அழகன்குளம் - தமிழ் எண்கணித சரித்திரத்திற்கு ஓர் கலங்கரை விளக்கு

CHENNAI, 28/12/2011: Numeral 408 incised on pottery from Alagankulam (1st century C.E.) . Photo: Tamilnadu State Department of Archaeology


AzhakankuLam (maruGkUr paTTinam of Sangam era) pottery inscription - Numeral 804 (NOT 408!) ~ N. Ganesan (Photo published in The Hindu from Tamil Nadu State Dept. of Archaeology.).

முழு ஆய்வுக் கட்டுரையும், வல்லமை இணைய இதழில் வெளியாகியுள்ளது:

வையைப் பூம்பட்டினத்தில் எண் 804 பொறித்த சங்ககாலத் தொல்பொருள்: 
http://www.vallamai.com/literature/articles/29153/

---------------------------

காவேரிப் பூம்பட்டினம் போலவே ’வையைப் பூம்பட்டினம்’ சங்க காலத்தில் புகழ்பெற்று விளங்கியது. அகநானூறு, நற்றிணை போன்ற பழைய நூல்கள் நமக்களிக்கும் செய்திகளால் வையை நதி கடலுள் சங்கமிக்கும் மருங்கூர்ப்பட்டினமாக அது இருக்க வேண்டும். இன்று அழகன்குளம் அகழாய்வுகள் அளிக்கும் தொல்லியல் சான்றுகளால்  மருங்கையின் இடமும், அதன் வணிகவளமும் வேளாண்வளமும் நன்கு புலனாகி வருகிறது. இன்று வைகை வறண்டு கடலில் கலப்பதில்லை, கடலும் அழகன்குளத்தில் இருந்து உள்வாங்கிவிட்டது. ரோமானியக் கப்பல்கள் எகிப்தில் இருந்து வையைப்பூம்பட்டினத்துக்கு வந்ததைச் சைத்ரீகர் ஒருவர் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்து வரைந்து நமக்களித்துள்ளார். மருங்கையின் புகழ்பாட என்றுமுள தொல்லியல் சான்றுகளாய் ரோமானியக் கப்பல் சித்திரமும், எண்கணித சரிதமும்  கிடைத்துவிட்டன!

புகாரின் கீர்த்தி பாடும் பட்டினப்பாலைக்குப் பின்னர் சமண சமயஞ் சார்ந்த கோவலன் கதையாகத் தமிழின் முதல் நாவல் பூம்புகார்ப் பட்டினத்தில் தொடங்குகிறது. நம் முத்தமிழ்த் தேசியக் காப்பியம் படைத்த இளங்கோ அடிகள் காவேரிப் பட்டினத்துக்கு  தன் நாவலால் அழியாப் புகழ் ஈந்தார். சிரமண சமயத்தவர் எழுத்து மாத்திரம் இல்லாமல், எண்ணையும் இந்தியர்க்குக் கற்பித்தார்கள். அதனால் தான் வள்ளுவர்  ”எண் என்ப ஏனை எழுத்தென்ப இரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு” என்றும் ஔவை ‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ என்றும் பகுத்தனர்.

இன்றும் 4-9 தமிழெண்களின் வடிவங்களில் வடமொழி எண்ணுப்பெயர்களின்  முதல் அட்சரங்கள் இருப்பதைக் காண்கிறோம். கோவலன் குடும்பம் போன்ற வணிகக் குடியினர்க்கு எண் கணக்கு முக்கியம் அல்லவா? இம் மரபு கற்பித்தவர் யார்? வடநாட்டுக் குகைக் கல்வெட்டுக்களில் உள்ள எண்களைச் சிரமண சமயத்தவர் மருங்கைப் பட்டினம்  போன்ற நகரங்களில் கொணர்ந்து தமிழர்க்குத் தந்ததைத் தொல்லியல் ஆய்வுகள் அறிவிக்கின்றன. தமிழரின் எண்கணித வரலாற்றுக்கு முக்கியச் சாட்சியாக வையைப் பூம்பட்டினமான இராமேஶ்வரம் அருகில் உள்ள அழகன்குளம் (சங்ககால மருங்கை) பானை ஓடு சான்றாக விளங்குகிறது.

