சிந்து சமவெளியின் 4000+ முத்திரைகளில் உள்ள கலையைச் சில பத்தாண்டுகளாய் ஆழ்ந்து படித்து வருகிறேன். முன்பு ஐராவதம் மகாதேவன் ஜல்லிக்கட்டு என்று இந்து நாளிதழில் விவரித்திருந்த சிந்து முத்திரை கொற்றவை/துர்க்கை மயிடனுடன் போரிடும் காட்சி என்று எழுதி இருந்தது நினைவிருக்கலாம்:
http://nganesan.blogspot.com/2008/01/eru-tazuval.html
கோவையில் நடந்து முடிந்த பெரிய மாநாட்டில் என்னைச் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் சிந்து முத்திரைகளில் உள்ள சுமார் 400 சின்னங்களை ஐராவதம் மகாதேவனும், அசோகன் பார்ப்போலாவும் வரையறுத்துள்ளனர். அவற்றைக் கணினி மயமாக்கலின் அத்தியாவசியத்தையும், யூனிக்கோடு செய்முறை விதிகளையும் குறித்துச் சொற்பொழிவு ஆற்றினேன். என்னை அறிமுகம் செய்துவைப்பவர் ஸ்டான்போர்ட் பல்கலையில் பொறியியற் பேராசிரியராய் விளங்கும் ஆ. பால்ராஜ் அவர்கள். மொபைல் பேசிகளில் முக்கிய நுட்பங்களாகிய WiMax, WiFi, 4G கண்டுபிடிப்புகளில் பெரும் பங்காற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்திய வானியல் விஞ்ஞானி ‘சந்திரயான்’ ம. அண்ணாதுரை போலப் பால்ராஜ் அவர்களும் பொள்ளாச்சியில் பிறந்தவர் ஆவார்.
சிந்து சமவெளியில் திராவிடர் சமயம் - கோவைப் பொழிவின் காணொளி இதோ:
இச் சொற்பொழிவு 2007 ஆய்வுக் கட்டுரையை அடிப்படையாய்க் கொண்டது.
Gharial god and Tiger goddess in the Indus valley:
Some aspects of Bronze Age Indian Religion
N. Ganesan, 2007 essay
In the Mature Harappan period seals and tablets produced about 4000 years ago, gharial crocodile is portrayed as a 'horned' being. As in the famous Pashupati seals (M-304), this horned gharial deity is the central figure surrounded by a typical set of animals. A female being, often connected with tigers, is seen coupling together with the gharial in a fecundity scene in an Indus Valley Civilization (IVC) creation myth. A number of seals show a man on the tree along with a tiger below. This shaman on the tree and tiger motif is linked archaeologically with the gharial deity in the sky, and the Mesopotamian Gilgamesh-like goddess shown between two tigers in IVC tablets and moulds. Also, the same shaman on tree along with a tiger motif is seen in the 'horned' gharial "Master of Animals" seals. A comprehensive evaluation of the imagery recorded in the Indus glyptic art is needed to understand the pan-Indus founders' myth cycle, and it is illustrated with pictures of the IVC sealings. These religious myths of the gharial and tiger divinities are at least as important as the tree goddess worship in M-1186 with a shaman, markhor goat and seven women in front of a bodhi fig tree.
சிந்து சமவெளியில் திராவிடர் சமயம்
Subscribe to:
Post Comments (
Atom)
6 comments:
சிந்து சமவெளி நாகரீகம் திராவிட நாகரீகமே என்பதற்கான ஆதாரங்கள் தொடர்ந்து வெளிக்கொணரப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
//அவற்றைக் கணினி மயமாக்கலின் அத்தியாவசியத்தையும், யூனிக்கோடு செய்முறை விதிகளையும் குறித்துச் சொற்பொழிவு ஆற்றினேன்//
செம்மொழி மாநாட்டின் ஆய்வுக் கட்டுரைகள், குறிப்பாக, பார்ப்போலா அவர்களின் மாநாட்டுக் கட்டுரை, படிக்க எங்கு கிடைக்கும் கணேசன் ஐயா? அரசு வலைத்தளங்களில் கட்டுரையின் பேரு இருக்கே தவிர, கட்டுரையின் பொருள், ஆய்வு இதெல்லாம் எதுவும் இல்லையே!
காணொளி தெரியவில்லையே. ஏன்.
அன்புடன்
ரா.ராதாகிருஷ்ணன்
நல்ல பதிவு.
http://www.hindu.com/nic/wc_tamil_conference.htm
Text of acceptance speech of Asko Parpola
http://www.harappa.com/script/parpola0.html
நண்பர் கணேசன் அவர்களுக்கு,
நீங்கள் தொலைபேசியில் பேசியபோது ஹரித்துவாரில் இருந்தேன். டவர் சரியாக இல்லாததால் அன்று நம் உரையாடல் முழுமை பெறவில்லை. ஊர் திரும்பி இரண்டு நாட்கள் ஆகின்றன.
வணக்கம்.
வணக்கம் ஐயா,
நான் பின்பற்றும் ஒரு வலைப்பதிவான
தமிழ்க்கொங்குவில் மாநாட்டுப்பதிவுகள் கண்டு மகிழ்ந்தேன்.
Post a Comment