ஹம்ச மந்திரம் (அன்னத்தொனி) - அஜபா மந்திரம் (ஆரூர்) - அன்னத்தின் வெற்றி!

அன்னத்தின் வெற்றி

கி. வா. ஜகந்நாதன், கலைமகள் ஆசிரியர்

ஏதோ கைக்கு வந்த புத்தகத்தைப் புரட்டுவது என்ற பழக்கத்தில் ஒரு பள்ளிக்கூடத்துப் பையனுடைய பாட புத்தகத்தைப் புரட்டினேன். ரெயில் வண்டி, கப்பல், ஆகாய விமானம் - இவற்றின் படங்களைக் கண்டேன். கண்ணை அந்தப் பக்கத்தில் ஓட்டினேன். "வாகனங்கள்” என்ற தலைப்பில் ஒரு பாடம். வரவர விஞ்ஞான ஆராய்ச்சியினால் மனிதர்களுக்கு ஏற்பட்டுவரும் வசதிகளையும், மனிதன் தரைமீது காலால் நடந்து, வண்டியில் போய், கடல்மீது போய், வானத்திலும் பறக்கும் வகை வந்த கதையையும் பாடத்தில் கண்டேன். 'நிலம் நீர் வானம் என்ற மூன்று இடங்களிலும் செல்லும் ஆகாய விமானங்களே இனி வரும் உலகத்து வாகனங்கள். சண்டையானாலும் சமாதானமானாலும் இந்த மூன்று இயல்பும் ஒருங்கே பொருந்திய விமானங்களுக்குத்தான் இனிமேல் மதிப்பு உண்டு' என்று பாடம் முடிந்திருக்கிறது. படித்துப் புத்தகத்தை மூடினேன். கண் இமைகள் தாமே மூடின. நித்திராதேவி இறுகத் தழுவினாள். கனவு உதயமாயிற்று.

1

“தாயே, எனக்கு இனி இந்த வாழ்வு போதும். பரம கருணாநிதி யாகிய உன்னுடைய சந்நிதானத்தில் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு பிராணனை விட்டுவிடுகிறேன். எங்கள் ஜாதி முழுவதும் நிர்மூலமாகப் போகட்டும். அதனால் எனக்கு ஒன்றும் துக்கமில்லை. ஆனால் பதவிச் செருக்காலும் செல்வாக்கினாலும் மமதை ஏறிப்போனவர்களுடைய ஏளனச் சொற்களைக் கேட்டு மானமின்றி உயிர் வாழ்வதென்பது இனி ஆகாத காரியம். எங்கள் ஜாதிக்கு உயர்வு எதுவும் வேண்டாம். தாழ்வு இராமல் இருந்தால் போதும். ஹே கருணாலோசனி, சர்வ ஜீவர்களுக்கும் மாதாவாகிய உன் திருச்செவியில் என் விண்ணப்பம் ஏறாவிட்டால் எனக்கு இனிப் புகலிடம் இல்லை."

சிலம்பு ஒலிப்பது போன்ற தொனியில் இந்த முறையீடு அம்பிகையின் திருச்செவியில் விழுந்தது. ஸ்ரீ கைலாசத்தில் இறைவனுடன் திருவோலக்கத்தில் இருந்து தேவர்களுக்கெல்லாம் கருணாகடாட்சத்தை வழங்கிவிட்டு அப்போதுதான் அந்தப்புரத்துக்கு வந்து இளைப்பாற அமர்ந்தாள் தேவி. அவள் காதில் இந்தத் துக்கக் குரல் விழுந்தது. தன் குழந்தைகளின் துயரத்தைத் தானே உணர்ந்து வலியச் சென்று திருவருள் பாலிக்கும் பரமேசுவரி, இதைக் கேட்ட பிறகு வாளா இருப்பாளா? பரக்கப் பரக்க மஞ்சத்திலிருந்து எழுந்து எட்டிப் பார்த்தாள். அழகிய ராஜஹம்ஸம், பிரமதேவனது சிங்கார வாகனம், தளர்ந்த உடம்பும் சோர்ந்த முகமும் மேல் வாங்கும் மூச்சும் உடையதாக நிலைக்கு வெளியே நின்றது.

"குழந்தாய்,இப்படி உள்ளே வா" என்று அம்பிகை தேனொழுகக் கூறினாள்.

மெல்ல மெல்ல அன்னம் உள்ளே நுழைந்தது. அம்பிகையின் திருவடி மலர்களில் விழுந்து, "அஞ்சல் என்று சொன்னாலன்றி எழுவதற்கு எனக்குச் சக்தியில்லை'' என்று பொங்கி வரும் விம்மல் சுருதி கூட்டப் புலம்பியது.

“பயப்படாதே. உனக்குத் துக்கம் வர நியாயமே இல்லையே! ஆருயிர்களைச் சிருஷ்டித்து, அவர்களுக்கு வேண்டிய பொருள்களையும் சிருஷ்டித்து, அவர்களுக்குரிய இன்பங்களையும் சிருஷ்டித்துத் தன் செங்கோல் நடத்தும் நான்முகனுக்கு வாகனமாக இருக்கும் பாக்கியம் இருக்கும் போது உனக்குக் குறை ஏது?”

இந்த ஆறுதல் வார்த்தையே ஹம்ஸராஜாவினுடைய துயரத்தைக் கிளறிவிட்டது. விம்மல் அதிகமாயிற்று. மெல்லத் தலையெடுத்துப் பார்த்தது. சிறிது நேரம் பேச முடியவில்லை. பிறகு, "போதும், அந்தப் பாக்கியம். இனி, பிரம்மதேவர் வேறு வாகனத்தை ஏற்றுக்கொள்ளட்டும். எனக்கு அந்தப் பதவி வேண்டாம். எங்கள் இனத்திற்கே வேண்டாம். பூவுலகத்தில் வாத்தோடும் நாரையோடும் சேர்ந்து நத்தையையோ மீனையோ கொத்தி வயிறு வளர்த்துக்கொள்கிறேன். உண்மையாகச் சொல்கிறேன், தாயே! என் பதவியை வாங்கிவிட ஏற்பாடு செய்யவேண்டும். போதும் நான் பட்ட சுகம்!''

தேவி புன்முறுவல் பூத்தாள்; "பாவம்! எப்போதும் ராஜயோகத்திலே இருப்பவர்களுக்கு ஒரு சிறு துக்கம் வந்தாலும் பூகம்பம் வந்ததுபோல நடுக்கிவிடும். நீ ராஜ யோகம் உடையவன். உனக்குத் துக்கத்தின் சாயை லேசங்கூடத் தெரியாது. ஏதோ சிறு புரைசல் எங்கோ நிகழ்ந்திருக்கிறது. அது உனக்கு இவ்வளவு தாபத்தை உண்டாக்கியிருக்கிறது. நடந்தது என்ன? சொல்" என்று அன்போடு வினாவினாள்.

"தாயே, பூவுலகத்தில்தான் ஏழையென்றும் செல்வனென்றும், கூலிக்காரனென்றும் எஜமானனென்றும், உயர்ந்த ஜாதியென்றும் தாழ்ந்த ஜாதியென்றும் பிரிவுகள் இருக்கின்றன என்று கேட்டிருக்கிறேன். பேதமில்லாத பொதுவுடைமை ராஜ்யம் சொர்க்கமென்றே நம்பியிருந்தேன். இங்கேயும் பேதம் உண்டென்று இப்போது தெரிந்துகொண்டேன்; உயர்வு தாழ்வு உண்டென்று உணர்ந்துகொண்டேன்.''

''விஷயத்தைச் சொல்; எதற்காகக் காடு சுற்றுகிறாய்? உன்னுடைய தாபத்தால் தோன்றிய உணர்ச்சிகளைக் கொட்டாதே. அதற்கு மூலமான சம்பவத்தைத் தெரிவி. மற்றதையெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன்.'

அன்பான பேச்சிலே, நடுவில் சிறிது கடுமை தேவியின் குரலில் தொனித்தது, கற்கண்டுப் பாகிலே கடுக்கென்று சிறிய கற்கண்டுத் துண்டு தட்டுப்பட்டதுபோலே. அன்னம் விழித்துக்கொண்டது. நேரடியாகச் செய்தியைச் சொல்ல ஆரம்பித்தது.

* * *

இன்று காலையில் பிரம்மதேவர் ஸ்ரீ கைலாசத்துக்குப் புறப்பட்டார். ஸோமவாரத்தில் ஸர்வலோக நாயகராகிய சிவபெருமானுடைய தரிசனம் இல்லாவிட்டால் அவருக்கு ஒன்றும் ஓடாது. என்மேல் ஆரோகணித்துக் கொண்டு ஸ்ரீ கைலாசத்துக்கு எழுந்தருளினார். வழக்கம் போல என்னைக் கோயிலுக்குப் புறம்பே நிறுத்திவிட்டுப் பரமேசுவர தரிசனத்துக்கு எழுந்தருளினார். ரிஷபதேவர் இருக்கும் மண்டபத்தில் என்னை விட்டுச் சென்றார். நான் உள்ளே போனேன். அங்கே புகுந்தவுடனே எனக்கு ஒரு விஷயம் தெரியவந்தது. நாராயண மூர்த்தியும் அன்று பரமசிவனுடைய தரிசனத்துக்கு வந்திருக்கிறார் என்பதை உணர்ந்தேன். ரிஷபதேவர் இருக்கும் இடத்தில் கருட தேவரும் இருந்தார். இருவரும் உல்லாசமாகப் பேசிக் கொண்டிருந்தனர். நெடுநாள் காணாமல் சந்தித்தவர்கள் போல மிகவும் சந்தோஷத்தோடு சிரித்துக்கொண்டு சல்லாபம் செய்துகொண்டிருந்தார்கள்.

ரிஷபதேவர் என்னைக் கண்டவுடன் திடீரென்று பேச்சை நிறுத்திவிட்டுக் கண்ணைக் காட்டினார். அந்தக் குறிப்பினால் நான் வருவதைத் தெரிந்துகொண்ட கருட தேவர் என்னைத் திரும்பிப் பார்த்தார். பார்த்தவர் ஒன்றும் பேசவில்லை. வா என்றும் சொல்லவில்லை.

நான் எப்போதும் போல, "என்ன, திடீரென்று பேச்சை நிறுத்திவிட்டீர்களே! நான் வந்தது தடையாக இருக்கிறதோ?" என்று வேடிக்கையாகக் கேட்டேன்.

ரிஷபதேவர் என்னை ஏறெடுத்துப் பார்த்தார். ஏளனமாகச் சிரித்தார்; 'ஓகோ! உனக்காகப் பயந்து கொண்டு நாங்கள் மௌனம் சாதிப்போம் என்று நினைத்து விட்டாயோ?" என்று அதுகாறும் கேட்காத ஏதோ தொனியிலே சொன்னார். என் காதை அது அராவியது. .

"பேசிக்கொண்டே இருந்தவர்கள், திடீரென்று நிறுத்திவிட்டீர்களே என்று கேட்டேன்'' என்று நான் சிரித்தபடியே சொன்னேன்.

"பேசுவதும் பேசாமல் இருப்பதும் எங்கள் இஷ்டம். தலை போயும் மானம் போகாமல் உயிர் வாழ்வோருடைய சேவகன் கட்டளை இடவேண்டிய அவசியம் இல்லை” என்று பிரம்பால் அடித்ததுபோலப் பேச்சு வந்தது; பார்த்தேன். கருடதேவரே அத்தனை ஆக்கிரோஷத்துடன் பேசினார் ; பறவை இனத் தலைவராக விளங்கும் சாக்ஷாத் கருடஸ்வாமியே இப்படி ஆத்திரத்துடன் பேசினார். "

எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. எம்பெருமானாகிய சதுர்முகப் பிரம்மாவையும் அவர்கள் இழுத்து வரும்படியாக அவர் அவர்களுக்கு என்ன செய்தாரோ தெரியவில்லை. என்றைக்கோ நடந்ததாகச் சொல்லும் கதையை அவர்கள் இப்போது எடுத்துப் படிக்கக் காரணமும் விளங்கவில்லை. சிருஷ்டிகர்த்தா ஐந்து முகங்களை முதலில் பெற்றுப் பிறகு பரமேசுவரனுக்குத் தம் சிரசையே சமர்ப்பணம் செய்து வன்மை பெற்றதை அந்த இரண்டு பெரியவர்களும் அப்போது நினைக்க வேண்டிய அவசியம் என்னவோ, தெரியவில்லை.

நான் நிதானித்துக்கொண்டேன். "பெரியவர்கள் பேச்சை இங்கே இழுக்க வேண்டாம்; அடியேனைப்பற்றி எது வேண்டுமானாலும் சொல்லுங்கள். எம்பெருமானைப் பற்றிச் சொல்லாதீர்கள். என்மேல் உண்டான கோபத்துக்கு அவர் காரணமாக மாட்டார்" என்றேன்.

இப்படிப் பேசிக்கொண்டிருந்த போதே, "பூவுலகத்தில் குலாலன் சட்டிபானை பண்ணுகிறான். தேவ லோகத்தில் இவர் பண்ணுகிறார். அவனுக்கும் இவருக்கும் வித்தியாசமே இல்லை. இந்த அழகுக்கு, இவரையும் சேர்த்து மும்மூர்த்திகளென்று சொல்லும்படியாகச் சட்டம் வேறு போட்டிருக்கிறார்கள்'' என்று ரிஷபதேவர் கொதித்துப் பேசினார்.

"அவர்கள் மூவரும் சேர்ந்து நின்றால் நமக்கு என்ன? நம்மைப் பற்றிய அளவில் நம்முடைய விமரிசனத்தை வைத்துக்கொள்வோமே!" என்று நான் பணிவாகவே சொன்னேன். இதில் என்ன தாயே குற்றம் இருக்கிறது? திரிமூர்த்திகளுடைய அந்தஸ்தை எடை போட்டுப் பார்க்க எங்களுக்கு அறிவோ, அதிகாரமோ ஏது?

