இன்று இந்தியாவின் பல்வேறு மொழிகளையும் செம்மொழி (Classsical language) என இந்தியாவின் நடுவணரசு அறிவித்து வருகிறது. மலையாளம் சில நாட்களுக்கு முன்னர் டெல்லி அரசியல்வாதிகளால் செம்மொழி ஆகியுள்ளது. மலையாளம் தமிழினின்றும் பிறந்ததையும். இந்தியாவின் உயர்தனிச்செம்மொழிகள் இரண்டே எனவும் பேரா. ஜார்ஜ் ஹார்ட் விளக்கி எழுதிவருகிறார். மலையாளம் தமிழின் சேய் என்பதனை கேரள பாணிநி ராஜராஜவர்மா (மலையாளத்துக்கு இலக்கணம் 1917-ல் தந்தவர்), உள்ளூர் பரமேசுவரையர், ச. வையாபுரிப்பிள்ளை, ஹெர்மன் குண்டர்ட், ... போன்றோர் விளக்கியுள்ளனர். இந்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் மலையாளம் செம்மொழி என அறிவிப்பை முதலில் செய்தார். அடுத்ததாக, ஒரியா, மராட்டி மாநிலங்கள் முயற்சி எடுப்பதால் அவை செம்மொழிகள் ஆகலாம். இந்தியாவின் அரசியலமைப்புச் சாசனத்திலும், ரூபாய் நோட்டிலும் உள்ள தேசிய மொழிகள் யாவும் செம்மொழிகள் ஆகக்கூடும். மிக முக்கியமான எழுத்தில்லா மொழிகளாம் பிராகுவி, தொதுவர் (Toda), சாந்தாலி (கிழக்கிந்தியா) மொழிகளும் செம்மொழி ஆகலாம். இந்திய யூனியனின் நீண்டகால வளர்ச்சிக்கு எல்லா தேசிய செம்மொழிகளின் எழுத்துமுறைகளும் சம அந்தஸ்து பெற வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் யுனிகோட் போன்றவற்றில் இந்தியாவின் பல்வேறு செம்மொழி எழுத்துக்களும் இயங்குகின்றன. தற்பொழுது தமிழர்களும் மலையாளிகளும் ஆரிய, திராவிட மொழிகளை எழுத நெடிய வரலாற்றில் பயன்படுத்திய கிரந்த எழுத்து யுனிகோட் ஆகிறது. தமிழர் நூறாண்டுகள் போராடிச் செம்மொழி என்ற அறிவிப்பை 2004-ல் பெற்றனர். மலையாளிகள் 3 ஆண்டு முயற்சியால் செம்மொழி ஆக்கியுள்ளனர்.
இன்றைய கணினித் தொழில்நுட்பத்தில் அனைத்துச் செம்மொழிகளின் எழுத்துலிபிகளும் சமம் என்ற நிலையை மாநில முதல்வர்கள் தில்லி சர்க்காரிடம் பெறுதல் அடுத்த கட்ட நடவடிக்கையாக அமைக்கலாம். தமிழர்கள் செம்மொழி தமிழ் என்று இந்திய பாராளுமன்றம் அறிவிக்க வைத்ததுபோல, செம்மொழிகளின் லிபிகளும் தேவநாகரிக்கு ஈடானவை என இந்திய அரசாங்கத்தை அறிவிக்கச் செய்ய வேண்டுகிறோம். எல்லா மாநிலங்களும் முயன்றால் பஞ்சாபி, வங்காளி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், செம்மொழி தமிழ் போன்றவற்றின் எழுத்துக்கள் தேவநாகரிக்குச் சமானம் ஆனவை என இந்திய அரசியல் யாப்பில் செய்யலாம். இன்று தேவநாகரிக்கு உள்ள அந்தஸ்து செம்மொழி ஆன தமிழுக்கு இந்தியாவில் இல்லை. மலையாளத்துக்கும் இல்லை. செம்மொழிகளின் லிபிகள் எல்லாமும் அவற்றின் மாநிலங்களில் சிறப்பாக இயங்கவும் எல்லா இந்திய லிபிகளின் வளர்ச்சிக்கு இந்திய அரசாங்கம் செலவுசெய்யவும் வைக்க இம்முறை உதவும். இன்று ஹிந்தி எழுத்துக்கு மாத்திரமே மத்திய அரசாங்கம் செலவிடுகிறது.
ஹிந்தி எழுத்துக்குச் சமமாக செம்மொழி தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சிக்கு இந்திய அரசு பணம் செலவிடவேண்டும் என்று தமிழ்நாடு கோரிக்கை வைத்து வெற்றி அடைய வேண்டும். எல்லாமே ஆங்கில மயமாகி வரும் இந்தியாவில் ஹிந்தி எழுத்துக்கு மாத்திரம் ஏன் அரசாங்கம் செலவிடவேண்டும்? எல்லா பிராந்திய லிபிகளுக்கும் ஏன் மாற்றந்தாய் மனப்பான்மை? தமிழ் செம்மொழி ஆகிவிட்ட நிலையில், தமிழ் எழுத்து வளர்ச்சியும் அவசியமானது, கணினி வளர்ச்சி இன்று எல்லா எழுத்துக்களுக்கும் ஓர் இடத்தை உறுதி செய்து வருவதைப் பார்க்கிறோம்.
