அமெரிக்காவில் போப்பரசர்

உரோமாபுரியின் வாட்டிகன் நகரில் இருந்து போப்பையா அமெரிக்கா வருகை தந்துள்ளார். அதனை முன்னிட்டு அவர் செல்லுமிடமெல்லாம் விழாக்கோலம். அவர் அணிந்துள்ள சிவப்புக் காலணிகள் கவனத்தை ஈர்த்துள்ளன, அவை மீண்டும் வாட்டிகன் பயணிக்க உள்ளனவாம்.

நியூ யார்க் நகரிலே க்ரௌண்ட் ஃசீரோவில் மெழுகுவர்த்தித் தீபம் ஏற்றிவைத்து போப் அவர்கள் ஆற்றிய உரை கேட்கலாம்.



ஊர் - தமிழர் பண்பாடு திரைப்படம்

எம். வி. பாஸ்கரும் கே. டி. காந்திராஜன் சேர்ந்து உருவாக்கிய "ஊர்" என்னும் 30 நிமிடத் திரைப்படம் தமிழ்நாட்டின் 2000 ஆண்டு கலை, இலக்கிய வரலாற்றை அழகாகச் சொல்லிச் செல்கிறது. இந்த விளக்கப்படம் தோன்ற வழிகாட்டியாக மொழியியல் அறிஞர் இ. அண்ணாமலை (மைசூர் இந்திய மொழிகள் உயர் ஆய்வு மையம், யேல் பல்கலை) உதவியுள்ளார். எச்சிஎல் கணினி நிறுவனத்தார் நன்கொடையால் சிறப்பான இப்படத்தை வலையில் காண இயல்கிறது.





































http://www.archaeologychannel.org/content/video/ur_700kW.html
http://www.hinduonnet.com/2006/07/02/stories/2006070206581000.htm

புற்றுநோய் கொல்லி - கான்சியஸ் ரேடியோஅலை எந்திரம்



'கேன்சருடன் ஒரு யுத்தம்' எனும் பதிவை புற்றுநோய்ப் போராளி அனுராதா அம்மையார் எழுதி வருவதைப் படித்து வருகிறீர்களா? http://anuratha.blogspot.com/

ஹ்யூஸ்டன் நகரின் பெரிய மருத்துவ மனையில் ஒரு வியத்தகு புற்றுநோய் நீக்கும் ரேடியோ அலைகள் எந்திரத்தை மரு. ஸ்டீவன் கர்லி குழு சோதனைகளுக்கு உட்படுத்தி வருகின்றது. இம்முறையில் ஜாண் கான்சியஸ் என்னும் பென்சில்வேனியாக்காரர் கண்டுபிடித்த ரேடியோஅலை தாக்கி எந்திரம் செலுத்தும் அதிரலைகளும் நவீன 'நேனோ' துகளியல் அறிவியலால் (Nanoparticle Science) ஏற்பட்ட பொன்-நுண்ணிகளும்(gold nanoparticles) இணைந்து செயல்படுவதால் பக்க விளைவுகளால் (side effects) ஊறு ஏற்படுத்தும் அறுவை சிகிச்சை, ரசாயன வேதி சிகிச்சை (chemo therapy) இல்லாமலே புற்று நோய்களைக் குணப்படுத்தச் சாத்தியங்கள் பல உள்ளன என்று ஆராய்ச்சி வல்ல மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

சிபிஎஸ் வீடியோ படம்:



மேலும் அறிய:
http://en.wikipedia.org/wiki/Non-invasive_RF_cancer_treatment
Sending cancer a signal:
http://www.southcoasttoday.com/apps/pbcs.dll/article?AID=/20071111/NEWS/711110306
John Kanzius interview (45 minutes):
http://video.google.com/videoplay?docid=5456334852158610212

நளினியும் பிரியங்காவும் வேலூரில்

நளினியைச் சந்தித்த பிரியங்கா காந்தி:
http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7347809.stm

பிபிசி செய்தியில் பார்த்தேன்.

'காபா' சாவி ஏலம்

மக்கா நகரில் உள்ள இஸ்லாம் சமயத்தின் புகழ் மிக்க 'காபா' கோயிலின் சாவிகள் இரும்பால் ஆனவை. 'அபாசித்' கலீபுகள் ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட இவற்றில் 58 சாவிகள் கிடைத்துள்ளன. ஒன்றைத் தவிர ஏனையவை தொல்பொருட் காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ளன.











தனியார் சொத்தான இருப்புக்குச்சி புகழ்பெற்ற ஸாத்பி'ஸ் (இலண்டன்) ஏலச்சந்தையில் விலைபோனது. 830 ஆண்டுகளுக்கு முன் உருவானதும், ஒன்றே கால் அடி நீளமுள்ளதும் ஆன இத் தாழ்க்கோல் 73 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கப்பட்டது. திறவுகோல் அரபியெழுத்தில் 'கடவுளின் புனித இல்லத்துக்காகச் செய்யப்பட்டது" என்று பொறிக்கப் பட்டுள்ளது.

தொடர்பாக, மேலும் உசாவ:
http://www.presstv.ir/detail.aspx?id=51141§ionid=351020601
http://en.wikipedia.org/wiki/Kaaba
http://en.wikipedia.org/wiki/Caliph
http://en.wikipedia.org/wiki/Abbasid

ஆப்பிரிக்காவில் தொடங்கிய மானுட வலசை

ஆப்பிரிக்காவில் தொடங்கிய மனிதகுலத்தின் வலசைச் செலவு இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

டிஸ்கவரி சேனலில் 'மைக்கேல் வுட்' எடுத்துள்ள ஸ்டோரி ஆப் இந்தியா ஏப்ரல் 16, இரவு 8 மணியில் இருந்து ஒளிபரப்பாக உள்ளது. மொத்தம் 6 தொகுதிகள், ஒவ்வொரு புதன்கிழமையும். (மறுபரப்பு ஞாயிறுகளில் காலை 11 மணிக்கு).பேரா. பிச்சப்பன் தொடங்கிய திரு. விருமாண்டியின் மரபணுச் சோதனைகள், கேரளம், ... என்று செல்லும் அந்த முக்கியமான
தொலைக்காட்சித் தொடரை யுட்யூப் போன்ற தளங்களில் வலையேற்றத் தமிழன்பர்களை வேண்டுகிறேன்.

http://www.thehindu.com/mp/2008/04/08/stories/2008040850020100.htm

http://www.hindu.com/seta/2007/08/23/stories/2007082350011500.htm

நா. கணேசன்

எனக்கு இச் செய்தி கிடைத்த இடம்:

http://www.thestatesman.net/page.news.php?clid=26&theme=&usrsess=1&id=198268

http://tinyurl.com/6o72j6

Identity saved from crisis

Where are we from? In a soon-to-be-screened documentary series we are introduced to Virumandi in whose DNA is the marker of the first human migrant from Africa, writes Mathures Paul
‘Our ancestors first walked out of Africa only 70,000 or 80,000 years ago, round the shores of the Arabian Sea and down into south India... When they came here to India they must have been overwhelmed by the fertility... Life was super abundant. So, here some of them stayed and they were the first Indians... And all non-Africans on the planet can trace their descent from those early migrations into India. The rest of the world was populated from here. Mother India indeed... And amazingly so long ago those first Indians have left their trail...’ says historian Michael Wood.
Around 70,000 years ago the first men migrated into India from Africa and possibly the vast stretches of fertile land made them stay on before spreading to other countries. Destiny or luck led Dr Ramasamy Pitchappan, professor emeritus and regional director ~ Genographic-India department (immunology), School of Biological Sciences, Madurai Kamaraj University, to a village in Tamil Nadu a few years ago. After the DNA of tribal villagers was tested, a clue that unveils the migrational history was found. He came across a man called Virumandi and in his DNA (Gene M130) was the marker of the first human migration that took place around 70,000 years ago. This important piece of information will be presented in The Story of India ~ a six-part series on Discovery Channel ~ which Michael Wood will anchor. During the course of the series, Wood tries to seek what keeps Indians united irrespective of caste, creed, religion or culture.