என் வார்த்தைகள், எரிகிற தீயில் எண்ணெய் விட்டதுபோல் ஆயின. இரண்டு பேரும் மாறி மாறிச் சீற ஆரம்பித்து விட்டார்கள்.

"யாருக்கடா புத்தி போதிக்க வருகிறாய்? நண்டையும் நத்தையையும் தின்று வயிறு வளர்க்கும் ஜாதிக்குப் பேச்சைப் பார், பேச்சை! திரிமூர்த்திகளாம்! கண்டானாம்!" என்று ஒருவர் குமுறினார்.

"பெண்ணைப்போல நடந்து பெண்ணைப்போல நெளியும் உனக்கு ஆணவம் தலைமேலே ஏறியிருக்கிறது. பூ என்று ஊதினால் நாற்பது காதம் போய்விழுவாய். தாமரைப் பூவாவது சிறிது கனமாக இருக்கும். அதைவிட லேசான ஆகிருதி படைத்த உனக்கு வாய் வேறேயா?" என்று ஒருவர் பொங்கினார்.

''நானும் திரிமூர்த்தியிலே ஒருவன் என்று அவர் சொல்கிறாராம். இவன் நானும் உங்களோடு சேர்த்தி என்று இங்கே வந்தானாம்! போதும் போதும் உன்னுடைய உறவு. இனிமேல் இந்தப் பக்கம் எட்டிப் பாராதே. உன் எஜமானன் வந்தால், அவரோடே போய் நில். இல்லாவிட்டால் கைலாச மலை அடிவாரத்தில் மற்ற தேவர்கள் வாகனங்கள் நிற்கும் கொட்டகை இருக்கிறது. அங்கே போய் நீ உன் அதிகாரத்தையும் நியாயத்தையும் காட்டு. இந்தப் பக்கம் எட்டிப் பார்த்தாயோ..." என்றார் ரிஷபதேவர்.

"நான் பட்சிராஜா என்ற மரியாதை கூட இல்லை. என்ன துணிச்சல் உனக்கு? சீ புழுக்கை!" என்று உத்தண்டமாகப் பேசிக் காறித் துப்பினார் கருடஸ்வாமி.

அவர்கள் திருவாக்கிலிருந்து வந்த வார்த்தைகளை அப்படியே சொல்ல எனக்குத் திராணி இல்லை. அவ்வளவையும் சொல்ல முடியவும் முடியாது. நான் தேவ லோகத்தில் வாழ்ந்தது போதும். என்னால் பிரம்மதேவருக்கு இகழ்ச்சி வந்ததும் போதும். உன்னுடைய கருணை எனக்கு இருக்குமென்று துணிந்து முறையிட வந்தேன். என்னைப் பழித்தது பெரிதல்ல; சிருஷ்டி கர்த்தாவையே பழித்தார்கள்; அதற்குமேல் பெண்குலத்தையே பழித்தார்கள். எனக்கு அருள்க, தாயே!

* * *

இந்த விவரத்தைச் சொல்லிவிட்டு மீட்டும் விக்கி விக்கி அழத் தொடங்கியது ஓதிம அரசு. தேவி மனம் கனிந்து, "ஹம்ஸ ராஜாவே, எதற்காக இப்படித் துக்கிக்கிறாய்? இதெல்லாம் என்னுடைய திருவிளையாட்டென்று எண்ணிச் சந்தோஷப்படு. அவர்கள் சொன்ன வார்த்தைகளுக்கு நீ பதில் சொல்லாமல் பணிந்து வந்தாயே, அதை மெச்சுகிறேன். உன்னுடைய துக்கத்தை மாற்ற வழி தேடுகிறேன். நீ கவலைப்படாதே. நீ போய் வழக்கம் போல் உன் கடமையைச் செய்துகொண்டிரு. அகங்காரத்துக்குக் கைலாசம் இடம் கொடாது. இந்த எல்லைக்குள் அகங்காரத்தை அடைந்தவர்கள் யாரானாலும் தண்டனை பெறுவார்கள். நீ எல்லாவற்றையும் மறந்துவிடு" என்று அருள் செய்து ஹம்ஸத்துக்கு விடை கொடுத்து அனுப்பினாள் அகிலாண்ட நாயகி.

ஹம்ஸம் அம்பிகையின் குழலொலி போன்ற அந்த மதுர வார்த்தைகளால் தாபம் ஆறிச் சத்திய லோகத்தை அடைந்தது.

ஸ்ரீ கைலாசத்தில் அன்று ஏதோ ரகசிய ஆலோசனை நடந்தது. வழக்கம்போல ரிஷப தேவரும் கருடதேவரும் திருக்கோயிலின் வெளியிலே உள்ள மண்டபத்தில் இருப்பவர்கள், அடிவாரத்து மண்டபத்திலே இருந்தார்கள். மிகவும் அந்தரங்கமான ஆலோசனை நடக்கும்போது தான் இப்படி அவர்களுடைய ஸ்தானத்துக்கு மாறுதல் ஏற்படும். ஆனால் இந்த மாதிரியான ரகசியக் கூட்டம் யுக யுகாந்தரங்களுக்கு ஒரு முறைதான் ஏற்படும். இப்போது யுகசந்தி ஒன்றும் இல்லை; பிரளயமும் இல்லை; புதிய சிருஷ்டியும் இல்லை. அப்படி இருக்க இந்த அந்தரங்க ஆலோசனைக்குக் காரணம் தேவர்களுக்கு விளங்கவில்லை. மும்மூர்த்திகளைத் தவிர இந்திரனுக்குக் கூட அந்த ஆலோசனையில் இடமில்லை. திருமாலினுடைய அந்தரங்க ஆலோசனைகளுக்குக் கருடதேவர் புறம்பாக இருக்க மாட்டார். அவர் அறியாத ரகசியமே இல்லை. ரிஷபதேவரும் சிவபெருமானுடைய பிரதான பிருத்யராகிய நந்தியின் அம்சம் அல்லவா? இந்த இருவரையுங் கூட விலக்கிவைத்து மந்திராலோசனை நடக்கிறது.

மந்திராலோசனையின் முடிவு வெளியாயிற்று; வாயு தேவன் அதைப் பிரகடனம் செய்தான். "தேவலோகத்தில் ஏதாவது புதிய விநோதம் நடக்கவேண்டுமென்பது திரிமூர்த்திகளின் யோசனை. பூலோகத்தில் வாகனங்களை ஓடவிட்டுப் பந்தயம் நடத்துகிறார்களாம். அப்படி இங்கும் வாகனங்களைக் கொண்டு பந்தயம் நடத்துவதாக திருவுள்ளங் கொண்டிருக்கிறார்கள் மும்மூர்த்திகளும். முதல் முதலில் தங்களுடைய சொந்த வாகனங்களை கொண்டே இந்த விநோதத் திருவிளையாட்டை நடத்தத் தீர்மானித்திருக்கிறார்கள்'' என்ற செய்தி தேவலோகம் முழுவதும் பரவியது. பரவாத இடங்களுக்கெல்லாம் தாமே போய்ப் பரப்பினார் நாரத பகவான்.

 2

செய்தி ரிஷபதேவர் காதில் விழுந்தது; கருடபகவான் செவியேற்றார்; பிரம்ம தேவருடைய அன்னமும் தெரிந்து கொண்டது. 'நம்மையுமா அந்தக் கூட்டத்தில் சேர்த்தார்கள்? நாம் ஜயிக்கிறோமோ இல்லையோ? அந்த இரண்டு வாகனப் பெரியாரோடும் சேர்ந்து போவதே ஒரு புதிய மதிப்பு. இது அம்பிகையின் கருணை போலும்!' என்று ஹம்ஸம் எண்ணியது.

'இதென்ன பைத்தியக்கார யோசனை! உலகையெல்லாம் க்ஷண நேரத்தில் சுற்றிவரும் நம்முடைய பராக்கிரமத்துக்கும், எட்டின மட்டும் பறந்து வானலோக சாம்ராஜ்யத்துக்கு ஆதிபத்தியம் வகிக்கும் கருடனுடைய பராக்கிரமத்துக்கும் முன்னே, கர்ப்ப ஸ்திரீயைப் போல அசைந்து அசைந்து நடை போடும் பேதை அன்னம் எம்மாத்திரம்! எம்பிரான் திருவுள்ளத்தில் இந்த விசித்திர எண்ணம் தோன்றக் காரணம் என்னவோ! என்ற நினைவில் ஆழ்ந்தார் ரிஷபதேவர்.

'அன்னக் குஞ்சின் சிறுமையை வெளிப்படுத்த இப்படி ஒரு சந்தர்ப்பம் வருமென்று யார் எதிர்பார்த்தார்கள்? நம் பெருமை இன்னும் ஒரு முழம் உயரப் போகிறது!' என்று கர்வத்தோடு சிறகை அடித்துக்கொண்டார் வைனதேயர்.

இந்தத் தேவலோக விளையாட்டுக்கு நாள் குறிப்பிட்டாயிற்று. சத்திய லோகத்தில் பந்தயம் தொடங்குவதாகத் திட்டம் போட்டார்கள். சத்திய லோகத்தில் புறப்பட்டு அதைக் கடந்து க்ஷீராப்தியைத் தாண்டி அப்பால் கைலாசமலையை அடைய வேண்டும். யார் முன்பு அதை அடைகிறார்களோ, அவரை அம்பிகை தன் வாகனமாக ஏற்றுக்கொள்வதோடு வேறு சிறப்புக்களும் செய்வாள். இதுதான் பந்தயத்தின் நிபந்தனை. "பூ, இது தானா பிரமாதம்! இம்மென்பதற்குள்ளே ஏழு தடவை சத்தியலோகம், க்ஷீராப்தி, கைலாசம் இந்த மூன்றையும் ஒரே தாவாகத் தாவி வந்துவிடுவேன்" என்று வீறு பேசினார் விடைக்குலத் தலைவர். "இந்த மூன்றென்ன? இந்திர லோகத்தையும் எட்டுப் பிரதட்சிணம் செய்து விட்டு, கற்பக நிழலில் இளைப்பாறிவிட்டு வா என்றாலும் வருவேன்'' என்று கருட பகவான் கூறினார்.

தேவர்களுக்கு இந்த வேடிக்கையைப் பார்க்க வேண்டு மென்று ஆவல் அதிகமாக இருந்தது. அப்ஸரஸுகள் எல்லாம், "ஐயோ! பாவம்! அன்னத்தை இப்படித் துன்பப்படுத்தலாமோ!" என்று அங்கலாய்த்தார்கள். தேவ லோக முனிவர்களெல்லாம், “பரமேசுவரனுடைய திருவிளையாட்டு இது. இதில் ஏதோ சூக்ஷ்மம் இருக்கிறது.” என்று சொல்லிக்கொண்டார்கள்.

* * *

பந்தய நாள் வந்தது. சத்திய லோகம் என்றும் இல்லாத சோபையோடு விளங்கியது. திரிமூர்த்திகளும் தக்க ஆசனத்தில் வீற்றிருந்தார்கள். நாரத மாமுனிவரே பந்தயத்துக்கு ஆணையிடும் அதிகாரியாக நியமிக்கப் பெற்றார்.

மூன்று வாகனங்களும் வந்து நின்றன. ரிஷபதேவர் தலை நிமிர்ந்து நின்றார். கருடதேவர் உடம்பைக் கோதிக் கொண்டு நின்றார். அன்னமோ அடங்கி ஒடுங்கிப் பணிவாக நின்றது.

நாரதர் பேசலானார்: "ஹே விருஷப ராஜாவே, பந்தயத்தின் நிபந்தனைகள் தெரியும் அல்லவா? உமக்குரிய கைலாசந்தான் லக்ஷ்ய ஸ்தானம். பரமசிவனுடைய வாகனமாகிய உமக்கு எப்போதும் முதல் ஸ்தானம் அளிப்பது சம்பிரதாயம் ஆகிவிட்டது. அந்தப் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். இதிலே கலந்துகொள்ள இஷ்டமில்லாவிட்டால் இப்போது அதைத் தெரிவித்துவிடலாம்" என்று சொல்லவே, ரிஷபதேவர் தம் சலங்கைமணியை ஒரு முறை உதறிவிட்டுக்கொண்டே, "என்ன மகரிஷே, அப்படிக் கட்டளை யிடுகிறீர்கள்? என்னுடைய சக்திக்கு எப்போதாவது குறைவு நேர்வது உண்டா? இந்தச் சிறிய காரியத்துக்குப் பயந்துகொண்டு நான் கைலாசத்தில் வாழ முடியுமா? பரமேசுவரனைத் தரிசிப்பதற்கு முன்பு தேவர் என்னைத் தரிசித்துச் செல்லும் பதவி எனக்குச் சும்மாவா கிடைத்தது?" என்று முறுக்காக விடை கூறினார்.

"சரி, அப்படியானால் உம்முடைய உள்ளம் போல உமக்குக் கௌரவம் கிடைக்கட்டும்" என்று அதன் கழுத்தில் ஒரு மாலையை இட்டார் நாரதர்.

அப்பால் கருடனை நோக்கிக் கூறலானார்: "பாற்கடலைக் கண்டவுடன் பழைய ஞாபகத்தில் அங்கே இறங்கி விட வேண்டாம். அதற்கு மேலும் போய்க் கைலாசத்தை அடையவேண்டும், கருடதேவரே! மகாவிஷ்ணுவுக்குப் பெரிய திருவடியாக இருக்கும் உம்முடைய பாக்கியமே பாக்கியம். நீர் பட்சி ராஜாவாக விளங்குகிறீர். பந்தயத்திலே உம்முடைய முழு ஆற்றலையும் காட்டவேண்டும்."

"ஸ்வாமி, கைலாசம் எனக்குப் புதிதல்லவே? பாற்கடலிலிருந்து அடிக்கடி கைலாசம் போகும் வழக்கம் இந்தச் சிறகோடு உடன் பிறந்ததல்லவா? ‘ஈயாடுவதோ கருடற் கெதிரே’ என்ற பழமொழி சர்வ லோகத்திலும் என்னுடைய ஜயத்தைக் கோஷித்துக் கொண்டிருக்க இந்தச் சிறிய விளையாட்டிலே எனக்கு உற்சாகம் உண்டாவதற்குத் தடை என்ன?”

