தமிழிசை வளர்த்த எம். எம். தண்டபாணி தேசிகரின் பழைய பாட்டை இந்த அற்புதமான காணொளி நினைவுக்குக் கொணர்கிறது.
தாமரை பூத்த தடாகம்!
பாடலைக் கேட்க: https://www.youtube.com/watch?v=-ED15sfhssw [1]
கொங்குநாட்டிலே அதன் சங்ககாலத் தலைநகர் வஞ்சி மாநகர் அருகே ஓர் அரிய சமணச் சிற்பம் கிட்டியுள்ளது. அதுபற்றி முக்குடை இதழில் ஓர் கட்டுரை எழுதினேன்: http://www.vallamai.com/?p=87447
முன்னணிப் பத்திரிகைகளில் இது பாகுபலியும், அவரது சகோதரிகளும் என்று செய்திகள் மார்ச் மாதம் வெளியாயின. சிற்ப அமைதியால் பெண்கள் இருபுறமும் நிற்கின்றனர் என்பது அவ்வூர்ப் புறங்களின் பொதுமக்கள் கருத்து. இது பாகுபலி அல்லர். ஆதிநாதரும், அவர் மகள்களும் என்று அப்போது குறிப்பிட்டேன். ஆகஸ்ட் 30, 2018 டைம்ஸ் ஆஃப் இந்தியா தினசரியில் இது ஆதிநாதர் சிற்பம் என்று வெளியாகியுள்ளது. பேரா. க. அஜிததாஸ் அவர்கள் இக்கருத்தை முன்மொழிந்துள்ளார்கள். வாழ்த்துக்குரிய சிறப்பான மாற்றம்.
பேரா. கனக. அஜிததாஸ் ஐயா மடல்களில் தீர்த்தங்கரர் அருகே நிற்பவர்கள் சாமரதாரிகள் என்ற கருத்தை இந்தியாவில் உள்ள மற்ற சாமரதாரிகளுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளார். அவர் இச்சிற்பத்தின் தெளிவான ஒளிப்படங்கள் எடுத்து அனுப்பி வைத்துள்ளார்கள். அவருக்கு எம் நன்றிகள் கோடி. அவற்றைக் கூர்ந்து கவனித்துப் பார்த்தேன். இச் சிற்பம் பெண்கல்வியை வலியுறுத்தும் ஓர் ‘எக்லெக்டிக்’ (Eclectic sculpture) என்ற கருத்தாக்கத்தை முன்வைத்து சில குறிப்புகள் எழுதியுள்ளேன்.
எல்லா சமண துறவிகளுக்கும் சாமரை வீசுவோர் உண்டு. அதை ‘மாடல்’ ஆக வைத்து இந்த ‘எக்லெக்டிக்’ சிற்பம் படைத்துள்ளனர் என்பதில் ஐயமில்லை. ஆனால், வெறும் வேலைக்காரர்கள் என்னும் கவரி வீசுபவர்கள் தானா இவர்கள் என்ற கேள்வி எழுகிறது. ”பேதையிளம் பெண்கள் இவர்கள், எண்ணும், எழுத்தும் சில ஆண்டுகளுக்கு முன் ஆதிநாதரிடம் கற்றோர்”. முக்கியத்துவம் கருதித் தீர்த்தங்கரர் உயரத்தில் வடிக்கப்பட்டுள்ளனர். மார்பகம் வயசுக்கு வராத, பேதைப் பருவப் பள்ளிச் சிறுமியர் எனக் காட்டுமாறு சிலை செய்துள்ளனர். மேலும், பெதும்பை போன்ற பெண்களைப் பெருத்த நகில்களுடன் காட்டினால் ஆதிநாதர் + பள்ளிச் சிறுமியர் என இல்லாமல், பாகுபலி + பருவம் அடைந்த பெதும்பை போன்ற மூத்த பெண்கள் என்று மக்கள் எடுத்துக்கொள்ள வாய்ப்புகள் அதிகம் என்பதால் இவ்வாறு ~10 வயதுப் பெண்களைக் காட்டியுள்ளனர் எனக் கருதுகிறேன்.
- 1.deriving ideas, style, or taste from a broad and diverse range of sources.
