ஹூஸ்டனில் வாழும் வக்கீல் ஜார்ஜ் வில்லி ஸ்ரீலங்கா ஜனாதிபதி முன்னர் காலரியா வெஸ்டெர்ன் ஓக்ஸ் வரவேற்பறையில் இனி ஸ்ரீலங்கா அரசு நேர்மையுடன் நடந்துகொண்டு தமிழர்க்கு உரிமைகளை வழங்கி நல்லிணக்கம் ஏற்படுத்த அறிவுரை வழங்கினார்.
நா. கணேசன்
மேதகு ஸ்ரீலங்கா ஜனாதிபதி அவர்களே, திருமதி இராஜபக்சே, கனம்பொருந்திய காங்கிரஸ் பெண்மணி ஷீலா ஜாக்சன் லீ! ஷீலா, தூதரக முதல்வர் அரோரா, முதற்கண் இந்நிகழ்வை ஏற்படுத்தியமைக்கு, என் பாராட்டுகள், மேலும் இது நடப்பதற்கு என் நன்றி.
தகைமைசால் விருந்தினர்களே, சீமாட்டிகளே, சீமான்களே, மேதகு ஸ்ரீலங்கா தலைவரை இம்மாநகருக்கு வரவேற்கிறேன். இங்கிருக்கும் ஓக் மரங்களையும், நையாண்டிப் பறவைகளையும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், நீங்கள் இவ்விடத்தை ஸ்ரீலங்காவென்றே தவறாக மயங்கக் கூடும்.
நான் பிறந்த மண்ணோ ஸ்ரீலங்கா, என் தாயார், என் துணைவியார் சாந்தியின் பெற்றோரும், எங்கள் பாட்டன், பாட்டிகளும், பிறந்து மடிந்ததும் கூட அப்புனிதமானத் தாய்நாட்டு மண்ணிலே தான். மேதகு தலைவரே, நான் யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்து, பின்னர் எனக்கு 10 அகவை இருக்கையில் கொழும்புவிற்குக் குடிபுகுந்தோம். என் துணைவி பிறந்ததோ பதுளையில், வளர்ந்தது தியாத்தலாவையில். அங்கே அவளின் தந்தை அனைவராலும் மதிக்கப்பட்ட அரசுப்படை கேப்டன்.
நான் யாழ்ப்பாணத்தில் வேப்ப மரங்களின் சுகந்த நறுமணத்தை நுகர்ந்தேன்; கொழும்புவில் வளர்கையில், பள்ளி செல்லும் போது, பள்ளியின் வெண்சீருடையில் செங்கறைகள் படியும்படி சிவந்த நாவல்பழங்களைச் சுவைத்தேன். மரங்களிலே பழுக்கும் பலாக்கனியைக் காகங்கள் கொத்திக் குடையும் காட்சி தரும் மன ஈர்ப்பை அறிவேன்.
புத்த பூர்ணிமை வெசாகத்தின் போது போடப்படும் வண்ணமயமான பந்தல்களை அறிவேன்; ஏழைகளுக்கென்று தானசாலையில் தரப்படும் உணவினை வெட்கமின்றி உண்டிருக்கிறேன். கோயில்களில் ஒலிக்கும் மந்திரங்களை கேட்டிருக்கிறேன்; தூவப்படும் மல்லிகை மலர்களின், ஏற்றி வைக்கப்படும் ஊதுவத்திகளின் மணங்களை நுகர்ந்திருக்கிறேன். பேராயர் ஹீராத் அவர்களின் திருப்பலிப் பூசையில் உதவி புரிகையில் அப்புனித தேவாலயத்தில் ஒலிக்கும் மணியோசையைக் கேட்டிருக்கிறேன்.
ஆனால் 1975இல் நான் ஸ்ரீலங்காவை விட்டேகியதில் இருந்து, அங்கே சொல்லொணா வலிகளும், துயரமும், வேதனையும் நிறைந்துவிட்டது. சாதாரணமாக, நெல்வயல் வெளிகளுக்கு தன்னுடைய புனித நீரை மட்டுமே கொணர்ந்த மாவலி மிக்க ஜீவநதி மஹாவெலி கங்கை, சிங்களவர் தமிழர் இருவருடைய குருதியைப் பொழிந்தது. இங்கே அமெரிக்க மண்ணில் இருந்துகொண்டு, எம் முன்னோரின் நிலமானது, சொர்க்கத்தை விட்டுக் கீழிறங்கி நரகமெனும் ஆழ்குழியில் போனதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். யார் செய்த குற்றமென்று எவருமே நிச்சயமாய் கூற முடியாது; ஆனால் குற்றம் குறை கூறும் காலமெல்லாம் மலையேறிப் போனது.
