கல்வியமைச்சர் தி. சு. அவிநாசிலிங்கம் செட்டியார், பாரதரத்னா சி சுப்பிரமணியம் போன்றோர் தமிழ்நாட்டில் காமராஜர் தலைமையில் அமைச்சர்களாக விளங்கிய காலத்தில் தமிழ் வளர்ச்சிக் கழகம் தொடங்கப்பட்டது. தமிழ் வளர்ச்சிக் கழக வரலாற்றின் சில ஒளிப்படங்களைக் காண்போம். அதன் முக்கிய சாதனை இந்திய மொழிகளிலே முதன்முதலாகக் கலைக்களஞ்சியம் 10 தொகுதிகளாய் வெளியிட்டதாகும். தமிழிசை அறிஞர் ம. பெரியசாமித் தூரன் தலைமையில் 1000 ஆசிரியர்களும், தமிழறிஞர்களும் கலைக்களஞ்சியத்தை எழுதிக் குவித்தார்கள். அச்சுப் புத்தகமாகவே இருப்பதால் தேவையுள்ள மக்களுக்கு அது கிடைப்பதில்லை. இக்குறையைப் போக்க குறுந்தகடு வடிவில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் விழா நடக்கிறது.
மேதகு. அவிநாசிலிங்கம் ஐயாவும், பத்மபூஷண் பெ. தூரன் அவர்களும் சேர்ந்து தமிழுக்கு இன்னொரு ஆய்வுக்கொடையை வழங்கினார்கள். செந்தமிழ் இலக்கியங்களை அழிவில் இருந்து காத்த தமிழ்த் தாத்தா உவேசா அவர்களின் ப்ரதமசிஷ்யர், வாகீசகலாநிதி கிவாஜ ஐயர் கொங்குநாட்டில் காவிரிக்கரை ஊரில் பிறந்த தமிழறிஞர். கிவாஜ தமிழாய்வின் தலைவராய் 20-ஆம் நூற்றாண்டில் தமிழ்ப்புலமை நடாத்தினார்கள். அவரைக் கோயம்புத்தூருக்கு அழைத்து, தங்கவைத்து, விருந்தோம்பிச் சீராட்டி ‘திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு’ 1963-ல் வெளியிட்டவர்கள் அவிநாசிலிங்கமும், தூரனும் ஆவர். சுவாமி விவேகானந்தர் நூற்றாண்டு பூர்த்தியின் போது வெளியிடப்பட்டது. இரண்டாம் பதிப்பும், ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம் (பெரியநாயக்கன் பாளையம், கோயம்புத்தூர் - 641020) 2004-ஆம் ஆண்டில் வெளியிட்டதுதான். பாரதக் குடியரசுத் தலைவர் இராஜேந்திரபிரசாத் 1950-ஆம் ஆண்டு தொடங்கிய திட்டம் நிறைவடைய 12 ஆண்டுகள் சென்றன. இவ்வாராய்ச்சிக்குப் பெரிதும் பயன்பட்டவை பெரும்புலவர் வே. ரா. தெய்வசிகாமணிக்கவுண்டர் அளித்த குறளின் பழைய உரைகள். தமிழ்மொழி என்று ஒன்று இருப்பதையே உலகுக்குக் காட்டிய பெருமை திருவள்ளுவருக்குண்டு. அவரது குறளின் இறைவாழ்த்து, துறவின் மேன்மை, புலாலுண்ணாமை, ,,, இவற்றை ஆராய்ந்த தமிழறிஞர்கள் வள்ளுவரைச் சமணசமயம் சார்ந்தவர் என்பார்கள். புலவர்கள் கொண்டாடிய திருவள்ளுவர் திருவுருவும் சமணமுனி வடிவிலுள்ளது, கொங்குநாட்டுக் கல்வெட்டுகளில் சமணர் திருக்குறளைப் பொறித்துள்ளனர். 20-ஆம் நூற்றாண்டில் வெளிவந்துள்ள திருக்குறள் ஆய்வுகளில் கிவாஜ செய்த புத்தகம் மிக இன்றியமையாதது,
முனைவர் வா. செ. குழந்தைசாமி அவர்கள் தமிழ் இணையப் பல்கலை நிறுவனர். தலைவராகச் செயல்பட்டு வருகிறார்கள். ஏராளமான நூல்களை இணையப் பல்கலை பிடிஎஃப் கோப்புகளாகவும், தட்டச்சு வடிவிலும் வழங்கவேண்டும். 19-ஆம் நூற்றாண்டு நூல்கள் கணிவருடியால் ஸ்கான் செய்யாவிட்டால் அழிபடும். டாக்டர் வா.செ.கு. ஐயா அனுப்பிய தமிழ் வளர்ச்சிக் கழக விழா அழைப்பிதழை இணைத்துள்ளேன். இந்த சி.டி.களில் உள்ள நூல்கள் யாவும் யுனிகோடில் தமிழ் இணையப் பல்கலை தளத்தில் இலங்குமாறு செய்ய அப் பல்கலைக்கழக அதிகாரிகளை வேண்டுகிறோம். அப்பொழுதுதான் கலைக்களஞ்சியத்தில் உள்ள சொற்கள் தமிழ் இணைய இளைஞர் சமுதாயத்திடையே வெகுவாகப் புழங்கும்.
