தமிழகத்தில் சிந்து சமவெளிக் கலாசாரத் தொடர்ச்சி - Special Lecture at Palatine Public Library, Chicago (July 27, 2013)

தமிழ்நண்பர்களே, சிகாகோ பலாடைன் நூலகத்தில் ’தமிழகத்தில் சிந்து சமவெளிக் கலாசாரத் தொடர்ச்சி’ என்னும் தலைப்பில் அண்மையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட தொல்லியல் ஆதாரங்களைக் காட்டி ஆய்வுரை நிகழ்த்துகிறேன். தாங்களும், தங்கள் குடும்ப நண்பர்களும் வந்திருந்து விழாவைச் சிறப்பிக்க வேண்டுகிறேன்.

சிகாகோ தமிழ்ச்சங்கம் தன் அங்கத்தினர்களுக்கு இந்த ஆய்வுச் சொற்பொழிவு பற்றிய நிகழ்ச்சி அறிவிப்பை அனுப்பியுள்ளது. பழைய நண்பர்கள் பலரையும், கவிமாமணி ’சந்தவசந்தம்’ இலந்தையாரும், புலவர் பிரான்சிசு சவரிமுத்து, வேந்தன் அரசு (சின்சினாட்டி), கோவை செல்வன் (விஸ்கான்சின்) பார்க்க இருப்பது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. சனிக்கிழமை சந்திப்போம்!

நா. கணேசன்


                                Continuity of the Indus Valley Civilization:
Crocodile - Korravai cult in the Megalithic period Tamil Nadu
(தமிழகத்தில் சிந்து சமவெளிக் கலாசாரத் தொடர்ச்சி)

Special Lecture by
Dr. N. Ganesan
July 27, 2013, 1-4 PM
Location: Room B, Palatine Public Library
700 N. North Court, Palatine, IL 60067

Bronze Age Indus Valley saw the flourishing of the largest agriculture based civilization in the ancient world. The seals unearthed cover a wide geographical area of the Indus Valley Civilization (IVC) and the glyptic art featured in the IVC seals show the importance of land and aquatic fauna in the cultural life. The characteristic fish sign pointing to the Dravidian language spoken by the elite Harappans has long been explored from the days of Fr. H. Heras, SJ. However, the importance of crocodiles in IVC culture is just coming to light. In the post-Harappan phase also this crocodile deity is found in anthropomorphic form in sites in Haryana, but it has been misidentified as a Boar (Varaaha)! In 2011, Prof. Asko Parpola has characterized an important sign in the Indus script as the Makara. Fresh archaeological material from Tamil Nadu megalithic sites and a Tamil Brahmi inscription found recently near Madurai will be presented here for the first time as important evidence showing continuity of the Indus crocodile cult in the Iron Age Tamil country. Tirupparangunram inscription of the crocodile (Naakra) and Sakthi with a Banyan fig tree and its relationship to the symbols in the earliest silver punch marked coins of Pandyas will be shown. 

This lecture is illustrated with many slides from Tamil Nadu archaeology finds. The IVC seal given here is an equivalent of Proto-Varuṇa portrait in the IVC religion, and its relationship with the tiger-goddess, Proto-Durgā is seen from her shaman priest seated in the tree with a tiger below. It is noteworthy that the Makaram (Thai- தை) is the only Tamil name among 12 months, and throughout India, all calenders retain this Makara sign and name whereas all the other eleven months use from symbols borrowed from the astrology of Babylon in Indo-Greek times.

Dr. N. Ganesan is a specialist in Aerospace structural dynamics. He has been long interested in Tamil literature, Indology, South Indian archaeology and Unicode encoding of southern scripts. He first presented the presence of Crocodile (Makara) cult in Indus religion in 2007. His paper on Dravidian etymology of Makara, published in Prof. V. I. Subramaniam memorial volume, can be read at:

Gharial god and Tiger goddess in the Indus valley:
Some aspects of Bronze Age Indian religion,

by Dr. N. Ganesan (naa.ganesan@gmail.com), Houston, TX

மகர விடங்கர் - கொற்றவை வழிபாடு - சிந்துசமவெளி முத்திரைகளில்

Here is my paper written in 2007 discussing the Crocodile-KoRRavai (proto-Durgaa) cult in  Indus valley. Next week (July 29, 2013 in Chicago, IL) I will be presenting new archaeological evidence for the continuity of this Indus Crocodile cult (1) in post-Harappan sites in Haryana as Anthropomorphic figure which is wrongly identified as Varaaha (Boar, பன்றி)! and (2) in Tamil Nadu megalithic burial sites such as Adichanallur and also in Indus-like inscription in SaaNuur. The recent inscription of the crocodile (Naakra) and Sakthi with a Banyan fig tree in  Tirupparangunram, Madurai and its relationship to the symbols in the earliest silver punch marked coins of Pandyas will be shown. Dravidian name of Mokara/Makara for Indian crocodile attested in Sangam period texts and archaeology is analyzed here.

The original PDF of my 2007 paper on IVC crocodile worship cult is available here for download.

  Gharial god and Tiger goddess in the Indus valley:
      Some aspects of Bronze Age Indian religion

       Abstract: In the Mature Harappan period seals and tablets produced about 4000 years ago, gharial crocodile is portrayed as a ‘horned’ being. As in the famous Pashupati seals (M-304), this horned gharial deity is the central figure surrounded by a typical set of animals. A female being, often connected with tigers, is seen coupling together with the gharial in a fecundity scene in an Indus Valley Civilization (IVC) creation myth. A number of seals show a man on the tree along with a tiger below. This shaman on the tree and tiger motif is linked archaeologically with the gharial deity in the sky, and the Mesopotamian Gilgamesh-like goddess shown between two tigers in IVC tablets and moulds. Also, the same shaman on tree along with a tiger motif is seen in the ‘horned’ gharial “Master of Animals” seals. A comprehensive evaluation of the imagery recorded in the Indus glyptic art is needed to understand the pan-Indus founders’ myth cycle, and the iconography is illustrated with pictures of the IVC sealings. These religious myths of the gharial and tiger divinities are at least as important as the tree goddess worship in M-1186 with a shaman, markhor goat and seven women in front of a bodhi fig tree.



































































































































































