தமிழ் செம்மொழி ஆன வரலாறு - ஜார்ஜ் ஹார்ட் கருத்துக்கோவை! - இணைய விவாதங்களின் ஒரு மலரும் நினைவுகள்

கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் பற்றிப் பலரும் தமிழ்நாட்டிலும் பதிவுலகிலும் முதன்முறையாக அறிந்து வருகின்றனர். கிரேக்கம், இலத்தீனம், ஜெர்மன், ருஸ்ஸியன், சம்ஸ்க்ருதம், மலையாளம், தமிழ், .. என்று பல மொழிகள் பழுதறக் கற்றவர். கம்பனையும், சங்கப்பாடல்கள், ... மொழிபெயர்த்து விருதுகள் அடைந்தவர். புறநானூறு முழு மொழிபெயர்ப்பில் தமிழ்ப் பேராசிரியை வி. எஸ். ராஜம் அவர்களுக்கும், எனக்கும் தொடக்கத் தனிப்பக்கம் ஒன்றில் நன்றி பாராட்டியுள்ளார். அகநானூறு முழு மொழிபெயர்ப்பு வெளிவர இருக்கிறது. சங்க இலக்கியம் முழுதும் வாழ்நாள் முழுக்கப் படித்தும், ஆய்ந்தும், மொழிபெயர்த்தும், ஏனை இந்தியப் பண்டை இலக்கியங்களுடன் ஒப்பிட்டும் எழுதும் பேரா. ஹார்ட் இந்திய சமூக அமைப்பு உருவாக்கத்தில் திராவிடர்களின் பங்கை விளக்கும் கட்டுரை மிக முக்கியமானது. அதனை பெர்க்கிலி பல்கலை ஆய்வுத்தளத்தில் நாம் கற்கலாம்.

பின்னாளில் ஆனந்தவர்த்தனர் (கி.பி. 820-890) போன்றோர் வட இலக்கிய, இலக்கணங்கள் கொண்டு விளக்கிய த்வனிக் கோட்பாடு தமிழில் சங்க இலக்கியத்தில் வேர் கொண்டுள்ளமையைக் காட்டியுள்ளார்.

பேரா. ஜார்ஜ் ஹார்ட் அவர்கள் தமிழகம் முழுக்க அறிந்த பெயர் ஆவதற்குக் கோவையில் செம்மொழி மாநாடு நடத்தும் முதல்வர் கருணாநிதி கொடுத்துள்ள ஹார்ட் கடித மொழிபெயர்ப்பு ஒரு முக்கியக் காரணம். பேரா. சி. இ. மறைமலை அவர்களை ஹார்ட் பெர்க்கிலி பல்கலைக்கு அழைத்திருந்த வேளை. இந்தாலஜி என்னும் பேராசிரியர்கள் அவையில் நான் முதலிலும், பின்தொடர்ந்து நண்பர் சிலரும் தமிழ் செம்மொழி (Classical Language of India on par with Sanskrit) என்று எழுதினோம். அதை கேள்விக்குள்ளாக்கி திராவிடவியல் பேராசிரியரும் உஸ்மானியா பல்கலை துணைவேந்தர் ஆக இருந்த ப. கிருஷ்ணமூர்த்தி வினாக்கள் எழுப்பினார். உ-ம்: Bh. கிருஷ்ணமூர்த்தி என்னைக் கேட்ட மடல்: “Some members make it their mission to sing the glory of one language and one culture (?), i.e. Tamil. The pathetic appeal of one list member to place Tamil on the same footing as the Classical languages-- Sanskrit, Persian and Arabic in India-- sounds ridiculous. Tamil is a modern language and not a classical language. Classical lgs are not the mother tongues of any segment of natives in India. In the western world, only Latin and Greek qualify as classical languages. Classical lgs in India get much less support than modern lgs. The modern lgs are encougared at the state as well as federal levels. Modern lgs are used widely-- in education, media, administration, etc. There are no films made in India in the classical lgs (only two or three in Skt.). I do not know why some of these members childishly say that more funds would come if Tamil were regarded a classical lg. You cannot promote the interests of a lg through internet by quoting things from a lg on every possible pretext. Those who have such love should have stayed back in India instead of going for greener pastures in a foreign country and then start doing this kind of propaganda ad nauseum. What are they gaining? Members are having lot of fun from such postings. This trend has increased recently. I urge upon such members to see reason and and exercise some restraint in their postings. The limit was saying that one particular book must be sold cheaply in India because it made a guess that the Mohanjodaro lg could be an early form of Dravidian. It was nothing more than a guess. Scholars have speculated, writing volumes without proving anything. How this appeal improves the cause or status of Tamil or Dravidian, God alone knows. Isn't this too childish? My friends and compatriots, please stop sending such postings which betray our ignorance. As an elderly person, I think I have the right to correct my younger compatriots.“ (பொங்கல் நாள், 1999). நான் பார்ப்போலா புத்தகம் இந்திய பதிப்பாக குறைந்த விலையில் வரவேண்டும் என்பதை எதிர்த்தும், ’தமிழ் செம்மொழி அன்று’ என்று பேரா. பத்ரிராஜு கிருஷ்ணமூர்த்தி எனக்குச் சொல்லும் கடிதம் பார்த்தீர்களா?. அதுசமயம் பேரா. ஹார்ட் அவர்களிடம் சிலமுறை போனில் பேசினேன். ஓராண்டு தொடர்ந்து உன்னிப்பாய்க் கவனித்துவந்தார் பேரா. ஹார்ட். செந்தமிழின் சாராம்சத்தை வருகைப் பேராசியர் சி. இ. மறைமலை அவர்களுக்கு எழுதிய கடிதம் தமிழ் செம்மொழி என்று தில்லி அரசாங்கத்தில் நிறுவ உறுதுணையானது வரலாறு. வா. செ. கு. (அ) Tamil among the Classical Languages of the World, Chennai, 2005 (ஆ) உலகச் செவ்வியல் மொழிகளின் வரிசையில் தமிழ் (2005) நூல்களில் விரிவான காரணங்களைக் காணலாம்.