For Dr Pitchappan work started in 1996 and the journey has been a long, but fruitful, one. His team took samples from college students and tried to identify the markers. Michael Wood entered the picture only six or seven months back when he heard about the research. Fascinated, he delved deeper and learnt more about how the story of India began. “We provided evidence of the first migration to India... A few years passed between collecting samples and coming up with further enquiries. When my team approached the college, all the students had left. Old registers unveiled some addresses and one day I travelled 180 kilometres to meet three people. One person had already left the place, the second individual was not at home and here we have the third person, who during my visit was absent at home,” says Dr Pitchappan.
First his team isolated the DNA from the solution and then looked for specific markers in the solution, ancient markers which provide clues about migrational pattern. In his DNA was the marker of that first human migration. “Virumandi’s tribe practise south India’s and the world’s oldest form of marriage with first cousins. That way they have handed down some of mankind’s earliest genes. Some 50,000 or 60,000 years ago some people with M130 gene came over here and luckily somebody stayed on in this village and expanded and this we could identify. Now the entire village carries M130... The population slowly spread.”

The series captures more than just the story of one individual. Before languages were born, didn’t we communicate? We did. Mantras that were chanted then, are still heard in a village in Kerala.

An ancient clan of Brahmins lives here. The documentary shows the preparation for an ancient ceremony for the god of fire that takes 12 days to perform. For centuries these incantations or mantras have been passed down from father to son, only among Brahmins, exact in every sound. But some of the mantras are not in any known language. Only recently have our scientists been allowed to record them and tried to make sense of the chants... “The nearest analogue came from the animal kingdom. It was bird songs. These songs are perhaps tens of thousands of years old, passed down before human speech existed,” says the anchor.

These two incidents mark the beginning of The Story of India, before Wood travels to the site of the Harappan civilisation and then appears in Kolkata to learn more about the origins of Sanskrit. Nobody knows for certain as to why the Harappan civilisation disappeared, probably it was the climate. “The key was the shifting and drying up of rivers. Climate change isn’t just happening now, it happened in the past. All early settlements completely disappeared and caused this major shift eastwards into the central part of the Ganges plain. So climate change might have shifted the centre of gravity of Indian history, people moved following the rivers eastwards to new lands in a forested world that’s been sacred from that day to this, the plains of the river Ganges.”

The anchor takes us to the early centuries of AD and tells the story of the forgotten empire of the Kushans that ruled India in the first centuries AD.
The partition of India saw the migration of 14 million people, the largest in history; and up to a million died. Today, India is a global giant and it is predicted by some that by the 2030’s India’s GDP will overtake that of the USA. Yet, what holds us together? Dr Pitchappan has an answer... “Langauge can be adopted and the same with religion. It’s a kind of belief system. You believe in your system, in your education or in your capacity or in your family... whatever way you feel like... You have all the liberty to feel who you are. Because of this reason that India has become such a cosmos of humanity with a diversity but still with a unity.”
As Michael Wood says, “identity is never static, always in the making but never made.”

(The Story of India will be screened on Discovery Channel starting 16 April at 8 p.m.)

கவிப்பேரரசின் பொகையினகல்/புகைநகுகல் உரை

ஹொகேனகல் தமிழில் "புகையின்கல்" என்பதாம். காவிரி நீர் பாறைகளில் மோதி மேட்டிலிருந்து சமவெளிக்கு வேகமாய்ப் பாய்ந்து தமிழ்மண்ணைத் தழுவ ஆவலுடன் தாவும்போது ஏற்படும் நீர்ப்புகையால் ஏற்பட்ட காரணப் பெயர். 7-8 நூற்றாண்டுகளுக்கு முன்னே பகரம் ஹகரமாகக் கன்னடத்தில் திரிந்தது: பால் > ஹாலு, பல்லு > ஹல்லு, பக்கி ( < பக்ஷி) > ஹக்கி, பவழம் > ஹவளம் ... "பொகெயினகல்" (misty boulders) > ஹொகெனகல் (கன்னடம்). வெங்கால மரங்கள் மிகுதியால் வெங்காலூர் [1] என்று பெயரிடப்பட்ட பெங்களூரை இப்போது குற்றியலுகரத்துடன் பெங்களூரு என்கிறார்கள். வெந்த கொள்ளின் ஊர் என்று சொல்வது ஒருவகை Urban legend கதை. கல்வெட்டுகளில் வெங்காலூர் என்றே உள்ளது. கொங்கின் கரூர்ப் பக்கத்து உள்நாடுகளில் ஒன்றனுக்கு வெங்கால நாடு என்றே பெயர். அதனையும் ஒப்பிடலாம். இதனைப் பட்டீசர் கண்ணாடி விடுதூதில் காணலாம் (கண்ணாடி விடுதூது காண வேணுமாயின், Cf. http://projectmadurai.org). ஹொகேனகல்லு என்றால் தான் சரியான கன்னடமா? "கல்பொரு சிறுநுரையார்" என்ற சங்ககாலப் புலவர் வாழ்ந்தும் இருக்கிறார். நீறு பூத்த நெருப்பைப் போல நகுகிற சீதையை "நகுமோமு கனலேனி" என்று தியாகையர் பாடுவார். பொகெயினகல்லுவுக்கு இலக்கியப் பெயர் தேவையெனில் "புகைநகுகல்".

கவிப்பேரரசு வைரமுத்து சொற்பொழிவு:
பாகம் ௧:


பாகம் ௨:


காவிரியின் மேல் தமிழ்நாட்டுக்கு உள்ள உரிமைகளை முதலில் சொன்னவர் - கவிச்சக்கிரவர்த்தி ஒட்டக்கூத்தர் ஆவார். மூவர் உலாவில் உசாவலாம். கலிங்கத்துப் பரணி பாடியவர்; தமிழின் ஒரே உலகாயத நூலாம் காராணை விழுப்பரையன் மடல் இயற்றியவர். தமிழின் கருவூலங்களில் ஒன்றான மிக அழகிய இந்த வளமடல் அச்சேறாமல் இருக்கிறது. அதன் மூலச்சுவடியைக் காத்து அளித்தவர் பெரும்புலவர் வே. ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் அவர்கள். அதனைச் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரை முன்னியத்தில் அளித்தேன். அவ் அரிய நூல் தொடுப்பு:
http://www.tamil.net/projectmadurai/pub/pm0060/valamatal.pdf
பிற பின்,

நலமே விளைக!
நா. கணேசன்

[1] வெங்காலூர் இடப்பெயர் ஆய்வு (குணா போன்றோர்) எழுதியிருக்கலாம். அக் கட்டுரைகள் உள்ள பொத்தகப் பெயர்களைத் தந்தாலோ, இணையத்தில் இருந்தாலோ எனக்கு அறியத் தர வேண்டுகிறேன். நன்றி.

2008-ல் மிக அதிக மழை ஏன்? சின்னஞ்சிறு பெண் effect

நடைபெறும் 2008-ல் தமிழகத்தில் படுமழை. ஏன்? இதற்கு பூமத்திய ரேகைக்கு அருகே பசிபிக் மாக்கடலில் ஏற்பட்டுள்ள "லா நின்யா" (La Nina) தோற்றப்பாடு (phenomenon) தான் முக்கியக் காரணம். பசிபிக் மகாசமுத்திரம் சராசரிக்கும் மேலாகச் சற்றே குளிர்ந்துள்ளதே எல் நின்யா இயற்பாடு என்று பெயரிட்டு அழைக்கின்றனர். அண்மையிலே பூமிக்கோளத்தின் தண்மை-வெம்மையை ஆராயும் அறிஞர்கள் "எல் நின்யோ"(El Nino)/"லா நின்யா"(La Nina) என்ற இரு மாறுபட்ட தோற்றப்பாடுகளைக் கண்டறிந்து வரையறுத்துள்ளனர்.