4

மலையாளத்தின் பழமை - ஐராவதம் மகாதேவன்

இன்று இந்தியாவின் பல்வேறு மொழிகளையும் செம்மொழி (Classsical language) என இந்தியாவின் நடுவணரசு அறிவித்து வருகிறது. மலையாளம் சில நாட்களுக்கு முன்னர் டெல்லி அரசியல்வாதிகளால் செம்மொழி ஆகியுள்ளது. மலையாளம் தமிழினின்றும் பிறந்ததையும். இந்தியாவின் உயர்தனிச்செம்மொழிகள் இரண்டே எனவும் பேரா. ஜார்ஜ் ஹார்ட் விளக்கி எழுதிவருகிறார். மலையாளம் தமிழின் சேய் என்பதனை கேரள பாணிநி ராஜராஜவர்மா (மலையாளத்துக்கு இலக்கணம் 1917-ல் தந்தவர்), உள்ளூர் பரமேசுவரையர், ச. வையாபுரிப்பிள்ளை, ஹெர்மன் குண்டர்ட், ... போன்றோர் விளக்கியுள்ளனர். இந்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் மலையாளம் செம்மொழி என அறிவிப்பை முதலில் செய்தார். அடுத்ததாக, ஒரியா, மராட்டி மாநிலங்கள் முயற்சி எடுப்பதால் அவை செம்மொழிகள் ஆகலாம். இந்தியாவின் அரசியலமைப்புச் சாசனத்திலும், ரூபாய் நோட்டிலும் உள்ள தேசிய மொழிகள் யாவும் செம்மொழிகள் ஆகக்கூடும். மிக முக்கியமான எழுத்தில்லா மொழிகளாம் பிராகுவி, தொதுவர் (Toda), சாந்தாலி (கிழக்கிந்தியா) மொழிகளும் செம்மொழி ஆகலாம். இந்திய யூனியனின் நீண்டகால வளர்ச்சிக்கு எல்லா தேசிய செம்மொழிகளின் எழுத்துமுறைகளும் சம அந்தஸ்து பெற வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் யுனிகோட் போன்றவற்றில் இந்தியாவின் பல்வேறு செம்மொழி எழுத்துக்களும் இயங்குகின்றன. தற்பொழுது தமிழர்களும் மலையாளிகளும் ஆரிய, திராவிட மொழிகளை எழுத நெடிய வரலாற்றில் பயன்படுத்திய கிரந்த எழுத்து யுனிகோட் ஆகிறது. தமிழர் நூறாண்டுகள் போராடிச் செம்மொழி என்ற அறிவிப்பை 2004-ல் பெற்றனர். மலையாளிகள் 3 ஆண்டு முயற்சியால் செம்மொழி ஆக்கியுள்ளனர்.

இன்றைய கணினித் தொழில்நுட்பத்தில் அனைத்துச் செம்மொழிகளின் எழுத்துலிபிகளும் சமம் என்ற நிலையை மாநில முதல்வர்கள் தில்லி சர்க்காரிடம் பெறுதல் அடுத்த கட்ட நடவடிக்கையாக அமைக்கலாம். தமிழர்கள் செம்மொழி தமிழ் என்று இந்திய பாராளுமன்றம் அறிவிக்க வைத்ததுபோல, செம்மொழிகளின் லிபிகளும் தேவநாகரிக்கு ஈடானவை என இந்திய அரசாங்கத்தை அறிவிக்கச் செய்ய வேண்டுகிறோம். எல்லா மாநிலங்களும் முயன்றால் பஞ்சாபி, வங்காளி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், செம்மொழி தமிழ் போன்றவற்றின் எழுத்துக்கள் தேவநாகரிக்குச் சமானம் ஆனவை என இந்திய அரசியல் யாப்பில் செய்யலாம். இன்று தேவநாகரிக்கு உள்ள அந்தஸ்து செம்மொழி ஆன தமிழுக்கு இந்தியாவில் இல்லை. மலையாளத்துக்கும் இல்லை. செம்மொழிகளின் லிபிகள் எல்லாமும் அவற்றின் மாநிலங்களில் சிறப்பாக இயங்கவும் எல்லா இந்திய லிபிகளின் வளர்ச்சிக்கு இந்திய அரசாங்கம் செலவுசெய்யவும் வைக்க இம்முறை உதவும். இன்று ஹிந்தி எழுத்துக்கு மாத்திரமே மத்திய அரசாங்கம் செலவிடுகிறது.

ஹிந்தி எழுத்துக்குச் சமமாக செம்மொழி தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சிக்கு இந்திய அரசு பணம் செலவிடவேண்டும் என்று தமிழ்நாடு கோரிக்கை வைத்து வெற்றி அடைய வேண்டும். எல்லாமே ஆங்கில மயமாகி வரும் இந்தியாவில் ஹிந்தி எழுத்துக்கு மாத்திரம் ஏன் அரசாங்கம் செலவிடவேண்டும்? எல்லா பிராந்திய லிபிகளுக்கும் ஏன் மாற்றந்தாய் மனப்பான்மை? தமிழ் செம்மொழி ஆகிவிட்ட நிலையில், தமிழ் எழுத்து வளர்ச்சியும் அவசியமானது, கணினி வளர்ச்சி இன்று எல்லா எழுத்துக்களுக்கும் ஓர் இடத்தை உறுதி செய்து வருவதைப் பார்க்கிறோம்.

