தமிழில் கடவுள் வணக்கப் பாடல்கள் இலட்சக்கணக்கில்
உள்ளன. தமிழணங்கைக் கொற்றவை, கலைமகள், அலைமகள் என்னும் முத்தெய்வங்களாக வணங்கும் மரபை
வில்லிபாரதம் தொடங்கி வைக்கிறது. கொங்கர்கோன் வரபதி ஆட்கொண்டான் ஆதரித்த நான்காம் தமிழ்ச்சங்கத்தில்இம்மரபு தோன்றுகிறது. பிறகு வீரசைவர் ஆகிய கருணைப்பிரகாச சுவாமிகள் தமிழ்த்தெய்வ வணக்கத்தைக்
காளத்திப் புராணத்தில் பாடியுள்ளார்.
சீகாளத்திப்
புராணம் - தமிழ்த் தெய்வ வணக்கம்
----------------------------------------------------------------------------------
மறைமுதற் கிளந்தவாயான்
மதிமுகிழ் முடித்தவேணி
யிறைவர்தம் பெயரைநாட்டி யிலக்கணஞ் செய்யப்பெற்றே
யறைகடல் வரைப்பிற்பாடை யனைத்தும்வென் றாரியத்தோ
டுறழ்தரு தமிழ்த்தெய்வத்தை யுண்ணினைந் தேத்தல்செய்வாம்.
~ துறைமங்கலம் கருணைப்பிரகாசர்
சென்னைக் கம்பன் கழகத்தில், பேரா. பர்வீன் சுல்தானா தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின் பொருளை விவரிக்கிறார். காணொளியில் கேட்கலாம்.
கம்பன் கழகம் சமைத்த தமிழ்த்தாய் திருவுருவம்:
தமிழ்த்தாய் தாமரை மலர் மீது அமர்ந்து நான்கு கைகளில் முறையே ஜபமாலை, ஓலைச்சுவடி, தமிழ்ச்சுடர் மற்றும் கருங்கோட்டு யாழ் ஏந்திக் காட்சித் தருவதாக வடித்திருக்கிறார்கள். செங்கோடு நேரான வீணைத்தண்டு. கம்பன் அடிப்பொடி சா. கணேசன் காரைக்குடியில் கம்பன் கழகம் தொடங்கித் தமிழ்த்தாயின் வடிவத்தை அழகுற, நுட்பமாக அமைத்தவர்களில் முதன்மையானவர், 1941-ல் காரைக்குடி கம்பன் கழகம் அச்சிட்ட தமிழ்த்தாய் ஓவியம் காண்க [1]. பின்வந்த ஓவியங்கள் பலவற்றையும் சுமதி ராமசாமியின் புத்தகத்தில் காணலாம். நேர்கோடாக உள்ளது செங்கோட்டியாழ். ஆங்கிலத்தில் Stick Zither என்பர். சிலப்பதிகாரத்தில் பார்வதி நோக்க, சிவபிரான் செங்கோட்டியாழ் மீட்டுவதாகச் சொல்லியிருக்கிறது. கத்திரி என்றும், ஒலிக்குறிப்பால் கொடுகொட்டி/கிடுகிட்டி என்றும் அறியப்படும் தாளக்கருவியும், மகதிவீணை என்னும் செங்கோட்டியாழின் வகையும் இரு கைகளிலும் லயம், சுருதியின் சின்னங்களாக வைத்திருப்பவர் நாரத முனிவர், நாரதர், தும்புரு என்னும் பெயர்கள் த்ராவிட பாஷையின் நார், தும்பை என்னும் பத்தர் இவற்றால் அமைந்தவை. கருங்கோடு என்பது எருமையின் கொம்பு போல் வளைந்த தண்டு. கருங்கோட்டியாழுடன் தமிழ்த்தாய் ஓவியம். கருங்கோட்டி யாழில் சற்றே வளைந்த stick zither வடிவம் காண்க. மெட்டு - Frets on this curved veena-zither can be seen in the painting. Harp வடிவமாக கருங்கோட்டியாழ் அமைதல் உண்டு. பல பழைய சிற்பங்களில் காணலாம். ஆனால், தமிழ்த்தாய்க்கு அமைந்த தலைசிறந்த முதல் சித்திரத்தில் கருங்கோட்டியாழ் zither ஆக இருப்பதால் மடியில் வைத்து ஒருகையால் மீட்டி, மலைமகளின் ஓர் வடிவாகிய கலைமகளாய் ஜபமாலை, ஏட்டுச்சுவடி தாங்கி அமர்ந்துள்ளாள் தமிழ்த்தாய். வெள்ளைக் கலையுடுத்தி, வெண்டாமரையில் திருவடிக் கமலத்தை வைத்திருக்கிறாள் அன்னை. Harp