
தன்னறி அளவையில் நல்லுரை தேவர்
பன்மணிக் குறட்பான் மதிப்பிடப் பொறித்தோன்
குண கடற் செல்லூர் மணக்குடி புரியான்
தண்முலை முகையென வெண்ணூல் சூடி
அந்தணன் துறவோன் அருமறை உணர்ந்த
இளம்போதி பயந்த புனிதன்
இளம்பூ ரணனுரை இனிதுவாழ் கீங்கென்'
என்னும் பாட்டினால் இவர் கொங்குவேள் மாக்கதையாகிய உதயணன் காதைக்குக் குறிப்புரை யெழுதியுள்ளன ரென்றும், திருக்குறளுக்கும் உரையெழுதின ரென்றும் தெரிகின்றது. ஆனால், திருக்குறளுக்கு உரை வகுத்தவர்களைக் குறிக்கும்.
'தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்
பரிமேல் அழகர் பருதி- திருமலையர்
மல்லர் பரிப்பெருமாள் காளிங்கர் வள்ளுவர்நூற்
கெல்லையுரை செய்தார் இவர்'
என்னும் பழைய வெண்பாவொன்றினால் பதின்மர் திருக்குறளுக்கு உரை கண்டவர்கள் என்று கூறப்பெற்றுள்ளது. ஆனால், இதில் இளம்பூரணர் ஒருவராகப் பெயர் குறிக்கப் பெறவில்லை. ஆயினும், செல்லூர் மணக்குடி புரியான்' என மேற்காட்டிய பாட்டின்கண் வரும் மணக்குடி என்பதே மருவு மொழியாகி மணக்குடவர் ஆனதென்று கொள்ளற்கு இடனுண்டு. குடி, குடம் ஆக மாறிவருதல் வழக்கில் இயல்பாக இருக்கின்றது. குடிக்கூலி குடக்கூலியாகத் திரிந்ததுபோல, மணக்குடியார் மணக்குடவர் ஆயினார் போலும்! இவற்றைத் தவிர வேறு இவரைப்பற்றிய வாழ்க்கைக் குறிப்புக்கள் நன்கு தெற்றென அறியக் கிட்டவில்லை. வழங்கும் கதைகளும் உண்மையென்று கோடற்கமையாது.
இளம்பூரணர் வரலாற்றில் சில வேறுபாடுகள்
'அந்தணன் துறவோன்......... இளம்போதி பயந்த புனிதன் இளம்பூரணன்' என்னும் பாடலடிகளினால் இவர் மறையவர் குலத்தாரென்றும், இளம்போதி மகனாரென்றும் குறிப்பிடப்படுகின்றது. நம் தமிழ்நாட்டில் வேறுபட்ட இருவேறு கருத்துக்கள் இடைக்காலத்தில் தோன்றி வளரலாயின. ஒன்று ஒருவன் அறிஞனாக இருந்தால் அவன் மறையவர் குலத்தானாகவே இருத்தல் கூடுமென்பது; மற்றொன்று தமிழில் நூல் செய்தால் அது, வடமொழியிலிருந்து மொழிபெயர்த்ததாகக் கூறவேண்டுமென்பது. இம்மருட்சிக் கொள்கையைக் கடைப்பிடியாகக் கொண்டே வள்ளுவர், ஒளவையார் போன்ற பெரியார் வரலாறெல்லாம் புனைந்துரைக்கப்பட்டன. அவற்றுக்கு என்ன உண்மைச் சான்றுண்டு? இதைப் போன்றே இவர் வரலாறு பற்றிய கதைகளும் புனைந்துரையென்றே கோடல் பொருந்துவதாகும். தொல்காப்பியருக்குத் திரணதூமாக்கினி யென்று புனைபெயர் சூட்டி ஆரியராக்கிய இக் கட்டுக் கதையாளர் வேறென்னதான் கூறார்? எனவே, இப் புனைந்துரைகளை உண்மையென நம்பாது தமிழுக்கு உரையெழுதி வளம்படுத்திய பெரியார்களுள் இவரும் ஒருவர் எனக் கொள்ளுதலே தக்கது.
செல்லூர்க்கிழார்,
செ.ரெ. இராமசாமி பிள்ளை,
கழகப்புலவர்.”
இளம்பூரணர் பற்றி அண்மைக்காலத்தில் எழுந்த இந்தப் போலிப் பாயிரம் பற்றி விரிவாக மு. வை. அரவிந்தன், உரையாசிரியர்கள் (பக். 191-193) தரும் ஆய்வுச் செய்தி தருகிறேன்:
போலிப் பாயிரம்
இளம்பூரணரைப் பற்றி, சிறப்புப் பாயிரச் செய்யுள் ஒன்று, செந்தமிழ் என்னும் இதழில் (தொகுதி 20, பக்கம் 503) வெளிவந்துள்ளது:
தண்கடல் அசைவளி உறுப்பத் திரைபிதிர்ந்
தூங்கலின் பொருட்குவைப் புணரியில் ஐயுற
அலைவமன் மயரினை அகற்றல் எழுத்தால்
திணைதுறை உட்கோள் இயற்றினன், அறிய
கவர்பொருள் மாக்கள் மயக்கினுக்கு இரங்கிப்
பாயிருங் காப்பியச் சுவைபல உணர்ந்தகம்
தோய மடுத்தோர் தொல்காப்பியன் உரை
முத்திற ஓத்தினுக்கு ஒத்தசீர்க் காண்டிகை
சொல்நிலை மேற்கோள் தொகுபொருள் துணிவுடன்
இயல்நூற் பாமுடிபு இணைத்து அடிகாட்டி,
தலைகடை கூட்டித் தந்தனன்; பண்டே
கொங்குவேள் மாக்கதை குறிப்புரை கண்டோன்;
தன்னறிவு அளவையில் நல்லுரை தேவர்
பன்மணிக் குறட்பால் மதிப்பிடப் பொறித்தோன்:
குணகடல் செல்லூர் மணக்குடி புரியான்
தண்முலை முகைஎன வெண்ணூல் சூடி
அந்தணன் அறவோன் அருமறை உணர்ந்த
இளம்போதி பயந்த புனிதன்
இளம்பூரணன் உரை இனிது வாழ்க ஈங்கென்
இப் பாயிரத்திலிருந்து இளம்பூரணர் வரலாற்றினைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்; இளம்பூரணர் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை யோரமாய் உள்ள செல்லூரில் பிறந்தவர்; மணக்குடி புரியான் என்பது அவரது குடிப்பெயர்; அவர் தந்தையார் அந்தணர், அறவோர், அருமறை உணர்ந்தவர், இளம்போதி என்பவர். இளம் பூரணர் தொல்காப்பியம், கொங்குவேள் மாக்கதை, திருக்குறள் ஆகிய மூன்று நூல்களுக்கும் உரை இயற்றியவர்.
மேலே காட்டப்பட்ட செய்யுள், பிற்காலத்தில் ஒருவர் (சொர்ணம் பிள்ளை)[*] எழுதிவிட்ட போலிச் செய்யுள் என்பதைத் தமிழறிஞர் மு. அருணாசலம் (12-ஆம் நூற். இலக்கிய வரலாறு) தெளிவுப்படுத்தியுள்ளார்.
இந்தச் செய்யுள் கூறும் செய்திகள் பொய்யானவை என்பதைப் பின்வரும் சான்றுகளால் உணரலாம்:
1. தொல்காப்பியம் இளம்பூரணர் உரையைத் தேடிப் பதிப்பித்தவர் எவருக்கும் இந்தச் செய்யுள் கிடைக்கவில்லை. வேறு ஏட்டுச் சுவடிகளிலும் இது இடம் பெறவில்லை.