2010-ல் செம்மொழி மாநாடு தமிழ்நாட்டு அறிஞர்கள் (IATR vice-presidents) ஐராவதம் மகாதேவன், வா. செ. குழந்தைசாமி ஆகியோர் வழிநடத்தலில் கோவையில் நடந்தது, ஆஸ்கோ பார்ப்போலா, ஜார்ஜ் ஹார்ட், வாசக், துபியான்ஸ்கி, ... போன்ற பல அயல்நாட்டுப் பேராசிரியன்மார் கோவை வந்து தமிழின் பழமை, அருமை பற்றிப் பேசினார்கள்.  தமிழின் ஒரே குறியீடாக யூனிகோட் என அன்றைய முதல்வர் மு.க. அறிவித்ததும் செம்மொழி மாநாட்டில்தான் நிகழ்ந்தது, இனி, எல்லா தமிழ்நாட்டு அரச வலைத்தளங்களும் தமிழிலும் இயங்கவேண்டும். அனேகமானவை, ஆங்கிலத்தில் தான் இன்னும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலை மாற வேண்டும் என்பதே தமிழன்பர்களின் அவா.

------------

ஐராவதம் மகாதேவன், கி. நாச்சிமுத்து போன்ற தமிழறிஞர்கள் பலரும் மலையாளம் செம்மொழி ஆவதற்கு ஆதரவளித்தனர். ஆகஸ்ட் 2010-ல் ஐராவதம் எழுதிய ஆய்வுக்கட்டுரையைப் படிக்கலாம். பேரா. கா. ராஜன் புலிமான்கோம்பைத் தொல்லியல் ஆய்வில் கண்டுபிடித்த ஆகோள் பூசல் கல்வெட்டை மலையாளம் என்கிறார் திரு, மகாதேவன். அப்போதைய காலத்தில் தீயன் என்ற ஜாதி இருந்ததா? என்னும் கேள்வி எழுகிறது. தீ - இனிய ஒளி என்ற பொருளுண்டு. இனிப்பு, இன்பம் என்பவை இன்- என்னும் வேர்கொண்டன. அப்பொருளில் இனிய ஒளிக்கதிர்கள் கொண்டது தீ+கள் > திங்கள் என்று சந்திரனுக்குப் பெயர் திராவிட மொழிகளில் ஏற்படுகிறது. தீ + கள் = தீங்கள் > திங்கள் (Cf. மூத்த + அரைசர் = முத்தரையர் ஆவதும் காண்க. மூத்தரசர்/முத்தரசர் செப்பேடுகளில் விருத்தராஜர் எனப்படுகின்றனர்). எனவே, ஆகோட் பூசலில் அம்பால் துளையுண்டு இறந்த தீயன் என்னும் தனிமனிதன் பேர் ‘இனியகதிரோன்’  என்ற பொருளில் இருக்கலாம். இப்போதும் சந்திரன் என்று பலருக்கும் பெயர் உள்ளதல்லவா? தீஞ்சுவை, தீங்கனி என்பவற்றில் தீ- என்பதற்கு என்ன பொருளோ அதே பொருள் தீயன் என்ற பெயரிலும் உள்ளது. அல்லது திஷ்ய என்னும் நட்சத்திரம் திய்யன்/திஸ்ஸன் என்ற பிராகிருதப் பெயர் தீயன் என்று ஆனது எனவும் கொள்ளலாம். இதற்கும் 1000 ஆண்டுக்குப் பின்னர் உருவான ஈழவர்/தீயர் ஜாதிக்கும் தொடர்பென்ன? தீயர் (ஜாதி) தீவு என்னும் பொருளது. அது மிகப் பிற்காலம் அன்றோ? தீவர்/தீயர் - ஆவன்/ஆயன், கோவில்/கோயில் ஒப்பிடலாம்,

மேலும், பெடு தீயன். பெடு பெள்- என்னும் வேர்ச்சொல்லில் பிறக்கும். பெள்-தல் = பிளத்தல் (பிடி ‘பெண்யானை’, பிணா, ..). piL-/peL- alternation is in Proto-Dravidian, compare with viL-veL- as in viLLal,viLakku etc., for viL- & veLi, veLLai etc., for veL-. viNDu/viNNu/viTTu > viSNu 'rays of the sun' in Rgveda, later one of the 2 great gods of Hinduism.பெடை, பெட்டை, பெட்டி, பேடு, பெண் ... போன்ற சொற்கள்  துளைப்பொருள் கொணடிருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி. -ள்-/-ண்-/-ட்- என்னும் த்ராவிடச் சொற்பிறப்பு விதிக்குள் வரும். கற்களால் எல்லை அமைத்துச் செய்யும் ஊர் பேட்டை, பெட்டு/பட்டு என்று இன்றும் சொல்கிறோம். பெடு தீயன் என்பதை அம்பால் துளைப்பட்டு மாண்ட வீரன் தீயன் என்று கொள்கிறேன். வில்லும், அம்பும் ஓவியத்துடன் கூடிய தமிழ் பிராமி கல்வெட்டு சித்தண்ணவாசலில் கிடைத்துள்ளது. அதில் உள்ள வாசகம்: “சம்பொய்கை பெடுதைத்த கல்”. பாசி படர்ந்த குளத்தின் அருகே வீரர்கள் விற்பயிற்சி செய்திருக்கிறார்கள். மரப்பொம்மை அல்லது மரப்பலகையை இக்கல்லில் உயரமாகப் பொருத்தி (தைத்து) இங்கே விற்பயிற்சி மேற்கொண்டிருப்பர். பெள்-/பிள- என்னும் வேர் தரும் பெடு என்ற வினைச்சொல்லும், பள்-/படு என்னும் வினைச்சொல்லும் வெவ்வேறானவை. பெள்-/பெடு > துளைக்கும் பெடை, பள்-(பள்ளி)/படு-(பட்டி). படுப்பது படை. பெடையும், படையும் ஒன்றா? எனச் சிந்திப்போம். ஆக, மிக அருமையான வினைச்சொல் பெடு- (பிள்-/பெள்- என்னும் வேர்) இரண்டுமுறை தமிழ் பிராமி கல்வெட்டுக்களில்  (புலிமான்கோம்பை, சித்தண்ணவாசல்) கிடைத்திருப்பது அருமை. I think "peDu/pEDu" is an important archery term, a major part of living in the Megalithic iron age of Tamils, as we see in early coins, in rock paintings, Chera royal emblem etc., & many herostones show a fellow with bow & arrow. I feel that PulimAnkOmbai naDukal inscription's technical term, peDu/pEDu of the guy dying due to arrow shot from a bow has been neglected in the herostone inscription's interpretation so far. Once archery as a Way of Life was gone from Tamil, we gradually lost the archery's Technical Term, "peDu-/pEDu" from our cultural memory over the centuries.

