உடன்பிறப்பே,
பேரவையில்
நியாயமான பிரச்சினைகளை எழுப்புவதற்கும், அவதூறுகளையும், ஆதார மற்ற
குற்றச்சாட்டுகளையும் சொல்லும்போது உரிய பதில் அளிப்பதற்கும் பேரவைத்
தலைவரோ, ஆளுங்கட்சியோ வாய்ப்பு அளிக்காத நிலையில், ஏற்கனவே திட்ட மிட்டபடி,
அ.தி.மு.க.வின் தோழமைக் கட்சியைச் சேர்ந்த ஒருவரைப் பேசுமாறு பேரவைத்
தலைவரே 19-4-2012 அன்று அழைக்கிறார். உடனே அவர் எழுந்து, அரசைப் புகழோ
புகழ் என்று புகழ்ந்து பேச, அதைத் தொடர்ந்து முதலமைச்சர் ஜெயலலிதா
எழுந்து, ஒரு நீண்ட அறிக்கையினைப் படித்ததோடு, அதனைச் செய்தியாளர்
களுக்கும் அளித்துள்ளார்கள். அந்த நீண்ட அறிக்கை முழுவதும் தைத் திங்கள்
முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு நான் அடுக்கடுக்கான
ஆதாரங்களோடு எழுதிய தற்கும், ஜெயலலிதா தெரி வித்த பதில்கள் எல்லாம்
எவ்வளவு தவறானவை என்பதை நிரூபித்து எழுதியதற்கும் விளக்கம் என்ற பெயரால்
எழுதிப் படித்த “சமாளிப்புகள்” தானே தவிர அடிப்படையில் அவற்றில் எதுவும்
உண்மை இல்லை.
அரசு விழாவில் ஜெயலலிதா பேசும்போது, தமிழ் மொழியை
உலகம் முழுவதும் பரப்பு வதற்காக அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இரண்டு
உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தி னோம் என்று சொன்னதால், தி.மு. கழக ஆட்சிக்
காலத்திலும் இரண்டு உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தினோமே, அதுமட்டும் தமிழ்
மொழியை உலகம் முழுவதும் பரப்புவதற் காக அல்லவா? என்று கேட்டிருந்தேன்.
அதற்கு நேரடியாகப் பதில் சொல்லத் தெரியாத ஜெயலலிதா, கோவையில் நடைபெற்ற
மாநாடு கருணாநிதியின் சுய விளம்பரத்திற்காக நடத்தப்பட்ட “தன்னல தம்பட்ட
மாநாடு” என்றும் பேரவையிலே கூறியிருக்கிறார்.
பொதுவாக பேரவையில்
110வது விதியின் கீழ் அறிக்கை படிக்கும்போதும், யாரோ ஒரு உறுப்பினர் ஒரு
ஐயத்தை எழுப்பி அதற்குப் பதில் அளிக்கின்ற போதும் குற்றச்சாட்டுகள்
இருக்கக் கூடாது என்பது மரபு. மரபுக்கும், அ.தி.மு.க. அரசுக்கும் என்ன
சம்மந்தம் என்று கேட்கிறீர்களா? அவர்களுக்கு மரபாவது, மண்ணாங்கட்டியாவது?
இருந்தாலும் முதல் அமைச்சர், பேரவையிலேயே படித்திருக்கிறாரே; நான்
விளக்கம் தராமல் இருக்கலாமா? அம்மையார் ஜெயலலிதா நடத்திய தஞ்சை உலகத்
தமிழ் மாநாட்டிலே பாடிய வாழ்த்துப் பாடலிலேயே ஜெயலலிதா பெயரை பல
இடங்களிலே பாராட்டிக் குறிப்பிட்டே பாடப் பட்டது. ஆனால் கழக அரசு நடத்திய
கோவை மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பா என்னால் எழுதப்பட்டதே தவிர,
அந்தப் பாடலில் என்னைப் பற்றிய பாராட்டு எதுவுமே கிடையாது. தஞ்சையில்
அம்மையார் ஜெயலலிதா நடத்திய மாநாட்டிற்காக வருகை தந்த இலங்கைத் தமிழ்
அறிஞர் கா. சிவத்தம்பி உட்பட பலர் மாநாட்டில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவே
இல்லை. இன்னும் சொல்லப்போனால் வெளிநாட்டுத் தமிழறிஞர்கள் எல்லாம்
விரட்டப்பட்டார்கள் என்று ஏடுகளிலேயே அப்போது செய்தி வந்தது. ஆனால்
கோவையில் கழக அரசு நடத்திய மாநாட்டிற்கு ஜார்ஜ் ஹார்ட், அஸ்கோ பர்போலா,
வாசெக், கா. சிவத்தம்பி, உல்ரிக் நிக்லாத், கிரிகோரி ஜேம்ஸ்,
அலெக்சாண்டர் துதியான்கி, ஆண்ட்ரீஸ் கத்தோலியஸ், சீன நாட்டைச் சேர்ந்த
கலையரசி, தாமஸ் லேஇல்லை. இன்னும் சொல்லப்போனால் வெளிநாட்டுத்
தமிழறிஞர்கள் எல்லாம் விரட்டப்பட்டார்கள் என்று ஏடுகளிலேயே அப்போது செய்தி
வந்தது. ஆனால் கோவையில் கழக அரசு நடத்திய மாநாட்டிற்கு ஜார்ஜ்
ஹார்ட், அஸ்கோ பர்போலா, வாசெக், கா. சிவத்தம்பி, உல்ரிக் நிக்லாத்,
கிரிகோரி ஜேம்ஸ், அலெக்சாண்டர் துதியான்கி, ஆண்ட்ரீஸ் கத்தோலி யஸ், சீன
நாட்டைச் சேர்ந்த கலையரசி, தாமஸ் லேமன் ஆகிய வெளி நாட்டு அறிஞர்கள்
எல்லாம் வருகை தந்து பாராட்டினார்கள். முன்வரிசையிலே அமர்ந்திருந்தார்
கள். ஆனால் ஜெயலலிதா, முன் வரிசையிலே என் குடும்பத்தினரும், தி.மு.க.வைச்
சேர்ந்த “தலை சிறந்த தமிழறிஞர்களும்” அமர்ந்திருந்ததாக கிண்டல்
செய்துள்ளார். என்னுடைய குடும்பத்தினர் முன் வரிசையிலே அமர்வதே பழித்துப்
பேசப்படக்கூடிய பாவகரமான ஒன்றா? தி.மு.க.வில் தமிழறிஞர்களே கிடையாதா?
அ.தி.மு.க.விலே தான் தலை சிறந்த தமிழறிஞர்கள் எல்லாம் இருக்கிறார் களா?
என்னுடைய குடும்பத்தினர் முன் வரிசை யிலே அமரலாமா என்று கேட்கின்ற
ஜெயலலிதா சட்டப்பேரவையிலே நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு தன் உடன்பிறவாச்
சகோதரியை அழைத்து வந்து மரபுக்கு மாறாக துணை சபாநாயகர் அமர வேண்டிய
இடத்திலே உட்கார வைத்தாரே, அது எந்த வகை யிலே சரியானது? ஜெயலலிதாவே
பேரவைத் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்து கொண்டாரே; அது எவ்வகை மரபு என்பதை
ஜெயலலிதாதான் விளக்க வேண்டும்.
சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா
மண்டபத்தில் பேசிய ஜெயலலிதா பௌர் ணமி எந்த நட்சத்திரத்தில் வருகிறதோ, அந்த
நட்சத்திரத்தின் பெயர்தான் மாதத்தின் பெயராக அமைந்துள்ளது என்று
கூறியதையொட்டி, சித்திரை, கார்த்திகை மாதங்களைத் தவிர மற்ற மாதங்கள்
எல்லாம் நட்சத்திரங்களின் பெயர்களில் இல்லையே என்று நான் கேட்டிருந்தேன்.
அதற்கு பேரவையில் பதிலளித்த முதலமைச்சர் ஜெயலலிதா, அந்தப் பெயர்கள்
எல்லாம் திரிந்து மாதங்களாகி விட்டன என்று வழக்கம்போல சமாளிக்கப்
பார்த்திருக்கிறார். உதாரணமாக விசாகம் என்பது வைகாசியாகவும் - அனுஷம்
என்பது ஆனியாகவும் - பூராடம் என்பது ஆடியாகவும் - திருவோணம் என்பது
ஆவணியாகவும் - மிருகசீர்ஷம் என்பது மார்கழியாகவும் - பூசம் என்பது
தையாகவும் - மகம் என்பது மாசி மாதமாகவும் - உத்திரம் என்பது
பங்குனியாகவும் வார்த்தைகள் திரிந்து விட்டதாகச் சொல்லி யிருக்கிறார்.
தமிழறிஞர்கள்
இந்த மேதா விலாச விளக்கத்தை ஏற்க முடிந்தால் சரி! சென்னப்பட்டி னம்
சென்னை என்று மருவியதைப் போலத்தான் இந்தச் சொற்கள் எல்லாம் மாறிவிட்டன
என்கிறார். நன்றாகவே காதில் பூ சுற்ற முயன்றிருக்கிறார்! நான் மேலும்
கேட்கிறேன்; நட்சத்திரங்களின் பெயர்கள் எல்லாம் திரிந்துதான் மாதங்களின்
பெயர்களாக உள்ளன என்று கூறும் ஜெயலலிதா அவர்களே, இந்தப் பெயர்கள் எல்லாம்
திரிந்தன என்றால், நட்சத்திரங்களின் பெயர்களை மட்டும் ஏன் பழைய பெயரிலேயே
உச்சரிக்கிறார்கள்? நட்சத்திரங்களின் பெயர்களும் அல்லவா திரிந்து
வழங்கப்பட்டிருக்க வேண்டும்?
தொல்காப்பியர் “திங்கள் முன்வரின்
இக்கே சாரியை” - இகர ஈற்று மாதப் பெயர்கள் (ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி,
ஐப்பசி, மார்கழி, மாசி, பங்குனி) - “இக்கு” சாரியை பெறும் என்றும்
“திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன” ஐகார ஈற்று மாதப் பெயர்கள்
(சித்திரை, கார்த்திகை, தை) முன் சொன்னவாறு இக்கு சாரியை பெறும் என்றும்
கூறியுள்ளாரே, அப்படியென் றால் இந்தப் பெயர்கள் எல்லாம் தொல்காப்பியர்
காலத்திலேயே திரிந்து விட்டன என்று ஜெயலலிதா சொல்கிறாரா?
அதுபோலவே
சங்க இலக்கியங்களில் எல்லாம் மாதப் பெயர்கள் இடம் பெற்றுள்ளனவே,
அப்படியென்றால் சங்க இலக்கியங்களுக்கு முன்பாகவே ஜெயலலிதா சொல்வதைப்போல
நட்சத்திரங்களின் பெயர்கள் எல்லாம் இத்தகைய மாதப் பெயர்களாக திரிந்து
விட்டனவா?
ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டு மலரிலே சிறுவை
நச்சினார்க்கினியன் எழுதிய ஒரு கட்டுரையை அம்மையார் ஜெயலலிதா மேற்கோள்
காட்டிப் பேசியிருந்த காரணத்தால், அதே கட்டுரையின் முதல் பகுதியில்,
அதே சிறுவை நச்சினார்க்கினியன் தை மாதம் பற்றி எழுதியதை அப்படியே வரி
பிறழாமல் குறிப்பாக “நாம் தைத் திங்களையே ஆண்டின் முதல் திங்களாய்க்
கணக்கெடுத்துச் செயற்படுத்து வோம்” என்று அவர் எழுதியிருக்கிறார் என்று
நான் பதிலாகத் தந்திருந்தேன். தற்போது அம்மையார் முன் பக்கத்தில் சிறுவை
நச்சினார்க்கினியன் என்று தெரிவித்துள்ள கருத்தைப் பற்றி தான் எதுவும்
சொல்லவில்லை என்று அப்படியே புறமுதுகிட்டுள்ளார். நச்சினார்க்கினியன்
பற்றி நூற்றாண்டு விழா மண்டபத்திலே முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டாரா
இல்லையா? அதே நச்சினார்க் கினியன் தைத் திங்களையே ஆண்டின் முதல்
திங்களாகச் செயல்படுத்தலாம் என்று சொல்லியிருக்கிறாரா இல்லையா? அதைத்
தான் தி.மு. கழக அரசு, தமிழறிஞர்கள் சொன்னதையெல்லாம் ஒப்புக்கொண்டு
சட்டத்தைக் கொண்டு வருகிறோம் என்று கூறியதே தவிர தானாக இட்டுக்கட்டி
எதையும் செய்துவிடவில்லை.
“வாழ்வியற் களஞ்சியம்” என்ற நூலில் “தை
பிறந்தால் வழி பிறக்கும்” என்றுதான் குறிப் பிடப்பட்டிருக்கிறதே தவிர, “தை
பிறந்தால் புத்தாண்டு பிறக்கும்” என்று குறிப்பிடப்பட வில்லை என்று
சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா! என்ன செய்வது? ஜெயலலிதா போன்றவர்கள்
எல்லாம் முதலமைச்சராக வருவார்கள், அவர்களுக்கு இப்படியெல்லாம் சந்தேகம்
வரும் என்பது அந்த நூலாசிரியருக்குத் தெரியவில்லை போலும்! ஆனால் நான்
இந்தப் பதிலை எழுதும்போது கொட்டை எழுத்துக்களில், தமிழ் ஆண்டின் தொடக்கமே
தை முதல் நாள் என்றும், அதுவே விழாவாகச் சிறப்பித்துச் செய்யப்படு
கின்றது என்றும் அந்த நூலிலே உள்ளது என்பதை எழுதிக்
காட்டியிருக்கிறேன். இந்தப் பொருள் புரியாமல் தை பிறந்தால் வழி
பிறக்கும் என்றுதான் அதிலே உள்ளது என்று ஜெயலலிதா பேரவையில் உண்மைக்குப்
புறம்பாகச் சொல்லியிருக்கிறார்.