2. திருக்குறள் உரையாசிரியர்களைக் கூறும் பழைய வெண்பா இளம்பூரணரைக் குறிப்பிடவில்லை.
3. பெருங்கதையைப் பதிப்பித்த டாக்டர் உ.வே.சா. அதற்குக் குறிப்புரை இருந்தமை பற்றிக் குறிப்பிடவில்லை.
இந்தப் போலிச் செய்யுள், ஆராய்ச்சி அறிஞர் டி.வி. சதாசிவப் பண்டாரத்தாரையும் மயக்கி விட்டது. அவர் இளம்பூரணரை மணக்குடவர் என்று முடிவு செய்ய முயன்று ஒரு கட்டுரை எழுதியுள்ளார். (இலக்கிய ஆராய்ச்சிகளும் கல்வெட்டுகளும் (1961) பக். 58-61).
போலிப் புலவரின் பொய்ம்மை எவ்வளவு குழப்பத்தை உண்டாக்கிவிட்டது!
[*] இவர் இன்னிலை என்று பெயரால் ஒரு போலி நூலையும் செங்கோன்
தரைச்செவு என்ற பொய்ந்நூலையும் இயற்றி ஆராய்ச்சி உலகில் குழப்பம்
உண்டாக்கியவர்.
Posted by நா. கணேசன் at 0 comments
கோவையில் உத்தமம்-தமிழ்மணம்-விக்கிபீடியா அறிமுகவிழா, நவம்பர் 7 (குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில்)
நவம்பர் 7 – கோவையில் தமிழ்க் கணிமை ஆர்வலர் சந்திப்பு
கோவையில், நவம்பர் 7, 2009 சனிக்கிழமை அன்று தமிழ்க் கணிமை ஆர்வலர் சந்திப்பு நடைபெறுகிறது.
குமரகுரு பொறியியல் கல்லூரி கணினி அறிவியல் துறையைச் சேர்ந்த முனைவர். ஆ. முத்துக்குமார் இந்த ஒன்று கூடலை ஏற்பாடு செய்திருக்கிறார்.
உத்தமம் அமைப்பின் செயலாளார் திரு. வா. மு. சே. கவியரசன் அவர்கள் தலைமையேற்று உத்தமத்தின் செயல்பாடுகளை விளக்குவார். அடுத்து விக்கிப்பீடியா, தமிழ் இணையம், வலைப்பதிவுகள், தமிழ்மணம் முதலிய திரட்டிகள் பற்றி நண்பர்கள் விளக்குவோம். மற்ற கல்லூரிகளில் இருந்தும் தமிழார்வல மாணவர்கள், ஆசிரியர்கள் வருகிறார்கள். மாணவர்கள் என்னென்ன தமிழ்க் கணிமைத் திட்டங்களில் ஈடுபடலாம், அவற்றுக்கு யார் உதவியைப் பெறலாம் என்பது குறித்து கலந்துரையாடுவது கூட்டத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும்.
அனைத்து விக்கிப்பீடியா, வலைப்பதிவு, தமிழ்க் கணிமை ஆர்வலர்களையும் இந்த ஒன்று கூடலுக்கு வரவேற்கிறோம். நன்றி.
இடம்: குமரகுரு பொறியியல் கல்லூரி, கோவை.
D-தொகுதி கருத்தரங்க அறை (முதல் தளம். உணவகத்துக்கு எதிர்ப்புறம்.)
நேரம்: நவம்பர் 7, 2009 சனிக்கிழமை. பகல் 2.00 முதல் 4.00 மணி வரை.
வழி: சரவணம்பட்டி, அன்னூர் செல்லும் பேருந்துகள். பேருந்து எண் 45.
பேருந்து நிறுத்தத்தில் இருந்து தானி மூலம் கல்லூரிக்கு வர 30 ரூபாய்.
உதவிக்கு: பேரா. ஆ. முத்துக்குமார் 99444 36360
There is a Tamil IT Workshop and an Introductory Session on Tamil Wiki, Blogs, TamilManam & INFITT (http://infitt.org)
INFITT Executive Director, Mr. KaviArasan (Ohio, USA) is participating along with A. Ravisankar, a Tamil Wikipedian and others,
http://bit.ly/tamil-computing-meet
The meeting is at Kumaraguru College of Technology, Coimbatore
http://en.wikipedia.org/wiki/Kumaraguru_College_of_Technology
on November 7, 2009, 2-4 PM, D-Block Conference Room.
Our sincere thanks to Prof. A. Muthukumar for arranging the INFITT Tamil IT event.
Please call your friends and ask them to attend the KCT event if they can.
Thanks,
N. Ganesan
Posted by நா. கணேசன் at 3 comments
2009-ன் தமிழ் இணைய மாநாட்டுக் கட்டுரைகள் - இலவசமாக தரவிறக்கம் செய்யலாம்!
கொலோன் (ஜெர்மனி) மாநகர் தமிழ் இணைய மாநாட்டில் படிக்கப்பெற்ற
ஆய்வுக் கட்டுரைகள் (6.1 Mb). இலவசமாகப் தரவிறக்கம் செய்யலாம்:
http://www.infitt.org/ti2009/TIC2009%20Conference%20Book.pdf
இண்பிட்டின் மின்மஞ்சரி 2009 - சிறப்பிதழ் (1.3 Mb):
http://www.infitt.org/ti2009/TIC2009%20MinManjari%20Special%20Issue.pdf
இண்பிட் (http://infitt.org) உறுப்பினர் ஆகி உங்கள் ஆதரவைத் தெரிவிக்க வேண்டுகிறோம்!
நா. கணேசன்
[Forwarded Message]:
Dear Friends,
A special conference edition of MinManjari magazine was given with the conference CDs in TIC 2009. For benefit of non-attendees please find a copy here:
http://www.infitt.org/ti2009/TIC2009%20Conference%20Book.pdf
INFITT whole-heartedly thanks editor Dr.Na.Kannan (South Korea) and his team.
INFITT TIC2009 Conference Book with all accepted papers (PDF) is here:
http://www.infitt.org/ti2009/TIC2009%20MinManjari%20Special%20Issue.pdf
INFITT whole-heartedly thanks CPC Chair Dr.Vasu Renganathan (USA) and
his team; Dr.Badri Seshadri and his team for sponsoring/publishing the book.
Regards,
Venkatarangan
Vice-Chair, INFITT
Posted by நா. கணேசன் at 1 comments
Cologne-TIC2009-Communiqué (கொலோன் 2009 இணையக் கருத்தரங்க அறிக்கை)
தமிழ் இணைய மாநாடு 2009, கொலோன் பல்கலைக்கழகம், செர்மனி
செர்மனியில் வெற்றிகரமாக நடைபெற்ற 2009 தமிழ் இணைய மாநாட்டைத் தொடர்ந்து உத்தமத்தின் உறுப்பினர் குழு பின்வரும் பரிந்துரைகளை முன்வைக்கிறது.
1. 2010 தமிழ் இணைய மாநாட்டைத் தமிழ்நாட்டில் நடத்துவதற்குப் பரிந்துரைக்கிறது. மாநாட்டை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு மற்றும் கல்விக் கழகங்கள், தனியார் மையங்கள், தங்களுடைய ஆர்வத்தை உத்தமத்திடம் தெரிவிக்க அன்புடன் வேண்டுகிறோம்.
2. ஒருங்குறி முறை தற்பொழுது பெரும்பாலான வணிக நிரலிகள், செல்பேசி நிரலிகள், மின்னியல் ஊடகங்களில் பயன் படுத்தப் படுவதனால், உத்தமம் ஒருங்குறி முறைத் தரத்தையே தரமாக, அறிவிக்குமாறு தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியசு அரசுகளைக் கேட்டுக் கொள்கிறது.
