பத்மசிறீ ஐராவதம், பத்மபூடணம் ஜெயகாந்தன்

இந்த ஆண்டு பல தமிழ்நாட்டுக் காரர்களுக்குப் பத்மம் விருதுகளை இந்திய அரசு வழங்கிக் கௌரவித்துள்ளது. பாராட்டுதல்கள்!
http://www.hindu.com/2009/01/26/stories/2009012656850400.htm

6-7 ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு ஆண்டொன்றுக்கு ஏற்றுமதி செய்து இலட்சக்கணக்கில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நகரமாகத் திருப்பூரை மாற்றியமைத்தவர்களுக்கு அங்கீகாரமாக ஏ. சக்திவேல் அண்ணனுக்கு பத்மஸ்ரீ பரிசு! அண்மையில் வெளிவந்துள்ள ஹரீஷ் தாமோதரனின் புத்தகத்தில் திருப்பூரின் பொருளாதார வளர்ச்சி பற்றிப் படிக்கலாம்.

120 ஆண்டுகளாய் ஹார்வர்ட் ஓரியெண்டல் சீரீஸ் பழைய நூல்களை செம்பதிப்பாய் அச்சிடுகிறது. இருக்குவேதம், புத்த வசனம், திரிபிடகம், மகாயானம், ... என்றே இருக்கும். இந்நிலையை மாற்றியவர் ஐராவதம் மகாதேவன்!
http://www.hindu.com/mag/2007/02/04/stories/2007020400260500.htm

2003-ல் ஐராவதத்தின் Early Tamil Epigraphy : From the Earliest Times to the Sixth Century A.D ஹார்வர்ட் ஓரியெண்டல் வரிசை வெளியீடாக வந்தது.

வாய்மொழி இலக்கியமாக இருந்த தமிழ் எழுத்தை எவ்வாறு அடைந்தது?
http://www.hinduonnet.com/fline/fl2007/stories/20030411001208100.htm
http://www.varalaaru.com/Default.asp?articleid=729

ஐராவதச் செவ்வி,
Straight from the Heart - Iravatham Mahadevan
http://www.varalaaru.com/Default.asp?articleid=740

பத்மஸ்ரீ ஐராவதத்திற்கு வாழ்த்துக்கள்!

----------------------------------------------------

பல ஆண்டுகளாக குமுதம், விகடன் எழுதி நவீன தமிழ் இலக்கியத்திற்குத் தொண்டு புரிந்துவரும் முருகேசன் என்னும் இயற்பெயர் கொண்ட செயகாந்தனுக்குப் பத்மபூடணம் விருது. ஏற்கெனவே சாகித்திய அகாடமி, ஞான பீட விருதுகளை வாங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

ஜெயகாந்தன் பெற்ற விருதுகள் போல மறைந்த எழுத்தாளர் சுஜாதா பெற்ற விருதுகள் என்னென்ன? என்பதறிய ஆவல். வெகுசனப் பத்திரிகைகளில் கதை எழுதிப் புகழ் படைத்த ஜெயகாந்தன், அசோகமித்திரன், .... போன்றோருக்கு அடுத்துத் தமிழின் பெரிய எழுத்தாளர்கள் கணினியை, வையவிரிவலையை ஒதுக்க முடியாது. சுஜாதா வலையுலகில் முதலில் எழுதிக் காட்டினார். கணினியுலகம் புதுப்புது நல்ல எழுத்தாளர்களைத் தோற்றுவிக்கும். கணினியிலும், தமிழ்நாட்டுப் பத்திரிகைகளிலும் எழுதும் எஸ்.ரா, ஜெயமோகன், சாரு, ஜமாலன், நாகார்ஜுனன், போன்ற அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள், அவர்களின் வாசகர்கள், ... என்று பெருகும்.

