தமிழின் சங்கப் பாடல்கள் இந்தியாவின் பண்டைய வரலாற்று ஏடுகளை அறிந்து ஆராய அறிஞர்களுக்கு ஓர் கருவூலம். இந்தியாவின் உயர்தனிச் செம்மொழிகளின் வரிசையில் தமிழை நிலைநிறுத்துவது.
கல்கி அவர்களால் தமிழ்த் தாத்தா என அழைக்கப்பெற்றவர் தாக்ஷிணாத்ய கலாநிதி உ. வே. சாமிநாதையரவர்கள். உவேசா தேடிச் சேர்த்து, ஆராய்ந்து ஏடுகள், காகிதத்தில் எழுதிய குறிப்புகள் இவற்றைக் கொண்டு நற்றிணை சங்கநூலை உவேசா நூலகம் (கலாக்ஷேத்ரா, அடையாறு) 1989-ல் பதிப்பித்துள்ளது. தமிழின் வரலாற்றை எழுதிய முதல் தமிழன் பரணர் என்று தமிழறிஞர்கள் கூறுகின்றனர். உ-ம்: பேரா. வ. சுப. மாணிக்கம், அண்ணாமலைப் பல்கலை. சங்கத் தமிழின் மகாகவிகள் இருவர்: கபிலரும் பரணரும். பரணர் தான் வரலாற்றுச் செய்திகளை நேரில் கண்டதை அறிவிப்பதில் முன்னிற்பவர். அவர் அப்போதைய மருதத் திணையில் ஊரன் எனப்படும் ஊர்த்தலைவர் ஆகிய நிலக்கிழார்களின் வாழ்வியல் முறைகளையும், தங்கள் பண்ணைகளில் எவ்வாறு கால்நடை மேலாண்மை செய்தனர் என்பதையும் நற்றிணை 310-ல் பதிவுசெய்துள்ளார்.
இந்தியாவின் பழைய சாதி அமைப்பின் முக்கிய அங்கம் ஜாதிகளுக்கிடையான உணவுப் பிரமிட் முறை. யார் யார் எந்தெந்த உணவை உண்ணலாம் என்ற சமுதாயக் கோட்பாடு அக்காலங்களில் சேரிகளை அடையாளம் காணச் செய்தது. உ-ம்: பார்ப்பனச்சேரி. சமஸ்கிருதத்திலே மாட்டிறைச்சி புசிப்போர் பற்றிய குறிப்புகள் பல இருப்பினும், தமிழில் இப் பழைய வேளாளர் நாகரீகத்தின் ஒரு பகுதியை வரலாறாக முதலில் பதிவு செய்பவர் மகாகவி பரணர் ஆவார். இதன் தொடர்ச்சியைப் பரணருக்குப் பின் வந்த பல கவிகளும் 1500 ஆண்டுகளில் பாடிச் சென்றுள்ளனர். காட்டுகளாக, வேளாளர் அப்பர் அடிகளும், மாணிக்கவாசகர் தன் திருக்கோவையாரிலும், பொய்யாமொழிப்புலவர் (13-ஆம் நூற்.) தஞ்சைவாணன்கோவையிலும், சொக்காப்ப நாவலர் 17-ஆம் நூற்றாண்டிலும் பாடியவை தமிழ்த்தாத்தா உவேசா அவர்களும் அறிஞர் பின்னத்தூரார் தெரிந்தெடுத்த நற்றிணை 310 அடிகளுக்கு விளக்கமாக அமைந்துள்ளன. அவற்றை ஈண்டு அளிக்கிறேன். சங்க கால நாகரிகத்தின் சில கூறுகள் தெளிவாகும். விறலி விடுதூதுகளிலும், கலம்பகங்களிலும், கோவை இலக்கியங்களிலும் தேடினால் நற்றினை 310-ல் முதலில் பதிவாகும் செய்தியை விளங்கிக்கொள்ள ஏதுக்கள் ஆகும். இந்திய ஜாதி அமைப்பின் உணவு பிரமிட் முறையை ஏராளமான பழைய தமிழ் இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. 