தமிழ் இணைய மாநாடு 2009, கொலோன் பல்கலைக்கழகம், செர்மனி
செர்மனியில் வெற்றிகரமாக நடைபெற்ற 2009 தமிழ் இணைய மாநாட்டைத் தொடர்ந்து உத்தமத்தின் உறுப்பினர் குழு பின்வரும் பரிந்துரைகளை முன்வைக்கிறது.
1. 2010 தமிழ் இணைய மாநாட்டைத் தமிழ்நாட்டில் நடத்துவதற்குப் பரிந்துரைக்கிறது. மாநாட்டை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு மற்றும் கல்விக் கழகங்கள், தனியார் மையங்கள், தங்களுடைய ஆர்வத்தை உத்தமத்திடம் தெரிவிக்க அன்புடன் வேண்டுகிறோம்.
2. ஒருங்குறி முறை தற்பொழுது பெரும்பாலான வணிக நிரலிகள், செல்பேசி நிரலிகள், மின்னியல் ஊடகங்களில் பயன் படுத்தப் படுவதனால், உத்தமம் ஒருங்குறி முறைத் தரத்தையே தரமாக, அறிவிக்குமாறு தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியசு அரசுகளைக் கேட்டுக் கொள்கிறது.
3. தமிழில் பன்னாட்டுத் தரத்திற்கேற்ற தகவல் தொழில் நுட்ப இதழ் இல்லாமையின் தேவையை உணர்ந்தும், தமிழ்த் தகவல் தொழில் நுட்ப அறிஞர்களின் வேண்டுகோளை ஏற்றும் உத்தமம் ஒரு தமிழ்த் தகவல் தொழில் நுட்ப இதழினைத் தொடங்க முன் வந்துள்ளது. இவ்விதழைப் பதிப்பிப்பதற்கும், அதை மேலும் முன் எடுத்துச் செல்வதற்கும் முதலீட்டை தந்துதவுமாறு தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா மற்றும் மொரிசியசு அரசாங்கங்களைக் கேட்டுக் கொள்கிறது.
4. உத்தமத்தின் செயலகம் 2004 வரை, சிங்கப்பூர் அரசாங்க உதவியுடன் சிங்கப்பூரில் செயல்பட்டு வந்தது. மூன்று வருட சிங்கப்பூர் அரசு உதவி முடிந்ததின் காரணமாக செயலக உதவியின்றி செயலகம் செயல்பட்டு வருகின்றது. உத்தமத்தின் உலகளாவிய பணிகளுக்கு ஏதுவாக இச்செயலக உதவியை தமிழ்நாட்டில் நிறுவுவதற்கு தமிழ்நாட்டு அரசிடம் உத்தமம் கேட்டுக் கொள்கிறது. இச் செயலகம் சிங்கப்பூரில் அமைந்திருந்த உத்தமமத்தின் செயலக அமைப்பினை ஒத்திருக்கும். இச் செயலகம் உத்தமத்தின் இயக்குநரின் கீழ் செயல்படும்.
5. தமிழ்த் தகவல் தொழில் நுட்ப முன்னோடிகளின் வணிக நோக்கமற்ற சேவையைக் கருத்தில் கொண்டு அவர்களைக் கெளரவிக்கும் வகையில் விருதுகள் வழங்குவது அவசியம் என மாநாட்டில் பங்கு பெற்ற அறிஞர்கள் உத்தமத்திற்குப் பரிந்துரைத்துள்ளனர். உத்தமம் தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா மற்றும் மொரிசியசு அரசாங்கங்களை இவ்விருதுகளை வழங்கத் தேவையான முதலீட்டினைத் தந்துதவுமாறு கேட்டுக் கொள்கிறது.
6. 2009 தமிழ் இணையப் பேராளர்கள் உத்தமத்திடம் கேட்டுக் கொண்டதிற்கு இணங்கத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற புதிய பணிக் குழுக்களை அமைக்க உத்தமம் பூர்வாங்கப் பணிகளை ஏற்றுக் கொண்டுள்ளது. எழுத்தாக்கக் (Transliteration) குழு, பன்னாட்டு இணைய முகவரிக் குழு, தமிழ் கற்றல், கற்பித்தல் தரக் குழு, தமிழ் உருபனியல் (Morphology) குழு ஆகிய நான்கு பணிக்குழுக்களை உருவாக்க/உயிர்ப்பிக்கப் பரிந்துரைக்கிறது. உலகமயமாக்க சிந்தனைகளின் தொடர்பாகவும், புதிய வழிச் சிந்தனைகளைத் தூண்டும் முகமாகவும் பணிக்குழுப் பரிந்துரைகளை உத்தமம் ஏற்று உருவாக்க/உயிர்ப்பிக்க முயற்சிகளை உத்தமம் மேற்கொண்டுள்ளது.
Tamil Internet Conference 2009 Communiqué
Cologne 25th October 2009: After a successful TIC 2009 conferences in Germany, Europe the INFITT General Body and TIC 2009 participants recommend the following proposals.