"her musical tastes are eclectisynonyms: wide-ranging, broad-based, ext ensive, comprehensive, encyclo pedic; More
- 2.PHILOSOPHYof, denoting, or belonging to a class of ancient philosophers who did not belong to or found any recognized school of thought but selected such doctrines as they wished from various schools.
- 1.a person who derives ideas, style, or taste from a broad and diverse range of sources.
There was a severe famine in the north which forced Bhadrabahu to migrate to south along with twelve thousand of his followers. Others remained in North under the guidance of Acharya Sthulabhadra who was the disciple of Bhadrabahu.
At this point, you have to remember that Jain texts weren’t written.”
https://www.jainworld.com/
நன்னூல் எழுதிய முனியைப் புரந்தவன் சீயகங்கன். கொங்குநாட்டான். கன்னட நாட்டு சேனாபதியாக இருந்தவன். அதேபோல, சாமுண்டராயன் கொங்குநாட்டார். காமிண்டன்/காமுண்டராயன் என்ற பெயர் சாமுண்டராயன் என்று கன்னடத்தில் வழங்குகிறது. பாகுபலிக்கு சாமுண்டராயன் அமைத்த பெருஞ்சிற்பம் சிரவணபெளகுளத்தில் இருக்கிறது.
கொங்குநாடு கொங்குவேளிர் (பெருங்கதை), இளங்கோ அடிகள் (வஞ்சி மாநகர்), திருத்தக்கதேவர் (தாராபுரம்), பவணந்தி முனிவர், அடியார்க்குநல்லார், மயிலைநாதர் என்று ஏராளமான தமிழ்ச் சமணர்களைத் தந்தது. அவ்விலக்கியங்கள் போலவே, இந்தப் பெரிய சிற்பமும் புதிய முறையில் அமைக்கப்பட்ட ஒன்றாகும். This eclectic Jaina sculpture, modeled by a genius, visually narrating the Sripuranam story of the teaching of Brahmi script and Arithmetic in a nutshell. It was not considered fit for worship by Orthodox Jains. Hence it was abandoned and got forgotten by the Jains of Tamil Nadu. Only now, they start seeing it.
(2) பெருத்த மார்பகங்களுடன் ப்ராமி, சுந்தரி இருந்தால் அது பாகுபலியைக் குறிக்கும். ஆனால், இங்கே ஆதிநாதர், அவர் ஆதியில் எண்ணும், எழுத்தும் கற்பித்த பேதையிளம் சிறுமிகள். தமிழிலே பள்ளி என்ற சொல்லே சமணர்கள் கொடை. ஔவைக் குரத்தியின் ஆத்திசூடி, பார்சுவநாதரைத் தொழுதுதான் இன்றும் தமிழ்க்கல்வி தொடங்குகிறது. 5 வயதில் கல்வி கற்பித்த பகவானைத் துறவியான பிறகு, சில ஆண்டுகள் கழித்து வனத்துக்குச் சென்று காணும் காட்சி இஃது.
(3) பொதுஜனங்கள் சிற்ப அமைதியால் பெண்கள் (வள்ளி -தெய்வானை எனல்). திரு. பானுகுமார் போன்றோர் பாகுபலி என்ற செய்தியை ஹிண்டு, இந்தியா டுடே, இண்டியன் எக்ஸ்பிரஸ் எல்லாவற்றிலும் வெளிவரச் செய்துள்ளார்கள். பாகுபலி பருவம் அடைந்தபின் எடுப்பான மார்பகங்களுடன் இருக்கும் பெண்கள் இருப்பர். அதற்கு மாற்றாக, சின்னஞ்சிறு பிராயத்தே இங்கே இப் பெண்கள் காட்டப்பட்டுள்ளனர். இது பள்ளிச் சிறுமியர்;. வயசுக்கு வராதோர். முக்கியம் கருதி பெரிதாகக் காட்டப்படுகின்றனர். இது இந்தியக் கலைமரபு. நாட்டுப்புறப் பொதுஜனங்கள் மொட்டையாண்டவர் என்பது இந்த அரைக்கச்சு அணிந்த உள்ளாடை/கௌபீனம் போலத் தெரிவதால்தான்.
