தாமரை பூத்த தடாகமடி! Eclectic Sculpture of Adinatha near Vanji City

தமிழிசை வளர்த்த எம். எம். தண்டபாணி தேசிகரின் பழைய பாட்டை இந்த அற்புதமான காணொளி நினைவுக்குக் கொணர்கிறது.

தாமரை பூத்த தடாகம்!


பாடலைக் கேட்க: https://www.youtube.com/watch?v=-ED15sfhssw [1]

கொங்குநாட்டிலே அதன் சங்ககாலத் தலைநகர் வஞ்சி மாநகர் அருகே ஓர் அரிய சமணச் சிற்பம் கிட்டியுள்ளது. அதுபற்றி முக்குடை இதழில் ஓர் கட்டுரை எழுதினேன்: http://www.vallamai.com/?p=87447

முன்னணிப் பத்திரிகைகளில் இது பாகுபலியும், அவரது சகோதரிகளும் என்று செய்திகள் மார்ச் மாதம் வெளியாயின. சிற்ப அமைதியால் பெண்கள் இருபுறமும் நிற்கின்றனர் என்பது  அவ்வூர்ப் புறங்களின் பொதுமக்கள் கருத்து. இது பாகுபலி அல்லர். ஆதிநாதரும், அவர் மகள்களும் என்று அப்போது குறிப்பிட்டேன். ஆகஸ்ட் 30, 2018 டைம்ஸ் ஆஃப் இந்தியா தினசரியில் இது ஆதிநாதர் சிற்பம் என்று வெளியாகியுள்ளது. பேரா. க. அஜிததாஸ் அவர்கள் இக்கருத்தை முன்மொழிந்துள்ளார்கள். வாழ்த்துக்குரிய சிறப்பான மாற்றம்.

பேரா. கனக. அஜிததாஸ் ஐயா மடல்களில் தீர்த்தங்கரர் அருகே நிற்பவர்கள் சாமரதாரிகள் என்ற கருத்தை இந்தியாவில் உள்ள மற்ற சாமரதாரிகளுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளார். அவர் இச்சிற்பத்தின் தெளிவான ஒளிப்படங்கள் எடுத்து அனுப்பி வைத்துள்ளார்கள். அவருக்கு எம் நன்றிகள் கோடி. அவற்றைக் கூர்ந்து கவனித்துப் பார்த்தேன். இச் சிற்பம் பெண்கல்வியை வலியுறுத்தும் ஓர் ‘எக்லெக்டிக்’ (Eclectic sculpture) என்ற கருத்தாக்கத்தை முன்வைத்து சில குறிப்புகள் எழுதியுள்ளேன்.

எல்லா சமண துறவிகளுக்கும் சாமரை வீசுவோர் உண்டு. அதை ‘மாடல்’ ஆக வைத்து இந்த ‘எக்லெக்டிக்’ சிற்பம் படைத்துள்ளனர் என்பதில் ஐயமில்லை. ஆனால், வெறும் வேலைக்காரர்கள் என்னும் கவரி வீசுபவர்கள் தானா இவர்கள் என்ற கேள்வி எழுகிறது. ”பேதையிளம் பெண்கள் இவர்கள், எண்ணும், எழுத்தும் சில ஆண்டுகளுக்கு முன் ஆதிநாதரிடம் கற்றோர்”. முக்கியத்துவம் கருதித் தீர்த்தங்கரர் உயரத்தில் வடிக்கப்பட்டுள்ளனர். மார்பகம் வயசுக்கு வராத, பேதைப் பருவப் பள்ளிச் சிறுமியர் எனக் காட்டுமாறு சிலை செய்துள்ளனர். மேலும், பெதும்பை போன்ற பெண்களைப் பெருத்த நகில்களுடன் காட்டினால் ஆதிநாதர் + பள்ளிச் சிறுமியர் என இல்லாமல், பாகுபலி + பருவம் அடைந்த பெதும்பை போன்ற மூத்த பெண்கள் என்று மக்கள் எடுத்துக்கொள்ள வாய்ப்புகள் அதிகம் என்பதால் இவ்வாறு ~10 வயதுப் பெண்களைக் காட்டியுள்ளனர் எனக் கருதுகிறேன்.








































ec·lec·tic
əˈklektik/
adjective
adjective: eclectic; adjective: Eclectic
  1. 1.
    deriving ideas, style, or taste from a broad and diverse range of sources.

    "her musical tastes are eclecti
    synonyms:wide-rangingbroad-basedextensivecomprehensiveencyclopedicMore
  2. 2.
    PHILOSOPHY
    of, denoting, or belonging to a class of ancient philosophers who did not belong to or found any recognized school of thought but selected such doctrines as they wished from various schools.
noun
noun: eclectic; plural noun: eclectics
  1. 1.
    a person who derives ideas, style, or taste from a broad and diverse range of sources.
Origin










late 17th century (as a term in philosophy): from Greek eklektikos, from eklegein ‘pick out,’ from ek ‘out’ + legein ‘choose.’
பழைய வரலாறுகளை ஆராய்கையில் இன்றைய கருத்துகளை மாத்திரம் கொண்டு அவற்றை அடைக்க முடியாது. ஏனனில், ஆரியர் வருகை, சிந்து வரலாறு, லிங்க வழிபாடு, ... என்று ஒன்றுமே சொல்லமுடியாது. ஆத்திசூடி யார் என்றும் சமணவழிக் காட்டமுடியாது.
சமணத்தில் மிகப் பழங்காலத்திலேயே இரண்டு பிரிவுகள் தோன்றிவிட்டன என்பார்கள். என்சைக்க்ளோப்பீடியா பிரிட்டானியா போன்றவற்றில் இரு பிரிவினரும் சொல்வது பல செய்திகள் குளறுபடியாக உள்ளன என்பர். 
Because the accounts of both sects are highly partisan and unreliable and were written long after the events discussed, the origins of the sectarian division remain obscure.According to the earliest written Digambara account (from the 10th century CE), the two sects formed in the 4th century BCEfollowing a migration of Jain monks southward from the Ganges River (or from Ujjain) to Karnataka in response to a serious famine during the reign of Chandragupta MauryaBhadrabahu, the leader of the emigrants, insisted on the observance of nudity, following the example set by Mahavira, the last of the Jain Tirthankaras (Ford-makers, i.e., saviours). Sthulabhadra, the leader of the monks who remained inthe north, allowed the wearing of white garments, possibly, according to the Digambara account, as a concession to the hardships and confusion caused by the famine. The Digambara legend places the schism quite early in Jain history, but the formation of the two sects was more likely a gradual development. By the 1st century CE, the debate over whether it was possible for a monk who owned property (e.g., who wore clothes) to achieve moksha (spiritual release) divided the Jain community. This division was formalized at the Council of Valabhi (453 or 466 CE), which codified Jain scripture without the participation of Digambara monks. 