3. தமிழில் பன்னாட்டுத் தரத்திற்கேற்ற தகவல் தொழில் நுட்ப இதழ் இல்லாமையின் தேவையை உணர்ந்தும், தமிழ்த் தகவல் தொழில் நுட்ப அறிஞர்களின் வேண்டுகோளை ஏற்றும் உத்தமம் ஒரு தமிழ்த் தகவல் தொழில் நுட்ப இதழினைத் தொடங்க முன் வந்துள்ளது. இவ்விதழைப் பதிப்பிப்பதற்கும், அதை மேலும் முன் எடுத்துச் செல்வதற்கும் முதலீட்டை தந்துதவுமாறு தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா மற்றும் மொரிசியசு அரசாங்கங்களைக் கேட்டுக் கொள்கிறது.
4. உத்தமத்தின் செயலகம் 2004 வரை, சிங்கப்பூர் அரசாங்க உதவியுடன் சிங்கப்பூரில் செயல்பட்டு வந்தது. மூன்று வருட சிங்கப்பூர் அரசு உதவி முடிந்ததின் காரணமாக செயலக உதவியின்றி செயலகம் செயல்பட்டு வருகின்றது. உத்தமத்தின் உலகளாவிய பணிகளுக்கு ஏதுவாக இச்செயலக உதவியை தமிழ்நாட்டில் நிறுவுவதற்கு தமிழ்நாட்டு அரசிடம் உத்தமம் கேட்டுக் கொள்கிறது. இச் செயலகம் சிங்கப்பூரில் அமைந்திருந்த உத்தமமத்தின் செயலக அமைப்பினை ஒத்திருக்கும். இச் செயலகம் உத்தமத்தின் இயக்குநரின் கீழ் செயல்படும்.
5. தமிழ்த் தகவல் தொழில் நுட்ப முன்னோடிகளின் வணிக நோக்கமற்ற சேவையைக் கருத்தில் கொண்டு அவர்களைக் கெளரவிக்கும் வகையில் விருதுகள் வழங்குவது அவசியம் என மாநாட்டில் பங்கு பெற்ற அறிஞர்கள் உத்தமத்திற்குப் பரிந்துரைத்துள்ளனர். உத்தமம் தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா மற்றும் மொரிசியசு அரசாங்கங்களை இவ்விருதுகளை வழங்கத் தேவையான முதலீட்டினைத் தந்துதவுமாறு கேட்டுக் கொள்கிறது.
6. 2009 தமிழ் இணையப் பேராளர்கள் உத்தமத்திடம் கேட்டுக் கொண்டதிற்கு இணங்கத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற புதிய பணிக் குழுக்களை அமைக்க உத்தமம் பூர்வாங்கப் பணிகளை ஏற்றுக் கொண்டுள்ளது. எழுத்தாக்கக் (Transliteration) குழு, பன்னாட்டு இணைய முகவரிக் குழு, தமிழ் கற்றல், கற்பித்தல் தரக் குழு, தமிழ் உருபனியல் (Morphology) குழு ஆகிய நான்கு பணிக்குழுக்களை உருவாக்க/உயிர்ப்பிக்கப் பரிந்துரைக்கிறது. உலகமயமாக்க சிந்தனைகளின் தொடர்பாகவும், புதிய வழிச் சிந்தனைகளைத் தூண்டும் முகமாகவும் பணிக்குழுப் பரிந்துரைகளை உத்தமம் ஏற்று உருவாக்க/உயிர்ப்பிக்க முயற்சிகளை உத்தமம் மேற்கொண்டுள்ளது.
Tamil Internet Conference 2009 Communiqué
Cologne 25th October 2009: After a successful TIC 2009 conferences in Germany, Europe the INFITT General Body and TIC 2009 participants recommend the following proposals.
1. Realizing the need to conduct a Tamil IT conference in Tamil Nadu, INFITT resolves to request the Government of Tamil Nadu and other non-profit and educational /private institutes to approach INFITT, if they are interested in hosting TIC 2010 at Tamil Nadu.
2. Recognizing that Unicode is now de-facto standard used in most of the commercial products, mobile applications and in all web browsers, and after due deliberations with expert members of Unicode-Tamil who have participated in the development of Unicode standards, INFITT recommends to the Governments of Tamil Nadu, India, Sri Lanka, Singapore, Malaysia and Mauritius declare Unicode as current standard for Tamil encoding.
3. INFITT has identified the vacuum in documenting and dissemination of high level research in Tamil computing due to the non-availability of a Tamil IT Tech Journal in the Tamil IT Space. Based on an encouraging response from the technical community and the conference participants, INFITT is proposing to start a technical journal dedicated to Tamil IT. This will be a Peer-reviewed journal of highest technical excellence, modelled on IEEE Journals. The participants request Govt. of Tamil Nadu, Sri Lanka, Singapore, Malaysia and Mauritius to contribute to seed capital and to build a corpus to help promoting this cause.
4. The physical secretariat support provided to INFITT by the Singapore Government ended in 2004. INFITT realises the need for a physical office in Tamil Nadu, due to geographical proximity to most of the Tamil speaking population and hence request the Government of Tamil Nadu to provide secretarial assistance to INFITT. A dedicated office and secretarial support will help INFITT’s grass root growth around the world and Tamil Nadu in particular. Secretariat will follow the Singapore secretariat model and will function under the directions of Executive Director of INFITT.
5. Realizing the need for an award dedicated to Tamil IT and honour the pioneers in the Tamil IT field, INFITT and the participants request the Govt. of Tamil Nadu, Sri Lanka, Singapore, Malaysia and Mauritius to provide for a corpus to institute a World level award to be given annually to renowned Tamil IT leader.
6. Conference participants request INFITT to constitute and revitalize working groups to cater to ongoing work on Tamil IT research. The four working groups will be Transliteration Standards, IDN Working Group, Tamil Teaching Standardization & Morphological research. Recognizing the need for global exchange of ideas and connecting people working on the same area, INFITT accepts the proposal and will constitute the working groups.
Posted by நா. கணேசன் at 3 comments
தமிழ் இணையக் கருத்தரங்க ஒளிப்படங்கள் (2009, ஜெர்மனி)
ஜெர்மனி கொலோன் மாநகரில் உலகத்தின் மிகப் பழமையான பல்கலைக் கழகங்களில் ஒன்றான கொலோன் பல்கலையில் (தொடக்கம்: கி.பி. 1388) தமிழ் இணையக் கருத்தரங்கு 2009 இனிதே நிகழ்ந்து முடிவுற்றது. சுமார் 20+ நாடுகளில் இருந்து தமிழ் ஆய்வு/கணிமைப் பேராளர்கள் வந்திருந்தனர். சில புகைப்படங்கள் இணைத்துள்ளேன். விரிவாகப் பல படங்கள் இன்னும் சில நாள்களில்!
பேரா. மறைமலை இலக்குவனார், விருபா குமரேசு, ... சிலர் வர இயலவில்லை என்றறிந்தேன். மிக்க உற்சாகத்துடன் ஞானபாரதி சென்னையில் இருந்து பங்கேற்றார். இன்னும் பலர், .... வாழ்நாளில் மறக்க இயலா நேர்முகங்கள். வாசு ரெங்கநாதன் சொல்வதுபோல், ‘ஹார்ட் காப்பீஸ்’ இப்போதுதான். இணையவழி நட்பு 15-17 ஆண்டுகளாய் உள்ளோரைக் கூட இப்பொழுதே கண்டேன்: ஓர் உதாரணம்: முத்து, கவிஅரசன், வெங்கடரங்கன், சிங்கை கிருஷ்ணன், மணியம், இளந்தமிழ், சுந்தர், பன்னீர்செல்வம், ...