அடுத்து ஜெயலலிதா “செந்தமிழ்ச்
சொற்பிறப்பியல் பேரகர முதலி” என்ற நூலினை மேற் கோள் காட்டி, அந்த நூலில்
தமிழாண்டின் தொடக்க மாதம் தை என்று குறிப்பிட்டிருப்ப தாகக்
கூறியிருக்கிறார் திரு. கருணாநிதி, அந்த நூலில் 113வது பக்கத்தில்
“இச்செய்தி தமிழ் ஆண்டு எனும் நூலிலிருந்து தொகுக்கப்பட்டது” என்றிருப்பதை
தனக்கு வசதியாக திரு. கருணாநிதி மறைத்துவிட்டார்” என்று பேரவையிலே
படித்துக் காட்டியிருக்கிறார். தமிழக அரசினால் - தமிழக அரசின் செலவில் -
முதலமைச்சர் ஜெயலலிதாவின் அணிந் துரையுடன் வெளியிடப்பட்ட “செந்தமிழ்ச்
சொற்பிறப்பியல் பேரகர முதலி” யிலேயே தை என்பதற்குப் பொருளாக “தமிழாண்டின்
தொடக்க மாதம், திருவள்ளுவராண்டின் தொடக்க மாதம்” என்றெல்லாம் இருப்பதை
நான் சுட்டிக்காட்டியிருந்தேன். அந்தச் செய்தி தமிழ் ஆண்டு எனும்
நூலிலிருந்து தொகுக்கப்பட்டது என்பதை நான் மறைத்துவிட்டேன் என்கிறார்
ஜெயலலிதா. சொற்பிறப்பியல் பேரகர முதலியில் பொரு வெளியிடப்பட்ட
“செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி” யிலேயே தை என்பதற்குப் பொருளாக
“தமிழாண்டின் தொடக்க மாதம், திருவள்ளுவ ராண்டின் தொடக்க மாதம்”
என்றெல்லாம் இருப்பதை நான் சுட்டிக்காட்டியிருந்தேன். அந்தச் செய்தி
தமிழ் ஆண்டு எனும் நூலிலிருந்து தொகுக்கப்பட்டது என்பதை நான்
மறைத்துவிட்டேன் என்கிறார் ஜெயலலிதா. சொற்பிறப்பியல் பேரகர முதலியில்
பொருள் கூறும்போது, அதை எந்தப் புத்தகத்திலிருந்து எடுத்தாண்டு
இருக்கிறோம் என்பதை விளக்கியிருக்கிறார்கள். அதிலே என்ன தவறு? இன்னும்
சொல்லப்போனால், அம்மையார் அரை வாக்கியத்தைத்தான் எழுதியுள்ளார். முழு
வாக்கியத்தையும் நான் கூறுகிறேன். அதாவது “திருக்குறள் மணி புலவர்
இறைக்குருவனார் இயற்றிய திருவள்ளுவர் ஆண்டு அல்லது தமிழ் ஆண்டு எனும்
நூலிலிருந்து இச்செய்தி தொகுக்கப் பட்டது” என்று உள்ளது. ஆக நான்
கூறியதற்கு மற்றும் ஓர் ஆதாரமாக புலவர் இறைக் குருவனார் அவர்களும் தை
மாதம் தமிழாண்டின் தொடக்க மாதம் என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்
என்பதைத்தானே அம்மையார் ஜெயலலிதா ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இறைக்குருவனார் போன்ற புலவர் பெருமக்கள் எல்லாம் தெரிவித்த யோசனையை
ஏற்றுத்தான் இந்தச் சட்டத்தை நான் பிறப்பித்தேன் என்பது உறுதியாகிறதா;
அல்லவா? இறைக்குருவனார் கருத்தை யேற்றுத்தானே அந்த நூலில் அந்தப் பொருளை
இடம் பெறச் செய்திருக்கிறார்கள். அந்த நூலை முழுவதும் படித்து
விட்டுத்தானே முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் அந்நூலுக்கு அணிந்துரை
கொடுத்தார்? இப்போது அவரே அந்தக் கருத்தை மாற்றிக் கொள்ளலாமா?
தமிழ்நாட்டில் இருக்கின்ற தமிழ் அறிஞர்களே, புலவர்களே, சான்றோர்களே
அம்மையார் வைத்த வாதம் சரியா? நான் தருகின்ற விளக்கம் சரியா? என்பதை சமன்
செய்து சீர்தூக்கும் கோல் போல் இருந்து நீங்களே பதில் கூறுங்கள்.
அடுத்து
முதலமைச்சர் ஜெயலலிதா மிகத் தெளிவாக ஒரு ஐயத்தைக் கேட்டிருக்கிறார்.
1963ஆம் ஆண்டு நான் சட்டப்பேரவையில் உரையாற்றியதைக் குறிப்பிட்டு, அப்போதே
திருவள்ளுவர் தை மாதத்தில்தான் பிறந்தார் என்று கூறி ஏன் விடுமுறை நாளாக
அந்த நாளை அறிவிக்குமாறு கேட்கவில்லை என்று கேட்டுள்ளார்.
தமிழறிஞர்களும், புலவர்களும் என்னிடம் 1963ஆம் ஆண்டுக்கு முன்பே இந்தக்
கோரிக்கையைச் சொல்லியிருப்பார்களானால் நான் அப்போதே அதைக் கூறியிருக்க
முடியும். அவர்களிடம் இதைக் கேட்டால், 1969ஆம் ஆண்டுக்குப் பிறகு அண்ணா
மறைந்து நீ முதலமைச்சராக ஆவாய் என்று எங்களுக்கு எப்படித் தெரியும்
என்பார்கள்? இந்தக் கேள்விக்குத்தான் நான் மயிலை கூட்டத்திலேயே தெளிவாக;
“சூரியன் கிழக்கே உதிக்கிறது, மேற்கே மறைகிறது என்று முன்பு சொன்னார்கள்.
பிறகுதான் விஞ்ஞானிகள் அது தவறான கூற்று, சூரியன் ஒரே இடத்தில் தான்
இருக்கிறது; பூமிதான் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு, சூரியனையும்
சுற்றுகிறது என்று கூறியபிறகு அதை ஏற்றுக் கொண்டோம். அதைப்போலவே பூமி
தட்டையாக உள்ளது என்று சொல்லப்பட்டது. பிறகு விஞ்ஞானிகள் கண்டு பிடித்துச்
சொன்ன பிறகு, பூமி உருண்டை என்பதை ஏற்றுக் கொண்டோம். ஏன் இதை முன்பே சொல்ல
வில்லை என்றா கேட்க முடியும்?” என்று குறிப்பிட்டேன்.
அதுமாத்திரமல்ல;
இதிலே எந்த ஆண்டு முடிவெடுக்கப்பட்டது என்பது பிரச்சினையல்ல. “தினமணி”
நாளிதழில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்த திரு. சாமி தியாகராசன் எனக்குக் கூட
கடிதம் ஒன்றை, 1921ஆம் ஆண்டில் மறைமலை அடிகள் தலைமையில் பச்சையப்பன்
கல்லூரியில் பேசி முடிவெடுத்தார்கள் என்பதற்கு ஆதாரம் இல்லையே என்று
எழுதியிருந்தார். எப்போது முடிவெடுத்தார்கள் என்பதைவிட என்ன
முடிவெடுத்தார்கள் என்பதுதான் முக்கியம். முடிவெடுத்தவர்கள் யார்
என்பதுதான் முக்கியம். அந்த அடிப்படையில்தான் கழக ஆட்சியில் முடிவெடுக்
கப்பட்டது. இதிலே உள்ள முக்கிய குறையே; தமிழர்களுக்கு என்று முறையான
வரலாறு இல்லை என்பதுதான். இந்தக் குறை என்னால் மாத்திரமல்ல; நம்முடைய
தமிழறிஞர்கள் பலராலும், வரலாற்றுப் பேராசிரியர்களாலும் உணரப்பட்டது.