”Jainism got divided into two sects after around 160 years of Lord Mahavira’s death. At the time, Acharya Bhadrabahu was the Principal Guru (Shrut Kevali).
There was a severe famine in the north which forced Bhadrabahu to migrate to south along with twelve thousand of his followers. Others remained in North under the guidance of Acharya Sthulabhadra who was the disciple of Bhadrabahu.
At this point, you have to remember that Jain texts weren’t written.”
https://www.jainworld.com/jainbooks/antiquity/digasvet.htm
இவ்வாறு சிக்கல்கள் உடைய ஜைந சமயத்தின் பழைய வரலாற்றில் இந்தப் பழைய சிற்பம் கொங்குநாட்டிலே கிடைத்துள்ளது. அங்கே பல சமண தலங்களும் விரிவாகி, திகம்பர ஜைநர்கள் வழிபாட்டில் இருக்கையில், பெரிய சிற்பம் - சுமார் 8 அடிக்குப் 10 அடி, நெடுந்தூரம் தெரிவது - ஏன் வழிபாட்டிலோ, யாரும் அறிந்ததாகவோ இல்லை என்பதற்கான காரணங்களைப் பார்ப்போம். 

நன்னூல் எழுதிய முனியைப் புரந்தவன் சீயகங்கன். கொங்குநாட்டான். கன்னட நாட்டு சேனாபதியாக இருந்தவன். அதேபோல, சாமுண்டராயன் கொங்குநாட்டார். காமிண்டன்/காமுண்டராயன் என்ற பெயர் சாமுண்டராயன் என்று கன்னடத்தில் வழங்குகிறது. பாகுபலிக்கு சாமுண்டராயன் அமைத்த பெருஞ்சிற்பம் சிரவணபெளகுளத்தில் இருக்கிறது.

கொங்குநாடு கொங்குவேளிர் (பெருங்கதை), இளங்கோ அடிகள் (வஞ்சி மாநகர்), திருத்தக்கதேவர் (தாராபுரம்), பவணந்தி முனிவர், அடியார்க்குநல்லார், மயிலைநாதர் என்று ஏராளமான தமிழ்ச் சமணர்களைத் தந்தது. அவ்விலக்கியங்கள் போலவே, இந்தப் பெரிய சிற்பமும் புதிய முறையில் அமைக்கப்பட்ட ஒன்றாகும். This eclectic Jaina sculpture, modeled by a genius,  visually narrating the Sripuranam story of the teaching of Brahmi script and Arithmetic in a nutshell. It was not considered  fit for worship by Orthodox Jains. Hence it was abandoned and got forgotten by the Jains of Tamil Nadu. Only now, they start seeing it.
இந்த  eclectic சிற்பம் சாமரதாரிகளுடன் கூடிய தீர்த்தங்கரர்கள் சிற்பங்களைப் பார்த்துச் செய்ததே. ஆனால் முக்கிய மாறுபாடுகள் உண்டு. அவற்றைப் பார்ப்போம்.
(1) பெண்களின் சிறப்பு அணிகலம் தோடு. இச் செய்தி இலக்கியம் கற்ற பலரும் அறிந்ததே. சிவபிரான் மூர்த்தங்களில் இடக்காதில் தோடு உமாதேவியாரின் சின்னமாக அணிவிப்பர். அரவக்குறிச்சி ஆதிநாதர் சிற்பத்தைப் பருவம் எய்தா இருவரும் பெண்கள் என்று காட்ட நான்கு காதிலும் நான்கு தோடுகள். இந்தத் தோடுகள் பழமையானவை. 

(2) பெருத்த மார்பகங்களுடன் ப்ராமி, சுந்தரி இருந்தால் அது பாகுபலியைக் குறிக்கும். ஆனால், இங்கே ஆதிநாதர், அவர் ஆதியில் எண்ணும், எழுத்தும் கற்பித்த பேதையிளம் சிறுமிகள். தமிழிலே பள்ளி என்ற சொல்லே சமணர்கள் கொடை. ஔவைக் குரத்தியின் ஆத்திசூடி, பார்சுவநாதரைத் தொழுதுதான் இன்றும் தமிழ்க்கல்வி தொடங்குகிறது. 5 வயதில் கல்வி கற்பித்த பகவானைத் துறவியான பிறகு, சில ஆண்டுகள் கழித்து வனத்துக்குச் சென்று காணும் காட்சி இஃது.

(3) பொதுஜனங்கள் சிற்ப அமைதியால் பெண்கள் (வள்ளி -தெய்வானை எனல்). திரு. பானுகுமார் போன்றோர் பாகுபலி என்ற செய்தியை ஹிண்டு, இந்தியா டுடே, இண்டியன் எக்ஸ்பிரஸ் எல்லாவற்றிலும் வெளிவரச் செய்துள்ளார்கள். பாகுபலி பருவம் அடைந்தபின் எடுப்பான மார்பகங்களுடன் இருக்கும் பெண்கள் இருப்பர். அதற்கு மாற்றாக, சின்னஞ்சிறு பிராயத்தே இங்கே இப் பெண்கள் காட்டப்பட்டுள்ளனர். இது பள்ளிச் சிறுமியர்;. வயசுக்கு வராதோர். முக்கியம் கருதி பெரிதாகக் காட்டப்படுகின்றனர். இது இந்தியக் கலைமரபு. நாட்டுப்புறப் பொதுஜனங்கள் மொட்டையாண்டவர் என்பது இந்த அரைக்கச்சு அணிந்த உள்ளாடை/கௌபீனம் போலத் தெரிவதால்தான்.

(4) இந்தியா முழுதும்  எந்த சாமரதாரியும், கொங்கு ’எக்லெக்டிக்’ சிற்பத்தின் அளவிலே நிற்கும் ஆதிநாத தீர்த்தங்கரர் உசரத்தில்  வடிக்கப்படுவதில்லை. அது மட்டுமில்லை. தங்கள் ஆசான் கூறும் சுருதி வசனங்களைக் கூர்ந்து கேட்குமாறு தலைசாய்த்த நிலையில் தோடணியும் மாதர் வடிக்கப்பட்டுள்ளமை காண்க. சாதாரணமான வேலைக்காரர்கள் அல்லர் இப்பெண்டிர் என்பது கரதலாமலகம். 

(5) நிற்கும் ஆதிநாதர் சிற்பங்களில் தெளிவாக இலிங்கம் காணலாகும். நூற்றுக்கணக்கான ஆதிநாதர் சிலைகள் அவ்வாறே பாரதக் கண்டம் முழுதும் உள. பெண்கள் அருகிருப்பதால்  ஆதி பகவன் பிறந்த மேனியில் இல்லை. உள்ளாடை அணிந்த தோற்றம். அவ்வாறு அமைத்தல் சமண சிற்ப மரபில் இந்தியா முழுதும் உண்டு. கொடுக்கப்பட்டுள்ள ஆதிநாதர் சிற்பத்தில் அரைக்கச்சையும், மொழுக்கென்று இலிங்கம் மூடியநிலையையும் காண்க.  பாரதக் கலைமரபிலே பெண்கள் அருகில் இருந்தால், முக்குடைக் கீழே நிற்கும் ஆதிநாதர் ஆடை அணிந்த நிலையில் இருப்பார். அவ்வாறே கொங்குச் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இதனை "diaphanous cotton garments" என்பர் கலைவரலாற்று நிபுணர்கள்.

(6) பொள்ளல்பொள்ளலாக இருந்த மிகப் பழைய வாலுணர்வு பெற்ற இடபநாதர் அருகே வாலைப் பெண்டிர் நிற்கின்றனர் என்று காட்ட தோடுகள் முக்கியக் குறியீடு. சிவனுக்கு மகாவீரர், புத்தர் போல வடிகாது. ஒன்றில் பாம்படம் போல வெண்சங்கக் குழை, இன்னொன்றில் ஓலைச்சுருள் வடிகாதில் வட்டமாகச் செருகப்படும்.