- நா. கணேசன்

சித்தண்ணவாசல் - அம்பும், வில்லும் கொண்ட கல்வெட்டு
(from Sri. I. Mahadevan, Early Tamil Epigraphy, 2003)












-----------

ANTIQUITY OF MALAYALAM: RECENT EPIGRAPHICAL EVIDENCE
IRAVATHAM MAHADEVAN

I read with interest the report on the symposium on recognition of classical status to Malayalam (DLA
News 34.7.2010). I support the plea not merely on grounds of equity, as the other three literary Dravidian languages have already been accorded the classical status, but also on the merits of the case. There was a time when the same language was spoken on either side of the Western Ghats, probably with only minimal dialectal variations. In course of time, and due to the barrier to communication posed by the high mountain ranges, the Eastern dialect (Tamil) and the Western dialect (Malayalam) became more and more divergent. The heavier infusion of Sanskrit and the native innovations like dropping the person-number-gender terminations in Malayalam led to its emergence as a separate language with its own distinctive script. Therefore, as both were once dialects of the same proto-language.

The earliest inscription in Malayalam occur only from the 9th century C.E., though L.V. Ramaswamy Aiyar traced the origin of the language to about the 5th century on linguistic grounds. However, recently discovered Tamil-Brahmi and Early Vatteluttu inscriptions provide new evidence for words in characteristic  Pre-Malayalam or Early Malayalam forms dating from much earlier times. I summarise briefly the new evidence.

1. A herostone inscription has been discovered recently at Pulimankombai in Theni district in Tamil Nadu (near the border of Kerala). The inscription is in the Early Tamil-Brahmi script and may be dated in ca. 1st century B.C.E. on palaeographic evidence. The iன்scription reads: kūṭal-ūr-ā-kōḷ peṭu tīaṉ antavaṉ kal  ‘the (memorial) stone of TiyaI Antavaṉ who fell (in) the cattleraid (at) Kûṭalûr’ Note Ma. peṭu (Ta. paṭu) ‘to fall, perish’ (DEDR 3852) occuring here in the viṉaittokai with the name of the hero who belonged to the Tiya caste. This is the earliest inscriptional occurrence of a pre-Malayalam word discovered so far.

2. A pottery inscription found at Pattanam, Kerala (most probably identical with ancient Muciri) during trial excavations is in the Late Tamil-Brahmi script of about the 2nd century C.E. as judged from palaeographic and stratigraphic evidence. The fragmentary inscription reads: … ūr pāva ō  ...‘woman / doll of the village…’
The occurrence of the pre-Malayalam form pâva (Ta. pâvai) (DEDR 4107) may be noted.

3. Another pottery inscription has been excavated more recently at Pattanam. The inscription is a single word cāttan, a personal name, in the Late Tamil-Brahmi cave inscription at Arachalur, Erode District, Tamil Nadu, which has also been dated in the 4th century C.E. from palaeographic evidence.

4. An Early Vatteluttu inscription of ca. 5th century C.E. is engraved on a boulder mid-stream of the Cherupuzha river at Ezhuttukallu in the Nilambur forest area in Kerala.It reads:
mācakōṭu nīraṇavāy  ‘mouth of the dam (across) the water course at  Mācakōṭu. The occurrence of the Early Malayalam form aṇa (Ta. aṇai) (DEDR 122) is noteworthy.

I have not included here the Tamil-Brahmi and Early Vatteluttu inscriptions at Edakkal, Kerala as they have no special features associated with Malayalam, and are already well known. In view of the exceptional importance of the four new inscriptions for the study of the origin and evolution of Malayalam, I have requested ISDL to store high-resolution photographs and full bibliographic data in their computer system for online access by interested scholars. (From DLA NEWS Vol. 34 No. 8 dated Aug 2010) - ஐராவதம்

viduthalai-newspaper-with-split-u-uu-vowel-signs

Viduthalai newspaper from Madras, India publishes sections of its news with vowelised consonants with u and uu vowel signs split from the consonants. Note that these forms occur in the same page. Here are some samples.


February 2, 2004:

இந்திய தேசக்கொடிக்கு அறவாழி கொடுத்த நன்னெறி முருகன் (சுநீதிகுமார் சட்டோபாத்யாயர்)

வலைப்பதிவுலகில் இப்பொழுது விவேக் சுக்லாவுக்குப் பத்ருதீன் தியாப்ஜி (ஐசிஎஸ், 1934) அளித்த நேர்காணல் பிரபலமாக உள்ளது. அதன்படி பார்த்தால் திரு. பத்ருதீன் தான் முதன்முதலாக 1947-ல் பௌத்த, சமண சமயங்களின் சின்னமான அறவாழி (தர்மசக்கரம்) பாரதத்தின் தேசியக் கொடிக்குத் தந்தார் என ஆகும்.
http://pinnoottavaathi.blogspot.com/2013/03/blog-post_8.html
ஆனால், ஜூன் மாதம் 1931-ல் இந்திய வரலாற்றில் தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை அறிந்திருந்த பேரா. சுநீதிகுமார் சாட்டர்ஜி காங்கிரசுக்குத் தேசியக் கொடியில் சின்னமாக அறவாழி தேர்ந்தெடுக்கப் பரிந்துரை செய்து கல்கத்தா மாடர்ன் ரிவ்யூவில் கட்டுரை எழுதினார். தன் தேர்வாகிய அறவாழியைக் காந்திஜி நியமித்த காங்கிரஸ் கட்சி கமிட்டிக்கும் (பட்டாபி சீதாராமையா அக் கமிட்டியின் தலைவர்) வேண்டுகோள் விடுத்தார். நன்னெறி முருகன் என்று தமிழில் கையெழுத்திட்ட சுநீதிகுமார் சாட்டர்ஜி பரிந்துரையைப் பார்ப்போம்.