சென்ற அக்டோபரில் ஜெர்மனியில் நடந்த இணைய மாநாடு அடுத்தபடியாய் செம்மொழி மாநாடு நடக்கும் நேரத்தில் 9-ம் தமிழ் இணைய மாநாடு ஆகக் கோவை மாநகரில் நடக்க உள்ளது. அதிலும், ‘சந்திரயான்’ ம. அண்ணாதுரை நடத்தும் அறிவியல்தமிழ் மாநாட்டில் பங்கேற்க வர உள்ளேன். பேரா. வா. செ. குழந்தைசாமி அவர்கள் தலைமையில் நடக்கும் அமர்வுகளில் கருத்தளிக்க ஆவல் கொண்டுள்ளேன். தமிழக முதல்வர் ஹார்ட் கோவை வருகிறார் என்று அறிவித்துள்ளார். ஹார்ட்டும், ஆஸ்கோ பார்ப்போலாவும் திராவிடர்களின் பங்கு தொன்மையான இந்தியா முழுக்கப் பரவியிருந்ததை உலகுக்கு அறிவித்தும், நிறுவியும் வரும் கடின உழைப்பாளிகள். அவர்களுக்கும், தமிழ்க் காதலால் கொங்கின் தலைநகர்க்கு வந்து தம் ஆய்வுகளை பகிர்ந்துகொள்ளும் அறிஞர்களுக்கும் நம் நல்வரவு வாழ்த்தினை அளிப்போம்.

அன்பிணை,
நா. கணேசன்

சுஜாதா, கணினியும் செம்மொழி தமிழும், 2005:
http://nganesan.blogspot.com/2008/03/cemmozi.html

தமிழ் செம்மொழி - பேரா. ஹார்ட் கருத்துக்கோவை




April 11, 2000

Statement on the Status of Tamil as a Classical Language
Professor Maraimalai has asked me to write regarding the position of Tamil as a classical language, and I am delighted to respond to his request.

I have been a Professor of Tamil at the University of California, Berkeley, since 1975 and am currently holder of the Tamil Chair at that institution. My degree, which I received in 1970, is in Sanskrit, from Harvard, and my first employment was as a Sanskrit professor at the University of Wisconsin, Madison, in 1969. Besides Tamil and Sanskrit, I know the classical languages of Latin and Greek and have read extensively in their literatures in the original. I am also well-acquainted with comparative linguistics and the literatures of modern Europe (I know Russian, German, and French and have read extensively in those languages) as well as the literatures of modern India, which, with the exception of Tamil and some Malayalam, I have read in translation. I have spent much time discussing Telugu literature and its tradition with V. Narayanarao, one of the greatest living Telugu scholars, and so I know that tradition especially well. As a long-standing member of a South Asian Studies department, I have also been exposed to the richness of both Hindi literature, and I have read in detail about Mahadevi Varma, Tulsi, and Kabir.

I have spent many years -- most of my life (since 1963) -- studying Sanskrit. I have read in the original all of Kalidasa, Magha, and parts of Bharavi and Sri Harsa. I have also read in the original the fifth book of the Rig Veda as well as many other sections, many of the Upanisads, most of the Mahabharata, the Kathasaritsagara, Adi Sankara’s works, and many other works in Sanskrit.

I say this not because I wish to show my erudition, but rather to establish my fitness for judging whether a literature is classical. Let me state unequivocally that, by any criteria one may choose, Tamil is one of the great classical literatures and traditions of the world.

The reasons for this are many; let me consider them one by one.

First, Tamil is of considerable antiquity. It predates the literatures of other modern Indian languages by more than a thousand years. Its oldest work, the Tolkappiyam,, contains parts that, judging from the earliest Tamil inscriptions, date back to about 200 BCE. The greatest works of ancient Tamil, the Sangam anthologies and the Pattuppattu, date to the first two centuries of the current era. They are the first great secular body of poetry written in India, predating Kalidasa's works by two hundred years.

