உருண்டையும் உண்டையும் - An areal linguistic feature among Indian languages

’இனிய தமிழைப் பிழையின்றி எழுத எளிய வழிகள்’ என்னும் தனது நூலில் புலவர் தெய்வத்திரு. இரா. திருமுருகனார் (புதுவை)  “பிழையாக வழங்கப்படும் சொற்களின் திருத்தமான வடிவங்கள்” என்ற பெரிய பட்டியலைக் கொடுத்துள்ளார்கள். அதில் “உண்டை” என்பதனை “உருண்டை” என எழுதவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். ஆனால், தமிழின் பெருங்கவிஞர்கள் பலரும் பயன்படுத்தும் உண்டை என உரைநடையிலும், பேச்சிலும், மரபுச்செய்யுள் யாத்தலிலும் பாவித்தால் எந்தத் தவறும் இல்லை. இதற்கான மொழியியற் காரணம் இருக்கிறது. முதலில் சில இலக்கிய, வாழ்க்கை வழக்காறுகள் காண்போம்.


வழிவழியாக இலக்கியத்தில் பயன்பாடு:

(1) பாண்டிக்கோவை - தமிழின் முதற்கோவை நூல் - அரிகேசரி பாண்டியன் நெடுமாறன் மீது.பாடியது. அரிகேசரியின் இளையான்புத்தூர் செப்பேடு பாண்டியர் செப்பேடுகளில் பழையது. திருச்செங்கோட்டில் விஜயகுமாரிடம் இருக்கிறது. முதன்முதலாக, புலவர் செ. இராசு இந்த அரிகேசரி செப்பேடு கண்டுபிடிக்கப்பட்ட செய்தியை எழுதினார். இதனால் தேவாரத்தின் காலம் உறுதிப்பட்டது.

தூ உண்டை வண்டினங்காள் வம்மின் சொல்லுமின் துன்னி நில்லாக்
கோ உண்டை கோட்டாற்று அழிவித்த கோன் கொங்க நாட்ட செங்கேழ்
மா உண்டை வாட்டிய நோக்கி தன் வார் குழல் போல் கமழும்
பூ உண்டை தாம் உளவோ நுங்கள் கானல் பொழிவிடத்தே.

(2) மாணிக்கவாசகர்: திருவண்டப் பகுதி
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி

(3) நாலாயிரம்
குன்றொன்று மத்தா அரவம் அளவிக் குரைமா கடலைக் கடைந்திட்டு, ஒருகால்
நின்றுண்டை கொண்டோட்டி வங்கூன் நிமிர நினைத்த பெருமான் அதுவன் றியும்முன்,
நன்றுண்ட தொல்சீர் மகரக் கடலேழ் மலையே ழுலகே ழொழியா மைநம்பி,
அன்றுண் டவன்காண்மின் இன்றாய்ச் சியரால் அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந் தவனே,

(4) கம்பர் (உருள்-(உருண்ட-) என்ற வினைச்சொல்லைப் பல இடங்களில் கையாள்கிறார். ஆனால் உண்டை என்று மட்டும்தான் உருண்டையைச் சொல்கிறார்.

1447.தொண்டைவாய்க் கேகயன் தோகை கோயில்மேல்
மண்டினாள் - வெகுளியின் மடித்த வாயினாள்,
பண்டை நாள் இராகவன் பாணி வில் உமிழ்
உண்டை உண்டதனைத் தன் உள்ளத்து உள்ளுவாள்.

http://www.tamilvu.org/slet/l3720/l3720sog.jsp?x=1447

(5) பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் - திருவேங்கடமாலை (அட்டப் பிரபந்தம்)

58.காணையிலார் சொற்கேட்ட கந்தருவ ருந்தவரும்
வீணையிரா கத்தைவிடும் வேங்கடமே - கோணை
யிருங்குண்டை யோட்டினா னேற்பொழித்தான் கூனி
மருங்குண்டை யோட்டினான் வாழ்வு.
கூனி - கூனையுடையவள்; இவள் - நைகவக்ரையென்னும் பெயருடையவள்; இவளது கூனை நிமிர்த்தது, கிருஷ்ணாவதாரத்தில். "கூனிமருங் குண்டை" என்றது அவளுடம்பிலுள்ள கோணலையும், முதுகுவளைவையுங் குறிக்கும். உண்டை = உருண்டை. இனி, "கூனிமருங்கு உண்டை யோட்டினான்" என்பதற்கு - இராமாவதாரத்தில் மந்தரையென்னுங்கூனியின் முதுகின்புறத்திலே வில்லினால் மண்ணுண்டையைச் செலுத்தியவன் என்றும் உரைக்கலாம்; "கொண்டை கொண்ட கோதைமீது தேனுலாவு கூனி கூன், உண்டை கொண்டரங்க வோட்டி யுண்மகிழ்ந்த நாதன்," "கூனே சிதைய வுண்டைவில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா" என்ற ஆழ்வார் அருளிச்செயல்கள் இங்கு அறியத்தக்கன. (வை.மு.கோ. உரை)