20-ஆம் நூற்றாண்டில் கலெக்டர் ஆஷ் என்பவனைச் சுட்டுகொன்ற சுதந்திரப் போராட்ட வீரரின் மரணத்தின் முன் எழுதிய சாசனத்திலும், கப்பல் ஓட்டிய தமிழர் வ.உ.சி வாழ்க்கையிலும், வெள்ளகால் ப. சுப்பிரமணிய முதலியார் தமிழ்நாட்டில் பிராமணர் ஏன் வேத கால வழக்கமாகிய மாடு உள்ளிட்ட புலால் உணவைத் துறக்கலாயிற்று என்பதையும் விளக்கங்களிலும் 2000 ஆண்டு வேளாண்முறை இருப்பதை அறியலாம். இன்று காந்திஜி, அம்பேத்கார், பெரியார், மேலைநாட்டு மிஷனரிகள், ஊடகங்கள் போன்றவற்றால் வட, தென் செம்மொழி இலக்கியங்களில் 2000 ஆண்டாக உள்ள உணவுப் பிரமிட் முறை மாறிவருகிறது கண்கூடு. உ-ம்: ஹோட்டல் உணவுகளில். கிரேக்க நாகரீகத்தில் இருந்த பழைய அடிமைமுறை (slavery) இன்று காந்திஜி வழியை மேற்கொண்ட மார்ட்டின் லூதர் கிங் போன்றவர்களால் அமெரிக்காவில் மாறிவிட்டது அல்லவா? அதுபோல், இன்று மேலை நாடுகளின் நகரங்களை மாதிரியாகக் கொன்டு வளர்ந்துவருகிற இந்திய நகரங்களில் ஜாதி இல்லாமல் அழிந்து வருகிறதை அவதானிக்கலாம்.
வேளாண்மை சிந்து சமவெளியிலே இந்திய துணைக்கண்டத்தில் தோன்றுதலும், சிந்து நாகரீகம் அதன் உச்சத்தை 4500 - 4000 ஆண்டு முன்னர் அடைதலும், பின்னர் 3000 ஆண்டு முன்னர் வேளாண்மையின் செய்தொழில்களும், வேளிரும் பஞ்ச திராவிடநாடுகளில் வேளாண்மை சிறந்த குஜராத்தின் துவாரகையில் இருந்து தென்னாடும், இலங்கையும் அடைதலும், நெல் வேளாண்மை, குதிரை (ஐயனார்), இரும்பு (வாள்) நுட்பங்கள் என்ன மாற்றங்கள் தெற்கே கொண்டுவந்தன என்பதை அறிய எதிர்காலத்தில் விஞ்ஞானம் மிக உதவும். உ-ம்: வேள்விகளில் காளைகள் பலி என ஆரியர்கள் நடத்த, வேளாளர்கள் மாடுகளைப் பலியிடலை தடுத்துவிட்டனர். 2500 ஆண்டு முன்னரே. சமண நூலான நாலடியாரை வேளாண் வேதம் எனல் தமிழ்மரபு. வடக்கே இருந்து வரும் வேளிர்கள், வேளாண் சமூக பிரமிட் அமைப்பில் உணவுப் பழக்க வழக்கங்களை மேல்ப்பாலர், கீழ்ப்பாலர் என வரையறை செய்தனர். இன்று மாறிவரும் பழக்கங்கள் இவை. வேளாளர் மாட்டிறைச்சி உண்ணாமையும், சைவ உணவாளர்களும் (உ-ம்: சமணர்கள்), வேளாண் சமுதாயத்தில் சங்க காலத்தில் இணைக்கப்பெறாத ட்ரைப்ஸ் எனப்படும் கூட்டத்தினர் மாடடித்தல் போன்றனவும் தெளிவாக சங்க இலக்கியம் காட்டுகிறது.வேளாண்மை வளர்ச்சியில் தமிழகம் அடைந்த மாற்றங்கள் பற்றி ஜெனடிக்ஸ் ஆய்வுகள் இனி வரும் ஆண்டுகளில் பல செய்திகள் தரும் எனலாம். 2500 ஆண்டுகளாக இந்தியா முழுதும் விளங்கும் உணவுப் பழக்கங்கள் இல்லையேல் மாடுகள் வளர்க்க ஏராளமான நிலங்கள் தேவைப்படும்.