இந்தியாவிலே எந்த தீர்த்தங்கரரின் சாமரதாரியும் வாலறிவு பெற்ற அவருக்கு இணையான உயரத்தில் காட்டப்படுவதில்லை. அரசி, அடியார், சக்ரேசுவரி, அம்பிகை என்று ஆதிநாதரின் அருகே பெண்கள் உயரம் குறைந்தே சிறிய அளவில் காட்டப்படுவர். ஆனால், அரவக்குறிச்சி சிற்பத்தில், தலைசாய்த்துக் கூர்ந்து கேட்கும் நிலையில் உள்ளவர்கள் ஏறத்தாழ ஆதிநாதர் அளவிலே காட்டப்படுகின்றனர். 

எல்லாவற்றையும் சிற்பங்களில் காட்டவியலாது. பெண்ணின் உடல் வாகில், நிற்கும் வாலைப் பெண்கள். வயதுக்கு வராத பெண்கள். கை முத்திரை ஏடு பிடிக்கும் நிலையில் உள்ளது. பெண்கள் என்பதால், ஆதிநாதர் - எண்ணும் எழுத்தும் உலகுக்கு அறிவித்த ஆதி பகவன். “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு” - தேவர் குறள் 1. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப - தேவர். எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் - ஔவை. பெண்கல்வியின் முக்கியத்துவத்தால் சுந்தரி, பிராமி என்னும் பள்ளிச் சிறுமியரை வளர்த்தியாய்க் காட்டியுள்ளனர்.

10 வயதுப் பெண்களுக்கு ஏன் தீர்த்தங்கரர் உயரம்? இதுவும் பாரிய பாரதத்தின் கலாஸம்பிரதாயமே.

சைவ நாயன்மார்களைப் பாருங்கள். சம்பந்தர் 3 வயது குழந்தை. அப்பர் முதியவர். ~70 வயதினர். சுந்தரர் தம்பிரான் தோழர். அரசர் போன்றவர். சிவாச்சாரியார். கூடவே, மாணிக்கவாசகரும் இருப்பார். 3 வயதுக் குழந்தையை மற்ற முதியவர்களின் உயரத்தின் அருகிலே காட்டியிருப்பர். சம்பந்தர் சைவம் தழைக்கச் செய்த வெற்றிச்செயல்களால். இதே போலத்தான் எண், எழுத்து, பெண்கல்வி பற்றின முக்கியத்துவத்தால் சிறாரை பெரிதாகக் காட்டியுள்ளனர்.


இன்னும் பல சான்றுகள் தரமுடியும். ஒன்றைக் காட்டுகிறேன். த்ராவிட ஜனங்களின்  4200 ஆண்டு முந்தைய சான்று.
https://nganesan.blogspot.com/2012/05/tnf-convention-2012-lectures-houston.html
தேவாரமும், பல்லவர் கால காப்பியம் கிராதார்ஜுனீயமும் மொழிபெயர்த்த பேரா. இந்திரா பீட்டர்சன் தலைமையில் முன்பு ஆற்றின சொற்பொழிவு. சிந்து சமவெளியில் கொற்றவையும், விடங்கரும்.

விடங்கர் (> இடங்கர்) பாருங்கள். யானை, காண்டாமிருகம் போன்றவற்றை விட 4 பங்கு அளவில் காட்டப்பட்டுகிறது. உண்மையில் கடியால் (https://en.wikipedia.org/wiki/Gharial ) அவ்வளவு வளர்த்தி இல்லை. இது ஏன்? விடங்கரின் முக்கியத்துவம் கருதி அவ்வாறு சிறிய முத்திரையில் காட்டுகின்றனர்.

அவ்வாறே, பெண்கள் எனக் காட்ட தோடு அணிந்த வாலைச்சிறுபெண்கள் அவர்கள் கற்கும் கல்வியின் முக்கியத்துவம் கருதி - ஆதி பகவன் இப் பெண்களுக்குத் தான் முதன்முதலில் எண்ணும் எழுத்தும் அறிவித்தார். முக்குடைக் கீழ் நிற்கும் தீர்த்தங்கரர் அருகில் வளர்த்தியாய்க் காட்டப்படுகின்றனர். தலைசாய்த்து தங்கள் குருவின் சுருதி வசனங்களைக் கேட்கும் நிலை. பேரா. அஜிததாஸ் கொடுத்த எந்த சாமரதாரியும் இவ்வாறு இல்லை. அந்தச் சாமரதாரிகளில் சாமரை விரிவாக இருக்கும். இங்கே சிறு அளவில் சிமிட்டி. பழைய போட்டோக்களில் இன்னும் சிறிதாய் தாமரை நாளத்தின் பொகுட்டு (கர்ணகம்) உள்ளது.

(7) கர்ணகம் என்றால் தாமரைப் பொகுட்டு (Pericarp of the Lotus). லக்ஷ்மிக்கு கர்ணகா, கர்ணகீ என்பது இதனால். பவித்திரா என்னும் வடமொழிப்பெயர் தமிழிலே பவித்திரை என்றாதல்போல, கர்ணகா கர்ணகை என்பதை உள்வாங்கிக் கோவலன் மனைவிக்கு இளங்கோ அடிகள் பெயரிட்டார், கர்ணகா/கர்ணகீ > கர்ணகை/கர்ணகி > கண்ணகி தாமரை நாளத்தின் பொகுட்டில் வீற்றிருப்பவள். கோவலன் கண்ணபிரான்/விஷ்ணு பெயரில் அமைந்ததால் இப்பெயர். குருக்கத்தி = மாதவி. முல்லைத் திணை கற்புக்குச் சின்னம். முல்லைக்கு ஸப்ஸ்டிட்யூட் மாதவி (குருக்கத்தி). எனவே, கணிகைக்கு மாதவி எனச் சிலம்பில் பெயரிட்டார். கனகர், விஜயர் - வடக்கே நடந்த மகாபாரதப் போரில் ஹரி என்றால் பொன், விஷ்ணு. விஜயன் அர்ஜுநன். பகவத் கீதை நாயகர்கள் பெயர்கொண்டு அமைந்த கற்பனை வடநாட்டு மன்னர் பெயர்களாக சிலம்பு நாவலில் எழுதினார் இளங்கோ அடிகள். முருகனுக்கு குன்றக்குரவை, துர்க்கைக்கு வேட்டுவவரி, கண்ணபிரானுக்கு ஆய்ச்சியர்குரவை என்றெல்லாம் பாடிய இளங்கோ அடிகள், பிரமன், பிராமி (சரஸ்வதி) உரிய தாமரை நாளம் கொண்டு பனையோலை, தாமரை இலை, தாழை மடல், யா மரம் (சால மரம் என்பர் வடமொழியில்) பட்டை போன்றவற்றில் எழுத்து எழுதுமாறு தாமரைநாணை பள்ளிச்சிறுமியர் வைத்துள்ளதாக இச் சிற்பத்தில் செய்துள்ளனர். இளங்கோ அடிகள் காலமும், இச் சிற்பத்தின் காலமும் ஒன்றானதாக இருக்க வாய்ப்புண்டு. "ஒரு நாள் ஆதி பிரம்மாவாகிய சுவாமி கொலுமண்டபத்தில் அரியணையின்மீது அமர்ந்திருந்து கலை, விஞ்ஞானம் முதலியவற்றை உலகுக்கு வெளியிடுவோம் என்று நினைத்தார். அச்சமயத்தில் உருவம், அழகு முதலிய குணங்களால் விளங்கிய இலக்குமி, சரசுவதி போன்ற பிராமி, சுந்தரி என்னும் பெண்கள் மங்கல ஆபரணங்கள் பூண்டு, அவ்விடம் வந்து பணிவுடன் மூவுலக நாதனின் திருவடிக் கமலங்களை வணங்கி நின்றனர்.” (ஸ்ரீபுராணம், தமிழில் அஜிததாஸ்).