மேதகு தலைவரே, எங்களுடையது எல்லாளனிடம் இருந்து வந்ததைப் போல, உங்கள் சக்தி துட்டகாமனுவிடம் இருந்து வந்திருக்கலாம். எப்படி அந்த துட்ட காமனு தன்னுடைய கந்துலா என்ற யானையின் மீதிருந்து எல்லாளனைப் போரிலே கொன்றான் என்று நினைவுகூருங்கள். துட்டகமனு ஸ்ரீலங்காவை முதன்முதலாக ஒன்று சேர்த்தமைக்காக நினைவு கொள்ளப்பட்டாலும், கூடவே இன்னொன்றிற்காகவும் நினைவு கொள்ளப்படுகிறான். எல்லாளனைப் போரில் தோற்கடித்து கொன்றபின்னர், அம்மாவீரனின் வீரத்தை மெச்சி ஒரு நினைவுச் சின்னத்தைக் கட்டியதோடன்றி, அனைத்து மக்களும் அதன் முன்னர் வரும்போது, நின்று கீழிறங்கி மரியாதைகள் செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டான். இதனால் தானொரு உயர்ந்த பண்புடையவன் என்பதை மட்டுமல்லாது, கூடவே சிறந்த அரசியல்வாதியென்றும் நிலைநாட்டினான். ஏனெனில் எல்லாளனின் தோல்விக்குப்பின் தமிழ் மக்களையும் ஆளவேண்டும் என்ற பேருண்மை அவனுக்குத் தெரிந்திருந்தது.
மேதகு தலைவரே, நம்பிக்கையும், நற்பேறும், சிறந்த அரசியல் திறமையும், உங்களை, வரலாற்றின் மறக்கமுடியாத, தனிப்பட்டதோர் நிலையில் ஏற்றி வைத்திருக்கிறது.
வருங்கால இளைய சந்ததியானது, மகிந்த ராஜாபக்சே என்ற சிறந்த தலைவர், சிறந்த போராளி, மற்றவர்களால் முடிக்க இயலாமல் தோல்விகண்ட, 25 ஆண்டுகள் நடந்த பெரும் புரட்சியை இறுதியாக முடிவுக்குக் கொண்டுவந்தார் என்று தங்கள் வரலாற்று நூல்களில் படிக்கப் போகிறார்கள். அவர்கள் உங்களை 21ஆம் நூற்றாண்டின் நவீன துட்ட காமனுவென்று கூடச் சொல்லலாம். ஆனால், துட்டகாமனு என்ற பெரும் வீரனின் பெயரை ஏற்க வேண்டுமெனில், மேதகு தலைவரே, நீங்களும் நினைவுச்சின்னம் எழுப்பியாகவேண்டும். வெறும் டகோபா [1] அல்லது இன்னொரு காரை சுண்ணத்தால் எழுப்பிய தூபியல்ல அது. பல்லிருக்கும் வலிய சட்டங்களால் கட்டிக் காக்கப்படும் புதிய திட்டமாக இருக்கவேண்டும் அந்த நினைவுச் சின்னம்.
58களில் ஏற்பட்ட கலகங்களைத் தூண்டிய தவறுகளை செய்யாதீர்கள். பல்கலைக் கழகங்களில் நுழையவேண்டும் என விரும்பும் தமிழர்களை தடுத்து நிறுத்தாதீர்கள். தமிழர்கள் இரண்டாந்தர குடிமக்கள் என்று அவர்களே எண்ணும்படிச் செய்யாதீர்கள். தமிழர்களின் மதங்களை மதியுங்கள். தமிழ்மொழியை மதியுங்கள். தமிழர்களைப் பற்றி நீங்கள் முக்கியமாக அறிந்து கொள்ளவேண்டியது ஒன்று உண்டு. தமிழர்கள் தங்களை மொழியை தெய்வமாக மதிப்பவர்கள். உலகில் அப்படிப்பட்ட மொழிப்பற்று உடைய இனம் மிகக்குறைவு.
உங்கள் ஆரம்பகால அரசியலில் வழக்குரைஞராக இருந்திருப்பதால், நீங்கள் இளமையில் மனித உரிமைக்குப் போராடும் உள்ளம் கொண்டிருந்தீர்.
இப்போது உங்களூக்கு பேர், புகழ் வந்திருக்கிறது. தன்னுடைய படையெடுப்புகளை வெற்றிகரமாக முடித்து, ரோமுக்கு வரும் ஜூலியஸ் சீசரைப் போன்று, அதிகாரம் பெற்ற வரலாற்று நாயகன் நீர். நீங்கள் கேட்பதை எவருமே மறுக்க முடியாது. நீங்களூம் நானும் சட்டப் பள்ளியில் பயின்ற சோல்பரி அரசியல் யாப்பின் நீக்கப்பட்ட ஷரத்துகளை மீண்டும் அங்கீகரிக்கும்படி நாடாளுமன்றத்திற்குக் கட்டளையிடுங்கள். எங்கள் உதவி தேவையெனில், இவ்வுரை கேட்கும் சபையார் பலரும் செய்ய முன்வருவது போலவே, அதை நான் இலவசமாகவே செய்து அளிக்கிறேன். தமிழர்கள் தங்களுக்கும் ஒரு இடம் இருக்கிறது என்று தாங்கள் அளிக்கப் போகும் உறுதியை எதிர்நோக்கி நிர்வாணமாகவும், பசியுடனும் ஏதிலிகளாய்க் கிடக்கிறார்கள்.