நாரதர் மெல்ல அன்னத்தை நோக்கினார்; "குழந்தாய், உன்னுடைய ஊரிலிருந்து புறப்படுகிறாய்; பாற்கடலைத் தாண்டி, கைலாசத்துக்குப் போகவேண்டும். பலிஷ்டர்களாகிய இரண்டு பேர் உன்னோடு வருகிறார்கள். நீ தைரியமாக இந்த விளையாட்டிலே கலந்துகொள்வாயா?" என்று கேட்டார்.

"ஸ்வாமி, நான் வெறும் கருவி. எம்பெருமான்களெல்லாம் சேர்ந்து நிர்த்தாரணம் செய்த இந்தக் காரியத்தைச் செய்வது என் கடமை. இதில் வெற்றியோ தோல்வியோ அதுபற்றி எனக்குக் கவலை இல்லை. என் கடன் பணி செய்து கிடப்பதே" என்றது அன்னம். "ஐயோ! பாவம்!'' என்று லக்ஷ்மியின் தோழி ஒருத்தியின் குரல் காற்றோடு இழைந்து வந்தது. அரம்பையர் யாவரும் அந்த அநுதாபத்திலே கலந்துகொண்டார்கள்.

நாரதர் மறுபடியும் கனைத்துக்கொண்டு பேசலானார்: "ஒரு முக்கியமான சங்கதியைச் சொல்ல மறந்துவிட்டேன். உங்களுடைய எஜமானர்களின் கருணையால் நீங்கள் பெற்ற பலத்தைக் கொண்டு இங்கே பரீட்சை செய்யக் கூடாது. அது தவறு. உங்களுக்கு ஸ்வபாவமாக உள்ள ஆற்றலை, உங்கள் ஜாதியினர்களுக்கு எவ்வகையான சக்தி உண்டோ அந்த இயல்பான சக்தியை வைத்துக்கொண்டே நீங்கள் ஜயிக்கவேண்டும். இல்லாவிட்டால் இந்தப் பந்தயம் திரிமூர்த்திகளின் பலாபலத்தைச் சோதித்ததாக முடியும். அது மிகவும் அபசாரம். ஆகையால் உங்கள் மூவரிடத்திலும் உள்ள தெய்வ சக்தியை இதோ கிரகித்துக் கொள்கிறேன். உங்கள் சொந்த பலத்தைக்கொண்டே ஜயிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும் ! இனி ஆரம்பிக்கலாம்.''

மந்திராக்ஷதையைத் தூவி ஆக்ஞை கொடுத்தார் நாரதர். தேவர்கள் வைத்த கண் வாங்காமல் பார்க்கத் தொடங்கினார்கள். ரிஷபதேவர் துள்ளிக் குதித்தார். கருட பகவான் தத்தித் தாவிப் பறந்து குதூகலித்தார். அன்னம் மெல்ல நடந்தது. க்ஷண நேரத்தில் ரிஷபதேவர் சத்திய லோகத்தின் எல்லையை அடைந்துவிட்டார். கூரிய கண் படைத்த தேவர்கள் இருந்த இடத்திலிருந்தே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

3

கருடதேவர் ரிஷபதேவரை அடுத்துச் சென்றார். அன்னம் இருவருக்கும் சற்றுத் தூரத்திலே நடந்தது. ரிஷபதேவர் வாலைக் கிளப்பிக்கொண்டு மேகத்தை முட்டி
எழும்பிக் குதித்தார். பக்ஷிராஜா மேக மண்டலத்தூடே புகுந்து புறப்பட்டார். அன்னமோ கீழே தரையில் நடந்து சென்றது.

ரிஷபதேவர் சத்தியலோகத்தின் எல்லையை அடைந்தவுடன் க்ஷீராப்தி தோன்றியது. என்றும் இல்லாதபடி அன்று ஒரே கொந்தளிப்பு. அலைகள் மலைபோல எழும்பி அடித்தன. ரிஷபதேவர் அதன் கரையிலே நின்று திரும்பிப் பார்த்தார். பக்ஷிராஜா நெடுந்தூரத்தில் தெரிந்தார். அன்னம் கண்ணுக்கே தெரியவில்லை. அவருக்கு உற்சாகம் மூண்டது. 'பாற்கடலை ஒரே தாண்டலாகத் தாண்டலாமா? அல்லது உள்ளே குதித்து நீந்தலாமா?' என்று யோசித்தார். முன்பெல்லாம் ஒரு க்ஷணத்தில் தாண்டிப் போய்விடுவார். இப்போது நிமிர்ந்து, அக்கரை தெரிகிறதா என்று பார்த்தார்; தெரியவில்லை. அலைகள் உயரமாக எழும்புவதனால் மறைக்கிறது போலும் என்றெண்ணித் துள்ளிக் குதித்துப் பார்த்தார். அப்போதும் கடலின் எல்லை கண்ணுக்குத் தெரியவில்லை. உள்ளே குதித்துத் துளைந்து செல்வதுதான் வழியென்று எண்ணித் தாவினார். தரைமேல் நடந்து வந்தது போலச் சுலபமாகப் படவில்லை.

அவர் உள்ளத்தில் அப்போதுதான், 'இது விளையாட்டல்ல, வினை' என்ற உண்மை புலப்பட்டது. ‘ஒரு சிறு குழிபோல இருந்த இந்தக் கடல் இவ்வளவு பெரிதாகி விட்டதே! எப்படி?' என்று யோசித்துப் பார்த்தார். விஷயம் விளங்கியது. 'நம்மிடத்தில் இறைவன் கருணையாகிய பலம் இருந்தது. அதனால் பெரியவனாக இருந்தோம். இப்போது அந்தத் தெய்வ பலம் போய்விட்டது போலும்!' - இப்படி எண்ணுகையிலேயே கால் தளர்வது போன்ற உணர்ச்சி உண்டாயிற்று. பாற்கடலின் அலைகள் பேய் அறைவது போல அறைந்தன. முகத்தை மேலே தூக்கிக்கொண்டார். மூக்குக்குள்ளெல்லாம் பால் புகுந்தது. மூச்சு விட முடியவில்லை. வாயைத் திறந்து பெருமூச்சு விட்டார். முன்னங்காலால் அடித்துத் துழாவி நீந்தினார். பளீர் பளீர் என்று அலைகள் கன்னத்தில் அடித்தன; காதில் அடித்தன. அப்போது எந்த ஞாபகமும் அவருக்கு வரவில்லை. இதுகாறும் அநுபவிக்காத பிராண சங்கடம் ஒன்றை அனுபவித்தார். நரகம் என்பதை அவர் பார்த்ததில்லை. அதுதான் நரகமோ என்று கூட எண்ணினார்.

வாய்விட்டுக் கதறி அறியாத ரிஷபதேவர் அன்று, முதல் முறையாக, "அம்மா!" என்று அலறினார். அவ்வளவு தான் தெரியும்; அவர் நினைவிழந்தார்.

* * *

கருடதேவர் சத்தியலோகத்தின் எல்லைக்கு வந்த போது ரிஷபதேவரைக் காணவில்லை. அவர் முன்னாலே நெடுந்தூரம் போய்விட்டாரென்று எண்ணிக்கொண்டார். பாற்கடல் கொந்தளித்துக் கொண்டிருந்தது. கருடபகவானுக்கு க்ஷீராப்தியைக் கண்டவுடன் பின்னும் உற்சாகம் உண்டாகிவிட்டது. கரையோரமாகச் சென்று சிறிது நின்றார். சிறகைக் கோதிக்கொண்டார். ஒரே வேகமாகப் பறந்து போனால் ரிஷப தேவரைப் பிடித்துவிடலாம் என்று எண்ணி எழும்பிப் பறந்தார். பாற்கடல் என்றும் இல்லாமல் பல மடங்கு நீண்டுவிட்டதோ என்று தோன்றியது அவருக்கு. பறக்கப் பறக்கத் தூரம் மாளவே இல்லை. பறப்பதென்றால் கருடஸ்வாமிக்கு அளவற்ற உற்சாகம். அதுவும் க்ஷீராப்திக்கு மேலே பறப்பது அவருக்கு நித்திய விளையாட்டு. இன்றோ,இதென்ன இப்படி? சிறகுகள் சேருமிடத்தில் தோள் பட்டையில் கொஞ்சம் வலியெடுக்கிறது போல் இருக்கிறதே! இந்தப் புதிய அநுபவம் முதலில் அவருக்கு விசித்திரமாக இருந்தது; மயக்கமோ என்று தோன்றியது; பிறகு வாஸ்தவமாகப்பட்டது. சிறிது நேரம் சிறகை அசைக்காமல் வானவெளியில் தூங்குவதுபோல மிதந்தார். சிறிது களைப்புத் தீர்ந்தது. மேலே பறக்க வேண்டுமே! பாற்கடலைக் கடந்து செல்லவேண்டுமே! தம் கூரிய திருஷ்டியால் பின்னே பார்த்தார். அதுவரையில் கண்ணுக்கே தெரியாமல் இருந்த அன்னம் சிறிய ஈயைப்போல நெடுந் தூரத்தில் பறந்துவருவது தெரிந்தது. முன்னால், ரிஷபதேவர் எவ்வளவு தூரம் போனாரோ என்ற எண்ணத்தோடு பறந்தார். இப்போதோ, 'இவன் வந்து விட்டானே' என்ற ரோசம் உந்தியது. பலங் கொண்ட மட்டும் சிறகுகளை மடக்கி விரித்து வானக்கடலில் ஒரு தாவுத் தாவினார்.

மனோவேகம் என்றுதான் சொல்லவேண்டும். அவ்வளவு வேகத்தில் நெடுந்தூரம் போய்விட்டார். ஆனால் சிறகுகளின் மூட்டுவாய்களிலே இப்போது இசிவு கண்டது. சிறிது ஆறுதலாக மிதந்தார். சிறகை விரித்த படியே மிதப்பதில் எப்போதுமே அவருக்குச் சிரமம் இல்லை. பூமியின்மேல் படுத்திருந்தால் நமக்குச் சிரமமோ முயற்சியோ இருக்குமா? அதுபோலத்தான் இருக்கும் முன்பு. ஆனால் என்ன ஆச்சரியம்! அப்போது அப்படி மிதப்பதற்குக் கூட முயற்சி வேண்டி யிருந்தது. 'சக்தி யில்லாமல் தத்தளிக்கும் நிலை ஒன்று உண்டு' என்பதைக் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை அவர். இப்போதோ, 'சக்தி நம்மிடமிருந்து குறைகிறது' என்பதை அணு அணுவாகத் தெரிந்துகொள்ளும் சந்தர்ப்பம் வந்துவிட்டது. 'என்ன இது! பறக்கின்றோம் என்ற நினைவே இல்லாமல் வானவெளியில் வட்டமிட்ட நாம் இன்று திடீரென் று முடமாகிவிட்டோமா?' என்று நினைத்தபோது, சுரீரென்று தோள்பட்டையில் வலியெடுத்தது.

'ஜல் ஜல்!' என்ற ஒலி அவர் காதில் விழுந்தது. அன்னம் வந்துகொண் டிருப்பது தெரிந்தது. மானம் தாங்க முடியவில்லை புள்ளரசுக்கு. மற்றொரு முறை மூச்சைப் பிடித்துக்கொண்டு வானக்கடலிலே தாவினார். இதோ அக்கரை அவர் கண்ணுக்குப் புலப்பட்டது. இனிமேல் உயிரைப் பிடித்துக்கொண்டாவது பறக்கலா மென்ற துணிவு வந்தது. ஆனால் சிறகு வேலை செய்ய வில்லை. உடம்பெல்லாம் ஒரே இசிவு. சிறகை யாராவது கழற்றிவைத்தால் தேவலை என்று தோற்றியது. பின்னால் திரும்பிப் பார்த்தபோது அன்னத்தைக் காணவில்லை. சிறிது ஆறுதல் உண்டாயிற்று. அடுத்த கணத்தில் மீண்டும் அன்னத்தின் சப்தம், சிலம்பு போன்ற ஒலி, காதில் விழுந்தது. இப்போது கீழேயிருந்து அந்தத் தொனி கேட்டது. ’சரி, தொலைந்தான். நாம் பட்ட பாட்டுக்கு இவன் எந்த மூலை? இந்தப் பாற்கடலுக்கு இரையாகிவிட்டான்' என்று எண்ணிய எண்ணத்திலே ஒரு துளி போலியான இன்பம் அவருக்குக் கிடைத் தது. ஆனால் உடனே இரண்டு விலாவிலும் சுரீரென்று வேதனை எழுந்தது. கடலைக் கடக்க வேண்டுமே! பந்தயம் ஜயித்தாலும் ஜயிக்காவிட்டாலும் கடலைக் கடந்து தரையில் போய்த்தானே நிற்கவேண்டும்? நடுக்கடலில் இளைப்பாற முடியுமா? பிராணனைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் பறக்கவேண்டியது அவசியமாகிவிட்டது.

புதிய மலைப்பு ஏற்பட்டது. சோர்வினால் உடம்பு கொஞ்சம் கீழே இறங்கியது. என்ன ஆச்சரியம்! அன்னத்தின் குரல் அவர் காதில் இப்போதும் விழுந்தது. தம் திருஷ்டியைக் கீழே செலுத்தினார். வெண்ணிறப் பாற்கடற் பரப்பிலே சுலபமாக அன்னத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பொன்னிறம் பெற்ற அதன் கொண்டை பளபளத்தது. அது கண்ணிலே பட்ட பிறகுதான் கருடதேவருக்கு அந்தச் சின்னஞ் சிறு பறவையின் இருப்பிடம் தெரிந்தது. அது ஏதோ வாயினால் சொல்லிக்கொண்டே இருக்கிறதே ! "அம்மா, கருணாகரீ" என்ற சப்தம், குழறுவதுபோலக் கருடன் காதில் விழுந்தது. கூர்ந்து கவனித்தார். ஆச்சரி யத்தின்மேல் ஆச்சரியம்! அன்னம் ஒய்யாரமாகப் பாற்கடல் திரையைத் தெப்பமாகவும் அம்பிகையின் திருநாமத்தைக் கோலாகவும் கொண்டு சுகமாக மிதந்து நீந்தி வருகிறது! அன்னம் அல்லவா அது? நீர்நிலைக்கு அஞ்சுமா?