என் பழைய நண்பர்கள் - தமிழ்க் கணிமையிலும், தமிழ், இந்தாலஜி ஆய்வுலகிலும் - நேரில் பார்த்துப் பேச எனக்கமைந்த ஓர் அரிய வாய்ப்பு.
நா. கணேசன்
Posted by நா. கணேசன் at 5 comments
தமிழ் இணையக் கருத்தரங்கம், கொலோன் பல்கலை, ஜெர்மனி, அக்டோபர் 23 - 25, 2009
"கணிவழி காண்போம் தமிழ்"
அக்டோபர் 23-25, 2009
இந்தியயியல் மற்றும் தமிழ் ஆய்வு மையம்
கோலென் பல்கலைக்கழகம், ஜெர்மனி
அமரர் நா. கோவிந்தசாமி, சிங்கப்பூர்
Schedule of Talks at the Tamil Internet 2009 conference
http://www.infitt.org/ti2009/ti09_schedule.html
Tamil Internet 2009 - Conference Schedule
Conference Venue: "Hörsaalgebäude" of the University of Koeln
Universitätsstrasse 35, Albertus-Magnus-Platz 1, 50931 Köln, Germany
Friday, 23 October 2009
Time
Program
15.00 - 16.00
Inagural Ceremony
16.00 - 16.30
Coffee Break
16.30 - 18.00
Plenary Session
i)Mr. Muthu Nedumaran: Tamil on mobile devices : Challenges and Opportunities
ii) Dr. Thomas Malten: Online Tamil Dictionaries
iii)Prof. A.G. Ramakrishnan: மநுமொழி ஆய்வகம் : R & D work on Multifont OCR, SAPI Compatible TTS and Online Handwritten Word Recognition for Tamil.
Saturday, 24 October 2009
Time Program
09.00 - 10.30
Session A1: Computer Assisted Learning and Teaching of Tamil
i) Ms. Devaki Annusami and D. Mathialagan: E-learning to enahnce language Proficiency
ii)Ms. Kalaiselvi: இணைய வகுப்பறை:தொழில் நுட்பமும் கற்போர் உளவியலும்
iii)Ms. Kanmani Shanmugam: Learning Tamil the Fun way
09.00 - 10.30
Session B1: Tamil Localisation, Tamil Keyboard and Open Source Software
i) Mr. G. Balachandran: Tamil Encoding, Keyboard Layout and Collation Sequence Standard
for ICT Sri Lanka
ii) Mr. K. Sarveswaran: Tamil Localisation Process- A case study
iii) Mr. Sinnathurai Srivas: Inside Tamil Unicode
10.30 - 11.00
Coffee Break
Time
Program
11.00 - 12.30
Session B2: Tamil localization, Tamil keyboard, open-source software & mobile applications
i) Dr. Elanttamil: தமிழ் திறவூற்று மென்பொருள்கள்
ii) Mr. Sivarajah Anuraj: தமிழ் மென்பொருள்களும் மக்கள் பாவனையும்
iii) Gnana Bharathi, D (CLRI, Chennai, India)
அறிவியல் மற்றும் தற்காலத் தேவைகளுக்கேற்ற தமிழெழுத்துச் சீர்திருத்தமும் அவற்றைக் கணினி மற்றும் கைபேசி செயல்பாட்டிற்குப் பயன்படுத்தும் முறையும்
11.00 - 12.30
Session A2: Computer Assisted Teaching and Learning of Tamil
i) Mr. R. Natarajan: Preparing Pedagogy for e-learning courses: a pilot plan for Tamilnadu
ii) Dr. G. Singaravelu: Effectiveness of Multimedia Package in Learning Vocabulary in Tamil
iii) Dr. S.K. Panneerselvam : இணையம் வழி மொழிக் கற்றல் - கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள்
12.30 - 13.30
Lunch Break
Time
Program
13.30 - 15.00
Session B3: Tamil Portal: Blogger, Aggregator, Wikipedia etc.
i) Dr. N. Ganesan: Unicode Blog Aggregators and Linguistic Research
ii) Dr. E. Iniya Nehru: Automatic E-content Generation
iii) Mr. M. Mauran: Tamil Wikipedia
13.30 - 15.00
Session A3: Computer Assisted Teaching and Learning of Tamil
i) Dr.A.R. Sivakumaran: பேச்சுத் தமிழைக் கற்பித்தலில் கணினியின் பயன்பாடு
ii) Ms. Sivagouri Kaliamoorthy: Enhancing learning of Tamil Language in a one-to-one computing environment
iii) Ms. S. Swarnalatha : E_mt2 M-learning makes Tamil Learning Squared
15.00 - 15.30
Coffee Break
15.30 - 17.00
Session B4: Tamil Portal: Blogger, Aggregator, Wikipedia etc.
i) Mr. Diraviyam S. Maniam : IDNs (International Domain Names) and its progress in ICANN
ii) Prof. A. Muthukumar : Development of Social Networking website and Tamil e-learning
software using Unicode
iii) Mr. I. Thiruvalluvan: கணினியில் நேர் பெயர்ப்புச் சொற்கள்
15.30 - 17.00
Session A4: Computer Assisted Teaching and Learning of Tamil
i) Dr.R. Velmurugan: Development of e-content for learning Tamil phonetics
ii) Prof. Paul Dhanasekaran: The Use of Technology among Tamil Medium Students – Barriers and Solutions
iii) Dr.R. Subramani : The Use of Multi Media in Teaching Tamil through Internet (இணைய வழித் தமிழ்க் கற்பித்தலில் பல்ஊடகங்களின் பயன்பாடு)
17.00 - 18.00
INFITT Annual GB Meeting
Sunday, 25 October 2009
Time
Program
09.00 - 10.30
Session A5: Tamil Diaspora, Teaching Tamil as a Second Language and impact of Technology
i) Siva Pillai (Goldsmith College, University of London , UK)
Tamil Language Teaching in UK
ii) Paramasivam, Muthusamy (University of Malaysia, Malaysia)
Enhancing Students Creativity Through Multimedia in Malaysian Tamil Schools
iii) Seetha Lakshmi (National Institute of Education NIE, Singapore)
Use and Impact of Information Technology in Teacher Training in Singapore
09.00 - 10.30
Session B5: Online Databases
i) Thenmozhi Durairaj (SSN College, Chennai, India)
Tamil-English Cross Lingual Information Retrieval System for Agriculture
ii) Andavar, V.M.S (Pachaiyappa's College, Chennai, India)
Sangam Literature Teaching and Learning through Multimedia
iii) Chevillard, Jean-Luc (CNRS Paris, France)
Critical editions of Tamil works: exploratory survey and future perspectives
10.30 - 11.00
Coffee Break
Time
Program
11.00 - 12.30
Session A6: Tamil Diaspora, Teaching Tamil as a second-language and impact of Technology & Database of Tamil Inscriptions
i) Nakkeeran, P.R. (Tamil Virtual University, Chennai, India)
Tamil Virtual University - activities and challenges (India)
Enhancing the Process of Learning Tamil with Synchronized Media
ii) Murugaiyan, Appasamy (Ecole Pratique des Hautes Etudes, Paris, France)
Tamil Inscriptions and online search: Database Compilation, Grammatical analysis and Translation.
iii) Vasu Renganathan (University of Pennsylvania, Philadelphia, USA)
Enhancing the Process of Learning Tamil with Synchronized Media & Harold F. Schiffman: The English Dictionary of Tamil Verbs: What can we learn about structure of Tamil from Electronic Databases?