நா. கணேசன்
வரலாற்றுச் சிறப்பு மிக்க தமிழ் வளர்ச்சிக் கழக இணைய தளத்தில் ‘எழுத்துச் சீர்மை’ சொற்பொழிவு இருப்பதைக் கேட்கலாம். தமிழ் எழுத்துச் சீர்மை கணினி, உலாவிகள், தமிழ் வலைத்தளங்கள் செயல்பட தமிழ் வளர்ச்சிக் கழகம் முயற்சி மேற்கொள்ள வேண்டுகோள்.
இப் புத்தகங்களை வாங்க, திரு. ஆண்டோ பீட்டர் பதிவு உதவுகிறது:
------------------------------------------------------------------------------
சென்னைப்பல்கலைக்கழகத்தில் தமிழ் வளர்ச்சிக்கழகம் பல ஆண்டுகளாக அறிவியல் தமிழ் பணிக்காக இயங்கி வருகிறது. இதன் தலைவராக அண்ணாப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர்.வி.சி.குழந்தைசாமி பணியுற்றி வருகிறார். தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பதிப்பு பணிகள் பெரும்பாலும் அறிவியல் கலைக்களஞ்சிய தமிழ் நூற்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இக்கலைக்களஞ்சிய நூல்கள் உலகில் எந்த பதிப்பகத்திலும் இல்லை. தமிழ் வளர்ச்சிக் கழகத்தில் உள்ள முக்கிய கலைக்களஞ்சியங்கள் பின்வருமாறு: மருத்துவக் கலைக் களஞ்சியம் தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் மருத்துவக் கலைக் களஞ்சியம் 12 தொகுதிகள் மற்றும் மருத்துவ கலைச்சொல் அகராதி ஆகும். அதன் 12 தொகுதி நூல்கள் பின்வருமாறு: உடல்நலம், தாய் சேய்நலம், புலனுறுப்புகள் 1, புலனுறுப்புகள் 2, மூளை, மனநலம், செரிமான மண்டலம், தொற்று மற்றும் பால்வினை நோய்கள், இதய இரத்தநாள மண்டலம், சிறுநீரகம், எலும்பியல், மரபியல் மற்றும் மருத்துவ கலைச்சொல் ஆகியன ஆகும். இந்த 13 நூல்களின் விலை. ரூ.3750/- ஆகும். இந்த 13 நூலையும் தொகுப்பாக வாங்குவோருக்கு 2012 ஆம் ஆண்டின் ‘பிரிட்டானிகா மருத்துவ களஞ்சிய டிவிடி’ இலவசமாக அளிக்கப்படும் சித்த மருத்துவக் களஞ்சியம் தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் சித்த மருத்துவ தமிழ் நூல்கள் ஏழு தொகுதிகளாக உள்ளன. அவை சித்த மருத்துவ வரலாறு, அடிப்படைகள், சிறப்பியல், வாதம் 1, வாதம் 2, பித்தம், கபம், குழந்தை மருத்துவம் ஆகும். இந்த ஏழு நூற்களின் மொத்த விலை.ரூ. 1710/- ஆகும். இந்த 7 நூலையும் தொகுப்பாக வாங்குவோருக்கு திருக்குறள் 5 உரைகள் அடங்கிய குறுவட்டு இலவசமாக அளிக்கப்படும். தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் சித்த மருத்துவ ஆங்கில நூல்கள் ஏழு நூற்களாகும். இந்த ஆங்கில தொகுப்பின் விலை. ரூ. 