அறவாழி என்னும் சூரியச்சக்கரம் - 4500 ஆண்டு வரலாறு:

அறவாழி என்னும் தர்மச் சக்கரத்தை ஞாயிற்றைக் குறிக்கும் ஒரு சின்னம்
(Solar symbol) ஆகும். ஓர் ஆண்டின் நாட்களைக் குறிக்க 360 ஆரங்களுடன் உள்ள சக்கரம் பற்றி வேதம் பாடுகிறது. சூரியன் தினம்தோறும் உலகை மூவடிகளால் அளப்பவன். சக்ரவர்த்தி ஒருவன் தன் உழைப்பால் உலகை வெல்லமுடியும் என சூரியனுடன் ஒப்பிட்டுத் திருவள்ளுவர் பாடுகிறார். குறளின் விளக்கத்தை
சக்கிரவர்த்தி என்பதன் கவின்கலை வடிவுகளில் 2000 ஆண்டுகளாய் காணலாம்.

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.

இக் குறளுக்கான உரை: சோம்பலில்லாத சக்ரவர்த்தி ஒருவன்,  கதிரவன் மூவடிகளால் அளந்துகடந்த உலகம் முழுவதையும் ஒருமிக்க தன் உழைப்பால் அடைந்து ஆள்வான்.. ஆழ்வார்கள் பலரும் கள்ளத்தால் வஞ்சித்து இரண்டு அடிகளால் விஷ்ணு அளப்பதைப் பாடியுள்ளனர். உழைப்பின் சிறப்பைப் போற்றும் வள்ளுவரின் இக் குறளுக்கு மகாபலியை வஞ்சிக்கும் புராணம் பொருந்தாது.

வந்தவாசி அருகே பொன்னூர் மலையிலும், மயிலாப்பூர் வள்ளுவநயினார் கோவிலிலும் வள்ளுவர் திருவடிகள் சமணர்களால் காலங்காலமாக வணங்கப்படுகின்றன. சைவ சித்தர் சிலையை எங்கோ சிவன்கோவிலில் இருந்து கொணர்ந்து மயிலாப்பூர் வள்ளுவநயினார் கோவிலில் வைத்தமை அண்மைக் காலத்தில் நிகழ்ந்த செயல் என்று ஜீவபந்து ஸ்ரீபால் அவர்கள் கட்டுரையில் விரிவாகப் பதிவுசெய்துள்ளார்கள். இந்தியா முழுவதும் புத்தபாதங்களும், தீர்த்தங்கரர் பாதங்களும் வழிபடப்படுகின்றன. சூரியன் மூன்று அடிகளால் நாடோறும் உலகை அளந்து வெல்வதை (3 அடிகள் = உதயகிரி, வானுச்சி, அத்தகிரிகளில் ஆதவனின் தினச்செலவு) ஸ்ரீபாத வழிபாட்டில் காணலாம். ஸ்ரீபாத வழிபாடு ஞாயிற்றுச் சின்னம் எனக்காட்ட கதிர்கள் பல உடைய சூரிய சக்கரம் 3 பதிக்கப்படுகின்றன. புத்தரின் ஸ்ரீபாதம் (காந்தாரம்) - சூரியனின் மூவெட்டும் தெளிவாகக் காட்டப்படுகிறது.


பாகிஸ்தான் காந்தாரத்தில் உள்ள அழகிய புத்தபாதம். ஸ்ரீபாதத்தில் ஆமா/ஆமான் (Nilgai) முகம் குதிங்காலில் பொறிக்கப்பட்டுள்ளது. இது சிந்துசமவெளிக் கலையின் தொடர்ச்சி. புத்தர் உருவம் பொறிக்கப்படாத காலங்களில் அரைசமரத்தின் அடியில் சிம்மாசனத்தில் இந்த ஆமாமுகமே பலகாலம் அவர் நினைவாக வைக்கப்பட்டு வழிபடப்பட்டது அறிக. நம்மாழ்வார் மதுரையில் சங்கம் வென்ற அகவலிலும் இந்த ஆமா என்னும் இறைச்சின்னம் பேசப்படுகிறது.

தனியாழியான சூரியனைத் தர்மசக்கரம் (வள்ளுவரின் அறவாழி) என்று காண்பது சிரமண சமயத்தவர் மரபு. சூரியன் மூவடிகளால் நாள்தோறும் உலகளப்பதால் அடியளந்தான் என்கிறார் வள்ளுவர். தீர்த்தங்கரர், புத்தர் ஸ்ரீபாதங்களில் அடியளந்தான் சின்னமாக 3 நிலைகளில் (விடியல், உச்சி, அத்தமனம்) சூரியன் (=அறவாழி) பொருத்தப்படுகிறான்..