11.00 - 12.30
Session B6: Natural Language Processing: OCR, Information Retrieval, Artificial Intelligence and Machine Translation
i) Mala Nehru (T Mala) (Anna Univ, Chennai, India)
An Intelligent System for Pictures based on Tamil Sentences Generation
ii) M.B.A.Salai Aaviyamma, SRM University, Ramapuram, and Dr.K.Kathiravan, Easwari Enginnering Collge, Ramapuram
Problems related to English-Tamil Translation
iii) Ganesan, Marappa (Annamalai Univ, Annamalainagar, India)
Tamil Corpus Generation and Text Analysis & Unsupervised Approach to Tamil Morpheme Segmentation
12.30 - 13.30
Lunch Break
Time
Program
13.30 - 15.00
Session A7: Computational Linguistics
i) David Prabhakar, P (Madras Christian College, Chennai, India)
Computer Analysis of Tamil Verb Forms
ii) Rajendran, Sankaravelayudam (Tamil University, Tanjore, India)
Dravidian Wordnet
iii) BalaSundaraRaman L, Ishwar S, Bangalore, India
Context-free grammar for Ezutthadhigaaram of the Tolkāppiyam
13.30 - 15.00
Session B7: Online Databases
i) Subashini Tremmel (Hewlett-Packard, Boeblingen, Germany)
மின்பதிப்பின் ஒருங்கிணைப்பு - ஓலைச்சுவடிகளின் பேரட்டவணை, பல்லூடக தகவல் தரவுக் களஞ்சிய உருவாக்கல்
ii) Anto Peter Ramesh (Softview Computers, Chennai, India)
கலைச் சொற்களை வளப்படுத்துங்கள்
iii) Kaliannan Umaraj (Central Institute of Tamil, Chennai , India)
சங்க இலக்கியத்திற்கான மின் அகராதி தயாரித்தல்
15.00 - 15.30
Coffee Break
15.30 - 17.00
Session A8: Morphology and Tagger
i) Achutan Menon et al. (Leiden, Netherlands & Amrita Univ, Coimbatore, India)
Amrita Morph Analyzer and Generator for Tamil : a rule based approach
ii) Anand Kumar, M (Amrita Univ, Coimbatore, India)
A novel approach to Morphological Analysis of Tamil
iii) Dhanalakshmi, V (Amrita Univ, Coimbatore, India)
POS Tagger and chunker for Tamil Language
15.30 - 17.00
Session B8: Open source keyboard interface and Unicode font in Mac OS
i) A. G. Ramakrishnan: பன்மொழி வாயில் : An Open Source Multilingual Indic Keyboard Interface
ii) Muthu Nedumaran: Building Tamil Unicode Fonts for Mac OS X
iii) Kumaresan T (Viruba.com, Chennai, India)
தமிழில் தரவுதளங்கள் உருவாக்கலும் எதிர்கொள்ளும் இடர்களும்
17.00 - 18.00
Closing Session
Posted by நா. கணேசன் at 3 comments
அஞ்சலி: தருமபுரம் ப. சுவாமிநாதன் (29 மே 1923 - 15 அக். 2009)
ஓதுவார் சுவாமிகளின் “நிலையாப் பொருளை ...” திருப்புகழ்:
NILAYAAPPORULAE song from album KANDARALANGARAM & NAVARATNA THIRUPPUKAZH - SmasHits.com
நிலையாப் பொருளை யுடலாக் கருதி
நெடுநாட் பொழுது ...... மவமேபோய்
நிறைபோய்ச் செவிடு குருடாய்ப் பிணிகள்
நிறைவாய்ப் பொறிகள் ...... தடுமாறி
மலநீர்ச் சயன மிசையாப் பெருகி
மடிவேற் குரிய ...... நெறியாக
மறைபோற் றரிய வொளியாய்ப் பரவு
மலர்தாட் கமல ...... மருள்வாயே!
இரங்கல் கவிதை
சுண்டிப் பிடிக்கும் தருமபுரம்
சுவாமி நாதன் குரல்வழியே
கண்டுப் பண்ணில் தேவாரம்
காது நிறைய நாம்கேட்டோம்
மொண்டு வந்தே இறையுணர்வு
மூள வைத்தார் நெஞ்சத்தில்
எண்டி சையும் புகழ் சிறக்க
இவர்தம் நாமம் வாழியவே!
~ இலந்தை
நெஞ்சை நெகிழ்த்தும் செய்திஇது!
நீவி விட்டுத் தளர்த்தாமல்
பிஞ்சாய்ப் பறித்தே இந்த ‘யமன்’
பெருமை கொண்டான் படுபாவி!
கொஞ்சம் அழுதே மூச்சிழுத்தேன்;
குனிந்தேன்;நண்பர் மதித்-- ‘துணையும்”
வஞ்ச யமன் கொண்டானே!
‘வையக்’ காள மேகமெங்கே??
~ கவியோகி
மலரஞ்சலிகளுடன்,
நா. கணேசன்
அஞ்சலி: தருமபுரம் ப. சுவாமிநாதன்
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
தருமபுரம் ப. சுவாமிநாதன் காலமானார். 2040 கன்னி (புரட்டாதி) 28 பின்னிரவு 49 நாழிகை (15.10.2009, அதிகாலை 0200 மணி) அளவில் அவரது உயிர் பிரிந்தது.
நீண்ட நாள்களாகவே நோய்வாய்ப்பட்டிருந்தார். மருத்துவமனையில் சில காலம் இருந்தார். பின்னர் போரூர், குன்றத்தூரில் அவர் வாழ்ந்த இல்லத்துக்கே வந்தார். அவரின் துணைவியார் கூடவே இருந்தார். பொற்றாளம் துரை. ஆறுமுகம் அவர்கள் வழிகாட்டலில் அவரது அன்பர்கள் பலர் அவரது நலன் பேணி வந்தனர்.
யாழ்ப்பாணத்தில், 1960களில் சைவ பரிபாலன சபை ஆதரவில் ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் தங்கியிருந்து பண்ணிசை மாணவர் பலரை உருவாக்கினார். அக்காலத்திலிருந்து அவரை நான் அறிவேன்.
சென்னைக்கு வந்த பின்னரும் பேரா. அ.ச.ஞானசம்பந்தன் இல்லம், தமிழிசைச் சங்கம், சென்னையில் உள்ள திருக்கோயில்கள் என அவர் எங்கிருந்தாலும் சென்று சந்திப்பேன். அவர் இசையில் ஒன்றிவிடுவேன்.
1993இல் என் தந்தையார் சென்னையில் காலமான பொழுது என்னிடம் வந்து ஆறுதல் கூறி, நீத்தார் வழிபாடுகளில் பண்ணிசைத்தார்.
பண்ணிசை உலகில் நம் தலைமுறையில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர். திருமுறைகளைப் பொருள் விளங்குமாறு இசைத்தவர். பண்ணிசைக்குப் பல்கலைக்கழகமாகவே திகழ்ந்தவர்.
உலகெங்கும் இன்று பரந்து வாழும் தமிழர் ஒவ்வொருவரது இல்லத்திலும் அவரது குரல் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
பொற்றாளம் துரை. ஆறுமுகம் அவர்களது முயற்சியால், திருவான்மியூர், கனால் வீதியிலுள்ள வாணி பதிவகத்தாரின் விசயராகவன், தருமபுரம் ப. சுவாமிநாதன் அவர்களின் குரலிசையைப் பன்னிரு திருமுறையில் உள்ள 18,246 பாடல்களுள் 10,325 பாடல்களுக்குப் பதிவு செய்து விற்பனைக்குத் தருகிறார். இவற்றுள் 11ஆம் திருமுறையின் 393 பாடல்களைத் தருமபுரம் ஆதீனம் நடத்திவரும் www.thevaaram.org மின்னம்பல தளத்தில் சேர்க்கும் உரிமையை வாணி பதிவகத்தார் என் வேண்டுகோளை ஏற்றுத் தந்தனர்.
உலகம் முழுவதும் வாழும் தமிழர் துயருற்றுக் கதற, கண்ணீர் விட, தருமபுரம் ப. சுவாமிநாதன் அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து இறைவனடி சேர்ந்துள்ளார்கள்.
