viduthalai-newspaper-with-split-u-uu-vowel-signs

Viduthalai newspaper from Madras, India publishes sections of its news with vowelised consonants with u and uu vowel signs split from the consonants. Note that these forms occur in the same page. Here are some samples.


February 2, 2004:

இந்திய தேசக்கொடிக்கு அறவாழி கொடுத்த நன்னெறி முருகன் (சுநீதிகுமார் சட்டோபாத்யாயர்)

வலைப்பதிவுலகில் இப்பொழுது விவேக் சுக்லாவுக்குப் பத்ருதீன் தியாப்ஜி (ஐசிஎஸ், 1934) அளித்த நேர்காணல் பிரபலமாக உள்ளது. அதன்படி பார்த்தால் திரு. பத்ருதீன் தான் முதன்முதலாக 1947-ல் பௌத்த, சமண சமயங்களின் சின்னமான அறவாழி (தர்மசக்கரம்) பாரதத்தின் தேசியக் கொடிக்குத் தந்தார் என ஆகும்.
http://pinnoottavaathi.blogspot.com/2013/03/blog-post_8.html
ஆனால், ஜூன் மாதம் 1931-ல் இந்திய வரலாற்றில் தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை அறிந்திருந்த பேரா. சுநீதிகுமார் சாட்டர்ஜி காங்கிரசுக்குத் தேசியக் கொடியில் சின்னமாக அறவாழி தேர்ந்தெடுக்கப் பரிந்துரை செய்து கல்கத்தா மாடர்ன் ரிவ்யூவில் கட்டுரை எழுதினார். தன் தேர்வாகிய அறவாழியைக் காந்திஜி நியமித்த காங்கிரஸ் கட்சி கமிட்டிக்கும் (பட்டாபி சீதாராமையா அக் கமிட்டியின் தலைவர்) வேண்டுகோள் விடுத்தார். நன்னெறி முருகன் என்று தமிழில் கையெழுத்திட்ட சுநீதிகுமார் சாட்டர்ஜி பரிந்துரையைப் பார்ப்போம்.

அறவாழி என்னும் சூரியச்சக்கரம் - 4500 ஆண்டு வரலாறு:

அறவாழி என்னும் தர்மச் சக்கரத்தை ஞாயிற்றைக் குறிக்கும் ஒரு சின்னம்
(Solar symbol) ஆகும். ஓர் ஆண்டின் நாட்களைக் குறிக்க 360 ஆரங்களுடன் உள்ள சக்கரம் பற்றி வேதம் பாடுகிறது. சூரியன் தினம்தோறும் உலகை மூவடிகளால் அளப்பவன். சக்ரவர்த்தி ஒருவன் தன் உழைப்பால் உலகை வெல்லமுடியும் என சூரியனுடன் ஒப்பிட்டுத் திருவள்ளுவர் பாடுகிறார். குறளின் விளக்கத்தை
சக்கிரவர்த்தி என்பதன் கவின்கலை வடிவுகளில் 2000 ஆண்டுகளாய் காணலாம்.

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.

இக் குறளுக்கான உரை: சோம்பலில்லாத சக்ரவர்த்தி ஒருவன்,  கதிரவன் மூவடிகளால் அளந்துகடந்த உலகம் முழுவதையும் ஒருமிக்க தன் உழைப்பால் அடைந்து ஆள்வான்.. ஆழ்வார்கள் பலரும் கள்ளத்தால் வஞ்சித்து இரண்டு அடிகளால் விஷ்ணு அளப்பதைப் பாடியுள்ளனர். உழைப்பின் சிறப்பைப் போற்றும் வள்ளுவரின் இக் குறளுக்கு மகாபலியை வஞ்சிக்கும் புராணம் பொருந்தாது.

வந்தவாசி அருகே பொன்னூர் மலையிலும், மயிலாப்பூர் வள்ளுவநயினார் கோவிலிலும் வள்ளுவர் திருவடிகள் சமணர்களால் காலங்காலமாக வணங்கப்படுகின்றன. சைவ சித்தர் சிலையை எங்கோ சிவன்கோவிலில் இருந்து கொணர்ந்து மயிலாப்பூர் வள்ளுவநயினார் கோவிலில் வைத்தமை அண்மைக் காலத்தில் நிகழ்ந்த செயல் என்று ஜீவபந்து ஸ்ரீபால் அவர்கள் கட்டுரையில் விரிவாகப் பதிவுசெய்துள்ளார்கள். இந்தியா முழுவதும் புத்தபாதங்களும், தீர்த்தங்கரர் பாதங்களும் வழிபடப்படுகின்றன. சூரியன் மூன்று அடிகளால் நாடோறும் உலகை அளந்து வெல்வதை (3 அடிகள் = உதயகிரி, வானுச்சி, அத்தகிரிகளில் ஆதவனின் தினச்செலவு) ஸ்ரீபாத வழிபாட்டில் காணலாம். ஸ்ரீபாத வழிபாடு ஞாயிற்றுச் சின்னம் எனக்காட்ட கதிர்கள் பல உடைய சூரிய சக்கரம் 3 பதிக்கப்படுகின்றன. புத்தரின் ஸ்ரீபாதம் (காந்தாரம்) - சூரியனின் மூவெட்டும் தெளிவாகக் காட்டப்படுகிறது.


பாகிஸ்தான் காந்தாரத்தில் உள்ள அழகிய புத்தபாதம். ஸ்ரீபாதத்தில் ஆமா/ஆமான் (Nilgai) முகம் குதிங்காலில் பொறிக்கப்பட்டுள்ளது. இது சிந்துசமவெளிக் கலையின் தொடர்ச்சி. புத்தர் உருவம் பொறிக்கப்படாத காலங்களில் அரைசமரத்தின் அடியில் சிம்மாசனத்தில் இந்த ஆமாமுகமே பலகாலம் அவர் நினைவாக வைக்கப்பட்டு வழிபடப்பட்டது அறிக. நம்மாழ்வார் மதுரையில் சங்கம் வென்ற அகவலிலும் இந்த ஆமா என்னும் இறைச்சின்னம் பேசப்படுகிறது.

தனியாழியான சூரியனைத் தர்மசக்கரம் (வள்ளுவரின் அறவாழி) என்று காண்பது சிரமண சமயத்தவர் மரபு. சூரியன் மூவடிகளால் நாள்தோறும் உலகளப்பதால் அடியளந்தான் என்கிறார் வள்ளுவர். தீர்த்தங்கரர், புத்தர் ஸ்ரீபாதங்களில் அடியளந்தான் சின்னமாக 3 நிலைகளில் (விடியல், உச்சி, அத்தமனம்) சூரியன் (=அறவாழி) பொருத்தப்படுகிறான்..

