கேஎஸ்ஆர் கல்லூரி இணையப் பயிலரங்கு - வலையொளிபரப்பு, 11 PM, 14-3-2009

திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்லூரியில் இன்றைய இணையப் பயிலரங்கு இனிதே நடந்து முடிந்திருக்கிறது. அரங்கு முழுக்க கணினி, இணைய ஆர்வலர்கள், தமிழ் அறிஞர்கள், மாணவர்கள், ... என்று திரளான மக்கள் ஆதரவு நல்கியுள்ளனர். சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த தமிழ்த்துறை ஆசிரியர்களுக்கு நம் நனிநன்றிகள் உரித்தாகுக! இன்னும் சிறிது நேரத்தில் (இந்திய நேரம் 11 PM அளவில்) பயிலரங்க நிகழ்ச்சிகளைச் சங்கமம் குழுவினர் வலையொளி பரப்புச் செய்கிறார்கள். பார்த்து மகிழலாம். ஐரோப்பா, மத்தியகிழக்கு, அமெரிக்கா, கனடா வாழ் தமிழர்கள் பார்க்கும் வகையில் இந்த ஒளிபரப்பு நேரத்தைக் கேஎஸ்ஆர் கல்லூரி தெரிவு செய்துள்ளது.

ஒரு தமிழ்நாட்டுக் கல்லூரி வலைப்பதிவர் பட்டறைப் பயிலரங்கம் வலையொளிபரப்பு ஆவது தமிழ்க் கணிமை வரலாற்றில் இதுவே முதன்முறையாகும். இன்னும் பல கணிப் பயிலரங்குகள் கல்லூரிகளில் இருந்து நேரடி ஒளிபரப்பாகி இணையத் தமிழ்மணம் கமழச் செய்ய தமிழாசிரியர்களுக்கு வேண்டுகோள்!



தமிழர்கள் இணையத்தில் வலையாடப் பல்லாண்டுகளாய் உதவிவரும் பழைய குழுமம் தமிழ்-உலகம். அதன் மட்டுறுத்துனர்களில் ஒருவரான ஆல்பர்ட் பெர்னாண்டோ சங்கமம் குழுவினரால் வலையொளிபரப்புச் செய்ய ஏற்பாடு செய்து தந்துள்ளார்கள். அருமை நண்பர் ஆல்பர்ட் அவர்களுக்கும் கேஎஸ்ஆர் தமிழ்த்துறை ஆசிரியர்களுக்கும் இந்நிகழ்ச்சியைத் தமிழ் கூறும் நல்லுலகம் உலகெங்கும் கண்டுகளிக்க வாய்ப்பளித்தமைக்காக என் நன்றிகள்!

திருச்செங்கோடு தமிழ் இணையப் பயிலரங்கு பற்றிய செய்தி:
http://sangamamlive.in/index.php?option=com_content&task=view&id=856&Itemid=31

நிகழ்ச்சியின் புகைப்படங்கள்:


1 comments:

Anonymous said...

Thanks for the info. The broadcast is on.