கருடபகவானுக்கு நெஞ்சிலே இடி விழுந்தது போல் ஆயிற்று. எந்த வானவெளியைத் தம்முடைய ஏகபோக ராஜ்யமாக எண்ணி அரசுசெலுத்தி வந்தாரோ அந்த ஆகாசப் பரப்பு அவரை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அவர் தம் சொந்த முயற்சியினால் எதிரிட்டுப் பறந்தாலொழிய அந்தப் படுபாவியாகிய வானம் அவரைத் தள்ளிவிடக் காத்திருக்கிறது. கீழே அவருடைய நாயகருக்கு இல்லமாக உதவும் பாற்கடலோ தயாதாக்ஷிண்யமின்றி அலைக் கரங்களை ஆட்டி, "கீழே வந்தால் அமிழ்த்திக் கொன்று விடுவேன்" என்று கொக்கரிக்கிறது. நமக்கென்று இப்போது என்ன பலம் இருக்கிறது? அன்னக் குஞ்சு என்று அற்பமாக நினைத்தோமே! நமக்குச் சொந்தமான வானமும், நம் தெய்வத்துக்குச் சொந்தமான க்ஷீராப்தியும் நம்மைக் கைவிட்டபோது எதிர் நிற்க நமக்குச் சக்தியில்லையே! அன்று நமக்கு மிஞ்சியவர் இல்லை என்று இறுமாந்தோமே. அதோ சாந்தமயமாக விளங்கும் அந்த ஹம்ஸத்தை ஏளனம் செய்தோமே! இன்று நம் நிலை...' மேலே நினைக்க அவருக்கு உணர்ச்சி இல்லை. "அம்மா!" என்ற கோஷத்துடன் அவர் வலியற்று விழுந்தார்.

* * *

ஹம்ஸம் ஒன்றையும் கவனிக்கவில்லை. எல்லாவற்றையும் மறந்து அம்பிகையின் திருவடி ஒன்றையே தியானித்துக்கொண்டும், அவள் திருநாமத்தை ஜபித்துக்கொண்டும் பாற்கடலைத் தாண்டிக் கொண்டிருந்தது. வேகமாகவே சென்றது. பாற்கடலின் கரைக்கும் வந்துவிட்டது. அங்கிருந்து மெல்ல மெல்லப் பறந்து கைலாசத்துக்குமேலே போயிற்று அப்பா! என்ன சிரமமான காரியம்! அம்பிகையின் அந்தப்புரத்தை அடைந்தது. கருணையே உருவாகிய தேவி அங்கே அதை எதிர்பார்த்து நின்றுகொண் டிருந்தாள். அதைக் கண்டவுடன், "வா, என் கண்ணே!" என்று ஆவலுடன் எடுத்து மடியில் வைத்துக்கொண்டாள். உடம்பெல்லாம் தடவிக் கொடுத்தாள். அமுதமயமான அந்த ஸ்பரிசம் அன்னத்துக்குப் பரமானந்தமாக இருந்தது.

"குழந்தாய், நீ ஜயித்தாய். விநயம் வென்றது; ஆணவம் தோற்றது. தேவலோக ராஜ்யத்திலும் அடக்கத்துக்குத் தான் மதிப்பு உண்டு என்பதை இன்று உலகமெல்லாம் அறிந்துகொள்ளும். இனிமேல் நீ எனக்கு வாகனம் ஆவாய். உன் ஜாதியில் மற்றொன்று நான்முகனுக்கு வாகனம் ஆகட்டும். உன்னுடைய பெருமையைத் தேவர்கள் அறியட்டும். பூவுலகத்தினர் அறியட்டும். உன் பெயரால் ஒரு மந்திரம் இதோ வெளியிடுகிறேன். ஜபிக்காத மந்திர மாகிய அதற்கு அஜபா மந்திரம் என்ற பெயர் இருக்கும். உன் பேரால் ஹம்ஸ மந்திரம் என்றும் வழங்கும். மகாயோகிகளுடைய உள்ளத் தடத்திலே இந்த மந்திர உருவத்தில் நீந்தி விளையாடுவாயாக!

"இது மட்டுமன்று. பூலோகத்திலும் உன்னுடைய அம்சம் வெல்லட்டும். தரையில் செல்லும் வண்டியும் நீரில் செல்லும் கப்பலும் வானத்தில் செல்லும் விமானமும் இதுவரையில் பூவுலகத்தில் இருந்தன. அவற்றின் மதிப்பு இனி மங்கும். நிலத்திலும் வானத்திலும் நீரிலும் ஒருங்கே இயங்கும் விமானங்களே இனி உலகில் மதிப்பைப் பெறும். உன் அம்சமான அவற்றால் இனி உலகத்தார் போர் புரிவார்கள்; பிரயாணம் செய்வார்கள். ஹம்ஸமே, நீ வாழ்க!'

அன்னம் மெய்ம்மறந்து போயிற்று. சிறிது நேரம் கழித்து மெல்லக் கண் திறந்து அம்பிகையின் திருமுகத்தைப் பார்த்தது. "அம்மா, அவர்கள்..." என்று தயங்கித் தயங்கி ஆரம்பித்தது.

"அந்த ஆணவப் பிண்டங்களா? இங்கே வா” என்று சொல்லி வெளி மண்டபத்துக்கு அழைத்துச் சென்றாள் தேவி. "அம்மா என்று அலறி விழுந்ததால் இவற்றை இங்கே கொண்டுவரச் செய்தேன்'' என்று சொல்லிக் காட்டினாள், அன்னத்துக்கு. மூர்ச்சை போட்ட நிலையில் உடம்பெல்லாம் பாலும் ரத்தமும் சேர்ந்து கசிய ரிஷபமும் கருடனும் கிடந்தன.

அன்னம் துணுக்குற்றது. அதன் உள்ளம் நெகிழ்ந்தது. "அம்மா, ஒரு வரம் கேட்கிறேன்" என்று தீனமான குரலோடு சொல்லியது.

''கண்ணே, கேள், தைரியமாகக் கேள்" என்றாள் தாய். "இவர்களை மறுபடியும் பழைய நிலையிலே வைத்துவிட வேண்டும். மகா மூர்த்திகளுக்கு வாகனமாக இருந்த புண்ணியம் படைத்தவர்களல்லவா? இந்த ஏழைக்கு கருணை நிரம்ப உண்டென்பதை நினைக்கும்போது அடியேனுடைய புல்லிய நெஞ்சில் சிறிது அகங்காரத்தின் பொறி எழுகிறது. ஆகையால் எல்லோருடைய அறிவிலும் ஒரு படலத்தை விரித்து, இந்தச் சம்பவம் அடியோடு மறந்துவிடும் படியாகக் கருணை பாலிக்க வேண்டும். ”

* * *

''ஓம்!" என்ற சம்மதத் தொனி எழும்பியது; பிறகு ஒரே மௌனம்! "ஹம்ஸஸ் ஸோஹம் - ஹம்ஸஸ் ஸோஹம் - ஹம்ஸஸ் ஸோஹம் - ஹம்ஸோஹம்” என்ற இனிய நாதம் அதனூடே நாரதர் வீணையிலிருந்து எழுந்தது.

--------------------

தெரிவு, வெள்ளுரை ஆக்கம்: நா. கணேசன் https://nganesan.blogspot.com
This short story appeared in the book, 'aRunta tanti', 1947. So, it must have been written in the early 1940s.

 

 

கேட்டி (ஹூஸ்டன்) தமிழ்ப் பள்ளி விழா

மார்ச் 5, ஞாயிற்றுக்கிழமை, கேட்டி (ஹூஸ்டன்) தமிழ்ப் பள்ளி விழா



வாணி ஜெயராம் - கண்ணதாசன், சந்தித்தேன், சிந்தித்தேன்

பெற்றோர் வைத்த இயற்பெயர் கலைவாணி. கலைவாணியாகவே வாழ்ந்து மறைந்த தாமரைப்பூடணம் வாணி ஜெயராம் பற்றிக் கவிஞர் கண்ணதாசன் ‘சந்தித்தேன் சிந்தித்தேன்’ நூலில் எழுதின கட்டுரை, (1982, வானதி பதிப்பகம்)


 


 


 

 











12.2.2023, தினத்தந்தியில் ....


தமிழ்நாடு என்ற பெயர் - 2000 ஆண்டுகளில் தமிழில் முதன்முதலாய்க் கல்வெட்டுகளில்!

 தமிழ்நாடு என்ற பெயர் - 2000 ஆண்டுகளில் தமிழில் முதல் கல்வெட்டுகள்
-------------------------------------------------------------------------------------------

பாரத ரத்தினம் சி. சுப்பிரமணியம் சென்னை மாகாண சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு என்ற பெயரை அதிகாரபூர்வமாகப் பயன்படுத்தலாம் என 24 பிப்ரவரி 1961-ல் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அறிவித்தார். 'டூச் லாண்ட்' (Deutschland) என்று ஜெர்மனியில் அழைக்கிறார்கள். ஜெர்மனிக்கு வெளியே டூச்லாண்ட் (Deutschland)  என்றால் தெரியாது. ஜெர்மனி என்கிறோம். அதுபோல, தமிழ்நாடு என நம் மாநிலத்திலும், வெளியே ஆங்கில அறிக்கை, கடிதங்கள் போன்றவற்றில் Madras State என்றும் பயன்படுத்தலாம்’ எனச் சட்டமன்றத்தில் பேசினார். இதற்காக, அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டியதில்லை என்றார் சிஎஸ். அதன் பின்னர் தான் தமிழ்நாடு என்ற பெயர் கல்வெட்டுகளில் தமிழ்நாடு மாநிலத்தில் பொறிக்கப்படலாயிற்று. அவ்வகையில் கிடைத்துள்ள இரண்டு கல்வெட்டுப் பற்றிய கட்டுரையில் 20-ம் நூற்றாண்டின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தமிழ்நாடு என்ற பெயர் ஆவணங்களிலும், கல்வெட்டுகளிலும் பதிவாகும் நிகழ்வுப் பின்புலத்தை - இப்பெயரின் 2000 ஆண்டுக்கால வரலாற்றை - ஆராய்ந்துள்ளேன். இலக்கியங்களிலே தமிழ்நாடு, தமிழகம் என்று இருந்தாலும் தமிழ்நாடு என்ற பெயர் கல்வெட்டில் வர 2000 ஆண்டு ஆனது. தண்டமிழ்நாடன் என்ற சொல்லாட்சியை மூவேந்தர் நாடுகளை ஒருகுடைக்கீழ் ஆண்ட சோழன் மெய்க்கீர்த்தியில் காண்கிறோம். ஆனால், தமிழ்நாடு என்று சிலாலிகிதங்களில் முதன்முதலாய் 1962-ல் இருந்துதான் காண்கிறோம்.

கரூர் சஞ்சய் பொன்னுசாமி என் அரிய நண்பர். நான் கேட்டுக்கொண்டதன் பேரில், தோ. மு. நல்லசாமி குடும்பத்தாரைத் தொடர்புகொண்டு அக் கல்வெட்டு இருக்கும் இடத்தைத் தெரிந்துகொண்டு, நல்ல ஒளிப்படங்கள் எடுத்து அனுப்பியுள்ளார். தோட்டக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ள அலங்காரவளைவு அருகே, இக்கல்வெட்டை தமிழக முதல்வர் திரு. கு. காமராஜை அழைத்துத் திறந்துவைக்கச் செய்துள்ளார் அப்போதைய காங்கிரஸ் எம்.எல்.ஏ தோ. மு. நல்லசாமி.  இந்தியாவின் பல்வேறு சமஸ்தானங்களை இணைத்துச் சாதனை புரிந்த சர்தார் வல்லபாய் பட்டேல் ஞாபகார்த்தக் கட்டிடம் எனப் பெயர் வைத்துள்ளார்கள். பல நாடுகளை நாம் அறிவோம். ‘நாடு ஆகு ஒன்றோ? காடு ஆகு ஒன்றோ?’ - ஔவை. தமிழர்கள் அனைவரும் தமிழ்நாடு என்று பயன்படுத்த மதறாஸ் மாகாண அரசாங்கம் அறிவுறுத்திய பின்னர் ஏற்பட்ட முதல் கல்வெட்டு இது. தமிழ் மண்டிலம் ஐந்து என்றார் திருமந்திரத்தில் திருமூலர் (1) சேர நாடு (2) சோழ நாடு (3) பாண்டிநாடு (4) தொண்டைநாடு (5) கொங்குநாடு. கொங்குநாட்டிலே கூட உள் நாடுகளாக 24 நாடுகள் உள்ளன. எல்லா நாடுகளையும் பாரதத்தில் இணைத்த சர்தார் வல்லபாய் பட்டேல் போல், தமிழ் நாட்டின் எல்லா உண்ணாடுகளையும் இணைத்துத் தமிழ்நாடு என வழங்குமாறு 1962-ம் ஆண்டின் தோட்டக்குறிச்சிக் கல்வெட்டு கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது. சர்தார் வல்லபபாய் பட்டேல்:
https://en.wikipedia.org/wiki/Vallabhbhai_Patel
https://en.wikipedia.org/wiki/Vallabhbhai_Patel#/media/File:Statue_of_Unity_in_2018.jpg

> அமரர் சி சுப்பிரமணியம் நிதியமைச்சராக இருந்தபோது மெட்ராஸ் என இருந்த வார்த்தைகளை
> அகற்றிவிட்டு நிதிநிலை அறிக்கை முழுக்க தமிழ்நாடு என மாற்றச் சொல்லி உத்தரவிட்டார் என்பதை
> அப்போதைய அரசுப் பணியில் இருந்த அமரர் அறிஞர் அ ச ஞானசம்பந்தன் குறிப்பிட்டு இருக்கிறார்.
> மரபின் மைந்தன் முத்தையா.