இன்னும் ஏராளமான உதாரணங்கள் இலக்கிய மரபில் காட்டலாம். அன்றாட வாழ்க்கையில் இருந்து 2 காட்டுகள்:

காஞ்சி முனிவர் உரை - திருமிகு ரா. கணபதி பதிவு செய்துள்ளார்,

காளமேகம் போன்ற கவிகள் திருக்கோவில்கள் உள்ள ஊர்களுக்குப் போய், தாசிகளுடன் உறவாடி, கோவிலில் தரும் உண்டைக்கட்டி பெற்ற கதைகள் உள்ளன. மரு. ஜெயபாரதி, பழைய கல்விமுறை, மாணவர்கள் உண்டைக்கட்டி பெறுதல், ... சொல்கிறார் (துர்கைச் சித்தர், வராகி என்னும் இழையில்)

பழைய feudal system - தண்செய் (தஞ்சை) மாவட்ட வேளாண்மையில் முடிந்துவிட்டது. அது முடிந்த காலகட்டத்தில் நிகழ்ந்த கீழ்வெண்மணிப் படுகொலைகளை வர்ணிக்கும் தமிழ்க் கவிதை. பண்ணையாட்களுக்கு உண்டைக்கட்டி கூலி பற்றிக் குறிப்பிடுகிறது. இன்றைய தமிழின் முக்கியக் கவிதைகளில் ஒன்று இது. தமிழ்ச் சமுதாய புரட்சி மாற்றங்களுக்கு வித்தான நிகழ்ச்சி. அமெரிக்காவில் மார்ட்டின் லூதர் கிங் செய்த மாற்றம் போல, இந்த நிகழ்வும் தமிழக அரசியலை மாற்றும்  வல்லமை பெற்றது வரலாறு.
....

ஆக, வாழ்விலும், கவிதையிலும் 1500 ஆண்டுகளாய் இருக்கும், மொழியியலுக்குட்பட்ட உருண்டை > உண்டை என்பதை ஏன் பிழை என்று இரா. திருமுருகன் ஐயா குறிப்பிடுகிறார் எனச் சிந்திப்போம். பேச்சுமொழியில் உள்ள மொழியியற்கூறுகள் மிகத் தொன்மையானவை. இதை உணராததால், சில சமயங்களில் மக்கள் வழக்கு சுட்டும் மொழிப்பழைமையை, வரலாற்றை மறந்துவிடுகிறோம். 


மரை = திருகாணியில் (screw) உள்ள மரை.  Antelope vs. Deer. Deers shed antlers (horns) every year (esp. in males) and these horns grow back in a few months. But antelopes  are different, they have permanent horns screwed permanently fixed into the skull of adult antelopes. Ancient Tamils gave a காரணப்பெயர் for antelopes: மரை. இருப்பதிலேயே பெரிய மரை மாடு போல இருக்கும். இப் பெருமரை கோவை, ஊட்டி மாவட்டங்களில் 1900 வரை வாழ்ந்தது. வேட்டைக்காரர்களால் (Shikari) சுடப்பட்டு இன்று இல்லாதொழிந்தன. எனவே, மரை + ஆ/ஆன் = மரையான்/மரையா. மரையாவின்  பாலைக் கறந்து தலைவன் பிட்டங்கொற்றன் வந்ததை மலைவாசிகள் கொண்டாடும் பொங்கல் விழாவை நீங்கள் புறநானூற்றில்  படித்திருப்பீர்கள். மரையா(ன்) தான் உலகின் Unicorn myth-க்கு origin என சிந்துநதிக் கலைவரலாறு 4200 ஆண்டுமுன்னர் காட்டிநிற்கிறது. சங்க இலக்கியத்திம் மரையா, அது கொங்கில் அண்மைக்காலம் வரை வாழ்ந்து பட்டுவிட்ட விலங்கு, மரையா தான் சிந்து முத்திரையின் யுனிகார்ன் என்பது பற்றி விரிவாக இதுவரை யாரும் எழுதியதில்லை. கட்டுரை எழுத வேண்டும். ஒரு சிறப்பான, 4 கொம்புடைய மரை தஞ்சை  நெய்தற்காடுகளில் இன்றும் வாழ்கிறது. எனவே அவ்வூரை மரைக்காடு எனப் பழந்தமிழர்  வழங்கினர். மரைக்காடு அருகிலே மரையூர் என்ற ஊரும் உண்டு. இன்னொரு மரையூர் குறிஞ்சிமலர் இன்றும் பூக்கும் மூணாறு அருகே உள்ளது. இன்று வேதாரணியம்/மறைக்காடு  எனத் திரிந்து புராணக்கதை வழங்குகிற ஊரின் பழம்பெயர்: இந்த மரைக்காடு தான். மரை என்பதன் பொருள் அனேகமாக மறைந்தபிறகு, மக்களின் கொச்சைவழக்கு என்று கருதி, மரைக்காடு மறைககாடு எனப் புராணக் கதைகள் ஏற்பட்டிருக்கின்றன. தமிழ் அறிஞர்கள் பலர் மாயூரம் மயிலாடுதுறை என்று தமிழில் அரசு ஆவணங்களில் இடம்பெறுவதுபோல, வேதாரணியம் மரைக்காடு என வழங்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கத்திடம் வைத்துள்ளனர். அவ்வாறு அழைத்தால், தேவநேயப் பாவாணர் போன்ற பெரும்புலவர்களுக்குத் தமிழ் மக்களும், அரசும் செய்யும் மரியாதை ஆகும் [1].  