அப்படி ஒன்று அவர்களுக்கு இருப்பதை உறுதிப்படுத்துங்கள். நீங்கள் பிரபாகரனைக் முடித்துவிட்டீர்கள்; ஆனால் மற்றொரு பிரபாகரன் வளர்தற்கு விதைக்காதீர்கள். கத்திகளாலும், துமுக்கிகளாலும், மற்றொரு பிரபாகரனின் வரவை தடுக்கவே இயலாது. மனத்தாலும், மகத்தான அறிவாலுமே அதனைத் தடுக்க இயலும். நீங்கள் புத்தரிடம் கற்ற கருணை, உண்மை, நீதி இவை போன்ற ஆயுதங்களால் மட்டுமே அதைச் செய்ய இயலும். தம்மபதத்தின் கூற்றின்படி, வெறுப்பினை அன்பினாலன்றி, வெறுப்பு கொண்டு அழிக்க முடியாது. இது புத்தர் சொன்ன பழமையான நியதி.
மேதகு தலைவரே, ஸ்ரீலங்கா செல்ல, இந்த இனிய நகரை விட்டேகும் போது, நீங்கள் எனக்கு உறுதிகள் தர வேண்டும். ஒரு பத்து வயது சிறுவன் வெள்ளைச் சீருடையுடன் பள்ளி செல்லும் போது, அச்சீருடையில் சிவந்த நாவல் பழக்கறையன்றி, வேறு சிவப்புகறைகள் இல்லாதிருக்க வேண்டும். காலையில் காகங்கள் பழுத்த பலாப் பழத்தையன்றி வேறு எதையும் குத்திக் கிழிக்கக் கூடாது. வேம்பு மரங்களில் நான் நுகர்ந்த வாசனைதரும் பழங்களன்றி வேறெதுவும் தொங்கக் கூடாது.
மேதகு தலைவரே, எங்களை மீளவும் சொர்க்கத்திற்கு இட்டுச் செல்லுங்கள்; மீளவும் சொர்க்கத்திற்கு இட்டுச் செல்லுங்கள். நன்றி.
தமிழில்: இராஜ. தியாகராஜன், புதுச்சேரி
[1] சைத்தியத்துக்கு ஒரு பெயர்: தாதுகர்ப்பம். மேலைநாட்டார் அதை ‘டகோபா’ ஆக்கினர். (நன்றி: இரா. நாகசாமி).
ஆங்கில உரை:
Your Excellency, Mrs. Rajapaksa, Hon Congresswoman Sheila Jackson Lee. Sheila thank you for making this, really appreciate this and Consul General Arora, Consul thank you for making this.
Distinguished guests, Ladies and Gentlemen, welcome Your Excellency to this great city. If you can ignore the oak trees and the mockingbirds you could easily mistake this for Sri Lanka.
It is in Sri Lanka that I was born, and my mother and the parents of my wife Shanthi, our grand fathers and grand mothers are all buried under the sacred soil of my motherland. I grew up Your Excellency, in Jaffna and moved to Colombo when I was only 10 years old. My wife is from Badulla, grew up in Diyatalawa where her dad was a well a respected captain in the army.
I have smelt the sweetness of Magosa trees in Jaffna and taste of the Red Jumbu fruits that left red stains on my white shirt as I walked to school in Colombo. I know the allure of Jack fruits ripening on the trees as crows begin to break them open.
I have seen the bright colour of pandals during Wesak and shamelessly ate food at Dansala meant for the poor. And I have heard the chanting of Kovils and inhaled the smell of jasmine and Joss sticks. I’ve heard the bell of All Saint’s church as I assisted Father Herath during Mass.
But since I left Sri Lanka in 1975 there has been such pain, such sorrow and such agony. The mighty Mahaweli Ganga that usually brings its sacred waters to the paddy fields spat out blood. Both the Sinhalese and Tamils. From up here in the United States I have watched the land of my forefathers descend from paradise deep into hell. No one can say with certainty who is to blame but the time for blaming is long gone.
Your Excellency, your power be descended from Dutugemunu and my people from Elara. Remember how Dutugemunu fought Elara on his Elephant Kandula and killed Elara. Dutugemunu of course is still remembered for uniting Sri Lanka for the first time. But he is also remembered for something else. After defeating and killing Elara he built a monument for Elara out of respect for his worthy opponent. He ordered all the citizens of the land to stop, dismount and pay respect to Elara. In so doing he not only showed what a great noble man he was. But also proved to be a great politician. He knew that He had to rule the Tamil people too after the defeat of Elara.
Your Excellency, faith and fortune and your great political skills have placed you at a unique point in history.
Children years to come, will read in their history books, that a great leader, a great warrior by the name of Mahinda Rajapaksa finally defeated the rebellion after nearly 25 years when several before him failed. They may even say that you are Dutugamunu of the 21 century. But if you want to wear Gemunu’s mantle, Your Excellency, you will have to build a monument too. That monument does not have to be a Dagoba or a building. It will have to be new policy backed by laws with teeth to enforce.
Do not make the mistake that started 58 riots. Do not hold back Tamils who want to get into Universities. Do not make the Tamils feel like they are second class citizens. Respect their religion, and respect their language. There is something about the Tamil people you need to know Your Excellency. To them their language is God. There are only few cultures in the world which has such devotion to the language.
You were trained as a lawyer and in your early career you were a formidable defender of human rights.
Now you have the popularity, you have the power of a hero, like Julius Caeser, returning to Rome from his conquests. No one can deny what you ask. Ask the parliament to pass some entrenched clauses; you and I read in law school. Then we have had to study the Soulbury Constitution. If you need my help I will give it free like many in this audience would. The Tamil people are naked and hungry looking for you to assure them that there is a place for them.