எல் நின்யோவின் போது 2008ல் நிகழும் ல நின்யாவுக்கு எதிரான இயற்பாடு நிகழ்கிறது. எல் நின்யோ சென்றமுறை 1998-ல் நடைபெற்றது, அப்போது பசிபிக் பெருங்கடல் சற்றே சூடாகிப் போனதால், தென்னிந்தியாவில் வரலாறு காணா வறட்சி. காவிரி பாயும் தஞ்சைத் தரணியிலே விவசாயிகள் வங்குகளில் தோண்டிப் பிடித்த எலிக்கறி உண்ட அவலநிலை கண்டோம். ஏனைய ஊர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். பல குடும்பங்கள் கடனில் மூழ்கி மாண்டன. பசிபிக் சமுத்திரம் வெதும்பும்போது எல் நின்யோ மீண்டும் வருவது உறுதி - 2012-2014ல்?? தமிழகம் தாங்கத் தயாரா?

El Nino:


La Nina:




இப்போது நிகழும் ல நின்யாவைவிட எல் நின்யோ வரும்போது தான் பிரச்சினை. இந்த பருவ மாற்றங்களை எதிர்கொள்ள நடுவண்/மாநில அரசாங்கங்கள் தயாராக நடவடிக்கைகள் எடுக்கின்றனவா? சீனாவில் 1500 ஆண்டுகளாக கடலுக்கு ஓடிப்புகும் நதிகளை அணைகளால் தடுத்து விளைநிலம் ஆக்குவதை ஒரு கடமையாக எடுத்துச் செயல் ஆற்றிக்கொண்டே இருக்கின்றனர். ஆனால் நம்மூர்களில் அரசு மெத்தனம் உளதோ? என்ற ஐயம். ஏராளமாகத் தண்ணீர் கேரளாவில் கடலுக்கு விரைந்து ஓடுகிறது. தமிழ்ப் பேரா. கி. நாச்சிமுத்து 30 ஆண்டுகள் திருவனந்தபுரத்திலே கேரளப் பல்கலைத் தமிழ்த்துறையிலே பணியாற்றினவர். ஊர்ப்பெயர் ஆய்விலே (toponymy) பெயர்பெற்ற மொழியியற் பேராசிரியர், தற்போது ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை அமைத்திட டெல்லியில் இருக்கிறார். அவர் சொன்ன தகவல்: ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டும் ஒற்றுமையாக முடிவு செய்து ஒத்துக்கொண்டால் தான் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தருவது என்று கேரளாவில் சட்டம் இயற்றியுள்ளனராம். அதுவரை வீணாய் கடலுக்கு ஓடும்! எல் நின்யோவின் போது கேரளாவில் மழை குறையும் (1998-ல் பார்த்தது தானே). அப்போது கேட்டால் உறுதியாகத் தமிழ்நாட்டுக்கு ஒருசொட்டும் இல்லை என்பது வாடிக்கை. வங்கம், ஒரியம், ஆந்திரம் இந்நிலைதான். ஆனால் தெலுங்கானா, முகவை, கொங்கு, மதுரை, ... காய்கிறது. பல பத்தாண்டுகளாகச் செலவு செய்து நதிநீர் இணைப்பு பற்றிப் பேசியும், முன்னீடுகளை அரசுகளுக்குச் சமர்ப்பித்தும் தொடர்ச்சியாக எம். எஸ். உதயமூர்த்தி (1970களில் இருந்து), நா. மகாலிங்கம் (1960களில் இருந்து), பழ. நெடுமாறன், ஆனந்தராவ் (பரம்பிக்குளம் - ஆழியாறு அணைத்திட்ட எஞ்சினீயர்). முயற்சி பாராட்டத்தகுந்தது. மேதகு. அப்துல் கலாம் ஐயா நதிநீர் இணைப்புத் திட்டத்தை ஒருபடி மேலே ஏற்றி, இந்திய அளவிலே, அரசியல், மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அப்துல் கலாம் நதிநீர் இணைப்புக்காக சுரேஷ் பிரபு என்னும் அதிகாரியை நியமித்திருந்தார். ஆழியாற்றில் 'வாழ்க வளமுடன்' வேதாத்திரி மகரிசியின் ஆசிரமத்திலே சுரேஷ் பிரபு தலைமையில் கருத்தரங்குகள் நடத்தினார்கள். மத்திய மந்திரிகள், காஷ்மீர் கரண் சிங், ... வந்தார்கள். பிரபு அவர்கள் அமெரிக்கா வந்தபோழ்து அவருக்கு ஹூவர் அணைக்கட்டைக் காட்ட இந்திய எனிசினீயர்கள் சிலர் சேர்ந்து ஏற்பாடு செய்தோம், கொலராடோ நதியை மாபெரும் அணைகட்டி அடக்கியதால் தான் நெவாடா, கலிபோர்னியா (உ-ம்: லாஸ் ஏஞ்சலெஸ்) மாகாணங்களில் போன்ற பெருநகரங்கள் தோன்ற வழி வகுத்தது. இந்தியா செய்யுமா?