எண்கணிதத் தேற்றத்தில் (Number Theory) உலகத்தில் வியப்பான முடிபுகளை அளித்தவர் ஈரோட்டில் அவதரித்த கணிதமேதை ராமானுஜன். அவர் நினைவாகச் சென்ற ஆண்டு எழுதிய கட்டுரையில் மருங்கூர்ப் பட்டினம் (இன்றைய அழகன்குளம்) பானை ஓட்டில் உள்ள பெரிய எண்ணை சென்ற ஆண்டு விளக்கியுள்ளார் திருமிகு. ஐராவதம் மகாதேவன் அவர்கள்:
மருங்கூர்ப் பட்டினத்துப் பானை ஓட்டில் உள்ளது 804 எண் ஆகும் என்பது என் முடிபு. ஐராவதம் மகாதேவனார் குறிப்பிட்டது போல இந்த எண் 408 அன்று. இதனை அறிந்துகொள்ளச் சமணர்களின் மனிப்பிரவாள நூல் ஆகிய ஸ்ரீபுராணம் பயிலலாம். ரிஷபநாத தீர்த்தங்கரர் இரு சிறுமியரை மாணவியராக ஏற்று எழுத்தையும், எண்ணையும் கற்பித்தார். அதில் பிராமி என்ற மாணவிக்கு வலக்கையில் எழுத்துக்களைச் சொல்லிக் கொடுத்ததால் இடமிருந்து வலமாக பிராமி எழுத்துக்கள் வளர்ந்தன. ஆனால், சுந்தரி என்னும் பெண்ணுக்கு இடக்கையில் எண்களைத் தீர்த்தங்கரசாமி கற்பித்தார். எனவேதான் எண்களை விவரிக்கும்போது வலமிருந்து இடமாக வளர்வதைக் காண்கிறோம். ஆக, சங்ககால மருங்கையின் பானை ஓட்டு எண்ணை வார்த்தைகளால் வர்ணிக்கும்போது ‘நான்கு தலையிட்ட எட்டின் நூறு’ என்பது பாரத எண்கணிதத்தின் வாமகதி மரபு. ஆனால், மருங்கூர்ப் பட்டினப் பானை ஓட்டின் எண்ணின் மதிப்பு 804 தான், 408 இல்லை. இதனைப் பரவலாக, பிராமிக் கல்வெட்டுகளில் இந்தியாவிலும், ஸ்ரீலங்காவிலும் காணலாகிறது. ஈரோட்டுக்கருகே உள்ள விஜயமங்கலம் கொங்குவேளிர் பெருங்கதையை ரிஷபநாத தீர்த்தங்கரர் கோவிலில் அரங்கேற்றிய கல்வெட்டு இருக்கிறது. நாமக்கல் நாமகிரித் தாயாரும் விசயமங்கல ஆதிநாதரும் சேர்ந்தருள மேதை ராமானுஜனுக்கு வாய்த்தது தமிழரின் கணிதத் திறனை உலகறியத் துணைசெய்தன போலும்.

மருங்கைப் பானை ஓட்டு எண்மதிப்பு 804 - என்னும் பொருளில் ‘வல்லமை’ இணைய இதழில் இரண்டொரு நாளில் விரிவாகத் தருகிறேன். தமிழில் உள்ள எண்கணித வரலாற்றுக்கு கலங்கரை விளக்கமாய் அமைந்துள்ள மருங்கூர்ப் பட்டினம் தொல்லியல் சான்றை அறிமுகம் செய்துள்ள திருமிகு ஐ. மகாதேவனார்க்கு நன்றி.

அன்புடன்,
நா. கணேசன்

வையைப் பூம்பட்டினத்தில் எண் 804 பொறித்த சங்ககாலத் தொல்பொருள்: 
http://www.vallamai.com/literature/articles/29153/ 


Ancient numbers in the land of Ramanujan


    IRAVATHAM MAHADEVAN

    M. V. BHASKAR

    CHENNAI, 28/12/2011: Numeral 408 incised on pottery from Alagankulam (1st century C.E.) . Photo: Tamilnadu State Department of Archaeology


The oldest stone inscription featuring a numeral is the Tamil-Brahmi cave inscription from Tondur
How were numerals written in ancient times in the Tamil country, the land of Srinivasa Ramanujan, ‘The Man Who Knew Infinity'?
Literary sources in Tamil mention numbers only in words.
However, we do have ancient literary references specifically mentioning eN (‘numeral') as distinguished from ezhuttu (‘letter of the alphabet,' for example, Tolkappiyam 655.4, Tirukkural 392).
But as palm leaf manuscripts decay with time and hardly last for more than 200 years, we have to turn to durable stone or pottery inscriptions to know what the ancient Tamil numerals looked like. We illustrate two of them here, one from each class (Figs. 1 & 2).
The oldest stone inscription featuring a numeral is the Tamil-Brahmi cave inscription from Tondur, near Gingee, in Villupuram district, assigned to about the 3rd century C.E. (Fig. 1). The numeral 3 engraved at the end of a short two-line inscription in the cave is represented by three horizontal parallel lines.
The inscription records that the village of Agalur gifted three stone beds in the cave chiselled by Mosi.
The gift was made to the Jaina monks resident in the cave. The village still exists with the same name Agalur, near Tondur, both of which still have sizeable Jaina populations. The numeral 3 has the same form as in contemporary Prakrit inscriptions in the Brahmi script in North India.

POTTERY INSCRIPTION

A well-preserved pottery inscription from Alagankulam near Rameswaram has only the numeral incised in fairly large size (Fig. 2). The inscription is dated to the 1st or 2nd century C.E.
The number is read 408, from right to left, following the ancient convention of reading the digits from the right (ankaanaam vaamato gatih). The first digit at right looking like the cross is the symbol for 4.
It is followed by the symbol for 100 (resembling the Brahmi letter sa) and the last symbol at left is 8, incised in reversed direction.

INTERESTING

As there is no accompanying text, we do not know the significance of the number. The find is still interesting for the absence of the place-value system. The convention of using symbols for 10, 100, and 1000 in expressing the higher numerals was current in Tamil Nadu until the advent of printing and the adoption of the international form of Indian numerals with place-value system.
The pottery inscription is also good evidence for widespread literacy, including numeracy, in the ancient Tamil country.

2 comments:

Anonymous said...

மிக அருமையான பதிவு மின்னஞ்சலில் நும் பதிவுகளை பெற விரும்புகின்றேன்.

Anonymous said...

பதிவுக்கு நன்றி
மு.இளங்கோவன்
புதுச்சேரி