Second, Tamil constitutes the only literary tradition indigenous to India that is not derived from Sanskrit. Indeed, its literature arose before the influence of Sanskrit in the South became strong and so is qualitatively different from anything we have in Sanskrit or other Indian languages. It has its own poetic theory, its own grammatical tradition, its own esthetics, and, above all, a large body of literature that is quite unique. It shows a sort of Indian sensibility that is quite different from anything in Sanskrit or other Indian languages, and it contains its own extremely rich and vast intellectual tradition.

Third, the quality of classical Tamil literature is such that it is fit to stand beside the great literatures of Sanskrit, Greek, Latin, Chinese, Persian and Arabic. The subtlety and profundity of its works, their varied scope (Tamil is the only premodern Indian literature to treat the subaltern extensively), and their universality qualify Tamil to stand as one of the great classical traditions and literatures of the world. Everyone knows the Tirukkural, one of the world's greatest works on ethics; but this is merely one of a myriad of major and extremely varied works that comprise the Tamil classical tradition. There is not a facet of human existence that is not explored and illuminated by this great literature.

Finally, Tamil is one of the primary independent sources of modern Indian culture and tradition. I have written extensively on the influence of a Southern tradition on the Sanskrit poetic tradition. But equally important, the great sacred works of Tamil Hinduism, beginning with the Sangam Anthologies, have undergirded the development of modern Hinduism. Their ideas were taken into the Bhagavata Purana and other texts (in Telugu and Kannada as well as Sanskrit), whence they spread all over India. Tamil has its own works that are considered to be as sacred as the Vedas and that are recited alongside Vedic mantras in the great Vaisnava temples of South India (such as Tirupati). And just as Sanskrit is the source of the modern Indo-Aryan languages, classical Tamil is the source language of modern Tamil and Malayalam. As Sanskrit is the most conservative and least changed of the Indo-Aryan languages, Tamil is the most conservative of the Dravidian languages, the touchstone that linguists must consult to understand the nature and development of Dravidian.

In trying to discern why Tamil has not been recognized as a classical language, I can see only a political reason: there is a fear that if Tamil is selected as a classical language, other Indian languages may claim similar status. This is an unnecessary worry. I am well aware of the richness of the modern Indian languages -- I know that they are among the most fecund and productive languages on earth, each having begotten a modern (and often medieval) literature that can stand with any of the major literatures of the world. Yet none of them is a classical language. Like English and the other modern languages of Europe (with the exception of Greek), they rose on preexisting traditions rather late and developed in the second millennium. The fact that Greek is universally recognized as a classical language in Europe does not lead the French or the English to claim classical status for their languages.

To qualify as a classical tradition, a language must fit several criteria: it should be ancient, it should be an independent tradition that arose mostly on its own not as an offshoot of another tradition, and it must have a large and extremely rich body of ancient literature. Unlike the other modern languages of India, Tamil meets each of these requirements. It is extremely old (as old as Latin and older than Arabic); it arose as an entirely independent tradition, with almost no influence from Sanskrit or other languages; and its ancient literature is indescribably vast and rich.

It seems strange to me that I should have to write an essay such as this claiming that Tamil is a classical literature -- it is akin to claiming that India is a great country or Hinduism is one of the world's great religions. The status of Tamil as one of the great classical languages of the world is something that is patently obvious to anyone who knows the subject. To deny that Tamil is a classical language is to deny a vital and central part of the greatness and richness of Indian culture.

(Signed:)
George L. Hart
Professor of Tamil
Chair in Tamil Studies

கலிபோர்னியா பேராசிரியர் வழங்கிய கருத்துக்கோவை!

தமிழுக்குச் செம்மொழி தகுதிநிலை பற்றி அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட்டின் அறிக்கையில் உள்ள கருத்துக்கள் இந்திய கல்வியாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எழுச்சியையும் ஏற்படுத்தியது என்று திமுக தலைவரும் முதலமைச்சருமான கருணாநிதி கூறியுள்ளார்.

உடன்பிறப்பே,
நன்றி : முரசொலி நாள்: 29.12.2009

தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டுமென்ற வேண்டுகோளோடு, கழக அரசால் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கை மைசூரிலுள்ள இந்திய மொழிகளின் நடுவண் ஆணையத்திற்கு அனுப்பப் பட்டது. அந்த அமைப்பு, கழக அரசின் அறிக்கையினை அனைத்துக் கோணங்களிலும் அணுகி, ஆராய்ந்து இறுதியில், "செம்மொழிக் குரிய அனைத்துத் தகுதிப்பாடுகளும் தமிழுக்கு இருப்பதால், நடுவண் அரசு தமிழைச் செம்மொழியாக அறிவிக்கலாம்" என மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது.