Make sure they have one. You killed one Prabhakaran but do not let another grow. You cannot prevent another one with swords and guns. You can only do that with your heart and wisdom. Compassion, truth and justice, you learnt from Buddha are the only weapons you will need. According to Dhamma Pada, Buddha said that hatred does not cease by hatred at any time. Hatred cease by love. This is an old rule. That's what the Buddha said.
Your Excellency, as you leave this fair city and return to Sri Lanka, promise me that a 10 year boy walking to school tomorrow in his white shirt will have no other red stain than from the Jumbu fruits. The morning crow will not open anything other than the jackfruit. That there will be nothing else hanging from the Magosa trees, than the fruits I smelt.
Your Excellency return us to paradise, return us to paradise. Thank You
ஜார்ஜ் வில்லி - வழக்குரைஞர் ஹ்யூஸ்டன் உரை - ஸ்ரீலங்கா
Posted by
நா. கணேசன்
at
2
comments
செம்மொழி தெலுங்கு - பத்ரிராஜு கிருஷ்ணமூர்த்தியின் சேவை

மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியிடம் ப. கிருஷ்ணமூர்த்தி பரிசு பெறல்.
தமிழ் செம்மொழி என்று அரசியல் தலைவர்கள் பெரிதாக அக்கறை காட்டாத காலகட்டம். இந்தாலஜி சபையில் தமிழ் செம்மொழி என்று நானும், பின்னால் சிலரும் பேசிய போது, இவர் தமிழ் செம்மொழி அல்ல என்று என்னிடம் வாதாடினார்.
தமிழ் செம்மொழி (Classical Language of India on par with Sanskrit) என்று எழுதியதைக் கேள்விக்குள்ளாக்கித் திராவிடவியல் பேராசிரியரும் உஸ்மானியா பல்கலை துணைவேந்தர் ஆக இருந்த ப⁴. கிருஷ்ணமூர்த்தி வினாக்கள் எழுப்பினார். உ-ம்: ப்⁴(Bh). கிருஷ்ணமூர்த்தி என்னை இந்தாலஜி சபையில் கேட்ட மடல்: “Some members make it their mission to sing the glory of one language and one culture (?), i.e. Tamil. The pathetic appeal of one list member to place Tamil on the same footing as the Classical languages-- Sanskrit, Persian and Arabic in India--sounds ridiculous. Tamil is a modern language and not a classical language. Classical lgs are not the mother tongues of any segment of natives in India.” (ஜனவரி 13, 1999). திராவிடவியலாளர் ப⁴த். கிருஷ்ணமூர்த்தி முழுமடலையும் பார்க்க:
http://nganesan.blogspot.com/2010/01/hart.html
ஜான் சாமுவேல் தயாரித்தளித்த செம்மொழி தமிழ் ஆவணம் பற்றி:
http://nganesan.blogspot.com/2010/02/john-samuel-ctamil.html
உலக அரங்கில் தமிழைச் செம்மொழி என்று நிலைநிறுத்த பேரா. ஹார்ட், சுவெலபில், ஏ. கே. இராமானுஜன், ... போன்றோரின் உழைப்புக்கு நாம் நன்றி செலுத்தவேண்டும். அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் கிரேக்கமும், இலத்தீனமும் செம்மொழிகளாய்ப் பயிற்றுவிக்கப்படுகின்றன. அதேபோல, இந்தியாவின் எல்லாப்பல்கலைகளிலும் Classics Department என்னும் செம்மொழித் துறை ஏற்படுத்தி ஸம்ஸ்கிருதம், தமிழ் கற்பிக்கப்பட வேண்டும் என்று ஜார்ஜ் ஹார்ட் ஆலோசனை வழங்கிவருகிறார். தெலுங்கு, கன்னடம் போன்றவை தமிழ், ஸம்ஸ்கிருதம் இவைக்கு இணையான செம்மொழிகள் அல்ல என்று அம்மொழிகள் அரசியல் அழுத்தம் காரணமாய் அத் தகுதி தில்லி தர்பாரில் வாங்கியபோது இந்திய நாளிதழ்களுக்கு பேரா. ஹார்ட் அவர்கள் அனுப்ப இருந்தார். அம் மடல்களை பொது அரங்கில் வெளிவருதல் இதுவே முதன்முறையாகும். அவற்றைத் தங்களின் பார்வைக்கு முன்வைக்கிறோம்.
பேரா. ஜார்ஜ் ஹார்ட் - இந்தியாவின் செம்மொழிகள் இரண்டே!
---------------------------------------------------------------
Sirs:
I read with dismay that Kannada is to be recognized as a classical language. Like French, English, and German, Kannada is a rich and worthy language. But India has only two true indigenous classical languages -- Sanskrit and Tamil, each of which is considerably older than the other Indian languages and has an independent literary tradition. Tamil, not known as well as it should be in the rest of India, has an early literature that is entirely independent of Sanskrit, both in its literary forms and its vocabulary. This is not true of Kannada, whose earliest writings are deeply indebted to and imitative of Sanskrit. The earliest work in the language is Kaviraajamaarga, whose title and content are entirely based on Sanskrit. Kannada does not satisfy two of the criteria listed by the Government of India for a classical language. First, it is not 1500 years old. The fact that a Kannada dialect may have possibly influenced some Tamil form hardly means it has texts 1500 years old. Nor is it possible to claim that its literary tradition is original. Unlike that of Tamil, which is genuinely original, the Kannada tradition follows Sanskrit quite faithfully. It is not original by any stretch of the imagination. A comparison of Kavirajamarga with the Tolkappiyam would make this point perfectly clear. The Kannada scholars feel they have achieved a victory, no doubt, but in reality all they have accomplished is to foist on the world and on Kannada speakers themselves a myth. To ignore the true richness of one's language and to base one's appreciation of it on a falsehood does no one any good. The study of language and literature in India is highly political -- Kannada is hardly the only language that suffers from this situation. Sincerely, George Hart, Professor of Tamil, University of California, Berkeley, CA, USA
Sirs:
I read with dismay that Telugu will be recognized as a classical language. Like French, English, and German, Telugu is a rich and worthy language. But India has only two true indigenous classical languages -- Sanskrit and Tamil, each of which is considerably older than the other Indian languages and has an independent literary tradition. Tamil, not known as well as it should be in the rest of India, has an early literature that is entirely independent of Sanskrit, both in its literary forms and its vocabulary. This is not true of Telugu, whose earliest writings are deeply indebted to and imitative of Sanskrit. The same can be said of Kannada. The rush to label languages as classical that are nothing of the sort can do nothing but harm those languages. I could claim English, my own native language, as classical (with at least as much justification as the Telugu scholars have for claiming their language is classical), but I would only succeed in detracting attention from the true worth of the language while propagating a myth. Telugu and Kannada are not, by any rational criterion, classical languages. That its scholars insist on what is patently false seems bizarre, for it is utterly unwarranted by the great literary traditions that they study. This rush to mythologize language suggests to me that the study of literature in India is still immature. No English or French scholar in the West would question the classical status of Greek or rush to give the same status to their own language. Rather, scholars study Greek in order to better understand their own literatures. If only scholars of modern Indian languages had such an unbiased view! If Telugu and Kannada scholars would study Tamil, they would find their understanding of their own traditions multiplied many times. The same is true of Tamil scholars, who often eschew the study of Sanskrit and of other Indian languages. The study of Sanskrit will broaden the understanding of Tamil just as the study of Tamil will benefit Sanskrit scholars. I find myself at a loss to understand why scholars of Indian languages must be so parochial. To claim one's language is something it is not, or to fail to study other languages and traditions that throw light on one's own, are, to my mind, marks of a scholarly culture that is still undeveloped and immature. Sincerely, George Hart, Professor of Tamil, University of California, Berkeley, CA, USA
-----------------------------------------------------------------
அன்புடன்,
நா. கணேசன்
Doyen of linguistics
K. DAMODAR RAO
http://www.thehindu.com/arts/history-and-culture/article593622.ece
Bhadriraju Krishnamurty stands out as a cultural and linguistics icon.
The first World Classical Tamil Conference held at Coimbatore should be an eye-opener to other states and regional sub-cultures for asserting their language, heritage, history, ethos, and their tradition of music, dance and song.
One significant feature of the cultural extravaganza organized by Tamil Nadu was honouring a foreigner who attempted to establish links between ancient Tamil script and the so-far undeciphered Indus Valley script. There are many scholar-critics and cultural activists who contributed to the enrichment of Telugu language and culture and who took part vigorously in the campaign to make Telugu a classical language, a status accorded to Tamil.
It is in this context that one remembers the yeoman service rendered by the 82-year-old Prof. Bhadriraju Krishnamurty, better known as BHK in academic and literary circles. Doyen of linguistics and literary activism for over fifty years now, he was the driving force behind other Telugu litterateurs in disseminating the relevant information, collecting and collating the write-ups on the 2000-year-old inscriptions and presenting the needed data to the government with factual account to prove the ancestry of the Telugu language.
Born in Ongole in 1928, Dr. Bh. Krishnamurty took his Ph.D from University of Pennsylvania in 1957. For his contribution to Dravidian Linguistics, he received Hon Dlitt. from Sri Venkateswara University, Tirupati (1998), and Dravidian University, Kuppam (2007). Earlier, he worked as Professor of Linguistics (1962-88), Osmania University; Dean, Faculty of Arts (1973-6), Member, University Syndicate (71-75); Director, Southern Regional Centre, Indian Council of Social Science Research (1978-82); Vice-Chancellor of University of Hyderabad (1986-93).
BHK has written over 25 books and over 120 research papers, both in English and Telugu which include Telugu Verbal Bases: A Comparative and Descriptive Study, Comparative Dravidian Linguistics: Current Perspectives, The Dravidian Languages. Gold Nuggets: An Anthology of Selected Post-independence Telugu Short Stories in English Translation (ed. with C. Vijayasree).
One only wishes the saga of BHK continues forever.
