புதிய பதிவுகளுக்கு ஒரு தோரணவாயில்

தமிழில் 3 வலைத்திரட்டிகள் இயங்கிவருவதைப் பலரும் பயன்படுத்துகிறோம்:

(அ) தமிழ்மணம்:
http://thamizmanam.com

(ஆ) தேன்கூடு:
http://thenkoodu.com

(இ) தமிழ்ப்லாக்ஸ்:
http://tamilblogs.com

புதிய வலைத்தோரண வாசல் ஒன்றைப் பாரதத்தின் பல மொழிகளுக்கும் கூகுள் தந்துள்ளதைக் கண்டேன். நம் தமிழின் வலைவாசல்:
http://www.google.com/blogsearch?lr=lang_ta&q=site:com

முக்கியமான வசதி என்னவென்றால் ஒரு தேடுசொல் கொடுத்து எளிதாகத் தேடமுடிவதுதான். மேலும் சென்ற ஒரு நாளிலோ, ஒரு வாரத்திலோ, ஒரு மாதத்திலோ துழாவலைக் குறுக்கமுடிகிறது. எப்போதும் போல், கூகுளின் எளிமை, அதன் பரந்துபட்ட வியாபகம், தமிழில் வரும் எல்லா வலைப்பதிவுகளையும் காட்டும் திறன், திரட்டி நடத்துநரிடம் எழுதிப் பதிவு செய்ய அவசியமினமை - இப் புதிய திரட்டியின் சிறப்பம்சங்களாகத் தோன்றுகின்றன. திங்களுக்கு ஒருமுறை இதில் காட்டும் பதிவுகளின் மொத்த எண்ணிக்கையைக் குறித்துவைத்தால் தமிழில் ப்லாகுகள் வளர்ச்சி பின்னால் ஆராயப் பயன்படும்.

இந்தத் திரட்டியின் தொடுப்பில், lang_ta என்னும் தொடரில்,
ta (= தமிழ்) 2 எழுத்தை மாற்றி ml = மலையாளம், te = தெலுங்கு, kn = கன்னடம், gu = குஜராத்தி, pa = குருமுகி (பஞ்சாபி), th = தாய் (தாய்லாந்து மொழி), ko = கொரியன், bo = திபெத்தியம் என்று பிற மொழிகளின் பதிவுநீட்சியைக் கணக்கிடலாம்.

எனக்கு, சிங்களம், ஹிந்தி (தேவநாகரி எழுத்து), வங்கம், கிமர் (கம்போடியம்) பதிவுகளைத் தேடும் முறை தெரியவில்லை. தெரிந்தால் மடலிடுங்கள்.

நன்றி,
நா. கணேசன்

4 comments:

Anonymous said...

தகவலுக்கு மிக்க நன்றி!

Thirumozhian said...

யாராவது உதவி பண்ணுங்கப்பா!

நான் திருமொழியான்-னு ஒரு ப்ளாக் ஸ்பாட்ட தொடங்கிட்டேன். எப்படியோ கஷ்டப்பட்டு 3 பதிவுகளையும் எழுதி தமிழ்மணத்துல லிஸ்ட்டுல சேத்துட்டேன். ஆனா என்னோட பேருக்கு நேரா மறுமொழி திரட்டப்படுவதில்லை அப்படின்னு வருது.

என்னோட புது பதிவு ஏதையாவது தமிழ்மணத்துல சேர்க்குறதுக்கு என்னோட ப்ளாக்ஸ்பாட் முகவரிய தந்தா ஏற்கனவே கொடுக்கப்பட்ட யூ.ஆர்.எல் அப்படின்னு நிராகரிச்சுறுது.

என்னோட ப்ளாக்ஸ்பாட் முகவரிக்கு பதிலா ஏதாவது ஒரு பதிவோட முகவரிய கொடுத்தா, அதுக்கப்புறமா நியூஸ் ஃபீட்ன்னு எதையோ கேக்குது. அங்க எதைக்கொடுக்கிறதுன்னு தெரியல.

டெம்ப்லேட்ட மாத்துறதுக்கான குறிப்புகள படிச்சி அதுபடியும் செஞ்சிட்டேன். தமிழ்மண ஹைப்பர்லின்க் வருது ஆனா ஒரு புது இடுகைய தமிழ்மணத்துல சேர்க்கறதுக்கான கமாண்ட் பட்டன் வரவே மாட்டேங்குது.

யாராவது உதவி பண்ணுங்கப்பா!
நான் யூஸ் பண்ணுறது லினக்ஸ் ஃபெடோரா கோர் 4 - மோஸில்லா.

முன்கூட்டிய நன்றிகள்.

திருமொழியான்.

பொன்ஸ்~~Poorna said...

கணேசன்,
இதில் ஒரு சின்ன பிரச்சனை தெரிந்தது எனக்கு.. கூகிள் ப்ளாக் தேடலில், ப்ளாக்கர் பிளாக்குகளை மட்டும் தான் தேட முடியும். wordpress, blogsome, blogspirit போன்றவை பயன்படுத்தும் பதிவுகளைப் படிக்க முடியாமல் போய்விடுகிறது :(

Anonymous said...

link for google tamil blogs (ta)
not working...
pl. post the correct one.