இதற்கிடையே, "இரண்டாயிரம் ஆண்டு பாரம்பரியம் மிக்க நம் தமிழ்மொழியைச் செவ்வியல் மொழி வரிசையில் சேர்த்து, அதன் வளர்ச்சிக்கு நிதியுதவி அளிக்க வேண்டுமென மத்திய அரசை இந்தப் பேரவை கேட்டுக் கொள்கிறது"" என 30.5.1996 அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகமும் ;

"பல்லாயிரம் ஆண்டுக்கால பழைமையும், சீரிய இலக்கியச் செழுமையும், இலக்கண முழுமையும் வாய்ந்த மொழியாகிய தமிழ் மொழியை உயர்தனிச் செம்மொழியாக அறிவிக்க வேண்டுமென ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது"" என்று தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும்;

"தமிழ் மொழியின் தொன்மை, செழுமை வாய்ந்த இலக்கியங்கள் ஆகியவற்றின் காரணமாகவும்; பல்வேறு மொழிகளுக்கும், இலக்கியப் படைப்புகளுக்கும் மூலாதாரமாகத் தமிழ் மொழி விளங்குவதாலும்; தமிழ் மொழியைச் செம்மொழியெனப் பிரகடனம் செய்து, தொடர்ந்து தமிழ் வளர்ந்தோங்கிடத் தேவையான நிதியுதவியினை வழங்கிட வேண்டு மென்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்வதெனத் தீர்மானிக்கப்படுகிறது"" என்று 19.7.1996 அன்று சென்னைப் பல்கலைக் கழகமும்;

“தமிழ், தொன்மையான மொழியாகவும், வளம் செறிந்த இலக்கியப் பாரம்பரியம் கொண்டதாகவும் திகழ்வதால் தமிழ்மொழியைச் செம்மொழி என அங்கீகாரம் செய்து தமிழ்மொழி வளர்வதற்கு நிதி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் அளித்திட வேண்டுமென்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்வதெனத் தீர்மானிக்கப்படுகிறது” என்று 20.8.1996 அன்று திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகமும் தீர்மானங்கள் நிறைவேற்றி மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் அனுப்பி வைத்தன. இது போன்ற தீர்மானங்கள், தமிழகத்திலுள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களாலும் நிறைவேற்றி, அனுப்பி வைக்கப்பட்டன.

23.8.1996 அன்று தமிழகச் சட்டப் பேரவையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் டாக்டர் இ.எஸ்.எஸ்.ராமன் கேட்ட கேள்விக்கு, “இந்தியா முழுவதும் எல்லாப் பல்கலைக் கழகங்களிலும் சமஸ்கிருதம், அரேபிய மொழி வரிசையில், தமிழ் மொழிக்கும் அந்தஸ்து வழங்க வேண்டுமென்று வற்புறுத்திப் பிரதமருக்கு முதலமைச்சர் கலைஞர் கடிதம் எழுதியுள்ளார்” என்று அமைச்சர் தமிழ்க் குடிமகன் பதில் அளித்தார்.

“அரிய இயல்புகள் அனைத்தையும் கொண்டிருந்தாலும், தமிழ் இன்னமும் இந்தியத் திருநாட்டின் செம்மொழியென அங்கீகரிக்கப்பட வில்லை. ஆனால், சமஸ்கிருதம், பாரசீகம், அரேபியம் ஆகிய மொழிகளுக்கு அந்த அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. எனவே தமிழை, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையும், பல்கலைக்கழக மானியக் குழுவும் செம்மொழியென அங்கீகாரம் செய்வதோடு, மேலும் தாமதமின்றி உரிய நிதியுதவியும் அளித்திட வேண்டும்” என்று 21.8.1996 அன்று; தமிழக முதலமைச்சர் என்ற முறையில் நான், பிரதமர் தேவகவுடாவுக்கு கடிதம் அனுப்பினேன். அந்தக் கடிதம் பெற்றுக் கொண்டமைக்கு 29.8.1996 அன்று ஒப்புதலும் வந்தது.

முந்தைய பிரதமர்கள் தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால் மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர்களுக்கு ஏற்கனவே நான் அனுப்பியிருந்த கடிதங்களைச் சுட்டிக்காட்டி24.10.1998 அன்று பிரதமர் அடல் பிகாரி வாஜ்பயிக்கு, “சமஸ்கிருதம், பாரசீகம், அரேபியம் போன்று தமிழைச் செம்மொழியென அறிவித்திட வேண்டுமென்ற, உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் நீண்ட காலக் கோரிக்கையினை தங்கள் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். நியாயமான அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும்” என்று நீண்ட கடிதம் எழுதினேன். கடிதத்துடன் “உயர்தனிச் செம்மொழியாக ஒளிரும் தமிழ்” எனும் தலைப்பிடப்பட்ட வல்லுநர் குழு அறிக்கையின் நகலையும், தமிழகப் பல்கலைக் கழகங்களில் நிறைவேற்றிய தீர்மானங்களின் நகல்களையும் மீண்டும் அனுப்பி வைத்தேன். தொடர்ந்து பிரதமருக்கும், மத்திய அரசுக்கும், நினைவூட்டுகளும் அனுப்பி வைக்கப்பட்டன.

