அமெரிக்காவிலுள்ள புகழ்பெற்ற ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான இருக்கை தொடங்க, இணைய வாயிலாக நிதிசேர் விழா அக்டோபர் 10-ஆம் தேதி நிகழ உள்ளது. ஹூஸ்டன் தமிழ் இருக்கைக்கான அமைப்பானது, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மற்றும் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பல்வேறு நலத்திட்டங்களை மாணவர்களுக்கும் மற்றும் நலிந்த கலைஞர்களுக்காக கிராமப்புற கலை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது. இந்த இருக்கை விரைவில் அமைந்தால் மேலும் பல நாட்டுப்புறக் கலைஞர்கள் மற்றும் மாணவர்கள் பயன் அடைவார்கள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
நிதியளிப்பதற்கான https://houstontamilchair.org என்ற வலைத்தளத்தில் இணையம் மூலமாக மேலும் இது தொடர்பான தகவல்களை நீங்கள் பெறலாம்.
நிகழ்ச்சியில் இந்தியா, அமெரிக்கா, மற்றும் உலக நாடுகளில் இருந்து தமிழ் மக்கள் இயன்றதைத் தந்து தமிழ் இருக்கை அமைக்க வாருங்கள். தமிழக முதல்வர் மாண்புமிகு கே. பழனிசாமி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். ”மக்கள் இசைக் கலைஞர்கள்” ராஜலட்சுமி - செந்தில்கணேஷ் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி நிகழ்ச்சியில் கலந்துகொள்வோரை மகிழ்விக்க வருகிறார்கள்.
Contact # +1 908 516 3069
Live/நேரலை : https://www.facebook.com/HoustonTamilStudiesChair
+91 98411 52211 (Whatsapp)
மிக்க நன்றி!!
1 comments:
திரு.கணேசன் அவர்கள் ஊஸ்டன் தமிழ் இருக்கைக்கு மேற்கொள்ளும் முயற்சிகள் சிறப்பானவை. தமிழ்நாட்டுத் தமிழர்கள் அதிக அளவில் உதவிடவேண்டும்...
நாஞ்சில் நடராசன்.
Post a Comment