அண்மைக்காலத்தில், உருவான இன்னோர் புராணக்கதையும் காட்டலாம்.  செம்மங்குடி சீனிவாசய்யர் அவர்கள் நாராயண தீர்த்தர் வரகூரை வராஹபுரி என்று பெயர்தந்து ஏற்படுத்திய பஜனை சம்பிரதாயம் பற்றி விகடன் 1938-ல் கட்டுரை எழுதியுள்ளார்:
http://s-pasupathy.blogspot.com/2013/01/9.html 
மெகாலிதிக் காலத்திலேயே நெல்வேளாண்மை வேளிரால் தமிழகம் வந்தது - கங்கைச் சமவெளி போன்றவற்றிலிருந்து. பொருந்தல் என்னும் கொங்குநாட்டின் ஊரில் வேள் ஒருவரின் ஈமக்குழிகளில் 2500 ஆண்டுக்கு முற்பட்ட நெல் இரண்டு கிலோகிராம் பேரா. கா. ராஜன் அகழ்வாய்வில் கண்டுபிடித்திருப்பதைச் சுட்டிக்காட்டலாம். விடங்கர்-கொற்றி சிற்பங்கள் கொண்ட பானையோட்டில் நெல்லம்பயிரும், அத் தாவரம் ‘நெல் தான்’ என்று காட்ட கொக்கும், நெல்மணிகள் தூவியும் உள்ள பானைஓடுகள் ஆதிச்ச நல்லூரில் 2005-ல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அதற்கும் சில ஆயிரம் ஆண்டுகள் முன்னரே பதினெண் கூலங்கள் என்னும் தானியங்கள் பயிர்செய்யப்பட்டன. எனவே தான் ஊர்களுக்கு பழைய பெயர்களாக வரகூர், பயற்றூர், தினைநகர், திலதைப்பதி (எள்ளூர்), எண்கண் (எண் = எள்) என்று பரவலாகப் பெயர்கள் அமைந்துள்ளன. வரகூர் என்னும் ஊர்ப்பேரைத் தமிழர்கள் Varaḫuur என்று உச்சரிப்பர். This ancient Tamil phonology for inter-vocalical -k-.  as ḫ (ḫ as in muruḫan, azaḫu, aḫam, tamizaḫam, muḫil,  ..) is not well known in other States of India).  இரண்டு உயிரெழுத்துகளுக்கு இடையில் வரும் ககரத்தின் உச்சரிப்பை  ḫ எனக் குறிக்கவேண்டும் [2]:
https://groups.google.com/forum/#!msg/tamilmanram/P9jMKdRIGus/_V95NGEpayAJ
18-ஆம் நூற்றாண்டில் ஆந்திர தேசத்திலிருந்து தமிழ்நாட்டில் தங்குவதற்கு வந்த நாராயணதீர்த்தர் என்னும் மகான் வரகூரை வராஹபுரி என்று பாடிவிட்டார். அதற்கேற்ப, ஒரு கதையாக வெள்ளைப்பன்றி (அப்போது ஐரோப்பாவிலிருந்து வெள்ளைப்பன்றி வராத காலமது.) சுவாமிகள் பார்த்ததாக புராணம் ஏற்பட்டுவிட்டது. இது ஒரு காலனிய ஆட்சி நகரான சென்னையில் உருவான urban myth.