இப்போதைய 110 கோடி சனத்தொகை இந்தியாவில் 160 கோடியாகச் சில ஆண்டுகளில் ஆக இருக்கிறது:
India's big population challenge (BBC)

விளைநிலங்கள் காங்கிரீட் காடுகளாக இந்தியாவில் உலகமயமாதலினால் மாறிக்கொண்டுள்ளன. நகர்வாசிகளும், பணக்காரர்களும் ஓட்டும் மகிழ்உந்துகளுக்கான (pleasure cars, SUVs) எரிநெய்க்காக (fuel) கன்னெய் (கல்நெய் = பெற்றோல்) தீர்வதனாலோ, அல்லது எட்டாத உச்சிக்கொம்புக்கு விலை ஏறுவதாலோ நல்ல விளைநிலங்கள் ஒதுக்கப்படும் அபாயச் சூழல் உருவாகிறது.

காலங்காலமாக வேளாண்மையை மாத்திரம் தொழிலாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்து, படித்து வேலைக்குப் போன ஒரே ஒருத்தன் என்பதால் இதுபற்றி எழுத ஆசைப்பட்டேன். எல் நின்யோ தாக்கும்போது உருவாகும் பாரிய வரள்நிலையை, உணவுப் பஞ்சக் கொடுமையைப் போக்க நாம், நம் அரசுகள் என்ன செய்கிறோம்? என்ன திட்டம் இருக்கிறது?

கணித்தொழில் வளர்ச்சி மாத்திரம் போறாது. இந்தியாவில் பொதுமக்களின் வயிற்றுக்குச் சோறிட நதிகளின் நீர்கள் யாவும் விளை நிலங்களில் பாய, பயிர்த் தொழில் சிறந்திட வகை செய்ய வேண்டும். அக்கனவு மெய்ப்படணும். அதுவரை, இந்தியாவின் வளம், வசதிப் பேச்சுகள் எல்லாம் வெறும் முகத்துக்குப் பூசும் வெறும் பவுடர், அரிதாரந்தான்.

வாழ்க வளமுடன்!
நா. கணேசன்

பின்குறிப்பு:

எல் நின்யோ என்றால் சிறுகுழந்தை, சுட்டிப் பையல். ஸ்பானிஷ் மொழியிலே மேரிமாதா புதல்வர் இயேசுநாதர் பெயராக அதற்கு வைத்தனர். ல நின்யா என்றால் சிறுமி. நமக்கெலாம் மாரிக்கொடை வழங்கும் சின்னஞ்சிறு பெண். தில்லைக் காளி பற்றிச் சீர்காழி பாடிய மிகப்பிடித்தமான பாட்டு ஞாபகம் வந்தது. 20களில் இருப்போர் கேட்டிருக்கிறார்களா, அறியேன். உறவினர் பலரின் திருமணக் கச்சேரிகளில் நேரில் சீர்காழியார் பாடக் கேட்டதுண்டு. சிந்துபைரவி ராகம். அவர் மைத்துனர் உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் இயற்றிய பாட்டு. அதைக் கேட்க:
http://www.sirkali.org/chinnan.ram
பெண்குரலில்:
http://www.musicindiaonline.com/p/x/e4C2b_xZQ9.As1NMvHdW/


பல்லவி:
சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை இடைஉடுத்தி
சிவகங்கைக் குளத்தருகே ஸ்ரீதுர்கை சிரித்திருப்பாள்
(சின்னஞ்சிறு... சிரித்திருப்பாள்)

