Thursday, May 22, 2008

இணையத்தில் வளர்தமிழ் - திருநெல்வேலி (ஜூன் 7, 2008)




வரும் ஜீன் மாதம் ஏழாம் தேதியன்று, நெல்லையில் மாவட்டக் கலெக்டர் திரு. கோ. பிரகாஷ், I.A.S தலைமை வகிக்க, மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் இரா. சபாபதிமோகன் "இணையத்தில் வளர்தமிழ்" என்னும் கருத்தரங்கைத் தொடங்கிவைக்கிறார். முனைவர்கள் நா. கணேசன், சொ. சங்கரபாண்டி, காசி ஆறுமுகம் அவர்களும் உரையாற்ற உள்ளனர். பேராசிரியர் தொ. பரமசிவன், எழுத்தாளர் பொன்னீலன், வழக்கறிஞர்கள் தீன், பிரபாகர் இன்னும் பலர் சொற்பொழிவாற்றுகிறார்கள். பல தமிழ் அறிஞர்களும், புரவலர்களும் பங்கேற்க உள்ளனர். தமிழ்மணம் போன்ற திரட்டிகளைப் பயன்படுத்தித் தமிழாய்வை மேலும் செழுமையாக்கும் வழிமுறைகளும் கணி சாராத பெருவாரித் தமிழ் மக்களுக்கு இணையத்தின் பயன்களைக் கொண்டு செல்தலும் பற்றிக் கலந்து ஆலோசிப்பது கருத்தரங்க நோக்கங்களாம்.


இணையத்தில் வளர்தமிழ்
வலைப்பதிவின் வளர்ச்சியும் தமிழாய்வில் பயன்பாடும்

கருத்தரங்க நிகழிடம்: விஜயா கார்டன்ஸ், தெற்கு புறவழிச் சாலை, திருநெல்வேலி - 5
நேரம்: மாலை 5 மணி, சனிக்கிழமை, ஜூன் 7 (07/06/2008)



வலைப்பதிவர்களும், ஆசிரியர்களும், எழுத்தாளர்களும், கணிஞர்களும், தமிழ்க் கணிமை ஆர்வலர்களும் வருகைதந்து ஆதரவளிக்க அன்புடன் அழைக்கிறோம். வருவோர் எண்ணிக்கை அறிய உதவியாக, தாங்கள் வருவதாக முடிவு செய்தால் naa.ganesan@gmail.com என்னும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். நன்றி.

இவண்,

சேகர் பொன்னையா,
குளோபல் சாப்ட்வேர் சொல்யூசன்ஸ், திருநெல்வேலி

முனைவர் முல்லை ச. முருகன்,
நெல்லைத் தமிழ்ப் பண்பாட்டுப் பேரவை

http://blog.thamizmanam.com/archives/127

5 comments:

  1. Anonymous8:12 PM

    Best wishes,
    Nambi

    ReplyDelete
  2. நண்பா,இந்த தகவலை எனது வலைபதிவில் பிரசுரம் செய்யலாமா?பதில் அனுப்பவும்.
    velarasi@gmail.com

    ReplyDelete
  3. Anonymous2:11 AM

    Nenjarantha Vazhthukkal! Muyarchi Vetri peratum!! valarattum!!!

    Kirubakaran, Chennai

    ReplyDelete
  4. கருத்தரங்கம் சிறப்பாக நடந்தேரியதாக அறிகிறேன். மிக்க மகிழ்ச்சி. குறுந்தகடு குறைவான எண்ணிக்கையிலேயே அனுப்பி இருந்தேன். நீங்கள் இவ்வாறு வெளியிடுவதாக தெரிந்தால் கூடுதலாகக் கூட அனுப்பி இருக்கலாம்.

    நிகழ்ச்சியில் பேசப்பட்ட அனைத்து தகவல்களையும் தொகுத்து எழுதினால் வருகைதராத பலருக்கு உபயோகமாக இருக்கும்.

    ReplyDelete
  5. அன்று விஜயா கார்டனுக்கு நானும் வந்திருந்தேன். நிகழ்வுகளை என் பதிவில்,
    "மூவர் ஏற்றிய தமிழ் விளக்கு"
    எனும் தலைப்பில் எழுதினேன். நேரமிருந்தால் பாருங்கள்.

    சகாதேவன்

    ReplyDelete