சங்க இலக்கியமாம் புறநானூற்றில் மாந்தர்களுக்கும் முதலிலே மாடுகளை வைத்துப் போற்றி முதுகுடுமிப் பெருவழுதி பாடல் இருக்கிறது: http://www.tamilvu.org/slet/l1280/l1280spg.jsp?no=9&file=l1280641.htm
‘ஆவும் ஆனியல் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடையீரும் மக்கட்
பெறாதோரும் எம் அம்பு கடி விடுதும்
நும்அரண் சேர்மின்‘.
ஆக்களின் உயர்ச்சியை இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்திலும் மிகப் போற்றியுள்ளார்.
பார்ப்பார் அறவோர் பசுபத் தினிப்பெண்டிர்
மூத்தோர் குழவியெனும் இவரைக் கைவிட்டு (மதுரைக்காண்டம், வஞ்சினமாலை, அடி, 52-54) என்னும் இவரைத் தவிர்ந்த தீயவர்கள் மேல் தீ செல்லட்டும் என்ற கண்ணகியின் ஆணையும் காட்டும். பசுவை இவர் என்று உயர்திணையாய்க் கூறியுள்ளார் இளங்கோ அடிகள். பாரத நாட்டின் பழைய பண்பாட்டை செம்மொழி இலக்கியங்கள் பரக்கக் காட்டுகின்றன. புலவர் நெட்டிமையார், முதுகுடுமியின் அறப்போர் நெறியாக யார்யார் காப்பாற்றப்படுவதற்கு உரியவர் எனப் பட்டியலிடுதல் நோக்கத் தக்கது. ஆனிலை உலகம் என்று மேலுலகங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. வேறு எந்த விலங்குக்கும் இவ்வாறில்லை. “ஆவிற்கு நீர் என்று இரப்பினும்” - வள்ளுவர். ’ஆதந்தோம்பல்’ என்பதற்கு நச்சினார்க்கினியர் புறப்பாட்டைக் காட்டுவதும் அறியற்பாலது. ஆனைந்து என்னும் பஞ்சகவ்யம் சைவத்தில் என்றும் ஆராதிக்கப்படுவது.
---------------------------------------------------------------------------------------
உவேசா நூலகப் பதிப்பில் இப் பாடலைக் காண்போம் (பக். 559-560).
தோழி கூற்று
(பரத்தை கூற்றும் ஆம்)
கன்றுபெறு வல்சிப் பாணன் கையதை
வள்ளுயிர்த் தண்ணுமை போல 10
எ-து: வாயிலாகப் புக்க விறலியைத் தோழி சொல்லியது. (அல்லது) விறலியை எதிர்ப்பட்ட பரத்தை சொல்லியதூஉம் ஆம்.
பரணர்
ப-ரை: விளக்கின் அன்ன - விளக்கைப் போன்ற, சுடர்விடு - ஒளி விடுகின்ற, தாமரை - செந்தாமரையின், களிற்றுச் செவி அன்ன - களிற்றின் செவியை ஒத்த, பாசடை - பசுமையான பெரிய இலைகள், தயங்க - விளங்க, உண்துறை - நீர் உண்ணும் துறையின்கண், மகளிர் - இறங்கிய மகளிர், இரிய - அஞ்சி ஓட, குண்டு - ஆழமான, நீர் - நீரையுடைய பொய்கையில், வாளை - வாளை மீன்கள், பிறழும் - துள்ளி விளையாடும், ஊரற்கு - தலைவனுக்கு, நாளை - நாளையன்று, மகட்கொடை நேர்ந்த - பரத்தையைக் கொணர்ந்து கொடுக்கும் தொழிலை மேற்கொண்ட, மடம்கெழு பெண்டே - அறிவற்ற விறலியே! தொலைந்த நாவின் - மெய் பேசுதலைத் தொலைந்த நாவினால், உலைந்த குறுமொழி - நிலைகுலைந்த இழிந்த நின் சொல்லுக்கு, உடன்பட்டு - உடன்பட்ட, தாயரோடு - பரத்தையின் தாய்மாரோடு சென்றுஎய்தி, வல்லை - விரைவாக, கன்று பெறு வல்சி - ஆவின் கன்றை உரித்து உணவாகப் புசிக்கின்ற, பாணன் கையதை - பாணன் கையிடத்து இருக்கும், தண்ணுமைபோல - பெரிதாக ஒலிக்கும் தண்ணுமை என்னும் வாத்யம்போல, உள் யாதும் இல்லதோர் - உள்ளே யாதும் அற்ற, போர்வை அம் சொல் - ஒரு மேற் போர்வை உடைய சொற்களை, ஒழிபுடன் சொல்லலை கொல்லோ? - உடன் தவிர்ந்து சொல்லுகின்றிலையோ? அவரையும் முயங்கச் செய்வாய்.
முடிபு: தயங்க இரிய பிறழும் ஊரற்கு எதிர்ந்த பெண்டே; போர்வை அம் சொல் சொல்லலை கொல் என முடிக்க.
கருத்து: விறலீ! பயனற்ற சொற்களைப் பரத்தையரின் தாயர்பாற் கூறுக, யான் நின் சொல் தேறேன் என்று வெகுண்டு தலைவி கூறினாள்.
வி-ரை: கண்டார்க்கு இனியன கூறும் தன்மையள் என்பாள் விறலியைத் தொலைந்த நாவினள் என்றாள். பிறர் அறியாதபடி மறைவாகப் பேசும் தன்மையள் என்பாள் குறுமொழியினள் என்றாள். இழிவு கருதாது மூத்தோரையும் புணர்க்கும் பெற்றியன் பெற்றியள் என்பாள் தாயரொடு சொல்லலை கொல் என்றாள். நின் சொல் என்னிடம் பலிக்காது என்றபடி.
இறைச்சி: வாளைமீன் தாமரை மலர் துன்புற, நீராடும் மகளிர் அஞ்சி ஓட, பொய்கை நீரிற் பாய்ந்து துள்ளும் என்றதன் குறிப்பு. தலைவன் யான் வருந்த, காமக் கிழத்தியர் அஞ்சி அகல, புதியதாக நீ புணர்த்திய பரத்தையிடத்தே சென்று தங்குவன் என்றபடி.
மெய்ப்பாடு - வெகுளி
பயன் - வாயின்மறுத்தல்
---------------------------------------------------------------------
பின்னத்தூரார் பதிப்பும் உரையும்:
310. பரணர்
திணை : மருதம்.
துறை : (1) இது, வாயிலாகப்புக்க விறலியைத் தோழி சொல்லியது.
(து - ம்.) என்பது, பரத்தையிற் பிரிந்து மீண்டுவந்த தலைமகன் தலைமகளது ஊடல் தீர்ப்பான் விறலியை விடுத்தலும் அவளை நோக்கிய தோழி, எங்கள் இறைவனுக்கு இன்னுமொரு பரத்தையை நாளைக் கொணர்ந்து கொடுக்க உடன்பட்டு வந்த விறலி! நின் பயனற்ற சொல்லை அப் பரத்தையரின் தாயர்பாலுங் கூறி அவரையும் முயங்க விடுப்பாய்கொலாமென்று வெகுண்டு கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்குப், "பாணர் கூத்தர் விறலியர் என்றிவர் பேணிச்சொல்லிய குறைவினை எதிரும்" (தொல். கற். 9) எனவரும் விதிகொள்க.