தலைநகர்த் தமிழ்ச் சங்கம், டெல்லி தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ் அமைப்புகள் சார்பில், தமிழை மத்திய ஆட்சிமொழியாகவும், செவ்வியல் மொழியாகவும் ஏற்றிடக் கோரி டெல்லியில் 2000, ஏப்ரல் திங்கள் 29, 30 ஆகிய நாட்களில் மாநாடு ஒன்று நடைபெற்றது.

அம்மாநாட்டை, செவ்வியல் மொழிச் செயலாக்கக் குழுத் தலைவர் சாலினி இளந்திரையன் முன்னின்று நடத்தினார். கல்வியாளர்களும், அரசியல் தலைவர்களும், தமிழறிஞர்களும் அந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். தமிழக அரசின் சார்பில், அந்த மாநாட்டில் கலந்து கொள்ள தமிழ்வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் முனைவர் தமிழ்க் குடிமகன் அனுப்பி வைக்கப்பட்டார். மாநாட்டுக்கு நான் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், “இம்மாநாடு நடத்துவதறிந்து மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். தமிழ் மொழியை மத்தியில் ஆட்சி மொழியாக்கிட வேண்டுமென, அண்ணா காலத்திலிருந்து மைய அரசை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தமிழக அரசின் சார்பில், மைய அரசுக்குக் கோரிக்கைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், புதுடெல்லியில் மாநாடு நடத்தி, அதன் மூலம் இக்கோரிக்கைகளை வலியுறுத்திடும் முயற்சி பெரிதும் பாராட்டத்தக்கதாகும். இம்மாநாடு மைய அரசின் எண்ணங்களை, அறவழியில் ஈர்த்திடும் வண்ணம் எழுச்சியுடன் நிகழ்ந்திட உளமார வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தேன்.

2000ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில், டெல்லியில் நடைபெற்ற அந்த மாநாடு தொடர்பான சோக நிகழ்வு ஒன்று இன்னமும் என் இதயத்தில் உறைந்து போய் இருக்கிறது. அந்த மாநாட்டின் வெற்றிக்காக, இரவுபகல் பாராது உழைத்த சாலினி இளந்திரையன், டெல்லிக்கு வந்த தமிழ்ச் சார்பாளர்களை வரவேற்கச் சென்றபோது, சாலை விபத்து ஒன்றில் கார் மோதி, உயிர் துறந்தார். கட்சி வேறுபாடின்றி அனைவரையும் அழைத்து, அந்த மாநாட்டினை நடத்த முன்னின்று உழைத்த சாலினி இளந்திரையன் மரணம் அடைந்தது மாபெரும் சோகமாகும். பேராசிரியர் சாலினி இளந்திரையன் உடல், டெல்லி இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டு முடிந்தபின்னர் அந்த மாநாடு அவரது நினைவாகவே நடத்தப்பட்டது!

பேராசிரியர் இ. மறைமலை கேட்டுக் கொண்டதற்கிணங்க, 2000, ஏப்ரல் திங்களில் அமெரிக்கத் தமிழறிஞர் பேராசிரியர் முனைவர் ஜார்ஜ் எல்.ஹார்ட், தமிழ்மொழியைச் செம்மொழியெனக் கூறும் நிலைப்பாடு பற்றி வழங்கிய அறிக்கை, உலகெங்கிலும் உள்ள கல்வியாளர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தது. ஆங்கிலத்தில் வரையப்பட்ட கருத்தாழம் மிக்க அந்த அறிக்கை தமிழ்ச் செம்மொழி வரலாற்றில், ஆணிமுத்தை ஒத்த அத்தியாயமாகும்.

அமெரிக்காவிலுள்ள பர்க்லி நகரில் அமைந்துள்ள கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில், 1975ஆம் ஆண்டு முதல் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருபவர் ஜார்ஜ் எல்.ஹார்ட். அவர் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் வடமொழி இலக்கியம் பயின்று பட்டம் பெற்றவர். மாடிசன் நகரில் உள்ள விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் வடமொழிப் பேராசிரியராகவே பணியாற்றியவர். தமிழ் மற்றும் வடமொழி ஆகிய இருமொழி இலக்கியங்களை முறையாகக் கற்றுத் தேர்ந்தவர். அவற்றுடன், ஐரோப்பியச் செம்மொழிகளான இலத்தீனம், கிரேக்கம் ஆகிய இருமொழி இலக்கியங்களையும் விரிவாகக் கற்றுத் தேர்ந்தவர். இம்மொழிகள் அனைத்திலும் உள்ள நூல்களை மூல மொழியிலேயே கற்றுணர்ந்தவர். தற்கால ஐரோப்பிய மொழிகளின் இலக்கியங்களையும், மொழி ஒப்பியலையும் நன்கு கற்றுத் தேர்ந்தவர். இரஷ்யன், ஜெர்மன், பிரெஞ்சு ஆகிய மொழிகளின் இலக்கியங்களை விரிவாகக் கற்றவர். அவற்றைப் போலவே, தற்கால இந்திய மொழிகளில் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளின் இலக்கியங்களை மூலமொழியிலும், மற்ற எல்லா மொழிகளிலும் உள்ள இலக்கியங்களை மொழியாக்கம் வாயிலாகவும் விரிவாகக் கற்றவர். இந்தி மொழியில் மகாதேவி வர்மா, துளசி, கபீர் ஆகிய பெருமக்களின் இலக்கியப் படைப்புகளையும் விரிவாகப் படித்தறிந்தவர்.