------------
ஐராவதம் மகாதேவன், கி. நாச்சிமுத்து போன்ற தமிழறிஞர்கள் பலரும் மலையாளம் செம்மொழி ஆவதற்கு ஆதரவளித்தனர். ஆகஸ்ட் 2010-ல் ஐராவதம் எழுதிய ஆய்வுக்கட்டுரையைப் படிக்கலாம். பேரா. கா. ராஜன் புலிமான்கோம்பைத் தொல்லியல் ஆய்வில் கண்டுபிடித்த ஆகோள் பூசல் கல்வெட்டை மலையாளம் என்கிறார் திரு, மகாதேவன். அப்போதைய காலத்தில் தீயன் என்ற ஜாதி இருந்ததா? என்னும் கேள்வி எழுகிறது. தீ - இனிய ஒளி என்ற பொருளுண்டு. இனிப்பு, இன்பம் என்பவை இன்- என்னும் வேர்கொண்டன. அப்பொருளில் இனிய ஒளிக்கதிர்கள் கொண்டது தீ+கள் > திங்கள் என்று சந்திரனுக்குப் பெயர் திராவிட மொழிகளில் ஏற்படுகிறது. தீ + கள் = தீங்கள் > திங்கள் (Cf. மூத்த + அரைசர் = முத்தரையர் ஆவதும் காண்க. மூத்தரசர்/முத்தரசர் செப்பேடுகளில் விருத்தராஜர் எனப்படுகின்றனர்). எனவே, ஆகோட் பூசலில் அம்பால் துளையுண்டு இறந்த தீயன் என்னும் தனிமனிதன் பேர் ‘இனியகதிரோன்’ என்ற பொருளில் இருக்கலாம். இப்போதும் சந்திரன் என்று பலருக்கும் பெயர் உள்ளதல்லவா? தீஞ்சுவை, தீங்கனி என்பவற்றில் தீ- என்பதற்கு என்ன பொருளோ அதே பொருள் தீயன் என்ற பெயரிலும் உள்ளது. அல்லது திஷ்ய என்னும் நட்சத்திரம் திய்யன்/திஸ்ஸன் என்ற பிராகிருதப் பெயர் தீயன் என்று ஆனது எனவும் கொள்ளலாம். இதற்கும் 1000 ஆண்டுக்குப் பின்னர் உருவான ஈழவர்/தீயர் ஜாதிக்கும் தொடர்பென்ன? தீயர் (ஜாதி) தீவு என்னும் பொருளது. அது மிகப் பிற்காலம் அன்றோ? தீவர்/தீயர் - ஆவன்/ஆயன், கோவில்/கோயில் ஒப்பிடலாம்,
மேலும், பெடு தீயன். பெடு பெள்- என்னும் வேர்ச்சொல்லில் பிறக்கும். பெள்-தல் = பிளத்தல் (பிடி ‘பெண்யானை’, பிணா, ..). piL-/peL- alternation is in Proto-Dravidian, compare with viL-veL- as in viLLal,viLakku etc., for viL- & veLi, veLLai etc., for veL-. viNDu/viNNu/viTTu > viSNu 'rays of the sun' in Rgveda, later one of the 2 great gods of Hinduism.பெடை, பெட்டை, பெட்டி, பேடு, பெண் ... போன்ற சொற்கள் துளைப்பொருள் கொணடிருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி. -ள்-/-ண்-/-ட்- என்னும் த்ராவிடச் சொற்பிறப்பு விதிக்குள் வரும். கற்களால் எல்லை அமைத்துச் செய்யும் ஊர் பேட்டை, பெட்டு/பட்டு என்று இன்றும் சொல்கிறோம். பெடு தீயன் என்பதை அம்பால் துளைப்பட்டு மாண்ட வீரன் தீயன் என்று கொள்கிறேன். வில்லும், அம்பும் ஓவியத்துடன் கூடிய தமிழ் பிராமி கல்வெட்டு சித்தண்ணவாசலில் கிடைத்துள்ளது. அதில் உள்ள வாசகம்: “சம்பொய்கை பெடுதைத்த கல்”. பாசி படர்ந்த குளத்தின் அருகே வீரர்கள் விற்பயிற்சி செய்திருக்கிறார்கள். மரப்பொம்மை அல்லது மரப்பலகையை இக்கல்லில் உயரமாகப் பொருத்தி (தைத்து) இங்கே விற்பயிற்சி மேற்கொண்டிருப்பர். பெள்-/பிள- என்னும் வேர் தரும் பெடு என்ற வினைச்சொல்லும், பள்-/படு என்னும் வினைச்சொல்லும் வெவ்வேறானவை. பெள்-/பெடு > துளைக்கும் பெடை, பள்-(பள்ளி)/படு-(பட்டி). படுப்பது படை. பெடையும், படையும் ஒன்றா? எனச் சிந்திப்போம். ஆக, மிக அருமையான வினைச்சொல் பெடு- (பிள்-/பெள்- என்னும் வேர்) இரண்டுமுறை தமிழ் பிராமி கல்வெட்டுக்களில் (புலிமான்கோம்பை, சித்தண்ணவாசல்) கிடைத்திருப்பது அருமை. I think "peDu/pEDu" is an important archery term, a major part of living in the Megalithic iron age of Tamils, as we see in early coins, in rock paintings, Chera royal emblem etc., & many herostones show a fellow with bow & arrow. I feel that PulimAnkOmbai naDukal inscription's technical term, peDu/pEDu of the guy dying due to arrow shot from a bow has been neglected in the herostone inscription's interpretation so far. Once archery as a Way of Life was gone from Tamil, we gradually lost the archery's Technical Term, "peDu-/pEDu" from our cultural memory over the centuries.