தமிழ்நாடு - ஓர் அரிய கல்வெட்டு (16-7-1962), தோட்டக்குறிச்சி (கரூர்)
http://nganesan.blogspot.com/2023/01/tamilnadu-inscription-thottakurichi.html

1960களில் தோட்டக்குறிச்சி (1962) மற்றும் திருநெல்வேலி (1966) கல்வெட்டுகள் போலவே, இன்னும் சில இருக்கும். தமிழ்நாட்டார் தேடினால், தமிழ்நாடு என்ற பெயருடன் 1960களில் வெளியான கல்வெட்டுகள் மேலும் கிட்டும் என்பது திண்ணம். உங்களுக்கு அவ்வாறு கிடைத்தால் அனுப்பவும். நன்றி.

நா. கணேசன்

தமிழ்நாடு எனக் கல்லில் பொறித்த முதற்கல்வெட்டு, 1962



 

https://images.news18.com/tamil/uploads/2021/08/kalvettu.jpg
https://tamil.news18.com/news/tamil-nadu/karur-district-todays-dilapidated-condition-of-the-school-opened-by-former-cm-kamarajar-aru-539785.html

இக் கல்வெட்டின் முக்கியத்துவம், வரலாறு பற்றி விரிவாகப் பார்க்கலாம்:
http://nganesan.blogspot.com/2023/01/tamilnadu-inscription-thottakurichi.html



This weekend I was reading two Tamil books: (1) T. K. Shanmukam (1912 -1973), *enatu nATaka vAzkkai*, 1972, vAnati patippakam (2) C. Subramaniam, *tamizaal muTiyum*, 1962, vaLLuvar paNNai. Both authors record the beginning and the end of the phase respectively of how the name, Tamil Nadu came to replace Madras State officially in Govt. documents and communications and correspondence from the Govt. When the Govt. announced in the State Legislature that Tamil Nadu can be used, it is official announcement. In the mentioned book written in 1962, CS always uses the name Tamil Nadu, never Madras Rajyam, Chennai Arasangam etc., In February 1961, Finance Minister CS announced in TN assembly that Tamil Nadu name will be used. And, in that year itself, inscriptions started appearing in Official functions where Tamil Nadu ministers attended. For example, PWD minister, Sri. Kakkan's meeting in 1961 at Pukaziyuur. Sincere thanks to Sri. Aravindh, Chennai who has located the historic inscription of 1961 where Tamil Nadu gets inscribed for the first time in epigraphs. 

அ. ச. ஞானசம்பந்தன் தமிழக அரசின் பதிப்புத்துறை, செய்தித்துறைகளில் உயர்பதவி வகித்தவர். பேரா. அ. ச. ஞா. 1960களில் காங்கிரஸ் ஆட்சி ஆவணங்களில் தமிழ்நாடு என்னும் பெயர் பயன்படுத்தத் துவங்கியதைப் பதிவு செய்துள்ளார்கள். https://tamil.wiki/wiki/அ.ச.ஞானசம்பந்தன் "சென்னை அகில இந்திய வானொலியில் நாடகத் தயாரிப்பாளராக பணியேற்றார். 1959 முதல் தமிழ்நாடு அரசின் செய்தித்துறையின் மொழிபெயர்ப்புத்துறை இணை இயக்குநராக பணியாற்றினார். தமிழ் வெளியீட்டுத்துறை இணை இயக்குநராகவும் பணியாற்றினார். அ.ச. ஞானசம்பந்தன் 1967 முதல் 1970 வரை தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநராகப் பணியாற்றினார். 1971-ல் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் மதுரை பல்கலை துணைவேந்தரானபோது அவரது அழைப்பின்பேரில் அ.ச. ஞானசம்பந்தன் மதுரை பல்கலை தமிழ்த்துறை தலைவராக பணியில் சேர்ந்தார். 1973-ல் ஓய்வுபெற்றார். " சங்க காலம் தொடங்கி இலக்கியங்களில், பாரதியார் செந்தமிழ்நாடெனும் போதினிலே என்னும் பாடலில் பலமுறை *தமிழ்நாடு* என முன்னரே சொல்லியுள்ளார். நவம்பர் 1921-ல் இருந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல்படத் தொடங்கிற்று. கன்மேலெழுத்தாய் *1961-ல் தமிழ்நாடு* முதன்முறையாக எழுதப்படலாயிற்று. திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு (திசம்பர் 16, 1945 - சனவரி 26, 1957[1]) என்பது முந்தைய இந்திய மாநிலமான ‎திருவாங்கூர்-கொச்சி மாநிலத்தின் அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். https://ta.wikipedia.org/wiki/திருவாங்கூர்_தமிழ்நாடு_காங்கிரசு

 
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப் போல் காணுமே- அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர்.
                             - ஔவை அருளின மூதுரை

 Let me first give how Ma. Po. Sivagnanam proposed the use of Tamil Nadu in 1948 and Sri. K. Kamaraj opposed it. This seems to be the reason why EVeRaa preferred the use of Tamilakam (1949) as Ma.Po.Si went for Tamil Nadu in 1948. In the 1948 Coimbatore Tamil MaakaaNa Congress, CS, C. P. Subbiah, Ubayathulla ... requested Kamaraj to allow MaPoSi to tell his views. When the time came (1961), it was CS who announced and implemented Tamil Nadu in the then Govt. documents and correspondence. Anna changed the name officially in English also after DMK came to power. For this Indian Constitution had to be changed to drop Madras State to Tamil Nadu. Nowadays, even the Indian Prime Minister often talks of Tamil's antiquity and special position in India and its history. ~NG 

------------------ 

தமிழ் மாகாண 43வது அரசியல் மாநாடு ( டி. கே. சண்முகம், எனது நாடக வாழ்க்கை, 1972, வானதி பதிப்பகம்) 1948 ஜனவரியில் தமிழ் மாகாண 43-வது அரசியல் மாநாடு கோவையில் நடைபெற்றது. அந்த மாநாட்டு நிதிக்காக 17-1-48இல் நாங்கள் உயிரோவியம் நாடகம் நடித்து அதன் வசூல் ரூ. 1448.00 முழுவதையும் மாநாட்டின் தலைவர் திரு காமராஜ் அவர்களிடம் கொடுத்தோம். முதல் அமைச்சராக இருந்த திரு ஒமந்துர் ராமசாமி ரெட்டியார் அன்று தலைமை தாங்கிப் பேசினார். தலைவர் காமராஜ் அவர்களும் பாராட்டினார். நாடக ஆசிரியர் திரு நாரண.துரைக்கண்ணன் அவர்களுக்கும் பொற் பதக்கமும் வழங்கினார். 

*இருபெரும் தலைவர்கள் போட்டி* 19.1-48இல் நடைபெற இருந்த அந்த மாநாட்டுத்தலைவர் தேர்தலிலே தான் திரு ம. பொ. சி. அவர்கட்கும் திரு காமராஜ் அவர்கட்கும் பலத்த போட்டி ஏற்பட்டது. திரு ம. பொ. சி. அவர்கள் பெறும் பதவிக்காகப் போட்டியிடவில்லை. அதை அவரே தமது ‘தமிழ் முரசு’ இதழில் விளக்கமாக எழுதியிருந்தார். வேங்கடமலை குமரி முனைக்குள் அடங்கிய தமிழ் மாகாணம அமைய வேண்டும் என்பதற்காகவே திரு ம. பொ. சி போட்டியிட்டார். ஆனால் அவர் வெற்றி பெறவில்லை. மூன்றில் ஒரு பங்கு வாக்குகளே அவருக்குக் கிடைத்தன. கிடைத்த வாக்குகள் 111. காங்கிரஸ்காரராகிய திரு ம. பொ. சி. தோல்வியடைந்ததிைக், கேலி செய்யும் முறையில் அப்போது நடைபெற்று வந்த ஒரு. காங்கிரஸ் நாளிதழ் ‘கிராமணியாருக்குப் பட்டை நாமம்’ கட்டம் கட்டிப் பிரசுரித்திருந்தது. 

*‘கிராமணியாருக்குப் பட்டை நாமம்’* என்ற தலைப்பைப் படித்ததும் என் மனம் வருந்தியது. ஒரு காங்கிரஸ் நாளிதழ் மற்றொரு காங்கிரஸ் ஊழியர் தோல்வி அடைந்ததை இவ்வாறு நையாண்டி செய்திருந்தது எனக்கு வியப்பாகவே இருந்தது.

*பக்தவத்சலனார் தீர்மானம்* 1948 ஜனவரி 18,19இல் தமிழ் மாகாண அரசியல் மாநாடு சிறப்பாக நடைபெற்றது. அம்மாநாட்டில் நானும் கலந்து கொண்டு துவக்கத்தில் பாடல்கள் பாடினேன். இரண்டாம் நாள் மேடையில் அன்றைய முதல் அமைச்சர் திரு ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களும், அன்றையத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரும், மாநாட்டின் தலைவருமாகிய திரு காமராஜ் அவர்களும், திரு ஜி. டி. நாயுடு போன்ற உள்ளுர்ப் பிரமுகர்களும், ஏனைய அமைச்சர்கள் சிலரும், திரு ம. பொ. சி. அவர்களும் வீற்றிருந்தார்கள். நானும் மேடையில் அமர்ந்திருந்தேன். மாநாட்டிலே அமைச்சர் பக்தவத்சலம் அவர்கள் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்கள். இந்தியாவில் மொழி வழிப்பட்ட மாகாணங்கள் அமையும் போது தமிழர் பெருவாரியாக வாழும் தொடர்ந்தாற்போலுள்ள பகுதிகளைக்கொண்ட தனி மாகாணம் அமைக்க வேண்டும் என்று அத்தீர்மானம் கூறியது. இது திரு ம. பொ. சி. அவர்களையும் அவரை ஆதரித்த காங்கிரஸ் காரர்களையும் திருப்திப் படுத்துவதற்காகவே கொண்டுவந்த தீர்மானம். ஆனால் தீர்மானம் மொழி வழி மாகாணங்கள் அமைக்க வேண்டுமென்று உறுதியாகச் சொல்லாமல் அமையும்போது என்று சொல்லப்பட்டது குறித்து திரு ம.பொ.சி. அதிருப்தியடைந்தார். அவர் எழுந்து தம்முடைய கருத்தை அறிவித்தார். அத்தோடு, *வடக்கே வேங்கடமலையும் தெற்கே குமரி முனையும் உள்ள தமிழ்நாடு வேண்டும்* என்ற திருத்தத்தைப் பிரேரபித்தார். *ஆம்; பின்னால் நடைபெற்ற வட எல்லைப் போராட்டத்திற்கு அன்றே ம. பொ. சி. வித்திட்டா ரென்றே நினைக்கிறேன்.* மாநாட்டுத் தலைவர் *திரு காமராஜ், திரு. ம. பொ. சி. அவர்களின் திருத்தத்தில் வேங்கடம், குமரிமுனை ஆகிய எல்லைகளைப்பற்றிய பகுதியை ஏற்றுக் கொண்டு தமிழ்நாடு கோரும் பகுதியை நிராகரித்தார். *

*கூச்சலும் குழப்பமும்* இந்தியாவிலிருந்து பிரிந்துபோகக்கூடிய ‘தனித் தமிழ்நாடு’ ம. பொ. சி. கேட்பதாக, அவர் பொருள் கொண்டு விட்டார். *காரணமின்றி இவ்வாறு மாதாட்டுத் தலைவர் தமிழ்நாடு கோரும் பகுதியை நிராகரித்தது எனக்கு மட்டுமல்ல, மாநாட்டில் கூடி யிருந்த பிரதிநிதிகள் யாவருக்கும் வருத்தமாக இருந்தது.* தலைவர் காமராஜ் அவர்களின் தவறான கருத்தைப் போக்குவதற்காக நிராகரிக்கப்பட்ட பகுதிக்கு விளக்கம் தர ம.பொ.சி முனைந்தார். ஆனால், தலைவர் காமராஜ் அவரைப் பேசவிடவில்லை. மேடையில் உட்கார்ந்திருந்த எனக்கு மிகவும் ஆத்திரமாக இருந்தது. என்னைப்போல் பிரதிநிதிகள் பலரும் ஆத்திரமடைந்தனார். ‘கிராமணியார் பேசட்டும், கிராமணியார் பேசட்டும்’ என்று சபையில் ‘பெருங்கூச்சல் எழுந்தது. ஆம், திரு ம. பொ. சி. அவர்களைக் கிராமணியார்’ என்றுதான் காங்கிரஸ்காரர்கள் அழைப்பது வழக்கம். அப்போதும் காமராஜர் அவரைப் பேச அனுமதிக்கவில்லை. ம. பொ. சி ஒலிபெருக்கியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இடத்தை விட்டு நகராமல் சிங்கம்போல் நின்றார். ஒன்றுபட்ட இந்தியாவைப் போற்றி வரும் ம. பொ. சி. தனி நாடு பிரித்துத் துண்டாட விரும்புகிறார் என்று காமராஜர் பொருள்கொண்டதை யாரால்தான் பொறுக்கமுடியும்? சபையில் கூச்சல் அடங்கவில்லை. பதினைந்து நிமிடங்கள் ஒரே குழப்பமாய் இருந்தது. மேடையில் இருந்தவர்கள் சிலரும், குறிப்பாகத் திரு. சி.சுப்பிரமணியம், திரு சி. பி. சுப்பையா, காலம் சென்ற ஜனாப் உபையத்துலலா முதலியோரும் கிராமணி யாரைப் பேச விடுங்கள் என்று தலைவர் காமராஜரைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்கள். முடிவில் ம. பொ. சி. பேச அனுமதிக்கப் பட்டார். 

