ஹூஸ்டன், டல்லஸ், ஆஸ்டின், சான் ஆண்டானியோ போன்ற டெக்சாஸ் தமிழர்களும், ஏனை அமெரிக்கா வாழ் தமிழர்களும் ஒன்றிணைந்து ஒவ்வொருவரும் சிறுதொகை நன்கொடை அளித்தால் அமெரிக்காவின் தென்திசையில் தமிழிருக்கை ஹூஸ்டன் பல்கலையில் உறுதியாக அமைந்துவிடும். இப்பொழுது தமிழ் இருக்கை அமைக்க முயற்சி ஹூஸ்டன் பல்கலைக்கழகத்திற்காகத் தான் நிகழ்ந்துகொண்டுள்ளது. மேற்கே பெர்க்கிலி, வடக்கே ஹார்வர்ட், போல, தெற்கே ஹூஸ்டனில் தமிழ் வாழ வகை செய்வீர்! அப் பெரும்பணிக்கு உங்கள் கொடைவழங்க வலைப்பக்கங்கள்:
website : https://www.houstontamilchair.org ( Donors can donate from default page or visit donation link.
Donation link from website : https://www.houstontamilchair.org/donors/
Facebook : https://www.facebook.com/HoustonTamilStudiesChair/
Facebook Fundraiser : https://www.facebook.com/fund/HoustonTamilStudiesChair/
Youtube : https://www.youtube.com/channel/UClg7oQJnTc8zVaY5znt2TLw
Houston Tamil Chair events: https://www.youtube.com/channel/UClg7oQJnTc8zVaY5znt2TLw/videos
ஹூஸ்டன் பல்கலையில் தமிழ்ப்பீடம் - கால்கோள்
Posted by நா. கணேசன் at 1 comments
'கோடியர்’ கதிரி கோபால்நாத் (1949 - 2019)
கோடு என்பது கொம்பு. விலங்கு, மரம் இரண்டுக்குமே கோடு உண்டு. மரம், மூங்கில் போன்றவற்றால் செய்யப்படும் காற்றிசைக் கருவிகளை வயிர் என்று சங்க இலக்கியத்தில் காண்கிறோம். வயிர் < வெதிர். மூங்கிலில் உருவாகும் புள்ளாங்குழல்/புல்லாங்குழல், ஆச்சா மரத்தில் உருவாகும் நாதஸ்வரம் இவற்றின் முன்னோடி தான் “வயிர்”. தாவரத்தைக்கொண்டு செய்த காற்றிசைக்கருவிகளை இசைப்போர் வயிரியர் ஆவர்.
மாடு, மான், எருமை, யானை, ... போன்ற விலங்குகளின் கோடுகளை/கொம்புகளை ஊதுவோர் கோடியர் எனப்படுவர். நியோலித்திக் காலத்திலே விலங்குக் கொம்புகளை வைத்து உருவான வடிவங்களில் இன்னும் இசைக்கருவிகளாகப் புழங்குபவை தென்னிந்தியாவில் அதிகம் எனத் தொல்லியலாளர் தெரிவிக்கின்றனர். எருமைக்கு வேதத்தில் வழங்கும் கௌர- என்ற பெயரே கோடு என்ற சொல்லுடன் தொடர்புடையது. கவரி மாவின் பெயர்: கவரி < கவடி << கோடு. http://nganesan.blogspot.com/
இவ்வாறு, கோடு மாட்டுக்கும், எருமைக்கும் தொடர்புடையது எனினும், கோவினம் என்று ஸம்ஸ்கிருதச் சொல்லால் மாடுகளையும், கோட்டினம் என்று தமிழ்ப் பெயரால் எருமைகளையும் கலித்தொகை குறிப்பிடுகிறது. இந்தியாவின் பழைய சமய் நெறிகளில் எத்தனையோ கடவுளர் உண்டு. எனினும், திணைமாந்தர்கள் கோடுகளை வைத்து, வணங்கும் பெருந்தெய்வங்கள் இரண்டு தான். (1) சுறாக் கோடு கொண்டு பூசிக்கும் வருணன் (2) அவன் மனை கௌரி/கொற்றவை எருமைக்கோட்டை வைத்து புதுமணல் பரப்பி, மணவறை சோடித்து நிகழும் கலியாணச் சீர்களில் வழிபடுவதை முல்லைக்கலிப் பாட்டு அறிவிக்கிறது. முதலாகுபெயருக்குச் சிறந்த உதாரணம் இச்செய்யுள். இந்தப் பாவை வழிபாடு பற்றி ஏனை விவரங்கள் திருமணத்தை விவரிக்கும் இரண்டு அகநானூற்றுப் பாடல்களால் விளங்குகிறது. சைவர், வைணவர், சமணர் பாடிய பாவைப்பாடல்களுக்கு இக் காத்யாயனி வழிபாடே அடிப்படை. திருப்பரங்குன்றில் கிடைத்துள்ள தமிழ் ப்ராமிக் கல்வெட்டு வருணன் - கௌரி ஜோடியைக் குறிப்பிடும் முதல் கல்வெட்டாகும். பிற்கால வருணனுக்கான சிந்துவெளி எழுத்து (மகர விடங்கர்) இப்போது கீழடி பானையோட்டில் கிடைத்துள்ளது. ஏற்கெனவே, செம்பியன் கண்டியூர் (கல் கோடரி), சாணூர், சூலூர், தாய்லாந்து தேசம் - எனத் தமிழர் செய்த கலங்களில் குறியீடாக சங்க காலத்தில் எழுதியுள்ளனர்.
