குமுதத்தின் எழுத்துரு மாற்றம் - விகடனைத் தொடர்ந்து!

முதலில் ஈழநாட்டு வலை இதழ்களும், எல்லா வலைப் பதிவுகளும் யூனிக்கோடில் இயங்குவதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். சில மாதங்கள் முன்பு தமிழகத்தின் பழைய பத்திரிகை ஆனந்தவிகடன் மாறியது. தற்போது குமுதம்! வாழ்த்துக்கள்.

வலைப்பதிவுப் பயிலரங்குகள் பெருகவும், பல்கலைக் கழகத் தளங்கள் (எ-டு: தமிழ் இணையப் பல்கலை), தினப் பத்திரிகைகள் (எ-டு: தினமணி, தினகரன்) யூனிக்கோடில் விகடன், குமுதம் போல் மாற மக்களும், அதிகாரிகளும் உதவ வேண்டும். கல்லூரிகளில் சமூகவியல், வரலாறு, தமிழ், இதழியல், ... போன்ற இள/முதுகலைப் பட்டப் படிப்புகளில் தமிழ்க் கணிமை, வலைப் பதிதல் போன்றவை ஒரு விருப்பப் பாடமாக வேண்டும். உதவுங்கள்!

5 comments:

Subbiah Veerappan said...

////வலைப்பதிவுப் பயிலரங்குகள் பெருகவும், பல்கலைக் கழகத் தளங்கள் (எ-டு: தமிழ் இணையப் பல்கலை), தினப் பத்திரிகைகள் (எ-டு: தினமணி, தினகரன்) யூனிக்கோடில் விகடன், குமுதம் போல் மாற மக்களும், அதிகாரிகளும் உதவ வேண்டும். கல்லூரிகளில் சமூகவியல், வரலாறு, தமிழ், இதழியல், ... போன்ற இள/முதுகலைப் பட்டப் படிப்புகளில் தமிழ்க் கணிமை, வலைப் பதிதல் போன்றவை ஒரு விருப்பப் பாடமாக வேண்டும். உதவுங்கள்!///

அய்யா, இந்த வேண்டுகோளைத் தமிழக கல்வி அமைச்சகத்திற்குத் தமிழ்மணத்தின் சார்பாக அனுப்பி வையுங்கள்.
பலன் கிடைக்கும்.
அவர்களுடைய மின்னஞ்சல் முகவரி தமிழக அரசின் பிரத்தியேக இணைய தளத்தில் கிடைக்கும்

முனைவர் மு.இளங்கோவன் said...

வணக்கம்.
பகிர்தலுக்கு நன்றி.
மு.இளங்கோவன்

கோவை சிபி said...

நல்ல யோசனை.

Balaji-Paari said...

அன்பின் NG,
இது வரவேற்க்க தக்க மாற்றம்.

Anonymous said...

//அவர்களுடைய மின்னஞ்சல் முகவரி தமிழக அரசின் பிரத்தியேக இணைய தளத்தில் கிடைக்கும்//

Adha thedi kandupidichaavadhu inga sollalamla?

Adhaiyum ivarudhaan thedikkanumaa? Ivarukku appadi enna kaanduvaadham?