=============================
சென்னை, அக். 15: தமிழிசைத் தேவாரப் பேரறிஞரும், சைவ சித்தாந்த உலகின் இசைஞானி என்று போற்றப்படும் கலைமாமணி தருமபுரம் ப.சுவாமிநாதன் (86) வியாழக்கிழமை அதிகாலை 2 மணி அளவில் காலமானார். சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள குன்றத்தூர் தச்சர் தெருவில் வசித்து வந்த அவருக்கு 3 மாதங்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மனைவி சுலோச்சனா அம்மாள் உள்ளார்.வாழ்க்கை குறிப்பு: நாகப்பட்டினம் மாவட்டம், நன்னிலம் வட்டம், வீராக்கண் கிராமத்தில் 29-5-1923-ம் ஆண்டு, மு.பஞ்சநாத முதலியார் -பார்வதி அண்ணி அம்மாள் தம்பதிக்கு மூன்றாவது மகனாகப் பிறந்த ராஜகோபால் என்ற ப.சுவாமிநாதன், தனது 12-வது வயதில் தருமபுர ஆதீன மடத்தில் சேர்ந்தார். அங்கு 24-வது மகா சன்னிதானம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் தொண்டராகப் பணிபுரிந்துகொண்டே, தேவார பாடசாலையில் சேர்ந்து தேவாரம் பாடும் பயிற்சியை மேற்கொண்டார். ஆறு ஆண்டுகள் பயிற்சிக்குப் பின், முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று, தேவார இசைமணி பட்டம் பெற்றார். பின்னர் சிதம்பரம் அண்ணாமலை இசைக் கல்லூரியில் 4 ஆண்டுகள் பயின்று, முதல் மாணவராகத் தேறிய அவர், சங்கீத பூஷணம் பட்டம் பெற்றார். 1968-ல் தருமபுர ஆதீன தேவாரப் பாடசாலை ஆசிரியப் பணியில் இருந்து வெளியேறிய அவர், தமிழகமெங்கும் தேவாரப் பாடல்களைப் பாடும் திருமுறைப் பணிகளில் ஈடுபட்டார். இவர் முன்னாள் ஆளுநர் கே.கே.ஷாவிடம் கலைமாமணி விருதையும், ஜி.கே.மூப்பனாரிடம் தமிழிசைச் சங்கம் சார்பில் இசைப்பேரறிஞர் விருதையும் பெற்றுள்ளார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சார்பில் தமிழக அரசவைக் கலைஞராகத் தேர்வு செய்யப்பட்டு, அப்போது நிதி அமைச்சராக இருந்த இரா.நெடுஞ்செழியனால் சிறப்பிக்கப்பட்டார். குன்றத்தூரில் உள்ள சேக்கிழார் கோயிலில் மும்முறை குடமுழுக்கு நடத்திய பெருமையும் இவரையே சாரும். 100க்கும் மேற்பட்ட கேசட்டுகளில் இவர் பாடிய 11 திருமுறைகளும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் கட்டி இருக்கும் கோவில்களிலும், தமிழர்களின் இல்லங்களிலும் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
http://www.thehindu.com/thehindu/fr/2002/12/13/stories/2002121301420800.htm
Listening to a Thevaram or the devotional hymns sung at the specific Kaala, and Sandhi or Saayarakashai worship, be it at a Siva temple or that of the other Parivara Devatas, especially in the enchanting stillness in the interior of the south is a divine experience. Such is the glorious service of the Oduvar Murtis in the South-Indian temple tradition. The mere mention of the Tirumurai-rendering or Tamizhisai, will remind one of the veteran singer Dharmapuram P. Swaminathan, a devout soul dedicated to the saintly compositions.
Dharmapuram P. Swaminathan, was born in Thanjavur district in 1923. His early training in Thevara Isai began at the Dharmapuram Thevara Tamizhisai Palli, under Tirumurai Kalanidhi R. Velayudha Oduvar, for a period of five years. Swaminathan continued his training in Carnatic vocal further at the Annamalai University under the guidance of Chittoor Subramania Pillai and secured the Sangita Bhooshanam title from this august institution, with a First class. With Madurai Subramania Mudaliar, Swaminathan continued his lessons in music for some more years.
His musical career, which spans over nearly six decades, is full of devotional pursuits and propagation of Tevara Isai. His association with several temple renovation projects and his voluntary contribution through his music towards such noble endeavours form an endless list. He has been an A Grade artist of AIR since 1952. The number of discs to his credit is 12 discs and 700 audiocassettes.
Awards and Honours have been showered on him for his unique contribution to this sphere of devotional music. Isai Perarignar from Tamizhisai Sangam, Kalaimamani from the Tamil Nadu Government, State Artist, Tamilnadu Government, the President's Award, titles and honours from Dharmapuram, Kundrakkudi, Madurai, and Thanjai Adheenams. He has established a Charitable Trust in his name, at Kundrathur, Chennai.
Posted by நா. கணேசன் at 13 comments
பாரதமாதா வடிவ உருவாக்கமும், பாரதியாரும்
மகாகவி பாரதியார் நினைவுநாள் (11 செப். 2009) தினமணிக் கட்டுரையைப் பாரதியில் ஆழங்கால் பட்டவர்கள் கூடும் சந்தவசந்தம் குழுவுக்கு அனுப்பிவைத்தேன் [1]. கவிமாமணி இலந்தையார், ஹரிகிருஷ்ணன், ... உட்படப் பலர் பங்கேற்று இழை வளர்ந்தது. பாரதியார் புதுச்சேரி குயவன்பாளையத்தில் செய்த பதுமையை மண்டயம் சகோதர்களிடம் பெற்று இன்றும் பாதுகாத்து வரும் திரு. ந. பாலு ஒளிப்படம் அனுப்பி வைத்தார். அப்படத்தை ஆராய்ந்ததன் விளைவுதான் இக்கட்டுரை.
ரா. அ. பத்மநாபன், சித்திர பாரதி, 1957. இரண்டாம் பதிப்பு: 1982, பாரதி நூற்றாண்டு விழா வெளியீடு: பொள்ளாச்சி நா. மகாலிங்கம்
பாரதியார் செய்த பாரதமாதா பதுமை (ந. பாலுவிடம் உள்ளது)
பாரதிதாசன் பார்வையில் பாரதி, ச சு இளங்கோவன்
மேலே இருக்கும் 3 படங்களைப் பாருங்கள். காலில் விலங்கு பூட்டி, கையைக் கன்னத்தில் முட்டுக்கொடுத்து, கூந்தலை முடியாமல் அவிழ்ந்து அலப்புறும் நிலையில் மவுலி தாங்கிப் பாரதமாதா நின்றகோலத்தில் இருக்கிறார்.
பதுமையில் குஜராத் அருகே கூர்ந்து கவனித்தால் சிங்கம் இருக்கிறது. எனவே துர்க்கா பரமேசுவரியின் அவதாரமாகச் செய்துள்ளனர் எனப் புலப்படும். இன்றும் பரவலாக அவ்வாறே பாரதமாதா வட இந்திய பாரதமாதா கோவில்களில் வடிவம் பெறுகிறாள். உதாரணமாக, நாசிக் நகரருகே கர்கோடி (Gargoti) கனிம (minerals) ம்யூசியத்தில் உள்ள பளிங்குப் பாரதமாதா சிலையைச் சொல்லலாம். மாமல்லையில் சிங்கத்தின் மீதமர்ந்து போரிடும் கொற்றவை அற்புதமான கலை உன்னதம் நினைவுக்கு வரும்.
தொல்பழங்கால இந்தியாவில் கொற்றவை ...