’ஓங்கல் இடைவந்து உயர்ந்தோர் தொழவிளங்கி’ எனத் தொடங்கும் தண்டியலங்கார மேற்கோட் பாடலிலும் தமிழுக்கு ஒப்பாக சூரியன் ஒப்பிடப்படுகிறான். இவ்வெண்பா தமிழுக்கு ஏற்பட்ட முதல் வாழ்த்துகளுள் ஒன்று. தண்டி என்னும் பண்டிதர் காவ்யாதர்சம் என்னும் வடமொழி இலக்கணம் தந்தவர். அவரைத் தமிழ் தண்டியலங்காரம் தந்தவரின் பாட்டனார் என்ப.  தண்டி அலங்கரித்தது பல்லவர்களின் அரசவை. பல்லவன் தந்த மாமல்லபுரம் அர்ஜுனன் தபஸு மாபெரும் புடைச்சிற்பத்தில் இருகை விரல்களைக் கட்டம் போலாக்கி உச்சி ஆதவனைத் தொழுவதைக் காணலாம். இதுவே உயர்ந்தோர் தொழுதலாம். ”ஓங்கல் இடைவந்து உயர்ந்தோர் தொழவிளங்கி.” இதில், ஓங்கல் என்பது இரு மலைகள்: காலையில் தோன்றும் மலை ஒன்று, மாலையில் மறையும் மலை மற்றொன்று. சூரியன் காலையில் தன்னகத்தினின்றும் கிளம்பி (கிழக்கு) உதயம் என்னும் மலையில் முதல் அடி எடுத்து வைக்கிறான். இரண்டாம் அடி வானுச்சியிலே. நாள்முடிவில் கடைசியாக தன் வீடு சேரும் அடி மூன்றாம் அடி. அஸ்தம் = வீடு. அஸ்தமனம் = ஞாயிறு வீடு சேரும் மூன்றாமடி. ஓங்கல் இடைவந்து = உதயம், அஸ்தம் என்னும் மலைகளுக்கிடையில் வந்து உச்சிமீது உலாவும் சூரியன். எல்லோரும் அறிந்த சூரியனின் மூவடிகளை உவமையாக்கிச் சக்கரவர்த்தி உழைத்தால் அதேபோல உலகை வெல்லலாம் வள்ளுவர் என்கிறார்.

தண்டியலங்கார உரைமேற்கோளாக விளங்கும் நாலடி வெண்பாவோ மூவடி அளக்கும் சூரியனுடன் முத்தமிழை ஒப்பிடுகிறது. மக்கள் அனைவரும் அறிந்த சூரியனின் செயலை உவமையாகக் குறிப்பிடும் புகழ்பெற்ற பழைய தமிழ்ப்பாக்கள் இவை. கதிரோனின் மூவடிகளுடன் தமிழின் இலக்கணங்களை ஒப்பிட்டுப் பேசும் சீரிய வெண்பா இது. பிற்காலத்தில் இயல், இசை, நாடகம்  எனத் தமிழிலக்கணம் தந்தவர் என அகத்திய முனிவருக்குக் கற்பித்துத் தமிழ் மரபு புகழ்ந்தாலும் சங்க கால முடிவில் முத்தமிழ் என்றால் எழுத்து, சொல், பொருள் இலக்கணங்கள் எனக் கருதுகிறேன். இதையே அழிபட்ட பரிபாடலில் 2 வரிகள் (பரிமேலழகர், 17-ஆம் நூற்றாண்டின் திருக்குறள் நுண்பொருள் மாலை) புலப்படுத்துகின்றன. பாண்டியனின் துவசச்சின்னமான பொதியில் மலையில் தென்னன் (=தக்கிணாமூர்த்தி/அவலோகிதன்) சம்ஸ்கிருத இலக்கணம் தென்னன் அளித்தான் என்று கொண்டாடினர். அதேபோல, தமிழ் இலக்கணம் தென்னன் என்னும் இறைவன் கொடுத்தான் என்னும் கதைகள் பிறக்கும் காலகட்டம் அது. இறையனரகப்பொருள் ஆசிரியர் , கம்பன் போன்றோர் அகத்தியர் தமிழிலக்கணம் படைத்தார் என ஒரு புனைகதையைச் சிருஷ்டிக்கிறார்கள். அதனை மிக வளர்த்தவர் உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியர் ஆவார். தமாஷான கதை ஒன்றை அகத்தியர் மனைவி - தொல்காப்பியர்க்கிடையே நடந்ததாக எழுதிச் செல்கிறார். தொல்காப்பியத்தில் அகத்தியர் பற்றிய குறிப்பு எங்கும் இல்லை. அகத்தியரின் 12 மாணவர்கள் பெயரை முதல்முதலாகத் தொகுத்த பெருமை ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்க்குரியது [1].

ஓங்க லிடைவந்து உயர்ந்தோர் தொழவிளங்கி 
ஏங்கொலி ஞாலத்து இருளகற்றும் ஆங்கவற்றுள் 
மின்னேர் தனியாழி வெங்கதிரோன்! ஏனையது 
தன்னேர் இல்லாத தமிழ்!


Two brilliant things are compared in this veNpaa poem. One is the Sun that takes three steps to conquer the World every day, and the other is Tamil, whose three-fold grammar (Ezuttu, Col, PoruL) wins the World of  scholarship.

(1) தமிழ் பிறப்பது அதன் 30 எழுத்தால் (தொல். நூற்பா 1) - இது சூரியன் உதித்தலுடன் ஒப்பிடலாம். (2) தமிழின் சொல்லிலக்கணம் சிறப்பானது “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே" (தொல். சொல். 157) - சூரியன் வானுச்சியில் ஒளிபரப்புதல் போன்றது. (3) பொருள் - தமிழுக்கே சிறப்பான இலக்கணம் இது (Grammar of Poetics. Hence, Tolkappiyar is Aristotle of the East) - சூரியன் மாலையில் தன் சொந்தவீடு (= அஸ்தம்) திரும்புதல்.

இந்தச் சூரிய சக்கரம் விஷ்ணுதுர்கா என்னும் கொற்றவையின் சின்னமாக சிந்து சமவெளியிலேயே காட்டப்படுகிறது. விஷ்ணு என்றால் ஞாயிற்றுக்கதிர்கள் எனப்பொருள் [2]. விஷ்(ணு) < விள்-/விட்-(விடியல்)/விண்-விட்டுவின் தங்கை எனப்படும் கொற்றவைக்கு மேலே ஆண்டின் ஆறு பெரும்பொழுது எனத் தொல்காப்பியர் பகுக்கும் ஆறு ஆரங்கள் (இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி பின்பனி) உள்ள சூரியச்சக்கரம் காட்டப் படுகின்றன. தொல்தமிழ் மரபாகிய இந்த ஆறு ஆரங்களை 6 ருதுக்கள் (ருதுசம்காரம் - காளிதாசர்) என வடமொழி புகழும். இதனைத் துர்க்கையின் புலி மேலும் சிந்துக் கவின்கலைகள் காட்டுகின்றன. விஷ்ணு விட்டு என்னும் தமிழ்ச்சொல்.கொற்றவை (விஷ்ணுதுர்க்கை) சூரியச் சக்கரத்துடன் 4500 ஆண்டுகளாய் இந்தியாவில் இருப்பவள். அத் தாய்த்தெய்வம் வருணன் (பின்னர், சிவபிரான்) என்னும் பழந்தமிழ் அணங்கனுடன் தம்பதியாய் இருக்கும் சிந்துச் சமய வரலாறு பற்றி விரிவாக ஆராயப் பெற்றுள்ளது [6].

