வா.செ.குழந்தைசாமி நினைவேந்தலும் தமிழ் மேம்பாட்டு விருது அளிப்பும்

கவிஞர் குலோத்துங்கன் (பேரா. வா. செ. குழந்தைசாமி) நாடறிந்த கல்வியாளர், நல்ல கவிஞர். அவரது முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நாளை அண்ணா பல்கலை விவேகானந்தர் அரங்கில் நிகழ உள்ளது. சென்னையில் உள்ள தமிழார்வலர்கள் திரளாகக் கலந்து வாழ்த்த வேண்டுகிறோம். கவிஞர் குலோத்துங்கன் இணையப் பல்கலை முதல் தலைவர் ஆகவும், இந்திய அரசு தமிழைச் செம்மொழி என அறிவித்தலிலும் பெரும்பங்கு ஆற்றிய்வர்.

என் கட்டுரையும் பேரா. வா. செ.கு. ஐயா நினைவுமலரில் இடம்பெற்றுள்ளது.

கவிஞர் குலோத்துங்கனின் நூல்கள் யாவும் தமிழ் இணையப் பல்கலை தளத்தில் இலவசமாகப் படிக்கக் கிடைக்கின்றன. தமிழின் எதிர்கால வாழ்வு தமிழ்நாட்டின், இலங்கையின், மற்றுமுள்ள நாடுகளில் உள்ள தமிழ்நூல்கள் பிடிஎப் ஆக இணைய வலம் வருவதில் உள்ளது: http://nganesan.blogspot.com/2013/09/google-aandavar-j-fletcher.html


டாக்டர் வா.செ. குழந்தைசாமி (குலோத்துங்கன்) படைப்புகள்
(By clicking, the PDF will open)

நா. கணேசன்



1 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

திரு வா.செ.குழந்தைசாமி அவர்களுடைய நினைவேந்தலும், விருது அளிப்பும் அழைப்பிதழ் கண்டேன். அம்மலரில் தங்களது கட்டுரையும் இடம்பெறுவதறிந்து மகிழ்ச்சி.