’ஓங்கல் இடைவந்து உயர்ந்தோர் தொழவிளங்கி’ எனத் தொடங்கும் தண்டியலங்கார மேற்கோட் பாடலிலும் தமிழுக்கு ஒப்பாக சூரியன் ஒப்பிடப்படுகிறான். இவ்வெண்பா தமிழுக்கு ஏற்பட்ட முதல் வாழ்த்துகளுள் ஒன்று. தண்டி என்னும் பண்டிதர் காவ்யாதர்சம் என்னும் வடமொழி இலக்கணம் தந்தவர். அவரைத் தமிழ் தண்டியலங்காரம் தந்தவரின் பாட்டனார் என்ப.  தண்டி அலங்கரித்தது பல்லவர்களின் அரசவை. பல்லவன் தந்த மாமல்லபுரம் அர்ஜுனன் தபஸு மாபெரும் புடைச்சிற்பத்தில் இருகை விரல்களைக் கட்டம் போலாக்கி உச்சி ஆதவனைத் தொழுவதைக் காணலாம். இதுவே உயர்ந்தோர் தொழுதலாம். ”ஓங்கல் இடைவந்து உயர்ந்தோர் தொழவிளங்கி.” இதில், ஓங்கல் என்பது இரு மலைகள்: காலையில் தோன்றும் மலை ஒன்று, மாலையில் மறையும் மலை மற்றொன்று. சூரியன் காலையில் தன்னகத்தினின்றும் கிளம்பி (கிழக்கு) உதயம் என்னும் மலையில் முதல் அடி எடுத்து வைக்கிறான். இரண்டாம் அடி வானுச்சியிலே. நாள்முடிவில் கடைசியாக தன் வீடு சேரும் அடி மூன்றாம் அடி. அஸ்தம் = வீடு. அஸ்தமனம் = ஞாயிறு வீடு சேரும் மூன்றாமடி. ஓங்கல் இடைவந்து = உதயம், அஸ்தம் என்னும் மலைகளுக்கிடையில் வந்து உச்சிமீது உலாவும் சூரியன். எல்லோரும் அறிந்த சூரியனின் மூவடிகளை உவமையாக்கிச் சக்கரவர்த்தி உழைத்தால் அதேபோல உலகை வெல்லலாம் வள்ளுவர் என்கிறார்.

தண்டியலங்கார உரைமேற்கோளாக விளங்கும் நாலடி வெண்பாவோ மூவடி அளக்கும் சூரியனுடன் முத்தமிழை ஒப்பிடுகிறது. மக்கள் அனைவரும் அறிந்த சூரியனின் செயலை உவமையாகக் குறிப்பிடும் புகழ்பெற்ற பழைய தமிழ்ப்பாக்கள் இவை. கதிரோனின் மூவடிகளுடன் தமிழின் இலக்கணங்களை ஒப்பிட்டுப் பேசும் சீரிய வெண்பா இது. பிற்காலத்தில் இயல், இசை, நாடகம்  எனத் தமிழிலக்கணம் தந்தவர் என அகத்திய முனிவருக்குக் கற்பித்துத் தமிழ் மரபு புகழ்ந்தாலும் சங்க கால முடிவில் முத்தமிழ் என்றால் எழுத்து, சொல், பொருள் இலக்கணங்கள் எனக் கருதுகிறேன். இதையே அழிபட்ட பரிபாடலில் 2 வரிகள் (பரிமேலழகர், 17-ஆம் நூற்றாண்டின் திருக்குறள் நுண்பொருள் மாலை) புலப்படுத்துகின்றன. பாண்டியனின் துவசச்சின்னமான பொதியில் மலையில் தென்னன் (=தக்கிணாமூர்த்தி/அவலோகிதன்) சம்ஸ்கிருத இலக்கணம் தென்னன் அளித்தான் என்று கொண்டாடினர். அதேபோல, தமிழ் இலக்கணம் தென்னன் என்னும் இறைவன் கொடுத்தான் என்னும் கதைகள் பிறக்கும் காலகட்டம் அது. இறையனரகப்பொருள் ஆசிரியர் , கம்பன் போன்றோர் அகத்தியர் தமிழிலக்கணம் படைத்தார் என ஒரு புனைகதையைச் சிருஷ்டிக்கிறார்கள். அதனை மிக வளர்த்தவர் உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியர் ஆவார். தமாஷான கதை ஒன்றை அகத்தியர் மனைவி - தொல்காப்பியர்க்கிடையே நடந்ததாக எழுதிச் செல்கிறார். தொல்காப்பியத்தில் அகத்தியர் பற்றிய குறிப்பு எங்கும் இல்லை. அகத்தியரின் 12 மாணவர்கள் பெயரை முதல்முதலாகத் தொகுத்த பெருமை ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்க்குரியது [1].

ஓங்க லிடைவந்து உயர்ந்தோர் தொழவிளங்கி 
ஏங்கொலி ஞாலத்து இருளகற்றும் ஆங்கவற்றுள் 
மின்னேர் தனியாழி வெங்கதிரோன்! ஏனையது 
தன்னேர் இல்லாத தமிழ்!


Two brilliant things are compared in this veNpaa poem. One is the Sun that takes three steps to conquer the World every day, and the other is Tamil, whose three-fold grammar (Ezuttu, Col, PoruL) wins the World of  scholarship.

(1) தமிழ் பிறப்பது அதன் 30 எழுத்தால் (தொல். நூற்பா 1) - இது சூரியன் உதித்தலுடன் ஒப்பிடலாம். (2) தமிழின் சொல்லிலக்கணம் சிறப்பானது “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே" (தொல். சொல். 157) - சூரியன் வானுச்சியில் ஒளிபரப்புதல் போன்றது. (3) பொருள் - தமிழுக்கே சிறப்பான இலக்கணம் இது (Grammar of Poetics. Hence, Tolkappiyar is Aristotle of the East) - சூரியன் மாலையில் தன் சொந்தவீடு (= அஸ்தம்) திரும்புதல்.