(4) இந்தியா முழுதும் எந்த சாமரதாரியும், கொங்கு ’எக்லெக்டிக்’ சிற்பத்தின் அளவிலே நிற்கும் ஆதிநாத தீர்த்தங்கரர் உசரத்தில் வடிக்கப்படுவதில்லை. அது மட்டுமில்லை. தங்கள் ஆசான் கூறும் சுருதி வசனங்களைக் கூர்ந்து கேட்குமாறு தலைசாய்த்த நிலையில் தோடணியும் மாதர் வடிக்கப்பட்டுள்ளமை காண்க. சாதாரணமான வேலைக்காரர்கள் அல்லர் இப்பெண்டிர் என்பது கரதலாமலகம்.
(5) நிற்கும் ஆதிநாதர் சிற்பங்களில் தெளிவாக இலிங்கம் காணலாகும். நூற்றுக்கணக்கான ஆதிநாதர் சிலைகள் அவ்வாறே பாரதக் கண்டம் முழுதும் உள. பெண்கள் அருகிருப்பதால் ஆதி பகவன் பிறந்த மேனியில் இல்லை. உள்ளாடை அணிந்த தோற்றம். அவ்வாறு அமைத்தல் சமண சிற்ப மரபில் இந்தியா முழுதும் உண்டு. கொடுக்கப்பட்டுள்ள ஆதிநாதர் சிற்பத்தில் அரைக்கச்சையும், மொழுக்கென்று இலிங்கம் மூடியநிலையையும் காண்க. பாரதக் கலைமரபிலே பெண்கள் அருகில் இருந்தால், முக்குடைக் கீழே நிற்கும் ஆதிநாதர் ஆடை அணிந்த நிலையில் இருப்பார். அவ்வாறே கொங்குச் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இதனை "diaphanous cotton garments" என்பர் கலைவரலாற்று நிபுணர்கள்.
(6) பொள்ளல்பொள்ளலாக இருந்த மிகப் பழைய வாலுணர்வு பெற்ற இடபநாதர் அருகே வாலைப் பெண்டிர் நிற்கின்றனர் என்று காட்ட தோடுகள் முக்கியக் குறியீடு. சிவனுக்கு மகாவீரர், புத்தர் போல வடிகாது. ஒன்றில் பாம்படம் போல வெண்சங்கக் குழை, இன்னொன்றில் ஓலைச்சுருள் வடிகாதில் வட்டமாகச் செருகப்படும்.
இந்தியாவிலே எந்த தீர்த்தங்கரரின் சாமரதாரியும் வாலறிவு பெற்ற அவருக்கு இணையான உயரத்தில் காட்டப்படுவதில்லை. அரசி, அடியார், சக்ரேசுவரி, அம்பிகை என்று ஆதிநாதரின் அருகே பெண்கள் உயரம் குறைந்தே சிறிய அளவில் காட்டப்படுவர். ஆனால், அரவக்குறிச்சி சிற்பத்தில், தலைசாய்த்துக் கூர்ந்து கேட்கும் நிலையில் உள்ளவர்கள் ஏறத்தாழ ஆதிநாதர் அளவிலே காட்டப்படுகின்றனர்.
எல்லாவற்றையும் சிற்பங்களில் காட்டவியலாது. பெண்ணின் உடல் வாகில், நிற்கும் வாலைப் பெண்கள். வயதுக்கு வராத பெண்கள். கை முத்திரை ஏடு பிடிக்கும் நிலையில் உள்ளது. பெண்கள் என்பதால், ஆதிநாதர் - எண்ணும் எழுத்தும் உலகுக்கு அறிவித்த ஆதி பகவன். “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு” - தேவர் குறள் 1. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப - தேவர். எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் - ஔவை. பெண்கல்வியின் முக்கியத்துவத்தால் சுந்தரி, பிராமி என்னும் பள்ளிச் சிறுமியரை வளர்த்தியாய்க் காட்டியுள்ளனர்.
10 வயதுப் பெண்களுக்கு ஏன் தீர்த்தங்கரர் உயரம்? இதுவும் பாரிய பாரதத்தின் கலாஸம்பிரதாயமே.