1540/- ஆகும். இந்த 7 நூலையும் தொகுப்பாக வாங்குவோருக்கு 2012 ஆம் ஆண்டின் ‘பிரிட்டானிகா மருத்துவ களஞ்சிய டிவிடி’ இலவசமாக அளிக்கப்படும் அறிவியல் நூல்கள் தொகுப்பு தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் அறிவியல் நூல்கள் செயற்கைகோள், உயிரியல் தாளமுறை, மனிதன், சுற்றுச்சூழல், பரம்பரை தொடரும் பாதை ஆகும். இவற்றுடன் சாஃப்ட்வியூவின் கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ளுங்கள், Web Directory, தமிழும் கணிப்பொறியும், கம்ப்யூட்டர் வைரஸ், கம்ப்யூட்டரில் என்ன படிக்கலாம்?, கணினி வேலைக்கு ரெடியா? ஆகிய நூல்கள் தொகுப்பாக அளிக்கப்படுகிறது. இந்த 10 நூல்களின் விலை. ரூ.522/- ஆகும். இந்த 10 நூலையும் தொகுப்பாக வாங்குவோருக்கு ‘உலக கண்டுபிடிப்புகள்’ குறித்த சிடி இலவசமாக அளிக்கப்படும் இயற்கை அறிவியல் நூல் தொகுப்பு தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் இயற்கை அறிவியல் நூல்கள் நீரியல் நீர்வளம், தமிழக நீர்வளம், வேளாண்மை, வனவியல் ஆகிய நான்கு நூற்களாகும். இதன் மொத்
த விலை. ரூ.900/- ஆகும். இந்த 10 நூலையும் தொகுப்பாக வாங்குவோருக்கு ‘என்சைக்ளோபீடியா’ சிடி இலவசமாக அளிக்கப்படும் யோகாக் கலை நூல் தொகுப்பு பெங்களூர் சுந்தரம் பதிப்பகத்தின் வலிப்பும் வனப்பும், சுந்தர யோகா சிகிச்சை, ஆனந்த ரகசியம், ராஜ யோகம், சூர்ய நமஸ்காரம், சந்திய காயத்ரி, ஜெபயோகம், சாந்தியோகம், ஆரோக்கிய உணவு, யோகா சார்ட், Yogic Therapy, The Secret of Happiness, Diet & Digestion ஆகிய 12 நூல்களின் விலை.ரூ. 1720/- ஆகும். பெங்களுர் சுந்தரமே யோகாக்கலையின் முன்னோடி ஆவார். இந்த 13 நூலையும் தொகுப்பாக வாங்குவோருக்கு 2012 ஆம் ஆண்டின் ‘பிரிட்டானிகா மருத்துவ களஞ்சிய டிவிடி’ இலவசமாக அளிக்கப்படும். குழந்தைகள் கலைக்களஞ்சியம் தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் குழந்தைகள் கலைக்களஞ்சியம் 10 நூல்களாகும். இவை தற்போது நூலாக இல்லாமல் குறுவட்டாக வெளியாகியுள்ளது. இதன் விலை. ரூ.300/- ஆகும்.
தமிழ் வளர்ச்சிக்கழகம் மற்றும் யோகாக்கலையின் நூற்களுக்கு சாஃப்ட்வியூ நிறுவனமே அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்கள் ஆவர். சென்னையில் நடைபெறும் புத்தக்கண்காட்சியில் இந்நூற்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. சென்னை புத்தக்கண்காட்சியில் சாஃப்ட்வியூ நிறுவனத்தின் கடை எண் 331 ஆகும். சாஃப்ட்வியூ நிறுவன அலுவலக முகவரி: 118. நெல்சன் மாணிக்கம் சாலை, சென்னை-29. தொலைபேசி: 044-23741053 மின்னஞ்சல் : softviewindia@gmail.com இணையம்: www.softview.in.
---------------------------------------------------------------
தமிழ் வளர்ச்சிக் கழக வரலாற்றில் சில ஒளிஏடுகள்:
Photos from http://www.tamilvk.com/
1000 ஆசிரியர் தொகுத்த கலைக்களஞ்சியம் - சி.டி. வெளியீட்டு விழா - தமிழ் வளர்ச்சிக் கழக வரலாறு
Subscribe to:
Post Comments (
Atom)
0 comments:
Post a Comment