சிந்துவெளி மகர எழுத்தில் ஸ்வஸ்திகமும், சங்க காலத் தொடர்ச்சியும்

சிந்துவெளி மகர எழுத்தில் ஸ்வஸ்திகமும், சங்க காலத் தொடர்ச்சியும்

Abstract: Zelia Nuttall, Harvard Museum, in her book, The Fundamental Principles of Old and New World Civilizations (1901), proposed the astronomical basis of the Swastika symbol formation. This has to do with the seasonal positions of the Ursa Major constellation with respect to the Pole Star. My lecture proposes its link with the Indus civilization and explains the non-natural, inverted-V shape of the tail of the Indus Makara (Crocodile) sign. The tail is shown in top, left or right positions of the Makara sign in the Indus script. I always wonder why the Makara sign's tail is a sharp-V shape, and the seasonal Ursa Major positions resolve the question. Also, there are Swastika-shaped cist burials in Tamil country during the megalithic. The Makara sign in the Post-Harappan period gets associated with Varuṇa in the Vedic texts after the language shift in North India, and in Tamil Tolkāppiyam.

This lecture in Connecticut is a pre-run for the 11th World Tamil Conference organized by IATR.

References:

(1)  IVC religion in Iron Age Tamil Nadu (see Makara sign in Figure 2):

https://archive.org/details/IVCReligionInIronAgeTamilNaduByNGanesan-2016-16thWSC/page/n1/mode/2up

(2) கவரி மா -  Dravidian word for Gauṛ bison and Tibetan yak

https://nganesan.blogspot.com/2017/11/kavarimaa-tirukkural-conference-2017.html

(3)  Divine Couple in Ancient Indian Astronomy from Binjor to Adichanallur: Makara Viṭaṅkar & Kolli/Koṟṟavai. https://nganesan.blogspot.com/2021/02/divine-couple-binjor-amulet-to.html

Three slides from the presentation: 


























Dr. Kathir Krishnamurti, author of Scientific Tamil books and expert in mobile and radar tech, Boston, MA wrote:
<<<
மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல் 'நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி, இந்த நாடே இருக்குது தம்பி' என்ற பாட்டைக் கேட்டுள்ளோம். அண்ணாவைப் பார்க்கும் வரம் கிடைக்காதவர்கள் நாம். அம்மா சொல்லுவார் அறிஞர் அண்ணா இறந்தபோது கூடிய கூட்டத்தை எண்ணி உலகம் வியந்ததென்று. 


பொறிஞர்கள் தமிழை ஆர்வத்துடன் கற்றும் பிறருக்குக் கற்றுக்கொடுத்தும் எழுதியும் பேசிவதைக் கேட்டுப் பார்ப்பதரிது. என் வட்டத்தில் பேரா. செல்வா மேடையில் அழகாகப் பேசுவார். அவர் எழுதுவதைப் படித்து இன்றும் நான் கற்று வருகின்றேன்.  நேரில் கண்டும் கேட்டும் இருக்கேன். அண்ணன் மணிவண்ணனின் தமிழும் அழகாக இருக்கும். காணொளியில் கண்டுள்ளேன்.  அண்ணாப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் குழந்தைசாமியும் நன்றாக மேடையில் பேசுவார் என்று கேள்வியுற்றேன்.


இந்த வரிசையில்
அன்பு அண்ணன் முனைவர் நாக கணேசன் தமிழ் மேடையை இலாவகமாகக் கையாண்டார்.  நானும் வாணியும் நேரில் சென்று கனிட்டிக்கெட்டு மிடில்டவுன் கோவிலரங்கத்தில் இலக்கியச் சொற்பொழிவைக் கண்டு களித்தோம்.  சிந்து சமவெளி முத்திரையைப் பற்றி தான் கண்டாய்ந்தவற்றை அழகுத் தமிழில் கதைபோல் சொல்லி அனைவரின் கவனத்தையும் ஒன்னரை மணி நேரம் ஈர்த்து வைத்திருந்தார். ஆய்வு ஏன்? எதற்கு? எப்படி? என்ற மூன்று கேள்விகளுக்கு பதிலுடன் திரும்பி வருமாறு செம்மையாக அமைந்திருந்தது. முத்திரையில் இருப்பது கங்கையில் இருந்த முதலை என்று அழகாக நிறுவியிருக்கார்.
நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் முன்னணி அறிஞராக விளங்கி தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்ப்பவர். கருத்தில் தெளிவும் ஆழ-அகல விட்டம் கண்டவர். கதைபோல் பேசப் பேசக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். ஒளிப்படங்களுடன் பேசியிருந்தது மிகவும் சிறப்பு. 


ஞாயிறு மதியம் நன்றாக கழிந்தது. கனெட்டிக்கட்டு தமிழ் சங்கம் ஏற்பாடு செய்திருந்தனர். இப்படியான சான்றுகளுடைய மகனை ஈன்ற தமிழ்த்தாய் பெருமையும் பேருவகையும் கொண்டிருப்பாள்;  ஐயமில்லாமல் மொழிவோம் என்று மொழிந்த விழாக் குழுவினருக்கும் ஏற்பாடு செய்திருந்த தோழர்கள் அனைவருக்கும் நன்றி!
6/12/2023
கதிரவன்
>>>

Thanks, Kathir. I will give a timeline of evolution of the village religion found all over Indian subcontinent, and the interactions between Great and Little Traditions of India (an anthropological term). Enjoy!

Divine Couple in Ancient Indian Astronomy from Binjor to Adichanallur:
Makara Viṭaṅkar & Kolli/Koṟṟavai 4700 years old amulet,
https://nganesan.blogspot.com/2021/02/divine-couple-binjor-amulet-to.html

கொற்றவையும், புலியும் - ஒரு 4500 ஆண்டு காலத் தொடர்பு:
http://nganesan.blogspot.com/2021/05/tiger-durga-indus-cilappatikaram.html

Gharial god and Tiger goddess in the Indus valley,
Some aspects of Bronze Age Indian Religion, my paper, 2007
https://archive.org/details/IVCReligionByNagaGanesan2007/page/n5/mode/2up

Paṭṭa-Mahiṣī: Proto-Koṟṟavai goddess in Indus civilization (Banawali and Mohenjadaro)
http://nganesan.blogspot.com/2021/01/banawali-mohenjadaro-proto-durga.html

Indus seal, M-312 - Proto-Koṟṟavai war with Mahiṣa
http://nganesan.blogspot.com/2021/01/m312-seal-is-not-jallikkattu.html

Kavari in Tirukkuṟaḷ and Sangam Texts: Dravidian word for Gauṛ bison and Tibetan yak  
http://nganesan.blogspot.com/2017/11/kavarimaa-tirukkural-conference-2017.html

----------------

BTW, Iravatham Mahadevan, during Jallikkattu protests, explained a buffalo seal
as Jallikkattu zebu bull! Any farmer can easily point out the difference between a zebu vs. buffalo.

see 15 years ago, my note on Iravatham's ID of buffalo as bull,
https://nganesan.blogspot.com/2008/01/eru-tazuval.html

ஜல்லிக்கட்டு மீதான நீதிமன்றத் தடையை அரசாங்கம் நீக்கியிருக்கிறது என்பது மகிழ்ச்சியான செய்தி. கலித்தொகை, சிலம்பு போன்ற இலக்கியங்களில் கண்ணனின் ஏறுதழுவல் நிகழ்ச்சி போற்றப்படுகிறது. இந்து நாளிதழில் களத்து மேட்டுப்பட்டியில் உள்ள 1500 ஆண்டு பழமையான ஏறுதழுவல் ஓவியம், 500 ஆண்டுகால ஜல்லிக்கட்டு பற்றிய கட்டுரையைப் படிக்கலாம்

ஐராவதம் மகாதேவன் அவர்கள் சிந்து முத்திரை (M-312) பற்றிச் சுட்டிக்காட்டிய சேதி இந்து நாளிதழில் வெளியாகி இருக்கிறது. ஹிந்து ஆசிரியருக்கு நான் ஒரு கடிதம் வாயிலாக ஆராய்ச்சிக் குறிப்பினை அனுப்பிவைத்தேன். அக் கடித நகலையும், ஜல்லிக்கட்டு, மஞ்சிவிரட்டு, ஏறுதழுவல் செய்திகளை மேலைநாடுகளின் ஆய்வாளர்கள் ஆய்ந்திருக்கும் கட்டுரைகளின் பட்டியலையும் இங்கே பதிகிறேன். கொற்றி/கொல்லி(Proto-Durga) போர்க்காட்சியைக் காட்டும் முக்கியமான முத்திரை இது.

நா. கணேசன்

2 comments:

இமயவரம்பன் said...

இன்னமொரு நூற்றாண்டு இரும்
(நேரிசை வெண்பா)

இன்றமிழ்ச்சீர் ஓங்க இருந்தமிழ்நூல் ஆய்வோங்க
மன்றமெலாம் வண்டமிழர் மாண்போங்க - வென்றிமிகு
தொன்னிலமாம் கொங்குவரும் சொற்றேர் கணேசரே
இன்னமொரு நூற்றாண் டிரும்.


குறிப்பு:
இன்றமிழ் = இனிய தமிழ்; வென்றி = வெற்றி; தொன்னிலம் = தொன்மை + நிலம் = பழம்பெருமை மிக்க நிலம்; கொங்குவரும் = கொங்கு நாட்டில் தோன்றியவரான; சொற்றேர் = சொல் + தேர் = சொல்லாற்றல் மிக்கவர்

இமயவரம்பன் said...

தமிழ்க்கடல் கணேசனார்
(பாவகை : எழுசீர் சந்தக் கலிவிருத்தம்;
தாளநடை: தான தான தான தான தான தான தானன;
பாரதியின் 'அச்சமில்லை அச்சமில்லை' பாட்டின் மெட்டு)

சிந்து வான்வி ளங்கு மீன்சி றப்பை நாமு ணர்ந்திடச்
சிந்தை மேவு மன்பி னாலொர் தெள்ளு ரைவ ழங்கினார்
நந்த லற்று யர்ந்த ஞானி ஞால மேத்து நாவலர்
செந்த மிழ்க்க டற்க ணேசர் சீரி லங்க வாழ்கவே.

பதம் பிரித்து:
சிந்து வான் விளங்கு மீன் சிறப்பை நாம் உணர்ந்திட
சிந்தை மேவும் அன்பினால் ஓர் தெள் உரை வழங்கினார்
நந்தல் அற்று உயர்ந்த ஞானி ஞாலம் ஏத்தும் நாவலர்
செந்தமிழ்க் கடல் கணேசர் சீர் இலங்க வாழ்கவே!

குறிப்பு:
சிந்து வான் விளங்கு மீன் = மகரமீன் (துருவ நட்சத்திரம்);
சிந்தை மேவும் = மனத்தில் நிறைந்த;
தெள்ளுரை = தெளிவான உரை;
நந்தல் அற்று உயர்ந்த ஞானி = அழிவற்ற உயர்ந்த ஞானத்தை உடையவர்;
ஞாலம் = உலகம்; ஏத்தும் = புகழும்; நாவலர் = சொல்லாற்றல் மிக்கவர்; இலங்க = விளங்க