ஆக கருங்கோட்டியாழை அமைத்தால், இருகைகள் அதை மீட்டத் தேவை என்பதால் கம்பன் அடிப்பொடி அவர்கள் கோவில் சிற்பங்களிலும், தமிழறிஞர்கள் விபுலானந்த அடிகள், ரசிகமணி டிகேசி, கோவைகிழார், கு. அருணாசலக் கவுண்டர், பக்ஷிராஜையங்கார், நீதிபதி மகராஜபிள்ளை, ... போன்றோருடன் கலந்து தெரிவுசெய்த வடிவம் இது. எருமைக் கொம்பைக் கொற்றவை சிந்துகாலத்திலேயே அணிந்திருக்கிறாள். கவுரி என்ற பெயர் இதனால் அமைந்ததாகும். கலித்தொகை என்னும் சங்க நூலில், முல்லைக்கலிப் பாடல்களில் திருமண வர்ணனையில், எருமைப் பெடையின் கொம்பை வைத்து வழிபாடு இயற்றிக் கலியாணச் சீர்கள் நடைபெற்றதாக உள்ளது. நெய்தற் திணைப் பாடல்களில், மீனவர்கள் வருணனின் அமிசமாக, சுறா மீனின் கொம்பை வைத்து வணங்கினர் என்னும் சங்க காலச் செய்தியுடன் ஒப்பிடத்தக்கது. நீலகிரி மலைகளில், தோடர்கள் வாழ்விலும் எருமைக் கொம்புக்கு மிக முக்கியத்துவம் உண்டு (தோடர் பாடல்கள், பேரா. எமனோ தொகுப்பு). Kavari in Tirukkuṟaḷ and Sangam Texts: Dravidian word for Gauṛ bison and Tibetan yak, http://nganesan.blogspot.com/2017/11/kavarimaa-tirukkural-conference-2017.html
------------------------
in a sea-sari of surrounding water:
This stretching sub-continent
is her gentle, sublime face.
The Deccan plateau
her compact, crescent forehead,
and the fabled Dravidian land in it,
the sacred vermilion spot she wears.
Mother Tamil! There you were
as that sweet smell of vermilion
spreading in every direction,
and your fame brought joy
to people everywhere.
Ancient spirit! You are still here.
Your splendid youth still endures.
Struck by this miracle,
we forget everything and remember
only to offer you worship and chant:
Greetings! Greetings! Greetings!
Translated by Punarapi Bharathi - 1993.
நா. கணேசன்
[1] பாரதமாதா வடிவ உருவாக்கமும், பாரதியாரும்
http://nganesan.blogspot.com/2009/10/popular-prints-bhaaratamata.html
(2) Kamban Kazhakam, started by Kamban Adippodi S. Ganesan in April 1939.
https://www.thehindu.com/news/cities/chennai/Focus-on-Kamban-poet-extraordinaire/article16302761.ece
https://www.thehindu.com/news/national/tamil-nadu/77yearold-kamban-kazhagam-becomes-a-registered-body/article7401374.ece
https://www.thehindu.com/features/friday-review/history-and-culture/the-kamban-dream/article4484453.ece
(3) தமிழரசு, தமிழ்நாட்டு அரசாங்க இதழில் அச்சான தமிழ்த்தாய் வாழ்த்தின் சுரதாளக் குறிப்பு:
3 comments:
தமிழ்த்தாய் வாழ்த்தினைப் பற்றிய ஒரு பறவைப்பார்வையை அறிந்தேன். நன்றி.
தமிழ்த்தாய் வாழ்த்தின் பின்னணியில் எத்தனை அரிய செய்திகள்! அறியத் தந்தமைக்கு நன்றி.
அரிய செய்திகள்! அருமை!
Post a Comment