நன்னெறிமுருகனார்: புகழ்பெற்ற சிந்தனையாளராக விளங்கிய பேரா. சுநீதிகுமார் சாட்டர்ஜி இந்தியாவின் பல்கலைக்கழகங்களில் மொழியியல் துறை அமையப் பெருமுயற்சிகள் எடுத்தவர். அண்ணாமலைப் பல்கலையில் குருநாதர் தெபொமீ தலைமையில் சுதந்திர இந்தியாவில் திராவிட மொழியியல் சிறக்க அவர் வழிகாட்டினார். வடமொழிகளில் திராவிடமொழிகளின் அஸ்திவாரமாக விளங்கும் சிறப்பியல்புகள் பலவற்றையும் நன்னெறிமுருகன் ஆராய்ந்து வெளிப்படுத்தினார். இந்தியாவில் பலமொழிகளும் சிறந்துவிளங்க வேண்டும் என்று வாதாடியவர்களில் நன்னெறிமுருகன் முக்கியமானவர். நேரு அமைத்த Official Language Commission-ல் பணியாற்றி குமாரமங்கலம் ப. சுப்பராயனுடன் சேர்ந்து ஹிந்தியை இந்தியா முழுக்க ஆட்சிமொழி ஆக்கக் கூடாது என்று தன் கருத்தை வெளிப்படுத்தியவர்கள் இவர்கள் இருவரும்தான். கொங்கணி மொழிக்கு சம அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோவாக்காரர்களை ஆதரித்துப் பேசிய விழாவில் ஒளிப்படம் இங்கே. அவரது தெரிவே இந்தியாவின் தேசியக் கொடியில் அறவாழியாக வாழ்கிறது. அமெரிக்கக் கொடியில் விண்மீன்கள் மாநிலங்களைக் குறிப்பதுபோல, அற ஆழியின் ஆரங்கள் இந்திய மாநிலங்களைக் குறிப்பதாக இருக்கட்டும் என்ற கருத்தையும் தெரிவித்தவர் நன்னெறிமுருகன் தான்.

ஜவஹர்லால் நேரு தேசியக் கொடித் தேர்வில் நன்னெறிமுருகனின் கருத்துக்களை ஏற்றார்:

”Nehru explained: Normally speaking the symbol on one side of the flag should be exactly the same as on the other side. . . . Now the Charkha, as it appeared previously on this flag, had the wheel on one side and the spindle on the other. If you see the other side of the flag, the spindle comes the other way and the wheel comes this way . . . there was this practical difficulty. (Proceedings of the Indian Constituent Assembly 1947, vol. 4).


The Asoka chakra, or wheel, was a part of the Lion Capital carving in Sarnath (now in the state of Uttar Pradesh), dating from the reign of the Mauryan king Asoka (272?232 BCE). The chakra signified the principles of Buddhism, to which Asoka had converted after the devastation of the battle of Kalinga in 261 BCE. Nehru spoke to the Assembly delegates about the importance of emulating both Asoka's embrace of nonviolence and his encouragement of international cultural interaction. The Asoka chakra was a reminder that "India has not been in the past a tight little narrow country, disdaining other countries. India . . . has been an international centre" (Proceedings of the Indian Constituent Assembly 1947, vol. 4). The Indian state adopted another Asokan symbol - the figure on top of the lion capital at Sarnath (a four-headed lion, with a chakra below it and the motto "Satyameva Jayate," or "truth alone triumphs") - as its official emblem.”
(pg. 511, A symbol of Freedom, Srirupa Roy, JAS, 2002).





Summary: Dharmachakra of Jainism and Buddhism in India has a hoary antiquity, and this Solar symbol goes back to Indus valley culture of the Bronze age. The solar symbol of  the Wheel with 6 seasons as 6 spokes is shown above the KoRRavai (proto-Durgaa) seal. Sun  is called unique wheel (தனியாழி) in Tamil and the three steps he takes every day is compared to the ancient threefold grammar of Tamil formulated by Tolkappiyar in a famous veNpaa. Tiruvalluvar praises Hard Work and says a Chakravarti emperor can rule the world just like the Sun strides across the sky in three steps to conquer the world every day. Suniti Kumar Chatterjee, an eminent linguist and Orientalist, recommended in a widely read article and proposed the same to National Flag commision of the Congress Party headed by Pattabhi Sitaramayya that this ancient solar symbol be chosen  as an embellishment at the center of the National Flag of India in June 1931.

Ref.s:
[1]  ஆறுமுகநாவலர் தான் முதன்முதலாய் அகத்தியரின் 12 மாணவர்கள் பெயர்களை ஓரிடத்தில் தொகுத்தவர். புறப்பொருள் வெண்பாமலையில் அகத்தியர் மாணவர் பன்னிருவர் என்று இருக்கிறது. ஆனால், அவர்கள் பெயர்கள் கொடுக்கப்படவில்லை. ஆறுமுக நாவலரின் ”தமிழ்” என்னும் அக் கட்டுரையைத் தட்டெழுதித் தரவேண்டும்.

[2] Jan Gonda, Aspects of Early Visnuism, 1954.

[3] FBJ Kuiper, The three strides of Visnu, pp. 137-151, Indological studies in honor of W. Norman Brown, 1962.

[4]Sunitikumar Chattersjee, The National Flag of India, Modern Review, Calcutta, June 1931.

[5] Srirupa Roy, “A Symbol of Freedom”: The Indian Flag and the Transformations of Nationalism, 1906–2002, The Journal of Asian Studies / Volume 65 / Issue 03 / August 2006, pp 495 - 527.

It begins: "In January 2002, through a Union cabinet-sponsored revision of the fifty-year old Flag Code of India, the Indian state eased its restrictions on civilian displays of the national flag and allowed its citizens to fly the flag every day of the year. The cabinet decision responded to a seven-year legal battle between the Indian state and Navin Jindal, the owner of a steel manufacturing family conglomerate. Jindal's personal quest to return the flag to the Indian people began when he was an MBA student at the University of Texas in Houston in the early 1990s and was struck by the ubiquitous presence of the U.S. flag."


[6] A Dravidian etymology for Makara - Crocodile


THE NATIONAL FLAG
Sunitikumar Chatterjee, Modern Review, Calcutta, June 1931.

Excerpts:
"At the last session of the Congress it was decided to go into the question of the National Flag. It was a good thing that this decision was finally arrived at. A flag stands as a symbol of something : and a National Flag is the symbol of our national ideals and aspirations, of our hopes and achievements as a people. It is a beacon light showing to the people the path to sacrifice, often to the supreme sacrifice : 'they are hanging men upon the common, for the wearing of the green'. Consequently it is not to be treated lightly as something which need not have any special or deep significance. The Flag Committee of the Congress fortunately realises the importance of the question, and also their responsibility in the matter. Dr. Pattabhi Sitaramayya, the Convener of the Committee, has issued a questionnaire inviting opinions from different Congress and other organisations, as well as from individuals.

There is no ancient flag or banner whether of Hindu or Muhammadan times, which we can think of for adoption as the flag of our country as a whole. Imperial or local princely houses had their standards, e. g. the Garuda Standard of the Imperial Guptas. But even when nearly the whole of India was united under the Mauryas in the 3rd century B. C. and the Moguls in the 17th century A. C. no national flag or crest seems to have been thought of. India was never physically a nation militante and so there was no need for a national symbol to rally round, in opposition to other nations. Besides, the political unity of India that we are now conscious of is an entirely new thing."

[...]

"Should we have any device on the Flag Red, Green and Ochre, or Red, White, Green and Ochre ? Most countries have a device, in addition to the national colours : e.g. Ireland has the Shamrock and the Harp, Mexico the Cactus Plant with an Eagle carrying a Snake, England the Bose, the Soviet Union the Hammer and Sickle, etc. The Charkha or Spinning Wheel has been in use with our National Flag,being painted in blue on its body. It represents India's desire for the simple life, and her will to combat poverty with the wholesome remedy of her cottage industries. But the Khaddar cloth itself as the product of the Charkha amply indicates this ideal. The Spinning Wheel as a device on a flag is cumbrous. We do not want to have a sword or a thunderbolt, or some plant or animal figure, that will not be acceptable to all. But simplifying  the Charkha, we might have a Simple Wheel.

