'ஹூஸ்டன்' தமிழ் ஆய்வுகள் இருக்கை இசை நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு

https://www.dinamalar.com/district_detail.asp?id=2627460

'ஹூஸ்டன்' தமிழ் ஆய்வுகள் இருக்கை இசை நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு

சென்னை:அமெரிக்காவில் உள்ள, 'ஹூஸ்டன்' பல்கலையில், தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டும் வகையில், 'இணையத்தில் இசை விருந்து' என்ற இசை நிகழ்ச்சி, வரும், 10ம் தேதி நடைபெற உள்ளது.


அமெரிக்காவின், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள, ஹூஸ்டன் பல்கலையில், தமிழ் இருக்கை நிறுவ அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.இருக்கைக்கு நிதி சேர்க்கும் வகையில், நாட்டுப்புற இசைக்கலைஞர்களான, செந்தில்கணேஷ் - -ராஜலட்சுமி தம்பதி பங்கேற்கும், 'இணையத்தில் இசை விருந்து' என்ற நிகழ்ச்சி, சமூக வலைதளங்களில், வரும், 10ம் தேதி நடைபெற உள்ளது.


இந்நிகழ்ச்சி, இந்திய நேரப்படி, இரவு, 8:30 மணிக்கு நடைபெறும்.இது தொடர்பாக, 'ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை' வெளியிட்ட செய்திக் குறிப்பு:அமெரிக்க நகரங்களில், தமிழ் பள்ளிகள் உள்ளன. அப்பள்ளி மாணவர்கள், கல்லுாரி செல்லும் போது, தமிழை ஒரு பாடமாக எடுக்கும் வாய்ப்பாக, ஹூஸ்டன் பல்கலையில், தமிழ் இருக்கை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது.இதற்கு, தமிழக அரசு சார்பில், 1 கோடி ரூபாய் வழங்கியதுடன், இசை நிகழ்ச்சிக்கு, முதல்வர் இ.பி.எஸ்., வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.


இசை நிகழ்ச்சியை, https://www.facebook.com/HoustonTamilstudieschair என்ற முகநுாலில் நேரடியாக காணலாம். இது தொடர்பான, மேலும் விபரங்கள் மற்றும் நிதி அளிப்பது தொடர்பான விபரங்கள் அறிய, https://houstontamilchair.org வழியாகவும், +1(908)516 - -3069 மற்றும் +91 98411 52211 என்ற 'வாட்ஸ் ஆப்' எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.இந்நிகழ்ச்சியில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பங்கேற்று, உதவ வேண்டுகிறோம்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.facebook.com/HoustonTamilStudiesChair

+91 98411 52211 (Whatsapp) 

மிக்க நன்றி!!0 comments: