மிகமெல்லிய மடிக்கணி


ஆப்பிள் நிறுவனம் உலகின் மிக மெல்லிசான மடிக்கணியை அறிமுகம் செய்தது. சந்தவசந்தம் மரபுக்கவிதைக் குழுவினர் இயற்றிய வெண்பாக்கள்:


காற்றைப்போல் தூக்கக் கனமின்றிக் காகிதப்பை
ஏற்கும் அளவில் எழில்பூண்டு - தோற்றத்தில்
மாற்றமுற்ற ஆப்பிள் மடிக்கணினி 'பீசி'முன்
தோற்குமன்றோ ஆற்றலில் சொல்!
                                                                                                    ~ அனந்த்சொக்கவைக்குஞ் சீருறத் தோற்றியவுன் னைக்காணும்
மக்கள் அடைவர் மதிமயக்கம் - கைக்குள்
மடிக்கவெளி தாக்க வடிவின் மெலிந்த
மடிக்கணினி ஆப்பிளே வா.
                                                                                                    ~ வெண்பாவிரும்பி

முதலில் மேக்கிண்டாஷ் கணினியை உருவாக்கியவர் இருவர். இடப்புறத்தில் பொறியாளர், வலப்புறம் வணிகச் சந்தைப்படுத்தியவர் ஸ்டீவ் ஜாப்ஸ். அவரது ஸ்டான்போர்ட் பல்கலைப் பட்டமளிப்பு விழா உரை இளைஞரை ஊக்குவிப்பது. தொழில் முனைப்பில் தூண்டும்.A role model in business enterprise for all Tamils to follow!
கேட்டு மகிழுங்கள்! கருத்துக்களை அறியத் தாருங்கள்!

நா. கணேசன்

1 comments:

Anonymous said...

Thanks for some nice info.