A Simple Wheel is the most eloquent of symbols. It represents Eternity; it represents Time; it stands for Progress, it figures the Universe. We can put any great idea or meaning to it, and it will not be vulgar. In Persian, the word for wheel, charkh, signifies also the celestial globe, the sphere of the heavens, as well as circular motion and fortune. The ancient Indian use of this symbol is as varied as it is profound. We can have symbol of Eternity as something mystic behind existence as an embellishment of our National Flag. Besides, this symbol can further be employed in a most appropriate manner to indicate one great fact in our national life in a United States of India our federalism which in principle has been accepted for the future constitution of our country. The wheel can be made to represent our India as a Federal Union : and we can then take the spokes to stand for the constituent members of the Federation the various Provinces and States. The American National Flag has a similar device in its flag of stars and stripes the forty-eight white stars in the blue field indicate the forty-eight Members of the Federation of the United States of America, But it is not necessary to make the number of the Members of the Federation and the spokes of the wheel agree. We need not press the comparison too far. The idea of the individual spokes forming the wheel should be enough, and we can have a wheel of the minimum number of spokes three, or better four for the flag : for we should remember the question of making the flag, and so avoid complications. If the wheel idea is thought worthy of consideration a three or four spoked wheel in yellow or black either of the colours will go best with the Red and Green can be suggested, to find a place in the central field of the flag.

It has been suggested by some that it will be appropriate to have a spread-out Lotus, in White, with four or eight petals in place of the Wheel. The Lotus will be certainly poetic, and no one can take exception to this great Symbol of India. But would it not be a little too weak, when compared with the Wheel ? Then, a Simple Wheel with four spokes will be easier to affix on the Flag than the more elaborate Lotus : we shall have to consider the practical side of the question too the National Flag will have to be made in hundreds and thousands. But the Lotus will be quite welcome, as a beautiful symbol from Nature, and the idea of Federation is exquisitely indicated by its petals. It will be quite striking when in a suitably simple and conventional form.

The above suggestions are offered for what they are worth. The present writer has discussed the matter with
some of the best intellects of the country, in Bengal and outside Bengal : and the idea of vertical bands of Red Green and Ochre or Saffron, with the three or four-spoked Wheel (or the Four or Eight Totalled White Lotus) in the central field, seemed to satisfy most people. It is now presented before the public, and before the Flag Committee appointed by the Indian National Congress : and it is done with the fervent wish and prayer that out of the endeavours of the Committee and with the co-operation and approval of the people a National Flag and a Crest be finally evolved for India which will be in perfect accordance with her great and composite culture, her noblest ideals and achievements, and her high destiny in the future.”

First published, Modern Review, June, 1931.

மகரம் பெயர்க்காரணம் - A Dravidian Etymology for Makara - Crocodile (2011 paper)

நகர் (=நக்கர்) அல்லது விடங்கர் எனப்படும் முதலை, கொற்றவை தம்பதியரின் சமயம் சிந்து சமவெளி நாகரீகத்தில் மேன்மையுற்று இருந்ததையும், அது இரும்பூழிக் காலத்தில் தென்னகத்தில் எவ்வாறு பரவியது? என்பதைக் காட்டும் ஆய்வேடுகள் மூன்று பற்றிய பதிவிது. 20-ஜனவரி-2013ல் மதுரைத் திருப்பரங்குன்றில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டு சிந்து சமவெளிச் சமயத்தின் பரவலைக் காட்டும் அரிய தொல்லியல் சான்றாகும். பேரா. கா. ராஜனின் இரு மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர், ’தி ஹிந்து’ இதழில் இன்னும் சில நாள்களில் அதன் வாசிப்பு வெளியாகும். பரன்குன்றின் குளக்கரையில் 2200 ஆண்டுக்கு முன்னெழுதிய தமிழ்க் கல்வெட்டின் சொற்கள் யாரைக் குறிப்பிடுகின்றன? சிந்து நாகரீகத்தின் நக்கர்-விடங்கர், கொற்றவை சமயத்தை குளக்கரையில் முரசறைகிறதா? என்பது பற்றிப் பின்னர் ஆராய்வோம். ஆதிச்சநல்லூர் பானையோட்டுச் சிற்பம், ஹரியானாவின் செப்பால் ஆன மகரவிடங்கர், அதில் பொறிக்கப்பட்ட எழுத்தின் காலம் எல்லாம் மிக முக்கியமானவை. அறிஞர் இரா. நாகசாமி ஹரியானா யுனிகார்ன் பொறிக்கப்பட்ட மகரவிடங்கரின் எழுத்துக்கள் pre-Kharoshti என்கிறார். பிற பின்னர்!

நா. கணேசன்

------------------------------------------
The first paper showing the importance of crocodile cult in Bronze age Indus religion and the crocodile (gharial) as the spouse of KoRRavai (proto-Durgaa)was written in 2007:

Gharial god and Tiger goddess in the Indus valley
Some aspects of Bronze Age Indian religion

       Abstract: In the Mature Harappan period seals and tablets produced about 4000 years ago, gharial crocodile is portrayed as a ‘horned’ being. As in the famous Pashupati seals (M-304), this horned gharial deity is the central figure surrounded by a typical set of animals. A female being, often connected with tigers, is seen coupling together with the gharial in a fecundity scene in an Indus Valley Civilization (IVC) creation myth. A number of seals show a man on the tree along with a tiger below. This shaman on the tree and tiger motif is linked archaeologically with the gharial deity in the sky, and the Mesopotamian Gilgamesh-like goddess shown between two tigers in IVC tablets and moulds. Also, the same shaman on tree along with a tiger motif is seen in the ‘horned’ gharial “Master of Animals” seals. A comprehensive evaluation of the imagery recorded in the Indus glyptic art is needed to understand the pan-Indus founders’ myth cycle, and the iconography is illustrated with pictures of the IVC sealings. These religious myths of the gharial and tiger divinities are at least as important as the tree goddess worship in M-1186 with a shaman, markhor goat and seven women in front of a bodhi fig tree.

------------

I just finished writing the third article in the series about the Indus crocodile religion  in Megalithic period India as seen in Adichanallur pottery (excavated in 2005), Haryana anthropomorphic makara vidangar icon with pre-Brahmi script, and the latest Tamil Brahmi inscription from Tiruparangundram, refering to the Nakar - KoRRavai couple at the entrance to a pond and with an important Indus symbol in between the Nakkar and KoRRavai names which start with the letter muu (மூ = ‘ancient'). My 2013 article is titled as "Megalithic period religion in south India and its relationship to Indus crocodile cult".

"A Dravidian etymology for Makara - crocodile" was my second article on the crocodile cult in Indus vaelley and the genesis of Makara in Indic art traditions. It is published in Prof. V. I. Subramonian Memorial Volume, International School of Dravidian Linguistics, 2011 (Tiruvananthapuram, Kerala). For easy reading depending on the computer screen size, you may have to click on the pages 1-9.


























































































சங்ககாலத் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளில் பௌத்தக் குறிப்புகள்


அண்மையில் மதுரைக்கு அருகே உள்ள சமணர்மலையில் கி.பி. 3 அல்லது 2-ஆம் நூற்றாண்டின் தமிழ் பிராமிக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதில் எழுதியுள்ள வாசகம்:
”பெரு-தேரூர் ஊழி தாஞை அயம்”
= peru-tērūr ūḻi tāñai ayam 

This Tamil Brahmi inscription (2nd century BC) can be translated as:
"the pool (ayam) gifted (taañai < daanaa) as a service (uuzhi) by peru-tErUr (village)"

தேரூர் - கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளையின் ஊராகும். தேரான்குளம் என்பதும் அவ்வூர் அருகே உள்ளதற்கான கல்வெட்டுகள் உள்ளன. தேரகாதை, தேரிகாதை என்பவை கி.மு. 600-லிருந்து பௌத்தர்களின் நூல்களாக விளங்குபவை. இந்தக் கல்வெட்டின் அருகிலேயே பேரூர் எனக் குறிக்கும் கல்வெட்டில் முசிரிக்கோடன் இளமகன் என்பவரையும் குறிப்பிடுவது, கல்வெட்டின் நான்காம் எழுத்து “ரூ” என ஐராவதம் மகாதேவன் மற்றும் சில கல்வெட்டாய்வாளர்கள் படிப்பதைச் சரியெனக் காட்டுகிறது. ஆனால், “தாஞை” என்ற சொல்லை “தாதை” என்று ஐராவதம் படிப்பதாக இந்து நாளிதழ் (ஜனவரி 5, 2013) தெரிவிக்கிறது. ஆனால், அவ்வெழுத்து “ஞை” என்பதற்குக் கட்டம் (square) போன்ற வடிவமும், இடமாகச் செல்லும் மூன்று மீக்குறிகளும் (diacritic marks) காட்டுகின்றன. முனைவர் வெ. வேதாசலம் அவர்கள் அளித்த அக் கல்வெட்டுப் பகுதிகளை இணைக்கிறேன். இந்த ஒளிப்படங்கள் முனைவர் வெ. வேதாசலம் அவர்களுக்குக் காப்புரிமை உடையன. The photos are the courtesy of Dr. V. Vedachalam, Madurai.






'தி ஹிந்து' (5-Jan-2013) நாளிதழில் 3-வது மீக்குறி மங்கலாகத் தெரிவதை அவதானிக்கலாம்: 






வேளாண்மை வரலாறு பதிந்துள்ள மருதத்திணைச் செய்யுள் - நற்றிணை 310 - உவேசா குறிப்பு

தமிழின் சங்கப் பாடல்கள் இந்தியாவின் பண்டைய வரலாற்று ஏடுகளை அறிந்து ஆராய அறிஞர்களுக்கு ஓர் கருவூலம். இந்தியாவின் உயர்தனிச் செம்மொழிகளின் வரிசையில் தமிழை நிலைநிறுத்துவது.

கல்கி அவர்களால் தமிழ்த் தாத்தா என அழைக்கப்பெற்றவர் தாக்‌ஷிணாத்ய கலாநிதி உ. வே. சாமிநாதையரவர்கள். உவேசா தேடிச் சேர்த்து, ஆராய்ந்து ஏடுகள், காகிதத்தில் எழுதிய குறிப்புகள் இவற்றைக் கொண்டு நற்றிணை சங்கநூலை உவேசா நூலகம் (கலாக்ஷேத்ரா, அடையாறு) 1989-ல் பதிப்பித்துள்ளது. தமிழின் வரலாற்றை எழுதிய முதல் தமிழன் பரணர் என்று தமிழறிஞர்கள் கூறுகின்றனர். உ-ம்: பேரா. வ. சுப. மாணிக்கம், அண்ணாமலைப் பல்கலை. சங்கத் தமிழின் மகாகவிகள் இருவர்: கபிலரும் பரணரும். பரணர் தான் வரலாற்றுச் செய்திகளை நேரில் கண்டதை அறிவிப்பதில் முன்னிற்பவர். அவர் அப்போதைய மருதத் திணையில் ஊரன் எனப்படும் ஊர்த்தலைவர் ஆகிய நிலக்கிழார்களின் வாழ்வியல் முறைகளையும், தங்கள் பண்ணைகளில் எவ்வாறு கால்நடை மேலாண்மை செய்தனர் என்பதையும் நற்றிணை 310-ல் பதிவுசெய்துள்ளார்.

இந்தியாவின் பழைய சாதி அமைப்பின் முக்கிய அங்கம் ஜாதிகளுக்கிடையான உணவுப் பிரமிட் முறை. யார் யார் எந்தெந்த உணவை உண்ணலாம் என்ற சமுதாயக் கோட்பாடு அக்காலங்களில் சேரிகளை அடையாளம் காணச் செய்தது. உ-ம்: பார்ப்பனச்சேரி. சமஸ்கிருதத்திலே மாட்டிறைச்சி புசிப்போர் பற்றிய குறிப்புகள் பல இருப்பினும், தமிழில் இப் பழைய வேளாளர் நாகரீகத்தின் ஒரு பகுதியை வரலாறாக முதலில் பதிவு செய்பவர் மகாகவி பரணர் ஆவார். இதன் தொடர்ச்சியைப் பரணருக்குப் பின் வந்த பல கவிகளும் 1500 ஆண்டுகளில் பாடிச் சென்றுள்ளனர். காட்டுகளாக, வேளாளர் அப்பர் அடிகளும், மாணிக்கவாசகர் தன் திருக்கோவையாரிலும், பொய்யாமொழிப்புலவர் (13-ஆம் நூற்.) தஞ்சைவாணன்கோவையிலும், சொக்காப்ப நாவலர் 17-ஆம் நூற்றாண்டிலும் பாடியவை தமிழ்த்தாத்தா உவேசா அவர்களும் அறிஞர் பின்னத்தூரார் தெரிந்தெடுத்த நற்றிணை 310 அடிகளுக்கு விளக்கமாக அமைந்துள்ளன. அவற்றை ஈண்டு அளிக்கிறேன். சங்க கால நாகரிகத்தின் சில கூறுகள் தெளிவாகும். விறலி விடுதூதுகளிலும், கலம்பகங்களிலும், கோவை இலக்கியங்களிலும் தேடினால் நற்றினை 310-ல் முதலில் பதிவாகும் செய்தியை விளங்கிக்கொள்ள ஏதுக்கள் ஆகும். இந்திய ஜாதி அமைப்பின் உணவு பிரமிட் முறையை ஏராளமான பழைய தமிழ் இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. 20-ஆம் நூற்றாண்டில் கலெக்டர் ஆஷ் என்பவனைச் சுட்டுகொன்ற சுதந்திரப் போராட்ட வீரரின் மரணத்தின் முன் எழுதிய சாசனத்திலும், கப்பல் ஓட்டிய தமிழர் வ.உ.சி வாழ்க்கையிலும், வெள்ளகால் ப. சுப்பிரமணிய முதலியார் தமிழ்நாட்டில் பிராமணர் ஏன் வேத கால வழக்கமாகிய மாடு உள்ளிட்ட புலால் உணவைத் துறக்கலாயிற்று என்பதையும் விளக்கங்களிலும் 2000 ஆண்டு வேளாண்முறை இருப்பதை அறியலாம். இன்று காந்திஜி, அம்பேத்கார், பெரியார், மேலைநாட்டு மிஷனரிகள், ஊடகங்கள் போன்றவற்றால் வட, தென் செம்மொழி இலக்கியங்களில் 2000 ஆண்டாக உள்ள உணவுப் பிரமிட் முறை மாறிவருகிறது கண்கூடு. உ-ம்: ஹோட்டல் உணவுகளில். கிரேக்க நாகரீகத்தில் இருந்த பழைய அடிமைமுறை (slavery) இன்று காந்திஜி வழியை மேற்கொண்ட மார்ட்டின் லூதர் கிங் போன்றவர்களால் அமெரிக்காவில் மாறிவிட்டது அல்லவா? அதுபோல், இன்று மேலை நாடுகளின் நகரங்களை மாதிரியாகக் கொன்டு வளர்ந்துவருகிற இந்திய நகரங்களில் ஜாதி இல்லாமல் அழிந்து வருகிறதை அவதானிக்கலாம்.