எருமைக்கோடு பலவற்றையும் சேர்த்து S வடிவில் தூம்பு போலச் செய்து கோடியர் ஊதுவர். கொட்டாங்கச்சி வயலின் எனப்படும் ராவணஹஸ்தம் மூலமாகத்தான் முதலில் வில்லை நாணில் தேய்க்கும் நரம்பிசைக்கருவி முதன்முதலாக உலகில் தோன்றியது என்பர். பின்னாளில் மத்தியகிழக்கு நாடுகளில் பரவி, ஐரோப்பாவில் வயோலா, வயலின் என வளர்ச்சி அடைந்தது, அதே போல, ஸாக்சபோன் கருவியும் சங்க இலக்கியம் கோடு, கோடியர் எனப்படும் விலங்குக்கொம்புகளின் பரிணாம வளர்ச்சி ஆகும். விலங்குக் கொம்புகள் மறைந்தாலும், “ஹார்ன்” என்னும் பெயர் ஸாக்சபோன் போன்ற கருவிகளுக்கு இன்றும் நிலைத்துள்ளது, நியூ ஆர்லியான்ஸ் நகரில் கருப்பின மக்கள் வாசிக்கும் ஜாஸ் இசையில் ஸாக்ஸ் என்னும் ஹார்னுக்குப் பெரிய இடம் உண்டு.
நாதசுரக் கலைஞர்கள் இசையில் பாடல்களின் வார்த்தைகளை நாகசுரம் பேசும். குன்னக்குடி வயலினில் தமிழ்ப் பாடல்களின் சொற்கள் கேட்கலாம். அதுபோல, சாக்சபோனை கர்நாடக இசையின் “தொகுசொல்” கருவியாக இசைத்துக்காட்டி வாழ்ந்த பெருங்கலைஞர் கதிரி கோபாலநாதன் மறைந்துவிட்டார். கதிரியின் இசையில், கருநாடக சங்கீத சாகித்தியங்களின் சொற்களை உணரலாம்.
மழையென மருண்ட மம்மர் பலவுடன்
ஓய்களி றெடுத்த நோயுடை நெடுங்கை
தொகுசொற் கோடியர் தூம்பின் உயிர்க்கும் - அகநானூறு
”பட்டத்து யானையானது, தன்மேற் கொண்டிருக்கின்ற துகிற் கொடியினைப் போல, ஓடை என்னும் குன்றத்தேயுள்ள. காய்ந்த தலையினையுள்ள ஞெமை மரத்தின்மீது, சிலம்பியானது வலையினைப் பின்னியது. மேற்காற்றால், அவ்வலையும் அசைந்து கொண்டிருந்தது. அதனை மேகம் எனக் கருதி, ஒருங்கே மருட்சியுற்றன மயக்கத்தினையுடைய இளைத்த களிறுகள் பலவும். வருத்தத்தை யுடையனவாக அவை உயர்த்த நெடுங்கைகள், புகழினைத் திரட்டிக் கூறும் கோடியரின் தூம்பினைப்போலத் தோன்றி ஒலிக்கும்.”
