Bharathi Kalai
Manram and
Sri Meenakshi
Temple, Houston Jointly Present
A Grand Nool Arangetram (Prabandham Release)
of
Sri Meenakshi Chandanam
Viduthuuthu
மீனாட்சி சந்தனம் விடுதூது
by the Tamil
scholar
Vidwan Rama.
Ramamoorthy, Tiruchy
and introducing
Tamil Translation
of Sanskrit verses by
Kavimamani
Ilandhai Ramasamy
Date: Sunday, October 2, 2016, 10:30 AM
Venue:
Saraswathi Hall
Sri Meenakshi Temple, Pearland,
Texas
For more information – Contact:
அமெரிக்கை ஆக அமெரிக்க
மீனாட்சி
|
|
மதுரை மீனாக்ஷி!
இலந்தை இராமசாமி
இரட்டை ஆசிரிய விருத்தம்
கொங்குதிகழ் பூமலர் தங்கிவளர் கூடலின்
கோமகள் தேவி உமையே
கோலா கலத்தமிழே நாலா புறம்திகழக்
கொண்டாடும் கூடல் இறையே
திங்கள்முடி எம்பிரான் பங்கில்வளர் அம்மையே
தேனாட்சி மீனாட்சியே
செந்தமிழ் பேசிடும் பைந்தமிழ்ச் செல்வியே
சித்திரச் சீமாட்டியே
சங்கமுயர் மதுரையில் பொங்குதமிழ் ஆய்ந்திடத்
தான்விருந்தேற்கு மணியே
சத்தியத் தடாதகை இத்தரை உலாவிய
சக்தியே தேவதேவி
தொங்குமெழில் உச்சியில் தங்குமுகில் கோபுரச்
சோதியே ஞான வடிவே
சொக்கன்மனம் சொக்கியே சுற்றிவரும் சொக்கியே
சுந்தரி மீனாக்ஷியே! (1)
வண்டாடும் தென்பாண்டி மண்டலம் குண்டலம்
மாவண்டம் முகமண்டலம்
வால்விழிப் பார்வையில் கால்கொளும் செந்தமிழ்
மாதாநின் தாள்மந்திரம்
பண்பாண்ட கூடலின் மண்பூண்ட பேறுநின்
பாதம் பதிந்ததன்றோ
பாராளும் வேந்தெனத் தாராள மாகவே
பரமன் வதிந்ததன்றோ?
திண்டாடும் நெஞ்சங்கள் கொண்டாட எத்தனை
சீர்விளை யாடல்களே
தேன்மழை சிந்திடும் வான்பரஞ் சோதியின்
தீந்தமிழ்ப் பாடல்களே
தொண்டாளும் உள்ளங்கள் சூழாது கள்ளங்கள்
ஜோதியே ஞானவடிவே
சொக்கன்மனம் சொக்கியே சுற்றிவரும் சொக்கியே
சுந்தரி மீனாக்ஷியே! (2)
ஓடுகிற இப்புவி கூடுகிற யாவையும்
ஓடிடச் செய்பவள்நீ
ஓங்குதிரை நீர்ப்புனல் வாங்கிமுகி லாகவே
ஊற்றிடப் பெய்பவள்நீ
பாடுகிற என்மொழி போடுகிற வார்த்தையில்
பாவமாய் நிற்பவள்நீ
பாவனை யாகவே பாருளோர் கண்முனே
பாசமாய்க் கற்பவள்நீ
தேடுகிற மெய்ப்பொருள் வீடுபெறச் செய்பொருள்
ஜீவன் உருப்பொருள்நீ
சித்தாந்தம் யாவையும் கொத்தாக வேபதம்
சேர்க்கும் கருப்பொருள்நீ
சூடுபெறு தீயினை நீடுபெறு கையிலே
சூறையிடு வான்தேவிநீ
சொக்கன்மனம் சொக்கியே சுற்றிவரும் சொக்கியே
சுந்தரி மீனாக்ஷியே! (3)
வந்துவிழும் செந்தமிழ் சந்தமியல் நாடகம்
வளர்கொங்கை மூன்றாக்கினாய்
வந்தபதி நாடகம் தந்தபதி ஆகையால்
மற்றதை நீபோக்கினாய்
சந்தமுயர் குருபரன் தந்ததமிழ் கேட்டுநீ
தத்தியே வந்த தத்தை
சன்னயிள முறுவலொடு சின்னதொரு பெண்ணாகத்
தந்தனை கொத்து முத்தை
சிந்தனையிலே பொருள் வந்தணையச் செய்தனை
செந்தமிழிலே பெய்தனை
சேல்விழிப் பெண்மையே கோல்நெறி வழுவாத
தெய்வமே மீனாக்ஷியே!