நற்றிணை 310-ல் பரணர் புலப்படுத்தும் இந்தியச் சமூக வரலாற்றின் செய்திக்கு அரணாக எதுகை இலங்குகிறது. ஈற்றடிகள் நான்கிலும் இரண்டாம் எழுத்தாய் தனியொற்றெழுத்து - லகர வர்க்க எதுகை - காண்க. கன்று < கல்-/கரு. கன்று என்னும் மூலத்தை களிறு என மாற்றினால் வெகுளிச்சுவையும், பழந்தமிழ்ப் பொருளும் போய்விடுகிறது. மாமன்னர்கள் பெரும்போர் வெற்றிக்குப் பின்னர்தான் களிற்றுப் பரிசில் வழங்கினர், பார்க்க அகநானூறு 106, அதற்கும் பின்னர் யாழ்ப்பாண மன்னன் பரிசில் அளிக்க அந்தகக்கவி கலங்கிப் பாடிய பாடல். இந்த அகநானூற்றுப்பாடலுக்கு நேர்மாறான பொருள் உடையது நற்றிணை 310. இது அன்றாடம் நிகழும் வளங்கெழு மருத ஊரின் வாழ்க்கை. போரோ, வென்றியோ இல்லை. நற்றிணையின் இப்பாடல் பரத்தைகளைக் கூட்டுவிக்கும் பாணனை வெகுண்டு செறுச்சொல் கூறி வாயில் மறுக்கும் பாட்டிது. ஊரன் அரசனும் அல்லன், அவனிடம் பாணனுக்கு அளிக்கக் களிறும் இல்லை. பாட்டின் எதுகையும், உட்பொருளும் இழக்காமல் இருக்க வேன்டுமெனில் உவேசா, பின்னத்தூரார் பதிப்பே சரியானது என்பது தேற்றம். வேளாளர் வரலாற்றுச் செய்தி தரும் பரணருக்கு நாம் செய்யும் மரியாதையும் ஆகும். தற்கால அரசியலுக்காக - உ-ம்: தமிழரிடம் ஜாதி இல்லை - நற்றிணை 310 மூலத்தை மாற்றுவது சரியாகாது. மகாகவி பரணர் வரலாற்று நிபுணர், பழைய சமுதாய சரித்திரத்தின் முக்கியக் கூறு ஒன்றை அளித்துச் சென்றுள்ளார். பழைய வேளாண்முறைகளை விளக்கும் அரிய பாடல்.

வேளாண்மை சிந்து சமவெளியிலே இந்திய துணைக்கண்டத்தில் தோன்றுதலும், சிந்து நாகரீகம் அதன் உச்சத்தை 4500 - 4000 ஆண்டு முன்னர் அடைதலும், பின்னர் 3000 ஆண்டு முன்னர் வேளாண்மையின் செய்தொழில்களும், வேளிரும் பஞ்ச திராவிடநாடுகளில் வேளாண்மை சிறந்த குஜராத்தின் துவாரகையில் இருந்து தென்னாடும், இலங்கையும் அடைதலும், நெல் வேளாண்மை, குதிரை (ஐயனார்), இரும்பு (வாள்) நுட்பங்கள் என்ன மாற்றங்கள் தெற்கே கொண்டுவந்தன என்பதை அறிய எதிர்காலத்தில் விஞ்ஞானம் மிக உதவும். உ-ம்: வேள்விகளில் காளைகள் பலி என ஆரியர்கள் நடத்த, வேளாளர்கள் மாடுகளைப் பலியிடலை தடுத்துவிட்டனர். 2500 ஆண்டு முன்னரே. சமண நூலான நாலடியாரை வேளாண் வேதம் எனல் தமிழ்மரபு. வடக்கே இருந்து வரும் வேளிர்கள், வேளாண் சமூக பிரமிட் அமைப்பில் உணவுப் பழக்க வழக்கங்களை மேல்ப்பாலர், கீழ்ப்பாலர் என வரையறை செய்தனர். இன்று மாறிவரும் பழக்கங்கள் இவை. வேளாளர் மாட்டிறைச்சி உண்ணாமையும், சைவ உணவாளர்களும் (உ-ம்: சமணர்கள்), வேளாண் சமுதாயத்தில் சங்க காலத்தில் இணைக்கப்பெறாத ட்ரைப்ஸ் எனப்படும் கூட்டத்தினர் மாடடித்தல் போன்றனவும் தெளிவாக சங்க இலக்கியம் காட்டுகிறது.வேளாண்மை வளர்ச்சியில் தமிழகம் அடைந்த மாற்றங்கள் பற்றி ஜெனடிக்ஸ் ஆய்வுகள் இனி வரும் ஆண்டுகளில் பல செய்திகள் தரும் எனலாம். 2500 ஆண்டுகளாக இந்தியா முழுதும் விளங்கும் உணவுப் பழக்கங்கள் இல்லையேல் மாடுகள் வளர்க்க ஏராளமான நிலங்கள் தேவைப்படும்.

சங்க இலக்கியமாம் புறநானூற்றில் மாந்தர்களுக்கும் முதலிலே மாடுகளை வைத்துப் போற்றி முதுகுடுமிப் பெருவழுதி பாடல் இருக்கிறது: http://www.tamilvu.org/slet/l1280/l1280spg.jsp?no=9&file=l1280641.htm
ஆவும் ஆனியல் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடையீரும் மக்கட்
பெறாதோரும் எம் அம்பு கடி விடுதும்
நும்அரண் சேர்மின்‘.
ஆக்களின் உயர்ச்சியை இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்திலும் மிகப் போற்றியுள்ளார்.
பார்ப்பார் அறவோர் பசுபத் தினிப்பெண்டிர்
மூத்தோர் குழவியெனும் இவரைக் கைவிட்டு  (மதுரைக்காண்டம், வஞ்சினமாலை, அடி, 52-54) என்னும் இவரைத் தவிர்ந்த தீயவர்கள் மேல் தீ செல்லட்டும் என்ற கண்ணகியின் ஆணையும் காட்டும். பசுவை இவர் என்று உயர்திணையாய்க் கூறியுள்ளார் இளங்கோ அடிகள். பாரத நாட்டின் பழைய பண்பாட்டை செம்மொழி இலக்கியங்கள் பரக்கக் காட்டுகின்றன. புலவர் நெட்டிமையார், முதுகுடுமியின் அறப்போர் நெறியாக யார்யார் காப்பாற்றப்படுவதற்கு உரியவர் எனப் பட்டியலிடுதல் நோக்கத் தக்கது. ஆனிலை உலகம் என்று மேலுலகங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. வேறு எந்த விலங்குக்கும் இவ்வாறில்லை. “ஆவிற்கு நீர் என்று இரப்பினும்” - வள்ளுவர். ’ஆதந்தோம்பல்’ என்பதற்கு நச்சினார்க்கினியர் புறப்பாட்டைக் காட்டுவதும் அறியற்பாலது. ஆனைந்து என்னும் பஞ்சகவ்யம் சைவத்தில் என்றும் ஆராதிக்கப்படுவது.