மரங்களை அழித்து வெட்டி இலட்சக்கணக்கான புத்தகங்களாக அச்சடித்து வினியோகிப்பதைவிட, இனி வரும் காலங்களில் சிறுகதை, நாவல் முதலிய புனைகதைகளை பிரபல எழுத்தாளர்கள் கணிவலையில் வைத்துவிட்டால் ஜனப்பெருக்கத்தாலும், காடுகள் அழிவதாலும், பேப்பர் தயாரிப்புத் தொழிற்சாலைகள் கெடுக்கும் சுற்றுப்புற இயற்கையும் இந்தியாவில் ஓரளவு சீராகும். தமிழ்நாட்டில் சுற்றுப்புற மாசு நீங்க புனைவு எழுத்தாளர்கள் மென்மேலும் கணிவலை உபயோகிக்க வேண்டும். செத்த மரத்துக் காகிதங்களைச் செதுக்கும் எழுத்தாளர்கள் புனைவுகள் மிகுதியாக வலையில் இடம்பெற்றால் இயற்கைக்கும் மரங்களுக்கும் பளுக் குறையும்.

இதைப் பத்மபூஷண் செயகாந்தன் போன்றோர் முன்னெடுத்துச் செல்லவேண்டும், அறிவுரை வழங்க வேண்டும்.

கணினி பற்றித் தெரியாதவர் ஜெயகாந்தன் போலும். அவர் வலையுலகில் எழுதாதவர். வலைப்பூக்கள், தமிழ்மணம், திரட்டி போன்ற மேடைகளை, புது ஊடகங்களின் ஆற்றலை இன்னும் பயன்படுத்தாதவர். சென்ற ஆண்டு சுஜாதா இரங்கல் கூட்டத்தில் "கணினி" என்ற சொல்லைக் கண்டுபிடித்தவர் என்று ஜெயகாந்தன் கூறினார்! அவர் உரை: "இது விமரிசன மேடையில்லை. உணர்வுகளை மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும். முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் அவர் என்னைத் தேடி வந்தார். அக்காலக் கட்டங்களில் மனைவியின் பெயரில் கதை எழுதுபவர்களை நான் கிண்டலடித்ததுண்டு. தமிழுக்கு அவர் கொடுத்த புதுமையான விஷயங்களை சிலாகிக்க வேண்டும். கம்ப்யூட்டருக்கு கணினி என சொல் உருவாக்கியது அவரே. அவரது விஞ்ஞானக் கதைகள் பாராட்டத்தக்கவை."



ஆனால், ஜெ.கா-வின் இக்கூற்று உண்மை அல்ல. "கணினி" என்னும் கலைச்சொல்லை மலாயா தொலைக்காட்சியிலும், சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியிலும் 1970களின் கடைசி, 1980கள் தொடக்கத்தில் பயன்படுத்தத் தொடங்கினர். 1990களின் மையம் வரை சுஜாதா கணிப்பொறி என்றுதான் எழுதினார்.

ஜெயகாந்தன் போன்றவர்கள் இனிக் கணினியில் கட்டுரைகள் எழுதவேண்டும். எழுத, எழுதப் பின்னூட்டங்கள் கிடைக்கும் அல்லவா?

நா. கணேசன்

பி. கு.:
http://rprajanayahem.blogspot.com/2009/01/blog-post_26.html
நாகேஷ், அசோகமித்திரன், .... இருக்கும்போதே விருதுகள் பெறுவரா?

ஸம்ஸ்க்ருதம், தமிழ் பற்றி மயிலாப்பூரில் ஜெயகாந்தனின் உரை (2005) கணினியுலகில் பெரும் சர்ச்சை ஆனது. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் ஜெ.கா-வுக்கு அனுப்பிய கடிதம்:
http://manikoondu.blogspot.com/2005/05/blog-post.html

7 comments:

Anonymous said...

ஐயா வணக்கம்
தமிழகச்சூழலில் ஐராவதம் அவர்களின் பணி மகத்தானது. அவரைப் போற்றுவது சிறப்பு.அவருக்கு இன்னும் கூடுதல் சிறப்புகள் கூட அமையலாம்.

ஞானபீடம் பெற்றவருக்குத் தாமரை விருதுகள் கிடைத்தமைக்குத் தமிழகத்தில் சலசலப்புகள் உண்டு.இளைய எழுத்தாளர்கள் செ.கா.வை விட இப்பொழுது சிறப்பாக எழுதுகிறார்கள். அவர்களையும் விருதுக்குழுக்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

செ.கா.விருது பெற்றமைக்கு அரசியல்பின்புலங்கள் உண்டு. செ.கா.எழுதி ஓய்ந்தவர்.