1. Realizing the need to conduct a Tamil IT conference in Tamil Nadu, INFITT resolves to request the Government of Tamil Nadu and other non-profit and educational /private institutes to approach INFITT, if they are interested in hosting TIC 2010 at Tamil Nadu.
2. Recognizing that Unicode is now de-facto standard used in most of the commercial products, mobile applications and in all web browsers, and after due deliberations with expert members of Unicode-Tamil who have participated in the development of Unicode standards, INFITT recommends to the Governments of Tamil Nadu, India, Sri Lanka, Singapore, Malaysia and Mauritius declare Unicode as current standard for Tamil encoding.
3. INFITT has identified the vacuum in documenting and dissemination of high level research in Tamil computing due to the non-availability of a Tamil IT Tech Journal in the Tamil IT Space. Based on an encouraging response from the technical community and the conference participants, INFITT is proposing to start a technical journal dedicated to Tamil IT. This will be a Peer-reviewed journal of highest technical excellence, modelled on IEEE Journals. The participants request Govt. of Tamil Nadu, Sri Lanka, Singapore, Malaysia and Mauritius to contribute to seed capital and to build a corpus to help promoting this cause.
4. The physical secretariat support provided to INFITT by the Singapore Government ended in 2004. INFITT realises the need for a physical office in Tamil Nadu, due to geographical proximity to most of the Tamil speaking population and hence request the Government of Tamil Nadu to provide secretarial assistance to INFITT. A dedicated office and secretarial support will help INFITT’s grass root growth around the world and Tamil Nadu in particular. Secretariat will follow the Singapore secretariat model and will function under the directions of Executive Director of INFITT.
5. Realizing the need for an award dedicated to Tamil IT and honour the pioneers in the Tamil IT field, INFITT and the participants request the Govt. of Tamil Nadu, Sri Lanka, Singapore, Malaysia and Mauritius to provide for a corpus to institute a World level award to be given annually to renowned Tamil IT leader.
6. Conference participants request INFITT to constitute and revitalize working groups to cater to ongoing work on Tamil IT research. The four working groups will be Transliteration Standards, IDN Working Group, Tamil Teaching Standardization & Morphological research. Recognizing the need for global exchange of ideas and connecting people working on the same area, INFITT accepts the proposal and will constitute the working groups.
Cologne-TIC2009-Communiqué (கொலோன் 2009 இணையக் கருத்தரங்க அறிக்கை)
Subscribe to:
Post Comments (
Atom)
3 comments:
// தமிழில் பன்னாட்டுத் தரத்திற்கேற்ற தகவல் தொழில் நுட்ப இதழ் இல்லாமையின் தேவையை உணர்ந்தும், தமிழ்த் தகவல் தொழில் நுட்ப அறிஞர்களின் வேண்டுகோளை ஏற்றும் உத்தமம் ஒரு தமிழ்த் தகவல் தொழில் நுட்ப இதழினைத் தொடங்க முன் வந்துள்ளது. இவ்விதழைப் பதிப்பிப்பதற்கும், அதை மேலும் முன் எடுத்துச் செல்வதற்கும் முதலீட்டை தந்துதவுமாறு தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா மற்றும் மொரிசியசு அரசாங்கங்களைக் கேட்டுக் கொள்கிறது.//
மகிழ்ச்சி. விரைவில் கணிமொழியை பதிப்பில் கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறேன். அது போலவே ஊடகங்களை (புத்தகங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் மீடியா இத்யாதி) வெளியிடும் அமைப்பையும் ஏற்படுத்த இருக்கிறோம்.
இவை பதிப்புரிமம் அற்று கட்டற்று திகழும். உத்தமத்தின் இதழும் அவ்வண்ணமே திகழட்டும்.
தமிழை உலகளவில் முன்னெடுத்து செல்லும் முயற்சிகளுக்கு நன்றி.
எம் தமிழை போற்றி வளர்க்கும் எல்லா நல் உள்ளங்களுக்கும் நன்றி.
நீர் வாழ்க வளமுடன். டாக்டர். கணேசன் அய்யா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
போரில்லா நலுலகம், உயர் ஞான பேரு வாழ்வு என்ற முயற்சியில் திறம்பட செயல் படும் பொள்ளாச்சி ஆழியார் உலக சமாதான இயக்கத்திற்கு உங்களை போன்றோர்களின் தொடர்பு இருந்தால் உலகுக்கு நன்மை பயக்கும் என நினைக்கிறேன்.
நன்றி, வாழ்க வளமுடன்.
உத்தமம் தனது திட்டங்களை நிறைவேற்றி வெற்றி பெற வாழ்த்துகள்.
உங்கள் தமிழ்ச்சேவை வளரட்டும்.
நன்றியுடன்
நாஞ்சில் பீற்றர்
மெரிலாண்ட்
Post a Comment