[1] தமிழ்ப் பேரா. தி. நெடுஞ்செழியன் 2008-ல் மரைக்காடு என்று தமிழ்ப்பெயர் வைப்பதற்கான காரணங்களை விளக்கியுள்ளார். தமிழறிஞரின் கோரிக்கையைப் பார்ப்போம்:
வேதாரண்யம்: ”வடமொழியில் மாற்றப்பெற்ற ஊர் பெயர்களில் இந்த ஊரும் ஒன்று இங்கு மான்கள் அதிகம் இருந்ததால் பண்டையக் காலத்தில் இவ்வூரை 'திருமரைக்காடு' என்று அழைக்கப்பட்டது. இரை உணராத வேற்றுமொழியினர் 'மரை'யை மறை எனக் கொண்டு வேதம் + ஆரண்யம் = வேதாரண்யம் என்று தங்கள் போக்குக்கு ஏற்ப மாற்றி விட்டனர். இங்கு வரையாடு (Black Buck) என்ற மான் இனமும், புள்ளிமானும், குதிரை, நரி முதலிய விலங்குகள் உள்ளன. இக்காடு சதுப்பு நிலத்தில் இருக்கிறது. ஆறுகளுக்கும் கடலுக்கும் இடைப்பட உப்பங்குழிகளில் பூநாரை செங்கா, நாரை, வக்கா, கூழக்கடா, சிரவி, உல்லான் போன்ற பறவை இனங்களை ஐப்பசி மாதம் முதல் தைமாதம் வரை காணலாம்.”


உருண்டை > உண்டை - இப்பண்பு consonant assimilation எனப்படுகிறது. திராவிட மொழிகளில் பரவலாக வழங்கப்படும் பருப்பு > பப்பு, தெருமருதல் > தெருமந்து, ... என்பது போன்றது தான் இம்மாற்றம். இந்த வகை மெய்சுருங்குதல் consonant assimilation இந்தியா முழுதும் வியாபித்துள்ளது. 1999-ல் நான் காட்டிய சில உதாரணங்களை இங்கே படிக்கலாம்:
http://list.indology.info/pipermail/indology_list.indology.info/1999-June/017540.html
Tamil and Prakrit Consonant Assimilation
  -----------------------------------------

Sanskrit consonant clusters, 'rm' and 'rN' change to
Prakrit 'mm' and 'NN' respectively. In Vedic, there are
only very few words with consonant groups 'mm'. Later in
time, most Sanskrit words with 'rm' transform into 'mm'.
This simplification process through assimilation can be
observed in Old Tamil also.

EXAMPLES:
---------
                Sanskrit           |     Prakrit
          --------------------------------------------------
                karNa (ear)        |     kaNNa
                varNa (color)      |     vaNNa
                kIrNa (scattered)  |     kiNNa
                pUrNa (full)       |     puNNa
                parNa (leaf)       |     paNNa
                nirNaya (decision) |     niNNaya
                Sanskrit           |     Prakrit
          ----------------------------------------------
                karman (action)    |     kamma
                dharma (law)       |     dhamma
                varman (armour)    |     vamma
                gharma (heat)      |     ghamma
                carman (skin)      |     camma
                kUrma (tortoise)   |     kumma

  Compounds with nir-(without)
               nirmathana(churning)|     nimmathana (Pali)
               nirmala (clean)     |     nimmala (Pali)
               nirmUla (rootless)  |     nimmUla (Pali)


TAMIL EXAMPLES:
---------------
In old Tamil, parallel processes of assimilation can be observed from "rum" to "mm" and from "run" to "n2n2' (taking "n" as ta. dental n and "n2" as ta. alveolar n).

"rum" -> "mm"
--------------
1) porumal (plumpness/abundance) -> pommal
2) cerumAn2 (leather worker) -> cemmAn2 (cf. ceruppu = sandals)
3) perumAn2 (great man) -> pemmAn2


"run" -> "n2n2"
--------------
1) nerunal (the day before) -> nen2n2al

This assimilation is present partially in certain word pairs
1) parutti (cotton), pan2n2al 2) karumpu (sugarcane), kan2n2al.
Campantar (7th century CE) sings "karunal paravai kamaz kAzi"
Can this *karunal taken to mean sugarcane??
karnATu appears to be a back formaton from kan2n2ATu (boulder/hill
country).

Is this "rm to mm" and "rN/rn to NN/nn" assimilation observed in
both Aryan an Dravidian languages, an area defining feature
like echo words, reduplication, onomotopoeic words, etc.,?
If not, is this observed in other language families?
----------------------------------------------------

பேரா. கி. நாச்சிமுத்து, தலைவர், இந்திய மொழிகள்துறை, ஜவஹர்லால் நேரு பல்கலை, தில்லி. தந்த மறுமொழி:
http://list.indology.info/pipermail/indology_list.indology.info/1999-June/017775.html
<<<
Dr.K.Nachimuthu
Professor & Head,Department of Tamil
University of Kerala,Kariavattom-695581
Thiruvananthapuram,Kerala,India

The following are the other examples I have come across for the
above consonant assimilation in Tamil Lexicon. kannikaaram kan2n2aGkariya, peru > pen2n2amperiya, ciRu > cin2n2aJciRiya.
Here in the reduplicative compounds, the reduplicated parts show
a correspondance which can be traced back to the assimilation/or
dissimilation by back formation of rm or nm:

kar/kan>karum>karm>kanm>kannam-;
peru/pen>perum>perm>penm>pennam;
ciRu/cin>ciRum/cirum>cirm>cinm>cinnam.
See also the following example:kunai/konai"the sharp point or tip
of a thing'=kUrmaiyAna pakkam" with the word kUr(mai).
konai is widely used in Kongu dialect.This word has cognates in
Telugu, Kannada and Tulu.