Posted by
நா. கணேசன்
at
3
comments
சிந்து சமவெளியில் திராவிடர் சமயம்
சிந்து சமவெளியின் 4000+ முத்திரைகளில் உள்ள கலையைச் சில பத்தாண்டுகளாய் ஆழ்ந்து படித்து வருகிறேன். முன்பு ஐராவதம் மகாதேவன் ஜல்லிக்கட்டு என்று இந்து நாளிதழில் விவரித்திருந்த சிந்து முத்திரை கொற்றவை/துர்க்கை மயிடனுடன் போரிடும் காட்சி என்று எழுதி இருந்தது நினைவிருக்கலாம்:
http://nganesan.blogspot.com/2008/01/eru-tazuval.html
கோவையில் நடந்து முடிந்த பெரிய மாநாட்டில் என்னைச் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் சிந்து முத்திரைகளில் உள்ள சுமார் 400 சின்னங்களை ஐராவதம் மகாதேவனும், அசோகன் பார்ப்போலாவும் வரையறுத்துள்ளனர். அவற்றைக் கணினி மயமாக்கலின் அத்தியாவசியத்தையும், யூனிக்கோடு செய்முறை விதிகளையும் குறித்துச் சொற்பொழிவு ஆற்றினேன். என்னை அறிமுகம் செய்துவைப்பவர் ஸ்டான்போர்ட் பல்கலையில் பொறியியற் பேராசிரியராய் விளங்கும் ஆ. பால்ராஜ் அவர்கள். மொபைல் பேசிகளில் முக்கிய நுட்பங்களாகிய WiMax, WiFi, 4G கண்டுபிடிப்புகளில் பெரும் பங்காற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்திய வானியல் விஞ்ஞானி ‘சந்திரயான்’ ம. அண்ணாதுரை போலப் பால்ராஜ் அவர்களும் பொள்ளாச்சியில் பிறந்தவர் ஆவார்.
சிந்து சமவெளியில் திராவிடர் சமயம் - கோவைப் பொழிவின் காணொளி இதோ:
இச் சொற்பொழிவு 2007 ஆய்வுக் கட்டுரையை அடிப்படையாய்க் கொண்டது.
Gharial god and Tiger goddess in the Indus valley:
Some aspects of Bronze Age Indian Religion
N. Ganesan, 2007 essay
In the Mature Harappan period seals and tablets produced about 4000 years ago, gharial crocodile is portrayed as a 'horned' being. As in the famous Pashupati seals (M-304), this horned gharial deity is the central figure surrounded by a typical set of animals. A female being, often connected with tigers, is seen coupling together with the gharial in a fecundity scene in an Indus Valley Civilization (IVC) creation myth. A number of seals show a man on the tree along with a tiger below. This shaman on the tree and tiger motif is linked archaeologically with the gharial deity in the sky, and the Mesopotamian Gilgamesh-like goddess shown between two tigers in IVC tablets and moulds. Also, the same shaman on tree along with a tiger motif is seen in the 'horned' gharial "Master of Animals" seals. A comprehensive evaluation of the imagery recorded in the Indus glyptic art is needed to understand the pan-Indus founders' myth cycle, and it is illustrated with pictures of the IVC sealings. These religious myths of the gharial and tiger divinities are at least as important as the tree goddess worship in M-1186 with a shaman, markhor goat and seven women in front of a bodhi fig tree.
Posted by
நா. கணேசன்
at
6
comments
ஹூஸ்டன் தமிழ்ப் பள்ளிகள் (பாரதி கலைமன்றம்) ஆண்டுவிழா நிகழ்ச்சி!
நூற்றுக்கணக்கான தமிழ் மாணவர்களையும், அவர்களுக்குத் தமிழ்ப்பால் ஊட்டிடும் பெற்றோர், ஆசிரியர்களைக் காணவும், கலந்துரையாடி உயர்கருத்துக்களை அளிக்கவும் அரியதோர் வாய்ப்பு!
அனைவரும் வருக, அருந்தமிழ் பருக
நா. கணேசன்


Posted by
நா. கணேசன்
at
1
comments
`யுனிகோடுக்கு' மாற 7 பேர் குழு அமைப்பு - செயலர் தேவிதார் அறிவிப்பு
இந்திய அரசாங்கம் யூனிக்கோட் எழுத்துருவை தமிழ் போன்ற எல்லா இந்திய மொழிகளுக்கும் பயன்படுத்த அரசாணை வெளியிட்டுள்ளது. இதனை மாநிலங்களில் நடைமுறைப்படுத்தச் சில காலம் செல்லலாம். செம்மொழி மாநாடு இதைச் சாதிக்க வாய்ப்புகள் இருக்கின்றன.
சொற்பகுப்பாய்வு பற்றிப் பத்ரி சேஷாத்ரியின் பதிவில் பார்த்தேன்.
http://thoughtsintamil.blogspot.com/2010/04/blog-post_17.html
முனைவர் மு. இளங்கோ அரசு நிறுவனங்களில் இணையம் பற்றி உண்மைநிலையை பின்னூட்டம் செய்திருந்தார்:
“ பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்களின் கணினி மொழியியல் முயற்சி வறண்ட பாலைநிலைத்தில் ஒரு சுனை நீருக்குச் சமம்.பெரும்பாலான ஆசிரியர்கள் கணினியில் ஆர்வம் காட்டவில்லை. அரசு நிறுவனம் ஒன்றுக்குப் பேசுவதற்குச் சென்றேன்.