தொகுசொல் கோடியர் தூம்பு - இந்தச் சங்கப்பாட்டின் தொடரை அறிய,
“தொகுசொல் கோடியர் கதிரிகோபாலின் ஸாக்ஸ்” என வைத்து, அவரது இசையைக் கேட்டால் போதும்.
சில கலியாணங்களிலும் (கோவை, திருப்பூர்) கேட்டிருக்கிறேன். சென்ற முறை அண்ணா பல்கலையில் பேரா. வா. செ. குழந்தைசாமி பரிசில் பெறச் சென்றபோது விமானத்தில் கதிரி கோபாலனின் அருகே இருக்கை. பலர் அவருடன் பேசி “அம்மாவுக்கு அனுப்பணும்”என்று தன்னி (Selfie) எடுத்துக்கொண்டனர், மறக்க முடியாத புதுப் பாட்டை போட்ட இசைவாணர் கதிரி மறைவுக்கு எம் அஞ்சலிகள்.
நா. கணேசன்
By Mathivanan Maran
மங்களூரு: சாக்சபோன் இசைக் கலைஞர் கத்ரி கோபால்நாத் (69) உடல்நலக்
குறைவால் மங்களூரு தனியார் மருத்துவமனையில் இன்று காலை காலமானார்.
கர்நாடகா மாநிலம் பந்த்வால் தாலுகாவில் மிட்டகெரே கிராமத்தில் 1950-ம்
ஆண்டு பிறந்தவர் கத்ரி கோபால்நாத். சாக்சபோன் இசைக் கலையில் உன்னதத்தைத்
தொட்டவர் கத்ரி கோபால்நாத்.
தமிழக அரசின் கலைமாமணி, மத்திய அரசின் பத்மஶ்ரீ உள்ளிட்ட விருதுகளைப்
பெற்றவர். கே. பாலசந்தரின் டூயட் படத்தில் கத்ரி கோபால்நாத்தின்
சாக்சபோன் இசை முழுமையாக பயன்படுத்தப்பட்டது. கடந்த சில மாதங்களாக கத்ரி
கோபால்நாத் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் மங்களூரு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர்
காலமானார்.
கத்ரி கோபால்நாத்தின் 2 மகன்களில் ஒருவரான மணிகந்த் கத்ரி, இசை
அமைப்பாளராக உள்ளார். மற்றொரு மகன் குவைத்தில் இருக்கிறார்.
கர்நாடகாவின் பாதவிங்கடி என்ற இடத்தில் கத்ரி கோபால்நாத்தின் இறுதிச்
சடங்குகள் நடைபெற உள்ளன. குவைத்தில் இருக்கும் மற்றொரு மகனின் வருகைக்காக
குடும்பத்தினர் காத்திருக்கின்றனர். கத்ரி கோபால்நாத்தின் மறைவு
தென்னிந்திய திரை உலகை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சமூக வலைதளங்களில்
கத்ரி கோபால்நாத் மறைவுக்கு திரைபிரபலங்கள் அதிர்ச்சியையும் ஆழ்ந்த
இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.
Posted by நா. கணேசன் at 0 comments
ஹூஸ்டன் பல்கலையில் தமிழ்ப் பேராசிரியர் இருக்கை ஒப்பந்தம்
யுனிவெஸிட்டி ஆஃப் ஹூஸ்டன் பிரெசிடெண்ட் ரேணு கட்டோர், வைஸ்-சான்சிலர் எலாய்ஸ் ப்ரைஸ், அகடமிக் டீன் டில்லிஸ் என்னும் உயர் அதிகாரிகளுடன், ஹூஸ்டன் தமிழ் ஸ்டடீஸ் சேர் குழுமம் 2 மில்லியன் டாலர்கள் தருவதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. தமிழ் கற்பிக்கும் பேராசிரியரின் சம்பளம் டெக்சாஸ் அரசாங்க நிதியுதவியுடன் ஹூஸ்டன் பல்கலை அளிக்கும். இருக்கைக்குத் தமிழர்கள் அளிக்கும் பணத்தின் வருவாய் ஆராய்ச்சிச் செலவுகளுக்குப் பயன்படுத்தப் பெறும். பெர்க்கிலி பல்கலை, ஹார்வர்ட் பல்கலை, மூன்றாவதாக ஹூஸ்டன் பல்கலையில் தமிழர்கள் நிதி அளிக்கை மூலம் தமிழ்ப்பீடங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. சங்கத் தமிழ், தமிழ் இலக்கியங்களுக்கும் தொல்லியல், இந்திய சமயம், சமூகம், தமிழரின் உலகளாவிய பராவல், அடுத்த தலைமுறையினர் தமிழில் வல்லுநர்கள் ஆதல், ஒப்பீட்டு திராவிட மொழியியல், சிந்துவெளி - திராவிடர் தொடர்புகள், ... போன்ற பல்வேறு துறைகளில் கல்வி, ஆராய்ச்சி, கருத்தரங்குகள் நிகழ்த்த வாய்ப்பாக ஹூஸ்டன் பல்கலை தமிழ் இருக்கை அமையும்.
