துணைவேந்தர் Dr. S. அகத்தியலிங்கம்

முனைவர் மு. இளங்கோவன் அவர்களின் வலைப்பதிவின் வாயிலாக, பேரா. ச. அகத்தியலிங்கம் (மாரியப்பாநகர், சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) வாகனவிபத்தில் இறந்தார் என்றறிய நேர்ந்தது:
http://muelangovan.blogspot.com/2008/08/blog-post_05.html

அவரது புத்தகங்களின் பட்டியலை அடுத்துத் தருகிறேன். தினத்தந்தி நாளிதழிலும் செய்தி வெளியாகியுள்ளது (தினத்தந்தி போன்றவை யூனிக்கோடுக்கு மாறினால் அவ்விதழ்ச் சேதிகள் விரைவில் பலருக்கும் சென்றடையும். தமிழ்நாட்டுப் பத்திரிகை நிர்வாகத்தை அறிந்தோர்கள் குமுதம், விகடன் போலவே மற்றவற்றையும் யூனிகோடு குறியேற்றத்திற்குச் செல்லத் தூண்டுங்கள். பரிந்துரை செய்ய வேண்டுகிறேன்.)

http://www.dailythanthi.com/article.asp?NewsID=430053&disdate=8/5/2008
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் மனைவியுடன் விபத்தில் சாவு கார் டிரைவரும் பலியானார்

வானூர், ஆக. 5, தினத்தந்தி

புதுவை அருகே நடந்த விபத்தில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மனைவியுடன் பலியானார். கார் டிரைவரும் மரணம் அடைந்தார்.

முன்னாள் துணைவேந்தர்

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அகஸ்தியலிங்கம் (வயது 75). இவரது சொந்த ஊர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் மாரியப்பா நகர். அகஸ்தியலிங்கம் நேற்று பகலில் சென்னையில் இருந்து மனைவி பொன்னம்மாள் (70), பேத்தி லதா (19) ஆகியோருடன் ஒரு காரில் சிதம்பரத்துக்கு வந்துகொண்டு இருந்தார். காரை ஜீவபாலன் (33) என்பவர் ஓட்டிவந்தார்.

பகல் 12.50 மணி அளவில் கிளியனூருக்கும், தைலாபுரத்துக்கும் இடையே கார் வந்துகொண்டு இருந்தது. அப்போது புதுச்சேரியில் இருந்து சென்னை சென்று கொண்டு இருந்த லாரி மீது கார் மோதியது.

விபத்தில் பலி

இந்த விபத்தில் கார் பலத்த சேதம் அடைந்தது. காரில் இருந்த முன்னாள் துணைவேந்தர் அகஸ்தியலிங்கம் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக செத்தார்

அவரது மனைவி பொன்னம்மாள், பேத்தி லதா, கார் டிரைவர் ஜீவபாலன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த அவர்கள் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

ஆஸ்பத்திரியில் 2 பேர் சாவு

தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பொன்னம்மாள், கார் டிரைவர் ஜீவபாலன் ஆகியோர் இறந்தனர். படுகாயம் அடைந்த லதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

0 comments: