விஸ்டாவில் எ-கலப்பை இயங்குகிறதா?

நீங்கள் மைக்ரோசாப்ட் கணினியில் விஸ்டா வைத்திருந்தால் எ-கலப்பை எந்தெந்த வெர்ஸனில் இயங்குகிறது அல்லது இயங்கவில்லை என்பதை அறியத் தாருங்கள்.

நன்றி.

10 comments:

SP.VR. SUBBIAH said...

விண்டோஸ் XP Professional + Windows Vistas Home Edition அங்கே என்ன விலை? (இரண்டும் சேர்ந்து அல்லது தனித்தனியாக)
அறியத்தாருங்கள்.
ஒரு ஒப்பீட்டுக்காக விலை விவரம் தேவைப்படுகிறது!

அன்புடன்
SP.VR.சுப்பையா

மலைநாடான் said...

நண்பரே!

எனக்குத் தெரிந்தவரையில், எ.கலப்பை.2 , சுரதா பாமுனி எழுத்து நன்றாக வேலைசெய்கிறது.

பினாத்தல் சுரேஷ் said...

இ கலப்பை 2.0b எனது விஸ்டாவில் நன்றே இயங்குகிறது,

மாயவரத்தான் said...

இல்லை. எனக்கு பெரும் பிரச்னையாக இருவது. இன்றைக்கு தான் இன்னொரு எளிதான வழி கிடைத்தது. மேலும் விபரங்களுக்கு இங்கே http://mayavarathaan.blogspot.com/2008/05/422.html சொடுக்கவும்.

ILA (a) இளா said...

இ கலப்பை 2.0b அஞ்சல் உபயோகப்படுத்துகிறேன். எந்தப் பிரச்சினையுமில்லை. அலுவலகத்தில் Vista Enterprise, வீட்டில் Vista Home/Premium. பிரச்சினை எதுவுமில்லீங்க.

ஆ.கோகுலன் said...

vista home edition ல் பிரச்சனை இல்லை. ஆனால் இலங்கையிலிருந்து வெளிவரும் வீரகேசரி ஈபேப்பர் (virakesari.lk) திறக்கும்போது ஏதோ ஒரு ஸ்கிறிப்ட் தொழிற்பட்டு ராஸ்க் பாரிலுள்ள ஈகலப்பை ஐகனை தெரியாமல் செய்வதுடன் ஜிமெயிலும் ஸ்ரக் ஆகிறது.

வசந்தன்(Vasanthan) said...

Windows Vistas Home Edition இல் பாமினி - கலப்பை வேலை செய்கிறது. ('ர'கரம் காலோடு தெரிவது விஸ்டாவின் கூடுதல் வசதி.)

இரா.சுகுமாரன் said...

வணக்கம்,

சிலர் விஸ்டாவில் வேலை செய்கிறது என்கிறார்கள். விண்டோஸ் XP Professional லில் கூட சில நேரம் எனக்கு மக்கார் செய்கிறது.

விஸ்டாவில் சரியாக வேலை செய்யவில்லை என்று சிலர் புகார் கூறியதாக நண்பர் முகுந்த் (ஏகலப்பை)என்னிடம் கூறினார். அதன் அடிப்படையில் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் ( www.puduvaibloggers.blogspot.com , www.pudhuvaitamilbloggers.org ) நண்பர் அருணபாரதியிடம் இதற்காக புதிய மென்பொருள் ஒன்றை உருவாக்கும் படி முகுந்த் கேட்டுள்ளார். இதனால் நானும் அருணபாரதியிடம் புதிய மென்பொருளை வடிவமைக்கும் படி கேட்டுள்ளேன். இன்று கூட அதனை நினைவு படுத்தியுள்ளேன். ஓரளவு பணிகள் நிறைவு பெற்றுள்ளன எனவே, அந்த மென்பொருள் விரைவில் வெளியிடப்படும். என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரச்சனை எழுபவர்கள் இந்த புதிய மென்பொருளை ஒரு மாற்றாக வைத்துக் கொள்ள இயலும்.

துளசி கோபால் said...

எனக்கு விஸ்டாவில் ஆரம்பத்தில் வேலையே செய்யலை. நோட்பேட் -இல் அடிக்கும் வழக்கம் இருந்தது.

இப்பவும் notepad நோட்பேடில் கலப்பை வேலை செய்வதில்லை.

வேர்ட்பேட் Wordpadஇல் கலப்பையின் யூனிக்கோடு வேலை செய்கிறது.

திஸ்கி வேலையே செய்யறதில்லை.

Anonymous said...

எனக்கு Vistaவிலும் சரி, XPயிலும் சரி NHM Writer ஒழுங்காக வேலை செய்கிறது.