ஹூஸ்டன் யுனிவெர்ஸிட்டி வைஸ்-சான்சிலர் ப்ரைஸ் “நன்றி”
எனத் தமிழை நவில வைத்தோம் :-) 😊 😊 😊
Press Release from Houston Tamil Studies Chair, Inc.,. This was widely reported in the media (TV and print) both in Tamil Nadu and in Texas, USA.
Houston University receives $ 2 mn commitment to support Tamil language
The Houston Tamil Studies Chair’s mission is to promote the oldest language, spoken by more than 70 million globally, a release said
https://www.hindutamil.in/news/world/518561-houston-university-receives-usd-2m-commitment-to-support-tamil-language-culture.html
ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு தனி இருக்கை: தமிழர்கள் முயற்சியால் ரூ.14 கோடி நிதி திரண்டது
October 3, 2019, Dinamalar, Chennai.
“எண்ணிய முடித்தல் வேண்டும்
நல்லவே எண்ண வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்
நண்ணிய உரிமை வேண்டும்
நாமதை பெறவும் வேண்டும்
கண்ணிலே ஒளியும் வேண்டும்
கன்னித்தமிழைக் காக்க வேண்டும்” - பாரதியார்
ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான பேச்சுவார்த்தை பல மாதங்களாய் நடந்து கொண்டிருந்தது. அதன் விளைவாக நேற்று அக்டோபர் 1ம் தேதி, இதற்கு உழைத்த காரணகர்த்தாவாக தலைவர்கள் இணைந்து உறுதியளித்து கையொப்பமிடும் விழா நிகழ்ச்சி, ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் உள்ள அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் சமூக அறிவியல் மற்றும் கலைத்துறை பிரிவின் டீன் திரு.அன்டோனியோ டில்லிஸ் மற்றும் ஹிஸ்பானிக் ஆய்வுப்பிரிவின் பேராசிரியர் திரு. ஆண்டர்சன் வரவேற்புரை ஆற்றினர்.
ஹூஸ்டன் தமிழ் இருக்கை இன்று நிலைபெற்றிருக்க பெரும் காரணமாய் இருக்கும், தமிழ் மேல் தீரா பற்றுக் கொண்டு புலம் பெயர்ந்த தமிழர்கள் தாய்மொழியை மறவாதிருக்க தொடர்ந்து அருந்தொண்டு ஆற்றிவரும் திரு. சாம் கண்ணப்பன் அவர்களும், டாக்டர் திரு.அப்பன் அவர்களும் சிறப்புரை ஆற்றினர்.
அதன் பின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தின் பிரெசிடெண்ட் திருமதி. ரேணு கதோர் உரை ஆற்றுகையில் தான் மிகவும் பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைவதாகக் கூறினார். பின்னர் காத்திருந்த அந்த கையொப்பமிடும் தருணம் இனிதே நிகழ்ந்தேறியது.தமிழ் சார் மக்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.
இதற்காக உழைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மிகுந்த பாராட்டுக்கள்.
- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்
Posted by நா. கணேசன் at 0 comments
சோழன் காசுகள் (தமிழ் கிரந்த எழுத்தில்)
கல்வெட்டு ஆய்வாளர் துரை சுந்தரம் (கோவை) அவர்களிடம் இரண்டு முக்கியமான சோழன் பொற்காசுகளின் ஒளிப்படங்கள் அளித்தேன். அவற்றில் உள்ள விருதுப் பெயர்களை ஒவ்வொரு எழுத்தாக விளக்கினார். அவருக்கு என் நன்றி.