பொறியாளர்
வே. வரதராசன் அவர்கள் எழுதிய “தமிழர் நாகரீகம்” என்ற நூலில் “1921ஆம்
ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலை அடிகளார்
தலைமையில் தமிழ் அறிஞர்களும், சான்றோர் களும், புலவர்களும் ஒன்று கூடி
ஆராய்ந்து திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவதென
முடிவெடுத்தனர். திருவள்ளு வர் காலம் கி.மு. 31 என்றும் அதையே
திருவள்ளுவர் ஆண்டு தொடக்கம், தைத் திங்கள் முதல் நாள் (பொங்கல்
திருநாளில்) எனவும் முடிவெடுத்தனர்” என்றுள்ளது.
1937ஆம் ஆண்டு
செப்டம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் - தந்தை
பெரியார், உமாமகேசு வரனார், பேராசிரியர் கா. சுப்பிரமணியன், தெ.பொ.
மீனாட்சிசுந்தரனார், தமிழ்த் தென்றல் திரு.வி.க., மறைமலை அடிகளார்,
பி.டி. ராஜன், ஆற்காடு ராமசாமி முதலியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்,
பட்டுக்கோட்டை அழகிரி போன்றோர் கலந்து கொண்ட அவையில் - தை முதல் நாள்
தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என்று நாவலர் சோமசுந்தர பாரதியார் தனது
தலைமையுரையில் வலியுறுத்தியிருக்கிறார்.
9-5-1971இல் முத்தமிழ்க்
காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் தலைமையில் திருச்சியில் நடைபெற்ற
தமிழகப் புலவர் குழுவின் முப்பதாம் கூட்டத்தில் தை முதல் நாள் தமிழ்ப்
புத்தாண்டு பொங்கல் விழா என முடிவு செய்யப்பட்டது.
மேலும் கடந்த
இரண்டு நாட்களாக நமது “விடுதலை” நாளிதழில் அமெரிக்காவில் நாசா விண்
மையத்தில் பணியாற்றும் பிரபல விஞ்ஞானி முனைவர் நா. கணேசன் அவர்கள் எழுதிய
நீண்ட கட்டுரையில் இந்தப் பொருள் பற்றி விரிவான விளக்கங்களையும்,
எந்தெந்தப் புலவர்கள், தமிழறிஞர்கள் கடந்த காலத்தில் தை முதல் நாள்தான்
தமிழ்ப் புத்தாண்டு என்று தெரிவித்தார்கள் என்றும் எழுதப்பட்டுள்ளது. இந்தப்
புலவர் பெருமக்கள் எல்லாம் தெரிவித்த யோசனைகளின் அடிப்படையிலே தான் -
எந்த ஆண்டு அந்த யோசனை தெரிவிக்கப்பட்டது என்பதைப் பற்றியெல்லாம்
கவலைப்படாமல், தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்ற உண்மை அனைத்துத்
தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதால் 2008இல் நான்
இவற்றையெல்லாம் அறிந்து ஆய்ந்த பிறகு முடிவெடுத்து அறிவித்தேன் என்பதைப்
புரிந்துகொள்ள முடியும்.
ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா பேரவையில்
விடுத்துள்ள அறிக்கையில் நான் முறையாக எதையும் ஆய்வு செய்யாமல்,
தன்னிச்சையாக, தான்தோன்றித்தனமாக சட்டத்தை இயற்றினேன் என்று கூறியிருக்
கிறார். தைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதை தற்போது
சித்திரைத் திங்கள் என்று அம்மையார் மாற்றியிருப்பது தான் எதையும் ஆய்வு
செய்யாமல் காழ்ப்புணர்வோடு செய்யப்பட்ட செயல். அவர்தான் தன்னிச்சையாக,
தான்தோன்றித் தனமாக தமிழினத்தைத் திசை திருப்பும் வகையில் நடந்து
கொண்டுள்ளார் என்பதைத் தமிழக வரலாறு ஒருநாள் நிச்சயமாக மெய்ப்பிக்கும்!
தமிழர்களின் சரியான அடையாளத்தை அழித்திட முற்படுவது அக்என்பதை தற்போது
சித்திரைத் திங்கள் என்று அம்மையார் மாற்றியிருப்பது தான் எதையும் ஆய்வு
செய்யாமல் காழ்ப்புணர்வோடு செய்யப்பட்ட செயல். அவர்தான் தன்னிச்சையாக,
தான்தோன்றித் தனமாக தமிழினத்தைத் திசை திருப்பும் வகையில் நடந்து
கொண்டுள்ளார் என்பதைத் தமிழக வரலாறு ஒருநாள் நிச்சயமாக மெய்ப்பிக்கும்!
தமிழர்களின் சரியான அடையாளத்தை அழித்திட முற்படுவது அக்கிரமம்! அதற்குப்
பொய்யான நியாயம் கற்பித்திட முயலுவதும் புல்லர்கள் சிலர் புயம் தட்டிப்
புறப்படுவதும் அராஜகம் என்பதை உண்மைத் தமிழர் விரைவில் உணர்ந்தே தீர்வர்!
அன்புள்ள,
மு.க.
தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம், முரசொலி 22-ஏப்ரல்-2012
Posted by
நா. கணேசன்
at
1
comments
திருவள்ளுவர் திருநாள் அளித்த நாவலர் சோமசுந்தர பாரதியார்
Navalar Somasundara Bharathiyar (with Chozhavandan R. Srinivasavaradan and Madurai V. G. Srinivasan. Photo courtesy: R. A. Padmanabhan, Chithira Bharathi, Publisher: Pollachi N. Mahalingam).
In Tamil Nadu, there is a raging controversy between Jayalalitha and M. Karunanidhi about Tiruvalluvar AaNDu. I wrote a piece in Vallamai e-zine giving some details on who gave the Thai Pongal date:
http://www.vallamai.com/literature/articles/19155/
Subsequently it was printed in Tamil Nadu in Viduthalai, a magzaine started by Periyar EVR, and Kalaignar M. Karunanidhi read the essay and quoted it in Kalaignar TV & he mentioned about it also in his daily letter to UdanpiRappu in Murasoli paper (22-April-2012).
After the Vallamai article, "TiruvaLLuvar tirunAL tanta Naavalar Somasundara Bharathiyar" I wrote another in the series for Vadakkuvaasal, a print magazine from Delhi, suggesting a compromise: Tiruvalluvar TirunaaL on Pongal day, and Tolkaappiyar TirunaaL on Chitthirai 1 (traditional Tamil New Year day). Note that I mention extensively Jaina contributions to Tamil, and the North-South megalithic expansion into sites like KoDumaNam & Porunthal (Kongu), Adichanalluur (Porunai) etc.,
Next article I'm writing is about the Tamil month name, தை (tai) which is a word of pure Tamil/Dravidian origins. and is not a Sanskrit word as evidenced from Sangam literature.
