ஆஸ்டின் நூலகமும், புறநானூற்றுத் தாயும்

This poem was penned a quarter century ago. Tamil was just entering the computers and the internet then! And, no one thought about facebook, whatsapp, memes, etc., (social media). Fleeting fireflies.

from Facebook page of Kavignar Erode Tamilanban ilakkiya vaTTam,

 
 

Austin Library and the Mother of puṟanāṉūṟu
(Erode Tamilanban [1996]; translated by Nirmal Selvamony [2022])

Even now within me
burns the Texas sun;
even now within me
remain those moments
when skyward NASA rockets roar and soar.

But still
does the library
of Austin University
turn me page after page.

When the book lover
Pollachi Ganesan
into the computer net went,
held me and brought me,
within me was caught…
what great joy!

I, the person,
sent the arrow*
and out came the mother
of puṟanāṉūṟu
asking, “Why did you call me?”
“Do you like computer life?” I queried.

For how many years have I been lying down
on Palmyra leaves!
For how many years have I been standing
with aching feet
in paper streets!

In secure computer home
safe am I.
A single tap will do;
ready am I to come out
opening the door in a jiffy
said she
on whose lips
had science sketched lines of soft smile.

For the three-line Haiku tank
in which blooms three hundred flowers
when my fingers touched it,
it took out and gave me
three hundred volumes.

Boarding this dwarf-vehicle
when will my Tamil people
go around the world?

I asked the bard of Ettaiyapuram.
“When they contemplate
the cosmic forms,”
he answered.
Briskly I got up.   

* moved the cursor; originally, the cursor was an arrow pointing upward. It is variously called “mouse arrow,” “mouse cursor,” and “mouse pointer.” For an interesting Tamil verse on the computer mouse, see Naa. Ganesan’s  Tamil poem, “காலத்திற்கேற்ற ஊர்தி” (1998):

         ஒருநாளென் பெற்றோர் உவக்க வலம்வந்து
        அருமாங் கனியும் அடைந்தேன் - முருகன்
        அணிமயில் வேண்டாம் அகிலம் தொடலக்
         கணியெலி இன்றுண்டு காண்!

நீர்/நீல- போல, தொடரு-/தொடலு- ‘to communicate'.

---------------------------------------------------------
 
ஆஸ்டின் நூலகமும் புறநானூற்றுத் தாயும் !
   - ஈரோடு தமிழன்பன்
(உன் வீட்டுக்கு நான் வந்திருந்தேன், வால்ட் விட்மன் - நூலிலிருந்து).

இன்னும் இருக்கிறது
எனக்குள் டெக்சாஸ் வெயில் !
இன்னும் இருக்கிறது
எனக்குள் நாசா ஏவுகணைகள் சீறி
விண்ணில் கிளம்பும் தருணங்கள்.

எனினும்
என்னையே பக்கம் பக்கமாய்ப்
புரட்டிக் கொண்டிருக்கிறது
ஆஸ்டின் பல்கலைக்கழக நூலகம் !

புத்தகக் காதலன்
பொள்ளாச்சி கணேசன்
கணினி வலைக்குள் போய்
என்னைப் பிடித்து வந்தபோது
எனக்குள் பிடிபட்டது
எவ்வளவு மகிழ்ச்சி !

ஆள் நான்
அம்பை அனுப்பினேன்
புறநானூற்றுத்தாய்
புறப்பட்டு வந்தாள்.

“எதற்கு என்னை அழைத்தாய்”
என்றாள் - “கணினி வாழ்வு
பிடித்திருக்கிறதா ?” - கேட்டேன்.

"எத்தனை ஆண்டுகள்
பனை ஓலைகளில் படுத்திருந்தேன் !
எத்தனை ஆண்டுகள்
கால்கள் கடுக்க நின்றிருந்தேன்
காகித வீதிகளில் !

பாதுகாப்பான கணினி வீட்டில்
பத்திரமாக இருக்கிறேன்,
தட்டினால் போதும் - சட்டென்று கதவு
திறந்து வரக் காத்திருக்கிறேன்”
என்றவள் இதழ்களில் -
விஞ்ஞானம் போட்டிருந்தது
மெல்லிய புன்னகைக்கோடு.

முன்னூறு பூமலரும்
மூன்றடிப் பொய்கை ஹைகூவுக்காக
என்விரல் பட்டதும் - எடுத்துக்
கொடுத்தது முன்னூறு நூல்களை !

இந்த வாமன வாகனமேறி
வையகத்தை எப்போது
வலம் வருவார்கள் என் தமிழ்மக்கள் ?

எட்டையபுரத்தானைக் கூப்பிட்டுக் கேட்டேன்.....
“விசுவரூபங்களைத்
தியானிக்கும்போது” என்று சொன்னான்.

   விருட்டென்று எழுந்தேன்.  (1996).

from Facebook page of Kavignar Erode Tamilanban ilakkiya vaTTam,
நன்றி, நண்பர் பெ. சண்முகம். அமெரிக்கக் கூட்டுத் தமிழ்ச் சங்கப் பேரவை விழாவில் எல்லோரும் திருவள்ளுவர் திருநாளுக்கு இணையாக, தொல்காப்பியர் திருநாள் அறிவிக்க அரசை வேண்டுவோம்.  பெட்னா பேரவை, தமிழ்நாடு அறக்கட்டளை இரு பெரும் இயக்கங்களும் தொடர்ச்சியாக முயன்றால், மூத்த தமிழறிஞர்கள் வேண்டுகிற திருநாளில், மாதத்தில் தொல்காப்பியர் விழா ஆண்டுதோறும் அரசு எடுக்கும். அரசாணை அமெரிக்கத் தமிழர்கள் பெற்றால், கிழக்குத் திசையின் அரிஸ்டாட்டில் [1], செம்மொழி தமிழை ஆக்கிய தொல்காப்பியர் யார் என வெளிமாநிலத்தவரும், அயல்நாட்டாரும், வருந் தலைமுறைகளின் மக்களும் கொண்டாடவும்,  தேடிப் படிக்கவும் தூண்டும். நியூ யார்க்கில் அமெரிக்க விடுதலை நன்னாளில் சந்திப்போம்.  ~NG,  6/12/2022
 
[1] காப்பியர் பொருளதிகாரம் படைத்தார்; மேற்கே, அரிஸ்டாட்டில் Poetics இலக்கணம் தந்தார்.

Award at 48th TNF Convention, Mesquite, Texas

There was a grand 48th National Annual Convention of the Tamil Nadu Foundation conducted on May 27-29, 2022 at Mesquite, Texas. $ 1.8 million will be donated to Tamil mediums schools run by the Government all over Tamil Nadu. We sincerely thank the organizers for their grand fund raising efforts.  For the purpose of 1) poorest of the poor Tamil Nadu government school children to reduce the dropout ratio and help slow learners and 2) all the 22 Tamil Nadu government schools for the challenged children. The fund will be deposited as an Endowment and only the annual interest will be used for the above 2 needs.

I was honored with a prestigious award by TNF at the event for researches into the research on the relations of the Iron Age Tamil country with the Indus Civilization. BTW, Tamil name for Mesquite wood is Parambai. There is a town called ParambaikkuDi in Ramnad district. It is now ParamakkuDi.





















Mesquite :: பரம்பை மரம்
------------------------

ஆங்கிலத்தில் மெஸ்கிட் எனப்படும் மரம் பாலை நிலங்களில் வளர்வது. தமிழில் பரம்பை மரம் எனப்படுவது. பொள்ளாச்சியை வளப்படுத்தும் பரம்பிக்குளம் - ஆழியாறு அணைத்திட்டம். இதில், பரம்பிக்குளம் பரம்பை (mesquite) மரம் இருப்பதால் பெற்ற பெயர்.  வடமொழியில், சமி, வஹ்னி/வன்னி மரம்.

பரம்பை (Indian Mesquite tree), அதன் பெயரால் அமைந்த பரம்பைக்குடி - கல்வெட்டு:
https://groups.google.com/g/minTamil/c/FMwwYRRi22g/m/yUrGtENcAAAJ

English has its own rhythm, Look at the genus of Mesquites all across the World,
there are 40+ species of Mesquite trees,
https://en.wikipedia.org/wiki/Mesquite
Parambai is one such Mesquite, and Tamil botanists choose that English name to write in English. Let me give some examples from Madras Tamil Lexicon. கண்டி - சிந்தி மொழியில், தெலுங்கில் ஜம்மி <சம்மி < சமி .. கன்னடம் : பெரும்பெ, மலையாளம் : பரம்பு, தமிழ் - பரம்பை. https://www.flowersofindia.net/catalog/slides/Khejri%20Tree.html
https://en.wikipedia.org/wiki/Prosopis_cineraria

Prosopis specigera (Parambai) - Salem District Manual, vol. 2 1883
https://books.google.com/books?id=_ZEIAAAAQAAJ&
Also, see Gamble (Flora of Madras Presidency).