 *கட்டுப்பாட்டைக் காத்த கண்ணியர்!* “நான் கேட்பது இந்தியாவிலிருந்து பிரிந்து போகும் தனி நாடல்ல” என்பதை விளக்கினார். அப்போதும் பிடிவாதமாகத் திருத்தத்தை ஏற்க மறுத்தார் காமராஜர். மீண்டும் பெரும் குழப்பம் ஏற்பட்டது. அதற்குள் விபரீதம் ஏற்படாமலிருக்கப் போலிஸ் லாரிகள் வந்து பந்தலைச் சுற்றி அணிவகுத்து விட்டன. ஆத்திரப்பட்ட பிரதிநிதிகள் கூட்டம் ஒன்றுக்கொன்று மோதிக் கொள்ளும் நிலையில் இருந்தது. பலாத்காரத்தில் இறங்கிவிடும் அறிகுறிகள் தென்பட்டன. இது கண்ட ம. பொ. சி. மீண்டும் ஒலிபெருக்கி அருகில் வந்து நின்று “தமிழ்ப் பெரு மக்களே! நான் காங்கிரஸ்காரன். அதன் கட்டுப்பாட்டை விரும்புகின்ற ஒரு படைவீரன். நான் தலைவரின் நிராகரிப்பை ஏற்கவில்லையென்றாலும், அதனைத் தொடர்ந்து எதிர்ப்பதன் மூலம் இந்தமாநாடு குழப்பத்தில் கலைவதை விரும்பவில்லை. என்ன ஆதரிக்கும் அன்பர்கள் இப்போது என் வேண்டுகோளை ஏற்று, அமைதி காக்குமாறு வேண்டுகிறேன். தலைவர் விருப்பம்போல் நடத்திக்கொள்ளலாம்” என்று கெம்பீரமாகக் கூறிவிட்டுத் தம் இடத்தில் வந்தமர்ந்தார். மேடையிலிருந்த பலரும் அவரைப் பாராட்டினார். தலைவர் காமராஜ் அவர்களும் கட்டுப்பாடு காத்த ம.பொ. சி அவர்களைப் பாராட்டினார். அந்த நிலையில் குழப்பத்திற்குக் காரணமாயிருந்த அந்த ஒரு தீர்மானத்திற்கு மட்டும் மறுநாள் காலை ஷண்முகா தியேட்டரில் மாநாட்டைக் கூட்டி அதன் மீது ஒட்டெடுத்து முடிவு கூறப் போவதாகக் காமராஜ் அறிவித்தார். ஆனால் அப்படி ஒரு மாநாடு நடைபெறவே இல்லை. அன்று ம. பொ.சி. அவர்கள்காட்டிய உறுதியும்,கொள்கைப் பற்றும், நாட்டுப் பற்றும் எனக்கு அவர்பால் இருந்த மதிப்பை மேலும் உயர்த்தின. மறுநாள் ஜி. டி. நாயுடு அவர்கள் இல்லத்திற்கு நாங்கள் சென்றிருந்தபோது, “நீங்கள் ஒலிபெருக்கியைப் பிடித்துக் கொண்டு அஞ்சா நெஞ்சுடன் சிங்கம்போல் நின்ற நிலையைக் கண்டு நான் உங்களைக் காதலித்து விட்டேன்” என்று கூறினார் நாயுடு. திரு ம.பொ.சி.க்கு நிதி திரட்ட வேண்டுமென்று 1948இல் திரு சின்ன அண்ணாமலை முயற்சி செய்தார். கோவை தேசபக்தர் திரு சுப்ரி மூலம் 500 ரூபாய்கள் நிதி திரட்டியதாக நினைவு.இதைக் குறித்து திரு ம. பொ. சி. எனக்குக் கடிதம் எழுதினார். “இது என் அனுமதியில்லாமல் நடைபெறுகின்றது. இந்த முயற்சியை நான் விரும்பவில்லை” என்று அறிவித்திருந்தார். இதன் பிறகு திதி திரட்டும் முயற்சி கைவிடப்பட்டது. அப்போது ம. பொ. சி. அவர்களின் ஐம்பதாண்டு நிறைவுநாளில் நானே வரவேற்புக் கழகத் தலைவராயிருந்து நிதி திரட்டிக் கொடுத்துக் கெளரவிக்க வாய்ப்பு ஏற்படுமென்று சிறிதும் எண்ணவே இல்லை. T. K. Shanmukam 

 ஆக,  சென்னை ராஜ்ஜியம் போன்றவைகளுக்குப் பதிலாக, தமிழ்நாடு என்ற பெயரை அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தலாம் என்று நிதியமைச்சர் சி. சுப்பிரமணியம் 24-2-1961-ம் தேதி தமிழ்நாட்டுச் சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அறிவித்தார். அது முதல், அரசு உருவாக்கும் தமிழ் ஆவணங்களில், கடிதங்களில் “தமிழ்நாடு” என்ற பெயர் பயன்படலாயிற்று. தமிழ்நாட்டு அரசாங்க மந்திரிகள் பங்கேற்கும் விழாக்களில் தமிழ்நாடு முதலமைச்சர் கே. காமராஜ், அமைச்சர் கக்கன், சபாநாயகர் செல்லப்பாண்டியன், ... என்று அறிவிக்கும் கல்வெட்டுகள் பதியப்பட்டன. 2300 ஆண்டுத் தமிழ்க் கல்வெட்டு வரலாற்றில் தமிழ்நாடு என்று பதிக்கப்பெறுவது முதன்முதலாக 1961-ல் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வெட்டுகளில் நான்கினை அடுத்த பதிவில் தருகிறேன்.

8-8-1957-ல் காமராஜ் கலந்துகொண்ட வாஞ்சிநாதன் மணிமண்டபக் கல்வெட்டு, இதில் சென்னை அரசாங்கம் என்றுள்ளது.

தமிழகம், தமிழ்நாடு இரண்டும் உள்ள கல்வெட்டு, 1973, காஞ்சிபுரம்.

ஆங்கிலக் கல்வெட்டுகளில், Madras State என்றே உள்ளது. அது Tamil Nadu என்று ஆங்கிலத்திலும் எழுதுமாறு 1967-ல் இருந்து திமுக அரசு முயற்சி எடுத்து வெற்றி கண்டது. டெல்லி பாராளுமன்றத்தில் ஒப்புதல் கிடைத்தது.




தமிழ்நாடு - ஓர் அரிய கல்வெட்டு (16-7-1962), தோட்டக்குறிச்சி (கரூர்)

 
தமிழ்நாடு - ஓர் அரிய கல்வெட்டு (16-7-1962)
-------------------------------------------------------------

பொதுவாக, தமிழ்நாடு என்றோ தமிழகம் என்றோ அழைப்பது வழக்கமாகிவிட்டது. Both are synonyms. ஆய்வேடுகளில், கேரளம், தமிழர் வாழும் இலங்கைத் தீவுப் பிரதேசம், தமிழ்நாடு மாநிலம் (இந்தியா) மூன்றையும் சேர்த்து தமிழகம் என அழைப்பதுண்டு. உ-ம்: பேரா. ஆ. வேலுப்பிள்ளை, பீற்றர் ஷல்க் (உப்சாலா பல்கலை, ஸ்வீடன்) ஆய்வு வெளியீடுகள் ...

தமிழகம் எனப் புறநானூற்றில் சொல்லப்பட்டுள்ளது: *வையக வரைப்பில் தமிழகம் கேட்ப* - புறம் 168. தமிழ்நாடு எனப் பரிபாடல் குறிக்கிறது:  *தண்தமிழ் வேலி தமிழ்நாட்டு அகம் எல்லாம்* - பரிபாடல். “இமிழ்கடல் வரைப்பின் தமிழகம் அறியத், தமிழ் முழுது அறிந்த தன்மையன் ஆகி” - சிலப்பதிகாரம்.

மூவேந்தர்களின் நாடுகளில் வாழ்ந்தாலும், நும் நாடு யாது என்றால் தமிழ்நாடு என்றல் என உறுதிபட முதலில் சாற்றியவர் தொல்காப்பியம் முழுமைக்கும் உரைவரைந்த இளம்பூரண அடிகள் ஆவார். http://nganesan.blogspot.com/2009/11/ilampuranar.html

க. ப. அறவாணன், சைனரின் இலக்கணப் பணி. பக். 135:
“இளம்பூரணர் தொல்காப்பிய உரையாசிரியர்களுள் முதன்மையானவர், தலைமையானவர், சைனர், துறவி. கி.பி. 11-ம் நூற்றாண்டில் தொல்காப்பியத்தைத் தேடிக் கண்டறிந்து ஆராய்ந்து நூல் முழுமைக்கும் உரை இயற்றியவர் இவர் ஒருவரே. சைனராகிய இவர்

  “செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்”
என்ற நூற்பாவிற்கு உரை எழுதி எடுத்துக் காட்டும் நல்குகிறார். அவ்வெடுத்துக் காட்டுப் பின்வருமாறு:

நும் நாடு யாது என்றால் தமிழ்நாடு என்றல்.

   சைனராய்ப் பிறந்து தலைமை வாய்ந்த தமிழ் நூலிற்கு உரைவகுத்த இளம்பூரணர், அன்று பிரிந்து கிடந்த சேர சோழ பாண்டிய நாடு என்று முப்பிரிவுகளை விடுத்து “என் நாடு தமிழ்நாடு” என்று நெஞ்சுவக்க, உரிமை மணக்க, கை இனிக்க எழுதுகிறார். இவரைப் போலவே சைனராகிய நேமிநாத உரையாசிரியர் (கி.பி. 11-ம் நூற்றாண்டு) நேமிநாத ஆறாம் நூற்பாவுக்கு உரை எழுதும்போது பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

     பாலே திணையே வினாவே பகர்மரபே
     காலமே செப்பே கருதிடமே போலும்
     பிறழ்வும் சினைமுதல் ஒவ்வாப் பிறசொல்
     உறழ்வும் சிதைந்த உரை (நேமிநாதம், சொல். 6)

இவ்வெண்பாச் சூத்திரத்திற்கு உரை எழுதுமிடத்து, அதில் “நும் நாடு யாது என்றால் தமிழ்நாடு என்றல்” என்றது ”வினாவாலும் செப்பாலும் வழுவாமல் வந்தது” என்று குறிப்பிடுகிறார்.

    சைனராகிய இவ்விருவரது குறிப்புகளும் மிகவும் முதன்மை வாய்ந்தவை.”

20-ம் நூற்றாண்டில், தமிழ்நாடு என அதிகாரப்பூர்வமான வரலாறு
-----------------------------------------------------------------------------------------------

https://www.newindianexpress.com/states/tamil-nadu/2018/jan/20/dravida-nadu-to-tamil-nadu-evolution-of-the-states-identity-1759188.html

https://www.kalaignarseithigal.com/opinion/2019/11/01/who-are-the-backbones-for-origin-of-tamilnadu-state
https://tamilthesiyan.wordpress.com/2018/07/18/தமிழ்நாடு-பெயர்-மாற்ற-தீ/

“29.11.1955இல் ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகத்தின் செயற்குழுவில் “தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்தை – மெட்ராஸ் ஸ்டேட்” என்றழைக்கப்படுவதை எதிர்க்கிறது. மத்திய மாநில அரசுகள் ராஜ்ஜியத்தின் பெயரைத் தமிழ்நாடு என்று பெயரிடப்பட வேண்டும் ” என்று அழுத்தமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு மொழிவழி மாநிலமாக 1956 நவம்பர் 1இல் அறிவிக்கப்பட்டாலும் அவ்வாண்டின் தொடக்கம் முதலே தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கானப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
[...]
முதுபெரும் விடுதலைப் போராட்ட வீரரும், காந்தியவாதி என்று அறியப்பட்ட க.பெ. சங்கரலிங்கனார் அவர்கள் 27.07.1956இல் விருதுநகரில் தமிழ்நாடு பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கினார். காங்கிரசு கட்சி அவரின் போராட்டத்தை கண்டுகொள்ள மறுத்தது.

காங்கிரசின் இந்தப்போக்கு குறித்து வேதனைப்பட்ட சங்கரலிங்கனார் அவர்கள் சாகும் தருவாயில், ஜனசக்தி துணையாசிரியர் ஐ. மாயாண்டி பாரதிக்கு கடிதம் எழுதினார். அதில் “காங்கிரஸ் ஆட்சியின் கொடுமை கடுமையாகி விட்டது. காந்தியம் மடிந்து கொண்டு வருகிறது. துரோகிகள் ஆட்சியில் உயிரோடு வாழ மனமில்லை” என்று எழுதினார். அவரை அண்ணா, ஜீவானந்தம், ம.பொ.சி. ஆகியோர் சந்தித்து உண்ணாநிலையை கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர். அவரோ உண்ணாநிலையை கைவிட மறுத்து 79ஆவது நாளில் உயிர் நீத்தார்.”  இன்றைய தமிழ்நாட்டின் எல்லை அமைந்த நாள் நவம்பர் 1, 1956. அதாவது, தமிழ்நாடு பிறந்த நாள் நவம்பர் 1 ஆகும். தமிழகம் தனியரசு ஆகும் நாள் எனக் கொண்டாடினார் சிலம்புச்செல்வர் மபொசி கட்சியினர்.

தமிழ்நாட்டின் அமைச்சர் சி. சுப்பிரமணியம் முதன்முதலாக, 24 பிப்ரவரி 1961 அன்று தமிழகச் சட்டமன்றத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என ஆங்கிலத்தில் உள்ள இடத்தில் எல்லாம் “தமிழ்நாடு” என எழுதலாம், பேசலாம் என்று அறிவித்தார். அதுவே பின்னர் இந்திய மாநிலப் பேராக நிலைகொண்டது. அறிஞர் அண்ணா தீர்மானம் நிறைவேற்றினார்.