சைவ நாயன்மார்களைப் பாருங்கள். சம்பந்தர் 3 வயது குழந்தை. அப்பர் முதியவர். ~70 வயதினர். சுந்தரர் தம்பிரான் தோழர். அரசர் போன்றவர். சிவாச்சாரியார். கூடவே, மாணிக்கவாசகரும் இருப்பார். 3 வயதுக் குழந்தையை மற்ற முதியவர்களின் உயரத்தின் அருகிலே காட்டியிருப்பர். சம்பந்தர் சைவம் தழைக்கச் செய்த வெற்றிச்செயல்களால். இதே போலத்தான் எண், எழுத்து, பெண்கல்வி பற்றின முக்கியத்துவத்தால் சிறாரை பெரிதாகக் காட்டியுள்ளனர்.
இன்னும் பல சான்றுகள் தரமுடியும். ஒன்றைக் காட்டுகிறேன். த்ராவிட ஜனங்களின் 4200 ஆண்டு முந்தைய சான்று.
https://nganesan.blogspot.com/2012/05/tnf-convention-2012-lectures-houston.html
தேவாரமும், பல்லவர் கால காப்பியம் கிராதார்ஜுனீயமும் மொழிபெயர்த்த பேரா. இந்திரா பீட்டர்சன் தலைமையில் முன்பு ஆற்றின சொற்பொழிவு. சிந்து சமவெளியில் கொற்றவையும், விடங்கரும்.
விடங்கர் (> இடங்கர்) பாருங்கள். யானை, காண்டாமிருகம் போன்றவற்றை விட 4 பங்கு அளவில் காட்டப்பட்டுகிறது. உண்மையில் கடியால் (https://en.wikipedia.org/wiki/Gharial ) அவ்வளவு வளர்த்தி இல்லை. இது ஏன்? விடங்கரின் முக்கியத்துவம் கருதி அவ்வாறு சிறிய முத்திரையில் காட்டுகின்றனர்.
அவ்வாறே, பெண்கள் எனக் காட்ட தோடு அணிந்த வாலைச்சிறுபெண்கள் அவர்கள் கற்கும் கல்வியின் முக்கியத்துவம் கருதி - ஆதி பகவன் இப் பெண்களுக்குத் தான் முதன்முதலில் எண்ணும் எழுத்தும் அறிவித்தார். முக்குடைக் கீழ் நிற்கும் தீர்த்தங்கரர் அருகில் வளர்த்தியாய்க் காட்டப்படுகின்றனர். தலைசாய்த்து தங்கள் குருவின் சுருதி வசனங்களைக் கேட்கும் நிலை. பேரா. அஜிததாஸ் கொடுத்த எந்த சாமரதாரியும் இவ்வாறு இல்லை. அந்தச் சாமரதாரிகளில் சாமரை விரிவாக இருக்கும். இங்கே சிறு அளவில் சிமிட்டி. பழைய போட்டோக்களில் இன்னும் சிறிதாய் தாமரை நாளத்தின் பொகுட்டு (கர்ணகம்) உள்ளது.
(7) கர்ணகம் என்றால் தாமரைப் பொகுட்டு (Pericarp of the Lotus). லக்ஷ்மிக்கு கர்ணகா, கர்ணகீ என்பது இதனால். பவித்திரா என்னும் வடமொழிப்பெயர் தமிழிலே பவித்திரை என்றாதல்போல, கர்ணகா கர்ணகை என்பதை உள்வாங்கிக் கோவலன் மனைவிக்கு இளங்கோ அடிகள் பெயரிட்டார், கர்ணகா/கர்ணகீ > கர்ணகை/கர்ணகி > கண்ணகி தாமரை நாளத்தின் பொகுட்டில் வீற்றிருப்பவள். கோவலன் கண்ணபிரான்/விஷ்ணு பெயரில் அமைந்ததால் இப்பெயர். குருக்கத்தி = மாதவி. முல்லைத் திணை கற்புக்குச் சின்னம். முல்லைக்கு ஸப்ஸ்டிட்யூட் மாதவி (குருக்கத்தி). எனவே, கணிகைக்கு மாதவி எனச் சிலம்பில் பெயரிட்டார். கனகர், விஜயர் - வடக்கே நடந்த மகாபாரதப் போரில் ஹரி என்றால் பொன், விஷ்ணு. விஜயன் அர்ஜுநன். பகவத் கீதை நாயகர்கள் பெயர்கொண்டு அமைந்த கற்பனை வடநாட்டு மன்னர் பெயர்களாக சிலம்பு நாவலில் எழுதினார் இளங்கோ அடிகள். முருகனுக்கு குன்றக்குரவை, துர்க்கைக்கு வேட்டுவவரி, கண்ணபிரானுக்கு ஆய்ச்சியர்குரவை என்றெல்லாம் பாடிய இளங்கோ அடிகள், பிரமன், பிராமி (சரஸ்வதி) உரிய தாமரை நாளம் கொண்டு பனையோலை, தாமரை இலை, தாழை மடல், யா மரம் (சால