மூன்றாம் உலக நாடுகளில் அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தொய்வில்லாமல் தேர்தல்களை நடத்தி வரும் நாடுகளில் இந்தியா குறிப்பிடத்தக்கது. உலகின் பெரிய ஜனநாயக நாட்டின் சமூகக் கடமையாகக் கருதி மக்கள் வாக்களித்து தலைவர்களைப் பதவியில் அமர்த்துகின்றனர்.மைசூர் பெயிண்ட்ஸ் அண்ட் வார்னிஷ் என்னும் அரசாங்க நிறுவனம் தான் தேர்தலுக்காக அழியாத மை உற்பத்தி செய்து வழங்குகிறது. 10 மி.லி. கொண்ட 20 இலட்சம் பாட்டில்கள் பயன்படுத்தியுள்ளனர். ஒரு பாட்டிலில் 700 வாக்காளர் கைகளில் அடையாளம் வைக்கலாம். பெரிய மாநிலமான உத்திர பிரதேசத்துக்கு மட்டும் சுமார் மூன்று லட்சம் பாட்டில்கள்! குறைந்த அளவு லட்சத்தீவுகளுக்கு வெறும் 120 பாட்டில்கள்தான்.
Making a mark on Indian electorate:
http://news.bbc.co.uk/2/hi/south_asia/8022084.stm
நா. கணேசன் லோக்சபா தேர்தல் - 20 லட்சம் அழியாத மை பாட்டில்கள்
நன்றி: தட்ஸ்தமிழ்
மக்களவை தேர்தலுக்கு 20 லட்சம் அழியாத மை பாட்டில்கள் தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 7 லட்சம் பாட்டில்கள் ஏற்கனவே சப்ளை செய்யப்பட்டு விட்ட நிலையில் மீதி பாட்டில்கள் வரும் ஏப்ரல் மாதம் அனுப்பி வைக்கப்படும் என தெரிகிறது.
மக்களவை தேர்தலுக்கு தேவையான அழியாத மை கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள மைசூர் பெயின்ட் அண்ட் வார்னிஸ் என்ற அரசு நிறுவனம் மூலம் இந்தியா முழுவதும் சப்ளை செய்யப்படுகிறது.
இந்நிறுவனம் இந்தியா மட்டுமல்ல கனடா, தென் ஆப்ரிக்கா, துருக்கி, கம்போடியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளுக்கும் மைகளை ஏற்றுமதி செய்து வருகிறது.
வழக்கமாக 5 மில்லி அளவு கொண்ட பாட்டில்களை தயாரித்து வந்த இந்நிறுவனம் இந்த முறை 7.5 செமீ., உயரம் கொண்ட 10 மில்லி பாட்டில்களை நாடாளுமன்ற தேர்தலுக்காக தயாரித்து வருகிறது. ஒவ்வொரு பாட்டில் மூலம் கிட்டத்தட்ட 700 வாக்காளர்களுக்கு மையிட முடியும்.
புள்ளிக்குப் பதில் கோடு!இதற்கு முன்னர் நடந்த தேர்தல்களில் ஊதா மையால் கையில் சிறு புள்ளியிட்டு அடையாளம் வைப்பார்கள். ஆனால், இந்த முறை தேர்தல் ஆணையம் விரலின் மேல் பகுதியில் இருந்து நகத்தின் அடிபகுதி வரை நீண்ட கோடு இழுக்க உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவை இம்முறை சில மாநில தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டாலும், மக்களவை தேர்தலில் பயன்படுத்துவது இதுவே முதல்முறை இதனால் வழக்கத்தை விட கூடுதல் மை செலவாகும் என தெரிகிறது.
அதிகபட்சமாக உ.பிக்கு 2 லட்சத்து 86 ஆயிரம் பாட்டில்களும், குறைந்தபட்சமாக லட்சத்தீவுக்கு 120 பாட்டில்களும் தேவைப்படுகின்றன.
தமிழ்நாட்டுக்கு சுமார் 96 ஆயிரம் பாட்டில்கள் தேவைப்படும். மொத்தமாக நாடு முழுவதும் 20 லட்சம் பாட்டில்கள் தேவைப்படுகின்றன.
இதுவரை 7 லட்சம் பாட்டில் மை 16 மாநிலங்களுக்கு ஏற்கனவே சப்ளை செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 13 லட்சம் பாட்டில்களையும் ஏப்ரலுக்குள் சப்ளை செய்யப்படும்.
இது குறித்து அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுரேஷ் கூறுகையில், இந்த மை தயாரிர்க்க சாயங்கள், வாசனை பொருட்கள், சில்வர் நைட்ரேட், மை மற்றும் சிவ ரசாயனப் பொருட்களை பயன்படுத்துகிறோம். இந்த பாட்டீல்கள் அனைத்து பேக் செய்யப்பட்டு பத்திரமாக கொண்டு சேர்க்கப்படும். தொலை தூர நகரங்களுக்கு கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது என்றார்.
----------
சில ஒளிப்படங்கள்:
http://www.boston.com/bigpicture/2009/05/indias_massive_general_electio.html
மதியம் சனி, மே 23, 2009
தேர்தலில் பயனாகும் அழியாத ஊதாநிற மை
Posted by
நா. கணேசன்
at
5/23/2009 10:27:00
Subscribe to:
Post Comments (
Atom)
2 comments:
நன்று..
India: Democracy's dance
Prof. Ramachandra Guha, Bangalore
http://news.bbc.co.uk/2/hi/south_asia/7914229.stm
Post a Comment