சிந்து சமவெளிக் காலத்தில் இருந்து இவ்வாறு எளிதில் அழியும் பொருள்களில் எழுத்துகளை வரைந்தனர். இன்றும் கன்னடத்தில் “வரைக” (Baraha) என்றால் எழுதுதல். கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிரமனின் தாமரைத்தண்டை “எழுத்து இயல் நாளம்” என்கிறார். திருவரங்கத்தந்தாதிப் பாடலுமுண்டு. சிந்து முத்திரை தாமரை நாளத்தில் அனைத்து உயிர்களும் தோன்றுதலைக் காட்டுகிறது, Indus seal showing Life originates in the pericarp of the Lotus, see the Unicorns and the Bodhi fig tree leaves emanating from the pericarp of the lotus at the very center of the Universe.

இந்தியக் கலைகளிலே முக்கியமான பொருள் என ஒன்றைக் குறிப்பிடலாம் என்றால் அது தாமரை என்பார் கலாயோகி ஆனந்த குமாரசாமி. அந்தத் தாமரை நாளத்தை சுந்தரி, ப்ராமி கல்வி கற்கும் அதிசயப் படைப்பில் பயன்படுத்துவதில் வியப்பில்லை.


Summary: The eclectic and significant Jaina sculpture, modeled by a genius, is not just simple Chamaradhari-s. It records the Sripuranam story of the teaching of Brahmi script and Arithmetic to little girls in a nutshell. Remember Brahmi script reaches Tamil country from the North via Kongu (Kodumanal, Porunthal etc.,). A rare sculpture stressing the importance of Education to young girls, which we see in Tamil Jaina literature often. This important art creation must have happpened during the reign of Kalabhras who came from Karnataka. Its time is quite early, and this art creation, I think, follows what was happening in Buddhism at that time. To spread Buddhism, instead of just Buddha vachana-s in Pali language (as Theravada) orally, Mahayana religionists start to develop Visual techniques in sculpture and painting. Likewise, here is a Visual mode of teaching the Sripurana story by Jainas on the origin of Literacy. Since literacy among the general public was pretty low then, it is always better to teach by Visual means, and that is what this Sripurana sculpture does. In the NaaDu kaaN kaathai chapter, Ilango AdikaL follows the GaNDavyUha sUtra model of Mahayana Buddhism, to describe the entire Kaveri country from its birth in Sahyadri to the sea. Being eclectic, and not found in ancient Prakrit canon of Jain religion, this masterpiece was not considered  fit for worship by Orthodox Jains. Hence it was abandoned and got forgotten by the Jains of Tamil Nadu. Only now, they start seeing it.

அண்மையில், திருக்குறள் பற்றி நாகசாமி எழுதிய நூலைப் பார்த்தேன். அதில் ஐராவதத்தின் முக்கிய கட்டுரை ஆகிய எல்லிஸ் வெளியிட்ட வள்ளுவர் காசைப் பற்றி எழுதுகையில் “இது விஷ்ணு” என எழுதியுள்ளார். அது தவறு. அரவக்குறிச்சி ஆதிநாதர் சிற்பத்தின் அருகே உள்ளோரை ஆய்ந்தால் சாமரதாரிகளை விட ஸ்ரீபுராண சரிதம் கூறும் சிற்பம் என்று கருதத் தோன்றுகிறது. அதே போல, நாகசாமி கூறும் விஷ்ணு என்பதை விட, ஐராவதம் கூறும் வள்ளுவர் என்பது பொருந்துகிறது. கட்டுரை எழுதிடலாம்,

நா. கணேசன்
[1]
தாமரை பூத்த தடாகமடி - செந்
    தமிழ்மணத் தேன்பொங்கிப் பாயுதடி - ஞானத்

பாமழையால் வற்றாப் பொய்கையடி - தமிழ்ப்
   பைங்கிளிகள் சுற்றிப் பாடுதடி - ஞானத் 

தாமரை பூத்த தடாகமடி -செந்
 தமிழ்மணத் தேன்பொங்கிப் பாயுதடி - தாமரை

காவியச் சோலைஅதன் கரையழகே - பெருங்
  கவிஞர்கள் கற்பனைக்கோர் தனிச்சுவையே
ஆவி மகிழும் தமிழ்த் தென்றலதே - இசை
 அமுதினைக் கொட்டுதுபார் இதனருகே! - ஞான......

விளங்காயும் விளாங்காயும் - பேரா. இராம. சுப்பிரமணியன் (வெண்பா இயற்றும் மரபு)


2018-08-02 6:01 GMT-07:00 இலந்தை சு. ராமசாமி :
>
> வெறும் விளாங்காய்களை மட்டும் கொண்டு ஒரு நொண்டி வெண்பா எழுதினால் எப்படியிருக்கும் எனக் காண எழுதிய பாடல் இது
>
> ஏகநாதன் சாமிநாதன் நாகநாதன் கூட்டமாக
> ஏகினார்கள் ஆடினார்கள் பாடினார்கள் - வேகமாகச்
> சாடினார்கள் தாவினார்கள் தாங்கினார்கள் தேடினார்கள்
> ஓடினார்கள் வாடினார் கள்
>
> இலந்தை

வெண்பாவிற்கான ஓசை இல்லாதுபோகிறது. கணிதத்தில், பொறியியலில் “in the limit, Limiting solution" விளிம்பு என்பார்கள். அதுபோல், எல்லையான வழுவெண்பா. அக்‌ஷரமுகத்தில் வெண்பாக்களை அலகிடுகிறபோது, “விளாங்காய்ச் சீர்” என்பதனைக் குறிக்க திரு. வினோதைக் கேட்கலாம்.

“ஓசையில் விளாங்காய்ச் சீர் நான்கசைச் சீர்போல் ஒலித்து, செப்பலோசைக்கு ஊறு விளைவிக்கிறது  என்பதே மறைந்திருக்கும் இலக்கண உண்மை.” (சு. பசுபதி, 11/8/2014 சந்தவசந்தத்தில்).
அவர் இரா. திருமுருகன் செப்பலோசை இல்லாத வெண்பாவிற்கு உதாரணமாக ஒன்று செய்து காட்டியிருப்பதைக் குறிப்பிட்டுள்ளார். புதுவை திருமுருகன் தரும் செப்பலோசை வழுவும் வெண்பா:
வாய்க்குவாய்த்த சொல்லிலான மாலைபோலச் செய்யுளாக்கித்
தாய்க்குநீங்கள் ஆற்றலாமோ தாழ்வு?