மரம் என்பர் வடமொழியில்) பட்டை போன்றவற்றில் எழுத்து எழுதுமாறு தாமரைநாணை பள்ளிச்சிறுமியர் வைத்துள்ளதாக இச் சிற்பத்தில் செய்துள்ளனர். இளங்கோ அடிகள் காலமும், இச் சிற்பத்தின் காலமும் ஒன்றானதாக இருக்க வாய்ப்புண்டு. "ஒரு நாள் ஆதி பிரம்மாவாகிய சுவாமி கொலுமண்டபத்தில் அரியணையின்மீது அமர்ந்திருந்து கலை, விஞ்ஞானம் முதலியவற்றை உலகுக்கு வெளியிடுவோம் என்று நினைத்தார். அச்சமயத்தில் உருவம், அழகு முதலிய குணங்களால் விளங்கிய இலக்குமி, சரசுவதி போன்ற பிராமி, சுந்தரி என்னும் பெண்கள் மங்கல ஆபரணங்கள் பூண்டு, அவ்விடம் வந்து பணிவுடன் மூவுலக நாதனின் திருவடிக் கமலங்களை வணங்கி நின்றனர்.” (ஸ்ரீபுராணம், தமிழில் அஜிததாஸ்).
https://www.youtube.com/watch?v=NFHpH0GXSPI
Summary: The eclectic and significant Jaina sculpture, modeled by a genius, is not just simple Chamaradhari-s. It records the Sripuranam story of the teaching of Brahmi script and Arithmetic to little girls in a nutshell. Remember Brahmi script reaches Tamil country from the North via Kongu (Kodumanal, Porunthal etc.,). A rare sculpture stressing the importance of Education to young girls, which we see in Tamil Jaina literature often. This important art creation must have happpened during the reign of Kalabhras who came from Karnataka. Its time is quite early, and this art creation, I think, follows what was happening in Buddhism at that time. To spread Buddhism, instead of just Buddha vachana-s in Pali language (as Theravada) orally, Mahayana religionists start to develop Visual techniques in sculpture and painting. Likewise, here is a Visual mode of teaching the Sripurana story by Jainas on the origin of Literacy. Since literacy among the general public was pretty low then, it is always better to teach by Visual means, and that is what this Sripurana sculpture does. In the NaaDu kaaN kaathai chapter, Ilango AdikaL follows the GaNDavyUha sUtra model of Mahayana Buddhism, to describe the entire Kaveri country from its birth in Sahyadri to the sea. Being eclectic, and not found in ancient Prakrit canon of Jain religion, this masterpiece was not considered fit for worship by Orthodox Jains. Hence it was abandoned and got forgotten by the Jains of Tamil Nadu. Only now, they start seeing it.
நா. கணேசன்
[1]
தாமரை பூத்த தடாகமடி - செந்
தமிழ்மணத் தேன்பொங்கிப் பாயுதடி - ஞானத்
பாமழையால் வற்றாப் பொய்கையடி - தமிழ்ப்
பைங்கிளிகள் சுற்றிப் பாடுதடி - ஞானத்
தாமரை பூத்த தடாகமடி -செந்
தமிழ்மணத் தேன்பொங்கிப் பாயுதடி - தாமரை
காவியச் சோலைஅதன் கரையழகே - பெருங்
கவிஞர்கள் கற்பனைக்கோர் தனிச்சுவையே
ஆவி மகிழும் தமிழ்த் தென்றலதே - இசை
அமுதினைக் கொட்டுதுபார் இதனருகே! - ஞான......