இத்தனை சான்றாண்மையினையும், மொழிப் புலமையினையும், இலக்கியத் திறனறிவினையும் ஒருங்கே பெற்ற பேராசிரியர் ஜார்ஜ் எல். ஹார்ட், தமிழ் மொழியைச் செம்மொழி எனக் கூறும் நிலைப்பாடு பற்றியும், அதன் தகுதிநிலை பற்றியும் வழங்கிய அறிக்கையில் பொறிக்கப்பட்டுள்ள பொன்னான கருத்துரைகளைக் கழக உடன்பிறப்புகள் படித்து அறிந்து கொள்ளவும், மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் வேண்டுமென்பதற்காக தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட அந்த அறிக்கையின் முக்கியமான பகுதிகளைப் பின்வருமாறு தருகிறேன். இந்தப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் கோவை மாநாட்டுக்கும் வருகை தர இருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கதாகும். இதோ - அவரது அந்த அறிக்கை :

“தமிழ்மொழி உலகின் மிகவுயர்ந்த செவ்வியல் இலக்கியங்களையும், மரபுச் செல்வங்களையும் பெற்றுத் திகழும் உயர்தனிச் செம்மொழிகளுள் ஒன்று என்பதனை நான் எவ்விதத் தயக்கமும் இன்றித் தெளிவாக அறுதியிட்டுக் கூறுவேன். இவ்வாறு நான் கூற முனைவதற்குக் காரணங்கள் பலவுள்ளன. அவற்றை இனி ஒவ்வொன்றாக எடுத்து விளக்க முற்படுகின்றேன்.

முதலாவதாக, தமிழ்மொழி மிகுந்த பழைமைச் சிறப்பு வாய்ந்த மொழி. ஏனைய தற்கால இந்திய மொழிகளின் இலக்கியங்களுக்கெல்லாம் காலத்தால் மிகவும் முற்பட்ட, ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கும், அதற்கு மேலும் முற்பட்ட பேரிலக்கியங்களைக் கொண்டது தமிழ்மொழி. தமிழில் மிகப்பழம் பெரும்நூல் தொல்காப்பியம். தொன்மைக் காலக் கல்வெட்டுகளிலிருந்து, இந்நூலின் பகுதிகள் காலத்தால் மிகமுற்பட்டவை எனவும், ஏறத்தாழ கி.மு.200க்கு முன்பே இந்நூல் எழுந்துள்ளது எனவும் தெரிகின்றது. பழந் தமிழரின் பேரிலக் கியங்கள் சங்க இலக்கியங்களாகும்; அவை பத்துப்பாட்டும், எட்டுத் தொகை நூல்களும் பிறவும் ஆகும். அவை, ஏறத்தாழ கி.பி. முதல் இரு நூற்றாண்டுகளில் எழுந்தவை எனக் கொள்ளலாம். அவை, வடமொழியில் காளிதாசரின் பேரிலக்கியங்கள் தோன்றுவதற்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றி விட்டன. மதச்சார்பற்ற இந்தியாவில், முதன் முதலில் எழுந்த மதச்சார்பற்ற பெருங்கவிதை இலக்கியத் தொகுப்பு, சங்க இலக்கியங்கள் என்றால் அது மிகையாகாது.

இரண்டாவதாக, இந்தியாவில் தோன்றிய, இந்திய மண்ணிற்கு மட்டுமே தனிச் சிறப்பான இலக்கிய மரபினைக் கொண்டது தமிழ்; இந்த இலக்கிய மரபு வடமொழியிலிருந்து பெறப் பட்டது அன்று என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையைச் சொல்வதானால், தென்னாட்டில் சமற்கிருத மொழியின் செல்வாக்கு வலிமை பெறுவதற்கு முன்னரே, தமிழ் இலக்கியங்கள் தோன்றிவிட்டன. அதனால்தான், தமிழ் இலக்கியங்கள் யாவும், வடமொழியில் அல்லது வேறு இந்திய மொழிகளில் உள்ள எந்த இலக்கியத்தையும் போல இல்லாமல், தன்மையால், இயல்பாய் முற்றிலும் மாறுபட்டுத் தனிச்சிறப்புடன் விளங்குகின்றன.