அனுபல்லவி:
பெண்அவளின் கண்அழகைப் பேசி முடியாது
பேரழகுக்கீடாக வேறொன்றும் கிடையாது
(சின்னஞ்சிறு... சிரித்திருப்பாள்)

சரணம்:
மின்னலைப்போல் மேனி அன்னை சிவகாமி
இன்பமெல்லாம் தருவாள் எண்ணம் எல்லாம் நிறைவாள்

பின்னல்சடை போட்டுப் பிச்சிப்பூச் சூடிடுவாள்
பித்தனுக்கு இணையாக நர்த்தனமும் ஆடிடுவாள்
(சின்னஞ்சிறு... சிரித்திருப்பாள்)

La Niña:
http://en.wikipedia.org/wiki/La_nina
http://www.nationalgeographic.com/elnino/mainpage.html

தமிழ்ப் புள்ளிக் கோட்பாடும் பெருமையும்

யூனிக்கோட் 5.1 ஏப்ரல் நான்காம் தேதியில் இருந்து இயங்கவுள்ளது. அதில் உள்ள எழுத்துக்கள்:
http://www.unicode.org/Public/5.1.0/ucd/NamesList.txt

வங்காளியில் கண்ட-எழுத்து (த்):

தமிழ் தவிர, மற்ற இந்திய மொழி இலக்கணங்களில் தனி மெய்யெழுத்துக்களுக்குப் பெரிய முக்கியத்துவம் இல்லை. இந்தியில் மெய்களை அங்கே ஹல்லந்தம் என்பர். ஆனால் அதற்கு இலக்கணத்தில் அடிப்படையாக அங்கே பார்த்தால் காணோம். தனி மெய் இலக்கணமே பிற்காலத்தில் தான் வடநாட்டில் ஏற்படுகிறது. தமிழ் அல்லாத பிறமொழி அகராதிகளைப் பாருங்கள் - எதுவும் தனி மெய்யெழுத்தில் தொடங்காது (இத்தனைக்கும் அவற்றில் மெய்யெழுத்தில் துவங்கும் வார்த்தைகள் அனேகம் இருக்கும்). வங்காள மொழியில் "கண்ட தகர மெய்யெழுத்து" என்ற ஓர் எழுத்து இருக்கிறது. கண்டத் தகர-மெய் பற்றி விலாவாரியாக அறிய: (அ) & (ஆ)

"இது ஒருவகை மெய்யெழுத்து. அதைக் குறிப்பிடும் வகையில் annotation கொடுங்கள்" என்று யூனிகோட் கன்சார்த்தியத்திடம் எழுதியிருந்தேன். 20 கோடி+ சனங்கள் பயன்படுத்தும் ஒரு மொழியின் எழுத்தொன்றுக்கு ஓர் இலக்கணக் குறிப்பைக் கொடுக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
http://www.unicode.org/Public/5.1.0/ucd/NamesList.txt

"09CE BENGALI LETTER KHANDA TA
* a dead consonant form of ta, without implicit vowel, used in some sequences"

தமிழில் புள்ளியின் தத்துவத் தாக்கம் மிக அதிகம். புள்ளி நம் மெய்யெழுத்துக்களில் இருப்பதனாலே, நமக்குக் கூட்டெழுத்துக்களின் தொல்லை இல்லை. புள்ளியை விராமம் (cessation) என்று பழைய தமிழ் நிகண்டுகள் பேசும். புள்ளித் தத்துவத்தின் விளைவாகத்தான் இந்திய மொழிகளில் முதன்முதலில் பல தொழில் நுட்பங்கள் வர வாய்ப்பமைந்தது. காட்டு: அச்சுப் புத்தகம் (ஐரோப்பாவில் இருந்து), தந்தி, தட்டச்சுப் பொறி, கணி எழுதுருக்கள், யாகூ குழுவில் 8-பிற் குறியீட்டில் தகுதர வலையாடல் [1]. மற்ற இந்திய மொழிகளுக்குப் புள்ளியால் ஆன தனி மெய்கள் இன்மையால் யாகூ குழுக்களில் தமிழ் ஒன்று மட்டும் இயங்கியது. தெலுங்கு, இந்தி போன்றன ரோமன் எழுத்தாக்கித் தான் எழுதினர்! ஒளிவழி எழுத்துணரி (ஓசிஆர்) நுட்பம் தமிழில் தான் உள்ள இந்திய எழுத்துக்களில் எளிமை.