1892-ஆம் ஆண்டில் பாம்பன் சுவாமிகள் விளாங்காய்ச்சீரைத் தவிர்க்க வேண்டி எழுதியிருக்கிறார். பாம்பன் குமரகுருதாச சுவாமிகளின் “ திருவலங்கற்றிரட்டில்” இருந்து : “ வெண்பாவுக்குரிய காய்ச்சீர் நான்கனுள் இடையிற் குறினெடிலிணைந்த நிரையசையுடையனவும், இரண்டு மாஞ்சீராகப் பிரிக்கத்தகுவனுமான ‘தம்பிரானே’ என்பதுபோன்ற கூவிளங்காயும், ‘சருவசாரம்’ என்பது போன்ற கருவிளங்காயும் வெண்பாவில் வரவொண்ணாவெனவும், வரின் ஓசைநயங் கெடுமெனவு மறிக. கலிப்பாவில் வரும் காய்ச்சீர்கட்கு மிந்நியாயங் கொள்க.” பின்னர், கிவாஜ, திருமுருகன் அறிவுரை தந்து வழிகாட்டினர். ஆனால், ஆழமாக ஆராய்ந்து இளம்பூரணர், பரிமேலழகர் உரைகளில் அவர்கள் இதனைக் குறிப்பிட்டதெல்லாம் கண்டு கூறினவர் பேரா. இராம. சுப்பிரமணியன் அவர்களே. 1960களில் இருந்து மாணவர்களுக்குப் பாடம் நடத்துகையில் இந்த இலக்கண விதியைக் கற்பித்துள்ளார். ஆனால்,  நான் இப்பதிவில் இணைத்துள்ள கட்டுரை 1998-ல் அச்சில் வெளியான நூல்தான்.

இதற்கு ஓர் ஒப்பீடாக, ஆறுமுக நாவலர் வாழ்க்கையிலிருந்து சான்று காட்டலாம். அவர் பாதிரியார்களிடம் இருந்து விலகி, வசனநடையில் தமிழும் சைவமும் வளர்க்கப் பள்ளிகளைத் தொடங்கி நடத்தினார். அதுபோழ்து, அகத்தியர் மாணவர்கள் பன்னிருவர் பெயர்கள் என வரிசையாய்த் தொகுத்துக் கற்பித்தார். இது நாடெங்கும் பரவியது. ஆங்கில நூலிலும் சைமன் காசிச்செட்டியால் இடம்பெற்றது. அதற்கப்புறமே, “தமிழ்” என்ற கட்டுரை ஆறுமுக நாவலர் பாலபாடம் (இறுதித்தொகுதியில்) அச்சானது. அதுபோல், தமிழறிஞர்கள் நெடுங்காலம் போதிக்கும் செய்திகள் அச்சில் வருதற்கு வருடங்கள் பல கழிந்துவிடுகின்றன.

எள்ளில் இருந்து எண்ணெய் எடுத்தல்போல், விளாங்காய்ச் சீர் விலக்கல் விதி உருவாக இவர் கட்டுரை உதவியிருக்கிறது. அவர் இலக்கணக்கடலாக வாழ்ந்தவர். அவரது ஒளிப்படம் இணையத்தில் இடம்பெறச் செய்யவேண்டும். புலவரேறு ச. சீனிவாசன் பேரா. இராம. சுப்பிரமணியன் வழிநடந்து எழுதியுள்ளார்.
http://nganesan.blogspot.com/2018/07/venpavil-vilaangaayc-ciir-vilakku.html

இப்பதிவில், பேரா. இராம. சுப்பிரமணியன் கட்டுரையை வருடி இணைத்துள்ளேன். மரபுச் செய்யுள் முனைவோருக்குப் பயனாகும்.
---------

விளாங்காய்ச் சீர் இருந்தால் வகையுளியாப் பிரித்து வெண்பாக்கள் பாடுகிறார்கள். இதனைத் தனிப்பாடல் திரட்டில் உள்ள வெண்பாக்களில் இருந்து யாராவது தொகுக்கவேண்டும்.

இலக்கணச் சுடர்’ இரா. திருமுருகனின் ஒரு “கேள்வி-பதில்”
கே: வெண்பாவில் வீடுபேற்றை, கேட்கமாட்டேன் என்பன போன்ற விளாங்காய்ச் சீர் வரலாமா?
பதில்: வெண்பாவில் என்ன? எவ்வகைப் பாவிலும் விளாங்காய்ச் சீர் வருவது விரும்பத் தக்கதன்று. அது எந்தப் பாவில் அமைந்தாலும் அப்பாவுக்குரிய ஓசையைக் கெடுத்துவிடும்.

இரா. திருமுருகன் கூறுவதுபோன்றே பாரதியாரும் “சாமிநா தப்புலவன்” என்று வகையுளியாகப் பாடியுள்ளார் - உவேசா வாழ்த்தில்.

(1)
கவிமணி தேவி உவேசாவின்பால் எழுதிய இரங்கற்பா:

எவ்வேடு தேடிநீ எந்நாட்டில் எப்பதியில்
எவ்வீடு நோக்கியின் றேகினையோ? - அவ்வான்
அமிழ்தம் அமிழ்தமென அள்ளியள்ளிச் சங்கத்
தமிழ்தந்த சாமிநா தா!

(2)
தில்லையம்பூர்  சந்திரசேகர கவிராஜ பண்டிதர் தனிப்பாடல் திரட்டைச் சேதுநாட்டில் செந்தமிழாட்சி செய்த பொன்னுச்சாமித்தேவர் வேண்டுகோளால் முதன்முதலாகத் தொகுத்தவர்.

”சுப்பிரமணிய தேசிகர் தம் ஸந்தோஷத்தைக் குறிப்பாகப்
புலப்படுத்தினர். பண்டிதர் மகிழ்ந்து என்னைப் பாராட்டி,

நேமிநா தன்வழுத்தும் நித்தன் கயிலையுறை
வாமிநா தன்புகழை வாழ்த்து மென்மேல் - தோமினற்சீர்
சாமிநா தக்கவிஞன் சாற்றும் பனுவலைப் போல்
பாமினா ளும்பகர் வளோ!

என்ற செய்யுளைச் சொன்னார்.
[நேமிநாதன் - திருமால். வாமிநாதன் - சிவபெருமான்; வாமி - உமை. பாமினாள் - கலைமகள்.]

தம்பிரான்களும் சடகோபாசாரியரும் கேட்ட கேள்விகளால் மன அமைதியை இழந்திருந்த பண்டிதர் என்னுடைய பாட்டினால் மிக்க மகிழ்ச்சியுற்றார். அதன் விளைவாக எழுந்ததே இச்செய்யுள்.” (உவேசா, என் சரித்திரம்)

(3)
கிருபானந்த வாரியார் ‘கண்ணதா சக்கவிஞன்’ என்று வாழ்த்தில் செய்துள்ளார்: http://s-pasupathy.blogspot.com/2014/01/24.html
2001 ஆண்டில் 'இசைப் பேரறிஞர்' என்ற பட்டத்தை சங்கீத கலாநிதி மதுரை சேஷகோபாலனுக்கு தமிழிசைச் சங்கம் அளித்தது. அந்த வருடம் கவிஞர் கண்ணதாசன் கவிதைகளுக்கு ராகங்கள் அமைத்து , வித்வான் சேஷகோபாலன் தமிழிசைச் சங்கத்தில் முழுநேரக் கச்சேரி செய்தார். முதற் பாடல் ஒரு வெண்பா.

