கவிஞர் அமிர்த கணேசன் நூல்வெளியீட்டு விழா

கவிஞர் அமிர்த கணேசன், அவரது குரு ஈரோடு தமிழன்பன் நூல்கள் வெளியீடு டல்லஸ் மாநகர மெட்ரோபிலெக்ஸ் தமிழ்ச் சங்கத்தாரால் நடத்தப்பெற்றது. ஹார்வர்ட் தமிழ் இருக்கை அமைய பெருநிதி நல்கிய  மரு. ஞானசம்பந்தன், பால்பாண்டியன், கால்ட்வெல் வேள்நம்பி, சங்கத் தலைவர் அருண் பொன்னுசாமி கலந்துகொண்டனர். பல தமிழ் இருக்கைகள் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் அமைத்தால் தமிழர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகளும், தமிழ் ஆய்வு வளர்ச்சியும் இருக்கும் என்றும், திராவிட ஒப்பீட்டு மொழியியல், சிந்துவெளி அகழாய்வும், அதில் திராவிடப் பண்பாட்டின் கூறுகளும் ஆராய்ந்து நூலெழுதும் அறிஞர்களை வளர்க்கும் நாற்றங்கால்களாக இவை விளங்கும் என எனதுரையில் குறிப்பிட்டேன்.

மெட்ரோப்ளக்ஸ் தமிழ்ச் சங்கம் ஈரோடு தமிழன்பன் அவர்களின் கவிதைகளை “ நா 100 பா 1000 “ எனும் கவிதை வாசிப்பு நிகழ்வின் மூலமும் , வெளியிட்ட  நூல்கள் வாயிலாகவும் அவரின் கவித்துவ மேன்மையை ஆய்ந்தறிந்து, உணர்ந்து, மகிழ்ந்து மேனாள் இன்னாள் ஆட்சியாளர்கள் கலந்தாய்வு செய்து ஒன்று கூடி மகாகவி பட்டத்தை வழங்கினார்கள். அதனைக் கவிஞர் அமிர்தகணேசன் பெற்று சென்னை வந்தார். அங்கு   நிகழ்ந்த விழா ஒன்றில்  மெட்ரோப்ளக்ஸ் தமிழ்ச்சங்கத்தலைவர் திரு கால்டுவெல் வேள்நம்பி , நியுயார்க் சண்முகம் பெரியசாமி ஆகியோர்  தோழர் நல்லக்கண்ணு மூலம் மகாகவி பட்டத்தை ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு வழங்கி பெருமையாக உரையாற்றி மகிழ்ந்தார்.
இச்செய்தி 23.11.19 அன்று மெட்ரோப்ளக்ஸ் தமிழ்ச்சங்கத்தில் வெளியிடப்பட்ட நூலிலும் ( புகைப்படம் பக் 7 மற்றும் பக்33) குறிப்பிடப்பட்டுள்ளது. விழாவில் தோழர் நல்லக்கண்ணு உரையாற்றும் போது ,” பாரதிக்கும் மகாகவி பட்டம் எளிதாக கிட்டவில்லை ...முன்னெடுத்தவர்களே பின்வாங்கிய காலத்தில் இடதுசாரி இயக்கமே வெற்றியடைந்தது. தமிழகம் தமிழன்பனுக்கு அஅளிக்க இருந்த அங்கீகாரத்தை அயலக நாடு அமெரிக்கா அளித்த செயல் பாராட்டுக்குரியது..” என்றார்
டல்லஸ் மெட்ரோப்லெக்ஸ் தமிழ்ச்சங்கம், டெக்சாஸில் ஹூஸ்டன் பாரதி கலைமன்றத்துக்குப் பின்னர் தோன்றிய அமெரிக்காவின் மூத்த தமிழ்ச்சங்கங்களில் இடம்பெறுவது. அவர்கள் “வாழ்நாள் சாதனையாளர்” என்ற விருதை டாக்டர் சம்பந்தனுக்கும், எனக்கும் அளித்து கௌரவித்தனர். சில ஒளிப்படங்களை இணைக்கிறேன்.
நா. கணேசன்

1 comments:

kumararaja . udumalpet said...

உடுமலைப்பேட்டைக்கு அருகில் பொழில்வாச்சி மண்ணிலிருந்து சென்ற மண்ணின் மைந்தர் கணேசன் அவர்களுக்கு உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் தி.குமாரராஜா அவர்களின் சார்பில் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.