---------------------------------------------------------------------------------------
உவேசா நூலகப் பதிப்பில் இப் பாடலைக் காண்போம் (பக். 559-560).



நற்றிணை 310.           மருதம்
                              பரணர் பாடியது


தோழி கூற்று 
(பரத்தை கூற்றும் ஆம்)


விளக்கின் அன்ன சுடர்விடு தாமரைக்   
களிற்றுச்செவி அன்ன பாசடை தயங்க                                         
உண்துறை மகளிர் இரியக் குண்டுநீர்
வாளை பிறழும் ஊரற்கு நாளை             
மகட்கொடை எதிர்ந்த மடங்கெழு பெண்டே   5     
தொலைந்த நாவின் உலைந்த குறுமொழி 
உடன்பட்டு ஓராத் தாயரோடு ஒழிபுடன் 
சொல்லலை கொல்லோ நீயே வல்லைக்           
கன்றுபெறு வல்சிப் பாணன் கையதை  
வள்ளுயிர்த் தண்ணுமை போல                          10   
உள்யாதும் இல்லதோர் போர்வைஅம் சொல்லே.

எ-து: வாயிலாகப் புக்க விறலியைத் தோழி சொல்லியது. (அல்லது) விறலியை எதிர்ப்பட்ட பரத்தை சொல்லியதூஉம் ஆம்.

பரணர்

 ப-ரை: விளக்கின் அன்ன - விளக்கைப் போன்ற, சுடர்விடு - ஒளி விடுகின்ற, தாமரை - செந்தாமரையின், களிற்றுச் செவி அன்ன - களிற்றின் செவியை ஒத்த, பாசடை - பசுமையான பெரிய இலைகள், தயங்க - விளங்க, உண்துறை - நீர் உண்ணும் துறையின்கண், மகளிர் - இறங்கிய மகளிர், இரிய - அஞ்சி ஓட, குண்டு - ஆழமான, நீர் - நீரையுடைய பொய்கையில், வாளை - வாளை மீன்கள், பிறழும் - துள்ளி விளையாடும், ஊரற்கு - தலைவனுக்கு, நாளை - நாளையன்று, மகட்கொடை நேர்ந்த - பரத்தையைக் கொணர்ந்து கொடுக்கும் தொழிலை மேற்கொண்ட, மடம்கெழு பெண்டே - அறிவற்ற விறலியே! தொலைந்த நாவின் - மெய் பேசுதலைத் தொலைந்த நாவினால், உலைந்த குறுமொழி - நிலைகுலைந்த இழிந்த நின் சொல்லுக்கு, உடன்பட்டு - உடன்பட்ட, தாயரோடு - பரத்தையின் தாய்மாரோடு சென்றுஎய்தி, வல்லை - விரைவாக, கன்று பெறு வல்சி - ஆவின் கன்றை உரித்து உணவாகப் புசிக்கின்ற, பாணன் கையதை - பாணன் கையிடத்து இருக்கும், தண்ணுமைபோல - பெரிதாக ஒலிக்கும் தண்ணுமை என்னும் வாத்யம்போல, உள் யாதும் இல்லதோர் - உள்ளே யாதும் அற்ற, போர்வை அம் சொல் - ஒரு மேற் போர்வை உடைய சொற்களை, ஒழிபுடன் சொல்லலை கொல்லோ? - உடன் தவிர்ந்து சொல்லுகின்றிலையோ? அவரையும் முயங்கச் செய்வாய்.

முடிபு: தயங்க இரிய பிறழும் ஊரற்கு எதிர்ந்த பெண்டே; போர்வை அம் சொல் சொல்லலை கொல் என முடிக்க.

கருத்து: விறலீ! பயனற்ற சொற்களைப் பரத்தையரின் தாயர்பாற் கூறுக, யான் நின் சொல் தேறேன் என்று வெகுண்டு தலைவி கூறினாள். 

வி-ரை: கண்டார்க்கு இனியன கூறும் தன்மையள் என்பாள் விறலியைத் தொலைந்த நாவினள் என்றாள். பிறர் அறியாதபடி மறைவாகப் பேசும் தன்மையள் என்பாள் குறுமொழியினள் என்றாள். இழிவு கருதாது மூத்தோரையும் புணர்க்கும் பெற்றியன் பெற்றியள் என்பாள் தாயரொடு சொல்லலை கொல் என்றாள். நின் சொல் என்னிடம் பலிக்காது என்றபடி.

இறைச்சி: வாளைமீன் தாமரை மலர் துன்புற, நீராடும் மகளிர் அஞ்சி ஓட, பொய்கை நீரிற் பாய்ந்து துள்ளும் என்றதன் குறிப்பு. தலைவன் யான் வருந்த, காமக் கிழத்தியர் அஞ்சி அகல, புதியதாக நீ புணர்த்திய பரத்தையிடத்தே சென்று தங்குவன் என்றபடி.

மெய்ப்பாடு - வெகுளி

பயன் - வாயின்மறுத்தல்

---------------------------------------------------------------------

பின்னத்தூரார் பதிப்பும் உரையும்:
310. பரணர்


திணை : மருதம்.

துறை : (1) இது, வாயிலாகப்புக்க விறலியைத் தோழி சொல்லியது.

(து - ம்.) என்பது, பரத்தையிற் பிரிந்து மீண்டுவந்த தலைமகன் தலைமகளது ஊடல் தீர்ப்பான் விறலியை விடுத்தலும் அவளை நோக்கிய தோழி, எங்கள் இறைவனுக்கு இன்னுமொரு பரத்தையை நாளைக் கொணர்ந்து கொடுக்க உடன்பட்டு வந்த விறலி! நின் பயனற்ற சொல்லை அப் பரத்தையரின் தாயர்பாலுங் கூறி அவரையும் முயங்க விடுப்பாய்கொலாமென்று வெகுண்டு கூறாநிற்பது.

(இ - ம்.) இதற்குப், "பாணர் கூத்தர் விறலியர் என்றிவர் பேணிச்சொல்லிய குறைவினை எதிரும்" (தொல். கற். 9) எனவரும் விதிகொள்க.

துறை : (2) விறலியை எதிர்ப்பட்ட பரத்தை சொல்லியதூஉமாம்.

(து - ம்.) என்பது, வெளிப்படை, (உரை இரண்டற்குமொக்கும்.)

(இ - ம்.) இதனை, "புல்லுதன் மயக்கும்" (தொல். கற். 10) என்னும் நூற்பாவின்கண் 'இவற்றொடு பிறவும்' என்பதனாற் கொள்க.

விளக்கின் அன்ன சுடர்விடு தாமரைக்
களிற்றுச்செவி அன்ன பாசடை தயங்க
உண்துறை மகளிர் இரியக் குண்டுநீர்
வாளை பிறழும் ஊரற்கு நாளை
மகட்கொடை யெதிர்ந்த மடங்கெழு பெண்டே
தொலைந்த நாவின் உலைந்த குறுமொழி
உடன்பட் டோராத் தாயரோ டொழிபுடன்
சொல்லலை கொல்லோ நீயே வல்லைக்
கன்றுபெறு வல்சிப் பாணன் கையதை
வள்ளுயிர்த் தண்ணுமை போல
உள்யாதும் இல்லதோர் போர்வையஞ் சொல்லே.