பாரதரத்தினம் சிஎஸ் காமராஜ் கேபினெட் மந்திரி. இருப்பினும், முதலமைச்சர் காமராஜர் தமிழ்நாடு என்பது வெளிநாட்டாருக்குப் புரியுமா என்ற கேள்விகளை பொதுமக்கள் கூட்டங்களில் அவ்வப்போது எழுப்பிக்  கோண்டிருந்தார்.
“தமிழ்நாடு என்ற பெயரின் பின்னணி குறித்துப் பேசிய அவர், ”தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கை. காங்கிரஸ் கட்சியினர் மெட்ராஸ், மதராஸ், சென்னை என மூன்று பெயர்களைப் பயன்படுத்தி வந்தனர். இதை மாற்றி தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்று சொன்னபோது, வேறு நாட்டினர் தவறாகப் புரிந்து கொள்வார்கள் என்று காமராஜர் சொன்னார்.

அந்தக் காலகட்டத்தில் ப்ளீடிங் மெட்ராஸ் என்று ஒரு துணி இங்கிருந்து ஏற்றுமதியாகிக் கொண்டிருந்தது. எனவே மெட்ராஸ் என்றால்தான் வெளிநாட்டினருக்குத் தெரியும், தமிழ்நாடு என்று வைத்தால் எப்படி அவர்களுக்கு புரியும், இந்தத் துணி விற்பனை ஆக வேண்டாமா, நமக்கு ஏற்றுமதி, இறக்குமதி நடக்க வேண்டுமென்றால் மெட்ராஸ் என்ற பெயர்தான் சரியாக இருக்கும், தமிழில் வேண்டுமானால் சென்னை என்று வைத்துக் கொள்வோம் என காமராஜர் சொன்னார். ” தோழர் தியாகு https://www.bbc.com/tamil/articles/cl48g45v1jgo

அண்ணாவின் விருப்பமாக, மதறாஸ் ஸ்டேட்/ராஜ்ஜியம் என்பதை மாற்றித் தமிழகம் என்று பெயர் சூட்ட விரும்பியுள்ளார். கலைஞர் மு. க. இதை ஆவணப்படுத்தியுள்ளார்:
“''அண்ணா அவர்கள் முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற உடன் சென்னை ராஜ்ஜியம் என்கின்ற பெயரை மாற்றி ''தமிழ்நாடு'' என்கிற பெயரை உருவாக்கி - இருந்த பெயரை அறிமுகப்படுத்தி 'தமிழகம்' என்று பெயரிடலாமா? என்ற சர்ச்சை எழுந்த பொழுது டெல்லியிலே இருந்தவர்கள் 'தமிழகம்' என்று சொன்னால் எங்களால் சொல்ல அவ்வளவு சுலபமாக இருக்காது. எனவே தமிழ்நாடு என்றே இருக்கட்டும் என்று அவர்கள் கேட்டுக்கொள்ள, அதற்கேற்ப, பேரறிஞர் அண்ணா அவர்கள் 'தமிழ்நாடு' என்கின்ற பெயரை நம்முடைய மாநிலத்திற்கு சூட்டுகிற நிகழ்ச்சியை கோலாகலமாகக் கொண்டாடி சட்டமன்றத்தில் நிறைவேற்றினார்.'' (ஆதாரம்: கருணாநிதி அவர்கள் எழுதிய பாரதி பதிப்பகத்தின், ஒளி படைத்த கண்ணினாய் வா! வா! வா! புத்தகத்தில் பக்கம் எண்.100)”
https://www.hindutamil.in/news/tamilnadu/929834-karunanidhi-said-tamil-nadu-is-anna-s-wish-narayanan-tirupati-report.html
Note: In The Hindu tamil newspaper, C. Subramaniam's announcement to use Tamil Nadu in State Legislative Assembly is wrongly given as 24-12-1961. The correct date is 24-02-1961.

தமிழ்நாடு பற்றிய முதல் கல்வெட்டு: தோட்டக்குறிச்சி (கரூர்), 1962
-------------------------------------------------------------------------------------------------

இன்றைய தமிழ்நாட்டில் மூவேந்தர்களின் தலைநகரங்கள் அடங்கியுள்ளன. சங்க காலச் சேரர் தலைநகர் வஞ்சி என்னும் கரூர். சோழர் தலைநகர் உறையூர் என்னும் திருச்சி. பாண்டியர்களின் மதுரை. சேரர் தலைநகர் கரூர் அருகே உள்ள தோட்டக்குறிச்சியில் அதன் எம்.எல்.ஏ. ஆக இருந்த டி. எம். நல்லசாமி 1962-ல் தமிழ்நாடு என்று கல்வெட்டுப் பொறித்தார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக் கல்வெட்டு ட்விற்றர் பக்கங்களில் கிடைக்கிறது. 

தமிழ்நாடு என்று வருகிற முதல் கல்வெட்டு இதுதான். சங்க காலச் சேரர் தலைநகர் ஆகிய வஞ்சி (கரூர்) அருகே உள்ள தோட்டக்குறிச்சிக் கல்வெட்டு 16-7-1962 தேதியிட்டது. அதன் பின்னர், 1966-ல் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் தமிழ்நாடு என்ற பெயர்காட்டும் கல்வெட்டு. இக் கல்வெட்டுகள் தமிழ்நாடு என்ற பெயர் தமிழகத்தில் நிலைகொண்ட வரலாற்று மைல்கல்களாக விளங்குபவை.




தமிழ்நாடு பற்றிய முதல் கல்வெட்டு: தோட்டக்குறிச்சி (கரூர்), 1962
-------------------------------------------------------------------------------------------------

தமிழ் வரலாறு பற்றிப் பலரும் அறியாத செய்திகள். 
(1) தமிழகம் (புறநானூறு), தமிழ்நாடு (பரிபாடல்) 20 நூற்றாண்டுகட்கு முன்னர் உள்ள சான்று கொடுத்துள்ளேன். தமிழ் கூறு நல்லுலகம் என்பார் தொல்காப்பியர். பின்னர் சிலம்பு, சேக்கிழார், கம்பன், ...  First Milestone
(2) இடைக்காலத்திலே இளம்பூரண அடிகளும், நேமிநாத உரையிலும், வினாவுக்கு வழுவாமல் விடை அளித்தல் என்பதற்கு
’நும் நாடு யாது என்றால் தமிழ்நாடு என்றல்’ என எழுதியுள்ளனர். Second Milestone
(3) மறைமலை அடிகளும், சோமசுந்தர பாரதியும், ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என 1938-ல் முழங்கினர். 1956-ல் மொழிவாரி மாநிலங்கள் உருவாகின. அவ்வமயம் தமிழ்நாடு எனப் பெயர் வைக்கக் கோரிக்கைகள் எழுந்தன. சங்கரலிங்கம் உண்ணாநோன்பு நோற்று உயிர்துறந்தார். பிரஜா சோசலிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ ஆக இருந்த பி.எஸ். சின்னதுரை ‘தமிழ்நாடு’ பெயர் மாற்றத் தீர்மானத்தை தமிழ்நாடு பேரவையில் 30-ஜனவரி 1961-ல் கொணர்ந்தார். காங்கிரஸ் கட்சி ஆதரவு இல்லாமல் தோற்றது. ஆனாலும்,  24-பிப்ரவரி-1961ம் நாள் அமைச்சர் சி. சுப்பிரமணியம் (பொள்ளாச்சி) தமிழ்நாடு எனப் பயன்படுத்தலாம் என அதிகாரப்பூர்வமாக எம்.எல்.ஏ. அசெம்பிளியில் அறிவித்தார். இதுவே, தமிழ்நாடு என்ற பெயர் சுதந்திர இந்தியாவில் முதல் அரசாங்கத்தின் ஏற்பு ஆகும். சிஎஸ் அவர்கள் தமிழ்நாடு பட்ஜெட் (1961) எனத் தமிழ்நாடு என்ற பெயரைப் பயன்படுத்தவும் செய்தார். Third Milestone
(4) 1961 அரசாங்க அறிவிப்பின் பின்னர், மக்களில் சிலர் பயன்படுத்தத் தொடங்கினர். அவ்வகையில் இரு கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. 1962-ம் ஆண்டில் ஏற்பட்ட கரூர் தோட்டக்குறிச்சிக் கல்வெட்டு, 1966-ல் ஏற்பட்ட திருநெல்வேலிக் கல்வெட்டு “தமிழ்நாடு” என்ற பெயர் நிலைகொண்டதைக் காட்டும் சான்றாதாரங்கள். 
சோழன் மெய்க்கீர்த்தியிலேயே தண்டமிழ்நாடன் என்று கல்வெட்டில் உண்டு. ஆனால், தமிழ்நாடு என்று வருகிற முதல் கல்வெட்டு தோட்டக்குறிச்சியில் தான். சங்க காலச் சேரர் தலைநகர் ஆகிய வஞ்சி (கரூர்) அருகே உள்ள தோட்டக்குறிச்சிக் கல்வெட்டு 16-7-1962 தேதியிட்டது. அதன் பின்னர், 1966-ல் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் தமிழ்நாடு என்ற பெயர்காட்டும் கல்வெட்டு. இக் கல்வெட்டுகள் தமிழ்நாடு என்ற பெயர் தமிழகத்தில் நிலைகொண்ட வரலாற்று மைல்கல்களாக விளங்குபவை.
மேலும் அறிய,
”After many agitations for renaming the State, the then Finance Minister C Subramaniam announced in the Assembly on February 24, 1961 that the State which was written as ‘Chennai Rajyam’ in Tamil would be thereafter be referred to as ‘Tamilnadu’.  However, this could be done only within the State and in official correspondences to the Central government and foreign countries, it is mentioned only as Government of Madras.  The Dravida Munnetra Kazhagam opposed this partial arrangement and insisted that the State should be declared as ‘Tamil Nadu’.”

“இதற்கு மறுநாள் தமிழக நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார் அமைச்சர் சி.சுப்பிரமணியம்.
'தமிழ்நாட்டு அரசின் வரவு செலவினை சமர்ப்பிக்கிறேன்' என்றார்.”


”Then on January 30, 1961, the Socialist Party MLA Chinna Durai brought a resolution for a name change. Chinna Durai had requested ruling party members to vote in favour and asked for support from the Congress party, which led to then CM Kamarajar postponing the discussion on it for a month. In response, the DMK boycotted the Assembly for three days.

A month later, the resolution failed again after it was tabled, without the support of the Congress party. The then State Finance Minister C Subramaniam offered a compromise and said that the state government will use the term Tamil Nadu in its communication in Tamil. He also said that the ‘Madras state’ term can be used in communications in English.

A debate in Parliament

Around the same time, Member of Parliament and Communist leader from West Bengal, Bhupesh Gupta, moved a Bill in Parliament for renaming Madras State as Tamil Nadu. At that time, CN Annadurai, who was a Rajya Sabha member, supported the move. ”

---------------
மொழிவாரி மாநிலமாக, தமிழ்நாடு - அப்போதைய பெயர் மெட்ராஸ் மாகாணம் - 1- நவம்பர் - 1956-ல் தோன்றியது. அப்போதே, சிலம்புச்செல்வர் ம.பொ. சிவஞானம் தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டுகோள் வைத்தார். 27. 12 .1956 அன்று தமிழ் ஆட்சி மொழி மசோதா சட்டப் பேரவையில் கொண்டுவரப்பட்டது.  மசோதாவை சமர்ப்பித்த அமைச்சர் சி.சுப்பிரமணியம் தமிழன்னை அரியாசனத்தில் அமரும் திருநாளாகவே இதனை பார்க்கிறேன் என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார். எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும் மிகுந்த மகிழ்ச்சியோடு இதனை வரவேற்று ஆதரித்து நிறைவேற்றிக் கொடுத்தனர். ஆங்கிலேய ஆட்சியில் ஏற்பட்ட அடிமை வாழ்வு நமது தாய்மொழியாம் தமிழ் மொழியை ஒரு பணிப்பெண் நிலைமையிலே தான் வைத்திருந்தார்கள்... இன்று நம் தாய்மொழி அரசு மொழியாக அரியாசனத்தில் அமருகிறது... என்று குறிப்பிட்டு அவர் பேசியபோது அனைத்து உறுப்பினர்களும் மேஜையை தட்டி தங்களின் அமோகமான ஆரவாரத்தை வெளிப்படுத்தினர். (ஆனால், இன்றைய தமிங்கில வளர்ச்சி திகைக்கச் செய்கிறது.) https://www.maalaimalar.com/news/sirappukatturaigal/maalaimalar-special-articles-kamarajar-made-tamil-official-language-557706 
 மதறாஸ் ராஜ்ஜிய சட்டசபையில், 24 பிப்ரவரி 1961-ம் நாள், நிதி அமைச்சர் சி. சுப்பிரமணியம் தமிழ்நாடு என்று எழுதலாம் என அறிவித்தார். அடுத்த நாளே, தமிழ்நாடு வரவுசெலவுக் கணக்கு என மாகாண பட்ஜெட்டைச் சமர்ப்பித்தார். https://twitter.com/PritlApp/status/835059297658761216
24 பிப்ரவரி 1961 சட்டமன்ற அறிவிப்பால், தமிழ்நாடு என்ற பெயர் கல்வெட்டுகளில் பொறிக்கப்படலாயிற்று. அவ்வகையில், தன் சக எம்.எல்.ஏவும், நண்பரும் ஆன தோட்டக்குறிச்சி எம். நல்லசாமி அவர்கள் 1962-லேயே தமிழ்நாடு என்று கல்வெட்டு வெளியிட்டார். இது தமிழ்நாடு என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக அமைந்ததில் மிக முக்கியத்துவம் உடையது. பின்னர் 1966-ல் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியிலும் இதே போல், தமிழ்நாடு பயன்படுத்தப்பட்டுள்ளது.
பின்னர், நிதியமைச்சர் சிஎஸ் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் செய்த தமிழ்நாடு பெயர் அறிவிப்பை அண்ணாதுரை, ராஜ்யசபை உரையில் மேற்கோள் காட்டிப் பேசினார். அண்ணாதுரை டெல்லிக்கு ராஜ்யசபா எம்பி ஆனபோது, தமிழ்நாடு என்ற தீர்மானத்தை முன்னெடுக்க அண்ணாவுக்கு வழிமுறைகளைச் சொல்லித்தந்தவர்களில் முக்கியமானவர் சிஎஸ் அவர்கள். நேரு காலத்திலேயே, மத்திய சர்க்காரின் மந்திரியாக ஆகி நிறைய அனுபவம் பெற்றவர் சிஎஸ் தன் அறிவிப்பு டெல்லி சர்க்கார் சட்டம் ஆக்க திமுகவினருக்கு உதவினார். சிஎஸ் அவர்களை அரசியலில் முன்வரச் செய்தவர் ராஜாஜி. மூதறிஞர் ராஜாஜி 1967 தேர்தலில் திமுக கட்சிக்கு ஆதரவு அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிஎஸ், அண்ணா ராஜ்யசபையில்: http://andhimazhai.com/news/view/030202014-cm-2.html
“நாடாளுமன்றத்தில்..: இந்தக் கோரிக்கை இந்திய அரசியலில் பேசுபொருளாகக் காரணம் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் பூபேஷ் குப்தா. தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட வேண்டும் என்று மாநிலங்களவையில் தனிநபர் மசோதாவைத் தாக்கல் செய்தார் குப்தா. அது தமிழ்நாட்டைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி தாக்கல் செய்வதாக இருந்தது.
ஆனால், அன்றைய தினம் அவர் அவையில் பங்கேற்க இயலாததால் குப்தா தாக்கல் செய்தார். “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்று பெயர் வைத்த காங்கிரஸ், தமிழ்நாடு என்று மாநிலத்துக்குப் பெயர் சூட்ட ஏன் மறுக்கிறது?” என்ற கேள்வியை அவர் எழுப்பினார்.” https://www.hindutamil.in/news/opinion/columns/927809-tamilnadu-naming-history.html