Any learned comments welcome,
N. Ganesan
--------------
வல்லமை இணைய இதழிலும், பெரியார் தோற்றுவித்த விடுதலை (சென்னை) இதழிலும் அச்சான கட்டுரை.
Posted by
நா. கணேசன்
at
0
comments
கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்தும் பாரதியார் விழா 2012
மகாகவி பாரதியார் பெயரில் நடக்கும் இலக்கிய, ஆய்வு, கலை விழா!
பாரதி பக்தர்கள் பலரும் தமிழ்நாட்டிலிருந்து கலந்துகொள்கின்றனர். தமிழ்நாட்டில் தமிழ் ஆசான்களிடையே கணிமையும், வலைப்பதிதலும் பற்றிச் சில ஆண்டுகளாய் பட்டறைகள் நடத்திக் கற்பித்துவரும் முனைவர் மு. இளங்கோவன், கொழும்பில் வாழும் சர்வேசுவரன் போன்றோர் ஈழத் தமிழரைக் கணினி யுகத்தில் படைப்பாளிகளாகச் செய்யத் துணைபுரிய இவ்விழா போன்றவைகள் மிக உதவும். விழா நிகழ்ச்சிகளை பேரா. வவேசு, மு. இளங்கோ, புதுவை அறிவுநம்பி, ... விரிவாகப் பதிவு செய்ய வேண்டுகிறேன். பேரா. கவிஞர் வ. வெ. சுப்பிரமணியன் கலந்துகொள்கிறார். அவர் தலைமைக் கவிதை வாசிக்கிறார்.
பாரதியார் சங்கத் தலைவர் ரா. காந்தி எங்கள் ஊர்க்காரர். கொழும்புத் தமிழ்ச் சங்க வேண்டுகோளை ஏற்று பாரதியார் தமிழ்ச் சங்கம் ஆண்டுதோறும் விழாக்களை நடத்தலாம். அமெரிக்காவில் பெட்னா, தமிழ்நாடு அறக்கட்டளை, ... போன்றன ஆண்டுதொறும் கலைவிழாக்களை பல லட்சம் $-ல் சினிமா, டிவி தமிழ் அறிஞர்களை அழைத்து எடுத்துவருவதை மாதிரியாகக் கொண்டு இலங்கை நகரங்களில் செயல்படலாம் - கொழும்பு, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் போன்ற நகரங்களுக்கு தமிழ்நாட்டுத் தமிழ்ப் பேராசிரியர்கள், அறிஞர்கள், கலைவாணர்கள் வருகைதரப் பெருவாய்ப்பாக இவ்விழாக்கள் அமையும்.
ஈழத் தமிழர்கள் டொராண்டோ பல்கலையில் - பேரா. எம்.ஏ. நுஃமான் நண்பர் மகாகவியின் மகன் சேரன் போன்றோர் சேர்ந்து நடத்தும் ஆய்வு மாநாடுகள் ஆண்டுதொறும் நன்கு நடக்கின்றன. திராவிட மொழியியல், சிந்து ஆய்வு, சங்க ஆராய்ச்சி போன்றன சிறக்க டொராண்டோ பல்கலையில் திராவிடாலஜிக்கு ஒரு பேராசிரியர் பீடத்தை தமிழர்கள் அமைத்திடல் வேண்டும். தேவையான பணம் பெட்னா, டிஎன்எஃப், ஈழ தமிழர் சங்கங்கள் கொடுக்கும் என நம்புகிறேன். தமிழ்நாட்டில் தமிழாய்வுகள் பெரிதாக இல்லை. இருந்த ஆய்வேடுகளும் அனேகமாக இலாது போய்விட்டன. இலங்கை நாட்டில் இக்குறைகளுக்கு நிவாரணம் வரும் என எதிர்பார்க்கலாம். ஆண்டுதொறும் இலங்கைத் தலைநகர் கொழும்பில், யாழில், மட்டக்களப்பில் தமிழ்ச் சங்கத்தார் நடாத்தும் ஆய்வுவிழாவில் தமிழ்நாட்டு அறிஞர்கள் கட்டுரை படித்தால் பெருமை என்ற நிலை ஏற்படல் வேண்டும்.
ஆய்வேடுகள் மாநாடு முடிந்தபின் இணையத்தில் ஏற்றப்பட்டால் உலகெங்கும் செம்மொழி ஆய்வு சிறக்கும்.
இந்தியா போற்றும் ஜனாதிபதி மேதகு. கலாம் அவர்களின் யாழ் விஜயத்தின் போது தமிழக, ஈழ நாட்டு உறவுகள் மேம்பட ஆலோசனைகள் வழங்கினார்கள். தமிழ்நாடு, ஈழம் உறவுப்பாலமும், கடற்பாலமும் உருவாக வேண்டும். படகு, கப்பல் போக்குவரத்தால் இருபுறமும் வாழும் மக்கள் எளிதில் சென்றுவர வழிகள் பெருகவேண்டும். பேரா. எம். ஏ. நுஃமான் பாரதியை ஆராய்ந்தவர். பாரதியார் சங்கமும், கொழும்பு தமிழ்ச் சங்கமும் அவர் தலைமையில் நடத்தும் முதல் மாநாடு ஆய்வுக்கு உரிய இடம்
அளிப்பதாக! ஐரோப்பா, அமெரிக்கா செல்லுதல் தமிழ்நாட்டு தமிழறிஞர்களுக்கு சற்றுக் கடினமான செயல் (விசா, செலவு, இன்னபிற). இலங்கை மாநாடுகள் ஆண்டுதோறும் நிகழ்ந்தால் பங்குபெற்று தங்கள் அரிய ஆய்வுகளை வெளியிட ஒரு மேடையாக திகழ வாய்ப்புகள் மிகுதி. ஈழத் தமிழர்கள் இந்த முன்னெடுப்பைச் செய்தால் தமிழ்த்தாய் மகிழ்வாள்.
-------------------
வீரகேசரி, சூன் 1, 2012
சென்னை பாரதியார் சங்கம் இணைந்துகொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்ப் பெருவிழா!
பாரதியார் சங்கத்தின் தலைவர் - கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில்!
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் மேதகு அப்துல் கலாம்:
யாழ் சர்வகலாசாலையில் ஜனாதிபதி கலாம்:
-------------------------------
கொழும்பைப் புதையுங்கள், பாரதியை வாழவிடுங்கள் - இலங்கை மாநாட்டு சர்ச்சை
மக்களைக் கொன்றுவிட்டால், அவர்கள் பேசிய மொழி வாழுமா?- இது அபத்தமான கேள்வி என்றால் கொழும்பில் நடக்கும் மாநாடும் அத்தகைய அபத்தம்தான்!
சென்னையில் உள்ள பாரதியார் சங்கமும், கொழும்பு தமிழ்ச் சங்கமும் இணைந்து இலங்கைத் தலைநகர் கொழும்பில், பாரதி விழாவையும் உலகத் தமிழ் இலக்கிய மாநாட்டையும் ஒருசேர நடத்துகின்றன.்
இதில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாட்டில் இருந்து தமிழறிஞர்கள் சிலர் சென்றதற்கு வைகோ கண்டன அறிக்கை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் தலைமையில் 50 படைப்பாளிகள் கண்டனம் தெரிவித்து, விழாவையும் மாநாட்டையும் புறக்கணிக்கக் கோரி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள்.
'ராஜபக்சே அரசின் திட்டமிட்ட தமிழினப் படுகொலையையும், தமிழர்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகளையும் பெரும்பாலான உலக நாடுகள் கண்டித்து வருகின்றன. இலங்கையைக் காப்பாற்ற இந்தியா தொடர்ந்து முயன்றாலும், உலக அரங்கில் வலுவான எதிர்ப்பு அலை அடிக்கிறது. இந்த நிலையில், 'தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவச் செய்வோம்’ என்ற முழக்கத்துடன் ராஜபக்சேவின் தலைநகரில் இந்திய அதிகாரிகளைக் கொண்டு விழா எடுப்பது, பாரதி என்கிற போராளிக் கவிஞனின் புகழுக்கும் பெருமைக்கும் களங்கத்தை ஏற்படுத்தும். இனவெறி இலங்கை அரசின் கீழ் தமிழர்கள் இயல்பான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உலக அரங்கில் ஏற்படுத்துவதைத் தவிர, இந்த விழா வேறு எந்த விளைவையும் ஏற்படுத்தாது. கொல்லப்பட்ட எம் சொந்தங்களுக்கு தாய்த் தமிழகம் ஒருபோதும் துரோகம் செய்யாது என்பதைப் பாரதி அன்பர்கள் நிரூபிக்க வேண்டும். கொல்லப்பட்ட தமிழ்ச் சொந்தங்களுக்கு, மனச்சாட்சியுள்ள எழுத்தாளர்களாகிய நாங்கள் ஒரு போதும் துரோகம் இழையோம் என உறுதி பூணுகிறோம்’ என்கிறது அறிக்கை.
இந்த அறிக்கையில் புலவர் புலமைப்பித்தன், இயக்குநர்கள் ஆர்.சி.சக்தி, புகழேந்தி தங்கராஜ், கவிஞர்கள் காசி ஆனந்தன், இன்குலாப், புவியரசு, அறிவுமதி, தாமரை, மணிகண்டன், எழுத்தாளர்கள் பா.செயப்பிரகாசம், தமிழருவி மணியன், கோவை ஞானி, அழகியபெரியவன் சந்திரா, தி.பரமேசுவரி ஓவியர்கள் வீர.சந்தானம், டிராட்ஸ்கி மருது உள்ளிட்ட 50 படைப்பாளிகள் கையெழுத்துப் போட்டு இருக்கின்றனர்.
இந்தக் கண்டன அறிக்கையை முன்னின்று தயாரித்த எழுத்தாளர் பா. செயப்பிரகாசத்தை அணுகினோம்.
''இலங்கையின் மனித உரிமை மீறல்கள், மீள்குடியமர்த்தல், மறுவாழ்வுப் பணிகள் குறித்து வரும் அக்டோபர் மாதம் ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா. கூட்டத்தில் மீண்டும் பரிசீலிக்கப்பட இருக்கிறது. அப்போது, அங்கே எல்லாம் சரியாக இருக்கிறது. இலக்கிய விழாக்கள் நடத்தும் அளவுக்குத் தமிழர்கள் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள் என்று உலகுக்குச் சொல்வதற்காகவே இந்த விழாக்கள் நடத்தப்படுகின்றன. இலங்கை அரசும் இந்தியத் தூதரகமும் இணைந்து இந்த மாநாட்டுக்கு உதவுகின்றன. தமிழ்நாட்டில் இருந்து வழக்கறிஞர் காந்தி சென்றிருக்கிறார். இவர் ஒரு காங்கிரஸ்காரர். இவர்தான் பாரதியார் சங்கத்தின் தலைவரும்கூட. கல்கி தொடங்கிய சங்கம் இது. அதன்பின், ம.பொ.சி., பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகியோர் இதற்குத் தலைவராக இருந்திருக்கின்றனர். விடுதலை குறித்து பாரதி என்ன கருத்து வைத்திருந்தார் என்பதை அறிந்த பாரதியார் சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு, மற்ற நாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா? கொழும்பில் உள்ள தமிழ்ச் சங்கத்துடன் இணைந்துதான் இதை நடத்த வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.
இலங்கையில் உள்ள சில எழுத்தாளர்கள், கொழும்பு தமிழ்ச் சங்கம் இலங்கை அரசின் ஆதரவில் இந்த மாநாட்டை நடத்தவில்லை என்று சொல்கிறார்கள். ஆனால், இலங்கை அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த நிகழ்வையும் நடத்த முடியாது என்பதுதான் அங்கே உள்ள உண்மை நிலைமை. கவியரங்கம், பாராட்டு விழா போன்றவற்றை வேண்டுமானால் சுதந்திரமாக நடத்த முடியும். இதுபோன்ற மாநாடுகளை இலங்கை அரசின் ஒப்புதல் இல்லாமல் நடத்தவே முடியாது என்பதுதான் நிலைமை.
2010-ல் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நாட்களில் நான் இலங்கை சென்று இருந்தேன். அப்போது அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள், 'இலங்கை அரசின் ஒப்புதலோடுதான் இந்த மாநாடு நடக்கிறது’ என்று சொன்னார்கள். ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் சிவத்தம்பியே பின்னாளில், 'இந்த மாநாட்டை வேறு நாட்டில் நடத்தியிருக்க வேண்டும்’ என்று கருத்துக் கூறினார்.
சாக்ரடீஸுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்னால் நீதிபதி அவரிடம், 'உன் கருத்துக்களைத் திரும்பப் பெற்று உயிரைக் காப்பாற்றிக்கொள்ளப் போகிறாயா? அல்லது உன் உயிரைவிட்டு உன் கருத்துக்களைக் காப்பாற்றிக் கொள்ளப் போகிறாயா?’ என்று கேட்டார். சாக்ரடீஸின் மனைவி உட்பட சுற்றத்தார்கள் அனைவரும், 'உயிர் முக்கியம். ஆகவே கருத்துக்களைத் திரும்பப் பெறுங்கள்’ என்றனர். ஆனால், சாக்ரடீஸ் அதற்கு ஒப்புக்கொள்ளாமல் 'என்னைப் புதையுங்கள். என் கருத்துக்கள் உயிர் வாழட்டும்’ என்றார். நான் அந்த நீதிபதி போல கேட்க விரும்புகிறேன். 'பாரதியைப் புதைத்துவிட்டு கொழும்பை வாழவைக்கப்போகிறீர்களா? அல்லது கொழும்பைப் புதைத்து பாரதியை வாழவைக்கப் போகிறீர்களா?’ என்பதுதான். என்ன செய்யப்போகிறார்கள் பாரதி அன்பர்கள்?
நன்றி: ஜூனியர் விகடன்
--------------------------------------------------------------------
பாரதிக்கு முதன்மை வழங்கும் கொழும்பு தமிழ்ச் சங்கம் போல் வேறெங்குமில்லை. -இந்தியக் கவிஞர் அறிவுநம்பி!