(சொ - ள்.) விளக்கின் அன்ன சுடர் விடு தாமரைக் களிற்றுச் செவி அன்ன பாசடை தயங்க - விளக்கைப் போன்ற ஒளி விடுகின்ற மலர் பொருந்திய தாமரையினுடைய, களிற்றின் - யானையின் செவியைப் போன்ற பசிய இலை அலைபட; உண்துறை மகளிர் இரியக் குண்டு நீர் வாளை பிறழும் ஊரற்கு - நீர் பருகுந் துறையின்கண் இறங்கிய மாதர்கள் அஞ்சி ஓட ஆழமாகிய நீர் மிக்க பொய்கையில் வாளைமீன் வெடிபாயும் ஊரனுக்கு; நாளை மகட் கொடை எதிர்ந்த மடம் கெழு பெண்டே - இனி வருகின்ற அடுத்த நாளைக்கும் ஒரு பரத்தையைக் கொணர்ந்து கொடுத்தற்கு நேர்ந்த அறியாமையுடைய விறலியே!; தொலைந்த நாவின் உலைந்த குறுமொழி உடன்பட்டு ஓராத் தாயரோடு உடன் ஒழிபு - மெய்ம்மையே கல்லாதொழிந்த நாவினால் குலைந்த தாழ்மையுடைய நின் சொல்லுக்குடன்பட்ட அப் பரத்தையரின் தாய்மாருடன் ஒருசார் எய்தி; நீ வல்லைக் கன்று பெறு வல்சிப் பாணன் கையது வள் உயிர்த் தண்ணுமைபோல - நீ தான் விரைவாக ஆவின் கன்றை உரித்து உணவாகக் கொள்ளுகின்ற பாணன் கையிடத்ததாகிய பெரிதாக ஒலித்தலையுடைய தண்ணுமை வாச்சியம்போல; உள் யாதும் இல்லது ஓர் போர்வைச் சொல் - உள்ளே யாதுமில்லாத ஒரு மேற் போர்வையுடைய சொற்களை; சொல்லலை கொல் - சொல்லுகின்றிலையோ? அங்ஙனம் சொல்லி அவரையும் பிறர் முயங்குமாறு விடுக்கலாமன்றோ? எ-று.

(வி - ம்.) தாமரை அதன் மலருக்கு ஆகுபெயர். யாதுமில்சொல் பயனற்ற சொல். தெளிவு பற்றி இறந்த காலத்தாற் கூறினாள்.

பரத்தை நயக்குமாறு வேண்டும் பொய்ம்மைகூறிப் புணர்ப்பித்தலின் தொலைந்த நாவினென்றாள். பிறர் அறியாதவாறு மந்தணமாகக் செய்தமைத்தலிற் குறுமொழியென்றாள். இழிதகவு கருதாது முதியோரையும் புணர்க்கும் இயற்கையையென்பாள், தாயரொடு சொல்லலை கொலென்றாள். நின் பயனற்ற சொல் பரத்தையர்க்கும் அவரன்னையர்க்கும் ஏற்பதன்றி இங்குப் பயன்படாதென்பதாம்.

இறைச்சி :- வாளைமீன் தாமரைவருந்த மகளிர் இரிந்தோடக் குண்டு நீரில் வெடி பாய்ந்து பிறழுமென்றது, தலைமகன் யாம் வருந்தக் காமக் கிழத்தியர் இரிந்தகல விருந்தாக நீ புணர்த்திய புதிய பரத்தையிடத்தே சென்று தங்காநிற்கு மென்றதாம். மெய்ப்பாடு - வெகுளி. பயன் - வாயின்மறுத்தல்.

-----------------------

Let us look at an English translation which is done by George L. Hart, Univ. of California, Berkeley.

What Her Friend said to the viRali dancer (NaRRiNai poem 310). 

The green leaves that look like the ears of great bull elephants
sway on the lotuses pouring out rays as if they were oil lamps,
and young women who go to get drinking water run away in fear
when the vaaLai fish jumps out from the deep water in his town --
listen, foolish woman who want to arrange for him to meet
his courtesan [lit. woman] tomorrow - you with your useless tongue,
your stupid, small words -- you stayed with the mothers
[of those women], and they agreed with you, completely
clueless -- and at once you said your lovely words, didn't you,
mere coverings of emptiness like the huge taNNumai drum
with its great voice in the hand of your PaaNan who is so low
they give him a calf to eat. [lit.: who receives a calf for his food]. 

                                 Translation by George L. Hart. 

[viRali is the village dancer, spouse of the PaaNan singer. Commentators mention that these are the angry words told to the viRali dancer by a friend of the wife of the land lord or by  a courtesan who was not taken to the chieftain.] 

There is an old taboo of beef-eating among Hindu castes in India.  While they do not consume or kill cattle directly, the farmers  dispose of the cattle useless in their farms away to outcaste  dalits. This is mentioned, for example, M. N. Srinivas, 1962, Caste  in India, New York, pg. 126 "I am not denying that cattle are regarded as in some sense sacred, but I doubt whether the belief is as powerful as it is claimed to be. I have already mentioned  that buffaloes are sacrificed to village goddesses. And in the case  of the cow, while the peasant does not want to kill the cow or bull  himself he does not seem to mind very much if someone else does the dirty job out of his sight." 

In the sangam poetry, land geography is divided into five landscapes. 
For an intro, 
http://en.wikipedia.org/wiki/Sangam_landscape 
The rich fertile wet lands are called Marutham. The characteristic  animal for this landscape is water buffalo, and the crop is paddy.  In this Marutham landscape, Indra is said to be its god known  for infidelity with women. Like Indra's affairs (e.g., with Ahalya  in the Ramayana), Marutham poems typically speak of land lords'  affairs with courtesans, and sangam poems often show the lady of the  house of the chieftain (probably a cross-cousin by arranged marriage) quarreling with her husband's procurer go-betweens such  as singers, washerwoman, entertainers, etc., NaRRiNai 310 is an important example in which a calf gets donated to the village minstrel. 


In the case of cows in Indian farms, excess male calves were culled especially in regions  where water resource was abundant and the main crop was rice paddy.  In these wet land farms, the plough and draft animals are male  buffaloes (called pOthu in Malayalam and Tamil), and the gender  ratio studies show that male buffaloes are more compared to females.  Much like in South East Asia, in the wet land paddys being prepared for transplantation, male buffaloes (instead of zebu oxen) are  valued as puddlers. On the other side, milch cows outnumber bulls or oxen in wet land districts, and male calves have to be culled. (A. Vaidyanathan, et al., Bovine sex and species ratio in India,  Current Anthropology, 23, 4, 1989). 

Next let us look at how naRRiNai 310 theme is repeating in the next 1500 years of Tamil literature. For example, in Appar, MaaNikkavaacakar, PaaNDikkOvai (iRaiyanAr akapporuL), Poyyaamozip Pulavar (12th century), Cokkappa Naavalar (17th century), Vaanchinathan who shot Ashe (Colector of Tinnevelly), Vellakaal Pa. Subramania Mudaliar, ...