~NG

---------------------

https://dhinasari.com/general-articles/115131-தமிழ்நாடு-முன்னெடுத்தத.html

தமிழ்நாடு - முன்னெடுத்தது யார்?
Nov. 3rd, 2019

1. மாநில எல்லைகளைச் சீரமைப்பதற்காக பசல் அலி தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கை குறித்து 21.11.1955 முதல் 26.11.1955 வரை தமிழக சட்டமன்றத்தில் விவாதம் நடந்தது. அதில் பேசிய காங்கிரஸ் அமைச்சர் சி.சுப்பிரமணியம் கொல்லங்கோடு , கொள்ளேகால், தோவாளை, அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு, செங்கோட்டை, தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் சென்னை மாகாணத்தோடு இணைக்கப்பட வேண்டும் எனப் பேசினார் அப்போது திமுக சட்டமன்றத்தில் இடம் பெற்றிருக்கவில்லை.

2. மொழிவாரியாக மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்த போது (1956) தமிழ்ப் பேசும் பகுதிகளைத் தமிழ்நாடு என்று அழைக்க வேண்டும் என்று குரலெழுப்பியவர் ம.பொ.சி. 1946 ஆம் ஆண்டு நவம்பர் 21 அன்று அவர் தமிழரசுக் கழகம் என்ற அமைபைத் தொடங்கினாலும் அது காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே தமிழ்ப் பண்பாட்டு இயக்கமாக, ஓர் உட்பிரிவாகத்தான் செயல்பட்டு வந்தது. காமராஜ் தலைவராக இருந்த போது காங்கிரசிலிருந்து ம.பொ.சி வெளியேறப்பட்ட பின்னர்தான் அது தனி அரசியல் அமைப்பாயிற்று. எனவே ம.பொ.சியைக் காங்கிரஸ்காரர் எனச் சொல்வதில் பிழை இல்லை

3. ம.பொ.சி.யின் போராட்டங்களால் உந்தப்பட்ட சங்கரலிங்கம், 1956 ஜூலையில் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் கோரி உண்ணாவிரதம் இருந்தார். அவரும் காங்கிரஸ்காரரே. அப்போது முதல்வராக இருந்த காமராஜ் அந்தப் போராட்டத்தைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 77 நாள் உண்ணாவிரதத்திற்குப் பிறகு இறந்து போனார். இறக்கும் முன் தன் விருபங்களை எழுத்து மூலமாகத் தெரிவித்தது மயாண்டி பாரதி என்ற கம்யூனிஸ்ட் தலைவரிடம்

4. தமிழ்நாடு பெயர் மாற்றம் கோரி, 30.1.61 அறப்போர் அறிவித்தார். டி.கே. சண்முகம், எம்.ஏ.வேணு, ஏ.பி. நாகராஜன், கா.மு.ஷெரீப், புலவர் கீரன் போன்றோர் பங்கெடுத்ததால் இது பெரும் கவனம் பெற்றது. இதில் 1700 பேர் கைது செய்யப்பட்டனர். திமுக இந்த அறப்போரில் பங்கெடுக்கவில்லை. ஆனால் ஆதரித்தது

5. இந்தப் போராட்டத்தை அடுத்து சட்டமன்றத்தில் பிரஜா சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் சென்னை மாகாணத்தைத் தமிழ்நாடு என்று அறிவிக்க வேண்டும் என்று தனிநபர் தீர்மானம் கொண்டு வந்தார். அதை ஏற்று பிப்ரவரி 24, 1961 சி.சுப்பிரமணியம் ” மெட்ராஸ் ஸ்டேட் என்பதற்கு சென்னை ராஜ்யம் என்று தமிழில் எழுதி வருகிறோம். இனித் தமிழில் எழுதும் போது சென்னை ராஜ்யம் என்று எழுதுவதற்கு பதிலாக தமிழ்நாடு என்று எழுத வேண்டும் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது” என்று அறிவித்தார்.

அதாவது அரசைப் பொறுத்தவரை 1961லிலேயே தமிழ்நாடு உருவாகி விட்டது!

அப்போது திமுக ஆட்சியில் இல்லை. ஆனால் திமுகவிற்குச் சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் இருந்தார்கள். ஆனால் அவர்கள் தீர்மானம் கொண்டுவரவில்லை.

இதைக் குறித்து அண்ணா ராஜ்ய சபையில் பேசியதாவது:
For the sake of informing this house, I may inform you, Sir, that on the 24th February 1961, the Leader of the House in the state assembly stood up to say that he was accepting part of the non-official resolution brought forward not by the DMK or any other political party which is considered to be inimical to the Congress but by a PSP member. That PSP member brought forward a non -official resolution for renaming Madras as Tamilnad and it was discussed for many days and finally the then Finance minister and the leader of the house Mr.C.Subramaniam stood up to say that he was accepting a part, or the spirit of the resolution and added that thereafter all the publications of Madras Government would appear in the name of Tamilnadu Government

6. அண்ணா இதைப் பேச வாய்ப்பளித்தது, ராஜ்யசபையில் கொண்டு வந்த ஒரு தனி நபர் மசோதா. அந்த தனி நபர் மசோதாவைக் கொண்டு வந்தவர் பூபேஷ் குப்தா என்ற கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர். அண்ணா அப்போது ராஜ்ய சபை உறுப்பினராக இருந்தும் அவர் இது குறித்து மசோதாவோ, தீர்மானமோ கொண்டு வரவில்லை

தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்திற்கான முன்னெடுப்புக்கள் செய்தவர்கள் யார் என்று இவற்றைக் கொண்டு நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்

மாலன் நாராயணன் (மூத்த பத்திரிகையாளர்)

NG> CS announced in Tamil Nadu assembly that the name, Tamil Nadu can be used henceforth in 1961. Have u read the archives?

<<<
1957ல் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட வேண்டும் தீர்மானம் ஏன் தோல்வி அடைந்தது
1961ல் அந்தத் தீர்மானம் தோல்வியில் முடிந்தது 
வர்த்தக ரீதியில் உபயோகப் படுத்தலாம் என்று காமராசர் இறங்கி வந்தார்
தமிழ்நாடு என்று பெயர் சூட்டப் பட வேண்டுமென்று CS உறுதியாக இருந்திருந்தால் அவர் அமைச்சரவையிருந்தும் காங்கிரசிலிருந்தும் ராஜினாமா செய்து இருக்க வேண்டும்
கடைசியில் திமுக ஆட்சிக்கு வந்த பின் தான் தமிழ்நாடு பெயர் தீர்மானம் நிறைவேறியது
>>>

எல்லாவற்றிற்கும் காரணம், காமராஜர் தமிழ்நாடு என்ற பெயரை ஒத்துக்கொள்ளவில்லை. இது தான் பெரிய பிரச்சினை.

> வர்த்தக ரீதியில் உபயோகப் படுத்தலாம் என்று காமராசர் இறங்கி வந்தார்

அதுவும் செய்யக் காமராஜ் ஒத்துக்கொள்ளலை. வர்த்தகம் பாதிக்கும் என்றார் முதல்வர்.

தமிழ்நாட்டின் நிதிஅமைச்சர் சி. சுப்பிரமணியம் முதன்முதலாக, 24 பிப்ரவரி 1961 அன்று தமிழகச் சட்டமன்றத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என ஆங்கிலத்தில் உள்ள இடத்தில் எல்லாம் “தமிழ்நாடு” என எழுதலாம், பேசலாம் என்று அறிவித்தார். அதுவே பின்னர் இந்திய மாநிலப் பேராக நிலைகொண்டது. அறிஞர் அண்ணா தீர்மானம் நிறைவேற்றினார்.

பாரதரத்தினம் சிஎஸ் காமராஜ் கேபினெட் மந்திரி. இருப்பினும், முதலமைச்சர் காமராஜர் தமிழ்நாடு என்பது வெளிநாட்டாருக்குப் புரியுமா என்ற கேள்விகளை பொதுமக்கள் கூட்டங்களில் அவ்வப்போது எழுப்பிக்  கோண்டிருந்தார்.
“தமிழ்நாடு என்ற பெயரின் பின்னணி குறித்துப் பேசிய அவர், ”தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கை. காங்கிரஸ் கட்சியினர் மெட்ராஸ், மதராஸ், சென்னை என மூன்று பெயர்களைப் பயன்படுத்தி வந்தனர். இதை மாற்றி தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்று சொன்னபோது, வேறு நாட்டினர் தவறாகப் புரிந்து கொள்வார்கள் என்று காமராஜர் சொன்னார்.

அந்தக் காலகட்டத்தில் ப்ளீடிங் மெட்ராஸ் என்று ஒரு துணி இங்கிருந்து ஏற்றுமதியாகிக் கொண்டிருந்தது. எனவே மெட்ராஸ் என்றால்தான் வெளிநாட்டினருக்குத் தெரியும், தமிழ்நாடு என்று வைத்தால் எப்படி அவர்களுக்கு புரியும், இந்தத் துணி விற்பனை ஆக வேண்டாமா, நமக்கு ஏற்றுமதி, இறக்குமதி நடக்க வேண்டுமென்றால் மெட்ராஸ் என்ற பெயர்தான் சரியாக இருக்கும், தமிழில் வேண்டுமானால் சென்னை என்று வைத்துக் கொள்வோம் என காமராஜர் சொன்னார். ” தோழர் தியாகு https://www.bbc.com/tamil/articles/cl48g45v1jgo

மபொசி அவர்களின் தமிழரசுக் கழகம், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று பெருந்தலைவர் காமராஜர் செயல்பட்டிருந்தால் இன்னும் பெரும்புகழ் பெற்றிருப்பார். ஏனோ செய்யவில்லை. 1961-ல் தமிழ்நாடு எனப் பயன்படுத்தலாம் என்ற அறிவிப்போடு நிறுத்திக்கொண்டது காங்கிரஸ் கட்சி.

NG> தமிழ்நாடு என்று வருகிற முதல் கல்வெட்டு இதுதான். சங்க காலச் சேரர் தலைநகர் ஆகிய வஞ்சி (கரூர்) அருகே உள்ள தோட்டக்குறிச்சிக் கல்வெட்டு. 1962.

Meignani wrote:
> 👏👏
> 1962 இலேயே கல்வெட்டில் "தமிழ்நாடு" என்று எழுதிவைத்த
> அந்த மாமனிதனை வணங்குகிறேன்.


24 பிப்ரவரி 1961-ம் ஆண்டு, தமிழ்நாட்டின் நிதியமைச்சர் சிஎஸ் (பின்னாளில் பாரதரத்தினம்) தமிழ்நாடு என்ற பெயரை எல்லா இடங்களிலும் பயன்படுத்தலாம் எனச் சட்டமன்றப் பேரவையில்  அறிவித்தார். அவரது நண்பரும், சக எம்.எல்.ஏவும் ஆகிய தோட்டக்குறிச்சி மு. நல்லசாமி அவர்கள் தான் “தமிழ்நாடு” என்ற பெயரைக் கல்வெட்டில் பொறித்து, தமிழக முதல்வர் கு. காமராஜை அழைத்து அக் கல்வெட்டைத் தம் ஊரில் திறக்கச் செய்தார். அக் கல்வெட்டின் ஒளிப்படம் இங்கே காணலாகும், 
http://nganesan.blogspot.com/2023/01/tamilnadu-inscription-thottakurichi.html

தோட்டக்குறிச்சி மு. நல்லசாமி தமிழில் நல்ல ஆர்வம் உடையவர். கருவூர் அரசினர் கலைக்கல்லூரி அமைக்கும் குழுவில் துணைத்தலைவர். இல்லத்துக்கு “அருள்நிலை” என்ற பெயர் வைத்தவர். பார்த்தருளுக: http://www.gackarur.ac.in/docs/college_history_doners.pdf

தமிழ்நாடு என முதன்முதலாக, 20-ம் நூற்றாண்டில் கல்லில் பொறித்த நல்ல மனிதர் தோ. மு. நல்லசாமியின் ஒளிப்படம் இணைக்கிறேன். மேலும் அறிய,

பிற பின்!
NG