சிந்து சமவெளியிலும் கொற்றவை (பிற்காலத் துர்க்கை) உண்டு. அங்கே வாகனம் புலிதான். சிந்து சமவெளிக்கு 2000 ஆண்டுக்குப் பின்னர் புலி சிங்கமாக மாறினாலும், கொற்றவைக்குப் புலிவாகனமும் இன்றும் பழைய கோவில்களிலும், கலைகளிலும் இருக்கிறது விந்தைதான்.
முதன்முதலாய் பாரதமாதா - வங்காளத்தில்
கிரணசந்திர பந்தோபாத்யாயா 1873-ல் எழுதிய நாடகத்தில் பாரதமாதா எல்லா உடைமைகளையும் இழந்த நிலையில் வர்ணிக்கப்படுகிறாள். பாரதமாதா முதன்முதலாக 1866-ல் பூதேவ முக்கோபாத்யாயாவின் 19-ஆம் புராணம் என்னும் கேலிநாடகத்தில் (satirical drama) அதிபாரதி என்று உருவம் பெறுகிறாள். அதில் ஆர்யசாமி என்பவரின் விதவையாகக் கோலம் கொண்டாள் (இந்திரா சௌதுரி, The Frail Hero and Virile History, ஆக்ஸ்போர்ட், 1998. பக். 99).
பின்னர் பிரசித்தமான பங்கிம் சந்திர சேட்டர்ஜியின் 'ஆனந்தமடம்’ (1882) நாவலில் மா காளியான பாரதமாதா வென்றிப்பாவை துருக்கையாக இறுதியில் உருப்பெறுகிறாள். இதில் இடம்பெறும் வந்தே மாதரம் தோத்திரம் துருக்கையைப் புகழ்வதாக தாகூர் எழுதியுள்ளார்.
In his letter to Subhash Chandra Bose (1937) Rabindranath Tagore wrote, "The core of Vande Mataram is a hymn to goddess Durga: this is so plain that there can be no debate about it. Of course Bankimchandra does show Durga to be inseparably united with Bengal in the end, but no Mussulman can be expected patriotically to worship the ten-handed deity as 'Swadesh' [the nation]. This year many of the special [Durga] Puja numbers of our magazines have quoted verses from Vande Mataram - proof that the editors take the song to be a hymn to Durga. The novel Anandamath is a work of literature, and so the song is appropriate in it. But Parliament is a place of union for all religious groups, and there the song cannot be appropriate. When Bengali Mussalmans show signs of stubborn fanaticism, we regard these as intolerable. When we too copy them and make unreasonable demands, it will be self-defeating." (From Letter #314, Selected Letters of Rabindranath Tagore, edited by K. Datta and A. Robinson, Cambridge University Press).
20-ஆம் நூற்றாண்டில் பாரதமாதா சித்திரங்கள் ....
அவனீந்திரநாத் தாகூர் 1905-ல் தீட்டிய பாரதிமாதா இந்திய நவீன ஓவியத்தின் தொடக்ககாலப் படைப்பு. சாத்வினியாகக் காட்டப்படும் சரசுவதியின் அருகே வெள்ளைக் கமலங்கள் உள்ளன. கைகளில் அக்க மாலை, பனைஓலைக் கிரந்தம், பருத்தித் துணி, நெல்லம்பயிர் காணலாம். இச் சின்னங்களை விவேகானந்தரின் சிஷ்யை நிவேதிதா சிட்சை-தீட்சை-அன்னம்-வஸ்திரம் என்று விளக்கியுள்ளார்:
”A picture which bids fair to prove the beginning of a new age in Indian art." Sister Nivedita (Margaret Noble, an American) says: “In this picture...we have a combination of perfect refinement with great creative imagination. Bharat Mata stands on the green earth. Behind her is the blue sky. Beneath the exquisite little feet is a curved line of four misty white lotuses. She has the four arms that always, to Indian thinking, indicate the divine power. Her sari is severe, even to Puritanism, in its enfolding lines. And behind the noble sincerity of eyes and brow we are awed by the presence of the broad white halo.
Shiksha-Diksha-Anna-Bastra, the four gifts of the motherland to her children, she offers in her four hands. What [Tagore] sees in Her is made clear to all of us. Spirit of the motherland, giver of all good, yet eternally virgin.... The misty lotuses and the white light set Her apart from the common world, as much as the four arms, and Her infinite love. And yet in every detail, of "Shankha" bracelet, and close veiling garment, of bare feet, and open, sincere expression, is she not after all, our very own, heart of our heart, at once mother and daughter of the Indian land, even as to the Rishis of old was Ushabala, in her Indian girlhood, daughter of the dawn.”
Interestingly, Vac (Saraswathi) and Durga are related from Vedic times:
Parpola, Asko, (2000), Vāc as a Goddess of Victory in the Veda and her relation to Durgā, Zinbun, Kyoto University, 34, 2, pp. 101-143. The pdf file can be downloaded at
http://repository.kulib.kyoto-u.ac.jp/dspace/handle/2433/48782
நேதாஜியை ஆசீர்வதிக்கும் பாரதமாதா
இந்திய சுதந்திரப் பொன்விழா ஆண்டில் எம். எஃப். ஹுசேன் வரைந்த பாரதாமாதா. இங்கும் பராசக்தி என்று காட்ட விநாயகன், முருகனின் மயில் உண்டு. நித்தியமானவள் என்று காட்ட இமையமும், சந்திர சூரியர்களும். அமுத கலசத்திலிருந்து அருள்பொழிகிறாள். கடலும், கப்பலும், தண்டி யாத்திரையில் காந்தி உப்பு சத்தியாக்கிரகமும்.
பாரதியின் பாரதமாதாவுக்கு மூலமான வர்ண அச்சுப்படங்கள்
1907 ஏப்ரல் மாதம் ஆனந்த குமாரசாமி கல்கத்தா மாடர்ன் ரிவியூ இதழில் பாரத் மாதா என்று சிறுகதை எழுதியுள்ளார் (பக். 369 - 371). அதில் அடிமை விலங்கை உடைப்பதைத் தீர்க்க தரிசன வரிகளுடன் சிறுகதையை முடிக்கிறார்: ”And this tale is yet unfinished; but the ending is not afar off, and may be foreseen." பின்னர், 1920-ல் பாரதியின் குருநாதர் அரவிந்த கோஷ் இந்திய விடுதலை பற்றிக் குறித்தார்:
”... the Bharat Mata that we ritually worshipped in the Congress was artificially constructed, she was the companion and favourite mistress of the British, not our mother .... The day we have that undivided vision of the image of the mother, the independence, unity and progress of India will be facilitated."
பாரதியின் பாரதாமாதாவை மீண்டும் ஒருமுறை பார்ப்போம். திரு. ந. பாலு தந்துள்ள பதுமைப் படத்தின் அருகே உள்ள குறிப்பு மிக முக்கியமானது: “Terracota figure of composite unit of India, ... in the year 1916, during their exile at Pondicherry.
The Bharatamata idol, discretely smuggled to Madras and taken in procession during anti-British movements. Lost the Ceylon part which was in the form of a Lotus bud at the feet, during an encounter with the British Police."
கல்கத்தா அச்சகங்கள் பஜார் ப்ரிண்ட்ஸ், காலண்டர்கள், துணிப்பொதிகளில் அச்சிட்டு சித்திரங்களை இந்தியா முழுக்கப் பரப்பினார்கள். குரோமோ-லித்தோகிராப் தொழில்நுட்பம் இந்தியாவில் 1870களில் அறிமுகம் ஆனது. அதில் பாரதமாதா உருவகப் படம் முதன்முதலாய் ஆனந்தமடம் நாவலில் இருந்து கலை, தேசிய இயக்க சின்னமாய் அச்சானது. இந்தியாவில் சினிமா தோன்றாத காலம் அது. இவை சுமார் 1905-1910 வாக்கில் கல்கத்தாவில் அச்சேறத் தொடங்கின. 1920 வாக்கில் அச்சான பாரத மாதாவும், 1940களில் ஆமதாபாத் மில்லில் பயன்படுத்திய பாரதாமாதா படம் காணலாம்.
பாரதமாதா (1920s)
1940களில் துணிப் பொதிகளில் ஒட்டிய ஆமதாபாத் நியூ டெக்ஸ்டைல் மில்ஸ் பாரதமாதா வர்ணப்படம். பாதத்தருகே சிலோன் தாமரை மொட்டாக உள்ளது அவதானிக்கலாம்.
பாரதியார் ‘சுதேசமித்திரன்’ இதழில் மொழிபெயர்ப்பாளராகச் சேர்ந்தார். அவ்விதழின் ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய அய்யரின் தொடர்பால் அவருக்கு விடுதலையுணர்வு ஏற்பட்டது. இதன் பின்னர் 1905 இல் காசியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு பாரதி சென்று வந்தார். வரும் வழியில் கல்கத்தாவில் விவேகானந்தரின் உதவியாளர் நிவேதிதா தேவியைச் சந்தித்து அவரிடம் உபதேசம் பெற்றார். பாரதியாரின் வங்காள விஜயம் அங்கே வெளிவந்த பத்திரிகைகளாலோ, கலர் பிரிண்ட்ஸ் மூலமாகவோ அவருக்கு பாரதமாதாவாகத் துர்க்கையை அறிமுகப்படுத்தி இருக்கவேண்டும். 1909ம் ஆண்டிலேயே ”அரிமிசையே ஊர்வாள் அவள்” என்று பாரதமாதாவை துர்க்கையாகப் பாரதி பாட இந்த வங்கவிஜயம் தூண்டுகோல்.
பாரதமாதா துர்க்கை என்று வங்காளத்தில் 1880-களில் ஆனந்தமடம் நாவல் வழியாகப் பரவல் ஆயிற்று. 1870களில் க்ரோம்லித்தோக்ராப் அறிமுகம் ஆன தொழில்நுட்பம் அதை மேலும் மக்களுக்கு எடுத்துச் சென்றது. பாரதியின் சிலையிலிருந்து 1920 பாரதமாதா (கல்கத்தா) அச்சானதாய் தெரியவில்லை. உ-ம்: அவள் கையில் வைத்துள்ள திரிசூலம் - இது துர்க்கைக்கு உரியது. வங்காள இலக்கியம், ஓவியர்கள் கொடுத்த வடிவம் இது. முதலில் திரிசூலமாக இருந்தது காவிவர்ணக் கொடிக்கும், பின்னர் காங்கிரஸ் (கதர் ராட்டை) கொடிக்கும், அதன் பின்னர் தேசியகொடிக்கும் மாறுகிறது. பாரதியின் சிலை துர்க்கை திரிசூலம் காவி வர்ணக் கொடியாக மாறும் கட்டம். அச்சு அசலாக பாரதியின் பாரதமாதாவும், க்ரோம்லித்தோக்ராப்பும் இருப்பதைப் பாருங்கள். சிலோன் தாமரை மொட்டாக இருக்கிறது அல்லவா? மண்பொம்மைகளில் அப்படி வைத்தால் அது சற்றே கவனம் குறைந்தாலும் உடைந்து பிய்ந்துவிடும் என்பது எதார்த்தம்.
இந்திய துணைக்கண்ட வரைபடத்துடன் பாரதமாதாவைப் பொருத்தி முதல்முதலாய் வரைந்த வங்காளக் கலைஞர் யார்? நந்தாலால் போஸ், ஜைமினி ராய், ... போன்ற புகழ்வாய்ந்த சைத்ரீகரா? அல்லது, பெயர் தெரியா பஜார் ஓவியரா? எந்த அச்சகத்தில் அந்த வர்ண அச்சுப்படம் ஆனது? இந்த ஆய்வுக் கேள்விகள் சுவையானவை. விடையைத் தேடிக் காண்போம்.
க்ரோம்லித்தோகிராப்களுடன், வங்காளத்தில் 1885 - 1910 காலகட்டத்தில் வெளிவந்த பத்திரிகைகள் (வங்காளி, ஆங்கிலம் இரண்டையும்) தேடவேண்டும். சித்திரம் அதில் இருக்கும் என்று நம்புகிறேன். பாரதியார் குயவர் ஒருவரிடம் மண்பதுமை செய்தது நிஜம். ஆனால் வடிவம் அவர் செய்ததாகத் தோன்றவில்லை.
பேத்ரிஸ் ஆர்ட்ஸ் காலேஜில் வாத்தியார். அவர் கல்கத்தா ஸ்கூல் ஆஃப் ஆர்ட் மாணவரா? அப்போது சித்திரம் கற்பிக்கும் கல்லூரிகள் இந்தியா முழுக்க நாலோ, அஞ்சோ தான். அதில் உள்ள மூத்த மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பரிமாற்றங்கள் நிறைய. பாரதியார் பேத்ரிஸிடம் பாரதிதாசனுடன் போனதும் பாரதி சொல்ல, பேத்ரிஸ் உடனே ஒரு வங்க லித்தோக்ராப்பை, அல்லது வங்காள பத்திரிகையைக் காட்டியிருக்கலாம். அதை மண்வனைஞரிடம் கொடுக்க அவர் பதுமை இயற்றியிருக்க வேண்டும்.
லித்தோகிராப் வடிவங்களும் பாரதி பதுமையும் ஒன்றே. இது எப்படி ஏற்படும்?
(அ) பாரதியார் வடிவம் வங்காளத்தில் பரவி ஏற்பட்டிருக்கவேண்டும்
அல்லது
(ஆ) பேத்ரிஸ் தான் பார்த்த லித்தோக்ராப் அன்றேல் வங்க பத்திரிகை சித்திரம் காட்ட அதைக் குயவரிடம் பாரதி கொடுத்துச் செய்திருக்கவேண்டும்.
எல்லாவற்றையும் வைத்து யோசித்துப் பார்க்கையில் எனக்கு (ஆ) சாத்தியம் அதிகம் என்று படுகிறது. அதாவது, பாரதி வங்க மூலத்தை கொடுத்து வனையச் சொல்லியுள்ளார் என்றே தோன்றுகிறது.
மேலும் ஆராய்வோம்.
நா. கணேசன்
References:
(a) Erwin Neumayer, Christine Schelberger
Bharat Mata: India's Freedom Movement in Popular Art, 2007
http://www.exoticindiaart.com/book/details/IDK130/
(b) Erwin Neumayer, Christine Schelberger
Popular Indian Art : Raja Ravi Varma and
the Printed Gods of India, OUP, 2003
http://www.thehindu.com/thehindu/mag/2003/08/17/stories/2003081700160200.htm
(c) Christopher Pinney,
Photos of the Gods: The Printed Image and
Political Struggle in India, 2004, London.
(d) Uberoi, Patricia. "From Goddess to Pin-Up:
Feminine Icons in Indian Art." Art Asia Pacific, 1997.
(e) Uberoi, Patricia, Feminine identity and national ethos in Indian
calendar art, Economic and Political Weekly, 1990.
(f) Slow dies the calendar art , The Hindu, 15 July 2005
http://www.hinduonnet.com/thehindu/fr/2005/07/15/stories/2005071501550300.htm
(g) Deepa S. Reddy
Religious identity and political destiny, 2006
(h) Sumathi Ramaswamy
Maps, Mother/Goddesses, and Martyrdom in Modern India
The Journal of Asian Studies (2008), 67:819-853.
Posted by நா. கணேசன் at 6 comments