மன்னிப்பு - தெலுங்கில் இருந்து வந்த சொல்

நிரஞ்சன் பாரதி கேட்டிருந்தார்:
2018-02-27 18:01 GMT-08:00 Niranjan Bharathi <niranjanbharathi@gmail.com>:
>
> வணக்கம் ,
> அண்மையில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் "மன்னிப்பு" என்பது உருதுச் சொல் என்று கூறப்பட்டிருந்தது .
> அப்படியெனில் அதற்கு நிகரான தூய தமிழ்ச்சொல் என்ன ?
>
> அன்புடன் ,
> நிரஞ்சன்

மன்னிப்பு உர்துச்சொல் அன்று. நல்ல திராவிடமொழிச் சொல் தான்.

மாப்பு என்பது அறபி/உர்துச் சொல் மாபி என்கிறது சென்னைப் பேரகராதி.
மாப்பு² māppu, n. < See மாபி. Colloq.
மாபி māpi, n. < Arab. muāf. Excuse, pardon; மன்னிப்பு. (C. G.)
மாபிசாட்சி māpi-cāṭci , n. < மாபி +. Approver, king's evidence; உடந்தைக்குற்றவாளி யாய் மன்னிப்புக்குரிய சாட்சியாள். (C. G.)

பொறை உடமை - திருக்குறளில் உள்ளது.
பொறை இரத்தல் = Pardon, to excuse எனலாம்.
குறை இரத்தல் = to petition for relief, குறை தீர/நிவாரண விண்ணப்பம்.

பொறுதி அருள்க என்றும் சொல்லலாம்.
பொறுதி poṟuti, n. < பொறு-. 1. Patience, forbearance; பொறுமை. மிகவும் பொறுதியுள்ள வன். (W.) 2. Pardon, forgiveness; மன்னிப்பு. (W.) 3. Indulgence, levity; இளக்காரம். (J.) 4. Suspension of business; ஓய்வு. (J.) 5. Slowness, deliberation, delay; தாமதம். (J.)

---------------------------

மய்யம்/மையம் என்னும் வடசொல் தமிழில் இருப்பது போலவே, கமை என்றசொல் பொறை என்பதற்குப் பல காலமாகத் தமிழில் வழங்கிவருகிறது. கமை < க்ஷமா. க்ஷமிக்கவேண்டும் கமை (=பொறை) ஆழ்வார்களும், நாயன்மார்களும், கம்பனும் அடிக்கடி பயன்படுத்தும் சொல். இப்பயன்பாடுகளைத் தொகுக்கலாம். க்ஷமா - இதற்கான வினைச்சொல் க்ஷமித்தல். இதனை ஆழ்வார் பாசுரங்களுக்கான மணிப்பிரவாள உரைகளிலே நிறையக் காணலாகும். உ-ம்: ராமாநுஜ நூற்றந்தாதிக்கான பழைய உரையில் பார்க்க,

கோலார் மாவட்டம் குருதுமலைக் கோவில் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது.
சோமேசுவரர் - க்ஷமதாம்பாள்.
க்ஷமதாம்பாள் = பொறுத்தாள்வாள் என்பது அம்மன் பெயர்.
க்ஷமிக்கவேண்டும் - என்பதுபோல.

குருதுமலை குருந்து என்னும் புதரால் பெற்றபெயர் ஆகலாம். குருந்த நீழலில் திருப்பெருந்துறையில் ஞானாசிரியனை மாணிக்கவாசகர் சந்தித்தார்.

திருமலை எறிவேன் எனும் அவுணனை, "ஓ! சிவசிவ! கமியாய்" எனுமாறு திருவிரல் நுனியால் அழவிடும் அரனே - கயிலைமலையை வீசியெறிவேன் என்று வந்த இராவணன், “ஓலம்! சிவசிவ! என் குற்றத்தைப் பொறுத்தருளாய்" என்று அழுது தொழும்படி, உன் திருவடியின் ஒரு விரல் நுனியை ஊன்றி அவனை நசுக்கி அழவைத்த ஹரனே; (கமித்தல் - மன்னித்தல்; குற்றம் பொறுத்தல்);

க்ஷமித்தருள்க/கமித்தருள்க என்றும் Pardon, to excuse என்பவற்றுக்குப் பாவிக்கலாம். 7-ஆம் நூற்றாண்டிலே அப்பர் கமித்தருளலைக்
கையாள்கிறார்.
உயர் தவம் மிக்க தக்கன் உயர் வேள்விதன்னில்,---அவி உண்ண வந்த இமையோர்,
பயம் உறும் எச்சன், அங்கு மதியோனும், உற்றபடி கண்டு நின்று பயம்ஆய்---
அயனொடு மாலும், எங்கள் அறியாமை ஆதி, கமி! என்று இறைஞ்சி அகல,
சயம் உறு தன்மை கண்ட தழல்வண்ணன், எந்தை, கழல் கண்டுகொள்கை கடனே.
(கமி- என்னும் வினைச்சொல்லைத் திருப்புகழ், பிரபந்தங்கள், தலபுராணங்கள் எல்லாவற்றிலும் துழாவணும்.)

