பேரா. மு. இளங்கோவன் அவர்கள் தமிழ்/திராவிடவியல் முனைவர் கமில் ஃசுவலெபில்லின் மரணம் பற்றி அறிவித்தார். பேரறிஞர் சுவலெபில் மரணம் துன்பத்தில் ஆழ்த்துகிறது.
Dravidology என்ற கலைச்சொல்லை ஆக்கி, பல நூல்களை யாத்து, ஸம்ஸ்க்ருதப் பேராசிரியன்மாரிடம் தமிழை, தமிழின் தொன்மையை விளங்கச் செய்த மேதை அவர். அவர் பாட்டை போட்ட பின்னர் தான் ஹார்ட், பார்ப்போலா, ... தோன்றினர். குரோ பிரெஞ்சு மொழியில் தமிழை எழுதினார்.
குடத்து விளக்கைக் குன்றின்மேலிட்ட விளக்காக்கியவர் சுவலெபில்.
தமிழ்த்தாய் அம்மகனை அழைத்துத் தன் மடிநீழலில் இருத்தி இளைப்பாற்றுவாளாக!
நா. கணேசன்
On Jan 17, 12:22 pm, மு இளங்கோவன்
> செக்கோசுலேவியா நாட்டிலிருந்து வந்து தமிழ் கற்று, தமிழ் நூல்களைச் செக் மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்த அறிஞர் கமில் சுவலபில் அவர்கள் இன்று 17.01.2009 இயற்கை எய்திய செய்தியை அவர் துணைவியார் நினா சுவலபில் அம்மா அவர்கள் எனக்கு ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
அன்னாரை இழந்து வருந்தும் குடும்பத்தினருக்கும் மொழியியல்,தமிழ்த்துறை சார்ந்த அறிஞர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கமில் சுவலபில் அவர்களைப் பற்றித் தமிழ் ஓசையில்(16.11.2008) அயலகத் தமிழறிஞர்கள் வரிசையில் நான் எழுதியிருந்தேன்.என் பதிவிலும் தகவல் உள்ளது.
நினா சுவலபில் அவர்களின் மடல்
Dear DR,Elangovan
Dear dr, Elongovan, I just want to inform you that my husband Kamil Zvelebil died 17th of January yours N. Zvelebil.
முழு வாழ்க்கைக்குறிப்பு அறிய என் பக்கம் செல்க!
http://muelangovan.blogspot.com/2008/11/17-11-1927.html
கமில் சுவலபில் (1927 - 2009)
Subscribe to:
Post Comments (
Atom)
2 comments:
இவரது கட்டுரைகளை அண்மைக்காலமாகத் தான் நான் படிக்கத் தொடங்கியிருக்கிறேன். தற்போது தமிழகத்தில் பெரும்பான்மை மக்களின் பொதுப்புத்தியில் ஏற்றப்பட்டிருக்கும் கருத்தாக்கங்களைச் சீர் செய்யும் பல கருத்துகளை நேரடியாகப் பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து எடுத்து வைக்கிறார் இவர். அன்னாருடைய நினைவுக்கு என்னுடைய வணக்கங்கள்.
தமிழ்ப் பேராசிரியர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
Post a Comment