சிறந்த இலக்கியக் கொள்கை, விழுமிய இலக்கண மரபுகள், உயர்ந்த முருகியற் செழுமை, இவை அனைத்திற்கும் மேலாக, தனித்து விளங்கும் தனக்கேயுரிய மிகப் பெரிய இலக்கியச் செல்வம் ஆகியவற்றைக் கொண்டிலங்குவது தமிழ்மொழியாகும். வடமொழியிலோ, வேறு எந்த இந்திய மொழியிலோ காணப்படாத, அவற்றிலிருந்து முற்றிலுமாக வேறுபட்டு விளங்குகின்ற, இந்தியப் பெருநாட்டினுக்கு உரித்தான (இந்திய மக்களிடம் காணப்படுகின்ற) கலைநயம் தோய்ந்த ஒருவகை நுட்ப உணர்வைத் (sensibility) தமிழ் இலக்கியங்கள் தம்மகத்தே கொண்டுள்ளன. வளம்மிக்க விரிந்து பரந்த அறிவின் மாட்சியும், மரபும் அவற்றின்கண் பெரிதும் இடம் பெற்றிருக்கின்றன.

மூன்றாவதாக, தமிழ் மொழியின் செவ்வியல் இலக்கியங்களின் தன்மை, அவற்றைச் சமற்கிருதம், கிரேக்கம், இலத்தீனம், சீனம், பாரசீகம், அரபு ஆகிய மொழிகளில் எழுந்து விளங்கும் பேரிலக்கியங்களுக்கு நிகராக (அவற்றுடன் ஓரணியில் வைத்து) எண்ணத் தக்க நிலையை, தகுதியை அவற்றுக்கு வழங்குகிறது. தமிழ் இலக்கியங்களின் சொற் செறிவும், பொருளாழமும், அவற்றின் நுட்பமும் திண்மையும் (profundity) அகலமும் விரிவும் (varied scope) அவை நுவலும் பல்வேறு பாடுபொருள்களும், களமும் நவீன காலத்திற்கு முந்தைய (இந்திய இலக்கியங்களில், கால அளவில் முற்பட்ட பழந்தமிழ் இலக்கியங்கள் மட்டுமே, சமூகத்தில், தாழ்வுற்ற, பிற்பட்ட, கடைப்பட்ட மக்களையும் கருப்பொருளாகக் கொண்டுள்ளன). அவற்றின், மனித குலம் அனைத்தையும் வயப்படுத்தும் உலகளாவிய கோட்பாடும் (universality), தமிழ் மொழியை உலகம் தழுவிய மிகப்பெரிய செவ்வியல் மொழி, மரபுகள், இலக்கியங்களுடன் ஒருங்கே வைத்து, அவற்றுள் ஒன்று எனப்போற்றும் தகுதி நிலையை அளிக்கின்றன. வான்புகழ் வள்ளுவர் வழங்கிய திருக்குறள், ஒழுக்கநெறிகளைக் கற்பிக்கும் உலகின் தலைசிறந்த அறநூல் என்பதனை அனைவரும் அறிவோம். எனினும், இந்த நூல், தமிழில் செவ்வியல் மொழி, இலக்கிய மரபுகளைத் தம்முள் கொண்டு விளங்குகிற, ஒன்றிலிருந்து ஒன்று பெரிதும் வேறுபட்ட பாடுபொருள்களை உடைய, பல்வேறு பெருநூல்களின் தொகுப்பில் (பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள்) ஒன்றாகும். இந்தப் பேரிலக்கியத் தொகை நூல்களின் வாயிலாக, மனிதகுல வாழ்வியலின் ஒவ்வொரு பரிமாணமும், ஒவ்வொரு தோற்றமும் மிக நுட்பமாகவும், விரிவாகவும், விளக்கமாகவும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன; இந்த இலக்கியப் படைப்புகளின் ஆய்வுக்குட்படாத, இவற்றின் ஒளிபடாத வாழ்வியல் துறைகளே இல்லை எனலாம்.