எத்திக்கும் தித்திக்கும் இன்பக் கவிதைகளைச்
சித்திக்கும் வித்தாகச் செப்புகின்றான் -- சத்திக்கும்
கண்ணதா சக்கவிஞன் கந்தன் கருணையினால்
வண்ணமுடன் வாழி மகிழ்ந்து.

இது கிருபானந்தவாரியார் கண்ணதாசனுக்கு அளித்த ஒரு வாழ்த்துப்பா.
( கண்ணதாசன் கவிதைத் தொகுப்பு-4 இல் , அணிந்துரையின் கடையில், இருக்கும். )


(4)
"காலம்" மீ.விசுவநாதன்

பண்ணோடும் , மண்ணோடு பாச உணர்வோடும் ,
விண்ணோடு மோதும் விரிந்தபொருள் எண்ணத்தின்
வண்ணவரிப் பூச்சொரியும் வாசச் சிறப்போடும்
கண்ணதா சன்கவிதை காண்.                       (434) 24.06.2016
(இன்று கவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்)

(5)
தொண்ணூறும்   மேலும்  தொடரும்  பலவாண்டும்
கண்ணதா   சன்புகழைக்   காட்டிடுமே! -  வண்ணத்
தமிழால்   சிறந்திட்ட   தங்கக்    கவிஞர்தமை
இமையோரும்  வாழ்த்துவா   ரே!
                  - புலவர் இராமமூர்த்தி.

---------------
(6)
வள்ளலார்:
http://www.tamilvu.org/slet/l5F31/l5F31s01.jsp?id=570
 நின்னிலையை என்னருளால் நீயுணர்ந்து நின்றடங்கின்
 என்னிலையை அந்நிலையே எய்துதிகாண் - முன்னிலையை
 இற்குருவி னாட்டாதே என்றுரைத்தான் ஏரகம்வாழ்
 சற்குருஎன் சாமிநா தன். 

புள்ளிருக்கு வேளூர்க்குச் சென்றிருந்த வள்ளற்பெருமான், சுவாமி மலைக்குச் சென்று முருகப்பெருமானைக் கண்ணாரக் கண்டு வழி பட்டு வந்தாராகக் குரு தரிசனம் எப்படி என்று வினாவிய உலகநாதத் தம்பிரான் சுவாமிகட்கு விடையாகத் தந்த வெண்பா இது என்பர்.

(7)
வெண்பாவிரும்பி:

(நேரிசை வெண்பா)

உத்தம தானபுரத் துற்றார் மகிழுறநன்
முத்தெனத் தோன்றி முழுவதுமாய் - முத்தமிழ்த்
தாயைத் தரிசித்த சாமிநா தப்பெயர்கொண்
மாயை வரமெண்ணு வாம்.

மா ஐ=பேராசான்


(8)
பொருநராற்றுப்படை வெண்பா:

(நேரிசை வெண்பா)
ஏரியும் ஏற்றத்தி னானும் பிறர்நாட்டு
வாரி சுரக்கும் வளமெல்லாம் - தேரின்
அரிகாலின் கீழுகூஉம் அந்நெல்லே சாலும்
கரிகாலன் காவிரிசூழ் நாடு.

இங்கு, அளபெடை இன்னிசை வகையாதலால் அலகு பெறாததெனக் கொள்ளவேண்டும். 
     கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
    நற்றாள் தொழாஅர் எனின்.
இக் குறளில், அளபெடை இசைநிறை அளபெடை. எனவே, அளபெடை அலகு பெறும். விட்டிசைத்து வாசிக்கவேண்டும்.

---------
நா. கணேசன்

அரிமா, தமிழவேள் இராம. சுப்பிரமணியன், கணக்கு வழக்கு (இலக்கிய இலக்கணம்), திருமகள் நிலையம், 1998, பக். 75-79








































































dravidian-etymology-of-tindora-in-hindi-and-english


தொண்டை - கோவைச் செடியின் பெயர் ஹிந்தி/ஆங்கிலத்தில் திண்டோல/திண்டோர என மாறுதல்
Dravidian etymmolgy for Tindora (Coccinia grandis (L.) J. Voigt)
-----------------------------------------------------------------

Tindora has other names in English such as Ivy gourd, Scarlet gourd, Scarlet-fruited gourd, Kowai fruit.  Hindi names include Kanduri, Kanturi, Kundree, Kundru. ORIYA : Kunduri.
https://commons.wikimedia.org/wiki/Coccinia_grandis
http://www.flowersofindia.net/catalog/slides/Ivy%20Gourd.html

Dravidian Etymological Dictionary:
3499 Ta. toṇṭai a common creeper of the hedges (= kōvai Bryonia epigaea). Ma. toṇṭi B. grandis. Ka. toṇḍe, toṇḍi, doṇḍe, koṇḍe the gourd Momordica monadelpha Roxb. or B. grandis Lin. Te. doṇḍa Coccinia indica, (B.) Bryonia, M. monadelpha, etc. Pa. ṭunḍa creeper. Go. (D. Mu. Ko.) ṭonḍa id. (Voc. 1529); (SR.) ṭonḍri tondla vegetable (Voc. 1531); (Tr.) ṭōnḍōrī Coccinia indica (Voc. 1538). Konḍa ḍoṇḍa C. indica. Kui ḍōnḍi pumpkin. / Cf. Skt. tuṇḍikā-, tuṇḍikerī-, tuṇḍikeśī- M. monadelpha; Mar. tōḍlī id.; Turner, CDIAL, no. 5854. Also Skt. tuṇḍī- a kind of gourd. [Cephalandra indica Naud. = M. monadelpha Roxb. = B. grandis Lin. = Coccinia indica W. & A.] DED(S) 2880.

https://www.thehindu.com/features/metroplus/Food/the-small-wonder/article4959639.ece
"Kovakkai, as it is known as in Tamil, is also known by different names — ivy gourd, tendli in Marathi, dondakaaya in Telugu and tindora in Hindi. It is a perennial herbaceous vine. Ivy gourd is a tropical plant belonging to the pumpkin family and is an aggressive climber that can spread quickly over trees, shrubs, fences and other supports. India and Pakistan have massive plantations of this vegetable, apart from Thailand, Malaysia and Indonesia."

Obviously, the Dravidian name, toṇḍai and toṇḍal (with -al suffix) is the root source of all the names of Coccinia grandis plant in all the languages of India. Similar to toNDal, kOvai also comes with -al suffix:
kOval = kOvai (C. grandis) in Malayalam
Kerala District Gazetteers: Trivandrum (supplement)
Superintendent of Government Presses, 1962
Page 28



Place names like Koval (Tiru- kOvalUr)  is related with Koval or Kovai plant. Also, tiNDal in Erode may be related with tiNdola plant. Both Kovai/Koval and toNDai (> tiNDola/tiNDora) are Coccinia indica/grandis plant names.