The correspondence and assimilation may be a proto feature.
anbuDan K.Nachimuthu >>>


பேரா. ஆஸ்கோ பார்போலா இந்த வியாபகம் ஏன் வடமொழிகளில் இருக்கிறது? என விளக்கினார்
The Prakritic consonant assimilation may be due to a substratum influence of Dravidian originally spoken in North India: when people speaking a language with few or very simple consonant clusters speak another language with complicated consonant clusters such as Sanskrit, this is what tends to happen. I think the Tamil assimilation provides a parallel showing that this is indeed a likely hypothesis.
With best regards,
Asko Parpola"

செம்மொழி தமிழ் பற்றி கவிஞர் குலோத்துங்கன் (வாசெகு) கோவையில் உரையாற்ற, அருகே அமர்ந்து இருப்பது அசோகன் பார்ப்போலா.
http://www.youtube.com/watch?v=6ABmBPLE66E



இரண்டு உயிரெழுத்துகளுக்கு இடையில் வரும் ககரத்தின் உச்சரிப்பை  ḫ எனக் குறிக்கவேண்டும் [2]:
For the Phoneme-Grapheme correspondences in Tamil: 
http://www.lisindia.net/Tamil/Tamil_script.html 

Note that -c- becomes -s-, 
and -k- is -[x]- (IPA notation for voiceless velar fricative). 
Usually Tamil scholars denote [x] with a h 
(e.g., Ci. Ilakkuvanar, G. L. Hart, N. Deivasundaram, ...) 
The problem with -h- is that it is a voiceless laryngal sound, 
rather than a voicelss velar fricative. 

How do we denote 'voiceless velar fricative' 
of intervocalical -k- sound when we use 
a sound-based transcription of Tamil text into 
Roman script, say, in our mobile 
phones?  Linguists give the answer: 
For example, Semitic languages: outline of a comparative grammar By 
Edward Lipiński 
http://books.google.com/books?id=IiXVqyEkPKcC&pg=PA103&dq=%22voiceless+velar+fricative%22+h&hl=en&ei=5bVUTKOZAYH88AbD9ZiyBA&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CCkQ6AEwAQ#v=onepage&q=%22voiceless%20velar%20fricative%22%20h&f=false 

Use a small arc beneath 'h' to denote voiceless velar fricative 
sound so common in Tamil words. Jaffna Tamil, as it retains 
archaic featues such as (a) medial deictic (u) - uvan, uvaL, utu as in 
Sangam poetry 
as in every day speech (b) the meaning of Om as in early Sanskrit 
poems showing the praNava mantra origins (Cf. Parpola's paper), 
also retains (c) this ancient Tamil phonology for intervocalical -k-. 
ḫ ḫ as muruḫan, azaḫu, aḫam, tamizaḫam, muḫil, etc. etc., 

This voiceless velar fricative (ḫ, [x] in IPA) is not the voiced 
plosive letter, g as written in English newspapers of Madras. 
This may be due to influence from Telugu or Kannada journalis

-----------------------------------------------------------------------------------------------

சந்தவசந்தம் குழுமத்தில்:

On Thursday, August 8, 2013 6:50:45 PM UTC-7, siva siva wrote:
இரா. திருமுருகன் - 'இனிய தமிழைப் பிழையின்றி எழுத எளிய வழிகள்' என்ற நூலிலிருந்து:

அருகாமை (பிழை) --> அருகில் (சரி)

நன்றி, சிவா. ஆனால் உருண்டை - உண்டை என்பது consonant assimilation. 
வழக்கிலும், இலக்கியத்திலும் உள்ளதுதான். எனவே, உண்டை என்று பயன்படுத்துவதில் பிழையில்லை.

”உண்டை வானரரும் ஒள் வாள் அரக்கரும் ”

முன்னர் மந்தரையின் கூன் முதுகில்
விளையாட்டுக்கென உண்டை செலுத்தி அதனால் அரசினை விட்டுக் காடு
வந்ததையும் இது நினைப்பிக்கும். 'பண்டை நாள் இராகவன் பாணிவில்
உமிழ் உண்டை உண்டதனைத் தன் உள்ளத்து உன்னுவாள் (1447) என
வருதல் காண்க. 