உ/ஊ உயிர்மெய் எழுத்துச் சீர்மை - மக்களிடம் பரப்பும் வழி:

தமிழ் எழுத்துக்களை இன்னும் எளிமையாகக் கற்றுத்தர வேண்டும். யூனிகோடு குறியேற்றத்தில் ஃபாண்டை மாற்றினால், உ/ஊ உயிர்மெய்களை உடைத்தெழுத முடிகிறது. பயன் என்ன? என்று பார்த்தால், தமிழ் கற்கும் மக்களுக்கு நெடுங்கணக்கு வரிசை ஒரு தாய அணிவரிசை (Matrix of Tamil syllabary) ஆகிவிடுகிறது. 12 உயிர், 18 மெய், 10 உயிர்மெய்க் குறிகள், வேண்டுமானால் 5 கிரந்த எழுத்து என்று சுமார் 45 வரிவடிவங்களில் (glyphs) தமிழ் சீர்மை அடைகிறது [2]. நண்பர் உமர் தம்பி வாழ்கையில் எனக்காக வடித்துச் சில சீர்மை ஃபாண்டுகள் தந்தார். இயங்கு எழுத்துருக்களாகத் தமிழ் உ/ஊ உயிர்மெய்களின் சீர்மை எழுத்துருக்களை இலவசமாக வினியோகித்தால் வலைப்பதிவுகள், இணையத் தளங்கள் போன்றன உ/ஊ சீர்மை பயன்படுத்த வகை ஏற்படும் என்று நினைக்கிறேன்.

மேலும் பேசுவோம்,
நா. கணேசன்

[1] வலையாடி - netizen, one who writes in the web பொருத்தமாகத் தெரிகிறது. கொங்கில் பண்ணையைப் பார்க்கிறவரைப் பண்ணாடி என்றழைப்பது வழக்கம். தோட்ட மேலாளர் - காட்டுப்பண்ணாடி. சென்ற காலங்களில் பண்ணையமே மேலான தொழில், அதனால் "உங்க பண்ணாடி எங்கே?" என்றால் பண்ணாடிச்சி தன் கணவர் சென்ற இடத்தைச் சொல்லுவார். ஹஜ் பயணம் மேற்கொண்டவர்க்கு ஹாஜி என்பதுபோல, கங்கை, கயிலை சென்று மீண்டவரை கங்கையாடி, கயிலையாடி என்பது தமிழ்வழக்கு. கங்கையாடி பட்டர் சொல்லிக் கொடுத்த உரைகளுடன் மத்ய கேரளாவில் பகவதி கோவில் கூத்துமாடங்களில் புலவர்கள் கம்பனைத் தோல்பாவைக் கூத்தாக்கி வாரக்கணக்கில் நாடகம் நடத்தினர்.

[2] தமிழ் தட்டச்ச தமிழ்நெட்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள், உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுக. தமிழ்99 கூகுள்குழும நண்பர்கள் விசைப்பலகை ஒட்டிகள் செலவு செய்து தயாரித்துள்ளனர். வாங்கி ஆதரித்தால், தானாக தமிழ் டைப்ரைட்டர் விசைப்பலகை காலாவதி ஆகும் (டைப்ரைற்றர் தேவையில்லாமல் உ/ஊ உயிர்மெய்கள் பல இடங்களை அடைத்துள்ளது). தமிழ்99 விசைப்பலகை தான் தமிழ் தட்டச்சின் எதிர்காலம். தட்டச்சுப் பள்ளிகள் ஈழம், தமிழ்நாடுகளில் தமிழ்99க்கு மாற வேண்டும். அரசாங்கம் தமிழ்99 விசைப்பலகைகள் தயாரிக்க நிதிச் சலுகை அளிக்க வேண்டும். http://tamil99.org/