துறை : (2) விறலியை எதிர்ப்பட்ட பரத்தை சொல்லியதூஉமாம்.
(து - ம்.) என்பது, வெளிப்படை, (உரை இரண்டற்குமொக்கும்.)
(இ - ம்.) இதனை, "புல்லுதன் மயக்கும்" (தொல். கற். 10) என்னும் நூற்பாவின்கண் 'இவற்றொடு பிறவும்' என்பதனாற் கொள்க.
விளக்கின் அன்ன சுடர்விடு தாமரைக்
களிற்றுச்செவி அன்ன பாசடை தயங்க
உண்துறை மகளிர் இரியக் குண்டுநீர்
வாளை பிறழும் ஊரற்கு நாளை
மகட்கொடை யெதிர்ந்த மடங்கெழு பெண்டே
தொலைந்த நாவின் உலைந்த குறுமொழி
உடன்பட் டோராத் தாயரோ டொழிபுடன்
சொல்லலை கொல்லோ நீயே வல்லைக்
கன்றுபெறு வல்சிப் பாணன் கையதை
வள்ளுயிர்த் தண்ணுமை போல
உள்யாதும் இல்லதோர் போர்வையஞ் சொல்லே.
(சொ - ள்.) விளக்கின் அன்ன சுடர் விடு தாமரைக் களிற்றுச் செவி அன்ன பாசடை தயங்க - விளக்கைப் போன்ற ஒளி விடுகின்ற மலர் பொருந்திய தாமரையினுடைய, களிற்றின் - யானையின் செவியைப் போன்ற பசிய இலை அலைபட; உண்துறை மகளிர் இரியக் குண்டு நீர் வாளை பிறழும் ஊரற்கு - நீர் பருகுந் துறையின்கண் இறங்கிய மாதர்கள் அஞ்சி ஓட ஆழமாகிய நீர் மிக்க பொய்கையில் வாளைமீன் வெடிபாயும் ஊரனுக்கு; நாளை மகட் கொடை எதிர்ந்த மடம் கெழு பெண்டே - இனி வருகின்ற அடுத்த நாளைக்கும் ஒரு பரத்தையைக் கொணர்ந்து கொடுத்தற்கு நேர்ந்த அறியாமையுடைய விறலியே!; தொலைந்த நாவின் உலைந்த குறுமொழி உடன்பட்டு ஓராத் தாயரோடு உடன் ஒழிபு - மெய்ம்மையே கல்லாதொழிந்த நாவினால் குலைந்த தாழ்மையுடைய நின் சொல்லுக்குடன்பட்ட அப் பரத்தையரின் தாய்மாருடன் ஒருசார் எய்தி; நீ வல்லைக் கன்று பெறு வல்சிப் பாணன் கையது வள் உயிர்த் தண்ணுமைபோல - நீ தான் விரைவாக ஆவின் கன்றை உரித்து உணவாகக் கொள்ளுகின்ற பாணன் கையிடத்ததாகிய பெரிதாக ஒலித்தலையுடைய தண்ணுமை வாச்சியம்போல; உள் யாதும் இல்லது ஓர் போர்வைச் சொல் - உள்ளே யாதுமில்லாத ஒரு மேற் போர்வையுடைய சொற்களை; சொல்லலை கொல் - சொல்லுகின்றிலையோ? அங்ஙனம் சொல்லி அவரையும் பிறர் முயங்குமாறு விடுக்கலாமன்றோ? எ-று.
(வி - ம்.) தாமரை அதன் மலருக்கு ஆகுபெயர். யாதுமில்சொல் பயனற்ற சொல். தெளிவு பற்றி இறந்த காலத்தாற் கூறினாள்.
