திருச்சிப் புலவர் இராம. இராமமூர்த்தி, சந்தன விடுதூது யாத்தவர், உரை:
கவிமாமணி இலந்தை இராமசாமி அவர்கள் உரை:
இரு சொற்பொழிவுகளுக்கு முன்னர் நூல் வெளியீடும்,
முனைவர் நா. கணேசனின் அறிமுகவுரையும்:
சந்தனவிடு தூது ஹூஸ்டன் விழாப் படங்கள்
http://nganesan.blogspot.com/2016/10/sandalwood-as-messenger-prabandham.html
பல ஆண்டுகளுக்கு முன்னர், தென்றல்
ஆசிரியர் மதுரபாரதியும், கவிமாமணி இலந்தையாரும் மீனாட்சி கோவிலுக்கு வந்திருந்தனர்.
யூனிகோட் குறியீடு தமிழுக்கு இணையத்தில் ஏற்றம் பெற்ற காலம் அது. காசி ஆறுமுகத்தைக்
கொண்டு சந்தவசந்தம் கூகுள்குழுவில் யாகூ குழு மடல்களை தானாக ஒருங்கு குறியீட்டில் மாற்றும்
நிரலி எழுதச் செய்து வெளியிட்டோம். அப்போது கனடா நாட்டுக் கவிஞர் அனந்த் பாடிய வெண்பா
நினைவில் இருக்கிறது:
பாரதம் நூலெழுதும் பங்கேற்றார் பண்டையொரு
வாரணம்; சந்த வசந்தக் கவிஞர்கள்தம்
பாரதம்செல் பாதை படைக்கக் கணேசனே
காரணமாய் நின்றார் களித்து!
தமிழர் இணையும் யூனிக்கோடு!
சந்தவசந்தத்திலும், இணையவெளியிலும்
நல்ல பல மரபுக் கவிஞர்கள் இருக்கிறார்கள். 1500 ஆண்டு பாரம்பரியம் கொண்ட தமிழ் பக்தி
இலக்கியங்களாகவோ, அல்லது புதுத் துறைகளிலோ பிரபந்தங்கள் என்னும் நீண்ட சொற்கட்டுடைய
நல்லிலக்கியங்களையும் புதிதாக, தமிழுக்கு சந்தவசந்தக் கவிஞர்களும், தமிழ்நாட்டில் உள்ள
கவிஞர்களும் செய்யத் தூண்டுவதாக புலவர் இராமமூர்த்தி அவர்களின் மீனாட்சி சந்தனவிடு
தூது அமைந்துள்ளது. பெண்தெய்வம் ஒன்றுக்குத் தனித் தூது அமைவது தமிழில் இதுவே முதன்முறை!
0 comments:
Post a Comment