ஜெர்மனி கொலோன் மாநகரில் உலகத்தின் மிகப் பழமையான பல்கலைக் கழகங்களில் ஒன்றான கொலோன் பல்கலையில் (தொடக்கம்: கி.பி. 1388) தமிழ் இணையக் கருத்தரங்கு 2009 இனிதே நிகழ்ந்து முடிவுற்றது. சுமார் 20+ நாடுகளில் இருந்து தமிழ் ஆய்வு/கணிமைப் பேராளர்கள் வந்திருந்தனர். சில புகைப்படங்கள் இணைத்துள்ளேன். விரிவாகப் பல படங்கள் இன்னும் சில நாள்களில்!
பேரா. மறைமலை இலக்குவனார், விருபா குமரேசு, ... சிலர் வர இயலவில்லை என்றறிந்தேன். மிக்க உற்சாகத்துடன் ஞானபாரதி சென்னையில் இருந்து பங்கேற்றார். இன்னும் பலர், .... வாழ்நாளில் மறக்க இயலா நேர்முகங்கள். வாசு ரெங்கநாதன் சொல்வதுபோல், ‘ஹார்ட் காப்பீஸ்’ இப்போதுதான். இணையவழி நட்பு 15-17 ஆண்டுகளாய் உள்ளோரைக் கூட இப்பொழுதே கண்டேன்: ஓர் உதாரணம்: முத்து, கவிஅரசன், வெங்கடரங்கன், சிங்கை கிருஷ்ணன், மணியம், இளந்தமிழ், சுந்தர், பன்னீர்செல்வம், ...
என் பழைய நண்பர்கள் - தமிழ்க் கணிமையிலும், தமிழ், இந்தாலஜி ஆய்வுலகிலும் - நேரில் பார்த்துப் பேச எனக்கமைந்த ஓர் அரிய வாய்ப்பு.
நா. கணேசன்
தமிழ் இணையக் கருத்தரங்க ஒளிப்படங்கள் (2009, ஜெர்மனி)
Subscribe to:
Post Comments (
Atom)
5 comments:
நன்றி, பங்கேற்க முடியாவிட்டாலும் உங்களின் தளம் அதனைப் போக்கியது.
great-nga..
அற்புதம் அய்யா கணேசன்!..உம் கட்டுரையையும் மற்றும் சில பேச்சுக்களையும் கேட்டேன் உங்கள் வலை மூலம். சுவாரஸியமாக இருந்தது. நன்றி. வாழ்க உம் பணி.
யோகியார்
பதிவில் படங்களைக் கண்டதும் தமிழ் இணைய மாநாடு சிறப்பாக நடைபெற்ற செய்தியும் மகிழ்ச்சி அளிக்கிறது. பங்கு கொண்ட அனைவருக்கும் பாராட்டும் நண்றியும் தெரிவிக்கின்றேன்.
அன்புடன்
ராதாகிருஷ்ணன்
ஹூசுடன்
அக்டோபர் 27, 2009
அற்புதமான தமிழை மேலும் மெருகூட்டும் வண்ணம் இணைய மாநாடு நடாத்துவது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
Post a Comment