சிங்கை வரதராசன் அவர்களின் சொற்பொழிவு:
இச் சொற்பொழிவின் வலைக்கண்: https://soundcloud.com/aw9j2oy49evc/akv-houston-meenakshi-temple-20may2018
(நேரிசை வெண்பா)
உம்பர் தொழும்பரம உத்தமன் சீர்பரவக்
கம்பன் பொழிந்த கவித்தேனை - நம்பதிக்கு
வந்தளித்த சிங்கை வரதரா சற்குரைப்பன்
வந்தனங் கூடியநல் வாழ்த்து.
- வெண்பாவிரும்பி
மீனாட்சி திருக்கோவில், பியர்லாந்து, டெக்சாஸ்
கம்பன் பற்றி ஹூஸ்டன் மீனாட்சி அம்மன் கோவிலில் பேச்சு.
அன்னை மீனாள் கோவிலிலே, அழகு ஹூஸ்டன் நகர்தன்னில்.
தன்னை ஒத்த கவியில்லாத் தமிழின் வேந்தன் கம்பன்சீர்,
பன்ன வேண்டும் என்பதுவாய்ப் பணித்தார் நண்பர் கணேசனுமே,
என்னை அழைத்த நிகழ்விதுவும் இறைவி தந்த கொடுப்பினையே.
நடுக்கம் சற்று கொண்டாலும், நல்ல அவையும் கிட்டியதால்,
எடுக்கும் முடிவில் இராமன்கொள் ஈடே இல்லாச் செவ்விதனைத்,
தொடுத்துச் செய்தி எனவாங்கு தூய கம்பன் நேர்த்தியினை,
அடுத்த வர்க்குக் கூறுகிற அருமை வாய்ப்பை அவள்தந்தாள்!
- அ. கி. வரதராசன், சிங்கபுரம்
தமிழில் கம்பன் புகழ்பாடப் பல மன்றங்கள் உள்ளன. அவற்றில் கம்பன் அடிப்பொடி சா. கணேசன் (சட்டை போடாத கணேசன்) அமைத்த கம்பன்கழகம் புகழ்பெற்றது. இதற்கெல்லாம் முந்தியே, 400 ஆண்டுகளுக்கு முன், மோரூரில் (திருச்செங்கோடு அடிவாரத்தில் உள்ள ஊர்) எம்பெருமான் கவிராயரைக்கொண்டு மோரூர்க் கண்ணகுலத்தார் கம்பனை வரிக்குவரி, எல்லோருக்கும் புரிகிறமாதிரி, இசைராமாயணம் பாடவைத்தனர்.
ஒருபாதிதான் அச்சாகி உள்ளது. கம்பனில் பாதி யுத்தகாண்டம். தக்கையின் யுத்தகாண்டம் அச்சாகவில்லை. தக்கை முழுதும் 3250 பாடல்கள். ஒரே நூலாக சந்தவசந்தப் புலவோர் துணையால் அச்சேற வேண்டும்.
செய்துதர தமிழன்னை கருணை புரியட்டும்.
கம்பன் காவியமும், தக்கையிசை ஓவியமும்
- எனத் தக்கை இராமாயணத்தை அறிமுகஞ்செய்து ஓர் கட்டுரை வரைந்தேன்.
---------------
கம்பனைப் பற்றி இனிமையான சொற்பொழிவு!
செவிநுகர் கனி இது! மகிழ்ந்து சுவைக்க வாரீர்!
சொற்பொழிவாளர்: கவிஞர் அ. கி. வரதராஜன்
தலைவன் இராமன் தாளில் பணிவோம்
காரைக்குடியில் பொறியாளர் ஆகி, திருச்சியிலும், சிங்கப்பூரிலும் பணியாற்றிய கவிஞர் கம்பனில் ஆழ்ந்த புலமையாளர்.
கம்பன் செதுக்கும் காவிய நாயகன் இராமன் பற்றி நம்மிடையே பேசுகிறார்
Tamil poet, Thiru. A. K. Varadarajan is visiting Houston on May 20th 2018. Bharati Kalai Manram and Sri Meenakshi Temple Society are proud to present his lecture on Kamba Ramayanam. The topic is “Kamban Kanda Raman: Thalaivan Raman Thaalil Panivom”
Date: May 20, 2018. Time: 11 AM, Sunday Morning.
Venue: Sri Meenakshi Temple, Pearland, Texas.
கவிஞர் அ. கி. வரதராஜன் - அத்தாழநல்லூர்/சிங்கப்பூர் நல்ல மரபுக் கவிஞர்.
கம்பனில் ஆழங்கால் பெற்றவர்.
கம்பன் கண்ட இராமனைப் பற்றி நம்மிடையே பேச உள்ளார் கவிஞர் அகிவ.
கடல்மடையென கம்பவெள்ளம் பருக வாருங்கள்!
சொற்பொழிவு நாள்: மே 20, காலை 11 மணி, மீனாட்சி திருக்கோவில், பியர்லாந்து, டெக்சாஸ்
நா. கணேசன்
Kambar VizhaLecture on Kambar by Tamil Poet Sri AK. VaradarajanDate &Time : Sunday, May 20th 11AM.Venue: Sri Meenakshi Temple.