வீடியோ கான்பரசிங் வசதி உண்டு என்று அழைத்துச் சென்றனர்.மிகப்பெரிய கற்பனையில் சென்ற எனக்கு மிகப்பெரிய ஏமாற்றம்.இருந்த பல கணினிகள் யாவும் பழுது.பிளக் பாயிண்டு கூட சரிவர இல்லை. நூலாம்படை படிந்து கிடந்தது.இந்த நிலையில்தான் தமிழ் இணையத்தை நாம் அறிமுகம்
செய்யவேண்டியுள்ளது.”
யாப்பாய்வு, சொல்லாய்வு போன்றவற்றில் தமிழர் மிகுதியாக ஈடுபடக் கல்லூரிகளிலும், அரசாங்க அலுவலகங்களிலும் உலகத்தரமான இந்திய அரசின் மின்னாளுகை நடைமுறையானால் வாய்ப்புண்டு.
செ. ச. செந்தில்நாதன் முனைவர் மு. ஆனந்தகிருஷ்ணனைப் பேட்டி கண்டு 2007-ல்
காலச்சுவட்டில் எழுதியிருந்தார். அப்போது முனைவர் மு. ஆ. கூறியிருந்தார்:
http://valai.blogspirit.com/archive/2007/02/28/science.html
”இப்படித்தான் கணித்தமிழ்மீதும் ஈடுபாடு வந்ததா?
அந்த ஈடுபாட்டில்தான் கணிப்பொறியியல் துறையில் ஆரம்பத்திலிருந்து (நான் நியூயார்க்கில் இருக்கும்போது), தமிழை எப்படிக் கணிப்பொறியில் பயன்படுத்த முடியும் என்று ஆராய்ந்தேன். அப் போது நானே கணிப்பொறி வாங்கிவைத்து, சின்னச் சின்ன எழுத்துகளை உருவாக்க முயற்சித்தேன். பெரிய "ப" எழுத்து போட்டு. 'ஆ! தமிழ் உருவாகிடுச்சு' என்று மகிழ்ச்சி அடையக்கூடிய நிலைமை. மொழி நம்முடைய மொழி. கலைஞர், முரசொலி மாறன் போன்றோர்களிடம் அடிக்கடி சொல்வேன்:. 15ஆம் நூற்றாண்டில் அச்சுப் பொறி வந்தது. எந்தெந்த மொழிகள் அந்த அச்சுப்பொறியில் பயன்படுத்தப்படவில்லையோ அதெல்லாம் செத்து மடிந்துபோய்விட்டன. அச்சில் வராத மொழி அழிந்துபோனது. அது மாதிரி இன்றைக்குக் கணிப்பொறி. ஓரளவுக்கு எளிமையான முறையில் பலரும் பயன்படுத்தக்கூடிய வகையில் கணிப்பொறியில் தமிழ் வந்தால்தான் தமிழ் மொழியினுடைய மதிப்பு, தமிழனின் செயல்பாடு இதெல்லாம் உயரும். இல்லையெனில் ஆங்கிலம் படித்தவன்தான் கணிப்பொறியைப் பயன்படுத்த முடியும் என்ற நிலை வரும். இதனால் 100க்கு 95 சதவீத மக்களுக்கு இந்தத் தொழில்நுட்பம் எட்டாமல் போய்விடும். அல்லது கணிப்பொறியைப் படிப்பதற்குத் தமிழ் மொழியைப் புறக்கணித்துவிட்டு ஆங்கிலமே படிக்கலாம் என்ற நிலைமை உருவாகும். அது தமிழுக்குக் கேடு.
நான் எதிர்பார்த்த அளவுக்கு கணித்தமிழ்த் துறையில் நாம் இன்னும் முன்னேறவில்லை என்பது வேறு விஷயம். எந்த அளவு வந்திருக்க வேண்டும், ஏன் வரவில்லை, அதனால் என்ன பிரச்சினை . . . இதையெல்லாம் பார்க்க வேண்டும். இருந்தாலும் அதை எப்படி அரவணைத்து, இருக்கிற சர்ச்சைகளைக் குறைத்து, ஈடுபாட்டைப் பெருக்குவது என்பதை என் முழு நோக்கமாகக் கொண்டு செயல்பட்டிருந்தேன்.
இன்றைக்கு இருக்கிற நிலைமையில் சர்ச்சைகளையெல்லாம் ஒரு பக்கம் வைத்துவிட்டு நாம் எல்லோரும் ஒருங்கிணைத்து முன்னேற்றிச் செல்ல முடியும். நேரத்தை வீணாகக் கழிக்கக் கூடாது. இல்லையென்றால் தொழில்நுட்பம் மக்களுக்கு எட்டாமல் போயிடும். அது வளர்ந்த நிலையில் எட்டுவது மிகவும் கடினம். எல்லோரும் தமிழ் படிக்காமல் கணிப்பொறிக்காக ஆங்கிலம் படிக்கப் போனால், மீண்டும் அந்தத் தலைமுறை மக்களைத் தமிழ் படிக்க அழைப்பது கடினம் என்று சொன்னேன்.”
தினமணி, தினமலர், தினத்தந்தி போன்ற பத்திரிகைகளில் அரசு அலுவலகங்களில் யூனிகோடு எழுத்துரு வருவதாக அரசின் ஐ.டி. தொழிநுட்ப செயலாளர், திரு. தேவிதார் அறிவித்துள்ளமை தெரிகிறோம். தினத்தந்தி செய்தி:
http://www.dailythanthi.com/article.asp?NewsID=557283&disdate=4/1/2010
[விக்கி] ”போட்டி எப்படி?
