யுனிவெஸிட்டி ஆஃப் ஹூஸ்டன் பிரெசிடெண்ட் ரேணு கட்டோர், வைஸ்-சான்சிலர் எலாய்ஸ் ப்ரைஸ், அகடமிக் டீன் டில்லிஸ் என்னும் உயர் அதிகாரிகளுடன், ஹூஸ்டன் தமிழ் ஸ்டடீஸ் சேர் குழுமம் 2 மில்லியன் டாலர்கள் தருவதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. தமிழ் கற்பிக்கும் பேராசிரியரின் சம்பளம் டெக்சாஸ் அரசாங்க நிதியுதவியுடன் ஹூஸ்டன் பல்கலை அளிக்கும். இருக்கைக்குத் தமிழர்கள் அளிக்கும் பணத்தின் வருவாய் ஆராய்ச்சிச் செலவுகளுக்குப் பயன்படுத்தப் பெறும். பெர்க்கிலி பல்கலை, ஹார்வர்ட் பல்கலை, மூன்றாவதாக ஹூஸ்டன் பல்கலையில் தமிழர்கள் நிதி அளிக்கை மூலம் தமிழ்ப்பீடங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. சங்கத் தமிழ், தமிழ் இலக்கியங்களுக்கும் தொல்லியல், இந்திய சமயம், சமூகம், தமிழரின் உலகளாவிய பராவல், அடுத்த தலைமுறையினர் தமிழில் வல்லுநர்கள் ஆதல், ஒப்பீட்டு திராவிட மொழியியல், சிந்துவெளி - திராவிடர் தொடர்புகள், ... போன்ற பல்வேறு துறைகளில் கல்வி, ஆராய்ச்சி, கருத்தரங்குகள் நிகழ்த்த வாய்ப்பாக ஹூஸ்டன் பல்கலை தமிழ் இருக்கை அமையும்.
ஹூஸ்டன் யுனிவெர்ஸிட்டி வைஸ்-சான்சிலர் ப்ரைஸ் “நன்றி”
எனத் தமிழை நவில வைத்தோம் :-) 😊 😊 😊
Press Release from Houston Tamil Studies Chair, Inc.,. This was widely reported in the media (TV and print) both in Tamil Nadu and in Texas, USA.
Houston University receives $ 2 mn commitment to support Tamil language
The Houston Tamil Studies Chair’s mission is to promote the oldest language, spoken by more than 70 million globally, a release said
https://www.hindutamil.in/news/world/518561-houston-university-receives-usd-2m-commitment-to-support-tamil-language-culture.html
ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு தனி இருக்கை: தமிழர்கள் முயற்சியால் ரூ.14 கோடி நிதி திரண்டது
October 3, 2019, Dinamalar, Chennai.
“எண்ணிய முடித்தல் வேண்டும்
நல்லவே எண்ண வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்
நண்ணிய உரிமை வேண்டும்
நாமதை பெறவும் வேண்டும்
கண்ணிலே ஒளியும் வேண்டும்
கன்னித்தமிழைக் காக்க வேண்டும்” - பாரதியார்
ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான பேச்சுவார்த்தை பல மாதங்களாய் நடந்து கொண்டிருந்தது. அதன் விளைவாக நேற்று அக்டோபர் 1ம் தேதி, இதற்கு உழைத்த காரணகர்த்தாவாக தலைவர்கள் இணைந்து உறுதியளித்து கையொப்பமிடும் விழா நிகழ்ச்சி, ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் உள்ள அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் சமூக அறிவியல் மற்றும் கலைத்துறை பிரிவின் டீன் திரு.அன்டோனியோ டில்லிஸ் மற்றும் ஹிஸ்பானிக் ஆய்வுப்பிரிவின் பேராசிரியர் திரு. ஆண்டர்சன் வரவேற்புரை ஆற்றினர்.
ஹூஸ்டன் தமிழ் இருக்கை இன்று நிலைபெற்றிருக்க பெரும் காரணமாய் இருக்கும், தமிழ் மேல் தீரா பற்றுக் கொண்டு புலம் பெயர்ந்த தமிழர்கள் தாய்மொழியை மறவாதிருக்க தொடர்ந்து அருந்தொண்டு ஆற்றிவரும் திரு. சாம் கண்ணப்பன் அவர்களும், டாக்டர் திரு.அப்பன் அவர்களும் சிறப்புரை ஆற்றினர்.
அதன் பின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தின் பிரெசிடெண்ட் திருமதி. ரேணு கதோர் உரை ஆற்றுகையில் தான் மிகவும் பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைவதாகக் கூறினார். பின்னர் காத்திருந்த அந்த கையொப்பமிடும் தருணம் இனிதே நிகழ்ந்தேறியது.தமிழ் சார் மக்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.
இதற்காக உழைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மிகுந்த பாராட்டுக்கள்.
- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்
0 comments:
Post a Comment