கவிஞர் குலோத்துங்கன் (பேரா. வா. செ. குழந்தைசாமி) நாடறிந்த கல்வியாளர், நல்ல கவிஞர். அவரது முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நாளை அண்ணா பல்கலை விவேகானந்தர் அரங்கில் நிகழ உள்ளது. சென்னையில் உள்ள தமிழார்வலர்கள் திரளாகக் கலந்து வாழ்த்த வேண்டுகிறோம். கவிஞர் குலோத்துங்கன் இணையப் பல்கலை முதல் தலைவர் ஆகவும், இந்திய அரசு தமிழைச் செம்மொழி என அறிவித்தலிலும் பெரும்பங்கு ஆற்றிய்வர்.
என் கட்டுரையும் பேரா. வா. செ.கு. ஐயா நினைவுமலரில் இடம்பெற்றுள்ளது.
கவிஞர் குலோத்துங்கனின் நூல்கள் யாவும் தமிழ் இணையப் பல்கலை தளத்தில் இலவசமாகப் படிக்கக் கிடைக்கின்றன. தமிழின் எதிர்கால வாழ்வு தமிழ்நாட்டின், இலங்கையின், மற்றுமுள்ள நாடுகளில் உள்ள தமிழ்நூல்கள் பிடிஎப் ஆக இணைய வலம் வருவதில் உள்ளது: http://nganesan.blogspot.com/2013/09/google-aandavar-j-fletcher.html
டாக்டர் வா.செ. குழந்தைசாமி (குலோத்துங்கன்) படைப்புகள்
- அணையாத் தீபம்
- அறிவியல் தமிழ்
- இது கல்வி யுகம்
- உலகச் செவ்வியல் மொழிகளின் வரிசையில் தமிழ்
- உள்ளத்தில் ஏணியுளர் உயர்வர்
- எனது பார்வையில் அணிந்துரைகள் தொகுதி – 1
- எனது பார்வையில் அணிந்துரைகள் தொகுதி – 2
- கதவுகள் காப்பதில்லை
- கால காலமாக வரும் கற்பனை நகர்கள் வள்ளுவர் படைக்கும் வையத்துச் சுவர்க்கம்
- குலோத்துங்கன் பண்ணையில் கொய்த கதிர்கள்
- குலோத்துங்கன் கவிதைகள்
- குலோத்துங்கன் கவிதைகள்
- குலோத்துங்கன் கவிதைகள்
- சமுதாயச் சிந்தனைகள்
- செவ்வியல் மொழி முதல் சேது சமுத்திரம் வரை
- தமிழ் எழுத்துச் சீரமைப்பு
- தமிழ் எழுத்துச் சீரமைப்பு
- தமிழ் வளர்ச்சி
- தாய்மொழி பெறாததைச் சமுதாயம் பெறாது
- பன்முக நோக்கில் குலோத்துங்கன் கவிதைகள்
- பாரதியின் அறிவியல் பார்வை
- மதி வளம் நமது செல்வம்
- மானுட யாத்திரை பாகம் 1 – சமுதாயம், அரசியல்
- மானுட யாத்திரை பாகம் 2 - அறிவியல்
- மானுட யாத்திரை பாகம் 3 – சமயம், ஆன்மீகம்
- மானுட யாத்திரை பாகம் 1, 2, 3
- வளர்க தமிழ்
- வாயில் திறக்கட்டும்
- வாழும் வள்ளுவம்
- விண் சமைப்போர் வருக
- விதியே விதியே தமிழ்ச் சாதியை…?
- An unending Ascent
- Earth is Paradise Enough
- Education for Knowledge Era
- Higher Education in India
- Reconstruction of Higher Education in India
- Tamil Among the Classical Languages of the world
- The Immortal Kural
- They Thought Differently
நா. கணேசன்
1 comments:
திரு வா.செ.குழந்தைசாமி அவர்களுடைய நினைவேந்தலும், விருது அளிப்பும் அழைப்பிதழ் கண்டேன். அம்மலரில் தங்களது கட்டுரையும் இடம்பெறுவதறிந்து மகிழ்ச்சி.
Post a Comment