இந்த போட்டியில் கலந்து கொள்ளும் கல்லூரி மாணவர்கள், தமிழகத்தில்தான் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், விக்கிபீடியாவில் இடம்பெறத்தக்க கட்டுரைகளை, 250 முதல் 500 வார்த்தைகளுக்கு மிகாமல், இன்டர்நெட் மூலமாக தமிழில் எங்களுக்கு அனுப்பி வைக்கலாம். இதற்காக ஆன்லைனில் எங்கள் இணையதளத்திலேயே (http://ta.wikipedia.org) விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் அனுப்பும் கட்டுரைகள், சொந்தமானவையாக இருக்கவேண்டும். தனிப்பட்ட நபர்கள், அரசியல், மத விமர்சனம் போன்ற ஆட்சேபகரமானவற்றை அனுப்பக்கூடாது. அவரவர் படிக்கும் துறை பற்றி எழுதலாம். தகவல் பக்கங்கள் ஒருங்குறியில் (யுனிகோட்) அமையவேண்டும். வெற்றி பெறுவோருக்கு சிறப்பான பரிசுகள் வழங்கப்படும்.
இவ்வாறு ஆனந்தகிருஷ்ணன் கூறினார்.
`யுனிகோடுக்கு' மாற 7 பேர் குழு அமைப்பு
``இணைய மாநாட்டை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் 8,300 மாணவர்கள் கலந்து கொண்டார்கள். அவர்களுக்கு விரைவில் பரிசுகள் அளிக்கப்படும்'' என்று அமைச்சர் பூங்கோதை தெரிவித்தார்.
``விக்கிபீடியா என்பது தனி அமைப்பு. தமிழக அரசுதான் இதில் முதல்முறையாக அக்கறையெடுத்து மாணவர்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்திருக்கிறது. தமிழக அரசு அலுவலகங்களில் `யூனிகோட்' எழுத்துருவை `பான்ட்' கொண்டு வரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. (இதனால் இணையதளத்தில் தமிழில் அனுப்பப்படும் தகவல்களை தமிழ் எழுத்துரு இல்லாமலேயே ஒருவர் அப்படியே படித்துவிட முடியும். அதை படிப்பதற்காக ஒரு எழுத்துருவை `டவுன்லோடு' செய்ய தேவையில்லை. யூனிகோட் மிக எளிமையானது). இதுபற்றி முடிவெடுக்க 7 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. உலகத்தமிழ் மாநாட்டுக்கு முன்னதாக இப்பணி முடிக்கப்படும்'' என்று டேவிதார் தெரிவித்தார்.
அப்போது கவிஞர் கனிமொழி மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.”
செ.ச. செந்தில்நாதன், இணையம், 2007:
http://ezilnila.com/archives/597
*செம்மொழி மாநாடு இன்னும் 76 நாள்கள்:- கம்பியில்லா இணைய வசதி வளாகமாகிறது 'கொடிசியா'*
தினமணி, 8 ஏப்ரல் 2010
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும் கொடிசியா தொழிற்காட்சி வளாகம் கம்பியில்லா இணையதள அலைவரிசை வசதி உடைய வளாகமாக மாற்றப்படுகிறது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் தமிழ் இணைய மாநாடும் நடத்தப்படுகிறது. கான்பூர் ஐ.ஐ.டி தலைவர் மு.ஆனந்த கிருஷ்ணன் தலைமையில் தமிழ் இணைய மாநாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் தற்போது குளிரூட்டப்பட்ட வசதி உள்ள 'இ' பிளாக் அரங்கம் இணைய மாநாட்டுக்கு ஒதுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இணைய மாநாட்டையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இணைய போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
இணைய மாநாடு நடைபெறும் அரங்குக்கு இணையதள இணைப்புக்காக பி.எஸ்.என்.எல் நிறுவனம் மூலமாக கம்பி இழை கேபிள்கள் அமைக்கப்படுகின்றன.
இணைய மாநாடு நடைபெறும் அரங்கம், பத்திரிகையாளர்களுக்கான அரங்கம், பொது தகவல் மையம் ஆகியவற்றில் துரித இணைய இணைப்பு வசதியுடன் கூடிய கணினிகள் நிறுவப்படுகின்றன.
மேலும் கொடிசியா தொழிற்காட்சி வளாகம் முழுவதும் கம்பியில்லா இணையதள அலைவரிசை வசதி கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான ஆயத்தப் பணிகள் தொடர்பாக எல்காட் நிறுவன மேலாண்மை இயக்குநரும், இணைய மாநாட்டின் உறுப்பினருமான சந்தோஷ் பாபு, கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தை வியாழக்கிழமை (08/04/10) பார்வையிட்டார்.
இணைய மாநாட்டுக்குத் தேவையான வசதிகளைச் செய்வது தொடர்பாக பி.எஸ்.என்.எல், தேசிய தகவல் மைய அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
இணையதள இணைப்பு, அலைபேசி சேவை ஆகியவற்றுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பி.எஸ்.என்.எல் அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார்
Posted by
நா. கணேசன்
at
3
comments