இந்தச் சூரிய சக்கரம் விஷ்ணுதுர்கா என்னும் கொற்றவையின் சின்னமாக சிந்து சமவெளியிலேயே காட்டப்படுகிறது. விஷ்ணு என்றால் ஞாயிற்றுக்கதிர்கள் எனப்பொருள் [2]. விஷ்(ணு) < விள்-/விட்-(விடியல்)/விண்-விட்டுவின் தங்கை எனப்படும் கொற்றவைக்கு மேலே ஆண்டின் ஆறு பெரும்பொழுது எனத் தொல்காப்பியர் பகுக்கும் ஆறு ஆரங்கள் (இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி பின்பனி) உள்ள சூரியச்சக்கரம் காட்டப் படுகின்றன. தொல்தமிழ் மரபாகிய இந்த ஆறு ஆரங்களை 6 ருதுக்கள் (ருதுசம்காரம் - காளிதாசர்) என வடமொழி புகழும். இதனைத் துர்க்கையின் புலி மேலும் சிந்துக் கவின்கலைகள் காட்டுகின்றன. விஷ்ணு விட்டு என்னும் தமிழ்ச்சொல்.கொற்றவை (விஷ்ணுதுர்க்கை) சூரியச் சக்கரத்துடன் 4500 ஆண்டுகளாய் இந்தியாவில் இருப்பவள். அத் தாய்த்தெய்வம் வருணன் (பின்னர், சிவபிரான்) என்னும் பழந்தமிழ் அணங்கனுடன் தம்பதியாய் இருக்கும் சிந்துச் சமய வரலாறு பற்றி விரிவாக ஆராயப் பெற்றுள்ளது [6].

நன்னெறிமுருகனார்: புகழ்பெற்ற சிந்தனையாளராக விளங்கிய பேரா. சுநீதிகுமார் சாட்டர்ஜி இந்தியாவின் பல்கலைக்கழகங்களில் மொழியியல் துறை அமையப் பெருமுயற்சிகள் எடுத்தவர். அண்ணாமலைப் பல்கலையில் குருநாதர் தெபொமீ தலைமையில் சுதந்திர இந்தியாவில் திராவிட மொழியியல் சிறக்க அவர் வழிகாட்டினார். வடமொழிகளில் திராவிடமொழிகளின் அஸ்திவாரமாக விளங்கும் சிறப்பியல்புகள் பலவற்றையும் நன்னெறிமுருகன் ஆராய்ந்து வெளிப்படுத்தினார். இந்தியாவில் பலமொழிகளும் சிறந்துவிளங்க வேண்டும் என்று வாதாடியவர்களில் நன்னெறிமுருகன் முக்கியமானவர். நேரு அமைத்த Official Language Commission-ல் பணியாற்றி குமாரமங்கலம் ப. சுப்பராயனுடன் சேர்ந்து ஹிந்தியை இந்தியா முழுக்க ஆட்சிமொழி ஆக்கக் கூடாது என்று தன் கருத்தை வெளிப்படுத்தியவர்கள் இவர்கள் இருவரும்தான். கொங்கணி மொழிக்கு சம அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோவாக்காரர்களை ஆதரித்துப் பேசிய விழாவில் ஒளிப்படம் இங்கே. அவரது தெரிவே இந்தியாவின் தேசியக் கொடியில் அறவாழியாக வாழ்கிறது. அமெரிக்கக் கொடியில் விண்மீன்கள் மாநிலங்களைக் குறிப்பதுபோல, அற ஆழியின் ஆரங்கள் இந்திய மாநிலங்களைக் குறிப்பதாக இருக்கட்டும் என்ற கருத்தையும் தெரிவித்தவர் நன்னெறிமுருகன் தான்.

ஜவஹர்லால் நேரு தேசியக் கொடித் தேர்வில் நன்னெறிமுருகனின் கருத்துக்களை ஏற்றார்:

”Nehru explained: Normally speaking the symbol on one side of the flag should be exactly the same as on the other side. . . . Now the Charkha, as it appeared previously on this flag, had the wheel on one side and the spindle on the other. If you see the other side of the flag, the spindle comes the other way and the wheel comes this way . . . there was this practical difficulty. (Proceedings of the Indian Constituent Assembly 1947, vol. 4).


The Asoka chakra, or wheel, was a part of the Lion Capital carving in Sarnath (now in the state of Uttar Pradesh), dating from the reign of the Mauryan king Asoka (272?232 BCE). The chakra signified the principles of Buddhism, to which Asoka had converted after the devastation of the battle of Kalinga in 261 BCE. Nehru spoke to the Assembly delegates about the importance of emulating both Asoka's embrace of nonviolence and his encouragement of international cultural interaction. The Asoka chakra was a reminder that "India has not been in the past a tight little narrow country, disdaining other countries. India . . . has been an international centre" (Proceedings of the Indian Constituent Assembly 1947, vol. 4). The Indian state adopted another Asokan symbol - the figure on top of the lion capital at Sarnath (a four-headed lion, with a chakra below it and the motto "Satyameva Jayate," or "truth alone triumphs") - as its official emblem.”
(pg. 511, A symbol of Freedom, Srirupa Roy, JAS, 2002).





Summary: Dharmachakra of Jainism and Buddhism in India has a hoary antiquity, and this Solar symbol goes back to Indus valley culture of the Bronze age. The solar symbol of  the Wheel with 6 seasons as 6 spokes is shown above the KoRRavai (proto-Durgaa) seal. Sun  is called unique wheel (தனியாழி) in Tamil and the three steps he takes every day is compared to the ancient threefold grammar of Tamil formulated by Tolkappiyar in a famous veNpaa. Tiruvalluvar praises Hard Work and says a Chakravarti emperor can rule the world just like the Sun strides across the sky in three steps to conquer the world every day. Suniti Kumar Chatterjee, an eminent linguist and Orientalist, recommended in a widely read article and proposed the same to National Flag commision of the Congress Party headed by Pattabhi Sitaramayya that this ancient solar symbol be chosen  as an embellishment at the center of the National Flag of India in June 1931.

Ref.s:
[1]  ஆறுமுகநாவலர் தான் முதன்முதலாய் அகத்தியரின் 12 மாணவர்கள் பெயர்களை ஓரிடத்தில் தொகுத்தவர். புறப்பொருள் வெண்பாமலையில் அகத்தியர் மாணவர் பன்னிருவர் என்று இருக்கிறது. ஆனால், அவர்கள் பெயர்கள் கொடுக்கப்படவில்லை. ஆறுமுக நாவலரின் ”தமிழ்” என்னும் அக் கட்டுரையைத் தட்டெழுதித் தரவேண்டும்.