In Hindi, this is known tindola (< toṇḍal) or tindora. It is also very popular in the Indian state of West Bengal, known as kunduri in Bengali with popular Bengali cuisine like kunduri posto. Other names include: tondale (तोंडले) [Plural: tondali (तोंडली)] in Marathi, kundaru (कुंदरू) in Hindi, and tendli in Konkani.

toṇḍai/toṇḍal, classical Dravidian names of the C. indica plant take various forms all across India. This suggests these names were widespread even in Indus valley civilizational era. For example, in Konkani, it is tendli, while in Hindi it is tindola or tindora.

Hindi, Bengali names like Kunduri is from the echo word formation of toNDali. toNDe-koNDe, toNDali/koNDali > kuNDuri etc.,

The alternate form for word-initial to- into ti- in toNDai/toNDal (Dravidian) > tendli/tindola etc., seems to have a parallel. toRappu/tuRappu > teRappu/tiRappu "opening" in Dravidian langauges itself.
DED 3259 Ta. tiṟa (-pp-, -nt-) to open (as a door, one's eyes), divulge, disclose, unveil, reveal, unlock, unbolt, cut open; tiṟappu open, unfortified place; key, cleft, opening; tiṟavu opening, unveiling; gateway, open space; tuṟappu a key. Ma. tuṟakka to open; tuṟakku opening of the mouth; tuṟappu opening; tuṟavu opening, entrance. Ko. terv- (terd-) to open (door, etc.), release (buffaloes) from enclosure or shed. To. teṟ- (teṟQ-) to open (container, door, pen, etc.); teṟ ïr buffalo let out to graze early in the morning before milking; tïṟ a·ṟ (obl. a·ṯ-) open space between front wall and entrance of house; tïrp key (? < coll. Ta. with r, or contamination with tïrp- to turn key; see s.v. 3246 Ta. tiri). Ka. teṟaan opening, clearing, state of being clear or bright; teṟapu, teṟahu opening, an opening, gap, an interval, cessation, intermission (of sounds, rain), interstice, room, place; teṟavu opening; teṟave opening, becoming manifest, appearing; teṟe to be unclosed, be uncovered, open; make open, open, uncover, unfold; n. opening, state of being open. Koḍ. tora- (torap-, torand-) to open. Tu. terapu space, room; jappuni to open; (Eng.-Tulu Dict.) jattoṇuni id.; (Bhatta<-> charya; brahmin dial.) depp- id. Te. teṟa open; teṟacu to open, set open, uncover, expose, exhibit, display, unfasten, unlock; teṟapa open, exposed; teṟapi intermission, cessation, pause, break. Go. (Tr.) tarītānā (doors) to be open; (Ph.) tarritānā to open; (Mu.) tarī- to open (eyes, mouth, door, etc.); caus. tarih-/tarh-; (Ma.) tar̥i-, ter̥-, (Ko.) terr- to open (Voc. 1667); (SR.) rehānā id. (Voc. 3053); (LuS.) tugaituna id. Konḍa ṟē̆-, (Gūṛi dial., comm. by K.) teṟe- id. Pe.jē- (-t-) id. Manḍ. jē- (-t-) id. Kui dāpa (dāt-) to open a door, clear a passage; n. act of opening; dari inba to be opened, spread forth; tr. dari ispa. Kuwi (Su.) de'- (det-), (S.) de'nai to open. Kur. tisⁱgnā (tisg̣as) to open (door, shutter); refl. and pass. tisgrnā. Malt. tisge to lift the latch. DED(S, N) 2667, and from DED 4246.

வெண்பாவில் விளாங்காய்ச் சீர் - புலவரேறு சீனிவாசன் அவர்களின் திருக்குறள் முன்னுரையிலிருந்து

50 ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகச் சென்னையில் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குக் கற்பித்தவர் இலக்கணக்கடல் இராம. சுப்பிரமணியன். பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப்புலமை நடாத்தியவர். அவரது 16 இலக்கணக் கட்டுரைகள் கொண்ட கணக்கு வழக்கு (இலக்கிய இலக்கணம்) என்னும் நூலை வாசித்துக்கொண்டுள்ளேன். 1998-ல் திருமகள் நிலைய வெளியீடு. அனைவரும் படிக்கவேண்டும். தம் மாணவர்கள் இருவர் - தவத்திரு. நக்கீர அடிகள், முனைவர் அரங்க. இராமலிங்கம் - முன்னுரைகளுடன் வெளியாகியுள்ளது. சென்னை மருத்துவர்கள் இருவரைப்பற்றிக் கட்டுரைகள்: பெ. மா. சுந்தரவதனன், இரத்தினவேல் சுப்பிரமணியம். இலக்கியம், இலக்கணம் என்பன வடசொற்கள். அதற்கு நேரான தமிழ்ச்சொற்கள் கணக்கு வழக்கு என ஒரு கட்டுரை அழகாக எழுதியுள்ளார். தீபம் நா. பார்த்தசாரதி போன்றோர் பேராசிரியரின் மாணவர்கள்.
’குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்துஒன்று
உண்டாகச் செய்வான் வினை’ 
என்னும் திருக்குறளுக்குத் “தக்க உரை காண்க” என்ற அரிய கட்டுரையை எழுதியுள்ளார். இங்கே, கண்டு = செய்து என்ற பொருள் எனத் தெளிவாக விளக்குகிறார். திரு. நா. மகாலிங்கம் மீது “கண்டார்” என்னும் சொல் மடக்கணியாக வரும் செய்யுளை வைத்துக் கண்டார் = செய்தார் என்ற பொருளில் வருவதை விளக்கியுள்ளார். 
பழைய வெண்பா நூல்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்த இராம சுப்பிரமணியன் வெண்பாவில் விளாங்காய்ச் சீரை விலக்கியே தமிழ்ப்புலவோர் யாவரும் பாடிவந்த மரபைப் பற்றிய கட்டுரை யாத்துள்ளார். இந்த வெண்பா இலக்கண விதி ஒரு பழைய நூற்பாவை நினைவூட்டுகிறது:

   இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே;
   எள்ளின் றாகில் எண்ணெயும் இன்றே;
   எள்ளினின்று எண்ணெய் எடுப்பது போல
   இலக்கியத் தினின்றும் எடுபடும் இலக்கணம்
                     அகத்தியர்: பேரகத்தியத் திரட்டு

1998-ல் இராம. சுப்பிரமணியன் கண்டுபிடிப்பைப் பற்றி இணையத்தில் ஹரிகி எழுதியுள்ளார். புலவரேறு ச, சீனிவாசன் பரிமேலழகர் உரைப்பதிப்பு முன்னுரையில் இவ்விதி பற்றி எழுதிய விளக்கத்தைக் கவிஞர் ஹரிகி சென்ற மாதம் அனுப்பிவைத்தார், பலருக்கும் பயன்படும் என்பதால் இங்கே முற்செலுத்துகிறேன். இன்னும் சில நாளில் இராம. சுப்பிரமணியன் மூலக்கட்டுரையை அனுப்பித்தருகிறேன்.