பரத்தை நயக்குமாறு வேண்டும் பொய்ம்மைகூறிப் புணர்ப்பித்தலின் தொலைந்த நாவினென்றாள். பிறர் அறியாதவாறு மந்தணமாகக் செய்தமைத்தலிற் குறுமொழியென்றாள். இழிதகவு கருதாது முதியோரையும் புணர்க்கும் இயற்கையையென்பாள், தாயரொடு சொல்லலை கொலென்றாள். நின் பயனற்ற சொல் பரத்தையர்க்கும் அவரன்னையர்க்கும் ஏற்பதன்றி இங்குப் பயன்படாதென்பதாம்.
இறைச்சி :- வாளைமீன் தாமரைவருந்த மகளிர் இரிந்தோடக் குண்டு நீரில் வெடி பாய்ந்து பிறழுமென்றது, தலைமகன் யாம் வருந்தக் காமக் கிழத்தியர் இரிந்தகல விருந்தாக நீ புணர்த்திய புதிய பரத்தையிடத்தே சென்று தங்காநிற்கு மென்றதாம். மெய்ப்பாடு - வெகுளி. பயன் - வாயின்மறுத்தல்.
-----------------------
Let us look at an English translation which is done by George L. Hart, Univ. of California, Berkeley.
sway on the lotuses pouring out rays as if they were oil lamps,
and young women who go to get drinking water run away in fear
when the vaaLai fish jumps out from the deep water in his town --
listen, foolish woman who want to arrange for him to meet
his courtesan [lit. woman] tomorrow - you with your useless tongue,
your stupid, small words -- you stayed with the mothers
[of those women], and they agreed with you, completely
clueless -- and at once you said your lovely words, didn't you,
mere coverings of emptiness like the huge taNNumai drum
with its great voice in the hand of your PaaNan who is so low
they give him a calf to eat. [lit.: who receives a calf for his food].
[viRali is the village dancer, spouse of the PaaNan singer. Commentators mention that these are the angry words told to the viRali dancer by a friend of the wife of the land lord or by a courtesan who was not taken to the chieftain.]
In the sangam poetry, land geography is divided into five landscapes.
For an intro,
http://en.wikipedia.org/wiki/Sangam_landscape
The rich fertile wet lands are called Marutham. The characteristic animal for this landscape is water buffalo, and the crop is paddy. In this Marutham landscape, Indra is said to be its god known for infidelity with women. Like Indra's affairs (e.g., with Ahalya in the Ramayana), Marutham poems typically speak of land lords' affairs with courtesans, and sangam poems often show the lady of the house of the chieftain (probably a cross-cousin by arranged marriage) quarreling with her husband's procurer go-betweens such as singers, washerwoman, entertainers, etc., NaRRiNai 310 is an important example in which a calf gets donated to the village minstrel.
In the case of cows in Indian farms, excess male calves were culled especially in regions where water resource was abundant and the main crop was rice paddy. In these wet land farms, the plough and draft animals are male buffaloes (called pOthu in Malayalam and Tamil), and the gender ratio studies show that male buffaloes are more compared to females. Much like in South East Asia, in the wet land paddys being prepared for transplantation, male buffaloes (instead of zebu oxen) are valued as puddlers. On the other side, milch cows outnumber bulls or oxen in wet land districts, and male calves have to be culled. (A. Vaidyanathan, et al., Bovine sex and species ratio in India, Current Anthropology, 23, 4, 1989).
Next let us look at how naRRiNai 310 theme is repeating in the next 1500 years of Tamil literature. For example, in Appar, MaaNikkavaacakar, PaaNDikkOvai (iRaiyanAr akapporuL), Poyyaamozip Pulavar (12th century), Cokkappa Naavalar (17th century), Vaanchinathan who shot Ashe (Colector of Tinnevelly), Vellakaal Pa. Subramania Mudaliar, ...