“"பிரபோ! க்ஷமிக்க வேண்டும்...." "போனது போகட்டும். மாதா உன்னை க்ஷமித்து விட்டாள். ” (பார்த்திபன் கனவு).
““குருதேவரே! மன்னிக்க வேண்டும்; அபசாரத்தை க்ஷமிக்க வேண்டும்! நம்மாழ்வாரின் பாசுரங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ளாமையினால் வீண் சண்டைகளில் காலங்கழித்தேன். ” (பொன்னியின் செல்வன்)
“அவனை க்ஷமித்து விட்டுவிட்டார்.(தெய்வத்தின் குரல்)

-----------------------------------

மன்னிப்பு - தெலுங்கில் இருந்து வந்த சொல்:

இனி, மன்னிப்பு என்னும் சொல்லின் பொருளும், தெலுங்கில் இருந்து அதன் தோற்றத்தையும் ஆராய்வோம்.
வள்ளலார் ’அபராத மன்னிப்பு மாலை’ பாடினார். 19-ஆம் நூற்றாண்டு வாக்கில் தமிழ் பத்திரிகைகளில், நீதிமன்றங்களில்
மன்னிப்பு அறிமுகப்படுத்தியுள்ளனர். 1842 - யாழ்ப்பாண அகராதியில் காண்கிறோம் (அமெரிக்கன் மிஷன் பிரஸ்).

மன்றித்தல் = தண்டித்தல். இதனை தேவாரத்தில் காணலாம். திரிபுராதிகளை மன்றித்தல் = தண்டித்தல்.
”நின்ற மதிலரை மன்றியும்
punishing the acurar in the forts who stood without fear” (வி. மு. சுப்பிரமணிய ஐயர்).

மன்றித்தல் - தண்டித்தல்:  (மன்றி விடல் - பழமொழி நானூறு).
மன்றித் தான் ஊன்றினானேல் மறித்து நோக்கில்லை யன்றே - சம்பந்தர்.
மன்றிப்பு = தண்டிப்பு. இது வேறு, மன்னிப்பு வேறு என்பது தெளிவு.

See:

C. P. Brown's Telugu-English Dictionary:
మన్నీడు, మన్నియడు (p. 953) mannīḍu, manniyaḍu or మన్నియ mannīḍu. [Tel. మన్ను + ఈడు.] n. A lord, a chieftain, ప్రభువు, మన్నెపుదొర. "మాళనదేశంబు మన్నీలగొంగ." Pal. 52. "ఎన్నడుగుడువకకట్టక. తన్నేమరికూర్చుధనము ధరలో నెపుడున్, మన్నీలకు జూదరులకు, కన్నెలకునుబోవుచుండుగదరా." Sumati §. 49. 
మన్నన (p. 953) mannana or మన్నిక mannana. [Tel.] n. Respect, regard, grace, favour, సమ్మానము, గౌరవము, గొప్పచేయడము. "మనుజనాధునివలన మన్ననలుగనిరి." V. P. ii. 18. adj. Dear, beloved. ప్రియమైన. "పాలవెల్లికిన్ మన్నన యన్నునైతిపసిమంతనపుం దెరయైన తొయ్యలిన్." R. v. 17. మన్నించు manninṭsu. v. a. To respect, మన్ననచేయు, గొప్పచేయు, సమ్మానించు. To excuse, forgive, to pardon. నా తప్పు మన్నించవలెను I pray you to excuse my fault. మన్నింపు mannimpu. n. Respect. గౌరవము. Forgiveness, క్షమాపణ. వానికి దెబ్బలు మన్నింపుచేసినారు they excused him the flogging, i.e., he was not punished. 
==
mannīḍu, manniyaḍu (p. 953) mannīḍu, manniyaḍu or manniya mannīḍu. [Tel. mannu + īḍu.] n. A lord, a chieftain, prabhuvu, mannepudora. "māḷanadēśaṁbu mannīlagoṁga." Pal. 52. "ennaḍuguḍuvakakaṭṭaka. tannēmarikūrcudhanamu dharalō nepuḍun, mannīlaku jūdarulaku, kannelakunubōvucuṁḍugadarā." Sumati §. 49. 
mannana (p. 953) mannana or mannika mannana. [Tel.] n. Respect, regard, grace, favour, sammānamu, gauravamu, goppacēyaḍamu. "manujanādhunivalana mannanaluganiri." V. P. ii. 18. adj. Dear, beloved. priyamaina. "pālavellikin mannana yannunaitipasimaṁtanapuṁ derayaina toyyalin." R. v. 17. manniṁcu manninṭsu. v. a. To respect, mannanacēyu, goppacēyu, sammāniṁcu. To excuse, forgive, to pardon. nā tappu manniṁcavalenu I pray you to excuse my fault. manniṁpu mannimpu. n. Respect. gauravamu. Forgiveness, kṣamāpaṇa. vāniki debbalu manniṁpucēsināru they excused him the flogging, i.e., he was not punished. 

மன்னு-தல், மன்னன், ... என்ற சொற்களுக்கு மரியாதை, கௌரவம் என்ற பொருள். மன்னிம்பு/மன்னிஞ்சு என்று பொருள் விரிந்து “Pardon, to excsue" என்று தெலுங்கிலும், அதில் இருந்து மன்னிப்பு தமிழிலும் உருவாகியுள்ளது.

மன்னிம்பு எனத் தெலுங்கில். அடிப்படையில் மரியாதை செய்தல் எனப் பொருள்.
மரியாதை செய்க என்னும் தொடர் மன்னிஞ்சு என தெலுங்கில் pardon, to excuse என விரிவாகி உள்ளது.
இது தமிழிலும் பரவிற்று.  தியாகராஜர் கீர்த்தனை:


யேசுதாஸ் “மன்னிஞ்சும் அய்யா” எனப் பாடுகிறார். “மன்னிம்புமய்யா” என்றும் பாடுகிறார்கள்.
இதைப் பார்த்து, வள்ளலார் ’அபராத மன்னிப்பு மாலை’ பாடியுள்ளார்.

தெலுங்கில் ”மரியாதை, கௌரவம் செய்க” என மன்னிப்பு செய்தலுக்குப் பொருள். Honorable discharge என்று அமெரிக்கன் மிலிட்டரியில் தொடருண்டு.


நா. கணேசன்