சீமைப் பரம்பை ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வருவது.
Seemai parambai = Prosopis juliflora
https://www.flickr.com/photos/dinesh_valke/2222290893
https://www.flickriver.com/photos/dinesh_valke/2275699043/

கதிரம் என்னும் கருங்காலி (அ) அசுவத்தம் என்னும் அரைசு - இரண்டும் தாய்த்தெய்வம் கொற்றவைக்கு உரியவை என்பது இந்திய மரபு. அரைசி என்னும் பெயரே அதனால் ஏற்பட்டது. அரை என்பது அரச மரம் (தொல்காப்பியம்).

பரம்பை என்னும் வன்னி மரம் சிவனுக்கு உரியது. பல சிவ ஸ்தலங்களில் வன்னி (=பரம்பை) மரம் ஸ்தல விருட்சம். வன்னி (வஹ்னி) என்னும் வடசொற் பெயர் சங்க காலத்திலே தமிழ்நாட்டில் வந்துவிட்டது. இடுகாட்டில் விடங்கர் வழிபாடு, முதுமக்கள் தாழிகள் கிடைக்கின்றன. அப்போது வன்னி மரம் குறிப்பிடப்படுகின்றது. அந்தச் சங்கப் பாடலை விரிவாகக் காண்போம்.

ஞெலிகோல்: வேள்வியில் தீ உருவாக்கும் முறை:
http://www.indictoday.com/long-reads/journey-here-to-eternity-vedic-ritual/
https://www.researchgate.net/figure/Instrument-used-for-production-of-yajna-agni_fig1_314550047
பாஞ்ஞல் கிராமம் (பாலக்காடு) அதிராத்ரம், 1975.
மிக அரிய ரிக்வேத வேள்வி இங்கே தான் இன்னமும் இருக்கிறது
ப்ரிட்ஸ் ஸ்டால் (மறைந்துவிட்டார்), பார்ப்போலா போன்றோர் பதிவு செய்த அதிராத்ரம்
https://www.hindu-blog.com/2011/04/kerala-panjal-vedic-yajna-athirathram.html
https://www.thehindubusinessline.com/todays-paper/tp-others/tp-variety/article28961667.ece#
கதிரம் (அ) அரசு கட்டையும், பரம்பை (= சமி/வன்னி, mesquite)  மரக்கட்டையும்
நெரித்து வேள்வித் தீயைத் தொடங்குவர். அரணி என்னும் வேத ஞெலிகோலில்
கதிரம் (பெண்), வன்னி (ஆண்) பாகங்கள் உள்ளன.பாம்பை, கருங்காலி மரங்கள் ஒரேவிதமான இலைகள் கொண்டவை.

பரம்பை என்னும் வன்னி மரம் பற்றிய சங்க இலக்கியச் செய்தியும்,
விடங்கர் வழிபாடு இடுகாட்டில் பரம்பையினோடு என்பதற்குப் பொருளும்
பின்னர் காண்போம். தேவாரத்தில் 50 இடங்களில் பரம்பை (=வன்னி) மலர்
சிவன் சூடுவதாக வரும், காரணம் இதுவே.

முதலில், கொற்றவையின் பூசகன் அட்டணங்கால் போட்டு கதிரை (கருங்காலி)
மர வாதில் வீற்றிருந்து வாகனமான புலியை ஏவும் சிந்து முத்திரைகள் பல
கிடைத்துள்ளன.
https://groups.google.com/forum/#!topic/houstontamil/Zu7hoFi9cbI  
 இவை கருங்காலி மரம் என்று ஆய்ந்து முதலில் எழுதியவர்
நியூ யார்க் மாகாண விவசாயியும், தொல்லியல் அறிஞருமான வால்ட்டர் ஃபேர்செர்விஸ்
ஆவார்.

வாலையின் பூசகன் சேலை மரத்தில் கொற்றியின் புலியை ஏவும் காட்சி:
Figure 11. Shaman on the tree and an attentive tiger below,
https://archive.org/stream/IVCReligionByNagaGanesan2007/IVC_religion_by_Naga_Ganesan_2007#page/n5/mode/2up

சேலை - சீலை - உறையைப் பட்டையாக உடுத்த வேலமரங்கள்.
கதிரம் - வடமொழியில் வழங்குவது, கதிரகாமம் - இம்மரங்கள் கொண்ட வனம். கதிராமங்கலம் - சோழர் குலதேவதை வனதுர்க்கை கோயில் உள்ள இடம், அங்கே, இராஜராஜன் சார்த்திய உடைவாள் இருக்கிறது என்பர்.

வேள்விகள் தொடங்க, பரம்பை என்னும் வன்னிக் கட்டையையும்,
அரசு (அ) கருங்காலிக் கட்டையையும்ஞெலிகோலாகக் கடைந்து தீ எழுப்புவது
மரபு. 3500 ஆண்டுகளாய்ப் பதிவாகியுள்ள “அரணி”யால் தீக்கடைதல் இது.
நாலாயிர பாசுர விளக்கங்கள், உபநிஷதங்களைப் பற்றிய உரைகளில்
அரணிக்கு பரம்பை (வன்னி) தவறாது இடம்பெறுகிற மரம் ஆகும்.
முண்டக உபநிஷதத்தில் அரணி என்பதன் விளக்கத்தில் பரம்பை
என்று குறிப்பிடப்படுதலை முன்னர் கொடுத்துள்ளேன்.

அரசு, கருங்காலி (acacia catechu) - தாய்த்தெய்வத்துடன் தொடர்புடையது.
சிந்து முத்திரைகளிலே கருங்காலி மரக் கிளையில் அம்மையின் பூசகன்
அமர்ந்து, கீழே உள்ள புலியை (வாகனத்தை) ஏவுவதைக் காணமுடியும்.
அரச இலைகளால் இயன்ற தோரணத்தின் (கோயிலின்) கீழே அரைசி/கொற்றவை நிற்கிறாள். இதனை ஹரப்பா முத்திரை காட்டுகிறது.
Prof. Rich Meadow (Harvard University) sent me this picture, what he found in Harappa.
Look at the girl standing under the arch of Arasu (Bodhi) tree leaves:
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWqIK21gEs1jJgXVZOq-SyNAl53Wa6vpvPzi5cyUmQgJTdekuoLFSQF0uVjkmMaCLlG77McfwwmRwJHilV4JWNcN2I_fP4805zYctTsuEsxrbmPposjD-QHphTdsVFKeVNu4gttA/s1600/Terracotta_tablet-2sides-H95_2485.jpg  
http://nganesan.blogspot.com/2008/01/eru-tazuval.html  
http://dakshinatya.blogspot.com/2008/11/zebu-buffalo.html  

பரம்பை மரம் போர், இறப்பு இவற்றுடன் தொடர்புடையது. விஜயதசமியின் போது
மன்னர்கள் பரம்பை மரத்தை வணங்குவர். பரம்பை என்பதற்குப் பதிலாக,
வன்னி என்ற வடசொல்லை சங்க இலக்கியம் ஆள்கிறது. போர் வர்ணனை (புறப்பாடல்),
முதுமக்கள் தாழி இடும் காடு (பதிற்றுப்பத்து) - இரண்டு இடங்களிலே இந்த வன்னி
என்னும் பரம்பை மரத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். மழுவாள் நெடியோன்
என்னும் வருணன் இறத்தலுக்கு அதிபதி தெய்வம். அவனது மழுவாள் நெடியோன்
வடிவத்தைப் பெருஞ்சிற்பமாக முதுமக்கள் தாழி உள்ள இடங்களில் நாட்டி வழிபாடுகள்
வன்னி மன்றத்தில் நடந்துள்ளன. விடங்கர் வழிபாட்டின் அமிசமாக இருந்த
வன்னி தேவார காலத்தில் சிவன் அணியும் முக்கியமான மலராக ஆகிவிட்டது.
ஏராளமான சிவ ஸ்தலங்களில் பரம்பை (= வன்னி, வடசொல்) ஸ்தல வ்ருக்ஷம் .

    பரம்பை - வன்னி மரம் (அ) சமி மரம். நூற்றுக்கணக்கான ஆவணங்களில் பார்க்கலாம்.
    அருணகிரிநாதர் சித்த வைத்தியம் பற்றி ஓர் அரிய வகுப்புப் பாடியுள்ளார்.
    சித்துவகுப்பு. அரிய உரை தணிகைமணி வ. சு. செங்கல்வராயபிள்ளை அருளினார்.

    http://kaumaram.com/vaguppu/vgp16.html
    அகில்ப ரம்பை காரை துடரி தும்பை சூரை
    அலரி சம்பு நாவல் மருது சிந்து வாரம்  ...... 13
    (அருணகிரிநாதர் சித்துவகுப்பில் பரம்பை மரம் பற்றிக் குறிப்பிடல்).

    பரம்பை - 13: இது ‘வன்னி மரம்’. இதனால் ‘வளிசன்னி, முப்பிணி, நஞ்சு, சொறி நீங்கும். ‘வாத சந்தி தோடமறும் ...’ விடமும் கபமும் சொறியும் போம்’ - (அ.கு.)
    (தணிகைமணி வ.சு.செ., முருகவேள் பன்னிரு திருமுறை, தொகுதி 4, பக்கம் 527 இணைத்துள்ளேன்.)