மக்கள் விடுதலைக் கவிஞன் பாரதிக்கும் அவன் படைப்புகளுக்கும் முன்னுரிமை அளித்து, அவனை முதன்மைப் படுத்தி அவனுடைய படைப்புக்களை பொக்கிஷங்களாக பேணிப் பாதுகாக்கும் கொழும்பு தமிழ்ச் சங்கத்தைப் போல, உலகில் வேறெங்கும் ஒரு அமைப்பையோ அல்லது நிறுவனங்களையோ நான் பார்த்ததில்லை என்று, இந்தியாவின் புதுவை பல்கலைக்கழக பேராசிரியரும் கவிஞருமான முனைவர் அ.அறிவுநம்பி தெரிவித்துள்ளார். கொழும்பு தமிழ்ச் சங்கமும், இந்தியாவின் சென்னை பாரதியார் சங்கமும் இணைந்து நடாத்திய பாரதியார் விழா நேற்று காலை கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் காலை ஒன்பது மணிக்கு ஆரம்பமாகியது. அவ்விழாவில் பங்கேற்று கருத்துரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எட்டயபுரத்துக் கவிஞன் பாரதிக்கு விழாவெடுக்கும் இந்நிகழ்வில் முனைவர் அறிவுநம்பி மேலும் தனது உரையில், "பாரதி வாழ்ந்த காலங்களில் சங்ககாலப் பாடல்கல்களின் எடுகோள்களான காதல், வீரம் போன்றனவற்றைத் தான் நம்முடைய மூத்த கவிகள் பாடிக்கொண்டிருந்தார்கள். ஆனால், மக்களின் பாடுகளையும் மனித அவலங்களையும் வாழ்க்கைக் கோலங்களையும் எடுத்துரைக்கும் பாடல்களை பாரதிதான் முதலில் கண்டுகொண்டு தன்னுடைய படைப்புக்களில் வெளிப்படுத்தினான். அன்னியரின் ஆதிக்கத்தினும் அமிழ்ந்திருந்த இந்திய நாடும் மக்களும் அனுபவித்த கொடிய துன்பங்களில் இருந்தும், அறியாமைக்குல்லிருந்தும் அவர்களை வெளியில் எடுப்பதற்கு பாரதி தன்னுடைய பாடல்களின் மூலம் முயற்சி செய்து வெற்றி கண்டான். அப்படிப் பட்ட பாரதிக்கு இந்தியர்கள் கொடுத்த முக்கியத்தை விட, இலங்கையில் கொழும்பு தமிழ்ச் சங்கம் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை இங்கு வந்தவுடனேயே நாங்கள் கண்டு பூரித்துப் போனோம். தமிழ்ச் சங்கத்தின் அலுவலகத்தினுள் நுழைந்தவுடனேயே தென்படுவது பாரதியின் இரு கரங்கள் கூப்பிய படம் தான். அப்போது எங்கள் தத்துவ புரட்சிக் கவிஞன் பாரதிக்கு இங்கு கொடுத்துள்ள முக்கியத்துவம் எங்கள் அனைவருக்கும் உள்ளத்தை களிப்பூட்டும் நிகழ்வாக அமைந்தது. அத்தோடு எழுபது ஆண்டுகளுக்கு மேலாக தமிழுக்கு பணிசெய்து வரும் தமிழ்ச் சங்கத்தின் பணியினையும் அது பெற்றிருக்கும் முக்கியத்துவத்தையும் பார்த்து வியப்படைந்தோம். இதனை இப்போது நல்வழிப் படுத்தி கொண்டுனகர்த்தும் இப்போதைய கொழும்பு தமிழ்ச் சங்கத் தலைவர் மு. கதிர்காமநாதன் அவர்களுக்கு எமதி சென்னை பாரதியார் சங்கத்தின் சார்பிலும், இந்திய மக்கள் சார்பிலும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அவருடைய உரையில் தெரிவித்திருந்தார். மேலும் இந்த பாரதி விழாவில், இந்தியாவின் சென்னையிலிருந்து வருகை தந்திருந்த கவிஞர்களினால் பார்போற்றும் பாரதி என்னும் தலைப்பில் கவிதாஞ்சலியும், பேராசிரியர் முனைவர் இரா.சேதுவின் தலைமையில் புதியன பாடிய புலவன் எனும் தலைப்பில் கருத்தரங்கமும், இந்திய பெண் கவிங்கர்களால் பாரதியின் கவிதைகளில் உள்ளம் கவர்ந்த ஓர் அடி என்ற மகளீர் முற்றம் நிகழ்வும், இரு எழுத்தாளர்களின் நூல் வெளியீடும் அத்தோடு பாரதியின் புகழ் பரப்புனர்களை கௌரவிக்கும் முகமாக பாரதி விருது வழங்கும் விழாவும் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ் வளர்க்கும் நம்மவர்களோடு இந்தியாவைச் சேர்ந்த பல பேராசிரியர்கள் மற்றும் அறிஞர்கள் தமிழ்த் துறை ஆர்வலர்களோடு மக்களும் ஊடகத் துறையினரும் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
Posted by
நா. கணேசன்
at
0
comments
தமிழ்நாடு அறக்கட்டளை மாநாட்டுச் சொற்பொழிவுகள்: (1) குறவஞ்சி நாடகம் (2) சிந்து சமவெளியில் கொற்றவையும், விடங்கரும்
Special Lecture at Tamil Nadu Foundation Convention, 2012
Hilton Houston North on Saturday, May 26, 2012
Kuravanji Dance Dramas: Perspectives on Landscapes and Social Life in 18th and 19th century Tamil Nadu
The Kuravanji, the drama of the wandering Kuratti
fortune-teller, is the most popular among the Tamil literary genres that arose
and flourished in the 18th and 19th centuries. Written by court poets for Palaiyakkarars and other rulers of small
kingdoms, Kuravanji dramas were performed by devadasi dancers at courts and temples. These dramas glorify the
patron-king, his town (uur),
and the god of the temple, but their central characters, the Kuravanji,
a nomadic fortuneteller from the hills, and her birdcatcher husband (Kuluvan),
are marginal, “folk” figures from the wilderness, whose activities are
described in detail, in relation to the hill and field landscapes and to the
upper-class characters. In this lecture I show that the Kuravanji drama’s
innovative treatment of Tamil landscapes, and its focus on new and marginal
social identities, embody an imaginative response to changing social relations
and relations between person and land in the 18th century, an era of
migrations and fragmented polities in Tamilnadu. Kuravanjis were written not
only in the Tirunelveli region (e.g., Kurralak
kuravanji of Tirikutaracappa Kavirayar, 1715), but also at the Thanjavur
Maratha court. The Christian poet
Thanjavur Vedanayaka Sastri wrote the allegorical Bethlehem Kuravanji (1820), describing the Bible lands and
teaching planetary astronomy through the travels of the Kuratti fortune-teller.
The Kuravanji drama represents a flexible, creative, Tamil combination of
geography, social history and ethnography. The drama’s perspectives on place
and identity are expressed in enduring metaphors of the relationship of human
beings with Tamil landscapes.
At the same time, they are embedded in 18th-century social realities and
express new geographical visions of an expanding world .Indira Viswanathan Peterson is David B. Truman Professor of Asian Studies at Mount Holyoke College, Massachusetts. She has a B.A. in English Literature from Bombay University, and A.M. and Ph.D. degrees in Sanskrit and Indian Studies from Harvard University. She has held a number of research fellowships, including fellowships from the National Endowment for the Humanities, the Rockefeller Foundation, and the German Alexander von Humboldt Foundation.