’முடிகொண்டசோழன்’ என எழுதிய காசில், ‘ட’ 11-ஆம் நூற்றாண்டில் தமிழிலும், தமிழ் கிரந்தத்திலும் இருந்த வடிவைப் பார்க்கலாம். அப்படியே, முடிகொண்ட என்ற தமிழ் வார்த்தையை எழுத்துப்பெயர்ப்பாய் (transliteration) வெளியிட்டுளனர். சோழர்கள் தாம் சமணர்கள் உருவாக்கிய வட்டெழுத்தைக் கைவிட்டு, கிரந்த லிபியைத் தமிழுக்கு முழுமையாகப் பயன்படுத்தத் தொடங்கியவர்கள். சேர நாட்டில் அதற்கப்புறமும் வட்டெழுத்து சில காலம் வாழ்ந்தது. அதனால், இணையம், அச்சு நூல்களில் பயன்பாட்டில் உள்ள ஜ, ஶ, ஷ, ஸ, ஹ ஐந்தெழுத்தையும் வடவெழுத்து எனத் தொல்காப்பியர் வழியில் குறிப்பிடல் முறையானதாகும். தமிழல்லா நூல்களை, சொற்களைத் தமிழ்லிபியில் எழுத இவ்வைந்து வடவெழுத்தும் அவசியம் எனத் தமிழறிஞர் தெரிந்தெடுத்துக் கணிகளிலும், அகராதிகளிலும் தந்துள்ளனர். இவற்றின் விழுக்காடு எவ்வளவு உள்ளது என வடமொழி நூல்களின் தமிழ்லிபிப் பதிப்புகளில் கணிஞர்கள் ஆராய்ந்து தெரிவிக்கலாம். அதே போல, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ... போன்ற நூல்களின் தமிழ்லிபிப் பதிப்புகளில் வடவெழுத்தின் எத்துணைப் பங்கு என ஆராயலாம்.
‘முடிகொண்ட சோழன்’ காசில் பாண்டியன் மீன் சின்னமும், சோழன் புலிச் சின்னமும் உள்ளது. எனவே, “பாண்டியன்” முடிகொண்ட சோழன் என்பது பொருள். பாண்டியநாடு முற்றாக சோழர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டது.
வணக்கம்.
முடிகொண்ட சோழந் - நாணயம் |
https://thehinduimages.com/details-page.php?id=133226134
Caption : CHENNAI, 18/05/2012: A gold coin belonging to 1014-1-44 CE of Rajendra Chola which was found in Dharmapuri district is on display at Egmore Museum on the occasion of 150th year celebration of the Archaeological Survey of India, on May 18, 2012. Photo: S.R. Raghunathan
கிரந்த எழுத்துகளின் வரிவடிவம் பல்லவர் உருவாக்கியதாகும். பின்னர் சோழர் காலத்தில் அந்த வரிவடிவம் சற்று மாற்றம் பெறுகிறது. அது போலவே, பாண்டியர் காலத்திலும், விஜய நகரர் காலத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டன. தற்போது, நிலை நிறுத்தப்பெற்ற அச்சு வடிவ எழுத்துகளின் வரிவடிவத்தில், “முடிகொண்ட சொளந்” என்பது எவ்வாறு எழுதப்படுகிறது என்பதைக் கீழே காணலாம். நான்கு வரிகளில் எழுதப்பட்ட இச்சொல்லின் வரிவடிவங்களில் முதலாவது, இந்த அச்சு வடிவம். திருவனந்தபுரத்தில் இயங்கிவரும் “திராவிட மொழியியல் கழகம்” (DRAVIDIAN LINGUISTICS ASSOCIATION) என்னும் நிறுவனம் வெளியிட்டுள்ள "THE GRANTHA SCRIPT" என்னும் நூலை (நூலாசிரியர்: பி.விசாலாட்சி) அடிப்படையாய்க் கொண்டு இந்த அச்சு வடிவம் எழுதப்பட்டுள்ளது. அடுத்து, இரண்டாம் வரியில், நாணயத்தில் எழுதப்பட்ட வரிவடிவம் அமைகிறது. மூன்றாம் வரி இன்றைய தமிழ் எழுத்து வடிவம். நான்காம் வரியில், ஆங்கில எழுத்துகளில் உரிய ஒலிக்குறிப்புடன் எழுதப்பட்ட வடிவம் உள்ளது.