உருண்டை > உர்ண்டை > உண்டை.
பெருமான் > பெர்மான் > பெம்மான்
நெருநல் > நென்னல் (இன்னெலெ - மலையாளம்)
வடமொழிகளிலும் உண்டு:
கூர்மம் > கும்மம்
கீர்ண > கிண்ண 
...

நா. கணேசன் 


மண்ணின் மைந்தர் - கவிஞர் குலோத்துங்கன் கல்விக் காட்சியகம், தென்னிலை, கரூர்

அண்மையில் கல்வியாளர் கவிஞர் குலோத்துங்கன் (பத்மபூஷண் முனைவர் வா. செ. குழந்தைசாமி) சொந்த ஊரில் நடைபெறும் கல்லூரி சிறப்பான விழா எடுத்து அவரது தன்வரலாற்று நூலை அறிமுகம் செய்தது. அக் கல்லூரி நிர்வாகிகளுக்குப் பாராட்டு! வாசெகு ஐயா பெற்ற பல்வேறு பட்டயங்களை தென்னிலைக் கல்லூரிக்கு நன்கொடையாக அளித்துவிட்டார். அந்த விழாக் காணொளியுடன் சில சொற்பொழிவுகளும் கேட்போம். தமிழ் எழுத்துச் சீர்மையின் மூலம் தமிழெழுத்துக்களை ஆங்கில மீடியம், அயல் நாட்டுத் தமிழர்கள் போன்றவர்கள் சிறந்த தமிழ் அறிவு பெற்று வாழ வழிவகுப்பவர். அவரது சென்னைப் பல்கலைக்கழகச் சொற்பொழிவு இணையப் பல்கலைத்தளத்தில் இருக்கிறது. கேட்டுப் பாருங்கள். தமிழை நவீன யுகத்துக்கு எடுத்துச் செல்லும் இணையப் பல்கலை நிறுவுனர் கவிஞர் குலோத்துங்கன் வாழி!

இன்று தமிழ் இணையப் பல்கலைக்கழகம் விரிந்த ஆலமரமாக தமிழ் வளர்ச்சிக்கு உலகெங்கும் துணையாக விளங்குகிறது. உலகிலேயே முதல் முறையாக ஒரு மொழிக்கென இணையத்தில் ஒரு பல்கலைக்கழகம் நிறுவப்பெற்றது உலகின் ஆறு செம்மொழிகளில் ஒன்றாய தமிழ்மொழிக்குத் தான். இணையப் பல்கலைச் சிந்தனை கவிஞர் குலோத்துங்கன் (முனைவர் வா. செ. குழந்தைசாமி) அவர்களுக்கு முதலில் உதித்தது. அதை நடுவணரசிடம் சென்று நடைமுறைப் படுத்தியும் செய்த செயல் வீரர் அவர். இன்று அவரோடு 1970களில் இருந்து தமிழ்ப் பணியாற்றும் பேரா. ப. அர. நக்கீரனார் இயக்குனராக இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட அருந்தமிழ் நூல்களை வெள்ளுரையாகவும் (plain-text unicode), பிடிஎப் கோப்புகளாகவும் இணையப் பல்கலைக்கழகம் வேண்டுவோர்க்கெல்லாம் பகிர்ந்தளித்து வருகிறது. முந்தை நாளில் தமிழ் ஏடுகள் தீயாலும், வெள்ளத்தாலும், கரையானாலும், கவனிப்பாரின்றியும் அழிந்தன. நம் முன்னோர்கள் அச்சிட்ட லட்சக்கணக்கான நூல்கள் படிப்பாரும், பாதுகாப்பாரும் இன்றி விரைவில் அழியும் தறுவாயில் உள்ள அவலத்தைத் தமிழ்நாடெங்கும் காண்கிறோம். ரியூனியன், தென்னாப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, நார்வே ... போன்ற நாடுகளில் தமிழ் பேசாத, எழுதாத மரபுவழித் தமிழினத்தார்களுக்குத் தமிழ் போதிப்பது இணையப் பல்கலையின் முக்கிய நோக்கம். ஆனால், அது ஒரு கூறுதான். அதை விடவும் முக்கியமானது நூல்களை பிடிஎப் ஆக்கி ஆய்வாளருக்கு அளித்து தமிழாராய்ச்சியை உலகத்தின் சிறந்த பல்கலைகளில் விரிவாக்க உதவுவதாகும். தமிழறிஞர்கள், மொழியியல் பேராசிரியர்கள் கருத்தாடும் ஆய்வுக்களங்களில் (உ-ம்: செந்தமிழ் குழுமம் (பாரிஸ் பல்கலை), இந்தாலஜி லிஸ்ட், ...) பயன்படும் வகையில் இந்த 19-ஆம் நூற்றாண்டு, 1950-60 வரை அச்சான தமிழ் நூல்கள், நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்களை முழுதுமாய்த் தரும் பெரும்பணி போன்றவை வழிகாட்டியாய் விளங்கும். இந்த பிடிஎப், வெள்ளுரை என நூல்களை அளிக்கும் பணியை அரசாங்க வரிப்பணத்தில் செய்தால் இணையப் பல்கலைக்கழகத்தின் செந்தமிழ்க் கொடையாக விளங்கும். சிங்களக் காடையர் யாழ் பல்கலையை எரித்த போது, எழுத்தாளர் சுஜாதா ‘ஒரு லட்சம் புத்தகங்கள்’ என்ற கதையை எழுதினார். அது யாழில் ஏற்பட்ட தமிழ் அழிப்பை லட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு எடுத்துச்சொன்ன எழுத்து. ‘ஒரு லட்சம் புத்தகங்கள்’ இணையப் பல்கலையில் அதன் அதிகாரிகள் வழங்கும் நாள் செந்தமிழின் பொன்னாள்!

இன்று இணையம் ஏற்பட்டுப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், தமிழ் வளர்ச்சி, தமிழாய்வின் வளர்ச்சி என்று பார்த்தால் இணையத்தில் அதிகமாக இல்லை என்றுதான் நான் குறிப்பிட்டாக வேண்டியுள்ளது. 8 கோடித் தமிழர்கள்! ஆனால், வெறும் 10,000 வலைப்பதிவுகள். அதிலும் எழுதுவோர் தொகை ஆயிரத்துக்கும் குறைவே. சினிமாதான் அதிலும் பெரும்பங்கு. ஒரு 10 மின்குழுக்கள். அவ்வளவுதான். உலக அறிவும், விஞ்ஞானமும் ஆங்கிலத்தில் நாள்தோறும் விரிந்தும் பரந்தும் வளர்ந்துவருகிறது. ஆனால் அதுபோல், பாரதி, பாரதிதாசன் கனவாகிய தமிழ் வளர்ச்சி இருக்கிறதா? என்று பார்த்தால் காணோமே. அரசை எடுத்துக் கொள்ளுங்கள்: எத்தனை தமிழ்நாட்டு அரசாங்கத் தளங்கள் தமிழிலே இருக்கின்றன? பெரிதாக ஒன்றையும் காணோமே. இதற்கெல்லாம் விடிவாக தமிழ் இணையப் பல்கலை ஒன்றுதான் தெரிகிறது. அதுபோன்ற தளங்கள் மிக வேண்டும். புராணிகர்களுக்குக் கூட இணையப்பல்கலை தரவுதளங்கள் மிகுதியும் பயனாகிறது என்பது அனுபவத்தில் கண்டுள்ளேன். ’திடீர்’ சாம்பார் போல, ‘திடீர்’ புலவர்கள் ஐயா இவர்கள்’ என்று தமிழ்ப் பேராசிரிய நண்பர்கள் நகைச்சுவையாய்க் குறிப்பிடுகின்றனர். 8 கோடி தமிழ் பேசும் மக்களில் ஆயிரம் பேருக்குக் குறைவாக எழுதும் நிலை மாறி, பல லட்சோபலட்சம் தமிழர்கள் விரிவாக தங்கள் ஆராய்ச்சியை இணையப் பல்கலை போன்றவற்றைப் பயனித்து எழுதும்போது புராணிகக் கதைகள் மாறி அறிவியல் பார்வைக்குத் தமிழ் வளரும் என்பதுறுதி. தாய்லாந்து, கொரியா மொழிகளில் எத்தனை லட்சம் பேர் எழுதுகிறார்கள் இணையத்தில் என்று பார்த்தால், தமிழ், தமிழாய்வு செல்லவேண்டிய தூரம் நன்கு தெரிகிறது.

அண்மையில் மரை என்றால் Antelope. மரையூர், மரைக்காடு என்னும் பழந்தமிழ்ப் பெயர்கள் கொண்ட ஊர்கள் மிகுதி. இடைக்காலத்திலே ரகர > றகர திரிபு ஏற்பட்டதால் மறைக்காடு எனத் திரிந்துள்ளது. ’வேதம் அஃறிணைப் பொருள், அது எப்படி சிவனை வழிபடும்? மனிதர்கள் அல்லவா மறைப்புத்தகம் படிக்க வேண்டும்?’ எனவே, மறைக்காடு ஆனது என்பது புராணக்கதை, விஞ்ஞானத்துக்குப் பொருத்தமில்லாத கதை என்பார் பாவாணர். அதேபோல் தான் வரகூர் என்னும் பழந்தமிழ்ப் பெயருக்கு தேசாந்திரியாய் வந்த தெலுங்குநாட்டு 18-ஆம் நூற்றாண்டு சுவாமிகளுக்கு வரகூர்ப் பொருளும், தமிழ் உச்சரிப்பும் விளங்காததால் ஊரை புரி என்றும், வரகை வராஹம் என்றும் மாற்றியதையும் விளக்கினேன். அதற்கேற்பட்ட கதையை 'Urban myth' என்பர். வரகூர் மாறியிருப்பது சென்னையின் Urban mythகளில் ஒன்று எனத் தெளிவாகிறது. சென்னைத் தமிழறிஞர் ஒருவர் பர்கூர் (Burgur) என்பதும் வரகூர் என்பதன் திரிபுதான் எனக் காட்டினார். ஆர்க்காடு ஆறுகாடு (ஷடாரண்யம்) என மாறியதுபோல, மரைக்காடு வேதாரணியம் (மறைக்காடு) ஆகியுள்ளது. எனவே தான், தமிழ்ப் பேராசிரியர்கள் பலர் (உ-ம்: முனைவர் தி. நெடுஞ்செழியனார், மயிலாடுதுறை, 2008) அறிவுறுத்துவது போல மரைக்காடு என்று வேதாரணியத்தை பழந்தமிழ்ப் பெயரால் அழைத்தல் சிறப்பு. முதலில், பத்திரிகைகள் இதனைச் செய்ய தமிழ் முனைவர்கள் திருப்பூர் கிருஷ்ணன், அண்ணாகண்ணன், வல்லமை இதழாளர்கள் போன்றோர் முன்வரவேண்டும். அப்போது இளைஞர்கள் பழந்தமிழ்ப் பெயரை அறிந்துகொள்ள ஏதுவாகும். ஆர்க்காடு, மயிலாடுதுறை, மரையூர், மரைக்காடு, ... எனத் தமிழர் எழுதுதல் தமிழ் வரலாற்றுக்கும், தமிழின் விஞ்ஞான வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். மரைக்காடு பற்றி விரிவாக இராமகி ஐயா பலமுறை எழுதியுள்ளார். நூலாராய்ச்சிகளில் சிறந்த தமிழறிஞர்கள் பலரும் 60-70 ஆண்டுகளாய் விளக்கிவரும் ஆய்வுமுடிபுகள் இவை. நேற்று கவிமாமணி இலந்தை ராமசாமி ஹ்யூஸ்டனில் பாரதியார் கலைமன்றத்தில் பேசியதைப் பற்றி அகத்தியர் குழுவில் எழுதியிருந்ததைப் பல்லாண்டுகட்குப் பின்னர் படித்தேன். ரகர, றகர வேறுபாட்டை எவ்வளவு நுட்பமாக பாரதியார் கையாண்டுள்ளார் என இலந்தை விளக்கியிருக்கிறார். அதேபோல, ரகர, றகர வேறுபாடுகள் ஊர்ப்பெயர்களில் உள்ள முக்கியத்துவம் தமிழர் வாழ்வில் பனுவலியல் ஆய்வினால் தெளிவாகிறது: ஆர்க்காடு > ஆற்காடு (ஷடாரணியம் என ஆனது!!), ஏர்க்காடு > ஏற்காடு, மரைக்காடு > மறைக்காடு ... பாரதியார் வலியுறுத்தும் செந்தமிழின் ரகர, றகர நுட்பங்களைத் தமிழ் ஊர்ப்பெயர்களில் ஆர்க்காடு, மரைக்காடு, மரையூர் என்பவற்றில் பயன்படுத்துவதன் இன்றியமையாமையினை விளக்கி ‘மரை, மரையூர், மரைக்காடு’ என்று கட்டுரை எழுதலாம். Smile of Murugan is  a great intro by Zvelebil to Tamil literature. முத்தமிழ் வினோதன் மரைமகள் மணாளன் முருகன் தமிழர் ஆர்க்காடு, மரையூர் போல மரைக்காடு, முதுகுன்று, மயிலாடுதுறை, ... எனும் போது முறுவல் புரிகிறான்!

என் போன்ற பலரை அறிவியற் பார்வையில் தமிழாராய்வு செய்யத் தூண்டிய பேராசான் வாசெகு ஐயாவின் காணொளிகள் சில காண்போம்!

நா. கணேசன்

At MIT, Dr. VCK speech - Tiru. APJ Abdul Kalam, President of India


கலைக்களஞ்சியம் சிடி வெளியீட்டு விழா:


திருக்குறள் விழா, சிங்கப்பூர், 1994



தமிழ்ச் செம்மொழி பற்றி - ஆஸ்கோ பார்ப்போலா அருகில் இருக்கிறார்.

கவிஞர் குலோத்துங்கன் - தென்னிலை கல்லூரிவிழாக் காணொளி:

அண்ணா பல்கலைக்கழகத்தில் கவிஞர் குலோத்துங்கனின் பயோ-டேட்டா:
http://www.annauniv.edu/cpde/Forms/BIO/VCK_Bio-Data.pdf