Indira Peterson specializes in Indian literature in Sanskrit and Tamil, Hinduism, and South Indian cultural history and performing arts. She is also a performer of Carnatic vocal music. Peterson is the author of Poems to Shiva: The Hymns of the Tamil Saints (Princeton, 1989; first major translation and study of the Tevaram hymns), and Design and Rhetoric in a Sanskrit Court Epic: The Kiratarjuniya of Bharavi (Albany, 2003), the study of a classical Sanskrit poem. Her other books are: George Michell and Indira Peterson, The Great Temple at Thanjavur: A Thousand Years. 1010 – 2010 (Mumbai: Marg, 2010), on the Brihadisvara temple; Performing Pasts: Reinventing the Arts in modern South India, co-edited with Davesh Soneji (Delhi: Oxford University Press, 2008), on Carnatic music and Bharata Natyam dance; and Tamil Geographies: Cultural Constructions of Space and Place in South India, co-edited with Martha Selby (Albany, 2007). Indira Peterson is editor of Indian literature (500 B.C. to the present) in the Norton Anthology of World Literature (2001). She has just completed Scholar-king of Tanjore: Serfoji II and the Shaping of Indian Modernity, a biography of the Raja Serfoji of Thanjavur. She is writing a book on the Kuravanji dramas of Tamilnadu, and has translated the Kuraalak kuravanji and other kuravanji plays. She has also translated portions of Kalaimani’s Tamil novel Thillana Mohanambal, and plans a complete translation of the work.
------------------------------------------------------------------------------------------------------
TNF Convention, Hilton Houston North, Sunday - May 27, 2012
Abstract: The Indus valley Bronze Age saw the flourishing of the largest agriculture based civilization in the ancient world, and reached its classical era about 4200 years ago. The seals unearthed throughout the 20th century CE cover a wide geographical area of the Indus Valley Civilization (IVC) and the glyptic art featured in the IVC seals show the importance of land and aquatic fauna in the cultural life. The characteristic fish sign pointing to the Dravidian language spoken by the elite Harappans has long been explored from the days of Fr. H. Heras, SJ. However, the importance of crocodiles in IVC culture is just coming to light. Ananda K. Coomaraswamy was the first scholar to show that makara in the earliest stages referred to the Indian crocodile. This illustrated slide show and lecture explores the importance of the crocodile as an equivalent of Proto-Varuṇa portrait in the IVC religion, and its relationship with the tiger-goddess, Proto-Durgā by analyzing the linked imagery in IVC art. A Dravidian etymology for the Sanskrit word, makara from (i) the names of the marsh crocodile in all the Dravidian languages, and (ii) the names of the crocodile in Sindh and Gujarat regions is offered. In particular, it is shown that the names in South Munda languages prevalent in Orissa are loan words from Dravidian, and they do not form part of the Austroasiatic heritage. Sangam Tamil literature references on the three species of Indian crocodiles are discussed.Speaker's bio-data:
Dr. Naga Ganesan, PhD is a specialist in Structural Dynamics of Large Space Structures. He has worked
in the Space industry for 25 years in Houston. Dr. N. Ganesan hails from Pollachi, Tamil Nadu and he stood first in Tamil and Mathematics in many State level competitions during his school and collegiate years. His first degree is B.E. (Hons) in Mechanical Engineeing from College of Engineering, Guindy in 1981. He has worked as a technical expert for many Space Shuttle Missions since the 90s until the last Space Shuttle mission. He has contributed to the Unicode encoding of several Indian scripts for use in the Web including Tamil and Grantha scripts. One of his main interests is Tamil prabandhams and their print history. His latest paper on Indus religion has been published in Prof. V. I. Subramonium Memorial Souvenir, 2011,
International School of Dravidian Linguistics, Govt. of Kerala, Tiruvananthapuram. His paper with illustrations on Indus religion involving crocodile cult can be downloaded as a PDF from:
http://groups.google.com/group/tiruvalluvar/msg/b6747e262b8bfff9
See you all at the Tamil Nadu Foundation Annual Convention, 2012 at Hilton, Houston North!
Posted by
நா. கணேசன்
at
0
comments
ஓவியக்கவிஞர் அமுதோன் என்கிற அமுதபாரதியின் மரபுக்கவிதை
தாயுமானவன் என்ற இயற்பெயர் கொண்ட ஓவியக்கவிஞர் அமுதோன் சித்திரம் வரைவதில் சிறந்தவர். ஏராளமான தமிழ்நூல்களுக்கு வடிவமைப்புச் செய்தவர். ஹைக்கூ கவிதை முன்னோடி. அமுதபாரதி என்ற பெயரில் பல மரபுக் கவிதைகள் யாத்துள்ளார். ஓவியக்கவிஞர் என்று கண்ணதாசனால் பாராட்டப்பெற்றவர்.
கவிமாமணி இலந்தை ராமசாமி அவர்களின் சந்தவசந்தம் குழுவில் பாரதியார் திருவள்ளுவர் சிந்தனைத் திரட்டு (பேரா. தி. வேணுகோபாலன், 1992) நூல் முழுமையும் கிடைக்கிறது. பாரதி என்ற தலைப்பின் கலிஃக்ராபியில்
அழகாக பா என்னும் முதலெழுத்தில் பேனாவை அமைத்துள்ளார் சைத்ரீகர் அமுதபாரதி!
பாரதி!
பன்னிரு சீர் விருத்தம்
எளிதான சொல்வளைவில் புதிதான பொருள்விளைவில்
இனிதான கவிநெய்தவன்!
இதுவேஎன் வழியென்றும் பொதுவாகும் உணவென்றும்
எல்லார்க்கும் நெறிசெய்தவன்!
மெலிதான மேகத்தின் வேகத்தில் உருவாகும்
மழையாக அருள்பெய்தவன்!
மெல்லோசை வல்லோசை நல்லோசை யாவிலும்
மேவியே மனங்கொய்தவன்!
வலிதான உடல்வாகும் வளமான பொருள்வாகும்
வாழ்க்கையின் நலமென்றவன்!
வாளா விருப்பவர் தூளாய் விடக்குறிக்
கோளாய் குரல்தந்தவன்!
புலிஓடி வருவதென புயல்வேகம் பொழிவதென
போர்ப்பாடல் பலகண்டவன்!
பலகோடி நூறாண்டு பெயர்வாழும் நிலையாக
புகழ்சுப்ர மணிபாரதி!
-
~ கவிஞர் அமுதபாரதி, 1992
அமுதபாரதியும் நானும்
சிறகு இராமச்சந்திரன்
http://puthu.thinnai.com/?p=5287
இந்தக் காட்டில்
எந்த மூங்கில்
புல்லாங்குழல்?
தின்ற பழங்கள்
மிஞ்சிய கொட்டைகள்
ஓ! எத்தனை மரங்கள்!
~ அமுதபாரதி
இந்த நாட்டில்
எந்த மனிதன்
அடுத்த அமுதோன்?
Posted by
நா. கணேசன்
at
0
comments