தமிழைத்,தமிழ்ப் புலவர்களைத் தன்னைத்தானே நக்கிக்கொள்ளும் நாய்கள் என்று தாழ்த்தியவருக்கு, செம்மொழிப் பரிசு கொடுக்கும் மூவர் குழுவில் தமிழாய்ந்த தமிழினத் தலைவர் வாய்ப்பு வழங்கினார்.

தமிழ்ப்புலவர்களை இழித்துரைத்த இழிமகனால் செம்மொழி அறிஞர்கள் விருதுக்குப்பட்டியல்தயாராகிவிட்டது. தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பரிசுகளை வாங்கமாட்டோம் என மானமுள்ள புலவர்கள் யாராவது மறுக்கிறார்களா?பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழ்மறவன்
தமிழ்நாடு

Yazhini said...

மதிப்பிற்குரிய கணேசன்,
ஐராவதம் மகாதேவன் சீரிய தமிழ் வரலாற்று ஆராய்ச்சியாளர். 2003 ஆம் ஆண்டில் ஹார்வாடு பல்கலைக் கழகம் வெளியிட்ட 'முந்தைய காலத்து தமிழ் எழுத்துகளின் ஆய்வு' ஓர் அரும்பெட்டகம் !

அறிஞர் மகாதேவன் அவர்கள் பணிக்கு தலை வணங்குகிறோம்.

கரு.மலர்ச் செல்வன்

L N Srinivasakrishnan said...

arumaiyAn2a aJcal; tiru airAvatam makAtEvan2 mElum tamizttoNTu ceytu pala virutukaLai peRa vENTum en2Ru vENTikkoLkiREn2.

AmAm; kaNecan2 aiyA - padmasri kku vallin2a 'Ra' tEvai tAn2A? allatu ituvum tan2ittamizA?

Anonymous said...

தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு பதம்பூஷன் விருது கிடைத்திருக்கிறது
வாழ்த்துகள்!!

*********
23.4.05 அன்று சென்னையில் சமஸ்கிருத சேவாசமிதியில் ஜெயகாந்தனுக்கு நடத்திய
பாராட்டுக் கூட்டத்தில் *ஜெயகாந்தன் பேசியது:*


''வர்ணவேறுபாடுகள் இருக்க வேண்டும். ஏற்றத்தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்க்கை
சுவாரஸ்யமாக இருக்கும். 'தமிழைவிட சமஸ்கிருதம் உயர்வானது.' பிறமொழிக்
கலப்பில்லாமல் தமிழில் எழுத வேண்டும், பேசவேண்டும் என்கிற
தமிழறிஞர்கள்,*தம்மைத் தாமே நக்கிக் கொள்கிற நாய்கள்.
* சமஸ்கிருதம் இங்கே ஆதரித்து வளர்க்கப்பட்டிருந்தால் ஆங்கிலம் இப்படி
நுழைந்திருக்காது.''
[...]

பொழச்சுப் போங்க அண்ணாச்சி!
அன்புடன்,
நெல்லை கண்ணன்...

நன்றி: http://kattamanaku.blogspot.com/2009/01/blog-post_25.html

Anonymous said...

என்ன பொழைக்க தெரியாத ஆளா இருக்கறீங்க. யாராவது விருது வாங்குனா உடனே பாராட்டினா எப்படி...

அவுங்க ஏதாவது ஏடாகூடாம சொன்னாங்களான்னு தேடி அவங்களை தமிழ்விரோதி, நாயே இப்படி வாய்க்கு வந்ததை திட்டினாத்தான் சூடான இடுகைகளில் இடம்பிடிக்க முடியும்!!!

Anonymous said...

நண்பா, இந்த பரிசு கனிமொழி வாங்கிக் குடுத்தது. முதலிலே, நோய்ப்பட்டபோது ஆஸ்பத்திரி செலவு எல்லாம் அவர்தான் கட்டினார். பின்னர் ஜெ.கா. ராஜாத்தி வீட்டில் தல இருக்கும்போது போய் நன்னி சொன்னார். இப்போது இந்த gift.

ஆட்சியை எதிர்த்து எதும் பேசாம இருக்க வாய்ப்பூட்டு.

நா. கணேசன் said...

ஐராவதம் வாழ்க்கை ஆல்பம்:
http://www.varalaaru.com/Default.asp?articleid=745