- நா. கணேசன்
சித்தண்ணவாசல் - அம்பும், வில்லும் கொண்ட கல்வெட்டு
(from Sri. I. Mahadevan, Early Tamil Epigraphy, 2003)
-----------
ANTIQUITY OF MALAYALAM: RECENT EPIGRAPHICAL EVIDENCE
IRAVATHAM MAHADEVAN
I read with interest the report on the symposium on recognition of classical status to Malayalam (DLA
News 34.7.2010). I support the plea not merely on grounds of equity, as the other three literary Dravidian languages have already been accorded the classical status, but also on the merits of the case. There was a time when the same language was spoken on either side of the Western Ghats, probably with only minimal dialectal variations. In course of time, and due to the barrier to communication posed by the high mountain ranges, the Eastern dialect (Tamil) and the Western dialect (Malayalam) became more and more divergent. The heavier infusion of Sanskrit and the native innovations like dropping the person-number-gender terminations in Malayalam led to its emergence as a separate language with its own distinctive script. Therefore, as both were once dialects of the same proto-language.
The earliest inscription in Malayalam occur only from the 9th century C.E., though L.V. Ramaswamy Aiyar traced the origin of the language to about the 5th century on linguistic grounds. However, recently discovered Tamil-Brahmi and Early Vatteluttu inscriptions provide new evidence for words in characteristic Pre-Malayalam or Early Malayalam forms dating from much earlier times. I summarise briefly the new evidence.
1. A herostone inscription has been discovered recently at Pulimankombai in Theni district in Tamil Nadu (near the border of Kerala). The inscription is in the Early Tamil-Brahmi script and may be dated in ca. 1st century B.C.E. on palaeographic evidence. The iன்scription reads: kūṭal-ūr-ā-kōḷ peṭu tīaṉ antavaṉ kal ‘the (memorial) stone of TiyaI Antavaṉ who fell (in) the cattleraid (at) Kûṭalûr’ Note Ma. peṭu (Ta. paṭu) ‘to fall, perish’ (DEDR 3852) occuring here in the viṉaittokai with the name of the hero who belonged to the Tiya caste. This is the earliest inscriptional occurrence of a pre-Malayalam word discovered so far.
2. A pottery inscription found at Pattanam, Kerala (most probably identical with ancient Muciri) during trial excavations is in the Late Tamil-Brahmi script of about the 2nd century C.E. as judged from palaeographic and stratigraphic evidence. The fragmentary inscription reads: … ūr pāva ō ...‘woman / doll of the village…’
The occurrence of the pre-Malayalam form pâva (Ta. pâvai) (DEDR 4107) may be noted.
3. Another pottery inscription has been excavated more recently at Pattanam. The inscription is a single word cāttan, a personal name, in the Late Tamil-Brahmi cave inscription at Arachalur, Erode District, Tamil Nadu, which has also been dated in the 4th century C.E. from palaeographic evidence.
4. An Early Vatteluttu inscription of ca. 5th century C.E. is engraved on a boulder mid-stream of the Cherupuzha river at Ezhuttukallu in the Nilambur forest area in Kerala.It reads:
mācakōṭu nīraṇavāy ‘mouth of the dam (across) the water course at Mācakōṭu. The occurrence of the Early Malayalam form aṇa (Ta. aṇai) (DEDR 122) is noteworthy.
I have not included here the Tamil-Brahmi and Early Vatteluttu inscriptions at Edakkal, Kerala as they have no special features associated with Malayalam, and are already well known. In view of the exceptional importance of the four new inscriptions for the study of the origin and evolution of Malayalam, I have requested ISDL to store high-resolution photographs and full bibliographic data in their computer system for online access by interested scholars. (From DLA NEWS Vol. 34 No. 8 dated Aug 2010) - ஐராவதம்