சொந்தமென உன்னையே வந்தனைகள் செய்பவர்
தோல்வியே காணமாட்டார்
சொக்கன்மனம் சொக்கியே சுற்றிவரும் சொக்கியே
சுந்தரி மீனாக்ஷியே! (4)
பெண்மையும் ஆள்வதாய் மண்ணில் விதைத்ததோர்
பேற்றினைக் கண்டவள்நீ
பித்தனும் உன்மனச் சித்திலுன் மத்தனாய்ப்
பீடுறக் கொண்டவள்நீ
உண்மையே, தண்ணளி வண்மையே, சிறுமியாய்
ஓர்வேள்வி பூத்தவள்நீ
உலகாளும் நாயகி, நிலபாரம் தாங்கியே
ஓர்குடை காத்தவள்நீ
கண்விழிப் பார்வையில் எண்ணிலா உயிர்களைக்
காத்துப் பிடித்தவள்நீ
கண்முதல் தேவர்க்கும் பெண்முதல் கௌரவம்
கற்றுக் கொடுத்தவள்நீ
தொண்டர் மனக்குறை கண்டு பொறுத்திடாச்
சோதியே மீனாக்ஷியே
சொக்கனும் சொக்கியே சுற்றிவரும் சொக்கியே
சுந்தரி போற்றி போற்றி! (5)
--------------------------------------------------
கடம்பவனவல்லி பதிகம்
(கட்டளைக் கலித்துறை)
தூமேவு வீரந் திருஞான மூன்றையுந் தொண்டரெல்லாம்
தாமேவு வண்ண மளிப்பாயென் றான்றவர் சாற்றுதல்கேட்
டேமேவு நின்சரண் சார்ந்தேனிவற்றை யெளிதருள்வாய்
மாமேவு வானவர் வாழ்த்துங் கடம்ப வனவல்லியே. [1]
வலக்கண் டிருவிடக் கண்வாணி நெற்றியில் வாய்த்தொளிரும்
புலக்க ணறிவு மகளென நூல்கள் புகல்வதுகேட்
டலக்கண் விலக்குநின் றாளடைந் தேனரு ளன்பர்கள்மும்
மலக்கண் ணடைப்புறுங் கண்டீர் கடம்ப வனவல்லியே. [2]
விந்தா டவிக்கின்றி நின்பாத தாமரை மேவுறலென்
சிந்தா டவிக்கியை யாதுகொ லோசெக மீன்றவன்னே
சந்தா டவிசண்ப காடவி கற்ப தருவடவி
வந்தா ரடவி பலசூழ் கடம்ப வனவல்லியே. [3]
தாயா முனக்குத் தமியேன் குறைகளைச் சாற்றனன்றே
ஈயார் தமிழ்ச்சுவை யாயா ரிறுமாந் திருப்பவர்பாற்
போயா சகஞ்செய விட்டுவி டேலென்றன் புத்தமுதே
வாயார வாழ்த்த வருள்வாய் கடம்ப வனவல்லியே. [4]
புத்தியி லேன்விழ லுக்கிறைப் பேனின்றன் பொன்னடிசேர்
பத்தியி லேனெனி னுஞ்சரண் சார்ந்தனன் பார்த்தருளெண்
சித்தி தருமமிழ் தக்கட லின்மணித் தீவகத்தின்
மத்தியில் வில்வ வனஞ்சார் கடம்ப வனவல்லியே. [5]
ஊனார் மயறீர் வியாத னுதிட்டிர னோங்குவிறற்
கூனார் சிலைவிச யன்னன்றி நின்புகழ் கூறுவதற்
கியானா ரெனினுஞ் சரண்புகுந் தேனகற் றென்குறையை
வானார் முகில்படி யுஞ்சீர்க் கடம்ப வனவல்லியே. [6]
ஆவா நினதடி யெண்ணாமல் வீண்செய லாற்றிவெய்ய
தீவாய் விழுபுழுப் போலநொந் தேனின்று தேர்ந்தடைந்தேன்
தேவாதி தேவ னிடத்தாய் நினையன்பிற் சேவைசெய
வாவா வினிதரு ளீவாய் கடம்ப வனவல்லியே. [7]
பாரிற் றருவென மாந்தரைப் பாடிப் பயனின்றியே
தாரித்த லின்றிநின் பாலே யடைக்கலஞ் சார்ந்தனனால்
ஏரிப் புனலன்ன பொன்னே யருட்புய லேயமிழ்த
வாரித் தடமணித் தீவக் கடம்ப வனவல்லியே. [8]
அன்பே யிலாதவர் செய்யுங் கொடிய வவமதிப்பால்
துன்பே யடையு மனத்தேனை யாளத் தொடங்குவையோ
இன்பே செறிமது ராபுரி யன்ப ரிதயமுற்றோய்
வன்பே சமைமணித் தீவக் கடம்ப வனவல்லியே. [9]
காணிக்கை வைத்தம ரேசர் வணங்குநின் கான்மலரைப்
பேணித் தொழுது நினைக்க வருள்செய் பெரியம்மையே
ஆணிப்பொன் வில்லி தனக்கமிழ் தேயகி லாண்டம் பெற்ற
மாணிக்க மேமணித் தீவக் கடம்ப வனவல்லியே. [10]
நற்றவர் கற்றவர் நாவலர் காவலர் ஞானமிகப்
பெற்றவர் தம்முண் மகிடனைப் போற்றவப் பேறுதனை
உற்றவ ராரவன் சென்னிநின் றாள்பெற் றுரைக்குமல்லால்
மற்றவ ரார்சொல வல்லார் கடம்ப வனவல்லியே. [11]
|
0 comments:
Post a Comment