நா. கணேசன்


2018-06-19 7:01 GMT-07:00 Kavip-perum-sudar Hari Krishnan <hari.harikrishnan@gmail.com>:


புலவரேறு சீனிவாசன் அவர்கள் பதிப்பித்த திருக்குறள்=பரிமேலழகர் உரையுடன் நூலுக்கு அவர் எழுதிய முன்னுரையில் இதுகுறித்து விளக்கியிருக்கிறார்.    விளாங்காய்ச்சீர் பற்றி கவியோகி வேதம் தொடங்கி, தசாவதானி இராமையா ஈறாகப் பலர் எனக்குச் சொல்லியிருக்கிறார்கள்.  இதுகுறித்து விரிவாக நான் படித்த முதல் விளக்கம் இதுவே.  புலவரேறு சீனிவாசன் அவர்கள் பரிமேலழகர் உரை மொத்தத்தையும் மனப்பாடமாக ஒப்பிப்பார்.  அவருக்கு இந்த உரை மனப்பாடமாக இருந்ததன் காரணமாகப் பல நுணுக்கங்களை எடுத்துச் சொல்லியிருக்கிறார்.    இந்த நூல் கவிமாமணி, என் அன்புக்குரிய நண்பன் வீரராகவனிடம் இருக்கிறது.  அவனிடம் இந்த முன்னுரையை மட்டும் பிரதியெடுத்து அனுப்பச் சொல்லியிருந்தேன்.  இன்று கிடைக்கப்பெற்றேன்.  தாள் பிரதியாகக் கிடைத்திருக்கும் இந்த முன்னுரை 41 பக்கம் நீளமுள்ளது.  இது மொத்தத்தையும் அனுப்ப ஆசைதான்.  ஆனாலும் ஸ்கேன் செய்த இமேஜ் கோப்புகளை என்னால் பிடிஎஃப்பாக மாற்ற முடியவில்லை. மாற்றினால் பக்கங்கள் கிடைமட்டமாகச் சாய்ந்துவிடுகின்றன.  ஆகவே விளாங்காய்ச் சீர் பற்றி விளக்கும் பகுதியை மட்டும் தனியாக இந்த மடலுடன் இணைக்கிறேன்.


































































































































































































































































































































































































































































































































































--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 





ஹ்யூஸ்டனில் கம்பர் விழா - சிங்கைக் கவிஞர் அ.கி. வரதராசன் வருகை

சிங்கை வரதராசன் அவர்களின் சொற்பொழிவு: இச் சொற்பொழிவின் வலைக்கண்: https://soundcloud.com/aw9j2oy49evc/akv-houston-meenakshi-temple-20may2018

  (நேரிசை வெண்பா)

உம்பர் தொழும்பரம உத்தமன் சீர்பரவக்
கம்பன் பொழிந்த கவித்தேனை - நம்பதிக்கு
வந்தளித்த சிங்கை வரதரா சற்குரைப்பன்
வந்தனங் கூடியநல் வாழ்த்து.

                                                - வெண்பாவிரும்பி










































கம்பர் விழா, மே 20 (ஞாயிற்றுக் கிழமை), காலை 11 மணி,

மீனாட்சி திருக்கோவில், பியர்லாந்து, டெக்சாஸ்








கம்பன் பற்றி ஹூஸ்டன் மீனாட்சி அம்மன் கோவிலில் பேச்சு.

அன்னை மீனாள்  கோவிலிலேஅழகு ஹூஸ்டன் நகர்தன்னில்.
தன்னை ஒத்த கவியில்லாத் தமிழின் வேந்தன் கம்பன்சீர்,
பன்ன வேண்டும் என்பதுவாய்ப் பணித்தார் நண்பர் கணேசனுமே,
என்னை அழைத்த நிகழ்விதுவும் இறைவி தந்த கொடுப்பினையே.

நடுக்கம் சற்று கொண்டாலும்நல்ல அவையும் கிட்டியதால்,
எடுக்கும் முடிவில் இராமன்கொள் ஈடே இல்லாச் செவ்விதனைத்,
தொடுத்துச் செய்தி எனவாங்கு தூய கம்பன் நேர்த்தியினை,
அடுத்த வர்க்குக் கூறுகிற அருமை வாய்ப்பை அவள்தந்தாள்!
                                                                                  - அ. கி. வரதராசன், சிங்கபுரம்
தமிழில் கம்பன் புகழ்பாடப் பல மன்றங்கள் உள்ளன. அவற்றில் கம்பன் அடிப்பொடி சா. கணேசன் (சட்டை போடாத கணேசன்) அமைத்த கம்பன்கழகம் புகழ்பெற்றது. இதற்கெல்லாம் முந்தியே, 400 ஆண்டுகளுக்கு முன், மோரூரில் (திருச்செங்கோடு அடிவாரத்தில் உள்ள ஊர்) எம்பெருமான் கவிராயரைக்கொண்டு மோரூர்க் கண்ணகுலத்தார் கம்பனை வரிக்குவரி, எல்லோருக்கும் புரிகிறமாதிரி, இசைராமாயணம் பாடவைத்தனர்.

ஒருபாதிதான் அச்சாகி உள்ளது. கம்பனில் பாதி யுத்தகாண்டம். தக்கையின் யுத்தகாண்டம் அச்சாகவில்லை. தக்கை முழுதும் 3250 பாடல்கள். ஒரே நூலாக சந்தவசந்தப் புலவோர் துணையால் அச்சேற வேண்டும்.
செய்துதர தமிழன்னை கருணை புரியட்டும்.

கம்பன் காவியமும், தக்கையிசை ஓவியமும் 
- எனத் தக்கை இராமாயணத்தை அறிமுகஞ்செய்து ஓர் கட்டுரை வரைந்தேன்.


---------------


கம்பனைப் பற்றி இனிமையான சொற்பொழிவு!

செவிநுகர் கனி இது! மகிழ்ந்து சுவைக்க வாரீர்!

சொற்பொழிவாளர்: கவிஞர் அ. கி. வரதராஜன்

   தலைவன் இராமன் தாளில் பணிவோம்


காரைக்குடியில் பொறியாளர் ஆகி, திருச்சியிலும், சிங்கப்பூரிலும் பணியாற்றிய கவிஞர் கம்பனில் ஆழ்ந்த புலமையாளர்.
கம்பன் செதுக்கும் காவிய நாயகன் இராமன் பற்றி நம்மிடையே பேசுகிறார்

Tamil poet, Thiru. A. K. Varadarajan is visiting Houston on May 20th 2018. Bharati Kalai Manram and Sri Meenakshi Temple Society are proud to present his lecture on Kamba Ramayanam. The topic is “Kamban Kanda Raman: Thalaivan Raman Thaalil Panivom”

Date: May 20, 2018. Time: 11 AM, Sunday Morning.

Venue: Sri Meenakshi Temple, Pearland, Texas.

கவிஞர் அ. கி. வரதராஜன் - அத்தாழநல்லூர்/சிங்கப்பூர் நல்ல மரபுக் கவிஞர்.

கம்பனில் ஆழங்கால் பெற்றவர்.

கம்பன் கண்ட இராமனைப் பற்றி நம்மிடையே பேச உள்ளார் கவிஞர் அகிவ.

கடல்மடையென கம்பவெள்ளம் பருக வாருங்கள்!

சொற்பொழிவு நாள்: மே 20, காலை 11 மணி,  மீனாட்சி திருக்கோவில், பியர்லாந்து, டெக்சாஸ்


நா. கணேசன்



                Kambar Vizha 
Lecture on Kambar by Tamil Poet Sri AK. Varadarajan
Date &Time : Sunday, May 20th 11AM. 
Venue: Sri Meenakshi Temple. 

For more information Contact:

Partha Krishnaswamy : p.krishnaswamy@keppelfloatec.com