[2] Jan Gonda, Aspects of Early Visnuism, 1954.

[3] FBJ Kuiper, The three strides of Visnu, pp. 137-151, Indological studies in honor of W. Norman Brown, 1962.

[4]Sunitikumar Chattersjee, The National Flag of India, Modern Review, Calcutta, June 1931.

[5] Srirupa Roy, “A Symbol of Freedom”: The Indian Flag and the Transformations of Nationalism, 1906–2002, The Journal of Asian Studies / Volume 65 / Issue 03 / August 2006, pp 495 - 527.

It begins: "In January 2002, through a Union cabinet-sponsored revision of the fifty-year old Flag Code of India, the Indian state eased its restrictions on civilian displays of the national flag and allowed its citizens to fly the flag every day of the year. The cabinet decision responded to a seven-year legal battle between the Indian state and Navin Jindal, the owner of a steel manufacturing family conglomerate. Jindal's personal quest to return the flag to the Indian people began when he was an MBA student at the University of Texas in Houston in the early 1990s and was struck by the ubiquitous presence of the U.S. flag."


[6] A Dravidian etymology for Makara - Crocodile


THE NATIONAL FLAG
Sunitikumar Chatterjee, Modern Review, Calcutta, June 1931.

Excerpts:
"At the last session of the Congress it was decided to go into the question of the National Flag. It was a good thing that this decision was finally arrived at. A flag stands as a symbol of something : and a National Flag is the symbol of our national ideals and aspirations, of our hopes and achievements as a people. It is a beacon light showing to the people the path to sacrifice, often to the supreme sacrifice : 'they are hanging men upon the common, for the wearing of the green'. Consequently it is not to be treated lightly as something which need not have any special or deep significance. The Flag Committee of the Congress fortunately realises the importance of the question, and also their responsibility in the matter. Dr. Pattabhi Sitaramayya, the Convener of the Committee, has issued a questionnaire inviting opinions from different Congress and other organisations, as well as from individuals.

There is no ancient flag or banner whether of Hindu or Muhammadan times, which we can think of for adoption as the flag of our country as a whole. Imperial or local princely houses had their standards, e. g. the Garuda Standard of the Imperial Guptas. But even when nearly the whole of India was united under the Mauryas in the 3rd century B. C. and the Moguls in the 17th century A. C. no national flag or crest seems to have been thought of. India was never physically a nation militante and so there was no need for a national symbol to rally round, in opposition to other nations. Besides, the political unity of India that we are now conscious of is an entirely new thing."

[...]

"Should we have any device on the Flag Red, Green and Ochre, or Red, White, Green and Ochre ? Most countries have a device, in addition to the national colours : e.g. Ireland has the Shamrock and the Harp, Mexico the Cactus Plant with an Eagle carrying a Snake, England the Bose, the Soviet Union the Hammer and Sickle, etc. The Charkha or Spinning Wheel has been in use with our National Flag,being painted in blue on its body. It represents India's desire for the simple life, and her will to combat poverty with the wholesome remedy of her cottage industries. But the Khaddar cloth itself as the product of the Charkha amply indicates this ideal. The Spinning Wheel as a device on a flag is cumbrous. We do not want to have a sword or a thunderbolt, or some plant or animal figure, that will not be acceptable to all. But simplifying  the Charkha, we might have a Simple Wheel.

A Simple Wheel is the most eloquent of symbols. It represents Eternity; it represents Time; it stands for Progress, it figures the Universe. We can put any great idea or meaning to it, and it will not be vulgar. In Persian, the word for wheel, charkh, signifies also the celestial globe, the sphere of the heavens, as well as circular motion and fortune. The ancient Indian use of this symbol is as varied as it is profound. We can have symbol of Eternity as something mystic behind existence as an embellishment of our National Flag. Besides, this symbol can further be employed in a most appropriate manner to indicate one great fact in our national life in a United States of India our federalism which in principle has been accepted for the future constitution of our country. The wheel can be made to represent our India as a Federal Union : and we can then take the spokes to stand for the constituent members of the Federation the various Provinces and States. The American National Flag has a similar device in its flag of stars and stripes the forty-eight white stars in the blue field indicate the forty-eight Members of the Federation of the United States of America, But it is not necessary to make the number of the Members of the Federation and the spokes of the wheel agree. We need not press the comparison too far. The idea of the individual spokes forming the wheel should be enough, and we can have a wheel of the minimum number of spokes three, or better four for the flag : for we should remember the question of making the flag, and so avoid complications. If the wheel idea is thought worthy of consideration a three or four spoked wheel in yellow or black either of the colours will go best with the Red and Green can be suggested, to find a place in the central field of the flag.

It has been suggested by some that it will be appropriate to have a spread-out Lotus, in White, with four or eight petals in place of the Wheel. The Lotus will be certainly poetic, and no one can take exception to this great Symbol of India. But would it not be a little too weak, when compared with the Wheel ? Then, a Simple Wheel with four spokes will be easier to affix on the Flag than the more elaborate Lotus : we shall have to consider the practical side of the question too the National Flag will have to be made in hundreds and thousands. But the Lotus will be quite welcome, as a beautiful symbol from Nature, and the idea of Federation is exquisitely indicated by its petals. It will be quite striking when in a suitably simple and conventional form.

The above suggestions are offered for what they are worth. The present writer has discussed the matter with
some of the best intellects of the country, in Bengal and outside Bengal : and the idea of vertical bands of Red Green and Ochre or Saffron, with the three or four-spoked Wheel (or the Four or Eight Totalled White Lotus) in the central field, seemed to satisfy most people. It is now presented before the public, and before the Flag Committee appointed by the Indian National Congress : and it is done with the fervent wish and prayer that out of the endeavours of the Committee and with the co-operation and approval of the people a National Flag and a Crest be finally evolved for India which will be in perfect accordance with her great and composite culture, her noblest ideals and achievements, and her high destiny in the future.”

First published, Modern Review, June, 1931.