தில்லைக் கூத்தன் திருவம்பலத்தில் தமிழ்மறைகள் பற்றிய பரபரப்பான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. தமிழும் சைவமும் தோழமை பாராட்ட வேண்டிய வேளையிது. ஆணைகளை இட்டுத் தமிழ்நாட்டு அரசாங்கம் நிலைநிறுத்தக் கட்டளை என்றும் இந்து நாளிதழ், பதிவுகளில் அறிந்தேன்.
http://www.hinduonnet.com/thehindu/holnus/002200803021550.htm
http://www.hinduonnet.com/thehindu/holnus/004200803041762.htm
கூத்தப்பிரான் தமிழ்நாட்டில் ஆட்சிகளில் ஆட்டங் கண்டபோது பல ஊர்களுக்கும் சென்று வசித்திருக்கிறார்: அப்போது 'நடராசர் இல்லாததில்லை' இல்லாத தில்லை என்றும், இல்லாதது இல்லை என்றும் பிரிக்கலாம் (Cf. God is nowhere/now here). சிலமுறை தீட்சிதர்கள் இல்லாமற்போய் புதிதாகவும் மன்னர்களால் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிஞர்கள் எழுதியதைப் படித்த நினைவு. சைவர்கள் பலர் நாளும் நடராசரை நேரில் தொழுவர். வேறெந்த ஊரிலும் இது சாத்தியமில்லை என்பதால் வேளாளரிடையே 'தில்லைப் பெண் எல்லை தாண்டாது' என்ற பழமொழி இருந்திருக்கிறது.
ஈழநாட்டாருக்கு மிக நெருக்கமான கோயில், ஆறுமுக நாவலர் அச்சகம் ஆரம்பித்த இடம் சிதம்பரம் ஆகும்.
மன்னுக தில்லை வளர்கநம்
பத்தர்கள் வஞ்சகர் போயகல
பொன்னின்செய் மண்டபத் துள்ளே
புகுந்து புவனி யெல்லாம் விளங்க
அன்னநடை மடவாள் உமைகோன்
அடியோ முக்கருள் புரிந்து
பின்னைப் பிறவியறுக்க நெறிதந்த
பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே!
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கும் மேலுமிப் பூமிசை
என்அன்பு ஆலிக்குமாறு கண்டின்புற
இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே!
The darshan of the Dancing Lord at thillai thirucciRRambalam not only provides a great life after the life on this earth, right here see how rejoicable is this sight of this Blissful Lord!If it could be spent in rejoicing this Lord, can this life last forever? ~ Appar
நா. கணேசன்
3 comments:
விவரணப்படத்தைப் பார்த்தேன் கணேசன் ஐயா.
திருவரங்கராஜன் மட்டும் தான் ஊர் ஊராகச் சென்றார் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். தில்லை நடராஜனும் அப்படித் தானா? அங்கு வந்த தொல்லைகள் இங்கும் வந்திருக்குமே. சரி தான்.
FORD FOUNDATION சார்பில் தயாரிக்கப் பட்ட இந்த விவரணப்படத்தை
சரியான தருணத்தில் இட்டு அசத்தி விட்டீர்கள் முனைவர் .கணேசர் அவர்களே ,
மிக அருமை ,
தில்லையில் பிறந்து வளர்ந்து ,படித்து அங்கேயே வேலை பார்த்து
சிதம்பரம் பற்றி அனைத்தும் உடலிலும் ,உள்ளத்திலும் கலந்து விட்ட என்
உணர்வுகளை இந்த படம் மீண்டும் எழுப்பிவிட்டது .
தீட்சிதர்களின் நடராஜருடன் ஆன ஈடு பாட்டை உணர்த்த என்னால்
அவர்கள் நடராஜரை எப்படி பிரிந்து வாழ்வார்கள் என்ற துக்கம் எழுகிறது .
நடராஜருக்காக அரங்கன் உலா மாதிரி அவரை தூக்கிக் கொண்டு உலா வந்தவர்கள் , தினமும் ஒருவராக உயிர் தியாகம் செய்தவர்கள் ,நடராஜரை தங்களில் ஒருவராக ,உயிர் உள்ளவராக நினைப்பவர்கள்
இந்த செய்தியை எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறார்களோ ?
அந்த தில்லை கூத்தன் தான் அறிவார் .
அன்புடன் ,
ஏ சுகுமாரன்
ஐயா இன்று ஆடலரசன் அபிடேகம் காணும் நாள்.
அவனைப்பற்றி சிந்திக்க கூகிளை நாடிய போது உங்கள் வலைப் பூவைக் கண்டேன். அருமை , அவன் அருள்.
ஆனால் விவரணப் படம் சுட்டிய இடத்தில் காணக் கிடைக்க வில்லை .
யாரேனும் பதிவிறக்கம் செய்து வைத்திருந்தால் , கிடைக்குமா?
Post a Comment