கீழ்வரும் பகுதியில் சோழர் கால கிரந்த எழுத்துகள் சிலவற்றின் வடிவங்கள் தரப்பட்டுள்ளன. இவை, தொல்லியல் துறையில் (1935-1965) பணியாற்றிய தொல்லியல் அறிஞர் சி. சிவராமமூர்த்தி அவர்கள் எழுதிய "INDIAN EPIGRAPHY AND SOUTH INDIAN SCRIPTS" என்னும் நூலையும், தஞ்சைக் கல்வெட்டுகளையும் பார்வையிட்டுப் பெற்ற எழுத்துச் சான்றுகளாகும்.
1 “ம” எழுத்தின் வரிவடிவம்
இது தஞ்சைக் கல்வெட்டொன்றில் காணப்படும் வடிவம்.
தஞ்சைக்கல்வெட்டில் கிரந்த எழுத்து “ம” |
கீழுள்ளது நூலில் குறிப்பிடப்பெறும் வரிவடிவம்.
”ம” கிரந்த எழுத்தின் மாற்று வடிவங்கள் |
2 ”க” எழுத்தின் வரிவடிவம்
தஞ்சைக்கல்வெட்டில் கிரந்த எழுத்து “க” |
3 “ட” எழுத்தின் வரிவடிவம்
இராசேந்திர சோழன் கால எழுத்து-திருவாலங்காட்டுச் செப்பேடு |
நூலில் குறிப்பிடப்பெறும் வடிவம் |
4 ”ண்ட” - கூட்டெழுத்தின் சரியான வடிவம்
மேலே,
”ண” கரத்தை ஒட்டி வரும் ”ட” கரம் கிரந்த வழக்கில் மெல்லோசையுடைய வர்க்க எழுத்தான மூன்றாம் ”ட” கர எழுத்தாகவே எழுதப்படுதல் மரபு. இந்த நாணயத்தில், அம்மரபு காணப்படவில்லை. மாறாக, வர்க்க எழுத்தில் முதலாம் “ட”கர எழுத்து எழுதப்பட்டுள்ளது - என்று குறிப்பிட்டுள்ளேன்.
மரபுப்படி, ”ண்ட” - கூட்டெழுத்தின் சரியான வடிவத்தைக் கீழ்க்கண்ட சான்று மூலம் அறியலாம்.
”ண்ட” - கூட்டெழுத்தின் சரியான வடிவம் |
”ட” கரத்தின் மூன்றாம் வர்க்க எழுத்தின் வடிவத்தைக் கீழுள்ள எழுத்து காட்டும்.
நூலில் குறிப்பிடப்பெறும் வடிவம் |
”ம”, ”க”, “ட”(ta) ஆகிய மூன்று கிரந்த எழுத்துகளின் வரி வடிவத்தையும் கீழுள்ள கல்வெட்டுச் சொல் குறிக்கும்.
மகுடம் - MAKUTAM |
இராஜேந்திர சோழனின் நாணயம்
நீங்கள் அனுப்பிய இராஜேந்திர சோழனின் நாணயத்தின் படத்தில் வட்டச் சுற்றில் எழுதப்பட்ட எழுத்துகளின் நேர் வடிவம் கீழே தரப்பட்டுள்ளது.
இந்த எழுத்துகளில், முதல் எழுத்தான “ர”கர நெடிலுக்குரிய கால் “ர”கர எழுத்துடன் சேர்த்தே எழுதப்பட்டுள்ளது. இது “முடிகொண்ட சொளந்” நாணயத்தில் உள்ள முறையிலேயே அமைந்துள்ளது. “சொ” எழுத்திலும் அவ்வாறே. ஒற்றைக்கொம்பு சற்று மாறுபட்ட தோற்றம் பெறுகின்றது; எனினும், ஒற்றைக்கொம்புதான் என எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் அளவிலேயே எழுதப்பட்டுள்ளது. ”ஜ” எழுத்தும் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது. “ந்த்ர” ("NDRA") என்பது கூட்டெழுத்து முறையில் எழுதப்பட்டுள்ளது.
சுந்தரம், கோயமுத்தூர்.
Posted by நா. கணேசன் at 0 comments