இறுதியாக, தமிழ்மொழி நவீனகால இந்தியப் பண்பாடு, மரபுகளின் முதன்மையான, தனித்துவம் உடைய வாயில்களில் ஒன்றாக விளங்குகிறது. சமற்கிருதக் கவிதை மரபின் மீது தென்னக மரபுகளின் செல்வாக்கைப் பற்றி நான் மிக விரிவாக எழுதியுள்ளேன். இதற்கு நிகராக இன்னொரு முக்கியச் செய்தியுமுண்டு; தமிழில் சங்கத் தொகை நூல்களின் காலத்தில் தோன்றிப் பரவத் தொடங்கிய இந்து சமயச் சார்புடைய, புனிதமான (வழிபாட்டுப்) பேரிலக்கியங்கள் நவீனகால (இந்திய) இந்து சமய வளர்ச்சிக்குப் பெரிதும் உறுதுணையாக இருந்துள்ளன. அந்தப் பக்தி இலக்கியச் சிந்தனைகளும், கருத்துகளும் (தெலுங்கு, கன்னடம், சமற்கிருதம் ஆகிய மொழிகளில் எழுந்த) பாகவத புராணத்திலும், ஏனைய நூல்களிலும் எடுத்தாளப் பெற்று, அவற்றின் வழியாக, இந்தியத் திருநாடு முழுவதும் பரவின. ‘வேதங்களுக்கு ஒப்பானவை’ என்று போற்றப் படும் புனிதமான சமய (பக்தி) இலக்கியங்கள் தமிழிலுள்ளன; இவை தமிழுக்கே உரியன. இவை தென்னிந்திய வைணவத் திருக் கோவில்களில் (திருப்பதி முதலானவை) வேத மந்திரங்களுடன் சேர்த்து ஓதப் பெறுகின்றன. தற்கால இந்தோ-ஆரிய மொழிகளுக்கு எவ்வாறு வடமொழி (சமற்கிருதம்) மூலமொழியாக விளங்குகிறதோ, அதேபோன்று தற்காலத் தமிழ், மலையாள மொழி இலக்கியங்களுக்குச், செவ்வியல் மொழியாகத் திகழ்ந்த தொன்மைத் தமிழே மூலமொழியாக விளங்குகிறது. இந்தோ-ஐரோப்பிய மொழிகளில், சமற்கிருதம் மிகமிகப் பழையது; தொன்மையானது; கால வகையில் சிறிதளவும் மாறாது, மாற்றத்திற்கு இடங்கொடாது, இன்றளவும் பழைமைக்குப் பழைமையாக இருந்து வருகிறது. அதே போன்று, திராவிட மொழிகளில் தமிழ் முன்னைப் பழைமைக்கும் பழைமையாகவும் மிகவும் தொன்மையானதாகவும் இருந்து வருகிறது. எனினும், திராவிட மொழிகளின் இயல்பையும், வளர்ச்சியையும் புரிந்துகொள்ள மொழியியலாளர்கள் நாடவேண்டியதும், அவர்களுடைய ஆய்வுகளுக்கு உதவும் உரைகல்லாகத் (கட்டளைக்கல்) திகழ்ந்து வருவதும் தமிழேயாகும்.

ஒரு மொழி ‘செவ்வியல் மரபு’ உடையது என்று அழைக்கப்படுவதற்குத் தகுதிபெற வேண்டுமெனில், அது பல்வேறு அடிப்படை விதிமுறைகளுக்குப் பொருந்துவதாக இருத்தல் வேண்டும்; அவையாவன: அது தொன்மை மிக்கதாக, பழைமைச் சிறப்பு வாய்ந்ததாக இருத்தல் வேண்டும்; அது இன்னொரு மொழி மரபில் கிளைத்து வளர்ந்ததாக இல்லாமல், தனக்கேயுரிய தனித்துவ முடைய மொழி மரபினைப் பெற்றதாகவும், அம்மொழி மரபு பெரிதும் தானே படைத்த இலக்கியச் செழுமையில் வளர்ந்ததாகவும் இருத்தல் வேண்டும்; இதற்கெல்லாம் மேலாக அம்மொழி விரிந்து, பரந்து வளம்செறிந்த தொன்மை வாய்ந்த பேரிலக்கியச் செல்வத்தைக் கொண்டதாகவும் இருத்தல் வேண்டும். இந்தியாவின் ஏனைய தற்கால மொழிகளைப் போலல்லாமல், தமிழ் இம்மூன்று அடிப்படைத் தேவைகளையும் ஒருங்கே நிறைவு செய்கின்றது.

‘தமிழ் ஒரு செவ்வியல் மொழி’ என்ற கருத்தை நிலைநாட்டுவதற்காக நான் இதைப் போன்று ஒரு கட்டுரை எழுதவேண்டியுள்ளது என்ற எண்ணமே எனக்கு இயல்புக்கு மாறான தாகத் தோன்றுகிறது. இச்செயல் எப்படியிருக்கிறது என்றால், ‘இந்தியா ஒரு மிகப்பெரிய நாடு, இந்து சமயம் உலகின் மிகப்பெரிய சமயங்களில் ஒன்று’ என்னும் கூற்றை நிலைநாட்ட முற்படுவது போன்றுள்ளது. ‘தமிழ் செவ்வியல் மொழி’ என்னும் தகுதி நிலையை மறுக்க முனைவது, இந்தியப் பண்பாட்டின் பெருமைக்கும், வளமைக்கும் இன்றியமையாத மையக்கூறாக விளங்கும் - உயிராதாரமாக விளங்கும் - உறுப்பு ஒன்று ‘அதற்கு இருக்கக்கூடாது’ என்று மறுக்க முனைவதற்கு ஒப்பானதாகும்.”

பேராசிரியர் ஜார்ஜ் எல்.ஹார்ட்டின் இந்த அறிக்கையில் உள்ள கருத்துக்கள் இந்தியத் திருநாட்டின் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு; தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எழுச்சியையும் ஏற்படுத்தியது என்று கருணாநிதி கூறியுள்ளார்.